ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—31-40–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

யஸ் ஸ்தாவர க்ரிமி பதங்க மதங்க ஜாதிஷு
அந்யேஷு ஐந்துஷு சதைவ விஜாயமாந
த்வம் நித்ய நிர்மல நிரஞ்சன நிர்விகார
கல்யாண சத் குண நிதே ச இதீரிதஸ் தை –31-

எப்போதும் ஹேயபிரதிபடமாயும் நிர் லேபமாயும் நிர்விகாரமாயும் இருக்கிற கல்யாண குணங்களுக்கு நிதி போன்ற எம்பெருமானே
யாவன் ஒரு ஜீவன் ஸ்தாவரங்களான க்ரிமி பஷி கஷாதிகளும் மற்றுமான யோனிகளிலே இடையறாது பிறந்து கொண்டு இருக்கிறானோ
அவன் தேவரீரே என்று அந்த செவிடர்களால் சொல்லப்படா நினறீர்–
கௌதஸ்குதா –பிரலாபங்களில் ஒன்றை உதாஹரிக்கிறார் இதில்

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் பிரம பரிகதம் சம் சரதி தத் பரோபாத்யா லீடம் விவசமசு பஸ்யாஸ் பதமிதி சுருதி ந்யாயா பேதம்
ஜகதி விததம் மோஹனம் இதம் தமோ யேநாபாஸ்தம் ச ஹி விஜயதே யமுனமுனி –என்று ஸ்வாமி எம்பெருமானார்
வேதார்த்த ஸங்க்ரஹ உபக்ரமத்தில் ஆளவந்தாரை உப ஸ்லோகிக்கிறார் –
அந்த மாயா வாதிகளே கௌதஸ் குதர்கள் -என்றும் ஸ்திர குதர்க்க வஸ்யர்கள்-என்றும் தெரிவித்து
அவர்களுடைய பிரலாப பிரகாரத்தை எடுத்து உரைக்கிறார்

நித்ய -நிர்மல நிரஞ்சன நிர்விகார
கல்யாண சத் குண நிதே
இந்த பகவத் சம்போதனம் சாபிப்ராயம்
அகில ஹேயப்ரத்யநீக கல்யாணை குண கதாநரான தேவரீருடைய தன்மைக்குப் பொருந்தாதபடி அன்றோ பேசுகிறார்கள்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு –இத்யாதியான கல்யாண குண ப்ரதிபாத்ய ஸ்ருதியோடே சேராது என்று காட்டுகிறபடி
நித்ய நிர்மல-
ஒன்றாகவும் இரண்டாகவும் பிரித்தும் அர்த்தம் ஸ்வரூபத்தோ நித்யமானவனே -அகில ஹேயப்ரத்யநீகனானவனே
நிரஞ்சன
சேதனர்களை அனுபிரவேசித்து நிற்கச் செய்தேயும் கர்மவஸத்வாதி ரூப தோஷங்கள் தொடரப் பெறாதவனே
நிர்விகார
அசேதனங்களிலே அனுபிரவேசித்து நிற்கச் செய்தேயும் விகாராஸ்பதமான அவற்றின் படி இன்றிக்கே இருக்குமவன்
கல்யாண சத் குண நிதே
கல்யாண குணம் என்றோ சத் குணம் என்றோ சொல்லாய் இருக்க இரண்டையும் சேர்த்துச் சொன்னது
கல்யாண -அனுசந்தானம் செய்பவர்களுக்கு சுபாவஹங்கள் என்றும்
சத் -எவ்வளவு அனுபவித்தாலும் குறையாதே அக்ஷய்யமாய் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாய இருக்கும் என்றதாயிற்று
இப்படிப்பட்ட கல்யாண சத் குணங்களுக்கு நிதி போன்றவனே
ஸ்தாவர க்ரிமி பதங்க மதங்க ஜாதிஷு
அந்யேஷு ஐந்துஷு சதைவ விஜாயமாந -யஸ் -த்வம் இதி தை ஈரிதஸ் —
ஸ்தாவர கீட பஷி ம்ருகாதிகளாய்-தேவரீருடைய ஸ்வரூப ஸ்வபாவங்களுக்கு விஜாதீயமான ஸ்வரூப ஸ்வ பாவங்களை
யுடையவனாய் இருக்கும் யோனிகளிலே மாறி மாறி பிறந்து கொண்டே இருக்கும் கர்மவஸ்யனான ஜீவனுக்கும்
அகர்மவசயரான தேவரீருக்கு அத்வைதம் சொல்லுகிறார்களே இந்த மாயைக்கு வசப்பட்ட செவிடர்கள்
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மானா வீசதே தேவ ஏக –என்று சுருதி தத்வ த்ரயமும் சொல்ல நிற்க
ஒன்றே உள்ளது என்று சொல்வதில் வருமாபத்தி இதனால் தெரிவிக்கப்பட்டதாயிற்று
ஸ்தாவரங்களிலும் பிறப்பது உண்டோ என்னில்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியார் பருகும் நீறும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -என்று
நாம ரூப விசிஷ்டமான சகல வஸ்துக்களிலும் ஒரோ ஜீவா அதிஷ்டானம் உண்டு என்று கொள்ள வேணும்
சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜ்ஜிதா சர்வ பூதேஷ்டபால –தார தம்யேந வர்த்ததே அப்ராணி மத்ஸூ ஸ்வல்பா சா
ஸ்தாவரேஷு ததோதிகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -வசனம் காட்டி வியாக்யானம் உண்டே –

——————

த்வத் த்ருஷ்ட்டி ஜுஷ்டம் இதம் ஆவிரபூத் அசேஷம்
நோ சேத் கடாக்ஷ யசி நைவ பவேத் ப்ரவ்ருத்தி
ஸ்த்தா துஞ்ச வாஞ்சதி ஜகத்தவ த்ருஷ்ட்டி பாதம்
தேந ஸ்ருதவ் ஜெகதிஷே ஹி ஜகத் த்வமேவ –32-

எம்பெருமானே இவ்வுலகம் எல்லாம் தேவரீருடைய திருக்கண் நோக்கத்தை பெற்றதாய்க் கொண்டு ஆவிர்பாவம் அடைந்தது
தேவரீர் கடாக்ஷித்து அருளவில்லை என்றால் இவற்றுக்கு ஒரு ப்ரவ்ருத்தியே உண்டாக மாட்டாது
இந்த ஜகத்தானது சத்தை பெறுவதற்கும் தேவரீருடைய கடாக்ஷத்தையே விரும்புகின்றது
ஆக இக்காரணங்களால் வேதங்களில் தேவரீர் ஜகத்தாகச் சொல்லப்படா நின்றீர்

அத்வைத சுருதி நிர்வாஹம் காட்டி அருளுகிறார்
தேந ஸ்ருதவ் ஜெகதீஷே ஹி ஜகத் த்வமேவ -சரம பாதம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
ஜெகதாத்ம்யம் இதம் சர்வம் –இத்யாதி –அபேத சுருதிகள்
கார்ய காரண பாவம்-சரீர சரீரி பாவம் -சாமான தர்ம வைசிஷ்ட்யம் -இப்படி பலபடிகளிலே அபேத நிர்வாஹம்
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -ஸ்ரீ ரெங்க கத்யம்

த்வத் த்ருஷ்ட்டி ஜுஷ்டம் இதம் ஆவிரபூத் அசேஷம்
தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி–ஸ்ருஜ்ய வஸ்துக்களில் திருக்கண் சாத்துவதை சுருதி சொல்லுமே
இங்குள்ள -ஐஷத-பதத்தைக் கடாக்ஷித்து -த்ருஷ்ட்டி ஜுஷ்டம்-என்கிறார்
ஈஷணமாவது அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம் -இதுவே த்ருஷ்ட்டி என்றதும்
நோ சேத் கடாக்ஷ யசி நைவ பவேத் ப்ரவ்ருத்தி
இந்த ஈஷணமே பிரவ்ருத்திகளுக்கும் காரணம்
ஜகத் -ஸ்த்தா துஞ்ச – தவ த்ருஷ்ட்டி பாதம் -வாஞ்சதி
ஸ்த்தாதும் என்றது ஸ்திதியைப் பெறுவதற்காக -நிலைத்து நிற்கைக்கும் ஈஷணம்
ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரீம்
தேந
கீழ் மூன்று பாதங்களிலும் அருளிச் செய்த மூன்று விசேஷங்களையும் ஹேதூ கரிக்கிற படி
ஸ்ருதவ் ஜெகதிஷே ஹி ஜகத் த்வமேவ -வேத வேதாந்தங்களிலே தேவரீர் ஜகத்தாக சொல்லப்படா நின்றீர்
விஸ்வம் த்வயபி மந்யேச ஜகதிஷே தேநாத் விதீயஸ் ததா –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகம்
நாம் அவன் இவன் யுவன்
அவரவர் தமதமது
நின்றனர் இருந்தனர் –மூன்றாலும் சொன்ன உத்பத்தி ஸ்திதி ப்ரவ்ருத்திகளை மூன்று பாதங்களாலும் சொன்னபடி
அபேத ஸ்ருதிக்கு இவையே நியாமாகம் என்று நான்காம் பாதத்தால் சொல்லப்பட்டது

——————————-

ஏவம் பகோ இஹ பவத் பரதந்த்ர ஏவ
சப்தோபி ரூபவத் அமுஷ்ய சராசரஸ்ய
ஐஸ்வர்யம் ஈத்ருசம் இதம் சுருதி ஷு உதிதம் தே
பாபீய சாம் அயம் அஹோ த்வயி மோஹ ஹேது –33-

பகவானே இங்கு காணப்படுகின்ற சகல சராசரங்களினுடையவும் நாம ரூபங்கள் இப்படி தேவரீர் இட்ட வழக்கே
இப்படிப்பட்ட இந்த வைபவமானது தேவரீருடையதாக வேதாந்தங்களிலே ஓதப்பட்டது
ஆனால் இந்த ஐஸ்வர்ய குணமானது துர்ப்பாக்ய சாலிகளுக்கு தேவரீர் திறத்து மோஹ ஹேதுவாக ஆகின்றது அந்தோ –
கீழ் ஸ்லோகத்துக்கு சேஷபூதம் இது

ஏவம் பகோ
பகவந் -என்பதற்கு பர்யாயம்
அமுஷ்ய சராசரஸ்ய இஹ
கண்ணால் காணப்படும் இந்த சராசரங்களினுடைய
சப்தோபி ரூபவத் -பவத் பரதந்த்ர ஏவ
ரூபமும் நாமமும் நீ இட்ட வழக்கு
அநேக ஜீவேந ஆத்மனா அநு பிரவிஸ் நாம ரூபே வ்யாகரவாணி –
ஜ்யோதீம் ஷி விஷ்ணுர் புவனானி விஷ்ணு
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றும் முற்றுமாய்
ஐஸ்வர்யம் ஈத்ருசம் இதம் சுருதி ஷு உதிதம் தே
சர்வ வஸ்து சாமானாதி காரண்ய அர்ஹத்வமாகிற ஐஸ்வர்யம் -வஸ்து பரிச்சேத ராஹித்யம் அசாதாரண ஐஸ்வர்யம்
பாபீய சாம் அயம் அஹோ த்வயி மோஹ ஹேது —
இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் நாநா வஸ்துக்கள் கிடையாது என்று மருள் அடைந்து பேசுகிறார்கள்

————

யே த்வத் கடாக்ஷ லவ லஷ்யமிவ க்ஷணம் தை
ஐஸ்வர்யம் ஈத்ருசம் அலப்யம் அலம்பி பும்பி
யத் கேபி சஞ்ஜகரிரே பரமேசித்ருத்வம்
தேஷாமபி சுருதி ஷு தந் மஹிம பிரசங்காத்—34–

எம்பெருமானே எவர்கள் க்ஷண காலம் தேவரீருடைய ஸ்வல்ப கடாக்ஷத்துக்கு இலக்கானார்களோ –
அப்புருஷர்களால் அருமையான இப்படிப்பட்ட ஐஸ்வர்யம் அடையப்பட்டது
சிலர் அப்புருஷர்களுக்கும் வேதங்களில் பாரம்யம் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லுகிறார்கள் என்பது
எதனாலே என்னில் அப்பெருமாளுடைய பெருமையில் ஏக தேசம் இருப்பதனால்

யே த்வத் கடாக்ஷ லவ லஷ்யமிவ க்ஷணம் தை ஐஸ்வர்யம் ஈத்ருசம் அலப்யம் அலம்பி
நான்முகன் -14-லோகங்களைப் படைக்கிறான்
தச ப்ரஜாபதிகள் நித்ய ஸ்ருஷ்ட்டி கர்த்தாக்களாக உள்ளார்கள்
விச்வாமித்திராதிகளும் அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி -என்று சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்கிறார்கள்
இது எல்லாம் அவனது கடாக்ஷ லேசத்தினாலே
யுககோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பபூவ புநஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி சுச்ரும —
கடாக்ஷ லவ லஷ்யம் என்னாதே லஷ்யம் இவ -என்று அது தான் நன்றாக விழுந்ததோ என்ற சங்கையால்
அத்யல்ப கடாக்ஷ பலனால் என்றபடி

அலப்யம் ஐஸ்வர்யம்
சாமான்ய புருஷர்களுக்கு கிடைக்க மாட்டாத பெருமை என்றபடி

யத் கேபி சஞ்ஜகரிரே பரமேசித்ருத்வம் -தேஷாமபி சுருதி ஷு தந் மஹிம பிரசங்காத்
பரமேஸ்வரன் பிரசித்தி ருத்ரன் இடம் காணா நின்றோமே என்ன
தந் மஹிம பிரசங்காத்-ஏக தேச சம்பந்தம் இருப்பதாலேயே
அந் யத்ர தத் குண லேச யோகாதி ஓவ்ப சாரிக–ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி

——————-

நித்யேஷு வஸ்துஷு பவந் நிரபேஷ மேவ
தத் தத் ஸ்வரூபம் இதி கேஸிதிஹ பிரமந்த
ஐஸ்வர்யம் அத்ர தவ சாவதி சங்கிரந்தே
ப்ரூதே த்ரயீ து நிருபாதிகம் ஈசனம் தே –35-

எம்பெருமானே இவ்வுலகில் சில அறிவிலிகள் நித்ய வஸ்துக்களில் அவ்வவற்றின் ஸ்வரூபம்
தேவரை அபேஷியாமல் -ஸ்வத ஏவ நித்யமாக இருப்பதாக மருள் கொண்டவர்களாய்
இவ்விஷயத்தில் தேவரீருடைய ஐஸ்வர்யத்தை சாதிகமாக கூறுகின்றார்கள்
வேதமோ என்றால் நிருபாதிக ஐஸ்வர்யத்தையே தேவரீருக்கு கூறுகின்றது

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே –இத்யாதி சுருதி வாக்கியங்களில் நிரவாதிகமான பெருமை பேசப்படா நிற்க
அத்தை சங்குசிதம் ஆக்குவது சமுசிதம் அன்று என்றபடி
நித்ய வஸ்துக்கள் நிறத்திலும் காரணத்வம் இசையை வேண்டும் என்பதை
அடுத்த ஸ்லோகத்திலும் அருளிச் செய்கிறார்

—————

இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா
நித்யம் பிரியாஸ் தவ து கேசந தே ஹி நித்யா
நித்யம் த்வத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபா
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந –36-

எம்பெருமானே சகல பதார்த்தங்களினுடைய சத்தையானது தேவரீருடைய இச்சையினாலேயே யாகும்
தேவரீருடைய நித்ய இச்சைக்கு விஷய பூதங்களான சில வஸ்துக்கள் நித்ய வஸ்துக்கள் ஆகும்
எப்போதும் தேவரீர் ஒருவருக்கே அதீனமான ஸ்வரூபத்தை யுடையவைகளான தேவரீரது
திருக்கல்யாண குணங்களே இவ்விஷயத்தில் நமக்கு உதாஹரணங்கள் ஆகும்

இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா நித்யம் பிரியாஸ் தவ து கேசந தே ஹி நித்யா
இவை நித்யமாக இருக்கக் கடவன என்னும் நித்ய இச்சா விஷய பூதங்களானவையே நித்ய வஸ்துக்கள் என்னப் படுகின்றன
நித்யம் த்வத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபா பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந —
நித்யங்களாக இருக்கச் செய்தேயும் பகவத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபங்களாக இருக்கக் குறை இல்லையே –
நித்ய வஸ்துக்களின் ஸ்வரூபமும் பகவத் சா பேஷமே யல்லது தந் நிரபேஷம் அன்று என்று நிகமிக்கப் பட்டது ஆயிற்று –

——————–

விஸ்வஸ்ய விஸ்வ வித காரணம் அச்யுத த்வம்
கார்யம் ததேதத் அகிலம் சித் அசித் ஸ்வரூபம்
த்வம் நிர்விகார இதி வேத சிரஸ்ஸூ கோஷ
நஸ் ஸீம மேவ தவ தர்சயதி ஈஸித்ர்த்வம் –37-

எம்பெருமானே எல்லாவற்றுக்கும் -எல்லாவகையான காரணமும் நீரே ஆகின்றீர்
சேதன அசேதனாத்மகமான இவை எல்லாம் தேவரீருக்குக் காரியப் பொருள் ஆகின்றன
தேவரீர் விகாரம் அற்றவர் என்று வேதாந்தங்களில் முறையிடப்படுவதானது
தேவரீருடைய எல்லை கடந்த சக்தி விசேஷத்தைக் காட்டுகின்றது
உபாதான காரணம் என்றால் விகாரம் வருமே என்ன அதுக்கு பரிஹாரம் அருளிச் செய்கிறார்

தத்வத்ரயத்தில்–இவனே சர்வ ஜகத்துக்கும் காரண பூதன்–இவன் தானே ஜகத்தாய் பரிணமிக்கையாலே
உபாதானமுமாய் இருக்கும் –
ஆனால் நிர்விகாரன் என்னும்படி என் என்னில் -ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையால்
ஆனால் பரிணாமம் உண்டாம்படி என் என்னில் விசிஷ்ட விசேஷண சத்வாரமாக
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வ பாவம் சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது அன்றோ
எம்பெருமான் ஸ்வேந ரூபேண நிமித்த காரண பூதன்
சேதன அசேதன சரீரகனாய்க் கொண்டு உபாதான காரண பூதன்
சங்கல்ப விசிஷ்ட வேஷேண ஸஹ காரி காரண பூதன்
ஸ்வரூபம் விகாரம் அடையாமல் உபாதான காரணமாய் இருக்கையே எம்பெருமானுடைய மிகச் சிறந்த சக்தி விசேஷம் என்கிறார்
வீர்ய குணத்தை -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்
ம்ருகநாபி கந்த இவயத் சகலார்த்தாந் நிஜ சன்னிதேர் அவிக்ருத அவிக்ருனோஷி பிரிய ரெங்க –
வீர்யம் இதி தத் து வந்தே -என்று அருளிச் செய்கிறார்
தான் விகாரம் உறாமலே ஸ்ருஜ்ய பதார்த்தங்களை விகரிப்பிக்கை ஷாட் குண்ய பரிபூர்ணனுடைய பிரபவ அதிசயம் அன்றோ –

————–

கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம் –38-

பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்

ஏதேனும் ஒரு வஸ்துவைக் காட்டி இதை சாதனமாகக் கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான் என்றால்
அந்த சாதன வஸ்துவை ஸ்ருஷ்டிக்கும் போது எந்த வஸ்துவை சாதனமாகக் கொள்கிறான் –
இப்படி ப்ரஸ்ன பரம்பரைகளுக்கு ஒய்வு இல்லையே
இப்படியே உபாதான காரண விஷயத்திலும் ப்ரஸ்ன பரம்பரைகளுக்கு ஒய்வு இல்லையே
எவ்விடத்தில் இருந்து ஸ்ருஷ்டிக்கிறான் போன்ற ப்ரஸ்ன பரம்பரைகளுக்கு ஒய்வு இல்லையே
எந்த ப்ரயோஜனத்துக்காக ஸ்ருஷ்டிக்கிறான் போன்ற -ப்ரஸ்ன பரம்பரைகளுக்கு ஒய்வு இல்லையே
அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ –இது போன்ற குதர்க்க வாதங்கள் பகவத் ப்ரபாவத்தை உள்ளபடி உணர்ந்த
ப்ரஹ்ம வித்துக்கள் கோஷ்டியிலே விலை செல்லாதே
சாரீரிக மீமாம்சையில் –க்ருத்ஸ்ன ப்ரஸக்திர் நிர் அவயவத்வ சப்த கோப வா –ஸூத் ரத்தில்
ஒரு சோத்யத்தை உத்ஷேபித்துக் கொண்டு
ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்-என்று சித்தாந்த ஸூத்ரமாக அமைக்கப் பட்டது
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம்-உயிரான பாதம்
ஸாஸ்த்ரைக சமதிகம்யமான பர ப்ரஹ்மத்தின் இடத்தில் லௌகிக த்ருஷ்ட்யா ஒரு குசோத்தமும் செய்யத் தகாதே
கஸ்மை பலாய ஸ்ருஜதீச –என்கிற கேள்வியை சாரீரரக மீமாம்சையில்
ந ப்ரயோஜநவத்வாத் –ஸூத்ரத்தால் உத்க்ஷேபித்துக் கொண்டு
லோகவத் து லீலா கைவல்யம் -சமாதானம்
இத்தையே அடுத்த ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

——————

யத் சம்வ்ருதம் தசை குணோத்தர சப்த தத்வை
அண்டம் சதுர்த்தச ஜகத் பாவ தாத்ரு தாம
அண்டாநி தத் ஸூ சத்ருஸாநி பரிச்சதாநி
கிரீடா விதேஸ் தவ பரிச்சத தாம கச்சந் —39-

எம்பெருமானே மேன்மேலும் பதின்மடங்காகப் பெருகி உள்ள ஏழு தத்வங்களாலே சூழப்பட்டும்
பதினான்கு உலகங்களை உடைத்தாயும்அயனுக்கும் அரனுக்கும் இருப்பிடமாயும் யாதொரு அண்டம் இரா நின்றதோ
அதனோடு மிகவும் ஒத்து இருப்பதையும் பல நூற்றுக்கணக்காக உள்ளவையுமான அண்டங்களானவை
தேவரீருடைய லீலைக்கு உபகரணமாக இருக்கும் தன்மையை அடைந்துள்ளன

பிரயோஜனம் அனுச்சித்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே
மண் பல்லுயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான் –
லீலைக்காகவே லீலா விபூதி
கீழ் அண்டகடாஹத்துக்கு மேல் -8315000-யோஜனம் உயர்த்தி உடைய கார்ப்போதகத்தின் மேலே –
ஓர் ஒன்றே -14000-யோஜனத்து அளவு உயர்த்தியும் பரப்பையும் உடைத்தாய்
தைத்ய தானவ பன்னக ஸூ பர்ணாதிகள் வாழும் இடமாய்
மணலாயும் மலையாயும் பொன்னையும் இருக்கும் ஸ்தல விசேஷங்களை உடையவையாய்
அதலம் விதலம் நிதலம் (கபஸ்திமத் என்னும் மறு பெயர் )தலாதலம் மகாதலம் ஸூ தலம் பாதாலம்–என்றும்
பெயருடைய கீழ் லோகங்களும்
இதுக்கு மேலே –70000–யோஜனை அகலத்தை உடைத்தாய் சப்த த்வீப சாகர பர்வதாதி விசிஷ்டமாய்
பாதாசாரிகளான மநுஷ்யர்கள் வார்த்தைக்கும் தேசமாய் பத்ம ஆகாரமான பூ லோகமும்
பூ லோகத்துக்கு மேலே ஆதித்யனுக்கு கீழே -100000-யோஜனத்து அளவு கந்தர்வர்கள் வாழும் புவர் லோகமும்
ஆதித்யனுக்கு மேலே த்ருவனுக்கு கீழே -14000-யோஜனை அளவு உயர்த்தி யை உடைய க்ரஹ நக்ஷத்ர இந்த்ராதிகள்
வாழும் தேசமான ஸ்வர்க்க லோகமும்
த்ருவனுக்கு மேலே ஒரு கோடி யோஜனத்தளவு உயர்த்திய உடைத்தாய் அதிகார பதவியில் இருந்து விலகி
அதிகார அபேஷிகளான இந்த்ராதிகள் வாழும் மகர் லோகமும்
அதுக்கு மேலே இரண்டு கோடி யோஜனத்தளவு உயர்த்தியை உடைத்தாய் சனகாதிகள் வாழும் ஜனர் லோகமும்
அதுக்கு மேலே எட்டு கோடி யோஜனம் உயர்த்தியை உடைத்தாய் வைராஜர் என்னும் பிரஜாபதிகள் வாழும் தபோ லோகமும்
அதுக்கு மேலே -48-கோடி யோஜனை உயர்த்தி -ப்ரஹ்ம சிவன் வாழும் சத்யலோகமும் -சதுர்த்தச புவனங்கள்

தச குணோத்தர சப்த தத்வை சம்வ்ருதம்–அண்டம் சதுர்த்தச ஜகத் பாவ தாத்ரு தாம –
கீழ் சொன்ன -14-லோகங்களையும் அண்டகடாஹம் ஆவரித்து நிற்கும்
அண்ட கடாகத்தோடு கூடின இவ்வண்டம் தன்னில் பத்து மடங்கு கூடிய ஜலதத் வத்தால் ஆவரிக்கப் பட்டு இருக்கும்
இப்படியே தசோத்தரமாக தேஜஸ் தத்வம் வாயு தத்வம் ஆகாசம் அஹங்காரம் மஹத்தத்வம் அவ்யக்தம் இப்படி
தசோத்தரங்களான சப்த ஆவரணங்களாலும் சூழப் பட்டு இருக்கும்

அண்டாநி தத் ஸூ சத்ருஸாநி பரிச்சதாநி
அண்டா நாம் து சஹஸ்ராணாம் சஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸா மாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச-
ஸ்ரீ விஷ்ணு புராண வசனம் அனுசத்தேயம்
கிரீடா விதேஸ் தவ பரிச்சத தாம கச்சந் —
க்ரீடாபரனான பாலகனுக்கு விளையாட்டுக் கருவிகள் போலே
கிரீட ரசம் அனுபவிக்க விரும்பிய எம்பெருமானுக்கு லீலா உபகரணங்களாக இருக்கும்
ஹரே விஹரசி கிரீடா கந்துகைரிவ ஐந்துப மோததே பகவான் பூதை பால கிரீட நகைரிவ –இத்யாதி
பிரமாணங்களை இங்கே நினைப்பது

—————————

இச்சா விஹார விதயே விஹிதானி அமூனி
ஸ்யாத் த்வத் விபூதி லவலேச கலாயுதாம் ச
யா வை ந ஜா து பரிணாம பதாஸ்பதம் சா
காலாதிகா தவ பரா மஹதீ விபூதி –40-

எம்பெருமானே யதேஷ்டமான லீலைக்காகப் படைக்கப்பட்ட இவ்வண்டங்களானவை தேவரீருடைய ஐஸ்வர்யப் பரப்பிலே
மிகச் சிறிய பகுதியான ஏக தேசமாய் இருக்கும்
யாதொரு விபூதியானது ஒரு காலும் பரிணமிக்க மாட்டாததும் காலம் நடையாடப் பெறாததுமாய் இருக்கின்றதோ
அந்த நித்ய விபூதியானது தேவரீருக்கு மிகப் பெரிதாய் உள்ளது

த்வத் விபூதி லவலேச கலாயுதாம் ச =
கஸ்யாயுதாயுத சதைக கலாம் சதாம் சே விஸ்வம் விசித்திர சித் அசித் பிரவிபாக வருத்தம் –ஆளவந்தார்
அருளிச் செய்ததை அடி ஒற்றி இங்கு
த்வத் விபூதி லவலேச கலாயுதாம் ச ஸ்யாத்-என்கிறார்

யா வை ந ஜா து பரிணாம பதாஸ்பதம் -ஒரு காலும் பரிணாம பதாஸ்பதம் இல்லாதது நித்ய விபூதி
தத்வ த்ரயம் அசித் பிரகரணத்தில் –சுத்த சத்வமாவது –விமான கோபுர மண்டப ப்ரஸாதாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்–
என்று அருளிச் செய்வது எதனால் என்னில்
கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையால் -தன்னுடைய போகார்த்தமாக -பரிணமியா நிற்கும்
ஆக கர்மக்ருத பரிணாமம் இல்லாமையைப் பற்றி -ந ஜா து பரிணாம பதாஸ்பதம் -என்கிறது
காலாதிகா தவ பரா மஹதீ விபூதி
காலம் ச பஸதே யத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -என்றும்
கலா முஹுர்த்தாதி மயச் ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது -என்றும்
அகால காலயமான நலம் அந்தமிலாதோர் நாட்டில் -தத்வ த்ரய வியாக்யானத்தில் ம முனிகள்
யா வை ந ஜா து பரிணாம பதாஸ்பதம் சா காலாதிகா தவ பரா மஹதீ விபூதி –இந்த ஸ்லோகப் பகுதியையும்
எடுத்துக் காட்டி உள்ளதால் -ந ஜா து பரிணாம பதாஸ்பதம்-என்றதும் காலக்ருத பரிணாமம் இல்லாமையையே சொன்னதாக

ஆக இப்படிப்பட்ட விபூதியானது மஹதீ -நித்ய முக்தராலும் ஈஸ்வரனாலும் அளவிட ஒண்ணாதாய் இருக்கும்
தேஷாமபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈதருச ஸ்வ பாவம் இதி பரிச்சேதும் யோகியே -ஸ்ரீ வைகுண்ட கத்யம்
இந்த நித்ய விபூதியின் பெருமையை மேலும் ஐந்து ஸ்லோகங்களால் அருளிச் செய்வார் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: