ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—84–99–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

தேவஸ்ய ஸூந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து
ஹை சீலவத்த்வம் அதவா ஆஸ்ரித வத்சலத்வம்
ஐசஸ்வபாம் அஜஹத் பிரிஹ் அவதாரைஸ்
ய அலஞ்ச கார ஜகத் ஆஸ்ரித துல்ய தர்மா –84-

இனி மத்ஸ்ய கூர்மாதி விபவ அவதாரங்களை விரிவாக அனுபவிக்கத் திரு உள்ளம் பற்றி
அதற்கு அவதரிணிகை போலே ஐந்தாறு ஸ்லோகங்கள் அருளிச் செய்கிறார்
அஜோபிசந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி சந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் ஆத்ம மாயயா–என்றபடி
அஜஹத் ஸ்வ பாவனாய்க் கொண்டும் மனுஜய சஜாதீயனாய்க் கொண்டும் விபவ அவதாரங்கள் செய்து அருளினது
ஸுவ்சீல்ய ப்ரயுக்தமோ -அல்லது ஆஸ்ரித வாத்சல்ய நிபந்தநமோ-என்கிறார் இதில்
ய ஸூந்தர புஜஸ்ய–ஐசஸ்வபாம் அஜஹத் பிரிஹ் அவதாரைஸ்-இஹ -ஆஸ்ரித துல்ய தர்மா –சந் ஜகத் அலஞ்சகார–
யாவர் ஒரு அழகர் சர்வேஸ்வரத்துக்கு ஏற்ப ஸ்வரூப ரூப குண விபவாதிகளை-
அல்லது ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித் வாதிகளை – விடாதே இருக்கின்ற திரு அவதாரங்களினால்
இந்நிலத்திலே அடியார்களான மனுஷ்யாதிகளோடு துல்ய சீலராய்க் கொண்டு
இந்த ஜகத்தை அலங்கரித்து அருளினாரோ
தஸ்ய வநாத்ரி பர்த்து ஸூந்தர புஜஸ்ய தேவஸ்ய சீலவத்த்வம் அதவா ஆஸ்ரித வத்சலத்வம் ஹை –அழகருடைய
சீல குணமோ அல்லது ஆஸ்ரித வாத்சல்ய குணமோ ஆச்சர்யமானது –

—————

சிம்ஹாத்ரி நாத தவ வாங் மனஸ அதி வ்ருத்தம்
ரூபம் தவ அதீந்திரியம் உதாஹ ரஹஸ்ய வாணீ
ஏவஞ்ச ந த்வம் இஹ சேத் சமவாதரிஷ்ய
த்வத் ஞான பக்தி விதயம் அத்ய முத்தா அபவிஷ்யத் –85-

சிம்ஹாத்ரி நாத
ரஹஸ்ய வாணீ -வாங் மனஸ அதி வ்ருத்தம் தவ ரூபம் அதீந்திரியம் உதாஹ–உபநிஷத்தானது தேவரீருடைய
அ வாங் மானஸ கோசரமான திரு உருவத்தை அதீந்த்ரியம் என்று ஓதி வைத்ததோ –
கண்ணால் காண முடியாதது என்றதோ
ஏவஞ்ச த்வம் இஹ ந சமவாதரிஷ்ய சேத்-இங்கனே உபநிஷத் ஓதி இருப்பதற்கு ஏற்ப தேவரீரும்
இந்நிலை உலகில் விபவ அவதாரங்களை செய்து அருளாமலே இருந்து விட்டீர்கள் ஆகில் –
ஒருவர் கண்ணுக்கும் இலக்காகது இருந்தீராகில்
த்வத் ஞான பக்தி விதயம் அத்ய முத்தா அபவிஷ்யத் –சாஸ்திரங்களில் விகிதங்களாய் இருக்கும்
விதிகளுக்கு ஒரு இலக்கு கிடையாமல் போனால் அந்த சாஸ்திரங்கள் நிரார்த்தங்கள் ஆகுமே
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மாமை ஆஜ்ஞா -என்கிற திருமுகப் பாசுரமும் பழுதேயாகுமே
அங்கன் ஆகாமைக்கு ஆயிற்று திருவவதாரங்கள் செய்து அருளினது

————–

யோ பக்தா பவத் ஏக போக மநசோ அநந்யத்ம சஞ்சீவநா
தத் சம்ஸ்லேஷண தத் விரோதி நிதநாத் யர்த்தம் வநாத்ரீஸ்வர
மத்யேண்டம் யதவா தரஸ் ஸூர நராத்யாகார திவ்யாக்ருதி
தேநைவ த்ரி தசைர் நரைச் ச ஸூ கரம் ஸ்வ பிரார்த்தித பிரார்த்தநம் –86-

விபவ அவதாரங்கள் செய்து அருளின காரணத்தையும் -அவதாரங்களால் விளைந்த ஸுவ்கர்த்தையும்
அருளிச் செய்கிறார் இதில்
ஹி வநாத்ரீஸ்வர
அநந்யத்ம சஞ்சீவநா பவத் ஏக போக மநசோ யே பக்தா–அநந்ய உபாயர்களும் அநந்ய உபேயர்களுமான
யாவர் சில பக்தர் உளரோ என்றபடி –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன் -என்றும் அனுசந்தித்து இருக்குமவர்களான பக்தர்கள் சிலர் உண்டே
தத் சம்ஸ்லேஷண தத் விரோதி நிதநாத் யர்த்தம் –அப்படிப்பட்ட பரம பக்தர்களோடு ஸம்ஸ்லேஷிக்கவும் –
அவர்களுடைய விரோதிகளை நிரசிக்கவும்
ஆதி சப்தத்தால் தர்ம ஸம்ஸ்தாபாநார்த்தம்
பரித்ராணாயா சாது நாம் –அங்கு உள்ள பரித்ராணாயா -இங்கு சம்ஸ்லேஷம் —
சாமான்யமான பரித்ராணாம் சங்கல்ப மாத்திரத்தாலே ஆகுமே -அதற்காக வந்து பிறக்க வேண்டாவே –
ஸ்ரீ கீதா பாஷ்யம் அந்தரதிகரணம் இரண்டிலும் எம்பெருமானார் பற்றின திரு உள்ளம் இதுவே
ஸூர நராத்யாகார திவ்யாக்ருதி –மத்யேண்டம் யத் அவாதரஸ்–தேவாதி சஜாதீயராய் -திவ்யமான உருவத்தைக் கொண்டு
அண்டங்களின் இடையே அவதரித்தீர் என்பது யாது ஓன்று உண்டு
தேநைவ –இப்படி அவதரித்து அருளியதனாலேயே –
த்ரி தசைர் நரைச் ச –தேவர்களாலும் மநுஷ்யர்களாலும்
ஸ்வ பிரார்த்தித பிரார்த்தநம் –ஸூ கரம் –தம் தமக்கு வேண்டியவற்றை வேண்டிக் கொள்வது எளிதாகவே
கண்ணுக்கு புலப்பட்டு நிற்கவே அன்றோ வணங்கி வழிபட்டு யாசிக்க அவகாசம் உண்டாயிற்று
ஸ்வ அபி லஷித வஸ்து -பிரார்த்தனம் -என்றதாயிற்று –

——————–

ஸ்ரீ மத் மஹா வந கிரீச விசீதயோர்ஸ் தே
மத்யே து விஷ்ணுரிதி ய பிரதம அவதார
தேநைவ சேத தவ மஹிம்நா ஜனா கில அந்தாத்
த்வந் மத்ஸ்ய பாவம் அவகம்ய கதம் பவேயு —87-

விபவ அவதாரம் பிரசுத்துதமாகவே இதில் விவஷிதமான விஷயங்களை எல்லாம் அடைவே அருளிச் செய்கிறார்
மத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதாரம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர சதகம் -51-ஸ்லோகம் இந்த ஸ்லோக விவரணம்
ஸ்ரீ மத் மஹா வந கிரீச –இரண்டும் சம்போதானம் -ஒன்றே-ஸ்ரீ மத்வத்தை திருமலைக்கு அழகருக்கு அன்வயித்து – என்றுமாம்
விசீதயோர்ஸ் மத்யே து விஷ்ணுரிதி தே ய பிரதம அவதார –பிரமன் சிவன் இவர்களின் இடையே
தேவரீர் விஷ்ணு என்று முதல் முதலிலே செய்த திரு அவதாரம் யாது ஓன்று உண்டு
தேநைவ தவ மஹிம்நா ஜனாந் அந்தாத் சேத் -அது கொண்டு ஜனங்கள் தேவரீருடைய பெருமையில்
குருடர்களாக ஆவார்கள் ஆனால் -தேவரீருடைய மஹிமையை உள்ளபடியே உணராதே
விபரீதமாககே கொள்வார்களாகில்
த்வந் மத்ஸ்ய பாவம் அவகம்ய கதம் பவேயு —தேவரீர் மத்ஸ்ய அவதாரம் செய்து அருளின படியை
அறிந்து என்னாவார்களோ –
தேவயானில் அவதரித்து இருந்தாலும் ப்ரபாவத்தை பிரமித்து இருக்க நீச யோனியில் ஜெனித்தது கொண்டு
அதிகமாக பிரமிப்பார்கள் அன்றோ என்றபடி
தவான் மத்ஸ்ய பாவம் -மர்த்ய பாவம் -பாட பேதங்கள்
நல்லரன் நாரணன் நான்முகனுக்கு –பெரிய திருமொழி -2-9-1-
பிரஹ்மேஸ மத்ய கணநா –அதி மானுஷ ஸ்தவம்
இவர்களோடு ஓக்க நினைப்பது அநுசிதம் அன்றோ

——————-

ஹே தேவ ஸூந்தர புஜ இஹ அண்ட மத்யே
ஸுவ்லப்யதோ விசத்ருசம் சரிதம் மஹிம்ந
அங்கீ கரோஷி யதி தத்ர ஸூரரைர் அமீபி
சாம்யாந் நிகர்ஷ பரிபாலநம் ஏவ சாது—88–

புருஷோத்தமனை இவர்களுக்கு சமமாக எண்ணுவதில் காட்டில் தாழ்வாக எண்ணுவதே நலம் –
ஷூத்ரர்களோடே சமமாக நினைப்பதும் தாழ்வாக நினைப்பதும் துல்யமே -என்பது கருத்து
ஹே ஸூந்தர புஜ -தேவ-
இஹ அண்ட மத்யே -இந்த அண்ட மத்யத்திலே திரு அவதரித்து
மஹிம்ந–விசத்ருசம்- சரிதம்-அங்கீ கரோஷி யதி-பரத்வத்துக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்
நிலைமை ஏற்றுக் கொள்ளும் அளவில்
சாம்யாத் நிகர்ஷ பரிபாலநம் ஏவ சாது -சாம்யா பிரதிபத்தி கொள்ளுமத்தில் காட்டிலும்
அபகர்ஷ பிரதிபத்தி கொள்ளுமதே நன்றாம்
அபகர்ஷ பிரதிபத்தி எப்படி அவிவிவேக க்ருத்யமோ அப்படியே
சாம்யா பிரதிபத்தியும் அவிவிவேகம் -என்றதாயிற்று
ப்ரஹ்மாதி இடையில் அவதரித்து அவர்களுக்கு சாம்யம் சொல்லும்படி பிரமிப்பதில் காட்டில்
திர்யக்க்காதிகளின் இடையில் அவதரித்து அவர்களுக்கு சாம்யம் சொல்லும் படி இருப்பதே மேல் -என்றுமாம்

———–

இஹ அவதீர்ணஸ்ய வநாத்ரி நாத
நீ கூ ஹத ஸ்வம் மஹிமாநம் ஐஸ்வரம்
உமாபதே கிம் விஜய பிரியங்கர
பிரியங்கரா வா இந்த்ரஜிதஸ்த்ர பந்த நா –89-

அவதாரங்களில் எம்பெருமானுக்கு அபகர்ஷம் நினைக்கும்படியாக சில சரித்திரங்கள் உண்டே
தனது பெருமையை மறைத்துக் காட்ட விலக்ஷண சங்கல்ப விசேஷணத்தாலேயான அந்தச் சரித்ரங்களைக் கொண்டே
அந்யதா பிரதிபத்தி கொள்ளலாகாது என்கிற தாத்பர்யத்தை திரு உள்ளத்திலே கொண்டு
எம்பெருமானையே கேள்வி கிடக்கிறார் இதில்
ஹே வநாத்ரி நாத ஐஸ்வரம்-ஸ்வம் மஹிமாநம்-நீ கூ ஹத-இஹ அவதீர்ணஸ்ய தே –ஸர்வேச்வரத்வ நிபந்தமாய்
ஸ்வதஸ் ஸித்தமான பெருமையை மறைத்துக் கொண்டு இந்த லீலா விபூதியில்
அவதாரங்களைச் செய்து அருளா நின்ற தேவரீருக்கு
உமாபதே விஜய பிரியங்கர கிம்-இந்த்ரஜிதஸ்த்ர பந்த நா –பிரியங்கரா வா-பாணாசூர யுத்தத்தில் சிவனைப்
பங்கப்படுத்தின செயல் திரு உள்ளத்துக்கு உகப்பானதோ அல்லது
இந்திரஜித்தின் மாயா அஸ்திரத்தால் கட்டுண்டு கிடந்தது–ஸ்ரீ ராமாயணம் உத்தர காண்டம் -45-சர்க்கத்தில் -உள்ள
வ்ருத்தாந்தம் – திரு உள்ளத்துக்கு உகப்பானதோ -என்பர் சமஸ்க்ருத வ்யாக்யாதா
உமாபதே விஜய-என்பதற்கு உமாபதியான சிவனை தோற்ப்பித்தது -என்பதை விட
உமாபதியான சிவன் வெற்றி அடையும்படி செய்தது என்ற பொருளே சிறக்கும்
நீ கூ ஹத ஸ்வம் மஹிமாநம் ஐஸ்வரம் –என்று மேன்மையை மறைத்துக் கொண்டு அவதாரம் செய்து
அருளின படியை அன்றோ இங்கு பிரஸ்தாபம்
எம்பெருமான் சிவன் இடம் புத்ர வரம் கேட்பது முதலான அபதானங்களில் சிவனுக்கு
வெற்றி சொல்லலாம் படி அன்றோ உள்ளது
கள்வா எம்மையும் ஏழு உலகையும் நின்னுள்ளே தோற்றிய இறைவா என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே –திருவாய் -2-2-1-

——————–

புச்சோத் புச்சந மூர்ச்சந உத்ததிதுத வ்யாவ்ருத்தி தாவர்த்தவத்
சம்வர்த்தவ அர்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதே
ஸிம்ஹாத்ரீச ந வைபவம் தவ கதம் ஸ்வா லஷ்யம் அலஷ்யதே
பத்மா ஷஸ்ய ஜூ குஷதோபி விபவம் லஷ்மிதா அதோ ஷஜ–90-

எம்பெருமான் பரத்வம் மறைத்துக் கொள்ள நினைத்தாலும் மறைக்க உண்ணாமல் வெளிப்படும் இடங்கள் உண்டே
இது தொடக்கி மத்யாதி அவதாரங்களை அடைவே அனுபவிக்கிறார் -மத்ஸ்யாக்ருதியை அத்புதமாக வர்ணிக்கிறார்
ஹே ஸிம்ஹாத்ரீச–
லஷ்மிதா அதோ ஷஜ-
புச்சோத் புச்சந மூர்ச்சந உத்ததிதுத வ்யாவ்ருத்தி தாவர்த்தவத்
சம்வர்த்தவ அர்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதேஸ் தவ –மீனாய் அவதரித்த போது–
வாலை உயரத் தூக்குவது -குறுக்கே பரப்புவது -ஆகிய இச்செயல்களினால்
நடுக்கமுற்றதாகச் செய்யப்பட்டதும்
சுழற்சியை உடையதாய்ச் செய்யப்பட்டதுமான பிரளய ஆர்ணவத்தின் நீர் வெள்ளத்திலே புரளா நின்ற
திவ்ய மத்ஸ்யாக்ருதியைக் கொண்ட தேவரீருடைய
ஆவர்த்தவத்–என்றது -நீர்ச் சுழிகளை உடைய என்றபடி -இது ஸ்வபாவிக விசேஷணம்
சாமான்ய மீன் உருவம் இல்லையே -அப்ராக்ருத அதி விலக்ஷண மத்ஸ்ய விக்ரஹத்தைக் கொண்ட தேவரீருடைய
ஸ்வா லஷ்யம் – வைபவம் கதம் ந அலஷ்யதே -நன்கு காணக்கூடிய வைபவம் எங்கனே காண முடியாமல் போகும்
விபவம்-ஜூ குஷதோபி-பத்மா ஷஸ்ய -தவ -என்று கீழோடே அன்வயம் –
தேவரீர் பெருமையை மறைத்துக் கொள்ள வேணும் என்று தேவரீர் விரும்பின போதிலும் -என்று தாத்பர்யம்
இங்கு -பத்மா ஷஸ்ய-சாபிப்ராயம் -செந்தாமரைக் கண்ணரான தேவரீர் அவதாரத்தில் அக்கண் அழகை
மறைத்துக் கொள்ள முடியுமாகில் மற்றுள்ள பெருமைகளையும் மறைத்துக் கொள்ள முடியும் என்று காட்டின படி
பீஷ்ம த்ரோண வதிக்ரம்ய மாஞ்சைவ மது ஸூதந–கிமர்த்தம் புக்தம் வ்ருஷல போஜனம் -என்று
அதி ஷேபிக்க வந்த துர்யோதனும் -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ -என்று பரவசமாகச் சொல்லும்படி ஆயிற்றே

———————

சா சலா வட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜல விவர்த்தித ஷயே
ச்ருங்க சங்கமித நவ்ர் மநோரபூ ர் அக்ர தோண்டஜ வபுர் ஹி ஸூந்தர -91-

க்ருதமாலா நதி -சத்யவ்ரதர் -ஏழு நாட்களுக்குப் பின் பிரளயம் -அண்டகடாஹத்து அளவும் துள்ளி விளையாட –
பிரளய ஆபத்தில் இருந்து பிரஜைகளை வேதத்தையும் ரஷித்து அருளின சரித்திரம்
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் அனுபவம்
ஹே ஸூந்தர –
ஷயே-பிரளய காலத்திலே
அண்டஜவபுஸ் சந் –மத்ஸ்ய திருமேனியை உடையராய்க் கொண்டு
சா சலா வட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜல விவர்த்தித –அமர கோசாப்படி -அசலா என்று பூமிக்கு வாசகம்
அவடம் -என்பது பள்ளம்
தடாகம் என்பது ஏரி
தீர்க்கிகா -என்பது நடை வாவி
ஜாஹ்நவீ–என்பது கங்கை -இவற்றினுடைய தீர்த்தத்தினால் வளரச் செய்யப்பட்டவராய் -என்றபடி –
முதலிலே பூமியிலே விட -பின்பு பள்ளத்தில் விட -முடிவிலே கடலிலே விட்ட வருந்த்தாந்தம் உண்டே
ஜாஹ்நவி ஜலதி வர்த்தித -பாடம் திரிந்து ஜலவி வர்த்தித -என்று திரிந்து இருக்கும் என்பர்
மநோ-அக்ர தோ -ச்ருங்க சங்கமித நவ்ர் அபூ ர் –சத்யவ்ரதரே மனு என்னப்படுகிறார் இங்கு –
அவர் முன்னிலையில் சிரசில் தோன்றிய கொம்பிலே கட்டப்பட்ட படகை உடையீர் ஆனீர் என்றபடி –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில் –மீந தநுஸ் த்வம் நாவி நிதாய ஸ்திர சர பரிகரம் அநுமநு பகவன்
இத்யாதி ஸ்லோகமும் அனுசந்தேயம்

———————-

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-

நிலையிடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை என்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை இறைஞ்சு என் மனனே –பெரிய திருமொழி
பாசுரத்தில் -பொருள் ஒற்றுமை -வ்ருத்த பங்கி -பாதம் தோறும் -23- அக்ஷரங்கள் கொண்டது இந்த ஸ்லோகம் –

ஸ்வ க்ருபயா –தன்னுடைய இயற்க்கை இன்னருளாலே

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –
பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –
அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் –
நாதன் அற்றவர்களாய் –
புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும்
நாகிகளுக்கு விசேஷணங்கள்

சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒருபதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –
முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –

————-

ஸ்வ ப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி பிரமண கரணை கிஞ்ச பணிந
விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வ்யதி விதுத துக்தாப்தி சலிதை
அவிஷ் பந்தோ நந்தந் விகஸதர விந்தேஷண ருசிர்
புராபூஸ் சிம்ஹாத்ரே ப்ரியதம ஹரே கச்சப வபுஸ் –93-

ஸ்ரீ கூர்மாவதார வைபவ அனுபவம்
ஹே சிம்ஹாத்ரே ப்ரியதம ஹரே –திருமாலிருஞ்சோலை மலைக்கு அன்பரான அழகரே
புரா-பண்டு ஒரு காலத்தில் -தேவர்களுக்கு அமுதம் அளிக்கக் கடல் கடைந்த காலத்தில் -என்றபடி –
ஸ்வ ப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி பிரமண கரணை –தம்முடைய முதுகின் மீது முந்துற முன்னம் வந்து நின்ற
மந்தர மலையைச் சுழற்றினதாலும்
ப்ரஷ்டாத்ரி-சிறந்த மலை என்று மந்த்ர மலையைச் சொல்லிற்றாகும்
கிஞ்ச பணிந விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வ்யதி விதுத துக்தாப்தி சலிதை –மந்த்ர மலையை மத்தாக நாட்டிச் சுழன்ற
அளவு அன்றிக்கே-வாசுகி நாகத்தைக் கடை கயிறாகப் பூட்டி இடம் வலம் கொள்ள இழுப்பதினாலே
மிகவும் அசைத்தல் உற்ற திருப் பாற் கடலின் அசைவினாலும்
அவிஷ் பந்தோ –தான் சிறிதும் அசைதல் அற்று
நந்தந் –ஆஸ்ரிதர்களான தேவர்கள் கார்யம் தலைக்கட்டப் பெறுகிறது என்று திரு உள்ளம் உகந்து
விகஸதர விந்தேஷண ருசிர் -அப்போது அலர்ந்த செந்தாமரை போன்ற திருக் கண் அழகை உடைய
கச்சப வபுஸ் அபூஸ் –ஆமை வடிவை உடையீர் ஆனீர் -தம் உடலைப் பேணாமல்
ப்ரணத ஜன மனோ ரத பரிபூர்ணத்தையே விரதமாகக் கொண்டவர் என்கிற
குண அதிசயம் அனுபவிக்கப் பட்டதாயிற்று –

———————–

ஜகத் ப்ரலீ நம் புநருத்தி தீர்ஷத
ஸிம்ஹ ஷிதிஷிந் நிலயஸ்த ஸூந்தர
புரா வராஹஸ்ய தவேய முர்வரா
தம்ஷ்ட் ராஹ்வய இந்தோ கில லஷ்மி லஷிதா –94-

திவ்ய ஸ்ரீ வராஹ மூர்த்தி அனுபவம் -கோலா வராஹ திருமேனி பெருமையை யாவரும்
ஒரே சமத்கார வகையிலே பேசி அனுபவிப்பார்கள்
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் –என்றும்
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு ஏழு உடன் உடனே மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை
யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு பால் அடங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது –என்றும் திருமங்கை ஆழ்வார் அனுபவம்
இங்கு ஆழ்வானுடைய விலக்ஷணமான உல்லோகம் காணீர்
ஸிம்ஹ ஷிதிஷிந் நிலயஸ்த ஸூந்தர -சிம்ஹாத்ரியான திருமாலிருஞ்சோலை மலையிலே
எழுந்து அருளி இரா நின்ற அழகரே
ஷிதிஷித் -பர்வதம்
புரா ப்ரலீ நம் ஜகத் புநருத்தி தீர்ஷத வராஹஸ்ய தவ–பண்டு ஒருகால் ப்ரளய அர்ணவ மக்நமான ஜகத்தை
புனருத்தாரம் செய்ய நினைத்து அருளின ஸ்ரீ வராஹ ரூபியான தேவரீருடைய
தம்ஷ்ட் ராஹ்வய இந்தோ–கோரைப்பற்கள் என்னும் சந்திரனுக்கு
இயம் உர்வரா லஷ்மி கில லஷிதா –ஸஸ்யங்கள் நிறைந்த இந்த பூமியானது ஒரு களங்கமாக
அன்றோ காணப்பட்டது
பூ மண்டலம் முழுவதும் கோரப்பல்லிலே ஏக தேசமாகக் காணப்பட்டது என்றால்
அந்த ஸ்ரீ வராஹ மூர்த்தியின் வைபுல்யம் அளவிட முடியாது என்கை –

———————-

நவாயுர் பஸ் பந்தே யயதுர் அதவா அஸ்தம் சசிரவீ
திச அநஸ்யந் விஸ்வாபி அசலா அசலத் சா சலகுலா
நபச் ச ப்ரச்ச்சோதி க்வதி தமபி பாதோ நரஹரவ்
த்வயி ஸ்தம்பே சும்பத் விபூஷி சதி ஹே ஸூந்தர புஜ –95-

இது முதல் மூன்று ஸ்லோகங்களால் ஸ்ரீ நரஸிம்ஹ அவதார அனுபவம்
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் தோன்றிய போது உலகம் எல்லாம் நடுங்க –
காற்றும் அசையாமல் -சந்த்ர சூரியர்கள் உதிக்காமல் -திசைகள் தென்படாமல் –
பர்வத சமூகங்களோடு கூடிய ஸமஸ்த பூ மண்டலமும் ஆடி அசைந்ததே -ஆகாசமும் விகாரப்பட்டது –
கடல் நீரும் கொதிப்படைந்து -இப்படியாக அந்த நிலைமையை என் சொல்வோம் என்கிறார் இதில்
ஹே ஸூந்தர புஜ —
த்வயி நரஹரவ் ஸ்தம்பே சும்பத் விபூஷி சதி –தேவரீர் ஸ்ரீ நரஸிம்ஹ உருவினராய்க் கொண்டு
ஹிரண்யாசூர க்ருஹ ஸ்தம்பத்திலே பிரகாசித்த வடிவை யுடையவரான அளவிலே –
ப்ராதுர்பவித்து அருளின அளவிலே
வாயுர் ந பஸ் பந்தே –தேவரீருடைய திவ்ய ஆஜ்ஜைக்குக் கட்டுப்பட்டு சதாகாதியாய் இருக்கக் கடவனான
வாயுவும் கூட அசைந்திலேன்
அதவா-சசிரவீ- அஸ்தம் -யயதுர்-அதற்கு மேல் சந்த்ர சூர்யர்களும் அஸ்தமித்தே கிடந்தார்கள் -உதிக்கப் பெற்றிலர்
திச அநஸ்யந் –கிழக்கு முதலிய திசைகளும் தெரியாது ஒழிந்தன
சா சலகுலா விஸ்வாபி அசலா அசலத்–பர்வத சமூகங்களோடு கூடின நிலவுலகம் முழுவதும் ஆடல் கொடுத்தது
நபச் ச ப்ரச்ச்சோதி –ஆகாசமும் சரிந்து கடலில் ஆழ்ந்தது -என்று அதிசய யுக்தி இருக்கிற படி
பாத அபி க்வதிதம் -கடல் நீரும் கொதிப்படைந்ததாயிற்று

————-

அராலம் பாதாலம் த்ரிதச நிலய பிராபித லய
தரித்ரீ நிர்த்தூதா யயுரபி திச காமபி திசம்
அஜ்ரும்பிஷ்ட அம்போதி குமுகுமிதி கூர்ணந் ஸூரரிபோ
விபந்தாநே வக்ஷஸ் த்வயி நர ஹரவ் ஸூந்தர புஜ –96-

கீழ் ஸ்லோகத்தில் தூணில் நின்று ஆவிர்பவித்த போது நடந்தவை சொல்லிற்று
இதில் ஹிரண்யன் உடலைப் பிளந்த போது உண்டான சம்பவம் சொல்லுகிறது
ஹே ஸூந்தர புஜ –த்வயி நர ஹரவ் -ஸூரரிபோ-வக்ஷஸ் -விபந்தாநே -சதி–தேவரீர் ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாகி
ஹிரண்யாசூரனுடைய மார்பைத் திரு உகிறாள் கீண்டு அருளின அளவிலே
பாதாலம்-அராலம் –பாதாள லோகமானது தலை தடுமாறிற்று
த்ரிதச நிலய பிராபித லய –தேவர்களின் குடியிருப்பான ஸ்வர்க்க லோகமும் லாயமடைந்ததாயிற்று –
இருந்த இடமே தெரியவில்லை என்றபடி
தரித்ரீ நிர்த்தூதா –பூமியானது மிகவும் கம்பம் அடைந்தது
திச அபி காமபி திசம் யயுர் –திக்குகளும் ஏதேனும் ஒரு திக்கை அடைந்தன –
திசைகளும் மறைந்தன என்றபடி
அம்போதி குமுகுமிதி கூர்ணந் அஜ்ரும்பிஷ்ட –கடலும் குழு குழு என்கிற ஓசையோடு சுழன்று கொந்தளித்தது
ஆக இவ்வளவு பயங்கரமான நிலை யாயிற்று -என்கை

————–

நக க்ரக சக பிரதி க்ரதித தைத்ய வக்ஷஸ் ஸ்தலீ
சமுத்த ருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வயம் வபுஸ்
வி லோக்ய ருஷித புந பிரதி ம்ருகேந்த்ர சங்கா வசாத்
ய ஏஷ நரகேஸரீ ச இஹ த்ருச்யதே ஸூந்தர –97-

கீழ் இரண்டால் சீற்றத்தின் விளைவு அருளிச் செய்தார் –
இதில் மற்றும் ஒரு காரணத்தால் சீற்றம் விளைந்தது என்கிறார்
ஸ்ரீ பேயாழ்வார் -பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஒரு கடுவன் எனப் பேர்ந்து–என்று
அருளிச் செய்த கணக்கிலே பிரதிபிம்பம் கண்டு மிருகங்கள் சீறுமே -அது தன்னைச் சொல்கிறார் இதில்
ய ஏஷ நரகேஸரீ
நக க்ரக சக பிரதி க்ரதித தைத்ய வக்ஷஸ் ஸ்தலீ-சமுத்த ருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வயம் வபுஸ் வி லோக்ய —
திரு நகங்களாகிற ரம்பங்களின் நுதியாலே பிளக்கப்பட்ட ஹிரண்யனின் மார்வகலத்தில் நின்றும் கிளர்ந்த
உதிர வெள்ளத்தால் தோன்றின பிரதிபிம்ப ரூபமான தம்முடைய திரு மேனியைத் தாமே பார்த்து
பிரதி ம்ருகேந்த்ர சங்கா வசாத் புநர் ருஷித -தமக்கு எதிராகத் தோன்றின மற்றொரு சிம்ஹமோ என்ற
சங்கையினால் முன்னிலும் அதிகமாக சீற்றம் உற்றனரோ
ஏஷ இஹ ஸூந்தர –த்ருச்யதே–அவர் தாமே இந்தத் திருமலையில் அழகராக சேவை சாதிக்கிறார் என்று
தர்மி ஐக்கியம் அனுசந்திக்கப்பட்டதாயிற்று
ஸ்வ ப்ரதிபிம்பத்தைக் கண்டு சீற்றம் உற்றதாகச் சொன்ன இதனால்
ஸிம்ஹ ஜாதியின் மெய்ப்பாடு சொல்லிற்று

——————-

ஷிதிரியம் ஜநி ஸம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரண உத்தரணைர் அபி
வந கிரீச தவைவ ஸதீ கதம் வரத வாமன பிஷணம் அர்ஹதி-98–

ஸ்ரீ வாமன அவதாரத்தில் ஈடுபடுகிறார்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா-மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி
நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்று பெரிய திருவந்தாதியில் எம்பெருமானை
மடி பிடித்து ஒரு கேள்வி கேட்டாரே -அத்தை தழுவியே இந்த ஸ்லோகம்
வந கிரீச -வரத வாமன-இயம் ஷிதி ஜநி ஸம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரண உத்தரணைர் அபி
தவைவ ஸதீ கதம் பிஷணம் அர்ஹதி—திருமாலிருஞ்சோலைக்குத் தலைவனான வரம் தரும் வாமன மூர்த்தியே
இப்பூ மண்டலம் முழுதும் படைத்தல் துடைத்தல் காத்தல் உண்டு உமிழ்தல் இடந்து எடுத்தல் முதலிய செயல்களால்
சர்வாத்மநா உனக்கே அன்றோ வஸ்யமாய் இரா நின்றது
இதனை ஒரு பையல் பக்கல் பிஷுவாய்
சென்று யாசித்துப் பெற்றது என் கொல் என்று கேட்க்கிறார்
ஜன்ம வாசகமான ஜனி சப்தம் உபசாராத ஸ்ருஷ்டிக்கு வாசகம் –

சதுர்முக முகேன ஸ்ருஷ்ட்டித்தும் -ஸ்வேந ரூபேண ரஷித்தும் போருகிற பிரகாரங்களாலே உனக்கே ஸ்வம்மான
இந்த லோகத்தை ஒரு பையல் தன்னதாக அபிமானித்து இருந்தானாகில்
அவனை நேர் கொடு நேராக தண்டித்து வாங்கிக் கொள்ளலாய் இருக்க அது செய்யாதே யாசகனாய்ச் சென்று
பல் பன்னிரண்டும் காட்டி இரந்து தான் பெற வேணுமோ –
பெறுவதற்கு வேறே உபாயம் அறிந்திலையோ -என்று கேள்வியை விரித்துக் கொள்க
வரத–என்கிற சம்போதானம் சாபிப்ராயம் –
வரம் தரும் பெருமாள் என்று விருது வஹித்து அலம் புரிந்த நெடும் தடக்கையனாய் இருந்து வைத்தும் பிஷுகனாகலாமோ
மகாபலியின் ஓவ்தார்யம் என்ற ஒரு தர்ம ஆபாசத்தை ஏன்று கொண்டு அதுக்குத் தக்க வேஷம் என்று சமாதானம்
ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் உத்தர தசகத்திலும்–
தைத்ய ஓவ்தார்யேந்த்ர யாஸ்ஞா விஹதிமபநயந் –ஸ்லோகமும் அனுசந்தேயம்

—————

பார்க்கவ கில பவந் பவாந் புரா குந்த ஸூந்தர வநாசலேஸ்வர
அர்ஜுனஸ்ய பல தர்ப்பி தஸ்ய து ச்சேத்ஸ்யதி ஸ்மரதி பாஹு காநநம் –99-

ஸ்ரீ பரசுராம அனுபவம்
கார்த்த வீர்யார்ஜுனன் ஜமதக்கினி முனிவரைக்கொன்றுகாமதேனுவை கவர்ந்திட —
ஷத்ரிய -21-தலைமுறை பொருதுபி அழித்தபி சரித்திரம்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன்
அடல் புரை எழில் திகழ் திறல் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்று
அவன் அகல் விசும்பு அணைய–திருமங்கை ஆழ்வார் -அருளிச் செய்ததை ஆதி ஒற்றி இந்த ஸ்லோகம்
கோகுல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனை போற்றும் புனிதன் –ராமானுஜன்
பிருகு குலத்தில் தோன்றியபடியால் பார்க்கவ -என்றது

ஹே குந்த ஸூந்தர வநாசலேஸ்வர –குருந்த மரங்களால் அழகிய திருமாலிருஞ்சோலை
திருமலைக்குத் தலைவரே
புரா கில பவாந் பார்க்கவ பவந் –பண்டு தேவரீர் பரசுராமராக திருவவதரித்து
பல தர்ப்பி தஸ்ய அர்ஜுனஸ்ய–வலிமைச் செருக்கு உள்ளவனான கார்த்த வீர்யார்ஜுனனுடைய
பாஹு காநநம் சேத்ஸ்யதி ஸ்மரதி –புஜ வனத்தை அறுத்து ஒழித்தீர்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: