ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்-14-25 –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்துக்கு பிரவேசம் -கீழே -13-ஸ்லோகங்கள் –
திருமலையின் வளம் சொல்லித் தலைக்கட்டினார்
இனி ஸ்ரீ அழகருடைய ஸ்துதியிலே ஒருப்படுகிறார்

பீதாம்பரம் வரத சீதல த்ருஷ்ட்டி பாதம் ஆஜாநு லம்பி புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ மத் மஹா வந கிரீந்த்ர நிவாஸ தீக்ஷம் லஷ்மீ தரம் கிமபி வஸ்து மம ஆவி ரஸ்து–14-

கிமபி வஸ்து மம ஆவி ரஸ்து–அழகர் என்கிற ஒரு பரஞ்சோதி -என் கண் முன்னே –
நெஞ்சின் உள்ளே தோன்றக் கடவது -அது தான் எப்படிப்பட்டது என்னில்
பீதாம்பரம் –பீதாக ஆடைப் பிரானார் –என்கிறபடிஏபி பீதாம்பர தரமாய் இருக்கும்
வரத சீதல த்ருஷ்ட்டி பாதம் –வேண்டுவார் வேண்டின வரங்கள் எல்லாம் அளிக்க வல்லதாய் சீதளமான
கடாக்ஷ வீக்ஷணத்தை உடையதாய் இருக்கும்
ஆஜாநு லம்பி புஜம் –முழம் தாள் அளவும் தொங்குகின்ற புஜங்களை உடைத்ததாயும் இருக்கும்
ஆயத கர்ண பாசம் –தோள் அளவும் நீண்ட திருச் சேவி மடல்களை யுடைத்தாயும் இருக்கும்
ஸ்ரீ மத் மஹா வந கிரீந்த்ர நிவாஸ தீக்ஷம் -திருமாலிருஞ்சோலை மலையிலே நித்ய வாச நிரதமாய் இருக்கும்
லஷ்மீ தரம்–பூவார் திரு மா மகள் புல்கிய மார்பதாயும் இருக்கும்
ஆக இப்படிப்பட்ட ஒரு விலக்ஷண வஸ்து அடியேனுக்கு விளங்க வேணும் என்கிறார்

——————

இனி வேதாந்த பிரகிரியையிலே ஸ்துதிக்க உபக்ரமிக்கிறார்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரத்யந்த்யபி சம் விசந்தி
தத் ப்ரஹ்ம -என்கிற உபநிஷத் கட்டளைப்படியே

ஜநி ஜீவநாப்யய விமுக்தயோ யதோ
ஜெகதாமிதி சுருதி சிரஸ்ஸூ கீயதே
ததிதம் ஸமஸ்த துரித ஏக பேஷஜம்
வந சைல சம்பவம் அஹம் பஜே மஹ –15-

ஜெகதாம் ஜநி ஜீவநாப்யய விமுக்தயோ -ஜகத்துக்களுக்கு எல்லாம் உத்பத்தி -ஸ்திதி -லயங்களும் –
மோக்ஷ பிராப்தியும்
கீழே சொன்ன உபநிஷத் படியும் அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ கீதா ஸித்தமான விமுக்தியையும் சேர்த்து அருளிச் செய்கிறார்
யதோ இதி சுருதி சிரஸ்ஸூ கீயதே –யாதொரு பரஞ்சோதியிடத்தின் நின்றும் ஆகின்றன என்று
வேதாந்தங்களிலே ஓதப்படுகின்றதோ
கீயதே -பத பிரயோகம் ஸ்ரீ கீதா ஸ்லோக அர்த்தத்தையும் சேர்த்து அருளிச் செய்ததுக்கு சேர –
வீடாம் தெளி தரு நிலைமையது ஒழிவிலன் –என்று ஆழ்வாரும்
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பவ ஸ்திதி பிராணா ச சம்சார விமோசன –என்று ஆளவந்தாரும்
அருளிச் செய்ததை அடி ஒற்றியே இங்கும்
ஸமஸ்த துரித ஏக பேஷஜம் –சகல பாபங்களும் அரு மருந்தாய்
வந சைல சம்பவம்–திருமாலிருஞ்சோலை மலையிலே தோன்றிற்றாக உள்ள
ததிதம் மஹ –அஹம் பஜே -அப்படிப்பட்ட பரஞ்சோதியை நான் பஜிக்கிறேன்

———————-

ஸத் ப்ரஹமாத்ம பதைஸ் த்ரயீ சிரஸி யோ நாராயண உக்தயா ததா
வ்யாக்யாதோ கதி சாம்ய லப்த விஷய அநந்யத்வ போத உஜ்ஜ்வலை
நிஸ் துல்யாதி கமத் விதீயம் அம்ருதம் தம் புண்டரீகேஷணம்
ப்ராரூடஸ்ரியம் ஆஸ்ரயே வநகிரேஸ் குஞ்ஜோதிதம் ஸூந்தரம்–16-

கதி சாம்ய
சகல சாகா ப்ரத்யய நியாயம் -சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் -இரண்டையும் சொன்னபடி
சாந்தோக்யம் -ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்
வாஜசநேயகம் –ப்ரஹ்மம் வா இதம் ஏவ அக்ர ஆஸீத்
இப்படி அந்த சத்தான வஸ்துவே பெரியதான ப்ரஹ்மம் என்று சொல்லி
மம யோ நிர் மஹத் ப்ரஹ்ம
தத் ஞான ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம் -என்று இருப்பதால் ப்ரஹ்ம சப்தம் சேதன அசேதன சாதாரணம் ஆகையால்
ஐதரேயகத்தில் -ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சனமிஷத் –என்று
சேதனுக்கே என்னுமத்தை சொல்லி -இவன் இந்த்ராதிகள் இல்லை நாராயணனே என்னும் இடத்தை
நாராயண அனுவாகம்–ஸூ பால உபநிஷத்துக்கள்-
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந -இத்யாதிகளில் ஸ்பஷ்டமாக நிஷ்கர்ஷித்துக் கொடுத்தனவே

கதி சாம்ய லப்த விஷய அநந்யத்வ போத உஜ்ஜ்வலை
அந்த நாராயணனே இங்கே சேவை சாதித்து அருளுகிறார்
ஏஷ ஈஸ இதி நிர்ணயம் த்ரயீ பாகதேய ரஹிதஷூ நோ திசேத் ஹஸ்தி தாமநி ந நிர்ணயேத க தேவராஜம்
அயம் ஈஸ்வரஸ் த்விதி –என்று பரத்வ நிஷ்கர்ஷம் வேதாந்தங்களில் போலே
ஆயாச பாஹுல்யமாய் இல்லாமல் திவ்ய தேசத்தில் எளிது அன்றோ

நிஸ் துல்யாதிகம் –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ந தத் சமாச் ச அப்யதிகச்ச த்ருச்யதே
உபமான உபமேயத்வம் யத் ஏகஸ்யைவ வஸ்துந —
இந்துர் இந்துர் இவ ஸ்ரீ மான் –ககனம் ககனாகாரம் -சாகரஸ் சாகர உபம –
ராம ராவணயோர் யுத்தம் ராம ராவணயோரிவ —
தானே தனக்கு உவமன்-தன் ஓப்பான் தானாய் உளன் காண் –

அத்விதீயம் அம்ருதம் -ரஸோ வை ச –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே –
விலக்ஷண திவ்ய அம்ருதம் போலே பரம போக்யன்

புண்டரீகேஷணம்
தாமரை போல் கண்ணான்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ

ப்ராரூடஸ்ரியம் –நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு –பாசுரத்தில்
ஏறு திருவுடையான் –திருநாமத்துக்கு ஏற்ப இந்த பத யோகம்
மேலே ஆரூட ஸ்ரீ –என்றும் ஆரூட லக்ஷம்யா ஹரே –என்றும் அருளிச் செய்வார்
பிராட்டி தானே ஸ்வயம்வரித்து வந்து சேர பெற்ற பெருமாள் என்றபடி

ஆஸ்ரயே வநகிரேஸ் குஞ்ஜோதிதம் ஸூந்தரம்–
குஞ்சமாவது லதாக்ருஹம்–
அதிலே சேவை சாதிக்கின்ற அழகரை அடி பணிகின்றேன் என்கிறார்

——————–

பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம் இதி பரம் ப்ரஹ்ம புருஷ
பரம் ஜ்யோதிஸ் தத்வம் பரம் இதி ச நாராயண இதி
ஸ்ருதிர் ப்ரஹ்மேசாதீந் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ
யம் ஆஹ ஆரூட ஸ்ரீஸ் ச வந கிரி தாமா விஜயதே –17-

பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம் இதி பரம் ப்ரஹ்ம புருஷ
பரம் ஜ்யோதிஸ் தத்வம் பரம் இதி ச நாராயண இதி —
பதிம் விஸ்வத் யாத்மேஸ்வரம்
நாராயண பரம் ப்ரஹ்ம
விஸ்வமே வேதம் புருஷ
பரம் ஜ்யோதிஸ் ரூப சம்பத்ய
தத்வம் நாராயண பர
நாராயண ஏவேதம் சர்வம் –சுருதி வாக்கியங்களைச் சேர்த்து அருளிச் செய்கிறார்

இதி ஸ்ருதிர் –பூர்வார்த்தத்தில் உதாஹரிக்கப் பட்ட சுருதி வாக்யங்களானவை என்றபடி
ப்ரஹ்மேசாதீந் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ சதீ –ப்ரஹ்மாதி தேவர்களை பகவத் விபூதிகளாகவே
தெரிவித்ததாய்க் கொண்டு
யம் ஆஹ –யாவர் ஒரு திருமாலிருஞ்சோலை அழகரைப் பேசி நின்றதோ
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே–இத்யாதிகளால்
பகவத் விபூதிகளாகவே சொல்லப் பட்டார்கள் அன்றோ

ச ஆரூட ஸ்ரீஸ் வந கிரி தாமா விஜயதே -வேதாந்த சித்தனான அந்த எம்பெருமானே ஏறு திருவுடையான் என்கிற
திரு நாமத்தோடே தெற்குத் திருமலையில் சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார் என்கிறார்

————

ப்ருதிவ்யாத் யாத்மாந்தம் நியமயதி யஸ் தத்வ நிகரம்
தத் அந்தர்யாமீ தத்வ புரவிதி தஸ் தேந பகவான்
ச ஏஷஸ் ஐஸ்வர்யம் ந விஜ ஹத சேஷம் வந கிரிம்
சமத்யாஸீநோ நோ விசது ஹ்ருதயம் ஸூந்தார புஜ–18-

ப்ருதிவ்யாத் யாத்மாந்தம் தத்வ நிகரம் — தத் அந்தர்யாமீ சந் –தத் வபுஸ் சந் — தேந அவிதிதஸ் சந் –
நியமயதி –அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொன்னபடி யாவன் ஒரு பகவான் பிருத்வி முதல் ஆத்மா வரையில் உள்ள
தத்துவங்களை எல்லாம் -அந்த தத்வங்களில் அந்தர்யாமியாய்க் கொண்டும் –
அவற்றை சரீரமாகக் கொண்டு தான் அவற்றுக்கு சரீரியாயும் –
அவற்றால் இவன் நம் உள்ளே உறைகிறான் என்று அறியப் படாதவனாயும் –
அவற்றின் பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை நிர்வஹிகித்துக் கொண்டு போருகிறானோ

ச ஏஷ –இப்படி சுருதி பிரதிபாதிதனான எம்பெருமான்
ஸ்ஐஸ்வர்யம் அசேஷம் ந விஜஹத் –ஸ்ரீ கீதையில் -அஜோபி சந் அவயயாத்மா பூதா நாம் ஈஸ்வரோபி சந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயயா –என்றும்
ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்று ஆழ்வார் அருளிச் செய்த படியும்
தன்னுடைய பரம ஐஸ்வர்ய பிரகாரம் ஒன்றையும் விடாதானாய்க் கொண்டு
ந விஜஹத்–என்ற இடத்தில் -நைக -சப்தத்தில் போலே ந சப்தேந சமாசம் என்று கொள்ள வேண்டும் –

வந கிரிம் சமத்யாஸீநோ ஸூந்தார புஜ–திருமாலிருஞ்சோலை மலையைக் கலவிருக்கையாகக் கொண்டு
இருக்கின்ற ஸூந்தர பாஹு

ந – ஹ்ருதயம் -விசது-நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ளே புகுந்து வர்த்திப்பனாக
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை–என்கிற திருவாய் மொழி பாசுரத்தில் நோக்கு
அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் ஸாத்யம்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

————–

கீழே அந்தர்யாமித்வம் அருளிச் செய்து –
இதில் தத்கத தோஷங்களால் அசம்ப்ருஷ்டனாய் -இருக்கை யாகிற
ஹேய பிரத்ய நீகத்வமும்-கல்யாணை கதா நத்வமும் ஜீவாத்மாவுக்கு ஒரு காலும் அசம்பாவிதமாய்
பகவானுக்கே அசாதாரணமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்ய காத்மநி கதாபி அசம்பவத் பூம பூமிம் அபி வக்தி யம் சுருதி
தம் வநாத்ரி நிலயம் ஸூ ஸூந்தரம் ஸூந்தராயத புஜம் பஜாமஹே–19-

யம் சுருதி–ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -இத்யாதி
உபநிஷத் வாக்கியம் இங்கு சுருதி சப்த விவஷிதம் -இப்படிப்பட்ட ஸ்ருதியானது –
யம் பகவந்தம்–யாவன் ஒரு பகவானை
பிரத்ய காத்மநி கதாபி அசம்பவத் பூம பூமிம் அபி வக்தி –ஜீவாத்மாவின் இடத்தில் முக்தி திசையிலும் கூட
சம்பவிக்க மாட்டாதான அதிசயங்களை ஆஸ்பத பூதனாய் ஓதி இரா நின்றதோ
பூமா -சப்த பிரயோகம் பூமாதி காரணத்தின் பிரமேயம் இங்கே விவஷிதம்
தம் வநாத்ரி நிலயம் ஸூ ஸூந்தரம் ஸூந்தராயத புஜம் பஜாமஹே—அந்த பகவான் தானே
தெற்குத் திருமலையில் சுந்தரத் தோளுடையானாக சேவை சாதிக்கின்றான்
இங்கே நம்முடைய பக்தியைச் செலுத்தக் கடவோம் என்கை –

————-

வந்தேய ஸூந்தர புஜம் புஜகேந்திர போக
சக்தம் மஹா வந கிரி ப்ரணய ப்ரவீணம்
யம் தம் விதுர்பி தஹரம் அஷ்ட குண உப ஜுஷ்டம்
ஆகாசம் ஓவ்பநிஷதீஷு ஸரஸ்வதீ ஷு –20-

ஓவ்பநிஷதீஷு ஸரஸ்வதீ ஷு –உபநிஷத் வாக்யங்களாலே
அஷ்ட குண உப ஜுஷ்டம் தஹரம்
ஆகாசம் யம் விதுர் –அபஹத பாப்மத்வாதி அஷ்ட குணங்களோடு கூடியவனாக எந்த பரம புருஷனை
வைதிகர்கள் அறிகின்றார்களோ
தஹர உத்தரேப்ய –ஸூத்ர ப்ரமேயமே இதில்

தம் ஸூந்தர புஜம் வந்தேய–அந்த பரம புருஷனே ஸூந்தர பாஹுவாக சேவை சாதிக்கும் இடத்தில்
சேவிக்கக் கடவேன்-அவர் எப்படிப்பட்டவர் என்னில்
புஜகேந்திர போக சக்தம்–அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுபவர்
இந்த திவ்ய தேசத்தில் நின்ற நிலை தன்னில் இல்லை யாகிலும் இது பகவானுக்கு ஐகாந்திகம் என்பதால்
இப்படி அருளிச் செய்யக் குறையில்லை
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதமான தேவப் பெருமாளை —
அத்தி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -என்று பூதத்தாழ்வாரும்
அனந்தசயனம் த்வாம் என்று இவரும் அருளிச் செய்தமை உண்டே –
மஹா வந கிரி ப்ரணய ப்ரவீணம் –திருமாலிருஞ்சோலை மலை வாசத்தில் ரசிகராயும் இருப்பவர்

————–

யத் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதக நிஜேச்சா நியாம்யஸ்வ சேஷ
அநந்தா சேஷ ப்ரபஞ்சஸ் தத இஹ சிதி வாஸித் வபுர் வாசி சப்தைர்
விஸ்வைஸ் சப்தைர் ப்ரவாஸ்யோ ஹத வ்ருஜி நதயா நித்ய மேவா ந வத்ய
தம் வந்தே ஸூந்தராஹ்வம் வந கிரி நிலயம் புண்டரீகாயதாக்ஷம் –21-

இஹ–இந்த ஜகத்தில்
அசித் வபுர் வாசி சப்தைர் சித் இவ –அசித் பரிமாண பூத தேவ மனுஷ்யாதி சரீரங்களைச் சொல்லக் கடவதான
சப்தங்களாலே ஜீவாத்மா எப்படி சொல்லப்படுகிறானோ -அப்படியே –
அதாவது -ஸ்தூலோஹம்–க்ருஸோஹம் –இத்யாதி வியவஹாரங்களாலே ஸ்தூலத்வமும் க்ருஸத்வமும்
ஆத்மாவில் உள்ளது அன்றிக்கே சரீரத்தில் உள்ளதாய் இருக்கச் செய்தேயும் –
அஹம் ஸ்தூல அஹம் க்ருஷா என்று சரீர த்ருஷ்ட்யா சொல்லுகிறாப் போலே என்கை
இந்த த்ருஷ்டாந்தத்தைக் கொண்டு சாதிக்கப்படும் அம்சம் ஏது என்னில்

யத் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதக நிஜேச்சா நியாம்யஸ்வ சேஷ அநந்தா சேஷ ப்ரபஞ்சஸ் தத
யத் -என்றது யாது ஒரு காரணத்தால் என்றபடி
அநந்தமாய் உள்ள அசேஷ பிரபஞ்சமும் ஸ்வா யத்த ஸ்வரூப ஸ்திதி க்ருதகமாய்–
நிஜேச்சா நியாம்யமாய் –ஸ்வ சேஷமாய் இருக்கையாலே -என்றபடி
சரீர லக்ஷணம் ஸமஸ்த ப்ரபஞ்சத்தனிடத்தும் சமன்விதமாகிறது
சகல ப்ரபஞ்சனத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் எம்பெருமான் அதீனமாகையாலும்
அந்தப்ரவிஷ்டா சாஸ்தா ஜனானாம் என்கிறபடியே
சகல பிரபஞ்ச நியமனமும் அவனுடைய இச்சாதீனம் ஆகையாலும்
இவை சமஸ்தமும் அவனுக்கே சேஷன் ஆகையாலும் சரீர லக்ஷணம் சமன்வயமாகுமே

தத விஸ்வைஸ் சப்தைர் ப்ரவாஸ்யோ –ஆகவே சர்வ பதார்த்த வாசக சகல சப்தங்களோடே
எம்பெருமானை சாமானாதி கரிக்க குறையில்லை என்றபடி
சகலம் ஜகத் பகவத சேஷ பூதம் –வ்யதிகரண நிர்த்தேசம்
சகலம் ஜகத் பகவான் -சாமானாதி கரண்ய நிர்த்தேசம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
ஐததாத்ம்யம் இயம் சர்வம்
தத்வமஸி –சுருதிகள் உண்டே

ஹத வ்ருஜி நதயா நித்ய மேவா ந வத்ய
அபஹத பாப்மா வாகையாலே எப்போதும் ஹேயபிரத்யநீகனாய் இருப்பவன் என்றபடி
வ்ருஜினம் -பாவம் –ஹேய சாமான்யத்தையும் சொல்லுகிறது
ஹத -என்று பரத்வம்ஸா பாவம் சொல்லுகிறது அன்று -அத்யந்த பாவமே இங்கே விவஷிதம் –
இத்தால் முக்த புருஷ வ்யாவ்ருத்தி

தம் ஸூந்தராஹ்வம் வந கிரி நிலயம் புண்டரீகாயதாக்ஷம் –வந்தே- ஆக இப்படி வேதாந்த வேத்யனான
எம்பெருமான் தாமரைக் கண் அழகுடன் தெற்குத் திருமலையில் சேவை சாதிக்கும் இருப்பில்
சேவிக்கப் பெற்றேன் என்கிறார் –

க்ருதி சப்தம் ப்ரவ்ருத்தியை சொல்கிறது
உயர்வற உயர் நலம் உடையவன் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் யுவன்
அவரவர் தமதமது
நின்றனர் இருந்தனர் –மூன்று பாசுரங்களால் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் எம்பெருமான் அதீனம் என்று சொல்லி அடுத்து
உடல் மிசை உயிர் என -என்று ஜீவாத்மாவை த்ருஷ்டாந்தீ கரித்து
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்–என்று ஆழ்வார் தலைக்கட்டி அருளினார் போலே
இந்த ஸ்லோகமும் அமைந்துள்ளது

—————-

குணஜம் குணி நோ ஹி மங்கலத்வம் பிரமிதம் ப்ரத்யுத யத் ஸ்வரூப மேத்ய
தம் அநந்த ஸூகாவ போத ரூபம் -விமலம் ஸூந்தர பாஹும் ஆஸ்ரயாம —22-

குணி நோ மங்கலத்வம் குணஜம் ஹி பிரமிதம் –லோகே –சாமான்யமாக உலகில் வஸ்துவுக்கு
மங்கலத்வம் குண சம்பந்தத்தால்
ப்ரத்யுத யத் ஸ்வரூப மேத்ய –அந்த நியாயம் இங்கு விபரீதம் -பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்தே
அக்குணங்கள் மங்களத்தன்மை பெறுகின்றன -லோக விலக்ஷணமாய் அன்றோ பகவத் விஷயம்
அநந்த ஸூகாவ போத ரூபம் –அநந்த ரூபம் ஸூக ரூபம் அவபோத ரூபம் -என்று யோஜித்து
தேச கால வஸ்து பரிச்சேதங்கள் இல்லாமை -அனந்தத்வம் ஆகும் –
ஸூக ரூபம் என்றது ஆனந்த மாயம் –
அவபோத ரூபம் என்றது ஞான மாயம் என்றபடி
தம் விமலம் ஸூந்தர பாஹும் ஆஸ்ரயாம –அகில ஹேயபிரத்ய நீகனாய் இரா நின்ற
அந்த ஸூந்தர பாஹுவை ஆஸ்ரயிக்கிறோம் –

ஸர்வஸ்ய சைவ குணதோ ஹி விலக்ஷணத்வம் —ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
குணாயத்தம் லோகே குணிஷு ஹி மதம் மங்கல பதம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
இவையும் ஸமான அர்த்தம்
பர துக்க துக்கித்தவம் குணமாகவே அனுசந்திக்கப்படும் -துக்கித்தவம் தோஷமாகவே லோகத்தில் இருந்தாலும்
ஆகவே எம்பெருமானைப் பற்றி உள்ளது எதுவாயினும் அது சுப குணமே ஒழிய வேறு ஓன்று அன்று
என்பதைக் காட்டி அருளவே இப்படி ஸக்ருத் இல்லாமல் அருளிச் செய்து காட்டி அருளுகிறார்

———————

தன் வைபவத்தை அனுபவித்து உகந்து இருக்கும் தசை நித்யோதித தசை
தனது விபூதியை அனுபவித்து உகந்து இருக்கும் தசை சாந்தோதித தசை –
இந்த ஸ்லோகம் நித்யோதித தசை அனுபவ அனுசந்தானம் –

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அனுபவ ப்ரபவத்
ஸூக க்ருத நிஸ் தரங்க ஜலதீயித நித்ய தசம்
பிரதிபடமேவ ஹேய நீகரஸ்ய சதாபிரதிமம்
ஹரிமிஹ ஸூந்தராஹ்வ முபயாமி வநாத்ரி தடே –23-

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அனுபவ ப்ரபவத் ஸூக க்ருத நிஸ் தரங்க ஜலதீயித
நித்ய தசம் –நித்ய தசை என்றது நித்யோதித தசை என்றவாறு –
அதிபதி தாவதி-அவதியைக் கடந்த யாதொரு ஸ்வ வைபவம் –
அந்த அனுபவ ஜெனித ஹர்ஷம் அலை ஓய்ந்த கடல் போலே என்றவாறு –
ஜலதீயித–என்றது ஜலதி போன்றதான என்றபடி –
பிரசாந்த அநந்த ஆத்ம அனுபவஜ மஹா ஆனந்த மஹிம ப்ரசக்த ஸ்தைமித்யா அநு க்ருத
விதரங்கார்ணவதசம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

சதைவ ஹேய நீகரஸ்ய பிரதிபடம் -தமஸுக்கு தேஜஸ் ஸூ போலவும் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும்
ஹேயமான அவதியை சமூகத்துக்கு எதிர்த்தட்டாய் இருக்குமே
ஹேய சாமா நாதி காரண்ய அஸஹிஷ்ணுத்வம் என்றபடி
சதைவ -ஸ்வ பாவத ஏவ -முக்தர்களுக்கு ஸமாச்ரயண தசையில் இல்லையே –
நித்யர்களுக்கு பகவத் இச்சாதீனம் -ஸ்வா பாவிகம் அன்று —
அப்பிரதிமம் –கீழ்ச் சொன்னதுவே ஹேதுவாக ஒப்பற்ற படி
ஸூந்தராஹ்வம் ஹரிமிஹ வநாத்ரி தடே உபயாமி –இப்படி பெருமைவாய்ந்த அழகப்பிரானை
திருமாலிருஞ்சோலை அடிவாரம் தன்னிலே சேவிக்கப் பெற்றேன்

——————

சதா ஷாட் குண்யாக்யை ப்ருதுலபல விஞ்ஞான சகந
பிரபா வீர்யைஸ்வர்யைர் அவதிவிதுரை ஏதிததசம்
த்ரும ஸ்தோம ஷமா ப்ருத் பரிசர மஹோத்யானமுதிதம்
ப்ரபத்யே அத்யாரூடஸ்ரியம் இமம் அஹம் ஸூந்தர புஜம் –24-

சதா ஷாட் குண்யாக்யை ப்ருதுலபல விஞ்ஞான சகந -பிரபா வீர்யைஸ்வர்யைர் அவதிவிதுரை ஏதிததசம் —
அபரிமிதமான –அவதி ரஹிதமான ஆறு குணங்களும் உண்டே –
அது தோன்ற ப்ரதூல விசேஷணமும் அவதி விதுரை விசேஷணமும் –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் -உத்தர சதகத்தில் -யுகபதநிசமஷை –ஸ்லோகம் தொடங்கி
ஸஹ கார்ய பேஷமபி–என்ற அளவாக ஏழு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் பிரக்ருஷ்டம் விஞ்ஞானம் -ஸ்லோகத்திலும் -இவை பற்றி உண்டே
ஏதிததசம் –அதிசயிதமான ஸ்வ வைபவத்தை உடையவர் என்றபடி –

த்ரும ஸ்தோம ஷமா ப்ருத் பரிசர மஹோத்யானமுதிதம் —
த்ரும ஸ்தோம ஷமா ப்ருத்-என்றது திருமாலிருஞ்சோலை மலை என்றபடி
அதனுடைய பரிசரம் -தாழ்வரை -அங்குள்ள மஹா உத்யானத்தில் -பெரியதொரு சோலையிலே –
முதிதம்-திரு உள்ளம் உகந்து வர்த்திப்பர்

அத்யாரூடஸ்ரியம் இமம் அஹம் ஸூந்தர புஜம் ப்ரபத்யே-ஏறு திரு உடையரராய்
ஸூந்தர தோளுடையானை அடியேன் திருவடி பணிகின்றேன்

———————–

ஷாட் குணங்களின் பரிணாமமான பல குணங்களை அனுபவிக்கிறார்
ஸ்வரூப நிரூபக குணங்கள் –நிரூபித ஸ்வரூப விசேஷண குணங்கள் –
ஆஸ்ரயண ஸுவ்ஹர்ய ஆபாதக குணங்கள் -ஆஸ்ரித கார்ய ஆபாதக குணங்கள் –
திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரித குணங்கள் -திவ்ய மங்கள விக்ரஹ ஆஸ்ரித குணங்கள் –
போன்ற வகுப்புக்கள் உண்டே
தவ வரதராஜ உத்தம குணா வி ஸீமாந அஸங்க்யர–ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே –ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் –
படியே இத்திருக் கல்யாண குணங்கள் எல்லாம் அனுபவ ரசிகர்களுக்கு பரம போக்யமாய் இருக்குமே

ஸுவ்சீல்ய ஆஸ்ரித வத்சலத்வ ம்ருதுதாஸ் ஸுவ் ஹார்த்த ஸாம்ய ஆர்ஜவ
தைர்ய ஸ்தைர்ய ஸூவீர்ய ஸுவ்ர்ய க்ருதிதா காம்பீர்ய சாதுர்யகை
ஸுவ்ந்தர்ய அந்வித ஸுவ்குமார்ய சமதா லாவண்ய முக்க்யைர் குணைர்
தேவ ஸ்ரீ தருஷண்ட சைல நிலயோ நித்யம் ஸ்திதஸ் ஸூந்தர –25-

ஸுவ்சீல்ய –குகப்பெருமாள் போல்வார் இடம் பெருமாள்
ஆஸ்ரித வத்சலத்வ –என் அடியார் செய்யார் செய்தாரேலும் நன்று செய்தார் என்னுமவன்
ம்ருதுதாஸ் -மார்த்வம் -இது ஸ்வரூபத்துக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உண்டே –
மகாத்மாக்கள் விரகம் சஹியாத மார்த்வம் –நாயனார்
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் ஸஹ –ஆளவந்தார்
ஸுவ் ஹார்த்த –சோபனாசம்ஸி ஹ்ருதய சாலித்தவம் -சர்வ ஜன ஹிதைஷித்வம் –
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்த என்றபடி
ஸாம்ய -சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய –ஆஸ்ரயித்வேண சர்வசமனாய் இருக்கை
ஆர்ஜவ –கரண த்ரய செம்மை
தைர்ய –அனிஷ்டங்கள் வந்து புகுந்தாலும் நெஞ்சில் விகார லேசமும் இன்றி இருக்கை
அத்யந்த அநிஷ்ட ப்ரசங்கேபி அப்ரதிஹத சித்த வ்ருத்தித்தவம் தைர்யம்
ஸ்தைர்ய -ஆஸ்ரிதர்களை கைவிடாத திண்ணிய ஊற்றம்–ஏதத் விரதம் மம –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
ஸூவீர்ய –அரிய பெரிய போர் செய்யிலும் ஆயாசம் அற்று இருக்கை
ஸுவ்ர்ய–ஏகாகியாய் சென்று புக வல்லமை -அஸஹாய சூரா -அநபாய சாஹாசா
க்ருதிதா –க்ருதக்ருத்யத்வம் -அபி சிஷ்யச்ச ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
காம்பீர்ய -ஆழம் அறிய அரிய–அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி
சாதுர்யகை –அரிய பெரிய செயல்களை அநாயாசேந செய்து தலைக்கட்டுகை
ஸுவ்ந்தர்ய –பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் வைத்த அழகன் -விமுக வைமுக்யம் மாற்றி ஈடுபடுத்திக் கொள்ள வல்ல அழகு
ஸுவ்ந்தர்ய அந்வித ஸுவ்குமார்ய –கூசிப்பிடிக்கும் மெல்லடி –
சமதா –இங்கு திவ்ய மங்கள விக்ரஹ -சம பரிமாண சாலி -சாமுத்ரிகா லக்ஷணப்படி
லாவண்ய -சமுதாய சோபை இது -அவயவ சோபை ஸுவ்ந்தர்யம் –
முக்க்யைர் குணைர் –சந்தஸிசில் இடம் இல்லாமல் நிகழித்தபடி அஸங்க்யேய கல்யாண குண என்னுமா போலே
ஸூந்தர தேவ ஸ்ரீ தருஷண்ட சைல நிலயோ நித்யம் ஸ்திதஸ் –அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்யம் ஸ்திதஸ்-

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: