மூன்று தடவை வரும் திரு நாமங்கள்..
1-அச்யுத–101/319/557
101-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
319-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
557-சுத்த ஸ்வரூபி திருநாமம்
———
2-அஜ : 96/206/524
96-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்
524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்
————-
3-பிராண : 67 /321/408
67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்
——————–
4-பத்ம நாப : 48/198/347-
48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்
————–
5-மாதவ : 73/169/741-
73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
————-
6-வீரஹா 168/747/927-
168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்
747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்
927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்
—————
7-ஸ்ரீமான் 22/180/222..
22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்
222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
—————-
8-வாசுதேவ 333/700/714
333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
———-
9–விஷ்ணு –2/259/663-
2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்
259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்
————-
10-வீர: 168/464/664-
168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்
464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்
664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்
—————-
11-சௌரி : 341/649/650
341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்
649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
650-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
——————
12-பாவந : 32/293/817-
32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –
—————
13.போக்தா -145/502/889-
145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்
502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –
———–
14-வஸூ : -105/271/701
105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –
————–
15-சத்ய :- -107/213/873-
107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்
213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்
————-
1-அச்யுத–101/319/557
101-அச்யுத–ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம் நத்யஜேயம் -கதஞ்சன –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்
யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-
தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்
தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் –மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்
————–
319-அச்யுத –ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
நழுவாதவன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திரு மாலை 2
முன்பே 101-பார்த்தோம் -மீண்டும் 557-வரும்
பிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –
தேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
557-அச்யுத –சுத்த ஸ்வரூபி திருநாமம்
நித்ய ஈஸ்வரன்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -4-5-3-
அச்சுதன் அமலன் -3-4-5
முன்பே 101-320 பார்த்தோம்
வ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்யவந உத்பத்தி யக்தஷு ப்ரஹ்ம இந்த்ர வருணாதிஷு யஸ்மாந்ந ஸ்யவசே ஸ்தாநாத் தஸ்மாத்
சங்கீர்த்தயசே அச்யுத–ப்ரஹ்மாதிகள் கர்மவசப்பட்டவர்கள்
——————–
2-அஜ : 96/206/524
96-அஜ –-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி
தடைகளை விலக்குபவன்-
அடியார்கள் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன் –
என் தன் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தவன்
ஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –
அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –
தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாசயாமி ஆத்ம பாவஸ்த ஞான தீபேந பாஸ்வதா –ஸ்ரீ கீதை -10-11-
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66-
பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —
பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
ஓம் அஜாய நம
தாமே பிரதிபந்தகங்களைப போக்கி தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்
———–
206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்
அகாரத்தால் பேசப்படும் நாராயணன் -அழிவற்ற -ஜகத் காரணன்
ஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே –திருச்சந்த -30-34-
முன்பே 96-206-பார்த்தோம்
பிரணவத்தின் முதலாகிய ஆகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய ய பர ச மஹேஸ்வர
அகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –
————————-
3-பிராண : 67 /321/408
67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
உயிராக இருப்பவனே –
ஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-
ததேதத் அஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந -உயிர் வாக் மனம் அனைத்துமாக இருக்கிறான் –
அவர்களுக்கு உயிராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தேவர்களுக்கும் பிராணனாக உள்ளவன்
ததோ தேவாநாம் நிரவர்த்தா ஸூரேக –தைத்ரியம் -4-1-8-ஒரே உயிராக தேவர்களுக்கு அவனே இருந்தான்
கோ ஹி ஏவ அந்யாத் க ப்ராண்யாத்–தைத்ரியம் ஆனந்த வல்லீ -7-அவன் இல்லை என்றால் இந்த உலகிலும் அந்த உலகிலும்
யாரால் ஆனந்தம் அனுபவிக்க இயலும்
பிரானோ ரஷதி விஸ்வம் ரஷத் –பிராணனாகிய அவனே பாதுகாக்குகிறான்
பிராணஸ் ததா அநு கதாம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-1-29-அவனே பிராணன் என்று உணரலாம்
அதைநம் ஏதே தேவா பிராணா அம்ருதோ ஆவிசந்தி –அதன் பின்னர் இறவாமை பெற்ற தேவர்கள் பிராணன் எனப்படும் அவனுள் புகுந்தனர்
தத் ஏதத் அக்ஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந முண்டகம் –2-2-2-அழியாத ப்ரஹ்மமே மனம் வாக்கு பிராணன்
சத்யாத்ம ப்ராணாராமம் மம ஆனந்தம் –தைத்ரியம் சீஷா வல்லி-6-2-முக்தர்களுக்கும் தேவர்களுக்கும்
அவனே பிராணன் மற்றும் ஆனந்தமாக உள்ளான்
மநோ மய பிராண சரீரோ பா ரூப ஸத்ய சங்கல்ப –சாந்தோக்யம் -3-14-2–மனத்தால் மட்டும் உணரப்பட வேண்டியவன் –
பிராணனை சரீரமாகக் கொண்டவன் ஸத்ய ஸங்கல்பன்
அதோபகரணம் திவ்யம் பஞ்ச சக்தி உபலஷிதம் கால ஞான கிரியா இச்சாக்ய பிராண சம்ஜ்ஞம் மஹா மதே பிராண
ஸக்தேஸ்து ச அத்யாத்மம் ஷட் குணம் அகிலம் ஹி யத் அதி தேவதம் அப்ஜாஷோ வாஸூ தேவோ சநாதந –பவ்ஷகரை சம்ஹிதை —
காலம் ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் -ஆகிய ஐந்து வித திவ்ய சக்தியைக் கொண்டுள்ளான் –
பிராணன் சேரும் பொது ஆறு குணங்களும் உண்டாகின்றன -இப்படியாக உள்ள புண்டரீகாக்ஷனான வாஸூ தேவனே உயர்ந்தவன்
ஞான கிரியா இச்சா பிராண ரூபம் சக்தி வ்யூஹம் த்விஜ அச்யுதம் -தவ்ம்ய சம்ஹிதை —இரண்டு பிறவி கொண்ட
ப்ராஹ்மணரே ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் ஆகியவற்றை உடைய அவனை அச்யுதன் என்கிறோம்
உயிராக இருப்பவர் -முக்ய பிராணன் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் —
செயல்பாடுகளை நன்கு நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பிராண நம
ஸ்திதி அளிப்பவன் -அவனை அடைவதற்கு உயிராக இருப்பவன்
———–
321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்
உயிர் ஆனவன் -அடியார்க்கு ஜீவநாடி
உலகுக்கே ஒரு உயிருமானாய் -6-9-7-
தன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணா அஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாம் ஆயுஸ் அம்ருதம் இதி உபாஸ் ஸ்வ –கௌஷீதகீ -இப்படி பிராணனாக
உள்ள நான் ஆயுஸ் என்றும் அமிர்தம் என்றும் உபாசிக்கப்படுகிறேன்
அம்ருதம் தேவாநாம் ஆயுஸ் பிரஜாநாம்
பிராணா ததா அநு கமாத்-1-1-9-
வாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –
———-
408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்
பிராணனாய் இருப்பவன் -என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–முன்பே 57 321 பார்த்தோம்-
எல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————
4-பத்ம நாப : 48/198/347-
48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன் -நாச் -11-2-
பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-
மீண்டும் 198-347 வரும்
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திருவாசிரியம்
அயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –
நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
தாதோத்தாந சம்விசதி பஞ்ச வர்ஷ ச தாநி து
தாதுர் நாப்யாம் புஷ்கரம் ப்ராதுர் பவதி புஷ்கரம் புண்டரீகம் ச பத்மம் சக்ரம் இத்யேஷ கால
அஜஸ்ய நாபா வத்யேகம் அர்ப்பிதம்
அஜஸ்ய நாபா வத்யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம்
உலக்குக்கு எல்லாம் காரணமான தாமரையைத் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—
தாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –
திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-
ஓம் பத்ம நாபோ நம
கொப்பூழில் எழு கமலப்பூவால் நான்முகனைப் படைத்து
தொப்பூள் கொடியால் குழந்தைக்கு போஷகம் ஆகுமா போலே ஸ்ருஷ்டித்த உலகங்களைப் போஷிப்பவன்
————-
347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகா
அயனைப் படைத்த எழில் உந்தி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன்
தாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –
தாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்
கீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347-
நாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கதாசித் தஸ்ய ஸூப்தஸ்ய நாப்யாம் காமாத் அஜாயத திவ்யம் அஷ்ட தளம் பூரி பங்கஜம் பார்த்திவம் மஹத்
யஸ்ய ஹேம மயீ திவ்யா கர்ணிகா மேரு உத்யதே –ப்ரஹ்ம புராணம் —
திரு நாபி கமலத்தின் தங்கமயமாக காயே மேரு
தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
———————————–
5-மாதவ : 73/169/741-
73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்
திரு மகளார் தனிக் கேள்வன் -மா -ஸ்ரீ தேவி அவளுக்கு ஸ்வாமி
அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ
ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே –
திருவுக்கும் திருவாகிய செல்வன்
நித்யைவ ஏஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்
மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ
ஹ்ரீச்சதே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
நித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ யதா சர்வகதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
தச் சக்தி துர்ஜயா பீமா விஷ்ணு சக்தி இதை ஸ்ம்ருதா சர்வ பூத ஹ்ருதப்ஜஸ்தா நாநா ரூப தரா பரா
ப்ராணாக்யா மந்த்ரமாயா ச விஸ்வஸ்ய ஜநநீ த்ருவா தேவீ பிந் நாஞ்ஜன ஸ்யாமா நிர் குணா வ்யோம ஏவ ஹி –ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் —
அவனது சக்தியே இவள் -உலகை வாழ்விப்பவள் என்பதால் பிராணன் எனப்படுபவள்
ததைவ ஏகா பரா சக்தி ஸ்ரீர் தஸ்ய கருணாஸ்ரயா ஞானாதி ஷாட் குண்யமயீ யா ப்ரோக்தோ ப்ரக்ருதி பரா ஏகைவ சக்தி
ஸ்ரீர் தஸ்ய த்வதீயா பரிவர்த்திதே பராவரேண ரூபேண சார்வாகாரா சநாதநீ அநந்த நாமதேயோ ச சக்தி சக்ரஸ்ய
நாசிகா ஜகத் சராசரம் இதம் சர்வம் வ்யாப்ய வ்யபஸ்திதா
மஹா விபூதே சம்பூர்ண ஷாட் குண்ய வபுஷு ப்ரபோ பகவத் வாஸூ தேவஸ்ய நித்யேவ ஏஷ அநபாயிநீ
ஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ் நேவ ஹிமதீ திதே
சர்வ சக்த்யாத்மிகா சைவ விஸ்வம் வ்யாப்ய வ்யவஸ்திதா சர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிநீ
பிராண சக்தி பரா ஹி ஏஷ ஸர்வேஷாம் பிராணி நாம் புவி சக்தீ நாம் சைவ ஸர்வாசாம் யோனி பூதா பரா கலா யஸ்மாத்
லஷ்ம்யம்ச ஸம்பூதோ சக்த்யோ விஸ்வகா சதா காரணத்வேந திஷ்டந்தி ஜகத் அஸ்மின் ததாஜ்ஞாயா தஸ்மாத் ப்ரீதா
ஜெகன் மாதா ஸ்ரீர் யஸ்ய அச் யுத வல்லபா ஸூ ப்ரீதா சக்த்ய தஸ்ய சித்திம் இஷ்டாம் நிஷாந்தி ச -ஸ்ரீ மஹா லஸ்மி சஹஸ்ர நாமம்
காவ்யம் இராமாயணம் க்ருஸ்த்னம் ஸீதாயா சரிதம் மஹத் –பாலகாண்டம் -4-7-
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுத் –ஸ்ரீ லஷ்மீ தத்வம் சொல்லுமே இவை
மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -மது வித்யையினால் அறியப்படுபவர் -மௌனம் த்யானம் யோகம் இவற்றால்
மாதவனை அறியாவாக -வியாசர் என்பதால் மாதவன் -ஸ்ரீ சங்கரர் –
லஷ்மிக்கு கணவன் -தனக்கு யஜமானன் இல்லாதவன் -மதுவின் வம்சத்தில் உதித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் மாதவா நம
திரு மா மகள் கொழுநன் -நித்ய சம்ச்லேஷம் -க்ஷண விஸ்லேஷ அஸஹயன்
———-
169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்
ஞான ப்ரதன்-வித்யைக்கு ஈசன்
கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
மா -மௌநம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்
மீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்
மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் –
இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
மா வித்யா சா ஹரே ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவாந் தஸ்மாத் மாதவ நாமா அஸீ தவ ஸ்வாமீ இதி சப்தித–
மவ்நாத் த்யாநாத் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் –உத்யோக பர்வம்
வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –
அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————-
741-மாதவ-ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
லஷ்மி வல்லபன் -மலர்மகளுக்கு அன்பன் -திரு மகளார் தனிக் கேள்வன் -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
ம் -மௌநம் –த-த்யானம் –வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன்
உலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –
மௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மவ்நாத் த்யாநாச் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் -உத்யோக பர்வம் -71-4-மவ்னம் த்யானம் யோகம் கொண்டதால் மாதவன்
யாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-
மதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————
6-வீரஹா 168/747/927-
168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்
வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்
குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
————
747-வீரஹா-கிருஷ்ணாவதார திருநாமம்
வீரர்களை மாய்த்த பேறு வீரன்
பேய் முலை உண்டு -=களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-
வெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-
முலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை
வேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
வீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்
பாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்
முன்பே 168/747 பார்த்தோம்
எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-
அண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-
யானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மோக்ஷ மா மாச நகேந்த்ரம் பா சேப்யஸ் சரணாகதம்
பலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
லிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————-
7-ஸ்ரீமான் 22/180/222..
22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
அழகியவன் –
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுவன் தானே -நான் -திரு 22
180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –
180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-
222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ
கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப
————–
180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்
திவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
-22-/ -222-நாமாவளி மீண்டும் உண்டே
பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —
————–
222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
சிறப்புடையவன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையுமாய் –கார் வண்ணனே
கார் வண்ணன் கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவபெருமான் என் தீர்த்தன் -2-8-5-
முன்பே 22/180 பார்த்தோம்
பரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –
எப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————–
8-வாசுதேவ 333/700/714
333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்
சர்வம் வசதி –சர்வத்ர வசதி -த்வாதச அஷரி
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10
உன் தன பொய் கேட்டு நின்றேன் வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1
மீண்டும் 701 வரும்
பறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –
அவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும் வாஸூ என்றும்
இதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸாதயாமி ஜகத் சர்வம் பூத்வா ஸூர்யா இவ அம்சுபி சர்வ பூதாநி வாசச்ச வாஸூ தேவ தத ஸ்ம்ருத –மஹா பாரதம் –
சூர்ய கதிர்கள் போலே எங்கும் வியாபித்து -தூங்குகிறேன்
வஸனாத் சர்வ பூதா நாம் வஸூத் வாத் தேவ யோநித வாஸூ தேவஸ் ததோ ஜ்ஜே ய ஸர்வேஷாம் அபி பச்யதே-மஹா பாரதம்
ஸர்வத்ர அசவ் சமஸ்தம் ச வஸத்யத் ரேதி வை யதஸ் தத ச வாஸூ தேவேதி வித்வத்பிஸ் பரி பட்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-12-
எல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்
விளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது
துதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –
வாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –
எல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –
பிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
வஸூதேவ புத்திரன் -பிறந்து பெற்ற பெயர் -தாசரதி போலே
எங்கும் உளன் கண்ணன் -வ்யாப்தியை
மல் பொரு தோளுடை வாசுதேவா -பெருமாள் திரு-6-6-
முன்பே 333 பார்த்தோம்–ஸ்ரீ பராசர பட்டர் –
வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சங்கரர் –
வஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சத்ய சந்தர் –
வஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற
பொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –
ப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்
வாசுதேவ புத்திரன் -த்வாதச மந்திர ப்ரவர்த்திப்பிதவன்
கம்சாதிகளுக்கு ம்ருத்யு -மதுரா நகர் பெண்களுக்கு மன்மதன் -வசுதேவாதிகள் குழந்தை யோகிகளுக்கு பரதத்வம்
கூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1-
முன்பே 334-700 பார்த்தோம்
வசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மாதுராத அத்புத மாயாய -மதுரையில் ஜனித்த பல அத்புதங்களுடன் கூடியவன்
மாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயுவிற்கு தேவன் –அறிவிற்க்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-
அவாஸூதேவ -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
9–விஷ்ணு –2/259/663
2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்
எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-
தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —
விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்
கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –
விவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி
ததேவா னு ப்ரவிஸத்
வியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்
எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்
சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் விஷ்ணவே நம
கரந்து எங்கும் பரந்துளன்
மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
மீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நாங்கள் நாதனே -1-9-9-
நமக்கும் அவனுக்கும் நெருப்புக்கு புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
புகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே
உள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளினை நிலங்களை
சாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்
இளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே
நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்
எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
பஞ்சபூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து
மீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்
மூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்
தன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-
முதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று
சாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்
————
259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்
எங்கும் தானாய நாங்கள் நாதனே -1-9-9-
2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்
அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –
நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்
எங்கும் வியாபித்து இருப்பவன்
சிருஷ்டி -அந்தர் பிரவேசம் -வ்யாப்தி -நியமனம் -நான்கும் உள்ள சகதீசன் -சர்வ சகத் யாத்மனே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து —எம்பிரான் விட்டுவே -2-7-4-
முன்பே 2-259-பார்த்தோம் –
ஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வ சக்த்யாத்மநே
யஸ்மாத் விஷ்டமிதம் சர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மந தஸ்மாத் ச ப்ரோச்யதே பிரவேச நாத்
விஷ்ணுர் விக்ரமனாத் –உத்யோகபர்வம்
எல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –
எங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————
10-வீர: 168/ 464 /664-
168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்
வீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை
சிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்
குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –
தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
—————–
464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -பெரிய திருமொழி -5-7-4-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
வளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று
ஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
வீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்
வீரன்
வெங்கதிரோன் -குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்யக் கொண்ட -வீரன் -பெருமாள் திரு -10-9-
சங்கோடு சக்கரம் உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில்
வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொறுத்த நன்மை உடையவன் -3-10-1-
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச் -116-
தமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்
துஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆஞ்ஞாத ப்ரவீஷ கேனைவ கதா சக்ர த்வயேன து ப்ரேரிதேந ஹிநஸ்த்யாசு சாது சந்தாபக காரிண
கதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
11-சௌரி : 341/649/650
341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்
சூரனான வாஸு தேவர் பிள்ளை -ஓடாத தோள் வலியன் நந்த கோபன் குமரன் –
மன் உலகத் தேவர் வாழ் முதல் -பெரிய திருமொழி -6-8-10
தயரதற்கு மகனாய் தோன்றி கொல்லியலும் படைத்தான் -பெருமாள் திரு -10-10-
சூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –
சூரா குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
சூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
649-சௌரி-அர்ச்சாவதாரம் பரமான-திருநாமம்
ஸ்ரீ சௌரி பெருமாள் -உத்பதாவதகத்தில் -திருக் கண்ண புரம் சேவை
உத்பலா வதகே திவே விமானே புஷ்கரேஷணம் -சௌரி ராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட –திருக் கண்ண புரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1
திருக் கண்ண புரத் தரசே – பெருமாள் திருமொழி –
உத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் —
சூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-
சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
——
650-சூர-அர்ச்சாவதாரம் பரமான திருநாமம்
எதிரிகளை அழிப்பவர்-
திருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்
சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
தராதரே சித்ரா கூடே ரக்ஷ ஷயகரோ மஹாந் சம்ஸ்தி தச்ச பரோ ராம பத்ம பத்ராய தேஷண
வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –
மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————
12-பாவந : 32/293/817-
32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்
உய்விப்பவன் -பக்தியை உண்டாக்கி வளரச் செய்து பூர்ண பக்தனாக்கி உஜ்ஜீவிப்பவன்
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் நலம் கடல் அமுதம் -3-4-5-
திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –
பரித்ராணாய ஸாதூ நாம் –ஸ்ரீ கீதை -4-8-
எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-
மங்களங்களைச் செலுத்துபவர் -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர் –
சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–
ஓம் பாவந நம
திருவவதரித்து அனைவரையும் வாழ்விப்பவன்
கர்ம பலன்களை அளித்து அருளுபவர்
——————–
293-பாவநா–விஸ்வ ரூபம்-திருநாமம் –
தூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -2-8-5-
திரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10
கரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14-
உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பாவந சர்வ லோகா நாம் த்வமேவ ராகு நந்தன -உத்தர -32-9-அகஸ்தியர்
காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –
அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————-
817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –
தானாக வந்து பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
பாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-
தாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
அரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————-
13.போக்தா -145/502/889-
145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்
அனுபவிப்பவன்
அஹம் அன்னம் அஹம் அந்நாத –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
அவாவறச் சூழ் அரி -10-10-11
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-
பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
அஸ்நாமி ப்ரயதாத்மந–தூய மனஸுடன் அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்
போக்தாரம் யஜ்ஜ தபஸாம் –ஏற்று மகிழ்கிறேன்
அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் போக்தாய நம
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்
————–
502-போக்தா–தர்ம ஸ்வரூபி -திருநாமம்
உண்பவன் –
செய்கைப் பயன் உண்பேனும் யானே
முன்பே 145 பார்த்தோம்
ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –
யத்து தத்கதிதம் பூர்வம் த்வயா ஹய ஸீரோ மஹத் ஹவ்ய கவ்ய பூஜோ விஷ்ணோ உதக் பூர்வே மஹோததவ் –சாந்திபர்வம்
ஹவ்யம்-தேவர்களைக் குறித்து / கவ்யம் -பித்ருக்களைக் குறித்து கொடுப்பது –
காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –
மிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்
யாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –
பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா
11/12 படிகள்
யாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்
காப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்
அனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –
ஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –
போக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
அனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –
ஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –
போக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————
14-வஸூ : -105/271/701-
105-வஸூ-ஆஸ்ரித வத்சலன் திருநாமம்
ஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –
எண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –
மீண்டும் 271/701 வரும்
அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் –
வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-
எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வஸூ-நம
மனத்துள்ளான்–
———————-
271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்
தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்
தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-
உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
—————–
701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –
வசிப்பவன் -லோக ஹிததுக்காக ஷீராப்தி
பாற்கடலில் பையத் துயின்ற பரமன்
பயில விநிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரி வம்சம் –
முன்பே 105/271 பார்த்தோம்
திரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
ச லோகா நாம் ஹிதார்த்தாய ஷீரோதே வசதி பிரபு –சபா பர்வம் -47-26-
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-
எல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————
15-சத்ய :- -107/213/873-
107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்
சத்துக்களுக்கு அனுகூலன்
அவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்
அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்
-213–873-மீண்டும் வரும்
சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சத்யாய நம
————————-
213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
——————–
873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்
உண்மை -மெய்யன்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே -9-10-7/6-
திரு மெய் மலையாளா -பெரிய திரு மொழி -3-6-9-
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகன் -பெரிய திரு மொழி -5-6-9-
சாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்யே ப்ரதிஷ்டித க்ருஷ்ண சத்யமஸ்மின் ப்ரதிஷ்டிதம் சத்தா சத்தே ச கோவிந்த தஸ்மாத்
சத்ய சதாம் மத –உத்யோக பர்வம் 69-12-13-
சாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
சுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————–———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்