ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்-1-13 –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளும் பொழுது வழியிலே
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவமும் ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவமும் அருளிச் செய்து
அங்கே சென்று ஸ்ரீ அழகருடைய சர்வாங்க ஸுவ்ந்தர்யத்தை அனுபவித்து
அவ்வனுபவ பரீவாஹ ரூபமாக இந்த ஸ்தவம் அருளிச் செய்தார்

ஸ்ரீ ரெங்க வாசம் இழந்து வருந்தி இங்கே வந்ததால்-அங்கே சத்துக்களை ஒழித்து மீண்டும் சத்துக்களை குடி இருக்கப் பண்ணி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிழலிலே அடியேனை பண்டு போலே வாழ கடாக்ஷித்து அருள வேண்டும் என்னும்
பிரார்த்தனையுடன் தலைக்கட்டுகிறார்

—————

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் உக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————–

ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் ஸமாஸ்ரித அஹம் —
ஸ்ரீ ராமா வரஜ முநீந்த்ர லப்த போதஸ்
நீர்ப் பீகஸ் தத இஹ ஸூந்தரோ ருபாஹும்
ஸ்தோஷ்யே தத் சரண விலோக நாபிலாஷீ –1-

ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் ஸமாஸ்ரித அஹம் –எம்பெருமானுடைய திருப் பொழிந்த சேவடியைப் பணிந்த அடியேன்
ஸ்ரீ ராமா வரஜ முநீந்த்ர லப்த போதஸ் –எம்பெருமானார் பக்கலிலே சைதன்யம் பெற்றவன் –
ஸ்வாமி திருவடிகளிலே ஆஸ்ரயித்து சகல அர்த்தங்களையும் கேட்டு சத்தை பெற்றமையை வெளியிட்டு அருளுகிறார்
நீர்ப் பீகஸ் தத –அதனால் பயப்படாதே நின்று
கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா அபி வராங்க நா நா ஹாரயதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ பெருமாளுடைய திருத் தோள்களை அண்டை கொண்ட பலத்தால் அஞ்சாதாப் போலே
கோட்டைக்குள் இருப்பார்க்கு அஞ்ச வேண்டுமோ
இஹ ஸூந்தரோ ருபாஹும் ஸ்தோஷ்யே –இவ்விடத்தில் ஸ்ரீ ஸூந்தர தோளுடையானை ஸ்துதிக்க இழிகின்றேன்
ஸூந்தர -உரு பாஹும் –ஸூந்தராமாகவும் பெரியதாகவும் உள்ள திருத் தோள்கள்
தத் சரண விலோக நாபிலாஷீ -சந் –அந்த எம்பெருமானார் ஆகிற அஸ்மத் ஆச்சார்ய ஸார்வ பவ்மருடைய
திருவடிகளைக் கண்ணாரக் காண வேணும் என்னும் ஆசை உடையேனாய்க் கொண்டு இந்த ஸ்தவத்தில் இழிகிறேன்

இந்த ஸ்தவத்தின் முடிவிலும்
ஸ்ரீ ரெங்க தாமநி யதா புர மேக தோஹம் ராமாநுஜார்ய வசக பரிவர்த்திஷீய–இந்தப்பலன் ஸ்பஷ்டீ க்ருதம்

————-

சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலை திருமலை யுறையும் பெருமாளை அடி பணிகிறேன் என்கிறார்

ஸூந்தராயாத புஜம் பஜாமஹே வ்ருஷ ஷண்டமயம் அத்ரிம் ஆஸ்திதம்
யத்ர ஸூ பிரதித நூபுரா பகா தீர்த்தம் அர்த்தித பலப்ரதம் விது –2-

வ்ருஷ ஷண்டமயம் அத்ரிம் ஆஸ்திதம் ஸூந்தராயாத புஜம் பஜாமஹே –கதள வகுள ஜம்பூ பூக மாகந்த் தேத்யாதிகள்
போன்ற வ்ருக்ஷங்கள் நெருங்கி சோலை யாய் இருப்பதாலே பெற்ற திரு நாமம் —
அப்படிப்பட்ட திருமலையில் எழுந்து அருளி இருக்கும் சுந்தரத் தோளுடையானைத் தொழுகின்றோம்
ஆஸ்ரிதம் -என்றும்–ஆஸ்திதம் -என்றும் பாட பேதங்கள்
ஆயதம் –நீண்ட
யத்ர –யாதொரு திருமால் இருஞ்சோலை மலையிலே
ஸூ பிரதித நூபுரா பகா தீர்த்தம் –சிலம்பாறு என்றும் நூபுர கங்கை -என்றும் பிரசித்தமான திவ்ய தீர்த்தத்தை
அர்த்தித பலப்ரதம் விது –அவரவர்கள் விரும்பும் சகல பலன்களையும் அளிக்க வல்லதாக —
ஆரோக்யம் சந்தானம் ஐஸ்வர்யம் மோக்ஷம் போன்ற அனைத்தையும் -ஞானவான்கள் அறிந்து இருக்கிறார்களோ
அப்படிப்பட்ட அத்ரிம் ஆஸ்ரிதம் -ஆஸ்திதம் -பஜா மஹே

சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலை மலையே –ஸ்ரீ பெரியாழ்வார்
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்து இழியும் சிலம்பாறுடை திருமாலிருஞ்சோலை –ஸ்ரீ ஆண்டாள்
சிலம்பியலாறுடைய திருமால்யிருஞ்சோலை நின்ற –ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்

————-

நூபுர கங்கா தீர்த்த கதி விசேஷங்களை வருணித்து அருளுகிறார்

க்வசித் த்வரிதகாமிநீ க்வசந மந்த மந்தாலசா
க்வசித் ஸ்கலித விஹ்வலா க்வசந பேநிலா சாரவா
பதந்த்யபி கில க்வசித் வ்ரஜதி நூபுராஹ்வா நதீ
ஸூ ஸூந்தர புஜாஹ்வயம் மது நிபீய மத்தா யதா –3-

நூபுராஹ்வா நதீ–நூபுர கங்கை யானது
ஸூ ஸூந்தர புஜாஹ்வயம் மது நிபீய மத்தா யதா –வ்ரஜதி –ஸூந்தர பகவான் ஆகிற மதுவைப் பருகி
மதம் பிடித்தவை போலே பெருகா நின்றது
எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே திருமாலிருஞ்சோலை கோனே
அந்த கதி எங்கனே என்றால்
க்வசித் த்வரிதகாமிநீ –சில இடங்களில் விரைந்து ஓடா நின்றது -வழியில் தடைகள் இல்லாமல் இருக்கும்
இடங்களில் வெள்ளமாக விரைந்து ஓடுமே
க்வசந மந்த மந்தாலசா –சில இடங்களில் மிக மந்த கதியாய் பெருகா நின்றது
க்வசித் ஸ்கலித விஹ்வலா –சில இடங்களில் கற்பாறைகள் இடையூறுகளால் தட்டித் தடுமாறி பெருகா நின்றது
க்வசந பேநிலா –சில இடங்களில் நுரை ததும்பிப் பெருகா நின்றது
க்வசந சாரவா –சில இடங்களில் பெரிய முழக்கத்துடன் பெருகா நின்றது
க்வசித் அபி பதந்தீ வ்ரஜதி –மேடான இடங்களில் இருந்து கீழே பெருகும் இடங்களும் சில உண்டு –

————

உததிக மந்த ராத்ரி மதி மந்தந லப்த பயோ
மதுர ரஸ இந்திராஹ்வ ஸூத ஸூந்தரதோ பரிகம்
அசரண மாத்ரு சாத்ம சரணம் சரணார்த்தி ஜன
பிரவணதியம் பஜேம தருஷண்ட மய அத்ரி பதம் –4-

உததிக -சமுத்திரத்தை அடைந்ததானா
மந்த ராத்ரி மதி –மந்த்ர மலையாகிய மத்தாலே செய்யப்பட்ட
மந்தந லப்த பயோ –கடைதலாகிய அடையப்பட்ட
பயோ மதுர ரஸ இந்திராஹ்வ ஸூத –பயஸ்ஸாகிற மதுர ரசம் என்ன —
பெரிய பிராட்டியார் ஆகிற ஸூதை என்ன -இவை இரண்டையும் உடைத்தான்
ஸூந்தரதோ பரிகம்–உழல் தடி போன்ற சுந்தர புஜங்களை உடையராய்
விண்ணவர் அமுதான உப்புச் சாற்றையும்–
சீதக் கடலுள் அமுதான பிராட்டியையும் கொண்டு அருளியவர்
மந்திரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தர தோளுடையான்–
விண்ணவர் அமுதில் வரும் பெண்ணமுதே மதுரைக்கு கொழுஞ்சாறு
பலே க்ரஹிர் ஹி கமலா லாபேன சர்வச் ஸ்ரம -ஸ்ரீ பட்டர்
பிராட்டியைப் பெறுவதே பரம பிரயோஜனம்
அசரண மாத்ரு சாத்ம சரணம் –புகல் ஓன்று இல்லா அடியேன் போல்வரான ஆத்ம வர்க்கங்களுக்கு புகலானவராய்
சரணார்த்தி ஜன பிரவணதியம் –அடைக்கலம் புகுந்த அடியார்கள் பக்கலிலே அபிமுகமான
திரு உள்ளம் உடையவராய் இரா நின்ற
தருஷண்ட மய அத்ரி பதம் பஜேம-திருமாலிருஞ்சோலை மலை தலைவரை ஆஸ்ரயிக்கக் கடவோம் –
நம்முடைய பக்திக்கு இலக்கு ஆக்குவோம் என்றபடி

——————

சசதர ரிங்கணாட்ய சிகம் உச்சிகர ப்ரகரம்
திமிர நிப ப்ரபூத தருஷண்ட மயம் ப்ரமதம்
வநகிரிம் ஆவசந்தம் உபயாமி ஹரிம் சரணம்
பிதுரித சப்த லோக ஸூ வி ச்ருங்கல சங்கரவம்–5-

சசதர ரிங்கணாட்ய சிகம் –மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை —
சந்த்ர சஞ்சார சம்பந்நமான சிகரத்தை உடைத்ததாயும்
திங்கள் நன் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை –திருமலை ஆழ்வார்
உச்சிகர ப்ரகரம்–உத்துங்கமான கொடுமுடிகளின் கூட்டங்களை உடைத்ததாயும்
திமிர நிப ப்ரபூத தருஷண்ட மயம் –இருள் செறிந்தால் போலவும் அபரிதமாகவும் உள்ள சோலைகளால் பிரசுரமாயும்
ப்ரமதம்–இது சோலையே-அல்லது மலை அன்று -என்கிற பிராந்தியை விளைக்க வல்லதாயும்
வநகிரிம் ஆவசந்தம் –திருமாலிருஞ்சோலை மலையிலே எழுந்து அருளி இருப்பாராய்
பிதுரித சப்த லோக ஸூ வி ச்ருங்கல சங்கரவம்–ஏழு உலகங்களையும் பேதிக்க வல்ல அப்ரதிஹத
சங்க த்வனியை யுடையவரான
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் ஹரிம் சரணம் உபயாமி–அழகரை தஞ்சமாக அடைகின்றேன் –

————–

அதிசய யுக்தி அலங்காரத்தால் இங்கும் திருமலையின் வளர்த்தி அனுபவம்
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலையே
அவர்கள் நிர்மலமான சந்திரனையே கண்ணாடியாகக் கொண்டு ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் செய்து கொள்கிறார்கள்

யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம்
ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம்
தர்ப்பண்ய பூத் த்ருதம பாங்க ச சாங்க ப்ருஷ்டம்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –6-

ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம் –அணியப்பட்ட ஊர்த்தவ புண்ட்ரம் ஆகிற
முக அலங்காரத்தாலே அலங்கரிக்கப் பட்டவர்கள்
யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம் –யாது ஒரு திருமலையினுடைய உன்னதமான சிகரத்தில்
வந்து சேர்ந்த தேவ மாதர்களுக்கு
த்ருதம பாங்க ச சாங்க ப்ருஷ்டம்-தர்ப்பண்ய பூத்–அ களங்க சந்த்ர மண்டல மானது கையிலே எந்தப்பட்ட கண்ணாடி ஆயிற்று
அபாங்கம் என்றது அபகதமான அங்கத்தை -களங்கம் அற்ற
நிஷ் களங்கனாக-தேவதாந்த்ர ஸ்பரிசத்தால் வந்த களங்கத்தை இத் திருமலையை சேவித்து தீர்த்துக் கொண்டமையை
அடுத்த ஸ்லோகம் விவரிக்கும்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –அந்த ஸ்தானம் ஸூந்தர தோளுடையானது திருமாலிருஞ்சோலையாம் –
மலமறு மதி சேர் மாலிருஞ்சோலை அன்றோ –
————-

யதீய சிகராதாம் சசிகலாம் து சாகாம்ருகா
நிரீஷ்ய ஹர சேகரீ பவநம் ஆம்ரு சந்தஸ் தத
ஸ்ப்ரு சந்தி ந ஹி தேவதாந்தர ஸமாச்ரிதேதி ஸ்புடம்
ச ஏஷ ஸூ மஹா தரு வ்ரஜ கிரிர் க்ருஹம் ஸ்ரீ பதே –7-

சாகாம்ருகாஸ் து –கிரங்குகளோ என்னில் -து சப்த்தம் -ஸூ ராங்கானைகளில்- வியாவர்த்திக்குமே –
ஸ்ரீ வைஷ்ண பூர்த்தி உடைமையால்
சாகா மிருகங்கள் –வானரங்கள் -திருமலை உச்சியிலே சஞ்சரித்துக் கொண்டே இருந்தாலும் —
பிறை தங்கு சடையான் -சந்த்ர மௌலி -சம்பந்தத்தால் வந்த தோஷம் தீண்டாமல் இருக்க
சந்திரனை ஸ்பர்சிக்காமல் இருக்கின்றவாம்
யதீய சிகராதாம் சசிகலாம் நிரீஷ்ய –யாதொரு திருமலையினுடைய சிகரத்தில் வந்த சந்த்ர கலையைப் பார்த்து
ஹர சேகரீ பவநம் ஆம்ரு சந்தஸ் சந்த –இந்த சந்த்ர களை ருத்ரனுக்கு சிரோ பூஷணம் அன்றோ –என்று
அந்தத் தன்மையை ஆராய்ந்தவைகளாய்க் கொண்டு
ததா தேவதாந்தர ஸமாச்ரிதேதி ந ஹி ஸ்ப்ரு சந்தி–தேவதாந்த்ர சங்கம் உள்ளது அன்றோ இது என்று
கொண்டு அத்தை ஸ்பர்சிப்பது இல்லையோ
ஸ்புடம் –உத்பரேஷா லிங்கம்
ச ஏஷ ஸூ மஹா தரு வ்ரஜ கிரிர் –அப்படிப்பட்ட இந்த திருமாலிருஞ்சோலை மலையானது
ஸ்ரீ பதே –க்ருஹம் — திருமாலின் திருக்கோயிலாம்

———————-

ஸூந்தர தோர் திவ்ய ஆஜ்ஞா லம்பந காதரவசா அநுயாயிநி கரணி
ப்ரணய ஜகல ஹ சமாதிர் யத்ர வநாத்ரிஸ் ச ஏஷ ஸூந்தர தோஷ்ணா–8-

கரணி –ஒரு காட்டு யானையானது –இது சதி சப்தமி
ஸூந்தர தோர் திவ்ய ஆஜ்ஞா லம்பந காதரவசா அநுயாயிநி –அழகர் ஆணை என்று சொல்லி அழகர் மேல் ஆணை
இட்டதனாலே அந்த ஆணையை மீறிப் போக மாட்டாமல் திகைத்து நின்ற தன் பேடையை அநு சரித்து நின்ற அளவிலே
ப்ரணய ஜகல ஹ சமாதிர் –ப்ரணய கலஹம் சாந்தமாகி சமாதானம் உண்டாகின்றது
லம்பந லங்கந -பாட வேதங்கள் –லம்பநேந காதரா–த்ருதீய சமாசம் / லங்கநாத் காதரா -பஞ்சமி சமாசம் கொள்ளக் கடவது –
ச ஏஷ வநாத்ரிஸ் ஸூந்தர தோஷ்ணா—அந்தத் திருமலையானது ஸூந்தர பாஹு எம்பெருமானுடையதாம்

கரு வாரணம் தன் பிடி துரந்து ஓடக் கடல் வண்ணன் திருவாணை கூறித் திரியும் தண் மாலிருஞ்சோலையே —
பெரியாழ்வார் பாசுர மொழி பெயர்ப்பு இஸ் ஸ்லோகம்
ஊடலால் பேடை விலக-நீ பிரிந்து போனாயானால் அழகர் ஸ்ரீ பாதத்தின் மேல் ஆணை -என்று ஆணை இட்டவாறே
மீறிப் போக மாட்டாதே அஞ்சி நிற்கும் என்று சொல்லப்பட்டதே
இத்தால் திர்யக்குகளுக்கும் அழகர் பக்கல் உண்டான ப்ரபத்தியின் கனம் தெரிவிக்கப்பட்டதே

—————-

ச ஏஷ ஸுவ்ந்தர்ய நிதேர் த்ருத ஸ்ரியஸ் வநா சலோ நாம ஸூ தாம யத்ர ஹி
புஜங்க ராஜஸ்ய குலஸ்ய கௌரவாத் ந கண்டிதா குண்டலி நச் சிகண்டிபி —9-

யத்ர குண்டலி நச்–யாதொரு திருமலையில் மயில்களுக்கு இயற்கையில் வைரிகளான சர்ப்பங்களானவை
புஜங்க ராஜஸ்ய குலஸ்ய கௌரவாத்–ஆதிசேஷ சந்தானம் என்கிற கௌரவ பிரதிபத்தியாலே
சிகண்டிபி –ந கண்டிதா–மயில்களினால் கடிக்கப்பட வில்லையோ
வநா சலோ நாம ச ஏஷ –திருமாலிருஞ்சோலை மலை என்று பிரசித்தமான இத்திருமலை யானது
ஸுவ்ந்தர்ய நிதேர் த்ருத ஸ்ரியஸ் ஸூ தாம –ஏறு திரு உடையார் என்று பிரசித்தி பெற்ற
அழகருக்கு அழகிய திருக்கோயிலாம்

பிரசங்காத் இது முதல் மூன்று ஸ்லோகங்களாலே திருமலையில் உள்ள திர்யக்குகளின் விலக்ஷண
சர்யா விசேஷங்கள் பேசப்படுகின்றன
மயில்கள் இங்குள்ள சர்ப்பங்கள் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புனையும் மணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையும் திருமாற்கு அரவு -என்றும்
நிவாஸ சய்யா ஆசன பாதுகாம் சுகோபதான வர்ஷாதப வாரணாதிபி சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோஸிதம் சேஷ இதீரிதே ஜநை-என்றும்
கௌரவ புத்தியால் அவன் குலத்தில் உள்ளாரை நலியக் கூடாது என்று நட்பு கொண்டு இருக்கும் படியை அருளிச் செய்கிறார்
தத் சந்நிதிவ் வைரத்யாக –என்னக் கடவது அன்றோ –

—————-

வ்ருஷ கிரிர் அயம் அச்யுதஸ்ய யஸ்மின் ஸ்வ மதம் அலங்கயிதும் பரஸ்பரேப்யஸ்
ககபதி சரணவ் ககாச் ச பந்தே புஜகபதேர் புஜகாச் ச சர்வே ஏவ –10-

யஸ்மின்–யாதொரு திருமாலிருஞ்சோலை மலையிலே
சர்வே ககாஸ் –சகல பக்ஷி வர்க்கங்களும்
ஸ்வ மதம் அலங்கயிதும்–தம் தமக்கு பிரதி ஜ்ஞாதமான அம்சத்தை அதிக்ரமித்து நடவாமைக்காக
ககபதி சரணவ் பரஸ்பரேப்யஸ் ச பந்தே–பக்ஷி ராஜனுடைய பாதங்களின் மேல் ஆணை இடுவதையே
பரஸ்பரம் செய்து போருகின்றனவோ
புஜகாச் ச சர்வே புஜகபதேர் ஏவ சரணவ் ச பந்தே–ஸ்வ மதம் அலங்கயிதும் பரஸ்பரேப்யஸ்-என்றதுக்கு
இவ்விடத்திலும் அநு ஷங்கமாகக் கடவது —
சர்ப்ப ஜாதிகள் எல்லாம் ஸ்வ அபிமத சித்திக்காக ஆதி சேஷன் அடி மேல் ஆணை இடுகின்றனவோ
அயம் வ்ருஷ கிரிர் அச்யுதஸ்ய –இந்த திருமாலிருஞ்சோலை மலையானது அடியார்களை ஒரு காலும்
நழுவ விடாதவரான அழகருடையதாம்
கீழ் ஸ்லோகத்தில் உள்ள ஸூதாம –பதத்தை இங்கும் ஆகர்ஷித்துக் கொள்ளவுமாம் —

———————

ஹரி குலம் அகிலம் ஹனுமத் அங்க்ரிம் ஸ்வ குலப ஜாம்பாவதஸ் ததைவ பல்லா
நிஜ குலப ஜடாயுஷச் ச க்ருத்ரா ஸ்வ குலப தேச் ச கஜா கஜேந்த்ர நாம் ந -11-

ததைவ
கீழே -ஸ்வ மதம் அலங்கயிதும் பரஸ்பரேப்யஸ்–ச பந்தே–என்பதை பாதம் தோறும்
அநு ஷங்கம் கொள்ள வேண்டும் என்பதை ததைவ -என்பதால் ஸூஸிதம்
வ்ருஷ கிரிர் அயம் அச்யுதஸ்ய–என்பதையும் வருவித்துக் கொள்ள உரியது
இரண்டு ஸ்லோகங்களும் சேர்ந்து குளகம்-என்றதாயிற்று –
ஹரி குலம் அகிலம் ஹனுமத் அங்க்ரிம் –திருமலையில் வானர வர்க்கங்கள் எல்லாம் ஆணை இட வேண்டிய
பிரகரணங்களிலே திருவடியில் ஸ்ரீ பாதத்தில் ஆணை என்னுமாம்
ஸ்வ குலப ஜாம்பாவதஸ் பல்லா –கரடிகள் எல்லாம் தங்கள் குலக் கொழுந்தான ஜாம்பவான் மேல் ஆணை விடுமாம்
நிஜ குலப ஜடாயுஷச் –கழுகுகள் எல்லாம் தங்கள் குலத்தரசனான ஜடாயுவின் மேல் ஆணை விடுமாம்
ஸ்வ குலப தேச் ச கஜா கஜேந்த்ர நாம்ந –யானைகள் எல்லாம் தங்கள் குலபதியான கஜேந்திரன் மேல் ஆணை விடுமாம்
முதல் பாதத்தில் அங்க்ரிம் -வ்யஸ்த பதமாக அன்றிக்கே ஸமஸ்த பதமாய் இருந்தாலும் மேல் பாதங்களில் உள்ள
ஷஷ்ட்யந்த விசேஷய பாதங்களின் பக்கலிலும் சேர்த்துக் கொண்டு
ஜாம்பவத அங்க்ரிம்-ஜடாயுஷ அங்க்ரிம்-கஜேந்திர நாம்ந அங்க்ரிம்-என்று கொள்ள வேண்டும்
ஜடாயு -அதி மானுஷ ஸ்தவத்தில் உகார அந்தமாகவும் இங்கு ஷகார அந்தமாக பிரயோகித்து இருப்பதால்
இரண்டு படியும் உண்டு –

————————

வகுல தர ஸரஸ்வதீ விஷக்த ஸ்வர ரஸ பாவ யுதாஸூ கிந் நரீஷு
த்ரவதி த்ருஷதபி ப்ரஸக்தகா நாஸூ இஹ வநஸைல தடீஷு ஸூந்தரஸ்ய -12-

வகுல தர ஸரஸ்வதீ விஷக்த -மகிழ் மாலை மார்பினரான நம்மாழ்வாருடைய திருவாய் மொழியில் சம்பந்தித்து இருக்கிற
ஸ்வர ரஸ பாவ யுதாஸூ கிந் நரீஷு –ஸ்வரங்கள் ரசங்கள் கருத்துக்கள் ஆகிய இவற்றோடு கூடினவர்களான கின்னர மாதர்கள்
ஸூந்தரஸ்ய -இஹ வநஸைல தடீஷு–அழகருடைய திருமலை தாழ் வரைகளிலே
ப்ரஸக்த காநாச சதீ ஷு –அவ்வருளிச் செயல்களைப் பாடா நின்ற அளவிலே
த்ருஷதபி த்ரவதி — கல்லும் கரையா நின்றது -அதுவே சிலம்பாறு என்று பேர் பெற்றதாக –பூரித்துக் கொள்வது
சிலம்பு -நூபுரம் என்றும் மலை என்றும் உண்டே
வேங்கடமே தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு –மூன்றாம் திருவந்தாதி
இங்கும் சிலம்பு என்கிற மலையே உருகி ஓடுவதை அருளிச் செய்கிறார்
கின்னர ஸ்த்ரீகள் –கிளர் ஒளி இளமை -முடிச் சோதியாய் –செஞ்சொற் கவிகாள் – திருவாய் மொழிகளை
ஸூஸ்வ ரசமாகவும் -ரசவத்தரமாகவும் -சாபிப்ராயமாகவும் பாட -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால் —
அருளிச் செயல்கள் அன்றோ –உருக குறை என் —

——————

திருமலையில் மாலைப் பொழுதிலே நிகழும் படிகளை ஸ்வபாவ யுக்தி முறையிலே அருளிச் செய்கிறார் –

ப்ருங்கீ காயதி ஹம்ஸ தாள நிப்ருதம் தத் புஷ்ணதீ கோகிலாபி
உத்காயதி அத வல்லி தல்ல ஜமுகாத் ஆஷ்ரம் மது ஸ்யந்ததே
நிஷ் பந்தஸ்திமிதா குரங்கததயச் சீதம் ஸிலாஸை கதம்
சாயாஹ்நே கில யத்ர ஸூந்தர புஜஸ் தஸ்மிந் வநஷ் மாதரே–13-

ஹம்ஸ தாள நிப்ருதம் -யதா ததா -ப்ருங்கீ காயதி-ஹம்ஸ கதியானது தாளமாகவும்
வண்டினம் முரல்வது சங்கீதமாகவும் ஆகா நின்றது
ஹம்ஸ கதியைப் போலவே ஹம்ஸ ஸ்வனத்தையும் தாளமாகக் கொள்ளலாம் —
ஹம்ஸ தாளத்திற்குப் பொருத்தமாக வண்டு பாடா நின்றதாம்
கோகிலாபி தத் புஷ்ணதீ–சதீ – உத்காயதி –அந்த வண்டினம் முரல்வதை அனுசரித்துக்
குயில் பேடை தானும் உயரக் கூவா நின்றது
வல்லி தல்ல ஜமுகாத் ஆஷ்ரம் மது ஸ்யந்ததே–செவிக்கு இனிதாகப் பாடுவார் உண்டாகில் கேட்டு
ஆனந்த பரீவாஹமாகக் கண்ணீரைப் பெருக்குவாரும் உண்டே -அப்படியே இங்கும் உண்டு என்கிறது –
சிறந்த கொடிகளில் நின்றும் மகரந்தமே அஸ்ருவாகப் பெருகுகின்றதாம் –
அத
கீழ்ச் சொன்ன சங்கீதப் ப்ரவ்ருத்திக்குப் பிறகு –என்றபடி
குரங்கததய நிஷ் பந்தஸ்திமிதா –உயர்ந்த சங்கீதத்தைக் கேட்டு ஸ்தம்பித்து இருப்பாரும் உண்டே
கண்ணபிரான் குழலூதின போது–மருந்து மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழீ சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா எழுத்து சித்ரங்கள் போலே நின்றனவே –என்கிறபடி
மான்கள் ஸ்தம்பித்து நின்றால் போலேவே இங்கும் உள்ளது –
நிஷ்பந்தத்வமாவது -கர சரணாதிகளை அசைக்காமல் இருத்தல் —
ஸ்திமிதத்வமாவது -இமை கொட்டாமல் இருத்தல் -என்று கொள்வது
ஸிலாஸை கதம் சீதம் –கற்களும் மணல்களும் நீரைப் பெருக்கிக் குளிர்ச்சி பெற்றனவாயின
சர்வோ த்வந்த்வோ விபாஷயா ஏகவத் பவதி –என்கிற பரிபாஷையினால் -ஸிலாஸை கதம்-என்கிற
ஏக வசனம் உபபன்னம்
ஏவம் சாயாஹ்நே – யத்ர-வநஷ் மாதரே பவதி -தஸ்மிந் – ஸூந்தர புஜஸ் –விலசதி–இவ் வண்ணமாக
மாலைப் பொழுதில் எந்தத் திரு மலையில் நிகழ்கின்றதோ அந்தத் திருமலையில் சுந்தரத் தோளுடையான் உளன்
யத்ர ஸூந்தர புஜன் அஸ்தி தஸ்மிந் வனஷ் மாதரே சாயாஹ்நே ஏவம் பவதி–என்றும் யோஜித்துக் கொள்ளலாம் –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: