ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—81-90–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

யா பிப்ரதீ ஸ்திர சராத்மகம் ஏவ விஸ்வம்
விஸ்வம் பரா பரமயா ஷாமயா ஷமா ச
தாம் மாதரஞ்ச பிதரஞ்ச பவந்தம் அஸ்ய
வ்யச்சந்து ராத்ரய இமா வரிவஸ்யதோ மே –81-

எம்பிரானே -யாவள் ஒரு பூமிப் பிராட்டியானவள் ஸ்தாவர ஜங்கமாத்மகமான சகல ஜகத்தையும் வஹிப்பவளாய் இருந்து கொண்டே
விஸ்வம் பரா என்று பெயர் பெறுகின்றாளோ–சிறந்த பொறுமையினால் -ஷமா-என்றே பெயர் பெறுகின்றாளோ
அந்தத் தாயையும்-தஞ்சமாகிய தந்தையாகிய உன்னையும் சேர்த்துக் கைங்கர்யம் பண்ண விரும்பி இருக்கும் அடியேனுக்கு
இந்த சம்சார காள ராத்திரிகள் விடிந்தனவாகட்டும் –
ஸ்ரீ பூமிப்பிராட்டி சேர்த்தியில் அடிமை செய்யப் பாரிக்கிறார்
இரவும் பகலும் கலசி இருக்கை இன்றிக்கே எப்பொழுதும் விடிந்த பகலாகவே-உள்ள
திரு நாட்டிலே நித்ய கைங்கர்யத்தைப் பாரிக்கிறார்

வ்யச்சந்து
அபூர்வமான க்ரியா பதம் -விசேஷத்தில் வேதத்தில் உள்ள பதம் -விடிந்தது ஆகட்டும் என்றபடி
ராத்ரய-கர்த்ரு பதத்துக்குச் சேர இந்த கிரியை பத பிரயோகம்
வரிவஸ்யத
ஷஷ்டி யந்த பதம் -வர்த்தமான அர்த்தம் –

——————

பாவைர் உதார மதுரைர் விவிதைர் விலாச
ப்ரூவிப்ரம ஸ்மித கடாக்ஷ நிரீக்ஷணைச் ச
யா த்வந் மயீ த்வமபி யந்மய ஏவ சா மாம்
நீளா நிதாந்தம் உரரீகுருதாம் உதாரா –82-

ஸ்ரீ நீளா தேவியை அனுசந்தித்து அவளுடைய அங்கீ காரத்தையும் பிரார்திக்கிறார்
எம்பெருமானே கம்பீர மநோ ஹரங்களான சித்த வ்ருத்திகளாலும் -பலவகைப்பட்ட சிருங்கார சேஷ்டிதங்களாலும்
புருவ விலாசம் -புன் முறுவல் -கடைக் கணிப்பு -ஆகிய இவைகளாலும்
யாவள் ஒரு நீளா தேவியானவள் உன்னில் வேறுபடாதவளாய் இருக்கின்றாயோ
நீயும் யாவள் ஒரு நீளா தேவியில் காட்டில் வேறுபடாது இருக்கின்றாயோ
உதாரையான அந்த நீளா தேவியானவள் அடியேனைப் பரிபூர்ணமாக அங்கீ கரித்து அருள வேணும் –
யா த்வந் மயீ த்வமபி யந்மய ஏவ சா மாம் நீளா நிதாந்தம் உரரீகுருதாம் உதாரா –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம் அனுசந்தேயம்

—————–

பாவைர் அநு க்ஷணம் அபூர்வ ரஸ அநு வித்தை
அத்யத்புதை அபி நவை அபி நந்த்ய தேவீ
ப்ருத்யாந் யதோசித பரிச்சதிந யதார்ஹம்
சம்பா வயந்தம் அபித பகவந் பவேயம் –83-

பகவானே க்ஷணம் தோறும் அபூர்வமாய் இருக்கின்ற சிருங்கார ரஸ விசேஷத்தோடே கூடி அத்யாச்சர்யங்களாய்
புதிது புதிதாய் இருக்கின்ற சித்த வ்ருத்திகளாலே பிராட்டிமார்களை உகப்பித்து
தங்களுக்கு உரிய கைங்கர்ய உபகரணங்களை–சத்ர சாமர வேத்ராதி – உடையவர்களான -நித்ய ஸூரி களான –
கிங்கரர்களை யதா யோக்யமாக சத்கரியா நிற்கிற பரமபத நாத்தனானை உன்னைச் சூழ்ந்து கொண்டு வர்த்திக்கக் கடவேன்
அந்தமில் பேர் இன்பத்து திரு ஓலக்கத்தில் அன்வயித்து முன் அழகு பின் அழகு பக்கத்து அழகு –
அனைத்தையும் அனுபவிக்க பாரிக்கிறார்

———————

ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆ ஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்
தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ
நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்
ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –
பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –
எண்ணெய் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே
மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல் பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற
அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்

————————–

அம்ஹ ப்ரஸஹ்ய விநிக்ருஹ்ய விசோத்ய புத்திம்
வ்யாபூய விஸ்வம் அசிவம் ஜனுஷா அநு பத்தம்
ஆதாய சத்குண கணாந் அபி நார்ஹ அஹம்
த்வத் பாதயோ யத் அஹம் அத்ர சிராத் நிமக்ந—85 –

எம்பிரானே எனது பாபத்தை பலாத்காரமாகப் போக்கிக் கொண்டும் புத்தியை சுத்தம் ஆக்கிக் கொண்டும்
ஜென்ம அநு பந்தியான தீதுக்களை எல்லாம் உதறித் தள்ளியும் சத் குண சமூகங்களை யுண்டாக்கியும் கூட
நான் உன் திருவடிகளுக்கு யோக்யமாக மாட்டேனே
ஏன் என்றால் இப்பிறவிக் கடலுள் நான் நெடும் காலமாக மூழ்கி இருப்பவன் அன்றோ

அயோக்கியதா அநு சந்தானம் பண்ணப் பிராப்தி இல்லை காணும் -என்று பணிப்பதாகக் கொண்டு இது அருளிச் செய்கிறார்
தேவரீர் என்னைக் கல்யாண தமனாக்க எவ்வளவு முயன்றாலும் அநாதி காலமாக -வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தவனான
என்னை அடிமைக்கு உரியவன் ஆக்கிக் கொள்ள முடியாது
இப்படிப்பட்ட தம்மையும் அடிமையிலே அந்வயிப்பித்துக் கொள்ளவே போகிறான் என்று அத்தலையிலே
குண உத்கர்ஷம் சொல்லுகிறார் -அது தன்னையே அடுத்த ஸ்லோகத்திலே விளக்குவார்

—————-

ஜானே தவா கிம் அஹம் அங்க யதேவ சங்காத்
அங்கீ கரோஷி ந ஹி மங்களம் அந்யத் அஸ்மாத்
தேந த்வம் ஏநம் உரரீ குருஷே ஜனம் சேத்
நைவ அமுதோ பவதி யுக்த தரோ ஹி கச்சித்—86-

எம்பிரானே -ஏன் அறிவேன் ஏழையேன் -நீ சஹஜ ஸுவ்ஹார்த்தத்தினால் அடியேனை அங்கீ கரித்து அருளும் அளவில்
அப்படிப்பட்ட அங்கீ காரத்தில் காட்டிலும் வேறு நன்மை இல்லை அன்றோ –
ஆகவே அந்த ஸுவ்ஹார்த்தத்தினால் இவ்வடியேனை அங்கீ கரித்து அருளுவாய் ஆகில்
என்னைக் காட்டிலும் வேறு ஒரு யோக்யன் தேற மாட்டேன் அன்றோ

அவனது இயற்கையான இன்னருளை நினைத்து ஸமாஹிதர் ஆகிறார்
அடியேன் நீசனேன் நிறை ஒன்றும் இலேன்–திருவடிகளுக்கு அநர்ஹநே -என்றாலும்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் -என்றும்
விபீஷனோ வா ஸூ க்ரீவ பதிவா ராவண ஸ்வயம் -என்றும்
அருளிச் செய்து ஆட்க்கொள்ள வல்ல தேவரீருக்கு ஆகாதது உண்டோ
என்னிடம் ஆர்ஜித நன்மை இல்லை என்றாலும் உன்னால் வரும் நன்மையை இல்லை செய்ய ஒண்ணுமோ
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய -என்கிறபடியே தேவரீராகவே விஷயீகரித்து அருளும் அளவில்
அயோக்கியன் என்று அகலாமல் எனக்கு நிகர் யார் அகல் வானத்தே என்று மார்பு தட்டவே ப்ராப்தமாகும்
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று -ஸ்ரீ வசன பூஷணம் -143-
இதுக்கு வியாக்யானம்
ஸ்வாமியாய் ஸ்வ தந்த்ரனானவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிறவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும்
அளவில் பாபங்களில் பிரதானமாக எண்ணப் படும் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது என்கை –
இத்தால் பரகத ஸ்வீ கார உபாயத்வம் காட்டப்பட்டது -மா முனிகள்

—————–

யத் நாபவாம பாவதீய கடாக்ஷ லஷ்யம்
சம்சார கர்த்த பரிவர்த்தம் அத அகமாம
ஆகாம்ஸி யே கலு சஹஸ்ரம் அஜஸ்ரம் ஏவம்
ஜென்ம ஸூ அதன்மஹி கதம் தா இமே அநு கம்ப்யா–87-

கீழே ஒருவாறு ஸமாஹிதரானவர் மீண்டும் தடுமாறுகிறார்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேத் மது ஸூதந -சாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக
எம்பெருமானே -நீ செய்து அருளும் ஜாயமான கால கடாக்ஷத்துக்கு அடியேன் இலக்காகாது ஒழிந்தமையால்
சம்சார படு குழியிலே விழ நேர்ந்தது
அதற்கு மேலும் ஜென்மங்கள் தோறும் இடைவீடு இன்றி அளவற்ற பாபங்களையும் செய்து போந்து இருக்க –
கீழ் ஸ்லோகத்தில் ப்ரஸ்துதமான உன்னுடைய அருளுக்கு எங்கனே இலக்காவேன்

—————–

சத் கர்ம நைவ கில கிஞ்சந சஞ்சிநோமி
வித்யாப் யவத்ய ரஹிதா ந ச வித்யதே மே
கிஞ்ச த்வத் அஞ்சித பதாம்புஜ பக்தி ஹீந
பாத்ரம் பவாமி பகவந் பவதோ தயாயா –88-

பகவானே சத் கருமத்தை சிறிதும் செய்கிறேன் அல்லேன் -நிரவத்யமான வித்யையும் எனக்கு இல்லை –
உனது சிறந்த பாதாரவிந்தத்தில் பக்தியும் இல்லாதவனாய் இருக்கிறேன்
ஆகவே உன் அருளுக்கே பாத்ரம் ஆகின்றேன்

த்வத் அஞ்சித பதாம்புஜ –த்வத் பதத்துக்கு பதாம்புஜத்திலே நோக்கு
அஞ்சிதம் -சர்வ லோக பூஜிதம் என்றபடி

ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுத் திருவருளைப் பிரார்த்திக்கிறார்
இடகில்லேன் ஓன்று அட்டகில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்-கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்தகில்லேன்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கண் பக்தனும் அல்லேன்
அகிஞ்சனர்களையே தேடித்திரியும் உமக்கு இலக்காவேன்

———————

கிம் பூயஸா பிரலபிதேந யதேவ கிஞ்சித்
பாபாஹ்வம் அல்பம் உரு வா தத் அசேஷம் ஏஷ
ஜாநந் ந வா சத சஹஸ்ர பரார்த்த க்ருத்வ
யோ கார்ஷ மேந மகதிம் க்ருபயா க்ஷமஸ்வ –89-

பல பிதற்றி என் -பாபம் என்று பேர் பெற்றது சிறியதோ பெரியதோ எது எது உண்டோ அதை எல்லாம்
தெரிந்தும் தெரியாமலும் எண்ணிறந்த படி செய்து போந்தேன்-அந்தோ –
இவ்வடியேனை பரம கிருபையினால் க்ஷமித்து அருள வேணும்

ஷமா பிரார்த்தனை பண்ணாத அளவில் கிருபை பெறுவது இல்லை என்னும் இடத்தையும்
க்ஷமை வேண்டியவாறே கிருபை பெருகப் புகுகிறது என்னும் இடத்தையும் லோகத்தில் கண்டவர் ஆகையால்
ஷமா பிரார்த்தனை பண்ணுகிறார் இதில் –

கிம் பூயஸா பிரலபிதேந-
கிம் பஹு நா என்பது உண்டே -அது தான் இது -நானே சங்கிப்பதும் நானே ஸமாஹிதன் ஆவதுமாய்ப் பல பிதற்றி என் பிரயோஜனம் –
அநந்ய கதியானவனை அவசர பிரதீக்ஷையான ஸ்வ கீய கிருபையினாலேயே ஷமா விஷயம் ஆக்கி அருள வேணும்

————–

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ச்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்

மதநகதநைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதா நாம் -என்று பெருமை வாய்ந்த
எம்பெருமானாரால் விஷயீ கரிக்கப் பெற்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
மதியிலேன் வல்வினையே மாளாதோ–வலிய கருமம் எனக்கே அசாதாரணம் என்று நினைக்க வேண்டியதாகிறது
அத்ர-மத் கர்மண- சமானசாரம்-கதரத்
இவ்வுலகில் என்னைப் போல் தீ வினை செய்தார் உண்டோ -என்கிறார்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: