ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்–26 -38–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஏஷு ஏகஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாஸ்ரயம்
குர்யாத் தாத்ருச வைபவைர் அகணிதைர் நிஸ் ஸீம பூமாந்விதை
நித்யைர் திவ்ய குணைஸ் ததோதிக சுபத்வைகாஸ் பதாத்மாஸ்ரயை
இத்தம் ஸூந்தர பாஹுமஸ்மி சரணம் யாதோ வநாத் ரீஸ்வரம் –26-

ஏஷு ஏகஸ்ய குணஸ்ய விப்ருடபி வை லோகோத்தரம் ஸ்வாஸ்ரயம் குர்யாத் —
கீழே பிரிய அனுசந்தித்த கல்யாண குணங்களும் ஒன்றை -அதிலும் ஏக தேசம் -விப்ருடபி-பிந்து –
யத் கிஞ்சித் அம்சமாக இருந்தாலும் அதனுடைய உத்கர்ஷம் வாக்குக்கு நிலம் இன்றிக்கே இருக்கும்-
தாத்ருச வைபவைர் –ஏக தேச சம்பந்த மாத்திரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தை நிறம் பெறுவிக்க வல்ல
பெருமை ஒவ் ஒரு திருக் குணத்துக்கும் உண்டே
அகணிதைர் -கடலில் மணலை என்ன முடிந்தாலும் இவற்றின் வகைகளையே எண்ணி முடிக்க முடியாதே
நிஸ் ஸீம பூமாந்விதை –இங்கு அப்பர்யாப்தி பிறவாமல் -தாத்ருச வைபவைர்-கீழே இருந்தாலும் —
யத்யத் நான்யத் பச்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜா நாதி ச பூமா —
சிந்தை மற்று ஒன்றின் திறத்து ஆகாதபடி துவக்க வல்லவை அன்றோ
நித்யைர் –ஆகமாபாயி அன்றிக்கே ஸ்வரூப அநு பந்திகளாய் இருக்குமே
ததோதிக சுபத்வைகாஸ் பதாத்மாஸ்ரயை –கீழே குணஜம் குணி நோ ஹி மங்கலத்வம் -22-அருளிச் செய்தபடி
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இவை பெருமை பெற்ற படி
ஆக இப்படிப்பட்ட
திவ்ய குணைஸ் –இத்தம் ஸூந்தர பாஹுமஸ்மி சரணம் யாதோ வநாத் ரீஸ்வரம் –திருக் கல்யாண குணங்களால்
நிறைந்த அழகரைச் சரணம் அடைந்தேன் –

—————

ஞான குண அனுபவம் இதில் -ஷாட் குணங்களில் மற்ற ஐந்தையும் அடுத்த ஸ்லோகத்தில் அனுபவம் –

சதா சமஸ்தம் ஜெகதீ ஷதே ஹி ய
ப்ரத்யக்ஷ த்ருஷ்ட்யா யுகபத் புவா ஸ்வதஸ்
ச ஈத்ருஸ ஞான நிதிர் நிதிஸ் து ந
சிம்ஹாத்ரி குஞ்ஜேஷு சகாஸ்தி ஸூந்தர -27-

ய –யாவன் ஒரு பகவான்
ஸ்வதஸ் யுகபத் புவா ப்ரத்யக்ஷ த்ருஷ்ட்யா –ஒரு கிலேசம் இன்றிக்கே இயற்கையாகவே பவ்ர்வாபர்யம் இன்றிக்கே
ஏக காலத்தில் உண்டான ப்ரத்யக்ஷ த்ருஷ்டியாலே
சமஸ்தம் ஜெகத் சதா யீஷதே ஹி –சகல பிரபஞ்சங்களையும் என்றும் ஓக்க சாஷாத் கரியா நின்றானோ
ஈத்ருஸ ஞான நிதிர் ச –இப்படிப்பட்ட யுகபாத் சர்வ சாஷாத்கார சமமான ஞானத்துக்கு நிதியான அந்த பகவான்
ந நிதிஸ் ஸந்–அந்தர் ஹிதா நிதி ராசி த்வம் அசேஷ பும்ஸாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தபடி
அக்ஷய்ய நிதியாய்க் கொண்டு
ஸூந்தர சிம்ஹாத்ரி குஞ்ஜேஷு சகாஸ்தி –அழகப் பிரானாய் திருமாலிருஞ்சோலை மலையின் லதா க்ருஹங்களிலே
சேவை சாதியா நின்றான் என்றார் ஆயிற்று
வநாத்ரி வ்ருஷாத்ரி போலே சிம்ஹாத்ரி என்பதும் உண்டு
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை –பெரிய திருமொழியில் நோக்கு

——————

ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தயே
கீத்ருக் விதாஸ் ஸூந்தர பாஹு ஸம்ஸ்ரயா
யோசவ் ஜெகஜ் ஜென்ம லய ஸ்திதி க்ரியாஸ்
சங்கல்ப தோல்பா து பகல் பயத்யஜ –28-

யோசவ் அஜஸ் –யாவர் ஒரு அழகர்
அல்பாத் சங்கல்ப –மிகச் சிறிய சங்கல்பம் கொண்டே
ஜெகஜ் ஜென்ம லய ஸ்திதி க்ரியாஸ் சங்கல்பயதி –சகல ஜகத்துக்களினுடைய ஸ்ருஷ்ட்டி ஸ்திதி
சம்ஹாரங்களை நடத்திக் கொண்டு போருகிறாரோ
ஸூந்தர பாஹு ஸம்ஸ்ரயா -அப்படிப்பட்ட அழகரை அவலம்பித்துக் கொண்டு இருக்கிற
ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தயே கீத்ருக் விதாஸ் –ஐஸ்வர்யம் தேஜஸ்ஸூ பலம் வீர்யம் சக்தி
ஆகிற இக்குணங்களின் அந்தோ எப்படி பட்டவை
அபரிச்சேதயமான வைபவத்தை உடையவர்கள் அன்றோ

—————–

ஷமா குண சீர்மை அனுபவம் -ஒரு பிரணாம மாத்திரத்திலே ஷமித்து அருளுகிறார் அழகர் அன்றோ –

யத் கல்பாயுத போகதோபி க்ருசதாம் யாயாந் ந தாவத் பலம்
யேஷ்வே கஸ்ய ததா விதைஸ் சதத ஜைரம் ஹோபி ருத்ஸீ மபி
அஸ்தாதா விஹ ஸம்ஸ்ருதாவு பஸிதைச் சந்நம் ஸூ சந்நம் ஜனம்
சந் நத்யா ஷமதே க்ஷணாத் வந கிரி ப்ரஸ்த பிரியஸ் ஸூந்தர –29-

யத்–அம்ஹஸ் – கல்பாயுத போகதோபி க்ருசதாம் ந யாயாத்– யாதொரு பாபம் பதினாயிரம் கல்பம்
பல அனுபவம் செய்யப் பெற்றாலும் க்ஷயிக்க மாட்டாது
தாவத் பலம் யேஷ்வே கஸ்ய -எந்த பாபங்களுள் ஒரு பாபத்திற்கு அவ்வளவு மிடுக்கு உள்ளதோ
ததா விதைஸ் –அப்படிப்பட்டவைகளாய்
சதத ஜைரம்–இடைவீடு இன்றிக்கே செய்யப்படுமவையாய்
உத்ஸீ மபி –எல்லை கடைந்தவையாய்
அஸ்தாதா விஹ ஸம்ஸ்ருதாவு பஸிதைச்–அநாதியான இந்த சம்சார மண்டலத்தில் வளர்ந்து செல்லுமவையான
அம் ஹோபி சந்நம் -பாபங்களால் திரோஹித ஆத்ம ஸ்வரூபனாய்
ஸூ சந்நம் ஜனம் –அத ஏவ ஸூ தராம் அவசன்னனான ஒரு பிராணியை
வந கிரி ப்ரஸ்த பிரியஸ் ஸூந்தர –திருமாலிருஞ்சோலை அடிவாரத்தில் திருந்த உள்ளம் உகந்து வர்த்திக்கும் அழகர்
சந் நத்யா ஷமதே க்ஷணாத் –பிரணிபாத பிரதீ காரஸ் சம்ரம்போ ஹி மஹாத்மநாம் –என்று
காளிதாசன் சொன்னபடியே பிரணிபாத மாத்திரமே பற்றாசாக நொடிப் பொழுதிலே ஷமைக்கு இலக்கு ஆக்குகிறான்
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநுபவேபி –ஸ்ரீ வைகுண்ட ஸ்த்வ ஸ்லோகம் இங்கு அனுசந்தேயம்

———–

யஞ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ
பாதச் சாயாம் ஸம்ஸ்ரிதோ யோபிகோபி
தஜ்ஜாதீயஸ் தாத்ருஸஸ் தத் ஸ்வ பாவஸ்
ஸ்லிஷ்யத்யேநம் ஸூந்தரோ வத்சலத்வாத் –30-

யஞ்ஜாதீயோ–தேவாதி ஜாதிகளில் ஏதேனுமாகவுமாம்
யாத்ருசோ –ஒழுக்கத்தில் ஏதேனுமாகவுமாம்
யத் ஸ்வ பாவ –இயல்பு ஏதேனுமாகவுமாம்
யோபிகோபி-இன்னான் இனையான் என்று இல்லை –எவனாகவுமாம் –
பாதச் சாயாம் ஸம்ஸ்ரிதோ –திருவடி நிழலில் ஒதுங்கினானாக அமையும்
ஏனம் ஜனம் -இப்படிப்பட்ட பிராணியோடே
ஸூந்தரோ வத்சலத்வாத் –அழகர் தம்முடைய வாத்சல்யமே பற்றாசாக
தஜ்ஜாதீயஸ் தாத்ருஸஸ் தத் ஸ்வ பாவஸ் சந் ஸ்லிஷ்யதி –வேற்றுமை இன்றி ஒக்கக் கலந்து பரிமாறுகிறார்
கீழே அபராத ஸஹிஷ்ணுதாவ ரூப மாகிற ஷமா குண அனுபவம்
இதில் தோஷ போக்யதா ரூபமான வாத்சல்யத்தை அனுபவிக்கிறார்
எக்குற்றவாளர் ஏது இயல்பு ஏது பிறப்பாக நின்றாலும் உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் திருமாலிருஞ்சோலை எந்தாய்

———————

நிஹீநோ ஜாத்யா வா ப்ருசம குசலைர்வா ஸ்வ சரிதைஸ்
புமாந் வை யஸ் கச்சித் பஹு த்ருணமபி ஸ்யாத குணதஸ்
பஜந்தம் தம் பஸ்யேத் புஜகபதிநா துல்யமபி யஸ்
வநாத்ரி ப்ரஸ்தஸ் தஸ் ச மம சரணம் ஸூந்தர புஜஸ் –31-

யஸ் கச்சித் புமாந் வை-பெயர் இட்டுச் சொல்ல ஒண்ணாதவன் எவன் ஆகிலும்
ஜாத்யா வா ப்ருசம நிஹீநோ–ஜாதியினால் தண்ணியனாகவுமாம்
அ குசலைர் ஸ்வ சரிதைஸ் வா ப்ருசம நிஹீநோ–தீய நடத்தைகளினால் தண்ணியனாகவுமாம்
அகுணதஸ் பஹு த்ருணமபி ஸ்யாத் –ஒரு குணம் இல்லாமை பற்றி த்ருண ப்ராயனாகவுமாம்
ஆக இங்கனே சர்வாத்மா தண்ணியனாய் இருந்தானே யாகிலும்
பஜந்தம் தம் புஜகபதிநா துல்யமபி யஸ் பஸ்யேத் –பகவத் பஜனம் என்கிற குணம் அவனிடம் வாய்க்குமாகில் –
அன்னவனை ஆதி சேஷனோடே ஒக்கவுமாம் கடாக்ஷித்து அருளா நின்றான் யாவன் ஒருவன்
ச வநாத்ரி ப்ரஸ்தஸ் தஸ் ஸூந்தர புஜஸ் மம சரணம் –அழகர் தானே எனக்குப் புகல்
குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு –பின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவரானோம்-
எம்முழை யன்பின் வந்த அகனமர் காதலையே நின்னோடும் எழுவரானோம்
இந்த பஹு குணம் அசம்பாவிதம் அன்றோ

——————-

ஏக ஏக மங்கள குண அனுபவ அபி நந்தம்
ஈத்ருக்த இயா நிதி ச ஸூந்தர தோஷ்ணி கிருஷ்னே
தேயே சதந்த் விதி நியந்து மநாஸ் ஸ்ருதிர் ஹை
நைவை ஷ வாங் மனச கோசர இத்யுதாஹ –32-

ஸூந்தர தோஷ்ணி கிருஷ்னே–அஸங்க்யேய கல்யாண குண கண நிதியான ஸூந்தர தோளுடையான் பக்கலிலே
ஏக ஏக மங்கள குண அனுபவ அபி நந்தம்–ஒவ்வொரு திருக் கல்யாண குணத்தையும் அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தத்தை
ஈத்ருக்த இயா நிதி நியந்து மநாஸ் ஸ்ருதிஸ் து –இப்படிப்பட்டது என்றும் இவ்வளவற்றது என்றும்
பரிச்சேதிக்கப் புகுந்த வேதமோ என்னில்
தேயே சதந்த் விதி ஹை ஏஷ வாங் மனச கோசர நைவ இத்யுதாஹ –இது வாக்குக்கும் மனசுக்கும் எட்டவே மாட்டாது
என்று சொல்லித் தலைக்கட்டிற்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலும் -51-த்ரயீ யுத்யதா தவ யுவத்வமுகைர் குணவ்கை –என்ற ஸ்லோகமும்
இதே பொருளில் -அங்கும் நான்காவது பாதம்-நைவை ஷ வாங் மனச கோசர இத்யுதாஹ-என்று அமைந்து இருக்கும் –
ஸ்தோத்ர ரத்னம் -உபர்யுபர்யப்ஜபுவோபி –ஸ்லோகமும்
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்திலும் -மர்த்யோத்தாயம் விரிஞ்சாவதிகம் -ஸ்லோகமும்
ஆனந்த வல்லி பிரிகிரியை அடி ஒற்றி அமைத்துள்ளவை

—————

திருக்கல்யாண குண அனுபவத்தில் இருந்து
திவ்ய மங்கள விக்ரஹ ஸுந்தர்ய லாவண்யாதி அனுபவங்களில் தோள் மாறுகிறார்

அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தல மஞ்ஜன ப்ரபம்
ஸூந்தரோரு புஜம் இந்திரா பதிம் வந்தி ஷீய வரதம் வநாத்ரிகம் –33-

அப்ஜம் -அரவிந்தம் -பத்மம் -பதபேதமே ஒழிய அர்த்த பேதம் இல்லை –
தாமரை கமலம் அரவிந்தம் என்று ஆழ்வார்கள் அனுபவித்தது போலவே
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா —
அப்ஜம் நு கதம் நிதர்சனம் -என்று இந்த ஸ்தவத்திலும் அருளிச் செய்வார்
அப்ஜ பாதம் –செந்தாமரை போன்ற திருவடிகளை உடையவன்
அரவிந்த லோசனம் –அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணான்
பத்ம பாணி தலம் –பத்மம் என்னலாம் படியான திருக்கைத்தலம் உடையவன்
பத்மத்தைப் பாணி தலத்திலே உடையவன் -என்னவுமாம் –
அப்போது பத்மம் என்றது பத்ம ரேகையைச் சொன்ன படி –
பத்மத்தைக் கையிலே தரித்து சேவை சாதிப்பதும் உண்டே -அதை சொல்லிற்று ஆகவுமாம்
செம் பொன் இலங்கு –ஒண் மலர் பற்றி -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ அட்டபுயகரப் பதிகத்தில் -அருளிச் செய்கிறார்
அஞ்ஜன ப்ரபம் –மைப்படி மேனி அன்றோ –
அஞ்சன வண்ணனை என்றும் –
அஞ்சனம் புரையும் திரு வுருவன் என்றும் ஆழ்வார்கள் வாய் புலற்றுவர்களே
ஸூந்தரோரு புஜம் –அழகியவாய் நீண்டவையான திருத்தோள்களை யுடையவன்
இந்திரா பதிம் –திரு மகளார் தனிக்கேள்வன்
வந்தி ஷீய வரதம் வநாத்ரிகம் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ வரதனே
ஸ்ரீ வநாதரியிலும் சேவை சாதித்து அருளுகிறார் ஸ்ரீ ஆழ்வானுக்கு
நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
நின்றவூர் நித்திலத்தைக் கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே –என்பவை போலே

——————–

கநக மரகத அஞ்சனத்ரவாணாம்
மதன சமுத்தித சார மேல நோத்தம்
ஜயதி கிமபி ரூபம் அஸ்ய தேஜஸ்
வந கிரி நந்தன ஸூந்தரோரு பாஹோ–34-

திவ்ய மங்கள விக்ரஹ லாவண்யா அனுபவம்
அஸ்ய வந கிரி நந்தன ஸூந்தரோரு பாஹோ–கிமபி ரூபம் தேஜஸ் – ஜயதி –பரம விலக்ஷண தேஜஸ்ஸூ
கிமபி ரூபம்-ஸமஸ்த பதமாகவும் இரண்டு பதங்களாகவும் கொள்ளலாம் –
அநிர்வச நீயமான ரூபம் என்று ஸமஸ்த பதமாகவும்
தேஜஸ் -கிமபி ரூபம் – ஜயதி–தேஜோ மயமான ஓர் உருவம் திகழ்கின்றது என்று வ்யஸ்த பதமாகவும் கொள்ளலாம்
கநக மரகத அஞ்சனத்ரவாணாம் மதன சமுத்தித சார மேல நோத்தம்–
கனகம் மரகதம் அஞ்சனம் இவற்றை உருக்கி -அந்த திரவத்தை தனித்தனியே மதனம் பண்ணி –
அதை வடிகட்டி ஓன்று சேர்த்தால் போலே உள்ளதாம் -அழகருடைய திரு உருவம் –
மதனம் பண்ணுகை புடம் போடுகை-
அநந்தரம் வெளிறு கழித்து சாரத்தைத் திரட்டி ஓன்று கூட்டி உண்டாகும்
கூட்டரவே அழகருடைய திவ்ய மங்கள விக்ரஹம் –

——————

கிம் நு ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணம் பவந்
அசவ் அலங்கார இதி ஈரித ஜநை
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம்
வநாசலம் வா பரிதஸ் பிரசாதயந் –35-

அசவ் ஜநை அலங்கார இதி ஈரித –இந்த அழகப் பிரானார் உலகத்தவர்களால் அலங்காரர் என்று வழங்கப்படுகிறார்
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –பெரியாழ்வார்
கிம் நு ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணம் பவந் –ஆபரணாதிகளால் அழகு பெற வேண்டாதே
தனக்குத் தானே அலங்காரமாய் இருப்பதை பற்றி என்னலாமோ -அன்றிக்கே –
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம் வநாசலம் வா பரிதஸ் பிரசாதயந் —
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலையைச் சுற்றிலும் அலங்கரிப்பது பற்றி என்னலாமோ
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –கர்ணிகா தவ கரீச கிமேஷா –ஸ்லோகத்தில் உள்ள உல்லேகங்களை
இங்கு இதற்குப் போலியாக நினைப்பது
ஸ்வயம் ஸ்வாத்ம விபூஷணமாய் இருப்பது பற்றியும்
வந கிரி விபூஷணமாய் இருப்பது பற்றியும் -அலங்காரம் என்று திரு நாமம் ஆயிற்று என்று தாத்பர்யம்
வரத்திஷ்ணு பல த்ரும ஷண்ட மண்டிதம் வநாசலம்–
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை –ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியின் மொழி பெயர்ப்பு

———————

ஸூகஸ் பர்ஸைர் நித்யைர் குஸூ மஸூ குமாராங்க ஸூகதை
ஸூ ஸுவ்கந்த்யைர் திவ்ய ஆபரண கண திவ்ய ஆயுத கணைர்
அலங்கார்யைஸ் சர்வைர் நிகதிம் அலங்கார இதி யஸ்
சமாக்க்யா நம் தத்தே ச வந கிரி நாதோஸ்து சரணம் –36-

ஸூகஸ் பர்ஸைர் –நிரதிசய ஸூகஸ் பர்ஸைர் –கத்யம் –மெத்தென்று இருக்குமவை
குஸூ மஸூ குமாராங்க ஸூகதை–புஷ்ப ஹாஸ ஸூ குமாரங்களான பாதாதி கேசாந்த அவயவங்களுக்குக்
கருமுகை மாலை போலே இனிமையைத் தரும்படி யானவை
ஸூஸுவ்கந்த்யைர்–லோக விலக்ஷணமான திவ்ய பரிமளம் பொருந்தியவை
அலங்கார்யைஸ்–திரு மேனிக்கு சோபாவஹங்களாய் இருக்குமவை
ஆக இப்படிப்பட்ட
சர்வைர் திவ்ய ஆபரண கண திவ்ய ஆயுத கணைர் –சகல திவ்ய ஆபரணங்களாலும் சகல திவ்ய ஆயுத கணங்களாலும்
நிகதிம் அலங்கார இதி யஸ் சமாக்க்யா நம் –தெரிவிக்கப் பட்டதான அலங்காரம் என்னும் திரு நாமத்தை
வந கிரி நாதஸ் தத்தே ச–யாதொரு அழகர் தமக்குத் திரு நாமமாகக் கொண்டுள்ளாரோ
ஸ சரணம் அஸ்து –அவர் நமக்குத் தஞ்சமாகக் கடவர் —
ஆக இந்த ஸ்லோகம் முன் ஸ்லோஹத்துக்கு சேஷபூத மாகி —
கீழே விதர்க்கமாய் -இங்கே நிஷ் கர்ஷமாய் -அலங்கார நாம நிர்வசனம் செய்தார் ஆயிற்று

———————

மகுட மகுட மாலோத்தம்ச சூடா லலாம
ஸ்வலக திலக மாலா குண்டலைஸ் ச ஊர்த்வ புண்ட்ரை
மணி வர வந மாலா ஹார கேயூர கண்ட்யைர்
துளஸீ கடக காஞ்சீ நூபுராத்யைச் ச பூஷை —37-

அஸி ஜலஜ ரதாங்கைச் சார்ங்க கௌமோதகீப்யாம்
அகணித குண ஜாலைர் ஆயுதைர் அப்ய தாந்யை
சதத விதத சோபம் பத்ம நாபம் வநாத்ரே
உபவந ஸூக லீலம் ஸூந்தரம் வந்திஷீய–38-

இவன் இரண்டும் குளகம்–ஏக அந்வயம் –
சில திவ்ய ஆபரணங்களையும் சில திவ்ய ஆயுதங்களையும் அருளிச் செய்து
இவை எல்லாம் ஆபரண கோடியிலே அமைந்து இருக்கும் படியை அருளிச் செய்து தலைக்கட்டுகிறார்

மகுட மகுட மாலோத்தம்ச சூடா லலாம ஸ்வலக திலக மாலா –மகுடம் -திரு அபிஷேகம் என்ன –
மகுட மாலா–திரு அபிஷேகத்தைச் சுற்றி அலங்காரமாகச் சாத்தப்பட்டு இருக்கும் மாலை என்ன –
உத்தம்ச–திரு அபிஷேகத்தின் முனையிலேயாம் ஆபரண விசேஷம் என்ன –
ஸ்வலக திலக மாலா-மாலா சப்தம் இரண்டு இடத்திலும் அன்வயித்து
ஸ்வலக மாலா -திலக மாலா -என்று ஆக்கி திருக்குழல் கற்றைக்குச் சாத்தும் ஆபரணமும்
திரு நெற்றிக்குச் சாத்தும் ஆபரணமும் என்ன
குண்டலைஸ் ச ஊர்த்வ புண்ட்ரை
மகர குண்டலம் என்ன -ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் என்ன
மணி வர வந மாலா –குரு மா மணிப் பூண் என்னப் பட்ட ஸ்ரீ கௌஸ்துபம் என்ன
ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யதே -எனப்பட்ட வனமாலை என்ன
ஹார கேயூர கண்ட்யைர்
துளஸீ கடக காஞ்சீ நூபுராத்யைச் ச பூஷை –ஹாரம் என்னும் முத்து வடங்கள் என்ன –
கேயூரம் என்னும் திருத் தோள் வளைகள் என்ன — கண்ட்யை -காரை என்னும் கண்ட ஆபரணம் என்ன
துளஸீ-தண்ணம் துழாய் மாலை என்ன –
கடகம் என்னும் ஹஸ்த ஆபரணம் என்ன – காஞ்சீ என்னும் –திருவரை நாண் என்ன
நூபுராத்யைச் ச பூஷை –திருவடிச் சதங்கை என்ன
ஆக இவை முதலான திரு ஆபரணங்களாலும் —
இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் உள்ள -சதத விதத சோபம்-என்பதில் அந்வயம் –
ஆக இந்த ஸ்லோகத்தாலே திவ்ய பாஷாணங்களை ஸங்க்ரஹித்தார் ஆயிற்று

அஸி ஜலஜ ரதாங்கைச் –நந்தகம் என்றும்–பாஞ்ச சைன்யம் என்றும் –
ஸூ தர்சனம் என்றும் பேர் பெற்ற வாள் சங்கு சக்கரங்களாலும்
சார்ங்க கௌமோதகீப்யாம் –சார்ங்கம் என்றும் கௌமோதகீ என்றும் பேர் பெற்ற வில் தண்டுகளாலும்
அத -அகணித குண ஜாலைர் அந்யைர் அபி ஆயுதைர் –எண்ணித் தலைக் கட்ட ஒண்ணாத
குண கணங்களை யுடைய மற்றும் உள்ள ஹல முசல பரசு ப்ரப்ருதிகளான ஆயுதங்களாலும்
அப்ய தா சதத விதத சோபம் –நிரந்தரமாக பரம்பின ஸுவ்ந்தர்யத்தை யுடையவரான
பத்ம நாபம் வநாத்ரே உபவந ஸூக லீலம் ஸூந்தரம் வந்திஷீய–அழகரை வணங்கக் கடவேன்

திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணம் போலே திரு மேனிக்கு சோபாவஹமாய் இருக்கப் பெற்ற
வைலக்ஷண்யத்தை அனுபவித்தார் ஆயிற்று –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: