ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்லோகங்கள்—1-10–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிடையிலே –
பகவத் குண அனுபவத்தாலும் அனுபவ ஜெனித ப்ரீதிகார வாசிக்க கைங்கர்யத்தாலும்
தம்முடைய நெஞ்சாறல்களை மறக்கக் கருதி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசதமாக அனுசந்தித்து
அவ்வனுசந்தான பரிவாக ரூபமாக
முதலில் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் அடுத்து ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவமும் அருளிச் செய்தார்
பின்பு எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ வரதராஜ ஸ்தவமும் நிகமத்தில் ஸ்ரீ ஸ்தவமும் அருளிச் செய்தார்
பஞ்ச ரத்னம் போன்ற இவையே பஞ்ச ஸ்தவமாகும்
எனவே இதில் ஆச்சார்ய வந்தனத்துடன் உபக்ரமிக்கிறார்
இந்த ஸ்தவங்களில் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் மற்று எந்நோக்கும் சிறப்பாக அமைந்துள்ளன
உபய வேதாந்த ரஹஸ்ய அர்த்தங்கள் பொதிந்து இருக்கும்
வான் இள அரசன் வைகுண்டக் குட்டன் ஒண் டொடியாள் திரு மகளும் தாணுமாய் நலம் அந்தமில்லதோர் நாட்டில்
நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கும் இருப்பை இதில் அனுபவிக்கிறார்
திருநாட்டின் பெருமைகளை பரக்க பேசி-தமது பெரு விடாயை அருளிச் செய்கிறார்

————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

மேல் -ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில் ஸ்ரீ ராமா வரஜ முனீந்திர லப்த போதாஸ் -என்று
தம் சத்தை பெறுவித்தமை அருளிச் செய்கிறார்

அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
வேதா த்வேதா பிரமம் சக்ரே காந்தாஸூ கநகேஷூ ச –ஸ்வர்ணத்தில் பிரமம் சார்வார்க்கும் அவர்ஜனீயம் என்பதால்
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -முதலான திருப்பதிகளில் நித்ய வாசம் செய்வதே ஆஸ்ரிதர்களை
நழுவ ஒண்ணாமைக்காக என்பதால் அச்யுத-பதாம்புஜம் –
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதயா ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலிநா -என்று
இவர் தம் பொன்னடியை பேணுமவர்கள் போலே இவரும் அச்யுத-பதாம்புஜத்தில் இருப்பாரே –
திருக்கச்சி நம்பியும் -நமஸ்தே ஹஸ்தி சைலே ப்ரணதார்த்திஹர அச்யுத -என்றார்
பச்சை மா மலை போல் மேனி –அச்யுதா அமரர் என்றே -தொண்டர் அடிப் போடி ஆழ்வார்
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் -பொன் அரங்கம் என்னில் மயிலே பெருகும் ராமானுஜன் அன்றோ

அஸ்மத் குரோர் -அஞ்ஞானத்தை போக்குபவரே குரு –
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்து ராமானுஜன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந் யத்ர-
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீமாந் ஆவிர்பூத் ராமானுஜ திவாகர–
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு அஸ்மாத் சப்த பிரயோகம் –அஸ்மாகம் குரோ என்றபடி

பகவத்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் –
முக்கிய வ்ருத்தம் அவனுக்கே பொருந்தும் -இங்கு பொருந்துமாறு எங்கனே என்னில்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்த்ர பாணிநா –என்றும்
சாஷாத் சர்வேஸ்வர அவதாரமே அன்றோ ஸ்வாமியும்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகிலா யுலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே–
அவனுக்கும் பகவத் சப்தத்தை த்ருடமாக்கி அருளிய வீறு உண்டே ஸ்வாமிக்கு

அஸ்ய
யச் சப்த பிரயோகம் இல்லாமல் -அஸ்ய-என்று இதம் சப்தத்தால் பிரதி நிர்த்தேசம் பண்ணுவது
இதம் -ப்ரத்யக்ஷ கதம் -தத் இதி பரோக்ஷ விஜா நீயாத் –என்கிறபடி ப்ரத்யக்ஷ விஷயம் -ஸ்வாரஸ்ய அதிசயம் உண்டே
காஷாய சோபி கமனீய சிகா நிவேசம் தண்ட த்ர்ய உஜ்ஜ்வல்யகரம் விமல உபவீதம் உத்யத்திநேசநிபம்
உல்லச ஊர்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்தி யதிராஜ த்ருசோர் மம அக்ரே –என்று இடைவிடாமல் சாஷாத்கோசாரமாய்
ஆழ்வானுக்கு இருப்பதால் தச் சப்தம் இல்லாமல் இதம் சப்தமே ஏற்குமாயிற்று

தயைக ஸிந்தோ
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே -பயன் அன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்தி
பணி கொண்டு தம் பேறாக சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பிக்கும் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் வர்க்கம் ஸ்வாமி தொடங்கிய அன்றோ
ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பார் உலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம்
ஆரியர்கள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
ருசி விசுவாச ஹீனரையையும் நிர்பந்தித்து சரம உபாயஸ்தராக்கியும்
அதிகாரம் பாராமல் இவர்களுடைய துர்க்கதியையே பார்த்து உபதேசித்து அருளுபவர் அன்றோ

ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே —
ஸ்நந்த்ய பிரஜை முளையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம்

————–

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெறமாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே
இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது
நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

யந் மங்கலாய மஹதே ஜகதா முசந்தி
த்ரை விஷ்ட பாந்யபி பதாநி யதாச்ரயாணி
வந்தா மஹே ஸரஸி ஜேஷண மத்விதீயம்
வேதாந்த வேத்யம் அநிதம் ப்ரதமம் மஹஸ் தத்-4-

பகவான் ஆகிற தேஜஸ்ஸை -உலகங்களின் மிகுந்த மங்களத்தின் பொருட்டு -மஹா மங்களகரமாக -என்றபடி
தத்வ ஞானிகள் அபிப்ராயப் படுகிறார்களோ -மூ வுலகங்களினுள்ளே ஸ்தான விசேஷங்களை எல்லாம்
யாதொரு தேஜஸ்ஸை ஆதாரமாக யுடையவைகளோ
அப்படிப்பட்டதும் செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையதும் ஒப்பற்றதும் வேதாந்தங்களாலே அறியக் கூடியதும்
அநாதி ஸித்தமான தேஜஸ்ஸை ஸ்தோத்ரம் செய்கிறோம்

இந்த ஸ்லோகம் தொடங்கி எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார்
தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-என்றும்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்றும் சொல்லுகிறபடி
தேஜஸ் -என்றும் அத்தை உடைய எம்பெருமான் -என்றும் இரண்டு படச் சொல்லும்படி அன்றிக்கே
தேஜஸ்ஸே உருவாக–தேஜஸ் தத்துவமே எம்பெருமான் என்று அத்வைதமாக பேசலாம் படி அன்றோ
அவனது தேஜஸ் விசேஷம் இருப்பது

யாதொரு தேஜஸ்ஸானது
சகல லோகங்களுக்கும் மங்கள பிரதமாய் இரா நின்றதோ
த்ரி லோகத்தில் உள்ள சகல ஸ்தானங்களும் யாதொரு தேஜஸ்ஸை ஆதாரமாகக் கொண்டு நிலை பெற்று உள்ளனவோ
யாதொரு தேஜஸ் தாமரை போன்ற திருக்கண்களுடன் பொலிய நின்றதோ
வேதாந்தங்களாலே அறியப்படுகின்றதோ
யந் மங்கலாய மஹதே
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா என்கிறபடியே நிஸ் சமாப்யதிகமாய் சாஸ்வதமாய் விளங்குகின்றதோ
அந்த தேஜஸ்ஸை வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுவோம்
அநாதி ப்ரதமம் -அநாதி சித்தம் என்றபடி பதிம் விஸ்வஸ்ய சுருதியில் சாஸ்வதம் என்று உள்ளதை எடுத்து அருளிய படி –

—————-

பீதாம்பரம் வரத சீதல த்ருஷ்ட்டி பாதம்
ஆஜாநு லம்பி புஜம் ஆயத கர்ண பாசம்
தன் மேக மேச கமுதக்ர விசால வக்ஷஸ்
லஷ்மீ தரம் கிமபி வஸ்து மமாவிரஸ்து-5-

பீதகவாடை யுடையதும் -வர பிரதமுமாய் சீதளமான கடாக்ஷ பாதத்தை யுடையதும் –
திரு முழந்தாள் வரை தொங்கும் திருக்கைகளை யுடையதும்
மேகம் போல் ஸ்யாமளமானதும் உன்னதமும் விசாலமுமான திரு மார்பை உடையதும்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தரிப்பதுமான -எம்பெருமான் ஆகிற -அந்த ஒரு வஸ்து -அடியேன் பால் ஆவிர்பவிக்க வேணும்
கீழே -ஸரஸி ஜேஷணம் -என்று பிரஸ்துதமான திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தை விசேஷேண அனுபவிக்கிறார் இதில்
இதிலும் அவன் திரு நாமத்தை சாஷாத்தாக நிர்த்தேசியாமல்-கிமபி வஸ்து -என்று அநிர்வசனீய தயா அருளிச் செய்கிறார்

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தவிர வீசீரே -என்று
ஆண்டாள் போல்வார் அர்த்திக்கவே பீதக வாடை அணிந்ததும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் என்று வேண்டும் அடியார்க்கு
சகல அபீஷ்ட பிரதமாய் நின்று குளிர நோக்கும் திருக்கண் பார்வை கொண்டும்
முழந்தாள் அளவும் நீண்ட திருக்கைகளோடு கூடியும்
தோள்கள் அளவும் தள தள என்று தொங்குகின்ற திருச் செவிகள் கொண்டும்
நீல மேக நிபஸ்யாமமாயும் –நீண்டு அகன்ற திரு மார்பை உடைத்ததாயும்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா என்றபடி இடைவிடாது
திரு மார்பிலே திரு மா மகள் திகழப் பெற்றும் இரா நின்ற ஒரு விலக்ஷண வஸ்து என் முன்னே காட்சி தர வேணும் என்கிறார்
கர்ணபாசம் -பாச சப்தம் சிறந்தது என்ற பொருளில் வந்தது
உதக்ர விசால வக்ஷஸ் லஷ்மீ தரம் –என்று ஸமஸ்த பதமாகவும் கொள்ளலாம்
அப்போது வஷஸ்ஸிலே ஸ்ரீ மஹா லஷ்மியைத் தரிப்பதாகப் பொருள்

———————

யத் தத்வம் அக்ஷரம் அத்ருஸ்யம் அகோத்ரவர்ணம்
அக்ராஹ்யம் அவ்யயம் அநீத்ருசம் அத்விதீயம்
ஈஸாநாம் அஸ்ய ஜகதோ யத் அணோர் அணீய
தத் வைஷ்ணவம் பதம் உதாரம் உதாஹராம–6-

எம்பெருமானுடையதான யாதொரு ஸ்வரூபமானது சத்யமானதோ -நிர்விகாரமானதோ -கண்ணால் காணக் கூடாததோ –
நாமமும் ரூபமும் இல்லாததோ-அநு மானம் முதலியவற்றைக் கொண்டு க்ரஹிக்க முடியாததோ–விநாசம் இல்லாததோ –
நாம் கண்களால் காணும் வஸ்துக்கள் போல் அல்லாததோ -இணை இல்லாததோ –
யாதொரு ஸ்வரூபமானது இந்த ஜகத்துக்கு ஈஸ்வரமானதோ -அணுவான வஸ்துக்களில் காட்டிலும் மிகவும் அணுவானதோ –
மஹத்தானதோ -அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஸ்துதிக்கிறோம்

யாதொரு பகவத் ஸ்வரூபமானது சத்யமாயும் அநந்தமாயும்-என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுரு -என்கிறபடியே
மாம்ச சஷுஸ்ஸாலே காணக் கூடாததாயும் நாம ரூப ரஹிதமாயும் அநு மாநாதிகளுக்கும் அவிஷயமாயும்
அசங்கிசித கல்யாண குண விசிஷ்டமாயும் இப்படிப்பட்டது என்று ஒருபடி நிரூபித்துச் சொல்ல மூடியாததாயும்-அதாவது
அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிக மாயும்-சேதன அசேதன விசஜாதீயமாயும் -ஸமாப் யதிக வஸ்து வேறு ஓன்று இல்லாததாயும்
பதிம் விஸ்வஸ் யாத் மேஸ்வரம் –இத்யாதிப்படியே சேதன அசேதநாத்மக சகல ஜகத்துக்கும் நியாமகமாயும்-
அணுவைக் காட்டிலும் மிகவும் அணுபூதமாயும்-அதாவது
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் பரந்த அண்டம் மீதென நில விசும்பு ஒழி வற கரந்த சில் இடம் தோறும்
பரந்து உளன் இவை உண்ட கரனே –என்கிறபடியே மிக சிறிய வஸ்துக்கள் உள்ளே பிரவேசிக்க அநு குணமான
நிலையை உடையதாய் மஹதோ மஹீயஸ்சாயும் இரா நின்றதோ அப்படிப்பட்ட விஷ்ணு ஸ்வரூபத்தை வாய் கொண்டு பேசப் புகுகிறோம்
உதாரம் தாத்ரு மஹதோ -நிகண்டு –உதாத்தம் பாட பேதம் -அந்த பகவத் ஸ்வரூபத்தை உயர்த்திச் சொல்கிறோம்

—————–

ஆம் நாய மூர்த்தநீ ச மூர்த்த நீ சோர்த்வ பும்ஸாம்
யத் தாம வைஷ்ணவம் அபீஷ்ண தரம் ஸகாஸ்தி
தந் மாத்ருசாம் அபி ச கோசரம் ஏதி வாசஸ்
மந்யே ததீயம் ஆஸ்ரித வத்சலத்வம் –7-

யாதொரு பகவத் தேஜஸ்ஸானது -வேத அந்தத்திலும் பூர்வ புருஷர்களின் திரு முடியிலும் மிகவும் விளங்குகின்றதோ
அந்த தேஜஸ்ஸானது என் போன்றவர்களுடைய வாக்குக்கும் விஷயமாய் இருக்கையை அடைகின்றது
இப்படி ஆவதானது அவனுடைய ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் போலும்

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
அந்த உத்துங்க தத்வம் நீசனேன் நிறை ஒன்றும் இல்லா அடியேனால் வாய் கொண்டு பேசும்படி –
வாத்சல்யம் கரை புரண்டு ஓடி வந்த கார்யம் அன்றோ
ஆம் நாய மூர்த்தநீ-
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு அன்றோ இந்த தேஜஸ்ஸூ
யந் மூர்த்நி மே சுருதி சிரஸ்ஸூ ச பாதி –ஆளவந்தார் திரு முடியிலும்
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே –
யச்ச மூர்த்தா சடாரே-நம்மாழ்வார் திரு முடியிலும் விளங்கும் இந்த தேஜஸ்ஸானது
இந்த தேஜஸ்ஸூ அன்றோ இளைய என் புன் கவிதைக்கும் இலக்கு ஆயிற்று
கோசரம் என்றது கோசரத்வம் என்றபடி -பாவ பிரதான நிர்த்தேசம்
ஆஸ்ரித வாத்சல்ய ப்ரயுக்தம் என்னாமல் ஆஸ்ரித வத்சலத்வம் என்றது கார்ய காரண அபேத உபசாரம் இருந்தபடி
அவன் தோஷ போக்யன் ஆகையால் என்னுடைய துஷ்ட வாக்குகளைக் கொண்டு நிர்ப்பயமாக
ஸ்துதி செய்யப் புகுந்தேன் -என்று தாத்பர்யம்

————-

ஜாநந் நபீஹ கில மாம் அந பத்ர பிஷ்ணு
விஷ்ணோ பாத பிரணயி நீம் கிரம் ஆத்ரி யேஹம்
ந ஸ்வ அவ லீடம் அபி அதீர்த்தம் தீர்த்தமாஹு
நோதந்யதாபி ச சுநா கில லஜ்ஜி தவ்யம்–8-

அடியேன் என்னை அஞ்ஞனாய் தெரிந்து கொண்டவனாய் இருந்தும் வெட்கப்படாதவனாய்
எம்பெருமானுடைய திருவடியில் ப்ரேமம் பொருந்திய வாக்கை இங்கு தொடுக்க விரும்புகிறேன் –
இயற்கையாகவே பவித்ரமான கங்கை முதலிய தீர்த்தம் நாயினால் நக்கப்பட்டதே யாகிலும்
அதனைத் தீர்த்தம் அல்லாததாகச் சொல்ல மாட்டார்கள் அல்லவா
தாஹம் கொண்ட நாயினாலும் நாணப் படத் தகுதி இல்லையே

நைச்ய அனுசந்தானத்தில் எல்லையின் நின்று அருளுகிறார்
மா சூணா வான் கோலத்து அமரர் கோமான் வழிப் பட்டால் மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே –என்று
இருக்க அல்பஞ்ஞரான தாம் ஸ்துதித்தால் நிறக்கேடாகாது என்று சமாதானம்
எனது புல்லிய வாக்கில் புகுந்து புறப்படுவதால் பகவத் விஷய தூய்மை குன்றாதே
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே எல்லாரும் படிந்து குடைந்து ஆடலாம் படி பரம பவித்ரம்
பகவத் விஷயத்தை பேசி அல்லது தரிக்க கில்லாத அடியேனும் பேசுவதற்கு லஜ்ஜிக்கவும் அவகாசம் இல்லையே
இவர் தாமே ஸ்ரீ ஸ்தவத்தில் -ஷோ தீயா நபி துஷ்ட புத்தி ரபி –என்கிறார்
உதந்யந் –தாக்கமுடையவன் என்றதாயிற்று

—————-

தேவஸ்ய தைத்யமத நஸ்ய குணேஷ் வியத்தா
சங்க்யா ச வாங் மனச கோசரமத்ய பூதம்
அப்யேவ மண்வபி ச தத்ர ம மார்த்தி சாந்த்யை
கீடஸ்ய த்ருஷ்யத உதன்வதி விப்ருஷாலம் –9-

அஸூர நிரசன சீலனான எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களில் எண்ணிக்கையும்
இவ்வளவு என்கைக்கும் வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டும் தன்மையைக் கடந்து விட்டன –
இப்படியான போதிலும் அக்குணங்களில் அணு அளவும் அடியேனுடைய ஆர்த்தி தணிவதற்குப் போதும்
தாஹித்து இருக்கின்ற புழுவுக்குக் கடலில் ஒரு திவலை மாத்திரத்தாலே பர்யாப்தி பிறக்கும் இறே

உயர்வற உயர் நலம் உடையவன் -கல்யாண குண சாகரம் –குணக்கூட்டங்களையும் எண்ணி முடிக்க முடியாதே —
அவற்றைப் பேச அல்ப ஞான சக்தனான அடியேன் இழியத் தகுமோ என்ற சங்கைக்கு சமாதானம் –
அமுதக்கடலில் யதா சக்தி வாய் வைத்து விடாய் தீருவேன் -அவற்றின் எல்லை கண்டு விடுவதற்காக அன்று என்கிறார்
யத்வா ஸ்ரமாவதி யதா மதி வாபி–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகம் இதுக்கு அடி

——————-

ப்ரேம ஆர்த்த விஹ்வல கிரஸ் புருஷா புராணா
த்வாம் துஷ்டுவுர் மதுரிபோ மதுரைர் வசோபி
வாசோ விடம்பிதமதம் மம நீசவாச
ஷாந்திஸ் து தே ச விஷயா மம துர்வசோபி –10-

வாரீர் மது சூதனான பெருமானே -பக்தியினால் கனிந்த -தழ தழத்த குரலை உடைய ஆழ்வார்களும் ஆச்சார்யர்களுமான
முன்னோர்கள் இனிய ஸ்ரீ ஸூக்தி களாலே தேவரீரை ஸ்துதித்தார்கள்
புல்லிய வாக்குகளை யுடைய அடியேன் இந்த ஸ்துதி அந்த முன்னோர்களின் வாக்கின் அநுகார ரூபமாம் அத்தனை –
அடியேனுடைய துர் உக்திகளினால் தேவரீருடைய ஷமா குணம் இலக்குப் பெற்றதாகின்றது –

ப்ரேம ஆர்த்த விஹ்வல கிரஸ்
உள்ளம் எல்லாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர -என்றும்
வேவாரா வேட்கை நோய் மேதாவி உள்ளுலர்த்த-என்றும்
ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற –என்றும்
ப்ரேமத்தால் நெஞ்சு கனிந்து பேசும் ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்
புருஷா புராணா
மதுரைர் வசோபி-த்வாம் துஷ்டுவுர்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் -என்றும்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரம் -என்றும் ஸ்ரீ ஸூக்தி மாதுர்யம் அவர்களையே மெய் மறந்து
பேசப் பண்ணிற்றே -அப்படி அன்றோ தேவரீரை ஸ்துதித்தார்கள் –

மம -துர்வசோபி –நீசவாச – தே
ஷாந்திஸ் து ச விஷயா – அடியேன் பேசாது ஒழிந்தால் தேவரீர் ஷமா குணம் எங்கே காட்டி அருளுவீர்
அடியேன் விண்ணப்பம் செய்தவை தப்பும் தவறுமாக இருந்தாலும் சீறி அருளாதே
க்ஷமித்து அருள வேண்டும் என்கிறார் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: