ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—21-30–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

நித்யஸ் சமாப்யதிக வர்ஜித்த ஊர்ஜித ஸ்ரீ
நித்யேஷரே திவி வசந் புருஷ புராண
சத்வ ப்ரவர்த்த நகரோ ஜகதோஸ்ய மூலம்
நாந்யஸ் த்வதஸ்தி தரணீ தர வேத வேத்ய –21-

ஸமஸ்த பூ மண்டலா நிர்வாஹகரான பகவானே –
தேவரீர் ஒருவரே நிருபாதிக நித்யத்வத்தோடு கூடியவராயும் -ஓத்தாரும் மிக்காரும் இல்லாதவராயும் –
திடமான ஸ்ரீ சம்பத்தை உடையவராயும் -சாஸ்வதமாய் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரமபத்திலே வசிப்பவராயும்
இந்த ஜகத்துக்கு காரண பூதராயும் -சத்வ குணத்தை ப்ரவர்த்திப்பிக்குமவராயும் -அநாதி புருஷராயும் இரா நின்றீர்
தேவரீரைக் காட்டிலும் வேறு ஒருவர் வேத ப்ரதிபாத்யராக இல்லை –

த்வம் ஏவ ஏக -கீழ் பாசுரத்தில் இருந்து இவ்விடத்துக்கும் ஆகர்ஷித்துக் கொள்வது
த்வம் ஏவ ஏக நித்யஸ்
ஜீவாத்மா காலம் ஆகாசம் -இவையும் நித்யமே ஆகிலும் நித்ய இச்சாதீனமான நித்யத்வமே -ஓவ் பாதிக்க நித்யத்வம்
சமாப்யதிக வர்ஜித்த
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன்
தானே தனக்குமவன் -தன் ஓப்பான் தானாய் உளன்

ஊர்ஜித ஸ்ரீ
ஸ்ரீ யபத்வமே பிரதான நிரூபகத்வம்
திருவில்லாத தேவரைத் தேறேன் மின் தீவு
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய யா ஜனகாத்மஜா
ஸ்ரத்தயா அதேவ -அதேவா ஸ்ரத்தாயா தேவத்வம் அஸ்நுதே

நித்யேஷரே திவி வசந்
நித்யமாயும் காலக்ருத பரிமாண ரஹிதம் -பரமாகாச பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதத்தில் உள்ளேறும் தேவரீர்
புருஷ புராண த்வம் ஏக ஏவ அஸீ
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை
முனைவர் மூ உலகாளி யப்பன்

சத்வ ப்ரவர்த்த நகரோ
சத்வஸ்யைஷா ப்ரவர்த்தக -சுருதி
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யத் மது ஸூதநா சாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் வை மோஷார்த்த சிந்தக
கடாக்ஷத்துக்கு இலக்கானாவார் பக்கல் சத்வ குணம் வளரச் செய்பவன்

ஜகதோஸ்ய மூலம்
அஸ்ய ஜகதோ மூலம் த்வம் ஏவ -உபநிஷத்
அவையில் தனி முதல் அம்மான்

த்வத் அந்யஸ் வேத வேத்ய நாஸ்தி
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய
வேதங்கள் அக்னியாதி தேவதைகளை சொல்லுமே என்றால் –
ச ஆத்மா அங்காந் அந்யா தேவதா -சரீர பூதர்களே ஒழிய வேத வேத்யர்களாக வகை இல்லையே

நாந்யஸ் த்வத் அஸ்தி -என்பதை ஒவ் ஒன்றினோடும் கூட்டி அந்வயிக்கத்தகும் –

——————

யம் பூத பவ்ய பவதீச மநீச மாஹு
அந்தஸ் சமுத்ர நிலயம் யம் அநந்த ரூபம்
யஸ்ய த்ரி லோக ஜெநநீ மஹிஷீ ச லஷ்மீஸ்
சாஷாத் ச ஏவ புருஷோசி சஹஸ்ர மூர்த்தா –22-

யாவன் ஒருவனையே பூத பவிஷ்ய வர்த்தமான காலிக ஸமஸ்த வஸ்துக்களும் ஈஸ்வரனாகவும் –
தமக்கு நியாமகர் இல்லாதவனாகவும் -வேதங்கள் ஓதுகின்றனவோ
யாவன் ஒருவனைக் கடலுள் வாழ்பவனாகவும் அபரிமித அவதார விக்ரஹ விசிஷ்டனாகவும் அந்த வேதங்கள் சொல்லுகின்றனவோ
யாவன் ஒருவனுக்கு திவ்ய மகிஷியான ஸ்ரீ மஹா லஷ்மியும் சகல லோக மாதாவாக இருக்கின்றாளோ
அப்படிப்பட்ட சஹஸ்ர சீர்ஷா புருஷ என்னப்பட்ட பரம புருஷன் சாஷாத் தேவரீரே ஆகிறீர் –

ஈஸாநோ பூத பவ்யஸ்ய –கடக வல்லி உபநிஷத் -முக்காலத்திலும் சகல பதார்த்தங்களும் நியாமகராய்
ந தஸ்யே சே கச்சந –ஸ்ருதியின் படியே தனக்கு வேறு ஒரு நியாமகர் இல்லாதபடியாய்
யமந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி -ஸ்ருதியின் படி ஷீராப்தி சாயியாய்
ததேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் -ஸ்ருதியின் படி அபரிமித அவதார விக்ரஹ விசிஷ்டராய்
ஹ்ரீச் ச தே லஷ்மீச் ச பத்ந்யவ் –ஸ்ருதியின் படி ஸ்ரீ யபதியான தேவரீர்
சஹஸ்ர சீர்ஷா புருஷா -என்று தொடங்கி புருஷ ஸூக்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட புருஷோத்தமராய் இரா நின்றீர் -என்றதாயிற்று

அநீசம்
தான் அனைவருக்கும் ஈசனாய் இருப்பது போல் தனக்கும் ஒரு ஈசன் உண்டோ என்ன இல்லை என்கிறது

————

சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-

எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது

பகவத் பரதவ ப்ரதிபாதங்களுக்கும் புருஷ ஸூக்தமே பிரதானம் -என்று அருளிச் செய்து
எம்பெருமானுக்கு புருஷ ஸூக்தத்துக்கும் ஆறு விசேஷணங்களால் சாம்யா நிர்வாகத்தையும் அருளிச் செய்கிறார்

சர்வ ஸ்ருதிஷு அநுகதம்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே –சகல வேதங்களிலும் எம்பெருமான் திகழ்வது போலே
புருஷ ஸூக்தமும் ஒவ் ஒரு வேதத்திலும் உண்டாய் இருக்கும்
ருக்வேதே ஷோடசர்ச்சம் ஸ்யாத் -யஜுஷி அஷ்டா தச ர்ச்சகம் –சாம வேதே து சப்தர்ச்சம் ததா வாஜச நேயக-
ஆகவே -சர்வ ஸ்ருதிஷு அநுகதம் -என்றது உபயத்துக்கும் சாதாரணமாய் இருக்கும்
ஸ்திரம்
நிலை நிற்கும் தன்மையும் சாதாரணம்
ப்ரமேய பூதனான எம்பெருமானும் பிரமாண மூர்த்தன்யமான புருஷ ஸூக்தமும்
நித்யஸ்ரீர் நித்ய மங்களமாய் விளங்கத் தட்டில்லையே
அப்ரகம்ப்யம்
இல்ல செய்ய குதர்க்கிகள் திரண்டாலும் அசைக்க ஒண்ணாதே –
அதே போலே புருஷ ஸூக் தத்தையும் அந்ய பரமாக்க ஒண்ணாதே
நாராயணாஹ்வயதரம்
அவனுக்கு நாராயண திரு நாமம் போலே புருஷ ஸூக்தமும்
நாராயண அநு வாகம் என்ற சிறப்பு பிரசித்தி பெற்று இருக்கும்

த்வாம் இவ அந வத்யம் -ஸூக்தம் து பவ்ருஷம்
அவன் அகில ஹேயபிரத்ய நீகனாய் இருப்பது போலே இதுவும் ஹேயபிரதி படம் –
தேவதாந்த்ர பாராம்யா சங்கைக்கு அல்பமும் அவகாசம் தாராதே
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம் தர்ம சாஸ்த்ரேஷு மானவம்-பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்
அசேஷ ஜகத் பவித்ரம்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -அசேஷ ஜகத் பவித்ரனாப் போலே இதுவும் தன்னை அனுசந்தித்தாரை
மனன் அகம் மலம் அறக் கழுவி பரம பரிசுத்தராக்கும்
ஆக இப்படிப்பட்ட புருஷ ஸூக்தமானது வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் -என்று தொடங்கி
தேவரீருடைய புருஷோத்தமத்தை முறையிட நின்றது
இந்த ஸ்லோகத்தில் உள்ள ஒவ் ஒரு விசேஷணமும் எம்பெருமானுடைய பரத்வத்தை நிலை நாட்டை வல்லது
என்னும் இடம் குறிக்கொள்ளத் தக்கது

—————-

ஆனந்தம் ஐஸ்வர்யம் அ வாங்மனச அவகாஹ்யம்
ஆம்நாசிஷுச் சத குண உத்தரித்த க்ரமேண
சோயம் தவைவ ந்ருஷு ஹி த்வம் இஹ அந்தராத்மா
த்வம் புண்டரீக நயன புருஷச் ச பவ்ஷ்ண –24-

எம்பெருமானே ஈச்வரத்வ ப்ரயுக்தமான -ஆனந்தத்தை வேத வாக்குகளானவை நூறு நூறு மடங்காகப் பெருக்கிக் கொண்டே
போகிற முறைமையில் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாததாகச் சொல்லி முடித்தன -இவ்வானந்தம் தேவரீருக்கே உற்றது –
ஏன் என்னில் இவ்வானந்த வல்லி பிரகரணத்தில் தேவரீர் சேதனர்களுக்கு உள்ளே அந்தர்யாமியாய் அன்றோ இருக்கிறீர்
அவ்வளவும் அல்லாமல் புண்டரீகாக்ஷராயும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷராயும் இரா நின்றீர் அன்றோ –

ஆம் நாசி ஷு -கிரியைக்கு ஆனந்த வல்லியில் உள்ள வாக்கியங்களை வருவித்துக் கொள்ள வேணும்
பர ப்ரஹ்மத்தின் ஆனந்தம் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ -என்று மீண்டு தலைக் கட்டிற்றே
ஆனால் ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்று அங்கு என் சொல்லிற்று என்னில்
ஷிப்தேஷு ரிவ சர்ப்பதி–எறியப்பட்ட அம்பு போலே சூரியன் ஓடுகிறான் என்றால்
சூரியனுடைய கதி அமந்தம் என்பதிலே நோக்கு -அதேபோல் ஆனந்த ஆதிக்யத்தில் இதுக்கு நோக்கு
ந்ருஷு ஹி த்வம் இஹ அந்தராத்மா –
அவர்கள் யாவரும் தேவரீருக்கு சரீர பூதர்களாய் தேவரீர் சரீரியாய் இருக்கையாலே இங்கனே சொல்லக் குறையில்லை என்றபடி
பிராண மய மனோ மயங்களுக்குப் பிறகு விஞ்ஞான மயனைச் சொல்லி
தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா என்று விஞ்ஞான மயனான ஜீவனுக்கு ஆனந்த மயனான பரமாத்மாவையே
அந்தராத்மாவாக ஓதி இருப்பது உணரத் தக்கது
த்வம் புண்டரீக நயன புருஷச் ச பவ்ஷ்ண
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக –தைத்ரியத்தில் சூர்யமண்டல வர்த்தியாக எம்பெருமானைச் சொல்லப்பட்டது
சாந்தோக்யமும் -ச ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று சொல்லி உடனே
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவம் அக்ஷணீ –என்று புண்டரீகாக்ஷத்வத்தையும் சொல்லி இருக்கையாலே
அவை இரண்டையும் எடுத்து உரைத்து பாரம்ய நிரூபணம் பண்ணி அருளிற்று

——————-

யந் மூல காரணம் அபுத்த்யத ஸ்ருஷ்ட்டி வாக்யை
ப்ரஹ்ம இதி வா சதிதிவ ஆத்மகிரா தவ தத்
நாராயணஸ் த்விதி மஹா உபநிஷத் பிரவீதி
ஸுவ்பாலிகீ ப்ரப்ருதயோபி அநு ஜக்முர் ஏநாம் –25-

ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் உள்ள காரண வாக்யங்களாலே -சத் என்றோ -ப்ரஹ்ம -என்றோ -ஆத்மா -என்றோ
எந்த வஸ்துவானது மூல காரணமாக அறியப்பட்டு இருக்கின்றதோ –
அந்த வ்யக்தி நாராயணனே என்று மஹா உபநிஷத்து ஓதுகின்றது–
இந்த மஹா உபநிஷத்தை ஸூபால உபநிஷத் முதலானவைகளும் பின் செல்லுகின்றன –

அதர்வ சிரஸ்ஸில்–கச்ச த்யேய–காரணம் து த்யேய –என்று ஜகத் காரண பூதமான வஸ்துவே உபாஸ்யம் என்று ஓதிற்று
அந்த வஸ்து ஏது என்று ஆராய்ந்து ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு சப்தத்தால் சொல்லிற்று
சாந்தோக்யத்தில் -ச தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –என்று ஸச் சப்தத்தால் சொல்லிற்று
வாஜச நேயகத்தில் -ப்ரஹ்ம வா இதம் ஏவ அக்ர ஆஸீத் -என்று ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லிற்று
சர்வசாகா ப்ரத்யய நியாயத்தால் சாமான்யமான ஸச் சப்த வாஸ்யம் விசேஷ உபஸ்தாக ப்ரஹ்ம சப்த வாஸ்யம் என்று நிரூபிக்கப்படுகிறது
இந்த ப்ரஹ்ம சப்தம் தானும் ஐதரேயத்தில் -ஆத்மா வா இதம் ஏக ஏவாகிற ஆஸீத் -என்று ஆத்ம சப்தத்தால் விசேஷித்து
மஹா உபநிஷத்தும் ஸூபால உபநிஷத்தும் இத்யாதிகளும் நிஷ்கர்ஷித்துக் கொடுத்தன –
இந்த ஸ்லோகத்தின் பிரமேயத்தை ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -16- ஸ்லோகத்தில் விரித்து அருளிச் செய்கிறார்
ஸ்ருஷ்ட்டி வாக்யை என்றது காரண வாக்கியங்கள் என்றவாறு –

——————

ஜ்யோதிஸ் பரம் பரமதத்வம் அதோ பராத்மா
ப்ரஹமேதி ச சுருதி ஷு யத் பரவஸ்து அதீதம்
நாராயணஸ் ததிதி தத் விசி நஷ்டி காசித்
விஷ்ணோ பதம் பரமம் இது அபரா க்ருணாதி –26-

வேதங்களில் யாதொரு பரவஸ்துவானது பரஞ்சோதி என்றும் பரமதத்வம் என்றும் பரமாத்மா என்றும்
பர ப்ரஹ்மம் என்றும் ஓதப்படுகின்றதோ அந்த வஸ்துவை நாராயணன் என்று ஒரு சுருதி விவரிக்கின்றது
மற்ற ஒரு சுருதி அதே வஸ்துவை விஷ்ணோர் பரமம் பதம் என்று ஓதுகின்றது

நாராயணபரோ ஜ்யோதி –என்ற இடத்தில் ஸமஸ்த பதமாக இருந்தாலும் இதர சாகைகளில் உள்ள பாடத்தை
அனுசரித்து வ்யஸ்தமாகவே கொள்ளக் கடவது -பர என்றது ஜ்யோதிஸ்ஸூக்கு விசேஷணம்
பரமதத்வம்-தத்வம் நாராயண பர சுருதி வாக்கியம் விவஷிதம்
பராத்மா-ஆத்மா நாராயண பர சுருதி வாக்கியம் விவஷிதம்
ப்ரஹமேதி ச
நாராயண பரம் ப்ரஹ்மம் சுருதி வாக்கியம் விவஷிதம்
சுருதி ஷு யத் பரவஸ்து அதீதம்
நாராயணஸ் ததிதி தத் விசி நஷ்டி காசித்–
நாராயண அநுவாகம் நாராயணனே என்று விளக்கி நின்றது
விஷ்ணோ பதம் பரமம் இது அபரா க்ருணாதி —
அபரா என்பதால் கடவல்லி சுருதி விவஷிதம்
விஞ்ஞான சாரதிர் யஸ் து மன ப்ரக்ரஹ வாந் நர சோத்வன பாரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –

ஆக இவற்றால் தேவதாந்த்ர பாராம்ய சங்கைக்கு அவகாசமே இல்லை என்றதாயிற்று

————-

சந்தீத்ருஸ சுருதி சிரஸ்ஸூ பரஸ் சஹஸ்ரா
வாஸஸ் தவ ப்ரதயிதும் பரமேசித்ருத்வம்
கிஞ்சேஹ ந வ்யஜ கண க்ருமி தாத்ரு பேதம்
க்ராமந் ஜகந்தி நிகிரந் புநருத் கிரம்ச் ச-27-

எம்பெருமானே தேவரீருடைய பரம ஐஸ்வர்யத்தைப் பரவச் செய்வதற்கு வேதாந்தங்களிலே
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் என்பதை விளக்க -இப்படிப்பட்ட பல்லாயிரம் வாக்குகள் உள்ளன –
அன்றியும் தேவரீர் இங்கு உலகங்களை அளக்கும் போதும் விழுங்கும் போதும் மறுபடி உமிழும் போதும்
கிருமி என்றும் பிரமன் என்றும் வாசி பார்த்திலீர்

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன்
க்ராமந்-உலகு அளந்தமை
நிகிரந்–உலகு உண்டமை
புநருத் கிரந்–உலகு உமிழ்ந்தமை -ஸ்ருஷ்ட்டி செய்தமை
க்ருமி தாத்ரு பேதம் -ந வ்யஜ கண
க்ருமி கீடாதிகளோடு ப்ரஹ்மாதி தேவர்களோடு வாசி பார்க்காமல் செய்த செயல்கள் அன்றோ
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவையும் யுலகமும் யாவரும் அகப்பட
நில நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க –ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையோம் யாமே –திருவாசிரியம் -7-அனுசந்தேயம்

——————

ரூபஸ்ரியா பரமயா பரமேண தாம் நா
சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
நிச்சின்வதே த்வயி விபச்சித ஈஸித்ருத்வம்–28-

எம்பெருமானே மஹா விவேகியாய் உள்ளவர்கள் தேவரீருடைய மிகச் சிறந்த திரு மேனி விளக்கத்தினாலும் –
சிறந்த ஸ்தான விசேஷத்தினாலும் -அற்புதமாகும் தகுந்த மிக்கு இருக்கிற சில சரிதைகளினாலும்
பரத்வத்தை ஒளிக்காமல் நிர்ணயிக்கக் கூடிய சில அடையாளங்களாலும்
தேவரீர் இடத்திலேயே பாரம்யத்தை நிர்ணயிக்கிறார்கள்

பரமயா ரூபஸ்ரியா
காணிலும் உருப் பொலார்
பிணங்கள் இடு காடு அதனுள் நடமாடி வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி விரூபாக்ஷனாய்
இருக்கும் இருப்பு போல் அன்றியே
எழிலுடைய அம்மனைமீர் என்னரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகார் கொப்பூழில் எழு கமலப்பூ அழகர் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
கோல மணி யாரமும் முத்துத் தாமமும் முடி இல்லாதோர் எழில் நீல மேனி
என்றும் சொல்லுகிற திரு உருவ அழகு கொண்டும்

பரமேண தாம் நா
ஆதித்ய வர்ணம் தாமஸ பரஸ்தாத்
தத் அக்ஷரே பரமே வ்யாமன்
நலம் அந்தமிலா நாடு தன்னில் இருப்பதாலும்

சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனங்கள்
தூணில் இருந்து தோன்றி
கடலிலே அணை கட்டி
குன்று எடுத்து ஆ நிரை காத்து
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுப்பதுவும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுப்பதும்
முதலானவை சொலப் புகில் வாய் அமுதம் பரக்குமே-அவற்றாலும்

சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
ஸ்ரீ யபதித்வம் -சேஷ ஸாயித்வம்-கருட வாஹனத்வம் போன்றவைகளாலும்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து
ஒழிந்த பைந்துழாயான் பெருமை -போன்ற அருளிச் செயல்கள் அனுசந்தேயம்

அநிஹ்நவபரைர்-
நிஹ்நவமாவது அப லாபம் -அதிலே தத் பரங்கள் அல்லாதவை என்றது -ஸ்பஷ்டமாக நிர்ணயிப்பவை -என்றபடி
அநிஹ்நவ பதை–பாட பேதம் -அப லாபத்துக்கு ஆஸ் பதம் அல்லாத என்றபடி
அப லபிக்க முடியாதவை என்று கருத்து

விபச்சித
விவிதமாகப் பார்க்க வல்ல அறிவுடையார் -மஹா மதிகள் என்றபடி

———————-

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது
சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே
ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் –

அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம ததுபூத் அமீ யத்ர த்வித்ராஸ் ச ச சதமகாதிஸ் தததராத் –ஸ்ரீ குணரத்னகோசம்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
ஸ்ரீ சப்தத்துக்கு ஆறு வ்யுத்பத்திகளிலும் -ஸ்ரயதே-என்று எம்பெருமானை ஆஸ்ரயித்து
ஸ்வரூப லாபம் அடைபவள் -என்பதே முதலானது
மலர் மகள் விரும்பும் நம் யரும் பெறல் அடிகள் அன்றோ

த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு -உதார வாச
இருவருக்கும் இருவராலும் ஏற்றம் அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வா
கச் ஸ்ரீச் ஸ்ரியா
உதார வாக்குகள் ஆகிறார் திருமங்கை ஆழ்வார் -ஆளவந்தார் பராசர பட்டர் போல்வார்

—————

மாயா த்வயா குணமயீ கில யா நிஸ்ருஷ்டா
சா தே விபோ கிமிவ நர்ம ந நிர்மிமீதே
கௌதஸ்குதா ஸ்திரகு தர்க்க வசநே கேசித்
சத்யம் ஸ்ருதவ் ச பதிராஸ் த்வயி தந் மஹிம் நா –30-

எம்பெருமானே குணத்ரயாத்மகமான யாதொரு மாயையானது தேவரீராலே பிணைக்கப் பட்டதோ –
அந்த மாயை தேவரீருக்கு எந்த விளையாட்டைத் தான் விளைக்க மாட்டாதது —
அதுவே தேவரீருடைய லீலைக்கு உப கரணம்
சில குத்ஸிதவாதிகள் தேவரீருடைய பரத்வத்தை விளக்க வல்ல சுருதிகள் விளங்கா நிற்கவும்
அவர்ஜயநீயமான துரா க்ரஹத்தினால் அந்த மாயையின் பெருமை அடியாக தேவரீருடைய பெருமையை
காது கொண்டு கேட்பதில் செவிடர்களாய் இருக்கிறார்கள்

தவ பரிப்ரடிமஸ்வ பாவம் மாயா பலேந பவதாபி நிகுஹ்யமாநம் –ஸ்தோத்ர ரத்னம் -16-
தைவீஹ் யேஷா குணமயீ மம மாயா துரத்தயா
துய்க்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன
கிரீடா விதே பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹ நீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ –அதிமானுஷ ஸ்தவம்
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லையே
மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே
தைவீம் குண மயீம் மாயாம் –தவாஸ்மி தாச இதி வக்தாரம் மாம் தாரய -சரணாகதி கத்யம்
மாயைக்கு வசப்பட்டு குதர்க்க வாதிகள் தேவரீருடைய பாரம்யத்தை அறியப்பெறாமல் தடுமாறுகின்றனர்

மாயா த்வயா குணமயீ கில யா நிஸ்ருஷ்டா–
தைவீஹ் யேஷா குணமயீ மம மாயா -என்கிற பகவத் வசனத்தை உட் கொண்டு அருளிச் செய்தபடி
குணமயீ -அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் -உபநிஷத் அனுசந்தேயம்-முக்குணங்கள் கலந்த கட்டி என்றபடி
சா தே விபோ கிமிவ நர்ம ந நிர்மிமீதே
அந்த மாயை செய்யாத கூத்து இல்லை என்றபடி
அதில் ஒரு கூத்தை மூதலிக்கிறார்
கௌதஸ்குதா ஸ்திரகு தர்க்க வசநே கேசித்
எது சொன்னாலும் ஒரு வரம்பில் நில்லாதே -தத் குத தத் குத -என்றே சோத்யம் செய்பவர் -கு யுக்தி மாத்ர அவலம்பிகள்
குதர்க்கமே செய்து கொண்டு இருக்கும் தன்மை
சத்யம் ஸ்ருதவ் ச பதிராஸ் த்வயி தந் மஹிம் நா —
தந் மஹிம் நா —கீழ்ச் சொன்ன மாயையின் பெருமையினாலேயே
த்வயி பதிராஸ்-தேவரீர் விஷயத்தில் செவிடராய் ஒழிகின்றார்கள்
லோகே த்வன் மஹிமாவபோத பதிரே -ஸ்ரீ குணரத்னகோசம் -என்றது இதை ஒட்டியே

ஆக மாயைக் கடந்து சுத்த சாத்விகர்களாய் உள்ளவர்கள் பகவத் பாரம்யத்தை உள்ளபடி உணர்ந்து வாழ்ந்து போகா நிற்க
குணத்ரய வஸ்யர்களான சில அவ்யபதேஸ்யர்கள் இழந்து ஒழியா நின்றார்கள் என்கிறார் ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: