ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—100–116–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஆஜ்ஞா தவ அத்ர பவதீ விதிதா த்ரயீ சா
தர்மம் ததுக்தம் அகிலேந வநாத்ரி நாத
அந்யூந மா சரிது மாஸ்திக சிக்ஷணார்த்தம்
அத்ர அவதீர்ய கில ஸூந்தர ராகவோ அபூ -100–

இது முதல் ஏழு ஸ்லோகங்களால் ஸ்ரீ ராம அனுபவம்
வநாத்ரி நாத ஹே ஸூந்தர த்வம் ராகவோ அபூ -பண்டு வேத யுக்த தர்மங்களை எல்லாம் குறை அற
அனுஷ்டிப்பதற்காகவே சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதாரம் செய்து அருளியவரும்
இப்பொழுது அழகராய் சேவை சாதித்து அருளுபவரும் ஒருவரே
அத்ர பவதீ-சா-த்ரயீ -தவ -ஆஜ்ஞா விதிதா –பரம பூஜ்யமான வேதமானது-
சுருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா –என்கிறபடியே தேவரீருடைய திவ்ய ஆஜ்ஜையாக பிரசித்தமானது
தர்மம் ததுக்தம் ஆஸ்திக சிக்ஷணார்த்தம் அகிலேந
அந்யூநம் ஆசரிதும் –வேதோ அகிலோ தர்ம மூலம் –என்கிறபடியே சகலவித தர்மங்களும் மூலம் அன்றோ
ஆச்ரித சிஷார்த்தமாக சகல வித தர்மங்களையும் தாம் குறை அற அனுஷ்டிப்பதற்காக
அத்ர அவதீர்ய ராகவ அபூ –ரகு குல திலகராக ஆனீர்
ராமோ விக்ரஹவான் தர்ம -பித்ரு வாக்ய பரிபாலனம் போன்ற சாமான்ய தர்மங்களையும்
சரணாகத பரித்ராணாம் போன்ற விசேஷ தர்மங்களையும் அனுஷ்டித்துக் காட்டி
ஆஸ்ரிதர்களையும் அனுஷ்டிப்பிக்கவே ஸ்ரீ ராமாவதாரம் என்றதாயிற்று
ஆஸ்திக சிக்ஷணார்த்தம் –சிஷ்யனாய் நின்றது சிஷ்யனாய் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையால்
அத்தை அறிவிக்கைக்காக -ஸ்ரீ முமுஷுப்படி ஸ்ரீ ஸூக்தி அனுசந்தேயம்

——————

வந கிரி பதிரீசிதேதி தேவை த்ரி புரஹர த்ரி புரக்ந சாப பங்காத்
வ்யகணி பரசுராம தர்சி தஸ்ய ஸ்வக தநுஷ பரிமர்ச தர்சனாச் ச –101-

ஆத்மாநம் மானுஷே மன்யே ராமம் தசரதாத்மஜம் –என்று பரத்வத்தை மறைத்து
மனிச்சை ஏறிட்டுக் கொண்டாலும் இரண்டு செயகைகளால் பரத்வம் தேவர்கள் அறியும் படி ஆயிற்றே
த்ரி புர ஹரத்ரி புரக்ந சாப பங்காத் –த்ரி புரம் எரித்த சிவபெருமான் வில் சிறிது முறிபட –
அவன் ஜனக குலத்து அரசன் தேவராதன் இடம் கொடுக்க அது வம்ச பரம்பரையாக ஜனக ராஜன் அளவும் வர –
ஸ்ரீ சீதா பிராட்டி கன்யா சுல்கமாக வைக்க -அத்தை முறித்து தனது பேர் ஆற்றலை விளங்கச் செய்ததாலும்
பரசுராம தர்சி தஸ்ய ஸ்வக தநுஷ பரிமர்ச தர்சனாச் ச –விஸ்வகர்மா செய்த மற்ற ஒரு வில்லை
மஹா விஷ்ணு எடுத்து ரிஸீக முனிவருக்கு கொடுக்க அது அவன் குமரன் ஜமதக்கினி மூலம் பரசுராமன் பெற்று –
அத்தை வாங்கி–ஸ்வ கதநுஷு –தன்னுடைய தன்றோ – நாண் ஏற்றி அவன் தவத்தை கவர்ந்த வ்ருத்தாந்தம்
இந்த தர்சனத்தாலும் ஸ்ரீ ராமனே சர்வேஸ்வரன் என்று அறுதியிடப்பட்டானோ
அவனே ஸ்ரீ அழகராக சேவை சாதித்து அருளுகிறார்

—————–

அநவாப்தமத்ர கில லிப்ஸ்யதே ஜனை
நச லப்த மேததிஹ போக்தும் இஷ்யதே
அநவாப்தமத்ர கில நாஸ்தி ராம தத்
ஜெகதீ த்வயா த்ருண மவைஷி ஸூந்தர –102-

கூனி சொல் கேட்ட கூடியவள் தன் சொல் கொண்டு -குவலயத் துங்க கரியும் புரியும் ராஜ்யமும் எல்லாம் துறந்து
கானகமே மிக விரும்பிப் போனது அவாப்த ஸமஸ்த காமனாகையாலே
ஜகத்தை எல்லாம் த்ருணமாக நினைத்ததால் அன்றோ என்கிறார் இதில்
ராம ஸூந்தர —
ஜனை அத்ர அநவாப்தம் கில லிப்ஸ்யதே –மநுஷ்யர்கள் எல்லாம் தங்களுக்கு கிடைக்காத பொருள்களை
எல்லாம் பெற விரும்புவது இயல்பு
நச லப்த மேததிஹ போக்தும் இஷ்யதே -அனுபவிக்கப் பங்காகக் கிடைத்த வஸ்துவானது விரும்பப் படுகிறது இல்லை –
சித்தமானதில் விருப்பம் உண்டாக ப்ரஸக்தி இல்லாமையால்
ஆக கிடைக்காத வஸ்துவில் ஆசையும் கிடைத்து முடிந்த வஸ்துவில் ஆசை இல்லாமையும் உலக இயல்பு
மேல் எம்பருமான் படி சொல்கிறது
அநவாப்தமத்ர கில நாஸ்தி -அவாப்த ஸமஸ்த காமர் என்று புகழ் பெற்ற தேவரீருக்கு
அநவாப்தம் என்று ஓன்று இல்லை அன்றோ
தத் -ஆகையினாலே
ஜெகதீ த்வயா த்ருணம் அவைஷி -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ங்காதும் சோராமே ஆள்கின்ற
எம்பெருமானாய் உபய விபூதி நாதரான தேவரீராலே இஷுவாகு ராஜ்யமானது மிக அற்பமாக காணப்பட்டது –
அதனாலே அன்றோ நாடு துறந்து காடு சென்றீர் என்கை

———————-

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –103 —

சித்ரகூடம் போன்ற மலைகள் -தண்டகாரண்யம் போன்ற காடுகள் கோதாவரி கங்கை போன்ற நதிகள் –
இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே
இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்
சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும்
தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்
கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன
ஹே ராம ரசஞ்ஜோ த்வம் –ரசிகரான தேவரீர்
சிகரிஷு –சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும்
விபிநேஷு-தே வநேந வானம் கத்வா -என்னும்படியான வனங்களிலும்
தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி -சித்ரகூட மனு ப்ராப்ய பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வா
ரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே
ஆரண்ய வாச ஸூ கத்தை அனுபவித்தீர்
அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி
தத் -இங்கனம் திரு உள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே
இஹ பூய தத் அநு பூதவ் சாபிலாஷஸ் சன் –மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம்
பற்றினவராய்க் கொண்டு
ஸூந்தரீ பூயஸ்–வந கிரீந்த்ரம் –ஸ்ரயஸி –அழகராக திருவாவதரித்து
திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று

————–

உபவந தருஷண்டைர் மண்டிதே கண்ட சைல
பிரணயி பவது தந்தோத்காயி கந்தர்வசித்தே
வந கிரி தட பூமிப் ரஸ்தரே ஸூந்தர த்வம்
பஜஸி நு ம்ருகயாநா நுத்ரவ ஸ்ராந்தி சாந்திம் –104-

கீழ் ஸ்லோக அர்த்தத்தை பரிஷ்கரித்து-தண்டகாரண்ய வாச சிரமங்கள் ஆறுவதைக்காகவே
இங்கு உகந்து நித்யவாஸம் செய்து அருளுகிறீர் -என்கிறார்
ஹே ஸூந்தர -த்வம்
ம்ருகயாநா நுத்ரவ ஸ்ராந்தி சாந்திம் –வந கிரி தட பூமிப் ரஸ்தரே பஜஸி நு–பண்டு பஞ்சவடியில்
மாரீச மாயா மிருகத்தின் பின்னே தொடர்ந்து சென்றதால் உண்டான சிரமத்தின் பரிகாரத்தைத் திருமாலிருஞ்சோலைத்
தாழ்வரையிலே அடைகிறீர் போலும்
அத்தாழ்வரைக்கு இரண்டு விசேஷணங்கள்
உபவந தருஷண்டைர் மண்டிதே –ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் பூம் பொழிலுமுடை
மாலிருஞ்சோலை யதுவே –என்கிறபடியே பூஞ்சோலைகள் நிரம்பப் பெற்றது
கண்ட சைல பிரணயி பவது தந்தோத்காயி கந்தர்வ சித்தே –கந்தர்வர்களும் சித்தர்களும் பாறைகள் மேல் வீற்று இருந்து
எம்பெருமானுடைய திவ்ய சரிதைகளை உரக்கப் பாடுகின்றார்கள்
ஆக இப்பெருமைகள் வாய்ந்த திருமலை தாழ்வரையிலே பண்டு வனவாசத்தில் உண்டான
விடாய் தீரப் பெருகிறீர் போலும் என்கிறார் –

—————-

கூலேப்தே கில தஷிணஸ்ய நிவஸந் துரோத்ராம் பேதிகாந்
தைத்யா நேக பத த்ரினாஸ் சிந இதீயம் கிம் வதந்தீ ஸ்ருதா
தத்ரைவ ஈஸ்வரம் அம்பஸாம் வ்யஜய தாஸ் தஸ்மாத் வநாத்ரீஸ்வர
ஸ்ரீ மந் ஸூந்தர சேது பந்தன முகா க்ரீடாஸ் தவாடம்பரம்—105-

ஹே வநாத்ரீஸ்வர -ஸ்ரீ மந் ஸூந்தர
தஷிணஸ்ய-அப்தே-கூலே-நிவஸந்-த்வம் –தெற்குக் கடற்கரையிலே எழுந்து அருளி இருந்த தேவரீர்
துரோத்ராம் பேதிகாந் தைத்யாந் –மிகவும் தூரஸ்தமான வடபுறக்கடலில் –த்ரும குல்யம் என்கிற தீவில் – வாழ்ந்த
சமுத்திர ராஜனுடைய சத்ருக்களை -தைத்யர்களை –
ஏக பத த்ரினாஸ் அச்சிந இதீயம் கிம் வதந்தீ ஸ்ருதா –ஒரே அம்பினால் தொலைத்து அருளிற்று என்று கேள்விப்பட்டோம்
அது அன்றியும்
தத்ரைவ –தெற்கு கடற்கரையிலே
அம்பஸாம்–ஈஸ்வரம் – வ்யஜய தாஸ் –சமுத்திர ராஜனை வெற்றி கொண்டீர்
தஸ்மாத் –மனுஷ்யத்வே அபி பரத்வம் பொலிய நிற்கும் பெருமை குறையற்று இருக்கையாலே -என்றபடி
அங்கே இருந்து ஒரு பாணத்தையே லங்கைக்குப் போக விட்டு ராவணன் தலையையும் அறுக்கலாமாய் இருக்க
அப்படிச் செய்யாதே
சேது பந்தன முகா தவா க்ரீடாஸ் –குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டினது முதலான
லீலைகளை தேவரீர் செய்து அருளினதானது
ஆடம்பரம்—இராவணனைத் தொலைத்து விட வேண்டும் என்ற திரு உள்ளமாகில் அப்படிச் செய்து இருக்கலாம்
யதி வா ராவணஸ் ஸ்வயம் என்றவருக்கு திரு உள்ளம் அப்படி இருக்காதே –
அவனையும் எப்படியாவது அபிமுகனாக்கிக் கொள்ளவே ஆடம்பரமாகச் செய்ததன்னை
த்வம் தஷிணஸ்ய நிவஸந்–அதிமானுஷ ஸ்தவம் -25- இந்த கேள்வியை எழுப்பி அனுசந்திக்கிறார்
அதுக்கு சமாதானம் இங்கே -சேது பந்தன முகா க்ரீடாஸ் தவாடம்பரம்–என்றதாயிற்று –

———————–

ரகு குல திலக த்வம் ஜாதுசித் யாது தாந
ச் சலம்ருக ம்ருகயாயாம் ஸம்ப்ர சக்த புரா பூ
தது பஜநித கேதச் சேதநா யாத்ய காயன்
மதுகரதரு ஷண்டம் ரஜ்ய சே கிம் வநாத் ரிம் –106-

ஸ்ரீ ராமாவதார அனுபவம் இந்த ஸ்லோகத்துடன் தலைக்கட்டி அருளுகிறார்
கீழே உபவன தரு ஷண்டை-104-ஸ்லோகத்தில் மாயமான் பின் சென்ற ஆயாசம் திரவே இங்குத்தை வாசம் என்றார் –
அந்த ஒரு விடாய் தானோ -ராக்ஷஸ வேட்டையடின விடாய் கனத்து இருக்குமே –
அது தீரவோ இங்குத்தை வாசம் -என்று கேட்க்கிறார் ஆயிற்று
ஹே ரகு குல திலக –பண்டு ஸ்ரீ ராமாவதாரம் செய்து அருளின அழகரே
புரா – ஜாதுசித்-த்வம்- யாது தாந ச் சலம்ருக ம்ருகயாயாம் ஸம்ப்ர சக்த அபூ –முன்னொரு கால் தேவரீர்
ராவணனாதி ராக்ஷஸர்கள் ஆகிய மிருகங்கள் இடையே வேட்டை யாடி விளையாடுவதில் வ்யாபாரித்தீர்
தது பஜநித கேதச் சேதநாய–அந்த வேட்டை ஆடியதால் வந்த சிரமம் தீர
காயன் மதுகரதரு ஷண்டம்-வநாத் ரி- அத்ய -ரஜ்யசே கிம் –பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மது பருக-பெரியாழ்வார் –
படியே வண்டினம் முரலும் சோலைகளை உடைய இத்திருமலையிலே இப்போது உகந்து வர்த்திக்கிறீர் போலும்
யாது தாந ச் சலம்ருக ம்ருக-என்பதற்கு மாரீச மிருக வைத்த வ்ருத்தாந்தம் என்பர் சிலர் -அது பொருத்தம் அன்று –
முன்பே சொல்லிற்றே -இங்கு ஸ்ரீ ராமாவதார அனுபவம் தலைக்கட்டி அருளுகையாலே
ராக்ஷஸ வேட்டையையே மிருக வேட்டை ஆடினால் போலே அருளிச் செய்கிறார் –
இத்தால் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை -என்றபடி அநாயாசேந அழித்தமை சொன்னதாயிற்று

—————-

ஹே ஸூந்தர ஏக தர ஜென்மநி கிருஷ்ண பாவே
த்வே மாதரவ் ச பிதரவ் ச குல அபி த்வே
ஏக க்ஷணா தநு க்ருஹீதவதஸ் பலம் தே
நீலா குலேந சத்ருசீ கில ருக்மிணீ ச –107

கீழே -7 -ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமாவதார அனுபவம்
இது முதல் -10-ஸ்லோகங்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவம் –
அழகருக்கு கண்ணனுக்கும் உள்ள அபேதத்தை திடப்படுத்துகிற படி
இரண்டு மனைவியரையும் பரிஹரிக்கைக்காகவே ஏக க்ஷணத்தில் இரண்டு மாதாக்கள் -இரண்டு பிதாக்கள் இரண்டு குலங்கள்-
என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் இதில்
ஹே ஸூந்தர
ஏக தர ஜென்மநி கிருஷ்ண பாவே –கண்ணனாக ஆவிர்பவித்த ஒரு அவதாரம் தன்னிலே
த்வே மாதரவ் ச பிதரவ் ச த்வே குல அபி ச –தேவகி யசோதை -நந்தகோபர் வஸூ தேவர் -யது குலம் கோபால குலங்கள் –
ஆக எல்லாம் இரண்டாக
ஏக க்ஷணா தநு க்ருஹீதவதஸ் தே பலம் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் என்னும்படி
ஸ்வல்ப காலம் தன்னிலே பரிக்ரஹித்து அருளின தேவரீருக்கு உத்தேச்யம் யாது எனில் -அதை உள்ளபடி அறியப் பெற்றோம் கேளீர்
நீலா குலேந சத்ருசீ கில ருக்மிணீ ச –கோபால குலத்துக்குத் தகுதியாக நப்பின்னைப் பிராட்டியையும் ஷத்ரிய குலத்துக்குத் தகுதியாக
ருக்மிணிப் பிராட்டியையும் பெறுவதற்கு யாமத்தனை
ஆயனாகி ஆயர் மங்கை தோள் விரும்பினாய் –
குல ஆயர் கொழுந்து என்று நம்மாழ்வார் சிறப்பித்து அருளிச் செய்வது திவ்ய மஹிஷி யானதாலே

——————-

த்வம் ஹி ஸூந்தர யதா ஸ்தந்தய
பூதநாஸ்த நமதாஸ் ததா நு கிம்
ஜீர்ணம் ஏவ ஜடரே பயோ விஷம்
துர்ஜரம் வத ததாத்மநா ஸஹ–108-

யசோதா ஸ்தந்தயனாகவும் பூதநா ஸ்தந்தயனாகவும் ஆன அத்புதத்தை அனுபவித்து பேசுகிறார்
ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யமாஸீத் ஜகத் குரோ —
அவன் தன்னையே இதைப்பற்றி கேள்வி கேட்கும் முகத்தால் ஸ்வ அனுபவ ராஸிக்யத்தைக் காட்டி அருளுகிறார் –
ஹே ஸூந்தர
த்வம் யதா ஸ்தந்தய பூதநாஸ்தநம் அதாஸ் –அழகரே பண்டு கண்ண பிரானாகத் திரு அவதரித்த தேவரீர்
ஸ்தந்தய சிசுவாய் எப்போது போதனையின் முலைப்பால் அமுது செய்து அருளிற்றோ
ததா துர்ஜரம் பயோ விஷம் ததாத்மநா -ஸஹ–ஜீர்ணம் ஏவ கிம் வத –அப்போது பிறரால் உண்டு அறுக்க
முடியாத ஸ்தந்ய விஷமானது அவளுடைய ஆவியோடு கூடவே தேவரீருடைய திரு வயிற்றில் ஜீரணமாகி ஒழிந்ததோ-
இத்தைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –
விஷம் முடித்து அல்லது விடாதே -அது உமக்கு ஜீரணமான அளவன்றிக்கே அவள் உயிரைத் தானே முடித்து நின்றதே
இது என் கொல் -சைசவத்திலும் பரத்வம் குலையாத பெருமை பேசப்பட்டது –

—————————-

ஆஸ்ரிதேஷு ஸூலபோ பவந் பவாந் மர்த்யதாம் யதி ஜகாம ஸூந்தர
அஸ்து நாம ததுலூகலே கியத் தாம பத்த இதி கிம் ததாஸ்ருதே –109-

ஸுவ்லப்ய பரம காஷ்டையில் ஈடுபடுகிறார் –
அழகரே கட்கிலியான உமது திரு உருவத்தை -துயரில் மலியும் மனுஷர் பிறவியில் தோன்றிக்
கண் காண வந்து அதுக்கும் மேலே
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும்
அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் -என்றும் சொல்லுகிறபடியும்
கண்ணி நுண் சிறுதாம்பினால் உரலோடு கட்டுண்டு ஏங்கி அழுது கிடந்தது எதற்க்காக
இக்குணத்தை எந்த வகுப்பில் சேர்ப்பது என்கிறார்
ஹே ஸூந்தர -பவாந் ஆஸ்ரிதேஷு ஸூலபோ பவந் மர்த்யதாம் யதி ஜகாம தத் அஸ்து நாம –அழகரே ஆஸ்ரிதர் பக்கல்
எளியராய் -மனுஷ்ய சஜாதீயராய்ப் பிறந்தீர் ஆகில் அது கிடக்கட்டும் –
அதில் விசிகித்சை ஒன்றும் செய்கின்றிலோம்-பின்னை விசிகித்சை உள்ளது எதிலே என்னில்–
ததுலூகலே கியத் தாம பத்த இதி கிம் அருதஸ் –அப்படி மனுஷ்ய யோனியில் பிறந்த காலத்தில்
வெண்ணெய் களவு கண்டு அதற்காக உரலில் சிறு தாம்பினால் கட்டுண்டு கிடந்தது அழுது நின்றாயே-
அது எதற்க்காக -என்று இதிலே யாயிற்று என் போல்வார்க்குப் போர விசிகித்சை உள்ளது-என்கிறார்
இப்படி கேள்வி கேட்க்கும் இவருடைய திரு உள்ளம்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து
இருந்து ஏங்கிய எளிவே–என்று ஆழ்வாரை மோஹிப்பிக்கவே செய்த க்ருத்யம்
க்யத் தாம பத்த –என்றது ஸ்வல்ப தாம பத்து -என்றபடி
தாம பத்தஸ் சந் அருதஸ் –என்னாமல்-தாம பத்த இதி அருதஸ்-என்றது
இவனை ஆய்ச்சியர் கட்டினார் அல்லர்-நீயே கட்டுண்டவனாகச் செய்து கொண்டாய்
உனது குண அதிசயத்தைக் காட்டி அருளவே நீ செய்தவை –

———————-

ஸூந்தாரோரு புஜ நந்த நந்தஸ் த்வம் பவந் ப்ரமர விப்ரமாலக
மந்திரேஷு நவ நீத தல்லஜம் வல்லவீதிய முத வ்யஸூசுர–110-

களவு கண்டது வெண்ணெயை யோ ஆச்சியார் உள்ளத்தையோ -என்று வினவுகிறார்
ஸூந்தாரோரு புஜ த்வம் ப்ரமர விப்ரமாலக நந்த நந்தஸ் பவந் –தேவரீர் வண்டு ஒத்த திருக்குழல் கற்றையை உடைய
நந்தன் மதலையாய்க் கொண்டு
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று -என்றும்
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் வண்டு ஒத்து இந்தக்குழல் -என்றும் போலே இவரும்
மந்திரேஷு நவ நீத தல்லஜம் வ்யஸூசுர–உத வல்லவீதியம் –ஆயர் மனைகளில் புக்கு வெண்ணெயைத் தான் களவு கண்டீரோ
அல்லது ஆய்ச்சியர் உள்ளத்தைத் தான் கொள்ளை கொண்டீரோ
இரண்டையும் கொள்ளை கொண்டேன் என்று அன்றோ அவனது பதில்
நவநீத சோரனாய் இருந்த நிலையிலே கோபி மனோஹரமாயும் இருந்தபடி
கோப க்ருஹேஷு கிம் த்வம் கோபீ மநாம் சி நவநீதம் உதாப்யமோஷீ -ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவ ஸ்லோகமும் இங்கே அனுசந்தேயம்
நவநீத தல்லஜம்–தல்லஜ சப்தம்-ஸ்ரேஷ்ட வாசகம் -கண்ணபிரானால் கைக் கொள்ளப் பெற்ற ஸ்ரேஷ்டம் உண்டே –

———————-

காலி யஸ்ய பணதாம் சிரஸ்து மே சத் கதம்ப சிகரத்வ மேவ வா
வஷ்டி ஜுஷ்ட வந சைல ஸூந்தர த்வத் பாதாப்ஜ யுக மர்பிதம் யயோ–110-

ஏகதா து விநா ராமம் கிருஷ்ணோ பிருந்தா வநம் யயவ் –என்றபடி நம்பி மூத்த பிரான் துணை இல்லாமல்
தனியாக கதம்ப மரத்தின் மேல் ஏறி மடுவில் காளியன் பணைகளின் மேல் குதித்து
நர்த்தனம் செய்ததை அனுபவித்து
காளிய நாகத்தின் மத்தமாகவோ -கதம்ப மரத்தின் உச்சியாகவோ ஆகப்பெற வேணும் என்று
தம்முடைய முடி விரும்புவதாக அருளிச் செய்கிறார் –
ஜுஷ்ட வந சைல ஸூந்தர
மே சிரஸ்து-அடியேனுடைய தலையோ என்றால்
காலி யஸ்ய பணதாம் சத் கதம்ப சிகரத்வ மேவ வா வஷ்டி –காளிய நாகத்தின் படமாய் இருக்கையையோ –
கதம்ப மரத்தின் உச்சியாய் இருக்கையையோ மெச்சுகின்றது -வஷ்ட்டி -விரும்புகிறது
அவற்றில் என்ன ஏற்றம் உண்டு என்னில்
யயோ–த்வத் பாதாப்ஜ யுகம் அர்பிதம் –தேவரீருடைய திருவடித் தாமரை இணையை வைத்து அருள பெற்றவை அன்றோ
அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யூன் கோலப்பாதம் -என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
கதா புந –த்வத் சரணாம்புஜ த்வயம் மதிய மூர்த்தா நாம் அலங்கரிஷ்யதி -என்றும்
பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு அவற்றுக்கு அநாயாச மாகக் கிடைக்கப் பெற்றதே என்று வியந்து பேசின படி

————–

கூஹித ஸ்வ மஹிமாபி ஸூந்தர த்வம் வ்ரஜே கிமிதி சக்ரம் ஆக்ரமீ
சப்த ராத்ர மததாச்ச கிம் கிரிம் ப்ருச்ச தச்ச ஸூஹ்ருத கிம் அக்ருத –111-

ஸுவ்லப்ய ஸுவ்சீல்யங்களைக் காட்டி அருள வந்த இடத்தில் பரத்வமும் பொலியும் படி
அதி மானுஷ சேஷ்டிதங்களை ஊடே வெளியிட்டு அருளியது எதற்க்காக -என்கிறார்
ஸூந்தர த்வம்-கூஹித ஸ்வ மஹிமாபி வ்ரஜே கிமிதி சக்ரம் ஆக்ரமீ –அழகரே தேவரீர் ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தது ஸ்வ கீரை சக்தி விசேஷங்களை எல்லாம் மறைத்து அன்றோ -அப்படி இருந்தும்
கேட்டு அறியாதது கேட்க்கின்றேன் கேசவா -கோவலர் இந்திரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் –என்றும்
ஆயிரம் கண்ணுடை இந்த்ரனார்க்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப்பெய்த யதனை எல்லாம்
போய் இருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்றும் வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த்ர பூஜையைத் தடை செய்து அவனை யுத்தோந் முகனாக ஆக்கிக் கொண்டது என்னோ
சப்த ராத்ரம் அததாச்ச கிம் கிரிம் ப்ருச்ச–வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து
விடுக்கப்பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை -என்றும்
செப்பாடுடைய திருமாலவன் தன் செந்தாமரைக்கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள்
காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை -என்றும் சொல்லுகிறபடியே
கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திரு யுகிர் நொந்துமில -என்னும் படியாக
ஏழு நாள் வாடாதே வதங்காதே மலையைத் தாங்கி நின்றது என்னோ
ப்ருச்சதச் ச ஸூஹ்ருத கிம் அக்ருத –மலை எடுத்து நின்ற அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆயர்கள் –
நீ தேவனோ தானவனா யக்ஷனா கந்தர்வனா என்று கேட்க -நீ சீற்றம் கொண்டது ஏனோ

இதில் மூன்றுகேள்விகள்
தேவதாந்த்ர சமாராதனையைத் தடுத்தது ஏன்-தான் வளருகின்ற ஊரில் தேவதாந்தரத்துக்கு ஆராதனை எதற்கு -விடை
இந்திரன் பொறுக்க ஒண்ணாத தீங்கை விளைக்க அவனை தலை எரித்து
பொகடாமல் ஏழு நாள்கள் மலையைக் குடையாக எடுத்தது ஏன்
அவன் உணவைக் கொண்ட நாம் உயிரையும் கொள்ள வேணுமோ -மழையே ரக்ஷகம் என்ற வார்த்தையை மெய்ப்பிக்க வேணுமே
ஆந்ரு சம்சயம் கொண்டாடி அவன் கை சலித்தவாறே தானே ஓய்ந்து நிற்கிறான் என்று அன்றோ செய்தாய்
மூன்றாவது கேள்வி ஆயர்கள் கேட்டதற்கு சீற்றம் கொண்டது பரத்வத்திலே வெறுப்புக் கொண்டு
மனுஷ்ய சஜாதீயனாய் -அதிலும் கடை கேட்ட இடையனாய் ஆசையுடன் பிறந்து இருக்க வேறாக சங்கித்து கேட்டது –
தேவத்வமும் நிந்தையானவனுக்கு –என்றபடி நிந்தா ரூபமாக தோற்றுகையாலே சீற்றம் கொண்டான்
ஆக மூன்று கேள்விகளாலும் சமாதானங்களாலும் விலக்ஷண குண அனுபவம் செய்து அருளினார்

—————–

ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ
பிருந்தா வநே விஹரதஸ் தவ வல்லவீ பி
வேணு த்வனி சரவண தஸ் தருபிஸ் ததா வை
சக்ரா வபிர் ஜதுவிலாயமஹோ விலில் யே –113-

வேணு கானத்தில் மலைகளும் மரங்களும் கூட உருகின படியைப் பேசி அனுபவிக்கிறார் இதில்
ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ–நந்த கோப ஸூநு வாகத் திரு வவதரித்த அழகரே —
அழகரே என்ற திரு நாமம் படைத்தவரே
தத் பிருந்தா வநே வல்லவீ பிஸ் ஸஹ விஹரதஸ் தவ -முன்பு பிருந்தாவனத்தில் ஆயர் மங்கைகளோடே
லீலா ரசம் அனுபவியா நின்ற தேவரீருடைய
வேணு த்வனி சரவண தஸ் –குழலூதும் இசையைக் கேட்டதனாலே
ததா வை சக்ரா வபிர்-தருபிஸ்- ஜதுவிலாயம் –விலில் யே — அஹோ –மலைகளும் மரங்களும்
தீயோடு உடன் சேர் மெழுகு உருகுமா போலே உருகின படி என்னே
நாவலம் பெரிய தீவினில் –மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா எழுத்து சித்ரங்கள் போல நின்றனவே -என்றும்
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பாசுரங்கள் இங்கே அனுசந்தேயங்கள்
சைல உக் நிச்ச ஜலாம் பபூவ—தொடங்கி உள்ள ஸ்லோகம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -அனுசந்தேயம்

————-

காயம் காயம் வந கிரி பதே த்வம் ஹி பிருந்தா வநாந்த
கோபீ சங்கைர் விஹரசி யதா ஸூந்தர வ்யூட பாஹோ
ராசாரம்போத்சவ பஹு வித ப்ரேம ஸீமந்தி நீநாம்
சேதச் சேதஸ் தவ ச து ததா காம் தசாம் அந்வ பூதாம்–114-

வேணு கானத்தில் அசேதனங்கள் பட்ட பாடு கிடக்கட்டும் –
அவனுடைய ஹ்ருதயமும் கோபிகளுடைய ஹ்ருதயங்களும் பட்ட பாடு அவனது திரு உள்ளத்துக்கே தெரியும்
என்று தெளிந்து அவன் தன்னையே கேட்டு அருளுகிறார் இதில் –
ஹே-வந கிரி பதே -ஸூந்தர வ்யூட பாஹோ
த்வம் பிருந்தா வநாந்த -காயம் காயம் -கோபீ சங்கைர் ஸஹ -யதா – விஹரசி –தேவரீர் பிருந்தா வனத்தின் உள்ளே
வேணு கானத்தை அடுத்து அடுத்து செய்து கோபிகள் திரளோடே லீலா ரசம் கொண்டாடின காலத்திலே
ராசாரம்போத்சவ பஹு வித ப்ரேம ஸீமந்தி நீநாம் சேதச் -தவ ச-சேதஸ் து ததா காம் தசாம் அந்வ பூதாம்–
ராசாரம்போத்சவம் ஆவது–ராஸக்ரீடை -அதாவது குரவைக்கூத்து
அங்கநாம் அங்கநாம் அந்தரே மாதவ மாதவம் மாதவஞ்ச அந்தரேன அங்க நா–என்கிறபடி
பல வடிவு எடுத்துக் கொண்டு ராஸக்ரீடா மண்டலத்தின் நடுவே இருந்து ஆடின கூத்து –
இத்தமா கல்பிதே மண்டல மத்யகே சஞ்சகவ் வேணு நா தேவகி நந்தன –அற்புதமாக வேணு கானம் செய்ய
ஆய்ச்சிகளின் ப்ரேமம் பேச்சுக்கு நிலம் அன்றே –
அவர்கள் திரு உள்ளமும் கண்ணபிரான் திரு உள்ளமும் எந்த நிலையில் இருக்கும் என்று
அவன் தன்னையே கேட்க்கும் அத்தனை அன்றோ
இங்கனம் அழகர் இடம் கேட்ட கேள்விக்கு –
இப்போது நீரும் நாமும் கலந்து பரிமாறும் பொழுது நம் உள்ளம் இருக்கும் நிலையே அப்போதும்
என்கிற சமாதானம் உண்டே –

————–

இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம் ரம்யம் அத்புதம் அதி பிரியங்கரம்
தேந கம்சமுக கீட சாசனம் ஸூந்தர அல்பகம் அபி பிரசஸ்யதே–115-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் -தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்யப் பூடுகள் அடங்க உழக்கினதும்
வார்கெடா வருவி யானை மா மலையின் மருப்பின் இணைக் குவது இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன்
உயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று காஞ்சனை தகர்த்ததும் முதலான துஷ்க்ருதா விநாசக சரிதைகள் –
எம்பெருமானுக்கு கிருமி கீட நிரசன ப்ராயமே –
யா கம்ச முக்கிய அந்ரூப கீட நிபர்ஹண உத்தா சா நிர்ஜித த்ரி ஜெகதஸ் தவ நைவ கீர்த்தி –அதிமானுஷ ஸ்தவம்
இருந்தும் ஸ்தோதாக்கள் இவற்றை புகழ்ந்து பேசுவது –
செயல் சிறிது பெரிதோ என்று கொள்ளாமல் அவன் செய்தது என்பதாலேயே-சகல சரிதைகளையும் சம ரீதியாகவே பேசுவார் –
என்னும் அர்த்தத்தை இங்கே வெளியிட்டு அருளுகிறார்
ஹே ஸூந்தர
இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம் –இங்கிதமோ வீக்ஷிதமோ எதுவாகிலுமாம்–தேவரீருடையதாக இருக்கும்
அத்தனையே வேண்டுவது
அபிப்ராய அனுரூபமான சேஷ்டிதைக்கு இங்கிதம் என்று பெயர் –
கண் இமைத்தலுக்கு நிமிஷிதம் என்று பெயர் –
எங்களுக்கு சரித்திர பர்யந்தம் வேண்டா -இங்கித நிமிஷதங்களே போதும் உருகைக்கு-என்கைக்காக சொன்னபடி
ரம்யம் அத்புதம் அதி பிரியங்கரம் –தேவரீருடையது எல்லாம் ரமணீயமும் அத்புதமாயும் பரம பாக்யமுமாயும் இருக்குமே
தேந -இக்காரணம் பற்றியே
கம்சமுக கீட சாசனம் அல்பகம் அபி பிரசஸ்யதே–கம்சன் முதலான புழுக்களைத் தண்டித்தவை
சிறுச் சேவ கமாய் இருந்தாலும் குலாவப்படுகிறது
அது இது உது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும்–திருவாய் -5-10-2-விவரணம் இந்த ஸ்லோகம் –

—————–

வாராணஸீ தஹந பவுண்டரக பவ்ம பங்க
கல்பத்ருமா ஹரண சங்கர ஜ்ரும்பணாத்யா
அந்யாச் ச பாரத பல்க்ரத நாதயஸ் தே
க்ரீடாஸ் ஸூ ஸூந்தர புஜ ஸ்வரணாம்ரு தாநி–116-

கீழே அல்பகமபி என்றாரே -அல்பம் இன்ரிக்கே அநல்பம் என்று மதிக்கக் கூடிய சேஷ்டிதங்களும் உண்டே
அவற்றை எடுத்து இறைத்து இவை எல்லாம் கர்ண அம்ருதமான சரித்திரங்கள் என்கிறார் இதில்
வாராணஸீ தஹந பவுண்டரக பங்க–பவுண்டரக பங்கம் முன்பும் -வாராணஸீ தஹநம் பின்னும் நடந்தவை
பவ்ம பங்க கல்பத்ருமா ஹரண –பவ்ம-என்று நரகாசூரன் –
சக்ராயுதத்தால் அவன் மந்திரி முரனையும் அவனையும் பங்கப்படுத்தியது
கல்பத்ருமா ஹரண-ரி சத்யபாமா தேவிக்காக ஸ்ரீ துவாரகைக்கு கொண்டு வந்த வ்ருத்தாந்தம்
சங்கர ஜ்ரும்பணாத்யா –பாணாசூர யுத்தத்தில் ஜ்ரும்பகாஸ்த்ரம் பிரயோகம் பண்ணி
சிவபிரானை கொட்டாவி வீட்டுக் கிடைக்கும்படி செய்த சேஷ்டிதம்
அந்யாச் ச பாரத பல்க்ரத நாதயஸ் தே க்ரீடாஸ் –மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்று செய்த லீலைகளை எல்லாம்
ஸ்வரணாம்ரு தாநி–தேவரீர் திறத்திலே விஸ்மயப்பட தக்கவை அல்லவே யாகிலும்
ஒவ் ஒரு செயலும் செவிக்கு இன்பமாய் இருப்பது அன்றோ
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றிப்
புவியின் மேல் பொன்னெடும் சக்கரத்து உன்னையே ஒய்வின்றி ஆதரிக்கும் என் ஆவியே –திருவாய் மொழி
பாசுரம் இங்கே அனுசந்தேயம்

ஆக இவ்வளவும் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவமாய் தலைக்கட்டிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: