ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—69–83–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

கீழே -30-ஸ்லோகங்களாலே -39-முதல் -68-வரை அழகருடைய கேசாதி பாதாந்த திவ்ய அவயவ வர்ணனம்
இனி ஸ்ரீ பூமி நீளா தேவிகள் ஆகிய திவ்ய மஹிஷிகளின் சேர்த்தியையும்
சேஷ சேஷாசந கருட பிரமுக நித்ய ஸூரி களின் பரிசார்யா விசேஷங்களையும் அனுபவிக்கத் திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ மஹா லஷ்மியின் நித்ய யோகத்தை அருளிச் செய்கிறார் இதில்
யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் ஐஸ்வர்ய ஹேது என்பது சர்வ ஜன சம்மதமோ –
அந்தப் பிராட்டியும் அழகரை ஆஸ்ரயித்தே ஸ்ரீ என்கிற திரு நாமம் பெறுகிறாள் –
அழகர் தாமும் திருவுக்கும் திருவாகிய செல்வராக விளங்குகிறார் என்கிறார்

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வரானாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீ நமேதத்
ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ
தம் ஹி ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு ரு தாரவாச –69 –

யஸ்யா கடாக்ஷணம் –யாவள் ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வை யானது
ஈஸ்வரானாம் -அநு க்ஷணம்-
ஐஸ்வர்ய ஹேதுரிதி ஏதத் சர்வ ஜநீ நம் –ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி
ஐஸ்வர்ய ஹேது வாகிறது என்பது நிர்விவாதமாய் இருக்கின்றதோ
சா ஸூந்தர நிஷே வணதோ ஸ்ரீ இதி நிராஹூ -அந்தப்பிராட்டி தானும் அழகரை ஆஸ்ரயிப்பதானாலேயே
ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றனர்
ஸ்ரீ சப்தத்துக்கு ஆறு வகை வியுத்பத்திகள் உள்ளன
அவற்றுள் ஸ்ரேயதே என்பது ஒரு வ்யுத்பத்தி -எம்பெருமானைப் பற்றி ஸ்வரூப லாபம் அடைபவள் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்றதாயிற்று –
இனி பிராட்டிக்கு எம்பெருமானாலே ஏற்றம் என்பது போலே
எம்பெருமானுக்கும் பிராட்டியாலே ஏற்றம் என்பது ஓன்று உண்டு அன்றோ -அது சொல்லுகிறது நான்காவது பாதத்தினால்
உ தாரவாச –தம் ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு –திருவுக்கும் திருவாகிய செல்வா-என்று அருளிச் செய்த திருமங்கை ஆழ்வாரையும் –
க ஸ்ரீ ஸ்ரிய-என்று அருளிச் செய்த ஆளவந்தாரையும்-இங்கே உதார வாக்குகள் என்கிறார் –
திருவே துயில் எழாய்–திருப்பாவை -20-ஆறாயிரப்படியிலும் உதார வாக்குகள் ஆகிறார் –
திருமங்கை ஆழ்வாரும் ஆளவந்தாரும் பட்டரும் -என்று அருளிச் செய்ததும் காணலாம்

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் -29-ஸ்லோகம் இதே போலே முதல் இரண்டு பாதங்களில் வாசி இல்லை
மூன்றாம் பாதம் –தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபசம் ஸ்ரயணான் நிராஹு –என்று அங்கே உள்ளது
இங்கு அழகர் திரு நாமம் இட்டு சொல்ல வேண்டுகையாலே -ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ என்று
சிறிது மாறுபட்டு உள்ளது –
இனி நான்காம் பாதத்திலும் -அங்கு த்வத் உப ஸம்ஸரயணாத்–என்று மத்யம புருஷ நிர்த்தேசமாக மூன்றாம் பாதத்தில்
இருப்பதுக்குச் சேர நான்காம் பாதத்திலும் த்வத் என்று – யுஷ்மத்-சப்த நிர்தேசம் பிராப்தம் ஆயிற்று –
இங்கு -ஸூந்தர நிஷே வணதோ–என்று பிரதம புருஷ நிரதேசமே உள்ளதால் அதுக்குச் சேர
நான்காம் பாதத்தில் -தம் -என்று இருக்கத் தாக்குமே அல்லது -த்வாம் -என்று இருக்காது தகாது –

————————

திவ்ய அசிந்த்ய மஹாத்புத உத்தம குணைஸ் தாருண்ய லாவண்யக
ப்ராயைர் அத்புத பாவ கர்ப்ப சததா பூர்வ பிரியைர் விப்ரமை
ரூப ஆகார விபூதி பிச்ச சத்ருசீம் நித்யாந பேதாம் ஸ்ரியம்
நீலாம் பூமி நபீ த்ருசீம் ரமயிதா நித்யம் வநாத் ரீஸ்வர–70-

கீழே பெரிய பிராட்டியாரை மட்டும் அருளிச் செய்து இதில் –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் -என்கிறபடியே
ஸ்ரீ பூமி நீளா தேவிகளின் பெருமையையும்
அப்பிராட்டிமார்களை அழகர் ரசிப்பித்து அருளும் பரிசையும் பேசுகிறார் –
திவ்ய அசிந்த்ய மஹாத்புத உத்தம குணைஸ் –அப்ராக்ருதங்களாயும் -அப்படிப்பட்டவை என்று
சிந்திக்க முடியாதவைகளாயும் மிக ஆச்சர்யங்களாயும் உத்தமங்களாயுமாய் இருக்கிற
வாத்சல்ய காருண்யாதி ஆத்ம குணங்களாலும்
தாருண்ய லாவண்யக ப்ராயைர் குணைஸ் –யவ்வனம் லாவண்யம் போன்ற
திவ்ய மங்கள விக்ரஹ குணங்களாலும்
அத்புத பாவ கர்ப்ப சததா பூர்வ பிரியைர் விப்ரமை –ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களை உள்ளே
உடையவவைகளாய்-அப்பொழுதைக்கு அப்பொழுது அபூர்வங்களாய் பிரியங்களாயும் இருக்கின்ற விலாசங்களாலும்
ரூப ஆகார விபூதி பிச்ச –ஸ்வரூப விக்ரஹ விபவங்களினாலும்
சத்ருசீம் –துல்ய சீல வயோ வ்ருத்தாம் -துல்ய அபி ஜன லக்ஷணாம் -ராகவோ அர்ஹதி
வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா –என்றும்
பகவந் நாராயண அபிமத அநு ரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதிக அதிசய அஸங்க்யேய
கல்யாண குண கணாம் –என்றும் சொல்லுகிறபடியே அநு ரூபையாய் இருக்கின்ற
நித்யாந பேதாம் ஸ்ரியம் –நித்ய அந பாயிநீ யான ஸ்ரீ மஹா லஷ்மியையும்
ஈத்ருஸீம் பூமிம் நீலாம் அபி –பூர்வ யுக்த விசேஷண விசிஷ்டைகளான பூமி நீலைகளும்
வநாத் ரீஸ்வர-நித்யம்-ரமயிதா –அழகர் இடையறாமல் ரசிப்பிக்கும் தன்மையர்

இத்தால் அழகரைப் பற்றுவார்க்குக் காலம் பார்க்க வேண்டாதே
புருஷகார சாந்நித்யம் எப்பொழுதும் உள்ளது என்றார் ஆயிற்று –

——————-

அந்யோந்ய சேஷ்டித நிரீக்ஷண ஹார்த பாவ
பிரேமாநுபாவ மதுர ப்ரணய ப்ரபாவ
ஆஜஸ்ரநவ்யதர திவ்ய ரஸ அநு பூதி
ஸ்வாம் ப்ரேயஸீம் ரமயிதா வந சைல நாத –71-

அந்யோந்ய -பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சர்வாத்மனா உள்ள ஸுவ்மநஸ்யம் பேசப்படுகிறது –
திவ்ய தம்பதிகளுக்கு பரஸ்பரம் அநு பாவ்யம்
சேஷ்டித –புருவ நெறிப்பு -புன் சிரிப்பு முதலான விலாச வியாபார விசேஷங்ககள்
நிரீக்ஷண –கடைக்கண் பார்வை
ஹார்த பாவ –உள்ளே உறையும் அபிப்ராயம் -அதாவது தாருண்ய லாவண்யாதிகள் அநு த்யானம்
பிரேமாநுபாவ –பிரேமாதிசயம் ஆகிய இவற்றால்
மதுர ப்ரணய ப்ரபாவ –பரம போக்யமான அநு ராக அதிசயத்தை உடையரான
வந சைல நாத –அழகர்
ஆஜஸ்ர நவ்யதர திவ்ய ரஸ அநு பூதி சந் -அநவரதம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அப்பொழுதைக்கு அப்பொழுது அபூர்வமாய்த் தோன்றுகின்ற அப்ராக்ருதமான
ஆனந்த அனுபவத்தை உடையவராய்க் கொண்டு
ஸ்வாம் ப்ரேயஸீம் ரமயிதா -தம்முடைய தேவியாரை ரசிப்பியா நின்றார்

—————–

ஸூந்தரஸ்ய வன சைல வாசிநோ
போகமேவ நிஜ போகம் ஆபஜந்
சேஷ ஏஷ இதி சேஷதா க்ருதே
ஸ்வநாமநி- அஹிபதிஸ் -ப்ரீதிமாந் —72-

இந்த ஸ்லோகம் முதல் மூன்றால் அநந்த கருட விஷ்வக் சேனர்-முதலானோர் பரிசார்யா விசேஷங்களை
எடுத்து உரைக்கத் திரு உள்ளம் பற்றி –
இத்தால் திரு அனந்தாழ்வானுடைய பரிசார்யா விசேஷத்தை பேசுகிறார்
இந்தத் திருமலைக்கும் சேஷாத்ரி திரு நாமம் உண்டே –
தானே திருமலையாக வடிவு எடுத்து எம்பெருமானுக்கு பரம ஆனந்த ஸந்தோஹ சந்தயாக
ஸ்தான விசேஷமாய் அமைந்து இருக்கிற படி –
இப்படியான விலக்ஷண சேஷத்வம் வாய்த்த படியால் சேஷன் என்கிற தனது
திரு நாமத்தால் மிகவும் உகப்புடையான் என்கிறார் –
அஹிபதிஸ் –சர்ப்ப ராஜனான திருவனந்த ஆழ்வான்
வன சைல வாசிநோ –ஸூந்தரஸ்ய-போகமேவ நிஜ போகம் ஆபஜந் –அழகருடைய ஸ்வ இச்சா விகார
அனுபவத்தையே தன்னுடைய உடலுக்கு சாபல்யமாக நினைத்தவன் என்றபடி –
சர்ப்பத்தின் உடலுக்கு போகம் என்று வடமொழியில் உண்டே –
பகவத் போகத்தையே ஸ்வ பாகமாக கொண்டான் என்று சாடு யுக்தி இருக்கிறபடி
சேஷதா க்ருதே -பரகத அதிசய ஆதேய லக்ஷண -சேஷத்வம் சித்தித்த படியால்
சேஷ ஏஷ இதி ஸ்வநாமநி–ப்ரீதிமாந் –இவன் சேஷன் என்று பலரும் சொல்லும்படியாகத்
தனக்கு வாய்த்த சேஷ நாமத்தில் போர உகப்புடையான் -என்றபடி –

—————

வாஹந ஆசந விதாந சாமராத்யா க்ருதி ககபதிஸ் த்ரயீ மயஸ்
நித்ய தாஸ்ய ரதிரேவ யஸ்ய வை ஏஷ ஸூந்தர புஜோ வநாத்ரிகஸ் –73-

பெரிய திருவடியின் பரிசார்யா விசேஷங்களைப் பேசுகிறார் இதில் –
ககபதிஸ் த்ரயீ மயஸ் –வேதாத்மா விஹகேஸ்வரா என்று வேத ஸ்வரூபியாகச் சொல்லப் பட்ட பெரிய திருவடி
வாஹந ஆசந விதாந சாமராத்யா க்ருதிஸ் சந் —
தாஸஸ் சஹா வாஹனம் ஆசனம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீ மயஸ் –என்று ஆளவந்தார்
அருளிச் செய்த படியே சமய அநு குணமாக வாஹனமாயும் ஆசனமாயும் விதானமாயும் சாமரமாயும்
மற்றும் பலவாயும் வடிவு எடுத்தவனாய்க் கொண்டு
யஸ்ய வை நித்ய தாஸ்ய ரதி–யாவர் ஒரு அழகருக்கே நித்ய கைங்கர்ய நிரதராய் இரா நின்றாரோ
ஏஷ ஸூந்தர புஜோ வநாத்ரிகஸ் –அப்படிப்பட்ட சுந்தரத் தோளுடைய பெருமாள் திருமாலிருஞ்சோலை மலை உறைகின்றார்
திருமாலிருஞ்சோலை அழகர் பெரிய திருவடியினுடைய சகலவித கைங்கர்யங்களையும் கொண்டு அருளுமா போலே
அடியேன் இடத்திலும் கொண்டு அருள வேணும் என்று விஞ்ஞாபித்த படி

————————

வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய வை
ப்ரபுக்த சிஷ்டாச்யுத ஸைன்ய சத்பதி
ஸமஸ்த லோகைக துரந்தரஸ் சதா
கடாக்ஷ வீஷ்யோ அஸ்ய ச சர்வ கர்ம ஸூ -74-

இதில் சேனாபதி ஆழ்வானுடைய பரிசார்யா விசேஷத்தைப் பேசுகிறார்
ஸைன்ய சத்பதி-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய ப்ரபுக்த சிஷ்டாஸீ சந் –அழகருடைய போனகம் செய்த சேஷம்
உண்பவராய்க் கொண்டு சேனை முதலியாருக்கு சேஷா சநன் –என்றே திரு நாமம் அன்றோ
த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா –ப்ரியேண சேநா பதிநா — என்றார் இறே ஆளவந்தாரும்
சர்வ கர்ம ஸூ-அஸ்ய -கடாக்ஷ வீஷ்யோ –ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சகல வ்யாபாரங்களிலும்
அழகருடைய கடாக்ஷ வீக்ஷணம் ஒன்றையே எதிர்பார்ப்பவராய்
சதா ஸமஸ்த லோகைக துரந்தரஸ்–ஸ்ரீ மதி விஷ்வக் சேநே ந்யஸ்த ஸமஸ்த ஐஸ்வர்யம் -என்றும்
ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திராயா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசிந்நயனாதிகாரம் யோ நிர்வஹதி–என்றும்
சொல்லுகிறபடியே எப்போதும் ஸமஸ்த லோக நிர்வாஹகராய் விளங்கா நின்றார்

——————

சத்ர சாமர முகா பரிச்சதா ஸூரய பரிஜநச்ச நைத்யகா
ஸூந்தரோரு புஜ மிந்ததே சதா ஞான சக்தி முக நித்ய ஸத் குணாஸ் –75-

அழகருடைய பரிஜன பரிச்சதா கல்யாண குண ஸம்ருத்தியை அருளிச் செய்கிறார்-
நைத்யகா- ஸூரய-நித்ய கைங்கர்ய பாகிகளான ஸூரிகளும்
பரிஜந–பரிஜனங்கள் என்று பேர் பெற்றவர்களும்
சத்ர சாமர முகா பரிச்சதா–குடை சாமரம் முதலிய எடுபிடு சாமான்களும்
ஞான சக்தி முக நித்ய ஸத் குணாஸ் ச –ஞான சக்தி பல ஐஸ்வர்யாதிகளான நித்ய கல்யாண குணங்களும்
ஸூந்தரோரு புஜம் சதா இந்ததே — அழகரை அடைந்து எப்போதும் விளங்கா நின்றன

—————-

த்வார நாத கண நாத தல்லஜா பாரிஷத்ய பத பாகிநஸ் ததா
மாமகாச்ச குரவ புரா தநா ஸூந்தரம் வந மஹீத் ரகம் ஸ்ரிதா-76–

சண்ட ப்ரசண்டாதிகளான த்வார பாலக ஸ்ரேஷ்டர்களும்
குமுதா குமுதாஷாதிகளான கண நாயக ஸ்ரேஷ்டர்களும்
பாரிஷத்யா பரச்சதம்–என்கிறபடியே பாரிஷத்ய பத வியபதேசர்யர்களானவர்களும்
ஸ்ரீ பராங்குச பரகால யதிவராதிகளான நம் முன்னோர்களும்
ஸ்ரீ அழகரை பணிந்து உந்து போனார்கள் என்றார் ஆயிற்று
தல்லஜ–சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்

—————

ஈத்ருஸை பரிஜனை பரிச்சதை
நித்ய சித்த நிஜ போக பூமிக
ஸூந்தரோ வந கிரேஸ் தடீ ஷுவை
ரஜ்யதே சகல த்ருஷ்ட்டி கோசார —77-

கீழே சொல்லப்பட்ட அநந்த கருட விஷ்வக் சேனாதிகளான பரிஜனங்களோடும்
சத்ர சாமராதிகளான பரிச் சதங்களோடும்-அழகர் திருமாலிருஞ்சோலை மலை தாழ் வரையிலே அனைவரும்
கண்ணாரக் கண்டு களிக்கலாம் படி எழுந்து அருளி இருந்து சேவை சாதித்து அருளுமாற்றை
அனுபவித்துப் பேசுகிறார் இதில்
ஈத்ருஸை பரிஜனை பரிச்சதைஸ் ஸஹ –பூர்வ யுக்த பிரகாரங்களான பரி ஜன பரிச் சதங்களோடே கூட —
கீழே ஸூந்தரஸ்ய வந சைல வாசிந –என்கிற ஸ்லோகம் தொடங்கி முந்திய ஸ்லோகம் அளவாக ஐந்திலும்
அருளிச் செய்தவற்றைச் சேரப்பிடித்து -ஈத்ருஸை -என்று அருளிச் செய்தபடி
நித்ய சித்த நிஜ போக பூமிக–நித்ய சித்த -என்றது சதா ஏக ரூபமான என்றபடி
நிஜ போக பூமி-என்று தனக்கு அசாதாரணமான நலம் அந்தமில்லாதோர் நாடாகிய நித்ய விபூதியைச் சொல்கிறது
வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ —
என்கிறபடியே ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான்
சகல த்ருஷ்ட்டி கோசார —ஸூந்தரஸ் சந் –சகல ஜன நயன விஷய பூதரான அழகராய்க் கொண்டு
வந கிரேஸ் தடீ ஷுவை ரஜ்யதே – திருமாலிருஞ்சோலை மலை அடிவாரத்தில் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறார் என்றபடி –
திரு நாட்டிலே நம் போழ்வாருடைய கண்ணுக்கு இலக்கு ஆகாமல் இருக்கும் குறை தீர
அங்குத்தை நிலைமையோடே இங்கு இனக்குறவர்கள் உட்பட சகலருக்கும் சஷுர் விஷயனாய்க் கொண்டு
சேவை சாதிக்கிறார் என்றதாயிற்று

——————-

ஆக்ரீட பூமி ஷு ஸூகந்தி ஷு பவ்ஷ்பிகீஷு
வைகுண்ட தாமநி சம்ருத்தஸ் வாபிகாஸூ
ஸ்ரீ மல்ல தாக்ரு ஹவதீஷு யதா ததைவ
லஷ்மீ தரஸ் ஸஜதி ஸிம்ஹ கிரேஸ் தடீ ஷு –78-

வைகுண்ட தாமநி–ஸ்ரீ வைகுண்டம் ஆகிற நித்ய விபூதியிலே
சம்ருத்தஸ் வாபிகாஸூ —வாவித் தடங்கள் நிரம்பியவையாயும்
ஸ்ரீ மல்ல தாக்ரு ஹவதீஷு –அழகிய கொடி மண்டபங்களை உடையவனாயும்
பவ்ஷ்பிகீஷு–புஷ்பங்கள் நிறைந்தனவாயும்
ஸூகந்தி ஷு -நறுமணம் மிக்கவையாயும் இருக்கிற
ஆக்ரீட பூமி ஷு -விஹார உபயோகிகளான உத்யான வனங்களில்
லஷ்மீ தரஸ் யதா ஸஜதி–ஸ்ரீ யபதியான எம்பெருமான் எவ்விதமாகத் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறானோ
ததைவ ஸிம்ஹ கிரேஸ் தடீ ஷு –ஸஜதி-
அவ்விதமாகவே திருமாலிருஞ்சோலை மலை தாழ் வரைகளிலும் திரு உள்ளம் உகந்து வர்த்திக்கிறான் ஆயிற்று
இத்தால் திருமலை பூ லோக வைகுண்டம் என்றதாயிற்று-

—————-

ஆனந்த மந்திர மஹா மணி மண்டபாந்த
லஷ்ம்யா புவா அஹிபதவ் ஸஹ நீலயா ச
நிஸ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய ஜநைக ஸேவ்ய
நித்யம் வசந் ஸஜதி ஸூந்தர தோர் வநாத்ரவ்–79-

ஆனந்த மந்திர மஹா மணி மண்டபாந்த –ஸ்வரூப ரூப குண விபூதிகளோடும் -நித்ய முக்தர்களோடும்
கூடி இருக்கும் இருப்பை அனுபவிப்பதால் உண்டாகும் மஹா ஆனந்தத்துக்கு பிறப்பிடமான
திரு மா மணி மண்டபத்தின் உள்ளே -என்றபடி –
அஹிபதவ் லஷ்ம்யா புவா நீலயா சஹ – திருவனந்த ஆழ்வான் மீது ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவிகளோடும் கூட
நிஸ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய ஜநைக ஸேவ்ய –த்ரிபாத் விபூதி ஆகையால் எண்ணிறந்த நித்ய முக்தர்கள் அன்றோ
அங்கு இருப்பது -அவர்களுக்கு மாத்திரமே ஸேவ்யனாய் இருக்கின்ற
ஸூந்தர தோர்–ஸூந்தரத் தோளுடைய பெருமாள்
வநாத்ரவ்–நித்யம் வசந் ஸஜதி –திருமாலிருஞ்சோலை மலையிலே நித்ய வாச ரசிகராய் இரா நின்றார்
விரஜையை மறக்கும்படியான நூபுர கங்கையும்
திரு மா மணி மண்டபத்தை மறக்கும் படியான திவ்ய ஆலய மண்டப ஸந்நிவேசமும் இருக்கையாலே
திருநாட்டு வாசமும் மறந்து இங்கே வர்த்திக்கிற படி –
ஸஜதி -சக்தோ பவதி -என்றபடி

————

ப்ரத்யர்த்திநி த்ரி குணிக ப்ரக்ருதே அஸீம்நி
வைகுண்ட தாமநி பராம் பரநாம் நி நித்யே
நித்யம் வசந் பரம சத்வ மயேபி அதீத
யோகீந்த்ர வாங் மநச ஏஷ ஹரிர் வநாத்ரவ் –80-

ஆவரண ஜலம் போலே பரத்வம் பெருக்காறு போலே விபவங்கள்-
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –
அதன் ஏற்றத்தை திரு உள்ளத்தில் கொண்டு அருளிச் செய்கிறார்
வைகுண்ட தாமநி-நித்யம்- வசந் நபி -ஏஷ ஹரிர் வநாத்ரவ் –இவ்வழகர் திரு நாட்டிலே எழுந்து அருளி
இருப்பவராயினும் இத்திருமலையிலே ஸந்நிஹிதராய் இரா நின்றார் என்கிறார்
ஸ்ரீ வைகுண்டத்துக்கு அநேக விசேஷணங்கள் இட்டு அருளுகிறார் –
பரம சத்வ மயே–சுத்த சத்வமயமாய் இருக்கை
த்ரி குணிக ப்ரக்ருதே ப்ரத்யர்த்திநி–முக்குணங்கள் கூட்டரவாகிய மூல பிரக்ருதிக்கு எதிராக உள்ளது
அ ஸீம்நி –லீலா விபூதியின் பரிமாணம் எல்லை கண்டு கூறப்பட்டுள்ளது
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி அருளிச் செய்த படி -இது -நித்ய அங்குசித ஞானாதிகர்களுக்கும்
அளவிட ஒண்ணாத பரிமாணத்தை உடைத்தாய் இருக்கும்
பராம் பரநாம் நி-பரம ஆகாசம் என்னும் பெயரை உடைத்தாய் இருக்கும்
நித்யே வைகுண்ட தாமநி –நித்ய விபூதி எண்ணப்படும் ஸ்ரீ வைகுண்ட லோகத்தில்
அதீத யோகீந்த்ர வாங் மநச ஏஷ –சப்தமந்தமாகவும் ப்ரதமம் சாந்தமாகவும் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட தாமத்துக்கும் ஸ்ரீ அழகருக்கும் விசேஷணமாய் இருக்கும்
வசந் நபி -ஏஷ ஹரிர் வநாத்ரவ் -ஸஜதி–பதத்தை கீழ் ஸ்லோகத்தில் இருந்து வருவித்து கொள்ள வேண்டும்

——————–

லோகான் சதுர்தச ததத் கில ஸூந்தரஸ்ய
பங்க்தீ குணோத்தரித சப்த வ்ருதீத மண்டம்
அண்டாநி சாஸ்ய ஸூ சத்ரும்ஸி பரச்சதா நி
கிரீடா விதேரிஹ பரிச்சததாம் அகச்சந் — –81-

இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் லீலா விபூதி அனுபவம்
யத் அண்ட மண்டாந்தர கோசரஞ்ச யத் தச உத்தராண்ய ஆவரணாநி யாநி ச -ஸ்ரீ ஆளவந்தார் –
அருளிச் செய்ததை அடி ஒற்றி இதில் பூர்வார்த்தம்
சதுர்தச லோகான் ததத் பங்க்தீ குணோத்தரித சப்த வ்ருதீத மண்டம்–பதினான்கு லோகங்களையும்
தன்னுள்ளே அடக்கிக் கொண்டு இருப்பதும் மேலே ஒன்றுக்கு ஓன்று பதின் மடங்காகப் பெருக்கப் பட்ட
வைஸால்யத்தை யுடைய சப்த ஆவரணங்களை யுடையதுமான இவ்வண்டமும்
அஸ்ய ஸூ சத்ரும்ஸி பரச்சதா நி அண்டாநி ச –கீழ்ச் சொன்ன அண்டத்தோடு மிகவும் ஒத்து இருக்கின்ற
நூற்றுக்கணக்கான அண்டங்களும்
இஹ ஸூந்தரஸ்ய கிரீடா விதேரிஹ பரிச்சததாம் அகச்சந் — இங்குள்ள அழகருக்கு
கிரீடா பரிகரங்களாய் இரா நின்றன
அண்டக்குலத்துக்கு அதிபதியாய் அவற்றை லீலா உபகரணமாய்க் கொண்டவருமான
அழகர் இத்திருமலையிலே சேவை சாதிக்கிறார் என்றதாயிற்று –

—————-

ஸூர நர திர்யகாதி பஹு பேதக பின்னம் இதம்
ஜகத் அதச அண்டம் அண்ட வரணாநி ச சப்த ததா
குண புருஷவ் ச முக்த புருஷாச் ச வநாத்ரி பதே
உபகரணாநி நர்மவிதயேஹி பவந்தி விபோ –82-

ஸூர நர திர்யகாதி பஹு பேதக பின்னம் இதம் ஜகத் –தேவாதி பலவகைப்பட்ட விசேஷணங்களாலே
வேறு பட்டு இருக்கிற ஜகத்தும்
அ தச அண்டம் அண்ட வரணாநி ச சப்த ததா -இவ்வளவும் அன்றி அண்டமும் ஏழு அண்ட ஆவரணங்களும்
குண புருஷவ் ச –பிரக்ருதியும் ஜீவாத்ம வர்க்கமும்
முக்த புருஷாச் ச -பிரகிருதி சம்பந்த விநிர் முக்தர்களான புருஷர்களும்
தேஷாம் சதத யுக்தா நாம் —என்ற இடத்தில் சதத யோகம் காங்ஷ மாணாநாம் –என்று
ஸ்ரீ பாஷ்ய ரீதியா பொருள் போலே இங்கும் முக்தியை விரும்பும் புருஷர்கள் என்றுமாம் –
விண்ணுளாரிலும் சீரியர் -என்னப்பட்டவர்களை விவஷித்ததாம்
வநாத்ரி பதே விபோ –உபகரணாநி நர்மவிதயேஹி பவந்தி –அழகருக்கு லீலா பரிகரங்கள் என்றதாயிற்று

————————

ஞானி நஸ் சதத யோகிநோ நோ ஹி யே
ஸூந்தர அங்க்ரி பர பக்தி பாகிந
முக்தி மாப்ய பரமாம் பரே பதே
நித்ய கிங்கர பதம் பஜந்தி தே —83-

கீழே முக்த புருஷாச்ச -என்று முமுஷு பிரஸ்தாபம் செய்து அருளி அவர்களை
விசேஷிக்கிறார் இதில்
தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே —
ஞாநீ து ஆத்மைவ மே மதம் –என்னப் பட்ட ஞாநீகள்
அழகர் திருவடியில் பக்தி பண்ணியே மோக்ஷம் அடைவர் என்கிறார் இதில்
சதத யோகிநாம் ஞானி நஸ் நோ ஹி யே–என்றது
கீதையில் -சதத யுக்தா நாம் –எப்போதுமே கூடி இருந்து அனுபவிக்க விரும்புவர்கள்
ஸூந்தர அங்க்ரி பர பக்தி பாகிந –இங்கு ஸூந்தர அங்க்ரி பர-என்றும்
ஸூந்தர அங்க்ரி பத-என்றும் பாட பேதங்கள்
அங்க்ரி -பதம் புனர் யுக்தி அன்றி திருவடியே ஆஸ்பதம் என்றவாறு –
அழகர் திருவடிகளை ஆஸ்பதமாகக் கொண்ட பக்தி உடையவர்கள் என்றவாறு
பரே பதே –ஆப்ய-என்றது -ஆப்தவா -என்றபடி ஆங்-உபசர்க்கம் அந்தரகதம்
இதில் அதி மானுஷ ஸ்தவத்திலும் -ரஸ மஞ்சன மஞ்ச சாப்ய-என்ற இடம் போலே
தே -பரமாம்- முக்தி மாப்ய -பரே பதே-நித்ய கிங்கர பதம் பஜந்தி தே –அழகர் திருவடிகளில்
பக்தியை செலுத்தியவர்கள் அபுநா வ்ருத்தி லக்ஷணமான மோக்ஷத்தைப் பெற்று திரு நாட்டிலே
நித்ய கைங்கர்ய சாலிகள் ஆகின்றனர் -என்ற படி –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: