ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -81-90–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

போகா இமே விதி சிவாதி பதம் ச கிஞ்ச ஸ்வாத்ம அநுபூதி ரிதி யா கில முக்தி ருக்தா
சர்வம் தத் ஊஷ ஜலஜோஷம் ஜூஷேய ஹஸ்தியத்ரி நாத தவ தாஸ்ய மஹா ரசஜ்ஞ–81-

ஹஸ்தியத்ரி நாத
தவ தாஸ்ய மஹா ரசஜ்ஞ–உன்னுடைய அடிமைச் சுவடு அறிந்த
அஹம் –அடியேன்
யே இமே போகா –ஐஹி கங்களான யாவை சில போகங்கள் உண்டோ
யத் விதி சிவாதி பதம் ச –ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய பதவி யாது ஓன்று உண்டோ
கிம் ச -இன்னமும்
ஸ்வாத்ம அநுபூதி ரிதி –ஆத்ம அனுபவம் என்று
யுக்தா -சொல்லப்பட்ட
யா கில முக்திர் –யாதொரு மோக்ஷம் உண்டோ
சர்வம் தத் –ஆகிய இவை எல்லாவற்றையும்
ஊஷ ஜலஜோஷம் ஜூஷேய –ஊஷர ஜல பிராயமாக -அசாரமாக -நினைக்கக் கடவேன்
ஊஷ ஜலம் –உப்புத் தண்ணீர் -பகவத் அனுபவ வ்யதிரிக்த போகங்களை
ஒரு பொருளை மதிக்க மாட்டேன் என்றதாய்த்து –

அடிமைச் சுவடு நெஞ்சில் பட்டவாறே ப்ரயோஜனாந்தர வைரஸ்யம் பிறக்கக் கடவது அன்றோ
தாஸ்ய ரசம் ஞான கோசாரம் ஆனால் போக ஆபாசங்கள் எல்லாம் ரோகமாகத் தோற்றும்
அத்தனை போக்கி ஒரு போகமாகத் தோற்றமோ -என்கிறார்

——————-

விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே
அகதிர் அசரணோ பவாப்தவ் லுடந் வரத சரணம் இத்யஹம் த்வாம் வ்ருணே -82-

வரத
விஷய விஷ தர வ்ரஜ வ்யாகுலே –சப்தாதி விஷயங்கள் ஆகிற சர்ப்ப சமூகங்களால் நிபிடமாயும்
ஜனன மரண நக்ர சக்ராஸ் பதே –பிறப்பு இறப்பு ஆகிற முதலைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாயும்
பவாப்தவ் லுடந் அஹம் –சம்சாரக் கடலில் புரளா நின்ற அடியேன்
அகதிர் அசரணோ இதி –உபேயாந்த்ர ஸூந்யன் உபாயாந்தர ஸூந்யன் என்கிற காரணங்களால்
த்வாம் சரணம் வ்ருணே -உன்னை சரணம் புகுகின்றேன்

இவ்வளவில் பிரபத்தி பூர்த்தி அதிகாரத்தை வெளியிட்டு அருளி இதில் பிரபத்தி பண்ணுகிறார்
சம்சார சமுத்திர ரூபகம் -ஜனன மரணம் ஆகிற முதலைகளும் -சப்தாதி விஷயமான பாம்புத் திரள்கள்
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக்கு கடலுள் நின்று துளங்க
ஸர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ ப்ராப்தமான சேஷியை
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவபிரானையே அடைந்த -என்று
முக்கரணங்கள் அவசியம் என்றாலும்
ஞானான் மோக்ஷம் -கத்யர்த்த புத்யர்த்த -மாநசமே போதும் என்பாரும் உண்டே
நாவினால் நவிற்று -என்று வாசகமே போதும் என்பாரும் உண்டே
சரண வரண வாக்கியம் யோதிதா ந பவதி பாத சாபி தீ பூர்விகா -என்று மேலே அருளிச் செய்ததற்கு
இந்த நிர்வாகம் பொருந்தியதாம் அன்றோ

இந்த ஸ்லோகம் தொடக்கமான தசகம் -கௌரீ வ்ருத்தம்

——————

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

——————-

சரண வரண வாக்யம் ய உதிதா ந பவதி பத சாபி தீ பூர்விகா
இதி யதி தயநீ யதா மய்யஹோ வரத தவ பவேத் தத ப்ராணி மே –84-

அஹோ வரத
யா இயம் சரண வரண வாக்–யாதொரு இந்த சரணாகதி வாக்கு
உதிதா–அடியேன் இடத்தில் உண்டாயிற்றோ
சாபி–அதுவும்
தீ பூர்விகா ந பவதி –புத்தி பூர்வகமாக அல்ல
பத –அந்தோ
இதி–என்று திரு உள்ளம் பற்றி
மயி தயநீ யதா–அடியேன் மீது இரக்கம்
தவ பவேத் யதி –உனக்கு உண்டாகுமாகில்
தத ப்ராணி மே –பிறகு பிழைத்திடுவேன்

பேர் அருளாளர் நீர் -அருளுக்குப் பாத்ரம் தேட –
பிறவிக்கடலுள் அழுந்தும் அடியேன் அருள் புரிவாரைத் தேட
தயநீயகனாய்த் திரு உள்ளம் பற்றுமாகில் அடியேன் உய்யத் தட்டில்லையே
இரைத்து நல் மேல் மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –புத்தி பூர்வகமாக இல்லையே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவே -இரக்கமே உபாயம்

————–

நிரவதி ஷு க்ருதே ஷு சாகஸ் ஸ்வஹோ மதிர் அநுசயிநீ யதி ஸ்யாத் தத
வரத ஹி தயசே ந சம்ஸே மஹே நிர் அநுசயதியோ ஹதா ஹை வயம் –85-

வரத
ஆகஸ் ஸூ நிரவதி ஷு –குற்றங்கள் எல்லை இல்லாமல்
க்ருதேஷு ஸத் ஸூச மதிர் –செய்யப்பட அளவிலும் புத்தியானது
அநுசயிநீ ஸ்யாத் யதி –பச்ச தாபத்தை யுடையதாகுமே யாகில்
தத –அந்த அனுதாபம் அடியாக
தயசே ஹி –இரங்கி அருள்வாய் காண்
ந சம்ஸே மஹே–இதில் சம்சயப் படுகிறோம் இல்லை
வயம் து -நாமோ என்றால்
நிர் அநுசயதியோ–அநுதாப புத்தி அற்றவர்களாக
ஹதா -கெட்டப் போனோம்
ஹை –அந்தோ

அநு தபிக்கவும் பெற்றேன் அல்லேன் -மேலும் மேலும் பாபங்களைக் கூடு பூரிப்பதிலேயே நோக்குடையேன் –
எனக்கு எம்பெருமான் கிருபை எத்தைப் பற்றாசாகக் கொண்டு அருளுவான் –
இழந்தே போகும் அத்தனை ஆகாதே என்று வயிறு பிடிக்கிறார் –

——————

சரண வரண வாக் இயம் யாத்ய மே வரத தததிகம் ந கிஞ்சிந் மம
ஸூலபம் அபி மதார்த்ததம் சாதனம் தத் அயம் அவசரோ தாயாயாஸ் தவ –86-

ஹே வரத
அத்ய மே–இப்போது என்னுடைய
யா –யாது ஒரு
இயம் சரண வரண வாக் -அபூத் –இந்த சரணாகதி வாக்கானது உண்டாயிற்றோ
தததிகம் ஸூலபம்-அதற்கு மேற்பட்டதாய் ஸூ கரமாய்
அபி மதார்த்ததம்–அபேக்ஷித பல பிரதமான
கிஞ்சித் சாதனம்–யாது ஒரு சாதனமும்
மம ந –அடியேனுக்கு இல்லை
தத் –இப்படி அநந்ய உபாயனாய் இருப்பதனால்
அயம் –இந்த சமயமானது
தவ –உன்னுடைய
தாயாயாஸ் அவசரோ –அருள் பிரசரிப்பதற்கு வாய்த்த காலம் –

யாதிருச்சிகமாகத் தோன்றிய இந்த சரண வரண வாக்கையே பற்றாசாகக் கொண்டு
அலாப்ய லாபமாகக் கொண்டு என்னை வலையில் அகப்படுத்தப் பாரீர் -என்கிறார்

——————

விஷய விஷயினீ ஸ்ப்ருஹா பூயஸீ தவ து சரணயோர் ந ச அல்பாயி மே
வரத நநு பரஸ் தவைவ த்வயம் யதுத தவ பத ஸ்ப்ருஹா ஜென்ம மே–87-

வரத
மே –அடியேனுக்கு
விஷய விஷயினீ –சப்தாதி விஷயங்களைப் பற்றிய
ஸ்ப்ருஹா –ஆசையானது
பூயஸீ –மிகவும் அதிகமானது
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைந்துப் போகார்-
நான் அவரைப் பொறுக்க கில்லேன் புனிதா
தவ சரணயோஸ்து –உன்னுடைய திருவடிகளிலோ
ச அல்பாயி ந –அந்த ஆசையானது சிறிதும் இல்லை
தவ பத ஸ்ப்ருஹா ஜென்ம இதி யதுத –உன் திருவடிகளில் எனக்கு அன்பு உண்டாக்குவது
என்பது யாது ஓன்று உண்டோ
அயம் தவைவ பரோ நம –இதுவானது உனக்கே தலைச்சுமை கிடாய்
போஜனத்து ஷூத்து போலே ருசி முன்னாகச் செய்யும் கைங்கர்யமே ரசிக்கும் –
அந்த ருசியும் அவனாலே வரக்கடவது -அத்தலைக்கே பரம் என்கிறார் –
காதல் கடல் புரைய விளைக்கும் திரு மேனி அன்றோ

——————

இயம் இஹ மதிர் அஸ்மத் உஜ்ஜீவநீ வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே
சரணமிதி வசோபி மே நோதியாத் த்வமஸி மயி தத பிரசாத உந்முக –88-

ஹே வரத
மே -விஷய அநு ரக்தனான எனக்கு
சரணமிதி வாசோபி–சரணம் என்கிற வாங் மாத்ரமும்
தவ ப்ரஸாதாத்ருதே –உனது அனுக்ரஹத்தால் அன்றி
நோதியாத் கலு–உண்டாக மாட்டாது இறே
தத –ஆகையால் –
த்வத் அனுக்ரஹ ஏக ஜன்யமான சரண வரண வாக்கு உண்டானதால்
த்வம் மயி –நீ அடியேன் அளவிலே
பிரசாத உந்முக அஸி —அனுக்ரஹத்தில் ஊக்கம் உடையவனாயாகி நின்றாய்
இதி -இயம் மதிர் –என்கிற இந்த புத்தியானது
இஹ –இப்போது
அஸ்மத் உஜ்ஜீவநீ –அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்கு உறுப்பு

கார்யத்தைக் கொண்டு காரணத்தை சித்தவத் கரிக்க வேண்டுமே –
என் நினைவு இன்றிக்கே வாயில் சரணம் என்கிற வசஸ்ஸூ உண்டாகக் காண்கிறேன்
தேவரீர் அனுக்ரஹ அபிமுகராய் இருந்து அருளுகிறீர் என்னும் இடம் நிச்சிதம்
தேவரீர் அனுக்ரஹத்துக்கும் இந்த சரண வசஸ்ஸூக்கும் காரண கார்ய பாவம் கொள்ளுகையாகிற
இந்த அத்யவசாயம் என் பக்கலிலே உண்டான பின்பு அடியேன் உஜ்ஜீவிக்க குறை உண்டோ
தேவரீர் மேல் உள்ளவற்றையும் அனுக்ரஹித்து அருளக் கடவராக இருக்க
நான் இருந்து கரைய பிராப்தி உண்டோ -என்றபடி –

———————

வரத யதிஹ வஸ்து வாஞ்சாம் யஹம் தவ சரண லபா விரோதஸ் தத
யதி ந பவதி தத் ப்ரதேஹி ப்ரபோ ஜடிதி விதர பாதமேவ அந்யதா -89-

ஹே வரத ப்ரபோ
அஹம் இஹ யத் வஸ்து வாஞ்சாமி –அடியேன் இங்கே யாது ஒரு வஸ்துவை விரும்புகிறேனோ
தத -அந்த வஸ்து வாஞ்சையினால்
தவ சரண லபா விரோதஸ்–உனது திருவடிகளைப் பெறுதற்கு பிரதிபந்தமானது
ந பவதி யதி –உண்டாக மாட்டாதாகில்
தத் ப்ரதேஹி–அந்த வஸ்துவை தந்து அருள்
அந்யதா –நான் ஒரு வஸ்துவை விரும்புவது உன் கமல பத ப்ராப்திக்கு பிரதிபந்தகம் ஆகுமாகில்
பாதமேவ ஜடிதி விதர –திருவடியையே உடனே தந்து அருள்

தரிசனத்துக்கு தர்சனம் இழந்த ஆழ்வான் எம்பெருமானார் நியமனத்தாலே திருக்கண் பெற
ஸ்தவம் அருளிச் செய்கிறார் ஆகையால் அந்த பிரார்த்தனைக்கு உபோத்காதமாய் இந்த ஸ்லோகம்
மாம்ச சஷுஸ்ஸை தா என்று நேர் கொடு நேர் பிரார்த்திக்க மாட்டாமையாலே அத்தை உள்ளடக்கி
வ்யங்க்ய மரியாதையாலே இந்த பாசுரம்
யத் தச் சப்தங்களை இட்டு பாசுரம் இடுகிறார் -மாம்ச சஷுஸ் ஆகிற ஷூத்ர ப்ரயோஜனத்தில்
விருப்பத்தை தம் வாயால் வெளியிடக் கூசி –

————-

ததபி கிமபி ஹந்த துர்வாசநாசத விவசதயா யத் அப்யர்த்தயே
தத் அதுலயே ஸார்வ சர்வ ப்ரத ப்ரவிதர வரத ஷமாம்போநிதே–90-

அதுலயே–ஒப்பற்ற அருளை உடையவனே
ஷமாம்போநிதே–கருணா சாகரமே
ஸார்வ –சர்வ ஜன ஹிதனே —
சர்வ ப்ரத–அபீஷ்டங்கள் சகலத்தையும் அளிப்பவனே
வரத –அது தோன்ற வரதன் என்னும் திரு நாமம் உடையவனே
ததபி –ஆன போதிலும்
அஹம் -அடியேன்
துர்வாசநாசத விவசதயா –பல பல துர்வாசனைகளுக்கு வசப்பட்டு இருப்பதால்
யத் கிமபி அப்யர்த்தயே -ஏதோ ஒன்றைப் பிரார்த்திக்கிறேன்
தத் ப்ரவிதர –அதைக் கொடுத்து அருள்

மாம்ச சஷூஸ் -பிரார்த்தனையில் அபேக்ஷை தோற்ற அருளிச் செய்கிறார்
தயா நிதியாய் சர்வ ஜன சம்பந்தியாய் சர்வஸ்வ தாதாவாய்-பேர் அருளாளனாய் விளங்கும் தேவரீர் இடம்
இப்படி நிர்பந்தித்து பிரார்த்திப்பது அபசாரம் யாகிலும் ஷமா சாகரரான உனக்கு க்ஷமிக்கப் பிராப்தி உண்டே –
நான் பிரார்த்திக்கத் தட்டு என் -நீ அருளத் தட்டு என் -என்கிறார்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: