ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—11-20–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

கீழே பத்து ஸ்லோகங்களும் அவதாரிகை-பேசி அல்லது தரிக்க மாட்டாத தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து –
அவனது ஷமா குணத்துக்கு உத்தம்பகமாய் இருக்கையாலே -இந்த ஸ்தோத்ர ப்ரவ்ருத்தி உக்தமே
என்று நிஷ்கர்ஷித்தார் கீழே
அதுக்கு உறுப்பாக பிரமாண நிஸ்கர்ஷம் பண்ணுகிறார் இதில்
ஆழ்வார் சுடர் மிகு ஸ்ருதியும் இவை உண்ட சுரனே என்று உபக்ரமத்திலே அருளிச் செய்தார் அன்றோ
அதே போலே தாம் அருளிச்செய்யும் இவை வேதாந்த சித்தமே -என்கிறார்

ஆஜ்ஞா தவ அத்ர பவதீ விதிதா த்ரயீ சா
தாம் ஹி பிரமாணம் உப ஜக்முர் அதீந்திரியே அர்த்தே
ஆபாச பூயம் அபி யாந்தி அபராணி தோஷை
ஏஷா து தோஷ ரஹிதா மஹிதா புராணீ –11-

எம்பெருமானே பூஜிக்கத் தகுந்ததும் ப்ரசித்தமுமான வேதமானது தேவரீருடைய கட்டளையாக பிரசித்தி பெற்றுள்ளது
அந்த வேதத்தை இந்திரியங்களுக்கு எட்டாத பரோக்ஷ விஷயங்களில் பிரமாணமாக வைதிகர்கள் அங்கீ கரித்தார்கள்
வேதம் தவிர்ந்த மற்ற பாஹ்ய சாஸ்திரங்கள் பலவகைத் தோஷங்களினால் ஆபாசத் தன்மையை அடைந்து
அப்ரமாணங்கள் ஆகின்றன–
இந்த வேதமோ என்றால் அநாதி ஸித்தமாய்-தோஷம் அற்றதாய் -ப்ரமாணங்களுக்குள் தலையாகக் கொண்டாடப் பட்டது –

ஆஜ்ஞா தவ அத்ர பவதீ விதிதா த்ரயீ சா
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிஸ் மமை ஆஜ்ஞா யஸ் தாம் உல் லங்க்ய வர்த்ததே -ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ
மத் பக்தோபி ந வைஷ்ணவ –என்ற திருமுகப்பாசுரம் படியே அவனுடைய ஆஜ்ஞா ரூபம் ஆகையால்-
அவன் கட்டளையாக சாஸ்திரங்களை மீறுவாருக்கு இங்கும் அங்கும் தண்டம் தப்பாது என்றபடி

தாம் ஹி பிரமாணம் உப ஜக்முர் அதீந்திரியே அர்த்தே
பிரமாதாவானவன் -பிரமாணத்தைக் கொண்டே ப்ரமேயத்தை நிச்சயிக்க வேண்டும்
ப்ரத்யஷாதி அஷ்ட பிரமாணங்கள் -என்றும் ப்ரத்யக்ஷம் அனுமானம் ஆகமம் என்ற மூன்றும் மற்ற உவமானம் போன்ற
ஐந்தும் இவற்றுள் அடங்கும் என்றும் சொல்வர்
சாருவாகர் -கண்டதே காட்சி கொண்டதே கோலம் -ப்ரத்யக்ஷம் ஏகம்-என்பர்
ஆகமங்களிலும் -வேதே கர்த்ராத்ய பாவாத் பலவதி ஹி நயைஸ் த்வன் முகே நீயமாநே தந் மூலத் வேந மாநம்
தத் இதர அகிலம் ஜாயதே ரங்க தாமநின் -என்கிறபடியே
ஸ்வதா ப்ராமாண்யம் உடைய வேதமே பிரபல பிரமாணம்

அபராணி தோஷை-ஆபாச பூயம் அபி யாந்தி
வேத மூலங்கள் அல்லாதவை -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை முதலிய தோஷங்களால் துஷ்டங்கள் –
ஆகவே பிராமண ஆபாசங்களாகும் -நிரவத்ய பிரமாணங்கள் ஆக மாட்டாவே

ஏஷா து தோஷ ரஹிதா மஹிதா புராணீ —
வைதிக சப்தங்களே வேதம் -நான்முகனுக்கு குறைக்கப்பட்டு சிஷ்ய பரம்பரைக்கு உபதேசிக்கப் பட்டு
ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் அறிய முடியாதவற்றை காட்டுவதால் வேதம் -என்ற பெயர்
பிரத்யஷ்யேன அநு மித்யா வா யஸ்த் உபாயோ ந புத்த்யதே யத்தம் விதந்தி வேதேந தஸ்மாத் வேதஸ்ய வேததா-என்னக் கடவது அன்றோ
ஸ்ரவண பரம்பரையாக அதிகரிக்கப்பட்டு வருவதால் சுருதி எனப்படுகிறதே
அபவ்ரு ஷேயமாய்–நித்தியமாய் -நிர் தோஷமாய் -அவிச்சின்ன பரம்பரா பிராப்தம் -இதுவே நமக்கு பரம பிரமாணம் என்கிறார் –

————-

அந்தர் ஹிதோ நிதி ரஸி த்வம் அசேஷ பும்ஸாம்
லப்யோசி புண்யபுருஷைர் இதரைர் துராப
தத்ர த்ரயீம் ஸூக்ருதிந க்ருதிநோதி ஜக்மு
பாஹ்யேஷு பாஹ்ய சரிதைரிதரைர் நிபேதே–12-

எம்பெருமானே தேவரீர் அனைவருக்கும் -வைத்த மா நிதியாய் இரா நின்றீர் –
பாக்யசாலிகளாலே அடையத் தகுந்தவராயும் –
மற்றையோர்களால்-அடையக் கூடாதவராயும் இரா நின்றீர் –
இவ்விஷயத்தில் பாக்யசாலிகளான வித்வான்கள் வேதத்தைக் கைப் பற்றினார்கள் –
மற்ற அவைதிகர்களாலே வேத பாஹ்ய ஆமங்களிலே விழுகிற படி –

வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய–என்றும்
வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கு -என்றும்
வேத ப்ரதிபாத்யனான எம்பெருமானை உள்ளபடி உணரப் பெறுவது சில பாக்ய சாலிகளே
அந்தர் ஹிதோ நிதி ரஸி த்வம்-
இரா மடமூட்டுவரைப் போலே உள்ளே பதி கிடந்து சத்தையை பிடித்து நோக்கிக் கொண்டு போரும்-
உள்ளுறையும் நிதி அன்றோ -வைத்த மா நிதியாம் மது சூதன் அன்றோ –
நிதிர் அவ்யய -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

லப்யோசி புண்யபுருஷைர் –இதரைர் துராப
நிலத்தினுள்ளே நிதி கிடந்தாலும் பாக்யசாலிகளுக்கு அல்லது மற்றையோர்க்கு கிட்டாதே
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனை அறிகைக்கும் ஒரு புண்ணியம் வேண்டுமே
தேந அவலோக்ய க்ருதிந பரி புஞ்ஜதே தம் –என்று இவர் திருக் குமாரரும் அருளிச் செய்தார்
நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோபி சித்தாஞ்ஞநேந பவதைவ விபூஷிதாஷா பஸ்யந்த் யுபர்யு பரி சஞ்சர தாம த்ருஸ்யம்
மாயானி கூட மனபாய மஹா நிதிம் த்வாம் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாத் -ஸ்ரீ தேசிகன்
பத்துடை அடியவர்களுக்கு எளியவன் -என்று சொல்லி -பிறருக்கு அறிய வித்தகன் என்றால் போலே
அது சொன்னாலே இதுவும் ஸித்தமாய் இருக்க
இதரைர் துராப -என்கிறார் இங்கும்

தத்ர த்ரயீம் ஸூக்ருதிந க்ருதிநோதி ஜக்மு
தேவரீருடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அறிய வேண்டும் இடத்திலே என்றபடி
ஸூக்ருதி க்ருதிந –என்றது ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணிகளை -சகல சுருதி வாக்கியங்களையும்
சமன்வித அர்த்தமாக யுதபாதிக்க வல்லவர்கள் –

இ தரைர்—பாஹ்ய சரிதைரி -பாஹ்யேஷு நிபேதே—-
சாஸ்திரங்களை அனுவர்த்தியாதே அதிவர்த்திக்கின்ற துஷ்ட சரித்ரர்களான மற்றையோர் ஜைன புத்தாதி
பாஹ்ய ஆமங்களிலே வீழ்ந்து நசித்து ஒழிந்தனர்-

——————-

சித்ரம் விதேர் விலஸிதம் த்விதம் ஆவிரஸ்து
துஷ்டாத்மநாம் அயம் அஹோ கில துர் விபாக
யத் கேசி தத்ர பவதீம் ஸ்ருதிம் ஆஸ்ரயந்த அபி
அர்த்தே குத்ருஷ்ட்டி வினி விஷ்டதிய வி நஷ்டா–13-

தைவத்தினுடைய இந்த விலாசமோ என்றால் ஆச்சரியகரமாக விளங்குகின்றது –
அநேக ஜென்ம அநு வ்ருத்த கல்மஷ தூஷிதர்களான துஷ்டர்களுடைய இந்த துஷ்ட பரிபாகமானது ஆச்சர்யம் -ஏன் என்றால்
பிரச்சன்ன பவ்த்தர்கள் பூஜ்யமான வேதத்தை பிரமாணமாக அங்கீ கரித்து இருந்தும் பொருள் கொள்ளும் விஷயத்தில்
குத்ஸிதமான நிர்வாகங்களிலே ஊன்றின புத்தியை உடையவர்களாகி அழிந்து ஒழிந்தார்கள் இறே
வேதங்களின் அக்ஷர ராசி மாத்திரத்திலே ப்ரமண்யம் இசைந்தார்கள் இவர்கள் அர்த்தத்தில் குத்ருஷ்டிகளாய் இரா நின்றார்கள்

இதம் து விதேர் விலஸிதம் சித்ரம் ஆவிரஸ்து
குத்ருஷ்டிகளின் படியைத் தம் உள்ளே தாம் அனுசந்தித்து -அந்தோ இது என்ன
தேவ துர் விலஸிதம் என்று இரங்குகிறார்
இங்கனம் சாமான்யமாகச் சொன்னதை விசேஷித்துப் பேசுகிறார்

துஷ்டாத்மநாம் அயம் அஹோ கில துர் விபாக
அநேக ஜன்மாந்தர உபார்ஜித்த கல்மாஷ பரிபூர்ணர்களான துராத்மாக்களினுடைய துரதிருஷ்ட பரிபாகம் –
வாய் கொண்டு பேச ஒண்ணாதபடி ஆச்சர்யமாக இருக்கின்றதே

யத் கேசித் அத்ர பவதீம் ஸ்ருதிம் ஆஸ்ரயந்த அபி
நாம நிரதேசத்துக்கு அநர்ஹராக -அவ்யபதேசர்களாய் -இருப்பதால் கேசித் என்கிறார் –
பிரசன்ன பவ்த்தர்கள் -வி மதர்கள் -என்றபடி
அத்ர பவதீம் ஸ்ருதிம் ஆஸ்ரயந்த அபி —
பரம பூஜ்யமான வேதத்தை பிரமாணமாக இசைந்து இருந்தார்களே யாகிலும்

அர்த்தே குத்ருஷ்ட்டி வினி விஷ்டதிய வி நஷ்டா–
பதார்த்த வாக்யார்த்த தாத்பர்யங்களில் -வர்ணனங்களிலே -அப நியாயங்களை அவலம்பித்து
ஆக்ரஹ க்ராஹிகளாய் நசித்துப் போனார்கள்
ந து மாம் அபிஜா நந்தி தத்வே நாதச் ஸ்யவந்தி தே –ஸ்ரீ கீதை -9-24-என்றபடி அசத் கல்பராய் ஒழிந்தார்கள்
இப்படியும் சில வ்யக்திகளை எம்பெருமான் ஸ்ருஷ்ட்டி வைப்பது என்ன லீலா விலாசமோ -என்று
உள்ளம் தளர்ந்து பேசுகிறார்
குத்ருஷ்ட்டி -குத்ஸிதா த்ருஷ்ட்டி யேஷாம் தே குத்ருஷ்டாய -பஹு வ்ரீஹி
குத்ஸிதா ச சா த்ருஷ்ட்டிச் ச குத்ருஷ்ட்டி -என்று கர்ம தாரயமாக -கோணலான புத்தி என்றபடி

—————–

பாஹ்யா குத்ருஷ்ட்ய இதி த்வி தயேபி அபாரம்
கோரம் தமஸ் சமுபயாந்தி ந ஹி ஈக்ஷசே தாந்
ஜக்தஸ்ய காந நம்ருகைர் ம்ருக த்ருஷ்ணிகா ஈப்சோ
காஸார சத்வ நிஹ தஸ்ய ச கோ விசேஷ –14-

எம்பெருமானே வேத பாஹ்யர்களான ஜைன பவ்த்தாதிகள் என்ன -சங்கராதி குத்ருஷ்டிகள் என்ன –
இரு கரையினரும் கரை இல்லா பயங்கர தமஸ்ஸை அடைகிறார்கள்
ஏன் என்றால் தேவரீர் அவர்களை கடாக்ஷிப்பது இல்லை அன்றோ
கானலைப் பார்த்து தண்ணீர் என்று மயங்கி ஓடிச் சென்றதும் புலி முதலிய காட்டு மிருகங்களினால்
பஷிக்கப்பட்டதுமான ம்ருகத்துக்கும்
மெய்யான தண்ணீரிலே இழிந்து முதலை முதலான தடாக ஜந்துக்களால் விழுங்கிப் பட்டொழிந்த ம்ருகத்துக்கும்
என்ன வாசி -ஒரு வாசியும் இல்லையே -அதே போலவே இதுவும்

வேத ப்ராமாண்யத்தை அங்கீ கரிப்பதானாலேயே இவர்களுக்கு ஒரு வை லக்ஷண்யம் இல்லையே
பி பேதி அல்ப ஸ்ருதாத் -வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிறபடி வேதத்தை விப்ரலம்பம் பண்ணிக் கெடுக்காதே
யதா வஸ்திதமான அர்த்தத்தில் ஊன்றி இருக்கும் அத்தனையே வேண்டுவது –

பாஹ்யா குத்ருஷ்ட்ய இதி த்வி தயேபி அபாரம் கோரம் தமஸ் சமுபயாந்தி
வேதத்தை பிரமாணம் என்று இசையாத மாத்யமிக வைபாஷிக சவ்த்ராந்திகர்களான பாஹ்யர்களும்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர்கள் -என்று பேசப்பட்டவர்களாய் வேத ஏக தேசத்தை
வ்யாவஹாரிக பிரமாணமாக ஸ்வீ கரித்தும் கூட அஸமீஸீந நியாய வாதிகளாய் இருக்கிற மாயாவதி ப்ரப்ருதிகளும் –
ஆகிய இருவரும் கரை காண ஒண்ணாத அதி குரூரமான தமஸ்ஸிலே கிடந்து உழல்வார்கள்

ந ஹி ஈக்ஷசே
இறந்த காலத்தில் கடாக்ஷம் பெறாதவர்கள் என்றும்
பூத காலத்திலும் கடாக்ஷம் பெறத்தகாதவர்கள் என்றும்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேத்
மது ஸூதந-சாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக-என்றும்
இனிமேலும் ஒரு நாளும் கண் எடுத்துப் பார்த்து அருளீர் என்றுமாம்
இருவரும் துல்ய யோக ஷேமர்கள் -என்பதை த்ருஷ்டாந்த முகேந மூதலிக்கிறார்

ஜக்தஸ்ய காந நம்ருகைர் ம்ருக த்ருஷ்ணிகா ஈப்சோ -காஸார சத்வ நிஹ தஸ்ய ச கோ விசேஷ —
விடாய் மிகுத்து தண்ணீர் தேடி இரண்டு மிருகங்கள் செல்ல
ஓன்று கானல் நீரை நீர் என்று பிரமித்து போகும் வழியில் புலி சிறுத்தை இவற்றால் தின்னப்பட்டு ஒழிய
இன்னும் ஓன்று தடாகத்துக்கே சென்றாலும் துறை தப்பி இழிந்து முதலையால் கவ்வப்பட்டு மாண்டு ஒழிந்தது
ஆக இருவரும் விநாசத்தில் வாசி அற்றவர்களே
கோரம் தமஸ்-என்றது
மாய வான் சேற்று அள்ளல் பொய்ந் நிலமாகிய சம்சாரத்தைச் சொன்னபடி
அதோ தஸ் பாபாத்மா சரணத நிமஜ்ஜாமி தமஸி –ஆளவந்தார்

—————-

நியாய ஸ்ம்ருதி ப்ரப்ருதிபிர் போவதா நிஸ்ருஷ்டை
வேதோ உப ப்ரஹ்மண விதவ் உசிதைர் உபாயை
ஸ்ருத்யர்த்தம் அர்த்தமிவ பாநு கரைர் விபேஜு
த்வத் பக்தி பாவித விகல்மஷ சேமுஷீகா –15-

எம்பெருமானே தேவரீர் இடத்தில் உண்டான பக்தியினால் நிஷ் கல்மஷமான புத்தி உண்டாகப் பெற்றவர்கள்
வேதத்தின் பொருள் கொள்ளும் திறத்தில் உசிதமான உபாயங்களாக தேவரீராலே அருளப்பெற்ற
தர்க்க மீமாம்சைகளை என்ன மன்வாதி ஸ்ம்ருதிகள் என்ன இவை முதலானவற்றால் சூர்ய கிரணங்களால்
கடபடாதி பதார்த்தங்களை பகுத்து அறிவது போலே வேதார்த்தத்தை பகுத்து அறிந்தார்கள்

ஸ்ருத்யர்த்தம்
பூர்வ பாக ப்ரதி பாத்யமான -ஆராதன ரூபமான -கர்மத்தையும்
உத்தர பாக ப்ரதி பாத்யமான -ஆராத்ய வஸ்துவான -ப்ரஹ்மத்தையும் சொல்லுகிறது
அதாதோ தர்ம ஜிஜ்ஜாசா / அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா -என்று உபக்ரமம்
சா ஆத்மா அங்க அந்யந்யா தேவதா –பகவச் சரீர பூதர்கள் அன்றோ
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சாஹுதாச நாந் சர்வ பூதாந்த அந்தராத்மாநம் விஷ்ணும் ஏவ யஜந்தி தே –
கர்மம் புபுஷுக்களுக்கு -ஐஸ்வர்ய ஸாதனமாய்-முமுஸுக்களில் பக்தி நிஷ்டர்க்கு உபாசன அங்கமாய் –
ப்ரபன்னருக்கு கைங்கர்ய ரூபமாய் இருக்கும்
கர்மத்தின் வேஷத்தை உள்ளபடி அறியவே த்யாஜ்யங்களும் உபாதேயங்களும் இவ்வதிகாரிகளுக்கு வேறுபடுமே
ப்ரஹ்மத்தை அறியும் பொழுது ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாமே அறிய வேண்டுமே
அதில் ஞானானந்த லக்ஷணமான சேதன ஸ்வரூப வை லக்ஷண்யம் அடியாக வருவதால்
கைவல்யத்திண் வேஷத்தையும் அறியலாம்
த்வத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக -ஊர்த்தவோ பாகஸ் த்வதீஹா குண விபவ
பரி ஞாபநைஸ் த்வத் பதாப்தவ் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்

பவதா நிஸ்ருஷ்டை-
வியாசர் மனு போன்ற மகரிஷிகளை அநு பிரவேசித்து ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களை வெளியிட்டு
அருளுகையாலே அவனே கொடுத்ததாகச் சொல்லக் குரை இல்லையே

வேதோ உப ப்ரஹ்மண விதவ் உசிதைர் உபாயை
இதிஹாச புராணாப்யாம் வேதம் சம் உப ப்ருஹ்மயேத் -பிபேதி அல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதர்ஷயதி–என்றும்
வேத உப ப்ரும்ஹணார்த்தாய தாவ க்ரஹயத பிரபு –

நியாய ஸ்ம்ருதி ப்ரப்ருதிபிர்
நியாய அநு க்ருஹீத்ய ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே -என்றபடி
நியாய சப்தத்தால் தர்க்க மீமாம்ஸைகள் இரண்டும் விவஷிதம்
சமீஸீந தர்க்கமும் -பூர்வ உத்தர மீமாம்ச நியாயங்களும் வேத உப ப்ரும்ஹணத்துக்கு அனுகூலங்களாய் இருக்கும்
ஆர்ஷம் தர்ம உபதேஸஞ்ச வேத சாஸ்த்ரா விரோதிநா யஸ் தர்க்கேன அநு சந்தேத்தே ச தர்மம் வேத நேதர–என்றும்
வேத சாஸ்த்ரா தாரூடா ந்யார்கட்க தரா த்விஜா க்ரீடார்த்தம் அபி யத் ப்ரூயுஸ் ச தர்ம பரமோ மத –என்றும்
சொல்லக் கடவது அன்றோ

ஸ்ம்ருதி ப்ரப்ருதிபிர்
வேதமானது ஸ்வ ப்ரதிபாத்ய அர்த்தத்தாலே இரண்டு பாகம் ஆனால் போலே
உப ப்ரும்ஹணங்களும் ப்ரதிபாத்ய விசேஷத்தாலே
இதிஹாச புராணங்கள் என்றும் ஸ்ம்ருதி தர்ம சாஸ்திரங்கள் என்றும் பிரிவு உண்டாயின
ஸ்ம்ருதிகள் -கர்மா காண்டத்துக்கும் இதிஹாச புராணங்கள் ப்ரஹ்ம காண்டத்துக்கும்
இரண்டிலும் இரண்டும் உண்டானாலும் -அதாவது ஸ்ம்ருதிகளிலே பர ப்ரஹ்ம பிரதிபாதனமும்
இதிஹாச புராணங்களில் கர்ம ப்ரதிபாதனமும் இருந்தாலும்
ஆராதன ரூபார்த்த ஞாபகார்த்தமாகவும்
உபாசன அங்க ஞாபகார்த்தமாகவும் நேர்ந்ததாகவே நிர்வாஹம்
ப்சர்யேன பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாச புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே -என்றது இறே

அர்த்தமிவ பாநு கரைர் விபேஜு
இங்குள்ள அர்த்த சப்தம் கட படாதிகளைச் சொல்லுமது

த்வத் பக்தி பாவித விகல்மஷ சேமுஷீகா —
இவை இத்தனையும் உண்டானாலும் நிஷ் கல்மஷ பக்தி இல்லாதார்க்கு ஒரு பொருளும் தெரிய அரிதாகையாலே
பக்தியே பிரதான ஸாமக்ரி என்று தலைக்கட்டினார் ஆயிற்று
இதை விசேஷித்து நிரூபிக்கவே அடுத்த ஸ்லோகம் –

—————-

யே து த்வத் அங்க்ரி ஸரஸீருஹ பக்தி ஹீநா
தேஷாம் அமீ பிரபி நைவ யதார்த்த போத
பித்தக்ந மஞ்ஞநமநா புஷி ஜாது நேத்ரே
நைவ ப்ரபாபிர் அபி சங்கசி தத்வ புத்தி –16-

எம்பெருமானே யாவர் சிலர் தேவரீருடைய திருவடித் தாமரைகளிலே பக்தி இல்லாதவர்களோ அவர்களுக்கு
கீழ்ச் சொன்ன நியாய ஸ்ம்ருதி முதலானவற்றாலும் உண்மை உணர்வு உண்டாக மாட்டாது
காமாலை கொண்ட கண்ணானது பித்த ஹாரியான தோர் அஞ்சனத்தை அணிந்து கொள்ளாத அளவில்
ஸூர்ய கிரணம் முதலிய பிரகாச ஸாமக்ரிகள் பலவற்றாலும் சங்கு வெண்ணிறமாக உள்ளது என்கிற
உணர்ச்சி ஒருகாலும் உண்டாக மாட்டாது அன்றோ –
பக்தியே பிரதான ஸாமக்ரியை என்று வ்யதிரேக முகத்தால் த்ருடப்படுத்துகிறார்-

பித்தக்ந மஞ்ஞநமநா புஷி ஜாது நேத்ரே நைவ ப்ரபாபிர் அபி சங்கசி தத்வ புத்தி
பித்தத்தை போக்கடிக்க வல்லதான அஞ்சன விசேஷம் வேண்டுமே சங்கு வெண்மை என்று அறிய
மாயாம் ந சேவ பத்ரம் தே ந வ்ருதா தர்மம் ஆஸரே-சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் –
உத்யோக பர்வம் சஞ்சயன் த்ருதராஷ்டரனை நோக்கி சொன்னது
இதுக்கு நம்பிள்ளை ஈடு -நீயும் நானும் ஓக்க சாஸ்த்ர வாசனைகள் பண்ணிப் போந்தோம் -இங்கனே இருக்கச் செய்தே
எனக்கு உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும் படி உனக்கு இவ்வர்த்தத்தில் வைஸத்யம் உண்டான படி
எங்கனே என்ன -எனக்கு வாசி கேளாய்
மாயாம் ந சேவ–நாண் வஞ்சனங்கள் செய்து போரேன்-
ராஜாவானவனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஒரு உத்கர்ஷம் சொல்லுகிறான் ஆகையால்
பத்ரம் தே -என்கிறான்
ந வ்ருதா தர்மம் ஆஸரே-நான் ஒரு நாளும் சல தர்மங்கள் அனுஷ்டியேன்
சுத்த பாவம் கதோ –நினைவும் செயலும் சொலவும் ஒருபடிப்பட்டவன்
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் –வரியடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன்-
பக்தி சஹ்ருத சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன் என்றான் இறே–
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் –பாசுர ஈடு வியாக்யானம்

பித்த ஸ்தானே அந்யதா ஞான விபரீத ஞாநாதி களும்
அஞ்சன ஸ்தானே பக்தியும்
பிரபா ஸ்தானே நியாய ஸ்ம்ருதி ப்ரப்ருதிகளும்
சங்கசிதத்வ ஸ்தானே சாஸ்த்ரார்த்த யாதாத்ம்யம் கொள்ளத் தக்கன

———

தத்வார்த்த தத் பர பரச்சத வேத வாக்யை
சாமர்த்யத ஸ்ம்ருதி ப்ரப்யத தாத்ருஸீபி
த்வா மேவ தத்வ பர சாத்விக சத் புராணை
தேவஞ்ஞதீ பிரபி நிச்சி நும பரேசம்–17-

எம்பெருமானே -பர தத்வ பொருளை வெளியிடுவதில் ஊற்றமுடைய அநேக வேத வாக்யங்களைக் கொண்டும்
இன்னமும் அப்படிப்பட்ட -அதாவது
தத்வார்த்த-தத் பரங்களான ஸ்ம்ருதிகளைக் கொண்டும் –
ஸ்பஷ்டார்த்தக வாக்ய அநு குணமாகவே அஸ்பஷ்டார்த்தக வாக்கியங்களையும் நிர்வஹிக்க வேண்டுதல்
ஆகிற சாமர்த்தியத்தைக் கொண்டும்
தத்வ பரங்களும் ஸாத்விகங்களுமான புராண ஸ்ரேஷ்டங்களைக் கொண்டும்
ப்ரஹ்ம வித்துக்களான பராங்குச பரகால யதிவராதிகளின் திரு உள்ளங்களைக் கொண்டும்
தேவரீரையே சர்வேஸ்வரனாக நிச்சயிக்கின்றோம்

பக்தியே தலையான சாதனம் என்றார் கீழே –
அப்படிப்பட்ட சாதன சம்பன்னரானவர்கள் அவனுடைய பாரம்யத்தை நிஷ் கர்ஷிக்கும் வழிகள் இன்னினிவை என்று
அருளிச் செய்கிறார் இதில் –
தத்வார்த்த தத் பர பரச்சத வேத வாக்யை
பரதத்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ மந் நாராயணன் பக்கலிலே தத் பரங்களாயும் அசங்க்யாதங்களாயும் உள்ள
வேத வாக்கியங்களைக் கொண்டும்

சாமர்த்யத ஸ்ம்ருதி ப்ரப்யத தாத்ருஸீபி—
சாமர்த்யமாவது ப்ரதிபாதித்தமான அர்த்தத்துக்கு அவிருத்தமான அர்த்தாந்தரத்தைத் தெரிவிக்க வல்லமையாம்-அதாவது
சில வாக்கியங்களில் அர்த்தம் ஸூ ஸ்பஷ்டமாயும் மற்றும் சில வாக்கியங்களில் அர்த்தம் அஸ்பஷ்டமாயும் இருக்கும் –
அங்கு ஸ்பஷ்டார்த்தகங்களான வாக்யங்களைக் கொண்டு அஸ்பஷ்டார்த்தகங்களான வாக்யங்களின் அர்த்தத்தையும்
தத் அனுகுணமாக நயப்பித்துக் கொள்வதேயாம்

தத்வ பர சாத்விக சத் புராணை
தத்வ பரங்களாயும் அதயேவ சாத்விகங்களாயும் இருக்கும் சிறந்த புராணங்களைக் கொண்டு
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா ஸ்வயம் தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண
வர்ணயதே -அக்நேச் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் சங்கீர்ணேஷு சரஸ்வத்ய பித்ரூணாஞ்ச நிகத்யதே
ராக்ஷஸே ஷு ச கல்பே ஷு அதிகம் ப்ரஹ்மணோ வித்து சாத்விகேஷ் வத கல்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்–இத்யாதி பிரமாணங்களை இங்கே அனுசந்திப்பது –

தேவஞ்ஞதீ பிரபி
தேவஞ்ஞர் கள் ஆகிறார் -பரதேவதா பாரமார்த்தாய வித்துக்களான பராங்குச பரகால யதிவராதிகள்
அவர்கள் வெளியிட்டு அருளின ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டும் என்றபடி

த்வமேவ -நிச்சி நும பரேசம்
தேவரீரையே பரம புருஷராக அறுதியிடா நின்றோம்
ஆக இவற்றால் ஸ்ரீ மந் நாராயணனுக்கே பாரம்யாம் அசைக்க ஒண்ணாதபடி தேறும் என்றார் ஆயிற்று –

————-

அந் யத்ர து க்வசந கேசித் இஹ ஈச சப்தாத்
லோக பிரசித்திம் உபகம்ய தமீசமாஹு
தைச் ச பிரசித்தி விபவஸ்ய சமூலதாயை
க்ராஹ்யா த்ரயீ த்வயி து சாச்யுத சம்முகீ நா –18-

அடியார்களை ஒருகாலும் நழுவ விடாத எம்பெருமானே -இவ்வுலகில் சில பேர்களோ என்றால் சில கிரந்தங்களில்
தேவதாந்த்ரங்கள் பக்கலிலே ஈச சப்த பிரசித்தி இருப்பதைக் கொண்டு அந்த ருத்ரனை ஈச சப்த வாச்யனாகச் சொல்லுவார்கள் –
அந்த ப்ரஸித்தியானது ச மூலம் என்பதற்காக -மூலாதாரம் -காட்டுவதற்காக
அந்த வாதிகளால் வேதமானது கொள்ளத் தகுந்தது -வேத மூல பிரமாணம் காட்ட வேணும் -என்கை –
அந்த வேதமோ என்றால் தேவரீர் பக்கலிலே ஆபிமுக்யம் உடையது –

க்வசந கேசித்-
சில நூல்களிலே சில ப்ராந்தர்கள் என்றபடி
அந் யத்ர து இஹ ஈச சப்தாத் லோக பிரசித்திம் உபகம்ய
சம்புரீச பசுபதி சிவச் சூலி மஹேஸ்வர –அமர கோசாதிகளைக் கொண்டும் –
ஈஸ்வரன் கோயில் -லோக பிரசித்த வழக்கு
வேத பிரசத்தியே முக்கியம்
த்ரயீ த்வயி து சாச்யுத சம்முகீ நா —
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் -என்று நாராயண அநுவாகம் முதலானவற்றில் உள்ள
சுருதி வாக்யங்களானவை தேவரீர் பக்கலிலே ஈச சப்தார்த்த பவ்ஷ்கல்யத்தை வ்யவஸ்தை பண்ணித் தருகின்றன –
எனவே ஸ்ரீமந் நாராயணன் இடத்திலே முக்கிய விருத்தியை உடைத்தாய் இருக்கும் என்றதாயிற்று

———————

ய கலு அணோர் அணுதர மஹதோ மஹீயான்
ஆத்மா ஜனஸ்ய ஜனகோ ஜகதச் ச யோ பூத்
வேதாத்மக பிரணவ காரண வர்ண வாஸ்யம்
தம் த்வாம் வயம் து பரமேஸ்வர மாம நாம –19-

எம்பெருமானே -யாவர் ஒரு தேவரீர் அணுவில் காட்டிலும் மிகவும் அணு பூதராயும்
மஹத்தான வஸ்துவில் காட்டிலும் மிகவும் மஹானாகவும் ஆனீரோ
யாவர் ஒரு தேவரீர் அசேதன வர்க்கத்திற்கும் சேதன வர்க்கத்திற்கும் உத்பாதகராயும் ஆனீரோ அப்படிப்பட்டவராய்
வேத வடிவமான ப்ரணவத்துக்கு காரண பூதமான அகாரமாகிற அஷரத்துக்குப் பொருளான தேவரீரையே
அடியோங்கள் பரமேஸ்வராக அனுசந்திக்கின்றோம்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் பெருக்கம் எய்து பெற்றியோய்
சகலத்துக்கும் உத்பாதகன் -அந்தர்யாமி -அகாரார்த்த பூதன் -பரமேச்வரத்வம் இவனுக்கே என்பது சுருதி சித்தம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம்
உதாம்ருதத்வஸ் யேசாந
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –முதலான ஸ்ருதிகளும்
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர்ஜூந திஷ்டதி
அநாதி நிதனம் விஷ்ணும் சர்வ லோக மஹேஸ்வரம்
ஈஸாந ப்ரணத பிராண –இத்யாதி ஸ்ம்ருதிகளும் அனுசந்தேயங்கள்

—————–

ஆத்மேஸ்வர அஸீ ந பரோஸ்தி தவ ஈஸ்வர அந்ய
விஸ்வஸ்ய சாதிபதி ரஸ்ய பராயணஞ் ச
நாராயண அச்யுத பரஸ் த்வம் இஹைக ஏவ
ப்ரஹ்மாதயோபி பவதீ க்ஷண லப்த சத்தா –20-

நாராயணனே அச்யுதனே -இவ்விடத்து பரதத்வமான தேவரீர் ஒருவரே ஆதமேஸ்வராக ஓதப்படா நின்றீர்
தேவரீருக்கு வேறு ஒரு சிறந்த நியாமகர் இல்லை
இவ்வுலகுக்கு எல்லாம் ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இரா நின்றீர்
சில இடங்களில் ஈஸ்வராகச் சொல்லப்படுகிற ப்ரஹ்மாதிகளும் தேவரீருடைய கடாக்ஷத்தினாலேயே சத்தை பெற்றவர்கள் இறே

கீழே உபநிஷத் வாக்யங்களையே பெரும்பாலும் தொடுத்து அருளிச் செய்தார்
இதில் உபநிஷத் வாக்கியங்களை உள்ளடக்கி அவற்றின் பொருள்களைப் பொழிந்து அருளிச் செய்கிறார்
ஆத்மேஸ்வர அஸீ
பதிம் விஸ்வஸ் யத்மேஸ்வரம் -என்று ஆதின படி சகல ஆத்ம வர்க்கங்களுக்கும் நியந்தாவாக இரா நின்றீர்
ந பரோஸ்தி தவ ஈஸ்வர அந்ய
நியாமகத்வமும் நியாம்யத்வமும் சாம நாதி கரண்யமாய் இருக்கிறபடியையும் உலகில் காணா நின்றோம் இறே
அப்படி இங்கு இல்லை என்கிறது
சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு சர்வ நியாமகராய் இருப்பீர் தேவரீர் ஒருவரே ஆகையால்
தேவரீரை நியமிப்பார் மற்று யாவரும் இல்லை
விஸ்வஸ்ய சாதிபதி ரஸ்ய பராயணஞ் ச
உபாயமும் உபேயமும் தேவரீர் என்றபடி
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயமேவ சாதன தயா ஜோ குஹ்யமான -குஷ்யாமான-ஸ்ருதவ் -ஸ்ரீ வேதாந்தாசார்யர்
நாராயண அச்யுத பரஸ் த்வம் இஹைக த்வமேவ ஏவ பர
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஈச்வரத்வம் கூடும் என்பற்கு அவகாசம் அற அருளிச் செய்கிறார்
பரத்வம் என்பது வ்யாஸஜ்ஜய வ்ருத்தியான தர்மம் அன்று -இரண்டு பொருள்களை கவ்வி இருக்குமது அன்றே
ஸ்ரீ மந் நாராயணன் ஒருவனுக்கே அசாதாரண தர்மம்
ப்ரஹ்மாதயோபி பவதீ க்ஷண லப்த சத்தா –
எம்பெருமானுடைய கடாக்ஷ விசேஷத்தாலே அவர்கள் தாமும் சத்தை பெற்றுக் கிடக்கிறது
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தாவா நிதி சுச்ரும
மஹா தேவஸ் சர்வமேத மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ -என்றும் உள்ள பிரமாண வசனங்கள் அனுசந்தேயம் –
அவர்கள் நெடும் காலம் ஆராதித்து ஒரோ அதிகாரங்கள் பெற்றார்கள் என்னும் போது அவர்களுக்கு ஒரு பரத்வம் உண்டாயிடுமோ –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: