ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்—54–68–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

திருக்கைத்தலத்தில் விளங்கும் திருவாழி திருச்சங்கு ஆழ்வார்களை அனுபவிக்கிறார் –

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம்
ஆரூட யோர் விமல சங்க ரதாங்கயோஸ் து
ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ
பத்ம பிரியோர்க்க இவ தத் சமிதோ த்விதீய –55-

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் –அழகருடைய இரண்டு திருக்கைகளிலும் ஏறி இருக்கிற —
ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறி என்றும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெறும் சங்கே -என்றும் –
இருப்பதை அடி ஒற்றி ஆரூட பத பிரயோகம்
விமல சங்க ரதாங்கயோஸ் து –வெள்ளை விளி சங்கும் திருவாழி ஆழ்வானும் ஆகிற இருவருக்குள்
ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ –ஒருவரான ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் தாமரை மலரில் துயிலும்
ராஜ ஹம்சம் போலே விளங்கா நின்றார்
செங்கமல நாண் மலர் மேல் தேனுகரும் அன்னம் போல் செங்கண் கருமேனி வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி
அன்னவசம் செய்யும் சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –அடி ஒற்றி அருளிச் செய்தபடி
த்விதீயஸ்து –தத் சமிதோ –பத்ம பிரியோர்க்க இவ –மற்று ஒருவரான திருவாழி ஆழ்வானோ என்னில் –
தாமரை மலரில் வந்து வீற்று இருக்கும் சூர்யன் போலே விளங்கா நின்றார் –
சூர்யன் தாமரை மலரில் வீற்று இருக்க ப்ரஸக்தி ஏது என்னில் –
பத்ம பிரிய-இது ஹேது கர்ப்ப விசேஷணம் -கமல பாந்தவன் ஆகையால் கமலத்தில் வந்து கிடக்கலாம் இறே
ஆக அழகருடைய இரண்டு திருக்கைகளும் இரண்டு தாமரை ஆகையால் –
ஒரு தாமரையில் அன்னம் வந்து படிந்து சங்காக விளங்க –
மற்று ஒன்றில் சூர்யன் வந்து படிந்து ஸூதர்சனமாக விளங்குகிறார் என்கிறார்

——————-

லஷ்ம்யா பதம் கௌஸ்துப ஸம்ஸ்க்ருதஞ்ச
ஸ்ரீ வத்ஸ பூமிர் விமலம் விசாலம்
விபாதி வஷோ வனமால யாட்யம்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய–56-

வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய–வஷோ-விபாதி –அழகருடைய திரு மார்பு விளங்கா நிற்கிறது -எங்கனே என்னில்
லஷ்ம்யா பதம் –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -என்றும் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாருக்கு நித்ய நிகேதமாய் இரா நின்றது
கௌஸ்துப ஸம்ஸ்க்ருதஞ்ச–குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு என்கிறபடியே கௌஸ்துப அலங்க்ருதமாய் இரா நின்றது
ஸ்ரீ வத்ஸ பூமிர் –திரு மறு மார்பன் ஆகையால் ஸ்ரீ வத்சம் என்னும் மயிர்ச் சுழிக்கு இருப்பிடம்
விமலம் விசாலம் –பளை பளை என்று அகன்று காட வ்யூடமாய் விளங்கா நின்றது
வனமால யாட்யம்–ஆ பாத சூடம் யா மாலா வனமாலாதி கத்தயதே -என்கிறபடியே திருமுடி தொடங்கி திருவடி ஈறாக
விளங்கா நின்ற வனமாலையாலே சோபிதமானது
ஆக இப்படிப்பட்ட திரு மார்பு திகழா நின்றதாயிற்று –

—————-

ஸுவ்ந்தர்ய அம்ருத சார பூர பரிவாஹா வார்த்த கர்த்தாயிதம்
யாத கிஞ்ச விரிஞ்ச சம்பவன பூம்யம் போஜ சம்பூதி பூ
நாபிச் சும்பதி கும்பி கும்ப நிப நிர்ப்பாத ஸ்தநஸ் வர்வதூ
சம்புக்த த்ரும ஷண்ட சைல வஸதேர் ஆரூட லஷ்ம்யா ஹரே–57-

கும்பி கும்ப நிப நிர்ப்பாத ஸ்தநஸ் வர்வதூ சம்புக்த த்ரும ஷண்ட சைல வஸதேர் ஆரூட லஷ்ம்யா ஹரே-சும்பதி–
யானையினுடைய கும்ப ஸ்தலம் போன்று விளங்குகின்ற கொங்கைத் தலங்களை உடைய –
ஊர்வசீ மேனகா ரம்பா திலோத்தமைகள் ஆகிய தேவ மாதர்கள் வந்து இறைஞ்சி ஏத்தி அனுபவிக்கும் இடமான
திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாக உடையவரும் –
ஏறு திருவுடையான் என்னப் பெற்றவருமான அழகருடைய திரு நாபியானது –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –என்று ஆண்டாள் அனுபவித்த படியே -விளங்கா நின்றது –
அது எப்படிப்பட்டது என்ன -இரண்டு விசேஷணங்களால் அனுபவிக்கிறார்

ஸுவ்ந்தர்ய அம்ருத சார பூர பரிவாஹா வார்த்த கர்த்தாயிதம் யாத –ஸுவ்ந்தர்யம் ஆகிற அமுதவாறு
பெருகப் புக அதிலே தோன்றின சுழியோ இது -என்னலாம் படி இரா நின்றது –
மஹா ப்ரவாஹம் உள்ள இடங்களிலே சுழி உண்டாவது காணா நின்றோமே –
அழகருடைய திருமேனி அடங்கலும் பெரு வெள்ளம் கோத்துப் பெருகா நின்ற ஸுவ்ந்தர்ய ப்ரவாஹத்தின் வேகத்தினால்
உண்டான சுழி தான் திரு நாபி என்று வ்யபதேசிக்கப் படுகிறது என்றது ஆயிற்று
பகவத் அனுபவ ரஸ விவசருடைய அபி நிவேச பாசபரி ப்ராமித மதி மந்தான மத்த்யமாநமான ஸுவ்ந்தர்ய துக்த சிந்துவானது
சுற்றோரம் திரைத்து எழுந்து நடுக் குழித்திட்ட சுழி போலே சுந்தரமாம் உந்தி மலரும் –என்று ஈடுபடுவார்கள்
கிஞ்ச மேலும் –

விரிஞ்ச சம்பவன பூமி அம்போஜ சம்பூதி- பூ —
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்றும்
தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் முன்னம்
திசை முகனைத் தான் படைக்க –என்றும் சொல்லுகிறபடியே நான்முகனுக்கு பிறப்பிடமாக உள்ளது
ஆக இப்படிப்பட்ட திரு நாபி திகழ்கின்றது-

———————-

ஸூந்தரஸ்ய கில ஸூந்தர பாஹோ ஸ்ரீ மஹாதருவ நாசலபர்த்து
ஹந்த யத்ர நிவ சந்தி ஜகந்தி பிராபிதக்ரசிம தத் தநு மத்யம் –58-

ஸ்ரீ மஹாதருவ நாசலபர்த்து -ஸூந்தரஸ்ய கில ஸூந்தர பாஹோ -பிராபிதக்ரசிம-ஹந்த –ஸ்ரீ அழகப் பிரானுடைய
எந்த மத்யத்திலே ப்ரலய காலத்தில் உலகங்கள் எல்லாம் உறைகின்றனவோ -அது எவ்வளவோ பருத்து இருக்க வேணுமே –
அப்படி இன்றிக்கே க்ருசமாய் இரா நின்றது அந்தோ என்று விஸ்மயம் தோற்ற அருளிச் செய்கிறபடி –
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட -என்றும்
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி -என்றும்
சொல்லுகிறபடியே சகல சராசரங்களையும் உள்ளே கொண்டும் உண்டது உருக்காட்டாதே சிறுத்துக் கிடக்கிற படி என்னோ
உத்தம புருஷர்களின் உதரம் ப்ரக்ருதயா க்ருசம் என்றது ஆயிற்று
பிராபிதக்ரசிம –அடைவிக்கப்பட்ட க்ருத்ஸ்வத்தை யுடையது –
க்ருசமாய் இருக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது என்றபடி –
தநு மத்யம் –இதனை ஸமஸ்த பதமாகவும் வியஸ்த பதமாகவும் கொள்ளலாம் –
ஸமஸ்த மாக கொண்டு தநு என்று திருமேனியைச் சொன்னவாறு –
திவ்ய மங்கள விக்ரஹத்தை மத்ய பிரதேசம் என்றதாயிற்று –
வ்யஸ்த பதமாக தநு ஸூ சமம் என்றவாறு –

——————-

பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்
ஹஸ்தி ஹஸ்த யுகளாப ஸூவ்ருத்தவ்
ராஜத க்ரம க்ருசவ் ச ச தூரு
ஸூந்தரஸ்ய வந பூதர பர்த்து –59-

வந பூதர பர்த்து –ஸூந்தரஸ்ய –ச தூரு -ராஜத–அழகருடைய திருத் தொடைகள் விளங்கா நின்றன –
அவை தாம் எப்படிப்பட்டவை என்னில்
பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்-ஆதி ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றினவர்களாய் மஹா பலிஷ்டர்களான
மது கைடபர்களை துடையிலே இறுக்கி முடித்த ஐதிக்யம் பிரசித்தம்
மதமிவ மதுகைடபஸ்ய –என்று ஸ்ரீ பட்டரும் அருளிச் செய்கிறார் –
ஆக மது கைடபர்களைப் பேஷணம் பண்ணின பெருமையை யுடையவை அழகருடைய திருத்துடைகள் என்றதாயிற்று –
மேலும்
ஹஸ்தி ஹஸ்த யுகளாப ஸூவ்ருத்தவ் –யானையின் துதிக்கையையும் துடைகளுக்கு உவமை கூறுவது கவி மரபு –
ரம்பாஸ் தம்பா கரிவர காரா –என்று ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்திலும் அருளிச் செய்கிறார்
யானையினுடைய துதிக்கைகளோடே ஒத்தவையாயும் உருண்டு இருப்பனவாயும் விளங்கா நின்றன -என்கை –
க்ரம க்ருசவ் ச–அடி பருத்து நுனி சிறுத்து இருப்பவை என்றபடி –

———————

யவ்வன வ்ருஷ ககுதோத்பேத நிபம் நிதராம்
பாதி விபோர் உபயம் ஜாநு சுபாக்ருதிகம்
ஸூந்தர புஜ நாம் நோ மந்தர மதி தாப்தே
சந்த நவந விலஸத் கந்தர வ்ருஷ பபதே-60-

மந்தர மதி தாப்தே சந்த நவந விலஸத் கந்தர வ்ருஷ பபதே-ஸூந்தர புஜ நாம் நோ–விபோர் –
சுபாக்ருதிகம் உபயம் ஜாநு -நிதராம்-பாதி —
அழகருடைய முழம் தாள்களை அனுபவிக்கிறார் இதில்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் –என்கிறபடியே
மந்தர மலையை மத்தாக நாட்டிக் கடல் கடைந்தவரும்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –என்கிறபடியே
சந்தனப் பொழில்கள் விளங்கப் பெற்ற திருமாலிருஞ்சோலைக்குத் தலைவரும் –
சுந்தரத் தோளுடையான் என்று திரு நாமம் உடையவருமான பெருமாளுடைய மிக அழகிய உருவம் அமைந்த
முழம் தாளிணை யானது மிகவும் விளங்கா நின்றது –
அது தான் எங்கனே உத் ப்ரேஷிக்கலாம் படி இரா நின்றது என்னில் –
யவ்வன வ்ருஷ ககுதோத்பேத நிபம் –யவ்வனமாகிற வ்ருஷப ராஜத்தின் முசுப்புக்கள் தான் முழம் தாள்களாக
மிளிர்கின்றன என்னலாம் படி இரா நின்றது –
வ்ருஷபத்துக்கு முசுப்பானது அசாதாரண நிரூபகம் ஆவது போலே திரு முழம் தாள்கள் எம்பெருமானுடைய
நித்ய யவ்வனத்துக்கு அசாதாரண நிரூபகமாய் இரா நின்றது என்றபடி —
ஸ்யா துஷ்ணோர் வா காகுத்தயுகலம் யவ்வன ஐஸ்வர்ய நாம்நோ –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
யுவா குமாரா –யுவா அ குமாரா –கௌமாரம் கழியும் தசையாயும் யவ்வனம் வந்து தலைக்கட்டும் தசையாயும்
இருக்கப் பெற்ற நிலையே எம்பெருமான் பருவம் என்றதாயிற்று –அது தான் யவ்வனம் என்னப் படுகிறது –

——————-

அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே
விலங்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹதோ த்ருஸவ்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –61-

அழகருடைய திருக் கணைக் கால்கள் அனுபவிக்கிறார் இதில் –
அழகருடைய திருவடிகளானவை கீழ் முகமாக வைக்கப்பட்ட தாமரை மலர்கள் போன்று இருப்பனவாகவும்
திருக் கணைக் கால்கள் அத்தாமரைகளின் நாள தண்டங்களோ என்னலாம் படி இருப்பனவாகவும் அருளிச் செய்கிறார்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய —அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே -ஜங்கே-விலங்க்ய —
அதோ முகமாக வைக்கப்பட்ட திருவடித் தாமரைகளினுடைய வ்ருத்தாகரமாய் ஆயுதமாய் இருக்கின்ற
அழகிய நாள தண்டங்களை ஒத்த திருக் கணைக் கால்களைத் தவிர்த்து
மே -த்ருஸவ் -க்வ நு ரம்ஹதோ —
என்னுடைய கண்களானவை வேறு எங்குச் செல்லும் -எங்கும் செல்லாது –
இத்திருக் கணைக் கால்களையும் அனுபவித்து நிற்கும் அத்தனை என்றதாயிற்று –
திருவடித் தாமரைகளை அதோ முகமாக வைக்க வேண்டிய காரணம் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –
ப்ரேம்நா க்ராதும் கரி கிரி சிரோதோ முகீ பாவ பாஜோ அங்க்ரி த்வந்த் வாஹ்வய கமலயோர் தண்ட
காண்டாய மாநே -என்று அருளிச் செய்த படியே
திருமலையின் போக்ய அதிசய ப்ரயுக்தமான ப்ரீதி விசேஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என்று
நினைத்துத் திருவடித் தாமரைகள் கீழ் முகம் ஆக்கப் பட்டன -என்க –

———————————–

ஸூ ஸூந்தரஸ் யாஸ்ய பதாரவிந்தே பதார விந்தாதிக ஸுவ்குமார்யே
அதோந்யதா தே பிப்ர்யாத் கதம் நு ததா சநம் நாம சஹஸ்ர பதம் –62-

இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் திருவடி இணைகளும் ஆசன பத்மமுமான சேர்த்தி அழகை
உத்ப்ரேஷை யோடும் கூட அனுபவிக்கிறார்
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை –திருவாய் -4-5-8-குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட
திருவடிகளை உடையவன் என்கை –
எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே பத்மாசனம் ஓன்று உண்டே -அதன் மேல் அன்றோ திருவடிகள் விளங்குகின்றன —
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -என்ற பாசுரமும் இங்கே அனுசந்தேயம்
குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியில் தாமரைப் பூவானது திருவடிக்குத் தோற்று அன்றோ சுமக்கிறது
இந்த விஷயத்தை இதில் சாமான்யமாக அனுபவித்து அடுத்த ஸ்லோகத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார்
அஸ்ய -ஸூ ஸூந்தரஸ் பதாரவிந்தே –அழகருடைய திருவடித்தாமரைகள்
பதார விந்தாதிக ஸுவ்குமார்யே -ஆசன பத்மத்தைக் காட்டிலும் அதிசயித்த ஸுவ்குமார்யத்தை உடையன
இது எங்கு தெரிகிறது என்னில்
அதோந்யதா-கீழ்ச் சொன்ன படி யல்லவாகில்
ஆசநம் நாம –தத் சஹஸ்ர பத்ரம் —தே -கதம் நு பிப்ருயாத் –ஆசன பத்மம் என்று பிரசித்தமான அந்தத் தாமரை யானது
திருவடித் தாமரைகளை ஏன் சுமக்கும் -தோற்றதால் அன்றோ சுமக்கிறது என்று திரு உள்ளம் –
இது அடுத்த ஸ்லோகத்தில் விசதமாகும் –

——————-

ஸுவ்ந்தர்ய மார்த்தவ ஸூ கந்த ரஸ ப்ரவாஹை
ஏதே ஹி ஸூந்தர புஜஸ்ய பதார விந்தே
அம்போஜ டம்ப பரி ரம்பண மப்யஜைஷ்டாம்
தத் வை பராஜி தமிமே சிரஸா பிபர்த்தி –63-

ஸூந்தர புஜஸ்ய ஏதே பதார விந்தே
ஸுவ்ந்தர்ய மார்த்தவ ஸூ கந்த ரஸ ப்ரவாஹை –அழகு மென்மை நறுமணம் மகரந்த ரஸ ப்ரவாஹம்
ஆகிய இவற்றால்
அம்போஜ டம்ப பரி ரம்பண மப்யஜைஷ்டாம் –தாமரை மலரின் செருக்குக் கிளர்ச்சியை வென்று ஒழித்தன
தத் வை பராஜிதம் -ஸத் -இமே சிரஸா பிபர்த்தி –அந்தத் தாமாரையானது பராஜிதமாகி
இத்திருவடிகளை ஆசன பத்மமாகக் கொண்டு சுமந்து இரா நின்றது –

———————

ஏதே தே பத ஸூந்த ராஹ்வய ஜூஷ பாதார விந்தே சுபே
யந் நிர்னே ஜசமுத்தித த்ரி பதகர ஸ்ரோதஸ்ஸூ கிஞ்சித் கில
தத்தேசவ் சிரஸா த்ருவஸ் ததபரம் ஸ்ரோதோ பவா நீபதி
யஸ்யாஸ்ய அலக நந்திகேதி நிஜகுர் நாமைவமந் வர்த்தகம் –64-

யந் நிர்னே ஜசமுத்தித த்ரி பதகர ஸ்ரோதஸ்ஸூ –பண்டு ஒரு நாள் த்ரிவிக்ரம அவதாரம் செய்து அருளினை காலத்தில் –
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர்ப் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு –நான்முகன் -9-என்று
அருளிச் செய்தபடி திருவடி விளக்கினை தீர்த்தம் பலமுகமாகப் பெருகிற்றே -அவற்றுள்
கிஞ்சித் கில அசவ் த்ருவஸ் சிரஸா தத்தே–ஒரு பெருக்கை உத்தான பாத சக்ரவர்த்தி புதல்வனான
த்ருவன் தன் தலையால் தங்கி நிற்கிறான்

யஸ்யாஸ்ய அலக நந்திகேதி ஏவம் நாம அந் வர்த்தகம் –நிஜகுர்–யாதொரு பெருக்குக்கு -அலக நந்தா -என்று
இங்கனே வழங்கி வரும் பெயரை அந்வர்த்தமாகச் சொல்லுகிறார்களோ -அதனை பரமசிவன் தாங்குகின்றான் என்கை –
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை –என்று
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த படியே சங்கரனுடைய அலக சம்பந்தம் பெற்றது காரணமாகவே -அலக நந்தா-என்று பெயர் பெற்றதாயிற்று
ஸூந்த ராஹ்வய ஜூஷ- தே -ஏதே– பாதார விந்தே சுபே –அழகருடைய இந்தத் திருவடித் தாமரைகள் பரம போக்யங்கள்
த்ருவனும் சிவனும் சிரஸா வஹிக்கும் படியான பெருக்குகளை உடைய கங்கைக்கு உத்பத்தி பூமியான
அழகர் திருவடிகள் பரம போக்யங்கள் என்றதாயிற்று –

————–

ஆம்நாய கல்பலதி கோத்த ஸூ கந்தி புஷ்பம்
யோகீந்த்ர ஹார்த ஸரஸீருஹ ராஜ ஹம்சம்
உத்பக்வ தர்ம சஹகார பல பிரகாண்டம்
வந்தேய ஸூந்தர புஜஸ்ய பதார விந்தம் –65–

ஆம்நாய கல்பலதி கோத்த ஸூ கந்தி புஷ்பம் –வேதங்கள் ஆகிற கற்பகக் கொடியில் நின்றும் உண்டான
நறு மணம் மிக்க மலர்களோ இவை -என்னலாய் இருந்தது –
வேதங்களில் பரிமளிக்கும் இத்திருவடிகள் -வேத ப்ரதிபாத்யங்கள் -என்று கறுத்து –
யோகீந்த்ர ஹார்த ஸரஸீருஹ ராஜ ஹம்சம் –யோகி ஸ்ரேஷ்டர்களின் ஹ்ருதய கமலங்களில் விளங்கும்
ராஜ ஹம்சங்களோ இவை -என்னலாய் இருந்தது -யோகி த்யேயங்கள்-என்றபடி –
உத்பக்வ தர்ம சஹகார பல பிரகாண்டம்–பரி பக்குவமான தர்மம் ஆகிற தேன் மாம்பழங்களோ இவை
என்னலாய் இருந்ததோ –
த்யான பலமும் இவையேயாய் –பரம புருஷார்த்தமாய் இருப்பவை என்றவாறு
பிரகாண்ட–சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம் -ஆக இப்படிப்பட்ட
ஸூந்தர புஜஸ்ய பதார விந்தம் –வந்தேய-சுந்தரத் தோளுடையானுடைய திருவடித் தாமரையை
வணங்கக் கடவேன்

——————–

ஸூ ஸூந்தரஸ் யாஸ்ய து வாமநாக்ருதே
க்ரம த்ரய ப்ரார்த்திநி மாநஸே கில
இமே பதே தாவத் இஹ அஸஹிஷ்ணு நீ
வி சக்ரமாதே த்ரி ஜகத் பத த்வயே–66-

என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ வடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப –
மூவடி வேண்டி இரண்டு அடிகளால் முடித்து விட்டதால்
ஆஸ்ரித சம்ரக்ஷண த்வர அதிசயம் -சொல்லிற்று ஆகிறது –
வாமநாக்ருதே—அஸ்ய –ஸூ ஸூந்தரஸ் –பண்டு வாமன மூர்த்தியாகக் கோலம் கொண்ட இவ் வழகருடைய
மாநஸே–திரு உள்ளமானது
க்ரம த்ரய ப்ரார்த்திநி சதி–மஹா பலி பக்கலிலே மூவடி வைப்புக்கு உரித்தான மூவடி நிலம் வேண்டி இருக்கையில்
கில இமே பதே தாவத் இஹ அஸஹிஷ்ணு நீ–இத் திரு வடிகளோ என்னில்
இந் நிலத்திலே மூவடி வைப்பை ஸஹிக்க மாட்டாதவைகளாய்
த்ரி ஜகத் பத த்வயே–வி சக்ரமாதே–மூ உலகங்களையும் இரண்டு வைப்பில் கொள்ளை கொண்டன வாயின
எம்பெருமானுடைய திரு உள்ளத்தைக் காட்டிலும் திருவடிகளின் செயல் த்வராதிசயத்திலே
வியக்கத்தக்கது என்று கருத்து –

———————–

ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி
ஸ்ரேநீஷு பாதாங்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்த்ர ச்ரியமாத் மகாந்த்யா
நகா வலீ சும்பதி ஸூந்தரஸ்ய –67-

திரு நகங்களை வர்ணிக்கிறார் –திரு விரல்களின் வர்ணமும் அர்த்தாத் சித்திக்கும் –
அழகர் திரு மேனியில் அழகு என்னும் அமுதக்கடல் ஓன்று உண்டாயிற்று -கடல் இருந்தால் அலைகள் இருக்க வேணுமே –
அந்த அலைகள் தானோ என்னலாம் படி திரு விரல்கள் -அத்திரு விரல்களில் திரு நகங்கள்
சந்திரனுடைய ஒளியையும் திரஸ்கரித்து மிக அழகியவாக விளங்குகின்றன -என்கிறார்
ஸூந்தரஸ்ய –அழகருடைய
பாதாங்குலி நாமிகாஸூ ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷு –திருவடி விரல்கள் ஆகிற
ஸுவ்ந்தர்ய அமுத சாகர தரங்க பரம்பரைகளிலே
நகா வலீ மாத்ம காந்த்யா-சந்த்ர ச்ரியம்
ந்யக்க்ருத்ய சும்பதி–திரு நகங்களின் வரிசையானது தன் ஒளியினால் சந்திரன் ஒளியையும் கீழ்ப் படுத்தி விளங்கா நின்றது –

——————-

யோ ஜாத க்ரஸிமா மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்புநா
சோயம் யத் சரணாஸ்ரயீ சசதரோ நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் ததா
யாதஸ் தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –68-

திரு நகங்கள் -சந்த்ர சத்ருசமான அளவே அன்று -தேவதாந்த்ர ஸமாச்ரயணத்தால் வந்த குறை தீர
நக வ்யாஜத்தாலே அழகர் திருவடிகளை ஆஸ்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்ணன் ஆனான் என்கிறார்
யோ சசதரோ-சம்புநா -சிரஸா -சம்பாவிதச் -சந் -ஜாத க்ரஸிமா ஜாத க்ரஸிமா மலீ ச -அபூத் –யாவன் ஒரு சந்திரன்
சிவன் சிரஸ்ஸாலே தரிக்கப்பட்டவனாகி ஷயிஷ்ணுவும் களங்கியும் ஆனானோ
சோயம் -நக வ்யாஜத -யத் சரணாஸ்ரயீ சந் பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் யாத–எப்போதும்
பூர்ணனாய் இருக்கை -நிஷ் களங்கனாய் இருக்கை -ஒளி மிக்கு இருக்கை -பல வடிவு பெற்று இருக்கை –
ஆகிய இத்தன்மையை அடைந்தானோ
தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –அந்த திருமாலிருஞ்சோலைமலை அழகரை வணங்குகிறோம்
ததா நூநம் –இப்படி அருளிச் செய்தது உத்ப்ரேஷ அலங்கார ரீதியில் என்பதைக் காட்டுகிறது -நூநம் -என்பது
பஹுத்வம் அடைந்தான் என்றது பத்து திரு நகங்களும் பத்து சந்திரன் போலே விளங்கி
எப்போதும் புஷ்கலமாய் அ களங்கமாய் ஜாஜ்வல்யமானமாய் இருப்பதும் சொல்லிற்று ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: