ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—117–132–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

த்வம் ஹி ஸூந்தர வநாத்ரி நாத ஹே வேங்கடாஹ்வய நகேந்த்ர மூர்த்தநி
தேவ சேவித பதாம்புஜ த்வய சம்ஸ்ரீதேப்ய இஹ திஷ்டசே சதா –117-

ஸ்ரீ கல்கி அவதார அனுபவம் -120-ஸ்லோகத்தில் –
இடையில் இம் மூன்றும் திருமலை பெருமாள் கோயில் திருவரங்கம் அனுபவம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று இருக்க இந்த கிரமத்துக்கு அடியாவது
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா –பெரிய திருமடல் -என்பதால்-
இத் திருமலையோடே சேர்த்தி உண்டாகையாலே அத்தை முதலில் எடுத்து –
இவ்விரண்டு திருமலைகளோடு ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கும் பர்வதத் வேந சேர்த்தி என்பதால் அத்தை அனுபவித்து
அனந்தரம் கோயில் அனுபவம்

ஹே – வநாத்ரி நாத-ஸூந்தர-அழகரே
த்வம் -தேவரீர்
வேங்கடாஹ்வய நகேந்த்ர மூர்த்தநி–திருவேங்கடம் என்னும் திருமலையின் உச்சியில்
தேவ சேவித-பதாம்புஜ த்வய சந் –சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்
வானவர்கள் தொழும் திருவடி இணையை உடையராய்க் கொண்டு
இஹ சம்ஸ்ரீதேப்யஸ் சதா திஷ்டசே –இத்தலத்தில் அடியார்களுக்கு ஸ்வ அபிப்ராயத்தைத் தெரிவித்துக் கொண்டு
எஞ்ஞான்றும் எழுந்து அருளி இருக்கிறீர்

ஸ்வ அபிப்ராயமாவது -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்பதாம்

—————

ஹஸ்தி சைல நிலயோ பவந் பவாந் சாம்ப்ரதம் வரத ராஜ ஸாஹ்வய
இஷ்டம் அர்த்தம் அநு கம்பயா ததத் விஸ்வமேவ தயதே ஹி ஸூந்தர –118-

ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதத்தின் உதார குணத்தை அனுபவிக்கிறார் இதில்
ஹே ஸூந்தர –பவாந் சாம்ப்ரதம் வரத ராஜ ஸாஹ்வய-ஹஸ்தி சைல நிலயோ பவந் –வாரீர் அழகரே -தேவரீர் இப்போது
வரம் தரும் பெருமாள் என்று திரு நாமம் உடையீராய் திருவத்தி மலையிலே வாழ்பவராய்க் கொண்டு
அநு கம்பயா இஷ்டம் அர்த்தம் ததத் சந் –திருவருளால் அர்த்திதார்த்த பரிதாந தீஷிதராய்
விஸ்வமேவ ஹி தயதே –உலகுக்கு எல்லாம் அருள் புரியா நின்றீர்
சதுர்முகப்பெருமான் தான் சாஷாத் கரித்து அனுபவித்துக் கழிக்க அஸ்வமேத யாகம் செய்தான்
சாதகஸ் த்ரி சதுரான் பய கணான் யாசதே ஜலதரம் பியாசயா சோபி பூரயதி விஸ்வமம்பசா ஹந்த ஹந்த மஹதாம் உதாரதா -என்றும்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசியுமால் -என்றும் சொல்லுகிறபடி
பேறு உத்தேஷ்டாவான அவன் ஒருவன் அளவிலே சுவரிப் போகாமல்
உலகம் எல்லாம் பேர் அருள் பெற்று வாளா நின்றது -என்கிறார்

——————-

மத்யே ஷீர பயோதி சேஷ சயநே சேஷே சதா ஸூந்தர
த்வம் தத் வைபவம் ஆத்ம நோ புவி பவத் பக்தேஷு வாத்சல்யத
விச்ராண்ய அகில நேத்ர பாத்ரம் இஹ சந் சஹ்யோத்பவாயாஸ் தடே
ஸ்ரீ ரெங்கே நிஜதாம் நி சேஷ சயநே சேஷே வநாத் ரீஸ்வர –119-

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாற்றைத் திருவரங்கம் பெரிய கோயிலிலே அனுபவித்து இனியராகிறார்
ஷீர சாகர தரங்க சீகரா சார தார கித சாரு மூர்த்தயே போக்கி போக சயநீய சாயிநே மாதவாய–என்கிறபடியே
திருப் பாற் கடலிலே அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் கோலம் காட்டில் எறிந்த நிலா வாக அன்றோ உள்ளது
அது அங்கண் ஆகாயமே கண் படைத்தார் எல்லாம் கண்டு களித்து வாழலாம் படி
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திருக்கையால் அடி வருடப் பள்ளி கொள்கின்ற படியை அனுபவிக்கிறார்

ஹே வநாத் ரீஸ்வர –ஸூந்தர –
மத்யே ஷீர பயோதி சேஷ சயநே சதா சேஷே –திருப் பாற் கடலினுடைய அரவணைப் பள்ளியிலே
அநவரதம் பள்ளி கொண்டு அருளா நின்றீர்
ஆத்ம நோ- தத் வைபவம் புவி பவத் பக்தேஷு வாத்சல்யத விச்ராண்ய –சேஷ ஸாயித்வ ரூபமான
அந்த ஸ்வ கீய வைபவத்தை இந்நிலை உலகத்திலும் பக்தர்கள் பக்கலில் வாத்சல்ய அதிசயத்தாலே
காட்டிக் கொடுக்கத் திரு உள்ளம் பற்றி
அகில நேத்ர பாத்ரம் சந் –சகல ஜன நயன விஷயமாய்க் கொண்டு
இஹ சஹ்யோத்பவாயாஸ் தடே -இங்கே திருக்காவேரிக் கரையிலே
நிஜதாம் நி ஸ்ரீ ரெங்கே –விசேஷித்துத் தன்னிலமான திருவரங்கம் பெரிய கோயிலிலே
சேஷ சயநே சேஷே –அரவணை மேல் பள்ளி கொண்டு அருளா நின்றீர்–

——————

கல்கீ பவிஷ்யந் கலிகல்க தூஷிதாந்
துஷ்டாந் அசேஷாந் பகவந் ஹநிஷ்யசி
ச ஏஷ தஸ்யா வசரஸ் ஸூ ஸூந்தர
ப்ரஸாதி லஷ்மீ ச சமஷமேவ ந –120-

என்றைக்கோ செய்வதாகத் திரு உள்ளம் பற்றி இருக்கிற அந்த அவதாரத்தை சமத்காரமாக
மகா க்ரூரர்கள் மலிந்துல்ல இக்காலத்திலேயே செய்து அருளுவது நன்று என்கிறார்
ஹே லஷ்மீ ச பகவந்-ஸ்ரீ யபதியான திருமாலிருஞ்சோலை மலைப் பெருமாளே
கல்கீ பவிஷ்யந் –இனி ஒரு கால் கல்கி அவதாரம் செய்து
கலிகல்க தூஷிதாந் -அசேஷாந்-துஷ்டாந் ஹநிஷ்யசி —கலிகல்மஷ தூஷிதர்களான சகல துஷ்டர்களை
தொலைத்து அருளப் போகிறீர்
அதற்கு ஒரு சமய ப்ரதீஷை வேணுமோ
தஸ்ய ச ஏஷ அவசரஸ் ஸூ ஸூந்தர –அதற்கு இந்த சமயம் தான் மிக வாய்ப்பானது
ந சமஷமேவ ப்ரஸாதி –எங்கள் கண் முகப்பே பாபிகளை தொலைத்து அருள வேணும்
கல்கி அவதாரம் செய்து தொலைக்க வேண்டிய பாபிகள் மலிந்து இருப்பதாக
ஆழ்வான் திருவாக்கில் வெளிவந்தால் அக்காலத்தின் கொடுமையை என் என்போம்

——————————————

ஈத்ருசாஸ் த்வத் அவதார சத்தமா சர்வ ஏவ பவதாஸ்ரிதான் ஜநாந்
த்ராதுமேவ ந கதாசிதந்யதா தேந ஸூந்தர பவந்த மாச்ரயே –121-

ஸ்வ அபிமத சித்திக்காக திருவடிகளில் பிரபத்தி செய்து அருளுகிறார்
பிரபத்திக்கு அபேக்ஷிதங்களான குண விசேஷங்களை எல்லாம் கீழே பஹு முகமாக
அருளிச் செய்து இதில் சரணம் புகுகிறார்
ஹே ஸூந்தர-ஈத்ருசாஸ் த்வத் அவதார சத்தமா சர்வ ஏவ பவதாஸ்ரிதான் ஜநாந் -த்ராதுமேவ –இப்படிப்பட்ட உம்முடைய
மிக சிறந்த திரு அவதாரங்கள் எல்லாமும் உமது திருமுகப்படியே சாது பரித்ராணத்திற்கே யாகுமே
கதாசித் அந்யதா ந தே–திரு அவதாரத்துக்கு இதுவே பிரயோஜனம் அல்லது வேறு பிரயோஜனம் இல்லை ஒரு போதும்
தேந பவந்தம் ஆஸ்ரயே –இந்த திருமலையில் வந்து திரு அவதரிப்பதுவும் சாது பரித்ராணத்திற்காகவே
ஆதலால் அடியேனையும் ஒரு சாதுவாக திரு உள்ளம் பற்றி ரஷித்து அருள வேணும் என்று
தேவரீரை சரணம் புகுகிறேன் -என்கிறார்

————————

த்வாம் ஆம நந்தி கவய கருணாம் ருதாப்திம்
த்வா மேவ சமஸ்ரித ஜநிக்ந முபக்ந மேஷாம்
யேஷாம் வ்ரஜந் நிஹ ஹி லோசந கோசரத்வம்
ஹை ஸூந்தராஹ்வ பரிசஸ் கரிஷே வநாத்ரிம் –122-

கீழே பண்ணின சரணாகதி சபலமாகியே தீர வேணும் என்று நான்கு ஸ்லோகம் அருளிச் செய்கிறார்
ஹே ஸூந்தராஹ்வ-த்வாம் – கவய கருணாம் ருதாப்திம் -ஆம நந்தி–வாரீர் அழகரே -அப்ரத்யக்ஷ தத்வார்த்த
சாஷாத் கார ஷமர்களான பராசர பாரஸர்யாதிகள் தேவரீரை அருள் கடலாகச் சொல்லுகின்றார்கள்
த்வா மேவ சமஸ்ரித ஜநிக்நம் உபக்நம்-ஆம நந்தி–ஆஸ்ரிதர்களுக்கு சம்சார விமோசகராயும் –
அவர்களுக்கு ஆஸ்ரய பூதராகவும் தேவரீரையே சொல்லுகிறார்கள்
எவர்களுக்கு என்னில்
இஹ ஹி யேஷாம் லோசந கோசரத்வம் வ்ரஜந் -வநாத்ரிம் –பரிசஸ் கரிஷே –இந்நிலத்திலே யாவர் சிலருக்கு
கண் புலனுக்கு இலக்காகி திருமாலிருஞ்சோலை மலையை பரிஷ்க்ருதமாக்கி அருள்கின்றீரோ –
பராசர பாரஸர்யாதிகளான மகரிஷிகளின் வாக்கு பொய்யாகாது படி அருள் புரிய வேணும் என்கிறார்

—————————–

அசக்யம் நோ கிஞ்சித் தவ நச ந ஜாநாசி நிகிலம்
தயாலு ஷந்தா ஸாசீ அஹம் அபி ந ஆகாம்சி தரிதும்
ஷமோதஸ் த்வச் சேஷோ ஹ்யகதிரிதி ச ஷூத்ர இதி ச
ஷமஸ் வைதாவந் நோ பலமிஹ ஹரே ஸூந்தர புஜ –123-

ஹரே ஸூந்தர புஜ –தவ–அசக்யம் நோ கிஞ்சித் –சர்வ சக்தரான தேவரீருக்குச் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லையே –
சங்கல்ப மாத்திரத்தாலே எத்தையும் செய்ய வல்லீர் அன்றோ
நிகிலம்-நச ந ஜாநாசி –சக்தியில் குறை இல்லாதாப் போலே ஞானத்திலும் குறை இல்லை கிடீர்
உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி–எண்ணப்பட்ட தேவரீர் அறியாதது ஒன்றும் இல்லையே
தயாலு ஷந்தாஸ அசீ –ஞான சக்திகளுக்கு மேலே தயா குணமும் ஷமா குணமும் உடையராய் இரா நின்றீர்
தேவரீர் படியை விண்ணப்பம் செய்த அடியேன் -என் படியையும் விண்ணப்பம் செய்து கொள்கின்றேன் -கேட்டு அருளீர்
அஹம் அபி ஆகாம்சி தரிதும் ந
ஷம–அடியேனோ செய்த பாபங்களை ப்ராயச்சித்தாதிகளாலே போக்கிக் கொள்ள ஷமனாகின்றிலேன்
பாபங்கள் கூடு பூரித்துக் கிடக்கிறேன்
அத -தேவரீர் சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ தயாளுதவ ஷமா நிதித்வாதி குண பூர்ணராய் இருப்பதாலும்
அடியேன் பாபா நிபர்ஹண ஷமன் இன்றிக்கே இருப்பதாலும்
த்வத் சேஷ இதி அகதிரிதி ஷூத்ர இதி ச –தேவரீருக்கு சேஷப்பட்டவன் -வேறு புகல் அற்றவன் –
பிறரும் கண் எடுத்துப் பார்க்கத் தகாத நீசனானவன் -என்னும் இக்காரணங்களைக் கொண்டும்
ஷமஸ்வ –சர்வ அபசாரங்களையும் க்ஷமித்து அருள வேணும்
ந இஹ ஏதாவத் பலம் –தேவரீருடைய ஞான சக்தியாதிகளை அனுசந்திப்பதும் –
அடியோங்களுடைய அஞ்ஞான அசக்தியாதிகளை அனுசதிக்கு இதுவே எங்கள் பக்கல் உள்ள கைம்முதல்
நோபலம் -ந அபலம்-ந ஏதாவத் அபலம் க்ஷமஸ்வ என்றும் அந்வயம் -அபலமாவது அபசாரம்

—————————————

லங்கா யுத்த ஹதரந் ஹரீந் த்விஜ ஸூதம் சம்பூக தோஷாந்ம்ருதம்
சாந்தீபந்ய பிஜம் ம்ருதம் த்விஜ ஸூதாந் பாலாம்ச் ச வைகுண்ட காந்
கர்ப்பஞ் சார்ஜூ நி சம்பவம் வ்யுத தரஸ் ஸ்வேநைவ ரூபேண ய
ஸ்வ அபீஷ்டம் மம மத் குருரோச் ச ததசே நா கிம் வநாத் ரீஸ்வர –124-

ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களில் செய்து அருளின மஹா உபகாரங்களை எடுத்து உரைத்து
இப்படி விலக்ஷண சக்தி உக்தரான தேவரீர் எம் அபேக்ஷிதம் தலைக்கட்டாமை என்று ஓன்று உண்டோ என்கிறார் –
ஹே வநாத் ரீஸ்வர –
லங்கா யுத்த ஹதரந் ஹரீந் -இலங்கையில் ராக்ஷஸ யுத்தத்தில் கொலை உண்ட வானர முதலிகளையும்
சம்பூக தோஷாந்ம்ருதம் -த்விஜ ஸூதம் -சூத்ர யோனியில் பிறந்த சம்புகன் தவம் புரிந்த குற்றத்துக்குப் பலனாக
அகால ம்ருத்யுவை அடைந்த அயோத்யா வாசி ப்ராஹ்மண குமாரனையும்
சாந்தீபந்ய பிஜம் ம்ருதம் –மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை என்கிறபடியே
ப்ரபாஸ தீர்த்தத்தில் மாண்டு போன சாந்தீபந புத்ரனையும்
த்விஜ ஸூதாந் பாலாம்ச் ச வைகுண்ட காந் –பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் –என்கிறபடியே
தன்னடிச் சோதி சேர்ந்த ப்ராஹ்மண புத்ரர்களான நான்கு சிசுக்களையும்
கர்ப்பஞ்ச ஆர்ஜூ நி சம்பவம் –மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு –உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட
யுயிராளன் -அஸ்வத்தாமாவின் அபாண்டவ அஸ்திர பிரயோகத்தால் கரிக்கட்டையாய் விழுந்த அபிமன்யு புத்ரனையும் –
அர்ஜுனஸ்ய அபத்யம் புமான்–ஆர்ஜு நீ
வ்யுத தரஸ் ஸ்வேநைவ ரூபேண ய –யாவரொரு தேவரீர் பண்டு இருந்த வடிவில் சிறிதும் குறையாமே சிதையாமே
அப்படியே புனருத்தாரணம் செய்து அருளிற்றோ -அப்படிப்பட்ட தேவரீர்
ஸ்வ அபீஷ்டம் மம மத் குருரோச் ச ததசே நா கிம் –அடியேனுக்கும் அடியேனுடைய ஆச்சார்யரான எம்பெருமானாருக்கும்
அபீஷ்டமானதைக் கொடுத்து அருளாது ஒழியுமோ
அவசியம் கொடுத்து அருளும் என்கிற ப்ரத்யயம் உள்ளது எமக்கு –

————–

ஆயோத் யிகாந் ச பசு கீட த்ருணாம்ச் ச ஐந்தூன்
கிங் கர்மனோ நு பத கீத்ருஸ வேத நாட்யான்
சாயுஜ்ய லப்ய விபவான் நிஜ நித்ய லோகான்
சாந்தா நிகான் அகமயோ வந சைல நாத –125-

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளியதை உட்க்கொண்டு இந்த ஸ்லோகம்
ஹே சைல நாத —
ஆயோத் யிகாந் ச பசு கீட த்ருணாம்ச் ச ஐந்தூன்–அயோத்யா வாசிகளாய் பசுக்களும் கீடங்களும் புற்களும்
உட்பட சகல ஜந்துக்களும்
சாயுஜ்ய லப்ய விபவான் நிஜ நித்ய லோகான் -சாந்தா நிகான் அகமயோ–சாயுஜ்யம் என்னும் மோக்ஷத்தில்
அடையக் கூடிய செல்வம் மல்கிய ஸ்ரீ வைகுண்டம் துல்ய பகவத் அனுபவ அனுகூலங்களான
சாந்தா நிகம் என்னும் லோக விசேஷங்களை பிராபிக்கச் செய்து அருளிற்றே-இது
கிங் கர்மனோ நு பத கீத்ருஸ வேத நாட்–யாந் –அந்த ஜந்துக்களை என்ன கர்ம யோகம் உடையனவாகவும்
எவ்விதமான ஞானயோகம் உடையனவாகவும் திரு உள்ளம் பற்றிற்றோ-
ஸ்வ கீய கிருபையால் அன்றோ செய்து அருளிற்று
இங்கும் அங்கனே ஆகாதோ

———————

ஹரித வாரண ப்ருத்ய சமாஹ் வயம்
கரி கிரவ் வரதஸ் த்வமபூர்விகாம்
த்ருஸ மலம்பய ஏவ ஹி ஸூந்தர
ஸ்புட மதாச்ச பரச் சத மீத்ருசம்–126-

அழகருக்கும் வரதருக்கும் உண்டான ஐக்கியத்தைப் பற்றி இந்த ஸ்லோகம்
பச்சை வாரண தாசர் -இவர் திருக் கச்சி நம்பிகளுக்கு பிதா என்றும் பிதாமகர் என்றும் பித்ருவ்யர் என்றும் சொல்வர் –
இவர் பிறவிக் குருடராக இருந்து தேவப்பெருமாள் கிருபையால் கண் பெற்ற ஐதிக்யம்
யஸ்ய பிரசாத கல–என்கிற ஸ்லோகத்தில் -ஆளவந்தார் -அந்த ப்ரபஸ்யதி என்று அருளிச் செய்ததும்
இந்த இதிகாசத்தை பற்றியே என்பர்
ஹே -ஸூந்தர-கரி கிரவ் வரதஸ் த்வம் -வாரீர் அழகரே வேகவத் யுத்தர தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதா நாம் அத்யாபி பரி த்ருச்யதே -என்கிறபடியே
ஸ்ரீ ஹஸ்திகிரியிலே வரதாதி ராஜனாக சேவை தந்து அருளா நின்ற தேவரீர்
ஹரித வாரண ப்ருத்ய சமாஹ் வயம் அபூர்விகாம் த்ருஸம் அலம்பய ஏவ ஹி –பச்சை வாரண தாசர் என்னும்
பரம பக்தருக்கு அபூர்வமான த்ருஷ்ட்டியைக் கொடுத்து அருளினது பிரசித்தம் அன்றோ –
இது த்வி கர்ம பிரயோகம்
ஸ்புடம் அதாச் ச பரச்சதம் ஈத்ருசம்-இது ஒன்றே அன்று இறே –
இப்படி அருள்செய்தது பரச்சதம் உண்டு அன்றோ -அடியேனுக்கும் திருவருள் செய்தலாகாதோ –

————————-

இஹ ச தேவ ததாஸி வரான் பரான்
வரத ஸூந்தர ஸூந்தர தோர்த்தர
வந கிரேர் அபிதஸ் தடம் ஆவசந்
அகில லோசந கோசார வைபவ –127-

ஸ்ரீ ஹஸ்திகிரியில் போலவே இத்திருமலையிலும் வரம் தரும் பெருமையைப் பேசுகிறார் இதில்
ஹே -வரத ஸூந்தர ஸூந்தர தோர்த்தர –
இஹ ச -வந கிரேர் அபிதஸ் தடம் ஆவசந் -இங்கும் திருமலை தாழ்வரைகளிலே எழுந்து அருளி இருந்து
அகில லோசந கோசார வைபவ –சந் –எல்லாருடைய கண்ணுக்கும் இலக்கான வைபவத்தை உடையவராய்க் கொண்டு
ததாஸி வரான் பரான் –சிறந்த வரங்களைத் தந்து அருளா நின்றீர்

————

இதமிமே ஸ்ருணுமோ மலையத்வஜம்
நிருபமிஹ ஸ்வயமேவ ஹி ஸூந்தர
சரண ஸாத் க்ருத்வா நிதி தத் வயம்
வந கிரீஸ்வர ஜாத மநா ரதா –128-

மலய பர்வதத்தில் சென்று கொடி நாட்டிய -மலையத்வஜன் தேர் ஏறி கங்கை நீராட போகா நிற்க
தேர் மதி தவழும் குடுமி அளவிலே ஓடாமல் நிற்க -அழகரே அவனுக்கு நூபுர கங்கையை காட்டிக் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கொன்னவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே
இவனையே பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி-என்று கொண்டாடுகிறார்
ஹே -வந கிரீஸ்வர-ஸூந்தர
இஹ மலையத்வஜம் ந்ருபம்–இத்திருமலையிலே மலையத்வஜன் என்னும் அரசனை
ஸ்வயமேவ -அவனுடைய சாதன அனுஷ்டானாதி ப்ரதீஷை இன்றிக்கே தேவரீருடைய நிர்ஹேதுக கிருபையால்
சரண ஸாத் க்ருதவாநிதி இதமிமே வயம் ஸ்ருணுமோ–திருவடிக்கு ஆளாக்கிக் கொண்டீர் என்னும்
வரலாற்றை நாம் கேள்விப் படுகிறோம்
தத் வயம் ஜாத மநா ரதா –அப்படிப்பட்ட நிர்ஹேதுக கிருபையை தம் பக்கலிலும் பெருகும் என்று மநோ ரதிக்கிறார்

—————-

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–129-

இது முதல் நான்கு ஸ்லோகங்களால் ஸ்வ அபீஷ்டத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற
பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

————–

கிஞ்சே தஞ்ச விரிஞ்ச பாவந வநாத் ரீச ப்ரபோ ஸூந்தர
ப்ரத்யாக்க்யாந பராங்முகோ வரததாம் பஸ்யன்ன வஸ்யம் ச்ருணு
ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு
ப்ரத்யக்ஷம் ஸூ நிரஸ்த மேவ விததத் ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் –130-

ஹே -விரிஞ்ச பாவந வநாத் ரீச ப்ரபோ ஸூந்தர –உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் நான்முகனைத்
தோன்றுவித்த திருமாலிருஞ்சோலை அழகரே
வரததாம் பஸ்யந்–அடியார் வேண்டுமவற்றைத் தந்து அருளக் கடவோம் என்று இருக்கும் இருப்பைத் திரு உள்ளம் பற்றி
ப்ரத்யாக்க்யாந பராங்முகோ–உபேக்ஷித்து அருளால் -என்றபடி -நெறி காட்டி நீக்கி விடாமல் –
கிஞ்ச இதஞ்ச அவஸ்யம் ச்ருணு –கீழ் ஸ்லோகத்தில் சொன்னது அன்றிக்கே இதையும் கேட்டு அருளியாக வேணும்
ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் — ப்ரத்யக்ஷம் ஏவ ஸூநிரஸ்தம் — விததத் -அடியேன் போலவே
ப்ரதிபஷிகளும் விபரீதமாக ஏதேனும் பிரார்த்திக்கக் கூடும் –
அந்த பிரார்த்தனையை எல்லாம் எங்கள் கண் முகப்பே நிரஸ்தமாக்கி
ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு–தென் திருவரங்கம் கோயில் செல்வத்தை
நாள் தோறும் அபி வ்ருத்தமாக்கி தேவரீருடைய பக்தர்களுக்கே போக்யமாம்படி செய்து அருள வேணும் –

——————–

காருண்யாம்ருத வாரிதே வ்ருஷபதே தே சத்ய சங்கல்பந
ஸ்ரீ மந் ஸூந்தர யோக்யதா விரஹிதாந் உத்ஸார்ய சத்வத்சல
ஷாம்யந் சாது ஜநைஸ் க்ருதாம்ஸ் து நிகிலாநே வாப சாராந் க்ஷணாத்
தத் போக்யாம் நிசம் குருஷவ பகவந் ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–131-

காருண்யாம்ருத வாரிதே –கருணைக்கு அமுதக்கடல் போன்றவரே -பர துக்க அஸஹிஷ்ணுதவமே காருண்யம் ஆகையால்
அது தன்னை உடைய தேவரீருக்கு அடியேன் பிரார்த்திப்பது மிகை அன்றோ என்று காட்டுகிற படி –
வ்ருஷபதே -வ்ருஷபாத்ரி பதே -என்றபடி -வ்ருஷ பாத்ரி என்கிற திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவரே –
ஸ்ரீ வைகுண்டம் ஷீராப்தி முதலானவற்றை விட்டு தேவரீர் இங்கே எழுந்து அருளி இருப்பதை நோக்கி அருள வேண்டும் என்று காட்டுகிற படி
ஹே சத்ய சங்கல்பந –சத்ய சங்கல்பரான தேவரீருக்கு -எதுவும் சங்கல்ப மாத்ர சாத்யமாய் இருக்க –
அந்த சங்கல்பத்துக்கு வந்த துர்பிக்ஷம் என்னோ என்கை
ஸ்ரீ மந் ஸூந்தர பகவந்–தேவரீருடைய வடிவு அழகிலே கண் வைத்து இருக்கும் அடியோங்கள் இவ் வழகுக்கு
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் என்று மங்களா சாசனம் பண்ண வேண்டும் இத்தனை போக்கி வேறு ஓன்று பிரார்த்திக்கத் தகாது —
ஆயினும் பிரார்த்திக்க நேர்கின்றது என்கை
பகவந்-தேவரீருடைய ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்கள் ஆகிற ஷாட் குண்யம் காட்டில் எறிந்த நிலா வாகாமே
சபலம் ஆகைக்காக பிரார்த்திக்கிறோம் என்று காட்டுகிறார் போலும்
சத்வத்சல -தேவரீருடைய வாத்சல்யம் ஆகிற குண விசேஷமும் பிரார்த்திக்கச் செய்கிறது என்கை
பிரார்த்தனை தான் ஏது என்னில்
யோக்யதா விரஹிதாந் உத்ஸார்ய –நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -என்கிறபடி நல்லார்களே வாழ்ந்த இடமான கோயிலிலே
இப்போது மண்ணின் பாரமான அயோக்கியர்கள் அன்றோ மலிந்து கிடக்கிறது
அவர்களை அங்கு நின்றும் அகல்வித்து
சாது ஜநைஸ் க்ருதாம்ஸ் து -நிகிலாநே வாப சாராந் க்ஷணாத் ஷாம்யந்–தேவரீருக்கு உயிர் நிலையான
சத்புருஷர்கள் தேவரீருடைய வாத்சல்யத்தை நம்பி அபசாரங்கள் பட்டு இருந்தாலும் அவற்றை
ஒரு நொடிப் பொழுதில் ஷமா விஷயமாகி அருளி
ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–அநிசம்-தத் போக்யாம் குருஷ்வ –திருவரங்கம் பெரிய கோயில் செல்வம் எந்நாளும்
சத்புருஷர்களுக்கே போக்யமாம் படி செய்து அருள வேணும்
இதில் காட்டிலும் வேறே ப்ரார்த்த நீயம் இல்லை என்றதாயிற்று

——————–

இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் அஸ்மீ த்யநவதே
தயாயாஸ் தே பாத்ரம் வந கிரி பதே ஸூந்தர புஜ –132-

வாசா மகோசர மஹா குண தேசிகாக்ர்ய கூராதி நாத கொதித்த அகில நைச்ய -நைச்யமே வடிவு எடுத்த ஆழ்வான்
அகதி அபுதஸ் அநந்ய சரண
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர்–என்னும் இவை ஆழ்வான் திரு நாமத்துக்கு பர்யாய பூதங்களாக
யாயிற்று தம்மை நினைத்து இருப்பது
ஹே வந கிரி பதே ஸூந்தர புஜ —
அகதி -உபாய ஸூந்யனாய்
அபுதஸ் –ஞான ஸூந்யனாய்
அநந்ய சரண -தேவரீரைத் தவிர்த்து வேறே புகல் அறியாத வனாய் இருக்கும் அடியேன்
இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமி-இது தன்னையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பி விண்ணப்பம் செய்யா நின்றேன்
இதி -இந்த விஞ்ஞாபநத்தையே மீண்டும் மீண்டும் செய்கிறேன் என்ற காரணத்தினாலேயே
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் த்யக் அஸ்மீ –குற்றவாளனாகிறேன்-துஷ்ட ஸ்வ பாவமுடையவன் ஆகிறேன்-
கலங்கின புத்தி உடையவன் ஆகிறேன்
இதி -என்று திரு உள்ளம் பற்றும்படியாகி
தயாயாஸ் தே பாத்ரம் -தேவரீருடைய திருவருளுக்குக் கொள்கலமாக ஆகிறேன் அத்தனை
தேவரீருடைய தயா குணம் அடியேன் பால் அவசியம் பிரசரிப்பதற்கு விஷய புஷ்கலம் உண்டு
என்று விண்ணப்பம் செய்து தலைக்கட்டுகிறார் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: