ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -71-80–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

நரஸிம்ஹ தநுர் அகௌநீ சம சமய ஸமுத்பவச்ச பக்த கிர
ஸ்தம்பே ச சம்பவஸ் தே பிசுநயதி பரேசதாம் வரத -71-

ஹே வரத
அகௌநீ -அப்ராக்ருதமான
நரஸிம்ஹ தநுர் -நரஸிம்ஹ திருக்கோலமும்
பக்த கிர -சம சமய ஸமுத்பவச்ச –பக்தனாகிய ப்ரஹ்லாதனுடைய -எங்கும் உளன் என்ற
வாய்ச சொல்லில் வந்து தோன்றியதும்
ஸ்தம்பே ச சம்பவஸ் தே –அது தன்னிலும் தூணில் வந்து தோன்றியதும்
தே பரேசதாம் பிசுநயதி–உன்னுடைய பரமேஸ்வரத்தை தெரிவிக்கிறது

ஸ்ரீ ஹஸ்திகிரியின் அடியில் கோயில் கொண்டு எழுந்து அருளும் ஸ்ரீ நரஸிம்ஹனுக்கு மங்களா சாசனம் இந்த ஸ்லோகம்

கீழே ஸுவ்லப்யம் அனுபவம் இங்கு பரத்வ அனுபவம் -பரத்வே சதி ஸுவ் லபயமே அபி நந்தனீயம்
ஆஸ்ரித பரதந்த்ரமும் உண்டே நரஸிம்ஹ அவதாரத்தில் –
ப்ரஹ்மா வரம் கெடாதபடி ப்ரஹ்லாதன் வார்த்தை படிக்காகவும் –
ஆக தேவ ஆஸ்ரித பாரதந்தர்யம் உண்டே

————

தாப த்ரயீ மய தவாநல தஹ்ய மாநம் முஹ்யந்தம் அந்தம் அவயந்தம் அநந்த நைவ
ஸ்தாதும் ப்ரயாதும் உபயாதும் அநீசம் ஈஸ ஹஸ்தீஸ த்ருஷ்ட்டி அம்ருத வ்ருஷ்டிபிர் ஆபஜேதா –72-

ஈஸ—சர்வ ஸ்வாமியாய்
அநந்த –அபரிச்சின்ன ரூபனாய்
ஹஸ்தீஸ –ஹஸ்திகிரி நாதனான வரதனே
தாப த்ரயீ மய தவாநல தஹ்ய மாநம் –தாபத் த்ரயமான காட்டுது தீயால் தபிக்கப் பெற்று இருக்கிறவனாய்
அத ஏவ
முஹ்யந்தம் –மயக்கம் உடையவனாயும் -தாபத்ரயத்தாலே தகர்ப்புண்ட அடியேனுக்கு அறிவு குடி போய்த்து
அந்தம் –இந்த ஆர்த்தியின் எல்லையை
நைவ அவயந்தம் –அறியாதவனாயும்
ஸ்தாதும் ப்ரயாதும் உபயாதும் அநீசம் –மாம் –கை ஒழிந்து நிற்பதற்கும் -ஒன்றைச் செய்யப் போவதற்கும்
உன்னைக் கிட்டுகைக்கும் அசக்தனான அடியேனை
தேச கால வஸ்து அபரிச்சேதயனான உன்னை பரிச்சேதிக்கிலும் இந்த மோஹ அவதியை பரிச்சேதிக்க வல்லேன் அல்லேன்
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு நீயே கடவனான பின்பு நான் கடவேன் அல்லேன்
கர்ம யோகாதிகளை அனுஷ்டிக்கை தவிர்ந்து வெறுமனே கிடக்க முடிய வில்லையே –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை–ஆஜ்ஜாச் சேதி மம துரோகி -என்று நீ சொல்லி வைத்ததை அறிபவன் ஆகையால்
அவை ஸ்வரூப விருத்தங்கள் துக்க பாஹுல்யங்கள் இத்யாதியால் அனுஷ்ட்டிக்க போகிறேன் அல்லேன்
மஹா விசுவாசம் இல்லாமையாலும் ஆர்த்தி இல்லாமையாலும் பிரபத்தி பண்ண மாட்டிற்று இலன்
என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே-
இத்தலைக்கு நினைவுக்கும் அடியும் நீயே அன்றோ
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
தாமரைக் கண்களால் நோக்காய்
த்ருஷ்ட்டி அம்ருத வ்ருஷ்டிபிர் ஆபஜேதா –கடாக்ஷ அம்ருத வர்ஷங்களால் புடை சூழக் கடவாய் –
என்னைச் சுற்றி த்ருஷ்ட்டி அம்ருத மழை பொழிய வேணும்

ஸ்ரீ மன் நாராயண சரணவ் -அர்த்தம் அருளிச் செய்தாராய் – இனி சரணம் பிரபத்யே -என்னும் இடத்தை விவரிக்கப் புகுந்து
முதலில் எட்டு ஸ்லோகங்களால் தம்முடைய தோஷ பூயஸ்த்வத்தை ஆவிஷ்கரித்து அருளிச் செய்கிறார்
பசு பக்ஷி மனுஷ்யாத்யைர் பிசாசோரக ராக்ஷசை-சரீஸ்ருபாத்யைச் ச ந்ரூணாம் ஜாயதே சாதி பவ்திக -என்னப்பட்டது ஆதி பவ்திகம்

இந்த ஸ்லோகம் தொடங்கி தசகம் முழுவதும் வசந்த திலக வ்ருத்தம் –

—————

நாநா விருத்த விதி சாஸூ திசாஸூ சாஹோ வந்த்யைர் மனோரதசதைர் யுகபத் விக்ருஷ்ட
த்வத் பாதயோர் அநுதித ஸ்ப்ருஹ ஏஷ ஸோஹம் ந ஸ்வஸ்தி ஹஸ்திகிரி நாத நிசாமயாமி-73-

ஹஸ்திகிரி நாத
வந்த்யைர்–ஊமனார் கண்ட கனா போலே பழுதாய் ஒழிகின்ற
மனோரதசதைர்–பல மனோ ரதங்களால்
நாநா விருத்த விதி சாஸூ -விருத்தங்களான பல பல குறுக்கு வழிகளிலும்
மாதரார் வன முலைப் பயனே பேணவும் -போகமே பெருக்க வேணும் என்னும் -ஓடியும் உழன்றும் —
உண்டியே உடையே -இத்யாதிகள் -மனோ ரதங்களுக்கு ஒரு எல்லை இல்லையே
திசாஸூ –நல் வழிகளிலும் -ஐஹிக ஆமுஷ்மிக போக ஸ்தானங்களான வழிகள்
யுகபத் –ஒரே காலத்தில்
விக்ருஷ்ட –இழுக்கப் பட்டவனாய்
த்வத் பாதயோர்-உன் திருவடிகளிலே
அநுதித ஸ்ப்ருஹ-அன்பு உதிக்கப் பெறாதவனாய் இருக்கிற
நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்கிற ஸ்ப்ருஹ லேசமும் இல்லையே
ஏஷ ஸோஹம்-அடியேன்
ஸ்வஸ்தி- ந – நிசாமயாமி—நன்மையை நோக்குகின்றிலேன்
பகவத் அநு ராகத்தை கனாக் கண்டு அறியாத நான் ஒரு நன்மை பெறுவேனாக
எண்ணி இருக்கைக்கு என்ன ப்ரஸக்தி உண்டு –என்கிறார் –

————————-

ஹை நிர்ப்பயஸ் அஸ்மி அவிநயஸ் அஸ்மி யதஸ் த்வத் அங்க்ரவ் லிப்சாம் அலப்தவதி சேதஸி துர்விநீதே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் ஏஷ ஸோஹம் அக்ரே வரப்ரதே தவ ப்ரலபாமி கிஞ்சித் –74-

ஹே வரப்ரதே
ஏஷ ஸோஹம் –இவ்வடியேன்
நிர்ப்பயஸ் அஸ்மி –அச்சம் அற்றவனாய் இருக்கிறேன் –
கடதாசி ஸார்வ பவ்மனானவானை என்னை நோக்காய் என்னுமா போலே விலக்ஷண விஷயத்தை காமுற்றோமே–
பிறர் அறிந்தால் என் படுவோம் என்று அஞ்சாதே கிடக்கிறேன்
அவிநயஸ் அஸ்மி –விநயம் அற்று இருக்கிறேன் –ஆச்சார்ய சேவையை கனவிலும் செய்து அறியேன்
ஹை –அந்தோ -கெட்டேன்-அவனுடைய வை லக்ஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டு
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே ஆழ்வாராதிகள் அனுபவிக்கும் உன்னை
சம்போதித்து தூஷிக்கிற படி என்னே என்று வெறுக்கிறார்
யதஸ் –ஏன் எனில்
துர்விநீதே -சீர் திருந்தாமல் இருக்கிற
சேதஸி–என் நெஞ்சானது
த்வத் அங்க்ரவ் லிப்சாம் –உனது திருவடிகளில் விருப்பத்தை
அலப்தவதி சதி -அடையாது இருக்கும் அளவிலே
துஷ் கர்ம வர்ம பரிகர்மிதஸ் –தீ வினைகள் ஆகிற கவசங்களை அணிந்துள்ள
ஏஷ ஸோஹம் த்வத் அக்ரே -இவ்வடியேன் உன் எதிரில்
கிஞ்சித் ப்ரலபாமி –வாயால் வந்ததொன்றை பிதற்றா நின்றேன்
திரு முன்பே நிற்கைக்கும் அயோக்யனாய் இருந்து வைத்தும் கடாக்ஷ மழை சூழந்து இருக்க
விண்ணப்பம்க் செய்தேனே–என்ன அநீதி என்று அநு சயிக்கிறார்
ஞான பக்திகள் தலை எடுத்தார் பேசும் படிகளை அநு கரித்து பாசுரம் செய்தேனே-
பய விநயங்கள் அடியேனுக்கு உண்டாகில் இப்படிப் பேச ப்ரஸக்தி உண்டோ
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்

—————-

சவ்யாதிர் ஆதிர் அவிதுஷ்டிர் அநிஷ்ட யோக ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் அமர்ஷகரோ நிகர்ஷ
க்ருந்தந்தி சந்ததம் இமாநி மனோ மதீயம் ஹஸ்தீஸ ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-75-

ஹஸ்தீஸ-ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
சவ்யாதிர் –சரீர வியாதியுடன் கூடின
ஆதிர் –மனோ வியாதி என்ன
அவிதுஷ்டிர் –நெடு நாள் அனுபவித்தும் திருப்தி பிறவாமை என்ன
அநிஷ்ட யோக –வேண்டாதவர்கள் வந்து சேர்வது என்ன
ஸ்வ அபீஷ்ட பஞ்சனம் –விரும்பிய பொருள்கள் கிடைக்காத படி தடை படுவது என்ன
அமர்ஷகரோ நிகர்ஷ –கோபத்தை உண்டாக்க வல்ல தாழ்ச்சி என்ன
அமர்ஷம் -ரோஷம் -அதை விளைக்கக் கடவ நிகர்ஷம் -குலம் ரூபம் வித்யா தனம் இத்யாதிகளில்
தனக்குள்ள தண்மை நிமித்தமான நிகர்ஷம்
இமாநி–ஆகிய இவைகள்
மதீயம் மனோ சந்ததம் –என் மனதை எப்போதும்
க்ருந்தந்தி –ஈர்கின்றன
ந த்வத் அபிலாஷ நிதி ப்ரஹாணிஸ்து-உன்னிடம் அன்பு வைப்பதாகிய நிதியின் இழவோ என்றால்
ந க்ருந்ததி -வருந்துகின்றது இல்லையே -உன்னிடம் அன்பு இல்லையே என்ற துக்கம் மாத்திரமே இல்லை என்கை
பகவத் விஷயத்தில் அபிலாஷை மாத்திரமே அக்ஷய பல பிரதமாகையாலே அதனை நிதி என்கிறார் —

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயதே -சா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம் சா ப்ராந்திஸ்
ச சா விக்ரியா –என்று ஒரு க்ஷணம் சிந்தை மாறினாலும் மஹா ஆபத்து என்று சாஸ்திரம் சொல்லா நிற்க
அதிலே நான் கரையாதே கிடக்கிறேன்
விஷயாந்தரங்களுக்காகவே கரைந்து போகின்றேன்

—————-

வித்வேஷ மான மத ராக விலோப மோஹாதி ஆஜாந பூமிர் அஹம் அத்ர பாவே நிமஜ் ஜன்
நிர் த்வந்த்வ நித்ய நிரவத்ய மஹா குணம் த்வாம் ஹஸ்தீஸ க ச்ரயிதும் ஈஷிதும் ஈப்ஸிதும் வா –76-

நிர் த்வந்த்வ –ஞான அஞ்ஞானங்கள் ஸூக துக்கங்கள் -போன்ற த்வந்தம் இல்லாதவனாயும்
கொள்கை கொளாமை இலாதவன் –எள்கல் ராகம் இலாதான்
நித்ய நிரவத்ய–ஸ்வபாவமாகவே ஹேயபிரதிபடனாயும் உள்ள
ஹஸ்தீஸ–ஸ்ரீ பேர் அருளாளனே
வித்வேஷ –ஒரு வஸ்துவில் அகாரணமாக த்வேஷிப்பது
மான –ஆபீஜாத்யாதி ப்ரயுக்தமாக அஹங்கரிக்கை என்ன
மத -விஷய லாபத்தாலே கொழுப்படைவது
ராக -விஷய ப்ராப்தியை விரும்புகை
விலோப –விசேஷ லோபம் என்ன –ப்ராப்தமான பொருளை ஸத்பாத்ரத்தில் விநியோகம் செய்ய இடைச்சுவரான அபி நிவேசம்
மோஹாதி ஆஜாந பூமிர் –மோகம் முதலான துர்குணங்களுக்குப் பிறப்பிடமாய் –ஆதி சப்தம் காம க்ரோதாதிகள்
மொழியைக் கடக்கும் பெறும் புகழ் கொண்ட -ஸத் குண கணா நாமா காரரான இவர் –
இப்படிப்பட்ட தோஷங்களுக்கு ஜென்ம பூமியாக அருளிச் செய்து கொள்கிறார்
அத்ர பாவே –இந்த சம்சாரத்தில்
நிமஜ்ஜன் அஹம் –மூழ்கிக் கிடக்கிற அடியேன்
மஹா குணம் த்வாம் –சிறந்த குணமுடைய உன்னை
ச்ரயிதும் -அடைவதற்கும்
ஈஷிதும் –காண்பதற்கும்
ஈப்ஸிதும் –அடைய விரும்புவதற்கும்
க –எவ்வளவன் –ஒன்றுக்கும் அதிகாரி அல்லேன்
நிகர்ஷித்தின் எல்லையில் இருக்கும் நான் சர்வாதிகனான உன்னை அபி லஷிக்க எவ்வளவன்
சர்வாத்மநா அடியேன் அநதி காரி -என்கிறார்

——————–

புத்ராதய கதமமீ மயி ஸம்ஸ்திதே ஸ்யுஸ் இத்ய ப்ரதிக்ரிய நிரர்த்த ந சிந்தநேந
தூயே ந து ஸ்வயம் அஹம் பவிதாஸ்மி கீத்ருக் இத்யஸ்தி ஹஸ்தி கிரி நாத விமர்சலேச -76-

ஹஸ்தி கிரி நாத
மயி ஸம்ஸ்திதே சதி –நான் மாண்ட அளவிலே
புத்ராதய கதமமீ ஸ்யுஸ் இத்ய ப்ரதிக்ரிய நிரர்த்த ந சிந்தநேந –இந்த மக்கள் முதலானவர்கள்
எப்படி ஆவார்களோ என்றால் ப்ரதீகாரம் அற்றதாய் -அத ஏவ -வ்யர்த்தமான சிந்தையால்
அஹம் தூயே –அடியேன் கஷ்டப்படுகிறேன்
ஸ்வயம் கீத்ருக் பவிதாஸ்மி து –நாம் எப்படி ஆகப் போகிறோம் என்பது மாத்ரம்
விமர்சலேச –மே -நாஸ்தி –சிறிது ஆராய்ச்சியும் அடியேனுக்கு இல்லை –
நாம் நாளைக்கு எப்பாடு படப் புகா நின்றோமோ -என்று அல்பமும் சிந்தித்து அறியேன் கிடாய் –என்கிறார் –

ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணத்தில் ஸ்ரீ வசன பூஷணத்தில் –
ஸ்வ தோஷத்துக்கும் பகவத் பாகவத குணங்களுக்கும் காலம் போருகையாலே–என்று பிரதமத்தில்
ஸ்வ தோஷ அனுசந்தானம் சொல்லிற்றே –
ஸ்ரீ ஆழ்வான் சிஷ்ய லக்ஷணத்துக்கு பிரதம நிதர்சன பூமி அன்றோ
எனவே இவரது ஸ்ரீ ஸூக்திகளிலே பகவத் குண அனுசந்தானம் சுருங்கி
ஸ்வ தோஷ அனுசந்தானமே பெருகி இருக்குமே
ஸ்ரீ மா முனிகளும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜமீடே-என்று அன்றோ அருளிச் செய்துள்ளார்

——————–

சம்பாசலம் பஹுல துக்கம் அநர்த்த ஹேது அல்பீய இத்யபி விம்ருஷ்டிஷு த்ருஷ்ட தோஷம்
துர் வாசநா த்ரடிமதஸ் ஸூகம் இந்த்ரியோத்தம் ஹாதும் ந மே மதிரலம் வரதாதி ராஜ –78-

வரதாதி ராஜ —
விம்ருஷ்டிஷு –ஆராய்ச்சி செய்யும் அளவில்
சம்பாசலம் இதி –மின்னல் போல் க்ஷணிகமானது என்றும்
பஹுல துக்கம் இதி -துக்க பிரசுரமானது என்றும்
அநர்த்த ஹேதுர் இதி –அநர்த்தங்களுக்கு காரணம் என்றும்
அல்பீய இத்யபி -அதியல்பம் என்றும்
இப்படியாக
த்ருஷ்ட தோஷம் –ப்ரத்யஷிக்கப்பட்ட தோஷங்களை யுடைத்தாயும்
இந்த்ரியோத்தம்–இந்திரிய ஜன்யமாயுள்ள
ஸூகம் மே மதி–விஷய ஸூகத்தை என் புத்தியானது
துர் வாசநா த்ரடிமதஸ் –துர் வாசனையின் உறைப்பினாலே
ஹாதும் நாலம் –விட மாட்டாது இருக்கிறது

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –சரீரம் அஸ்திரமானாலும்
இந்திரிய ஸூகம் க்ஷணிகமே யானாலும் -துக்க அம்சமே பிரசுரமாய் இருக்கும் -அநர்த்த ஹேதுவாயும் இருக்கும்
தோஷங்கள் ஸூ வியக்தமாய் இருந்தாலும் துர் வாசனா விபவம் இந்த ஸூக ஆபாசங்களிலே
மேலும் மேலும் அபி நிவேசத்தை பெருக்குமே ஒழிய விரக்திக்கு ஹேதுவாகிறது இல்லையே என்கிறார்

—————

புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி -79-

ஹே ஹஸ்தீஸ
புத்த்வா ச –தெரிந்தும்
நோ புத்த்வா ச–தெரியாமலும்
வாக் தநு மனோ ஜெனிதை –வாக்கு என்ன சரீரம் என்ன மனஸ்ஸூ என்ன இவைகளால் உண்டாக்கப் பட்ட
பவதாபி அகண்யை –சர்வசக்தனான உன்னாலும் எண்ண முடியாத
ச விஹித அகரணை –விஹிதங்களைச் செய்யாமை யாகிற பாபங்களாலும்
நிஷித்த சம் சேவனைஸ் –ஸாஸ்த்ர நிஷித்தங்களைச் செய்கையாகிற பாபங்களாலும்
த்வத் அபசார சதைர் –உன் திறத்தில் செய்யும் பல பல அபசாரங்களாலும்
அஸஹ்யை -சர்வ ஸஹிஷ்ணுவான உன்னாலும் பொறுக்க ஒண்ணாத
பக்தாகசாம் சதைர் அபி –பல பல பாகவத அபசாரங்களாலும்
ஹதோஸ்மி -கெட்டேன்

கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்

—————-

த்வத் தாஸ்யம் அஸ்ய ஹி மம ஸ்வ ரஸ ப்ரஸக்தம் தச் சோரயன் அயம் அஹம் கில சஸ்க்கல ப்ராக்
த்வம் மாமகீந இதி மாம் அபி மந்யஸே ஸ்ம ஹஸ்தீஸ சம்சய நஸ் தமிமம் விவாதம் -80-

ஹஸ்தீஸ
அஸ்ய மம–இப்படிப்பட்ட மஹா பாபியான எனக்கு
த்வத் தாஸ்யம் –உன் பக்கல் அடிமையாய் இருப்பது அன்றோ
ஸ்வ ரஸ ப்ரஸக்தம் ஹி –ஸ்வா ரசிகமானது–ஸ்வதஸ் சித்தம்
அயம் அஹம்–அந்த நான்
ப்ராக்-பண்டு எல்லாம்
தச் சோரயன் –அந்த ஸ்வதஸ் சித்த தாஸ்யத்தை களவு காணா நின்றவனாய்
சஸ்க்கல கில –நழுவித் போந்தேன் காண்
த்வம் –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனான நீ
மாம்–இப்படிப்பட்ட என்னை
மாமகீந இதி அபி மந்யஸே ஸ்ம –இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளினாய்
நஸ் –உனக்கும் நமக்கும் உண்டான
தமிமம் விவாதம் -நான் உன் தாசன் அல்லேன் என்று கை கழியப் போவதும் –
நீ என் தாசன் என்று என்னை நீ பின் தொடர்வதுமான இந்த வி சம்வாதத்தை
சம்சமய –இனி எப்போதும் தலை எடுக்க ஒண்ணாதபடி சமூல சாந்தி செய்து அருள்வாய்

ஆக இவ்வளவும் ஸ்வ தோஷ சமுதாய அனுசந்தானம் செய்து அருளி –
பரகத ஸ்வீ காரம் அடியாக ஸ்வ ஸ்வரூபத்தை பெற்றேன் என்கிறார் இதில்
திருவடித் தாமரைகளில் தாஸ்ய வ்ருத்தி அன்றோ ஸ்வ ரஸ ப்ராப்தமாய் இருப்பது
சேக்ஷத்வாதிகளையே பிரதான ஆத்ம தர்மமாக்கி
ஞாத்ருத்வாதிகளை தத் அநு குணமாக நம் பூர்வர்கள் அருளிச் செய்வர்களே
அடியேன் உள்ளான் என்று அடிமையையே இட்டு ஆத்மாவை நிரூபித்து அருளிச் செய்தபடி கண்டோமே
யானே என்னை அறிய கில்லாதே யானே என் தனதே என்று இருந்த என்னை
இசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான் —
உடைமையை பேண வேண்டிய க்ருத்யம் உடையவனுக்கே அன்றோ
த்வம் மே அஹம் மே என்ற விவாதம் ஒரு நாளும் உண்டாகாத படி ச மூலமாகப் போக்கி அருள வேணும்
உன்தன்னோடு விவாதம் செய்யாதபடி கிருபை செய்து அருள வேணும் என்கிறார் –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: