ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -31-40–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

பரபாகம் இயாத் ரவேஸ் தமிஸ்ரா வர தாத்ய த்வயி தந்நிசாமயாம
கமிதா தவ வக்த்ர சித்ர பாநோ பரபாகம் நநு கௌந்தலீ தமிஸ்ரா –31-

ஹே வரத
தமிஸ்ரா-இருள் திரளானது
ரவேஸ் -ஸூர்யனுக்கு
பரபாகம் –பரபாகம் என்னும் படியை
இயாத் –அடையட்டும்
தத் அத்ய -அந்த நிலையை இப்போது
த்வயி –உன் பக்கலிலே
நிசாமயாம –காணா நின்றோம் -எங்கனே என்னில்
தவ –உன்னுடைய
கௌந்தலீ தமிஸ்ரா –திருக் குழல் கற்றையில் உள்ள இருளானது
வக்த்ர சித்ர பாநோ–திரு முக மண்டலமாகிற ஸூர்யனுக்கு
பரபாகம் கமிதா நநு -பரபாக சோபையை அடைவிக்கப் பட்டு இரா நின்றது இறே

சதுர்த்த தசகம் -திரு முக மண்டல வர்ணந பரமாய்ச் சொல்லுகிறது –
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியோடு தோள் தீண்டியான திரு முக மண்டலத்தின் வெளிச்சிறப்பும்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்-என்று
நித்ய சந்தேக ஜனகமான திருக்குழல் கற்றையின் ஒழுங்கும் –
ஆக இப்படி சாமாநாதி கரண்யம் ஹி தேஜஸ் திமிரயோ குத-என்ன ஒண்ணாமே ஒரு சேர்த்தியாக
அமைந்து இருக்கும்படிக்கு சமத்கார பாசுரம் –

கரிய திரு மேனியில் ஹிரண்ய வரணையான பிராட்டி ஒரு பரபாகம்
கொவ்வைக்கனி போன்ற திரு அதரத்துக்கு-மல்லிகை அரும்பு போன்ற திரு முத்துக்கள் ஒரு பரபாகம்
அதி விசால தமலா நிபமான பாஹுக்களில் கனகமய கடக அங்கதங்கள் விளங்குவது ஒரு பரபாகம்
பகலுக்கு இரவு பரபாகம் என்று லௌகிக மாக சொல்ல முடியாதே –
இப்படி அசங்கடிதமான வ்யவஹாரம் சங்கடிதம் ஆயிடுக என்று ஆபத்தி பண்ணுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஸ்ரீ பேர் அருளாளனுடைய குந்தளங்கள் காள ராத்திரி போலே கறுத்து விளங்குகின்றன என்பதும்
திரு முக மண்டலம் கதிர் ஆயிரம் இரவி போலே ஜ்வலியா நின்றது என்பதும்
இந்த திரு முக திரு குந்தளங்கள் உடைய பரபாக பராசபர ஸ்ரீ பரம போக்யமாய் இரா நின்றது என்பதும்
இதனால் சித்திக்கும்

இந்த தசகம் வசந்த மாலிகா வ்ருத்தம்

————–

உபயோரபி பஷயோஸ் திதிர் யா விஷமீ பாவ நிராசதா அஷ்டமீதி
உபமாநஜ சம்பதே ஹி ச இந்தோ வரத அபூத் பவதோ லலாட லஷ்ம்யா –32-

உபயோரபி பஷயோஸ் -சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் இரண்டு பக்ஷங்களிலும் உள்ள
அஷ்டமீ இதி யா திதி -அஷ்டமீ என்கிற யாதொரு திதியானது
இந்தோ-சந்திரனுக்கு
விஷமீ பாவ நிராசதா–விஷமத் தன்மையைப் போக்கடிக்க வல்லதோ
ச இந்தோ –அந்த அஷ்டமீ திதியானது அந்த சந்திரனுக்கு
பவதோ லலாட லஷ்ம்யா -ஸஹ -உன்னுடைய திரு நெற்றியின் அழகோடு
திதிர் யா
உபமாநஜ சம்பதே ச -ஓப்பிடுவதனால் உண்டாகும் செல்வத்தின் பொருட்டும்
அபூத்-ஆயிற்று

சந்திரனுக்கு விஷம நிலையைப் போக்கி சம நிலை கொடுக்கும் திதி அன்றோ அஷ்டமீ திதி –
அதுக்கும் மேலே அன்றோ உன்னுடைய திரு நெற்றியுடன் சொல்லும் ஒப்புமை

——————-

அலகாலி சிகீர்ஷயா கிலாத்தா ஸூபரீ ஸிஷிஷயா லலாட பட்டே
ஸூமஷீ நிகஷீக்ருதா ப்ருவவ் தே வரத ஸ்யாத் அக்ருதத்வதஸ் து நைவம் –33-

ஹே வரத
விதாத்ரா -ப்ரஹ்மாவினால்
ஆத்தா -கையில் எடுத்துக் கொல்லப்பட்டதாய்
ஸூபரீ ஸிஷிஷயா–அதன் கருமையை நன்றாகப் பரீக்ஷித்துப் பார்க்க வேணும் என்ற விருப்பத்தினாலே
லலாட பட்டே-திரு நெற்றியாகிற கற்பலகையிலே
நிகஷீக்ருதா-உரைக்கப்பட்ட
ஸூமஷீ -நல்ல மையானது
தே அலகாலி சிகீர்ஷயா -உன்னுடைய திருக்குழல் கற்றையை நிரூபிக்க வேணும் என்கிற இச்சையினாலே
ப்ருவவ்-புருவங்களாக
அபூத் -ஆயிற்று
து –இப்படி உத் ப்ரேஷிக்கலாமாயினும்
கிலாத்தா
அக்ருதத்வதஸ் –உன்னுடைய திரு மேனி க்ருத்ரிமம் அன்று ஆகையால் -ஸ்வயம் வ்யக்தமாகையாலே
ஏவம் ந ஸ்யாத் –இங்கனே உத் ப்ரேஷிக்கலாகாது
விதாத்ரா பதம் அத்யாஹரித்து-திருப்புருவங்களின் அமைப்பை உல்லேகித்து
பின்பு அவை ஒப்பில்லாதவை என்னும் இடத்தை ஸ்தாபிக்க பாசுரம் விட்டபடி –
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உட் கொண்ட நீல நன்னூல் தழை கொல்–என்று
முந்துற உத்ப்ரேஷித்து அப்போதே அது அநுப பன்னம் என்று திரு உள்ளம் பற்றி –
அன்று மாயன் குழல் -என்றார் இறே —

———————–

ஸ்ரவசஸ் ச த்ருதஸ் ச சப்த ரூப க்ரஹனே தே ந ஹி ஜீவவத் வ்யவஸ்தா
உபயோ அகிலேஷண ஷமத்வாத் வரதாத ஸ்ரவண ஆஸ்ரய த்ருஸவ் தே –34-

ஹே வரதாத
தே ஸ்ரவசஸ் ச த்ருதஸ் ச -உன்னுடைய திருச் செவிக்கும் திருக் கண்ணுக்கும்
சப்த ரூப க்ரஹனே -சப்தத்தையும் ரூபத்தையும் க்ரஹிக்கும் விஷயத்தில்
ஜீவவத்-ஜீவாத்மாவுக்குப் போலே
வ்யவஸ்தா ந ஹி-இன்ன இந்திரியம் இன்ன குணத்தைத் தான் கிரஹிக்க வற்று என்கிற வ்யவஸ்தை இல்லை யன்றோ
உபயோ -அந்த இரண்டு இந்திரியங்களும்
அகிலேஷண ஷமத்வாத் –எல்லாவற்றையும் ப்ரத்யஷிப்பதில் சமர்த்தங்களாய் இருப்பதால்
தே த்ருஸவ் ஸ்ரவண ஆஸ்ரய –உன்னுடைய திருக் கண்களானவை திருச் செவிகளை ஆஸ்ரயமாக யுடையன ஆயின

காமம் கர்ணாந்த விஸ்ராந்தே விசாலே தஸ்ய லோசனே–என்று சாமான்ய புருஷர்களுக்கு இருக்குமது
பரம புருஷனுக்கு சதா குணிதமாய் இறே இருப்பது –
திருக்கண்கள் திருச்செவி அளவும் நீண்டு விளங்கும்படியை இப்படி பல வகையாக வருணிப்பார்களே
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்திலே -க்ருபயா பரயா கரிஷ்யமானே-என்கிற ஸ்லோகத்திலே வர்ணித்தார்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி —என்னும்படி இறே
எம்பெருமான் படி இருப்பது –
பஸ்யத்ய சஷுஸ் ச ஸ்ருணோத்ய கர்ண –என்றும் இறே ஒதிக் கிடக்கிறது
சகல இந்திரியங்களும் எம்பெருமானுக்கு அகிலேஷன ஷமமாய் இருக்க இங்கு இரண்டையும் மட்டுமே அருளிச் செய்தது
ப்ரக்ருதத்தில் இவ்விரண்டுக்கும் விவஷதை உள்ளதாகையாலே உபயோ என்கிறது

————————-

கருணா ரஸ வாஹி வீக்ஷண ஊர்மே வரத பிரேம மய ப்ரவாஹ பாஜ
தத தீர வன ஆவளீ ப்ருவவ் த்ருக் சல ஸிந்தோஸ் தவ நாசிகா இவ சேது –35-

ஹே வரத
கருணா ரஸ வாஹி வீக்ஷண ஊர்மே –க்ருபா ரசத்தைப் பெருக்கா நின்ற கடாக்ஷமாகிற அலைகளை யுடைத்தாயும்
பிரேம மய ப்ரவாஹ பாஜ -ப்ரணய ரூபமான ப்ரவாஹத்தை யுடைத்தானதாயும் இருக்கிற
தவ த்ருக் சல ஸிந்தோஸ் –உன் திருக்கண்கள் ஆகிற அசையும் கடலுக்கு
ப்ருவவ்–திருப் புருவங்களானவை
தத தீர வன ஆவளீ இவ –பரம்பியதாய்க் கரையில் உள்ளதான சோலை போலும்
நாசிகா சேதுர் இவ –திரு மூக்கானது அணை போலும் –

திரு மூக்கின் அழகு அனுபவம் இதில் -ஸிம்ஹ அவளாக நியாயத்தாலே திருப்புருவ அழகையும் அனுபவிக்கிறார்
ஆஸ்ரித வாத்சல்ய அதிசயத்தாலே எப்போதும் அலை பாயா நின்று இருப்பதால் கடல் என்றும்
திருப்புருவ வட்டங்கள் கடல் கரையில் இருக்கக் கடவ சோலைச் செறிவோ என்னும்படியும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கு –
கடல் இடையே கட்டிய அணையோ-என்னும்படியாய் இரா நின்றது –

————————

விபவம் விவ்ருணோதி விஸ்த்ருணீதே ருசம் ஆவிஷ் குருதே க்ருபாம் அபாரம்
அபி வர்ஷதி ஹர்ஷம் ஆர்த்த பாவம் தநுதே தே வரதைஷ த்ருஷ்ட்டி பாத –36-

ஹே வரத
தே ஏஷ த்ருஷ்ட்டி பாத –உன்னுடைய இந்த கடாக்ஷமானது
விபவம் -உன்னுடைய உபய விபூதி ஸார்வ பவ்மத்வத்தை
விவ்ருணோதி –வ்யக்தம் ஆக்குகின்றது –
ருசம் -சோபையை
விஸ்த்ருணீதே -பரவச் செய்கின்றது
அபாரம் க்ருபாம் –எல்லையில்லாத கருணையை
ஆவிஷ் குருதே -வெளிப்படுத்துகின்றது
ஹர்ஷம் அபி வர்ஷதி –ஆனந்தத்தை பெருகச் செய்கிறது
ஆர்த்த பாவம் தநுதே –நெஞ்சு கசிந்து இருத்தலை உண்டாக்குகிறது –

எம்பெருமான் பக்கலிலே நாலடி வரப் புகுர நின்றவர்கள் –
தொண்டர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்று அன்றோ பிரார்த்தனை
தேவராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே -த்வத் ஈஷண ஸூதா ஸிந்து வீசிவி ஷேபஸீகரை –
காருண்ய மருதா நீதைச் சீத சைலாபி ஷிஞ்ச மாம் -என்ற பிரார்த்தனை தானும் மிகையாம் படி அன்றோ
ஆஸ்ரிதர் திறத்தில் ஸ்ரீ பேர் அருளானின் கடாக்ஷ தாரைகள்

பிருந்தாவனம் பகவதா கிருஷ்னேந அக்லிஷ்ட்ட கர்மணா சுபேக மனசா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப் சதா –என்று
மானஸ அனுதியானத்துக்குள்ள பெருமை இதுவானால் த்ருஷ்டிப்பாதத்தின் பெருமை சொலப்புகில் வாய் அமுதம் பரக்குமே
த்ருஷ்டிபாதம் பட்ட இடம் ஸார்வ பவ்மனாம் படியாய் இருக்குமே
விவ்ருணோதி —ருசம்
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
திருமேனியில் பிரவஹியா நின்ற திவ்ய லாவண்ய தரங்கனி தரங்கள் அடங்கலும் திருக்கண் நோக்கிலே
தொடை கொள்ளலாம் படி அன்றோ கடாக்ஷம்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்
நெடு நோக்கு கொண்டு முக்திர் மோஷா மஹா ஆனந்தத்தைக் கொடுக்கும் அன்றோ

—————-

அருண அதர பல்லவே லசந்தீ வரதாஸவ் த்விஜ சந்த்ர சந்திரிகா தே
அதி வித்ருமம் அஸ்த நிஸ்தல ஆலி ருசம் ஆவிஷ்க்ருதே ஹி புஷ்கராஷே–37-

புஷ்கராஷே ஹே வரத-தாமரைக்கு கண்ணனான வரம் தரும் பெருமானே
தே அருண அதர பல்லவே –உன்னுடைய சிவந்த தளிர் போன்ற திரு அதரத்திலே
லசந்தீ -விளங்குகின்ற
அசவ் த்விஜ சந்த்ர சந்திரிகா -இந்த சந்திரன் போன்ற திரு முத்துக்களின் ஓளி
அதி வித்ருமம் அஸ்த நிஸ்தல ஆலி ருசம்-பவளத்தின் மேலே வைக்கப்பட்ட முத்து வரிசையின் சோபையை
ஆவிஷ்க்ருதே ஹி -வெளிப்படுத்து கின்றது போலும்

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போலே நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே
நளிர் வெண் பல் முளை இலக –பெரியாழ்வார்
நா விளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவன்
உரியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் களவு காணும் போது தன் நிறத்தின் இருட்சியாலும்
அவ்விடத்தின் இருட்சியாலும் தெரியாமலே தடவா நிற்கச் செய்தே கையிலே வெண்ணெய் தாழிகள் அகப்பட்ட
சந்தோஷத்தினால் வாய் மலர அப்போது ப்ரசரிக்கும்
த்விஜ சந்த்ர சந்திரிகையே கை விளக்காக அமுது செய்யும்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டு அடியுண்டு அழுமாகையாலே திருப்பவளா நிலவு அங்கே ஸக்ருத் ஸேவ்யமாய் இருக்கும்
திருவத்தி மலையிலேயே பக்த திரளைக் கண்டு களிப்புக்கு கால உபாதி இல்லாமையால் நிரந்தரமாக இருக்கும் அழகிலே ஈடுபடுகிறார்
நித்திலம் -முத்துக்கு வாசகமாய் –
நின்றவூர் நித்திலத்தை –
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை –
நித்திலங்கள் பவ்வத் திரை யுலவு –
இங்கு எல்லாம் நிஸ்தலம் சொல்லே நித்திலம்

————-

ஸ்மித நிர்ஜ் ஜரிகா விநிஷ்பதந்தீ தவ வக்ஷஸ்தல பூதலே விசீர்னா
வரத ப்ரபி பர்த்தி ஹார லஷ்மீம் அபி முக்தா வலிகா நதீவ தஜ்ஜா –38-

ஹே வரத
விநிஷ்பதந்தீ-திரு முகமாகிற உன்னத ஸ்தானத்தில் நின்றும் விழா நின்ற
தவ ஸ்மித நிர்ஜ் ஜரிகா வக்ஷஸ்தல பூதலே –உன்னுடைய புன்முறுவலாகிற அருவியானது திரு மார்பு ஆகிற தரையிலே
விசீர்னா சதீ–இறைந்ததாய்க் கொண்டு
ஹார லஷ்மீம்-சஹஸ்ர அஷ்டிக ஹார சோபையை
ப்ரபி பர்த்தி -அடைந்திட நின்றது
அபி முக்தா வலிகா -எகாவலி ஹாரமும்
தஜ்ஜா நதீவ பாதி –அந்த அருவியில் நின்றும் உண்டான ஆறு போலே விளங்கா நின்றது

அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அத்யந்த மதுர மந்தகாச விலாசம் தன்னையும் மீண்டும் உப ஸ்லோகிக்கிறார்
மந்தகாச பிரபா பிரசரம் அநேக அஷ்டிக முக்தா ஹாரம் என்று உல்லே கிக்கிறார்

—————-

பரிமண்டித ராச மண்டலாபிஸ் வரத ஆக்ராதம் அபீஷ்ட கோபிகாபி
அநு வர்த்தி ததாதந ப்ரகர்ஷாத் இவ புல்லம் ஹி கபோலயோர் யுகம் தே –39-

ஹே வரத
பரிமண்டித ராச மண்டலாபிஸ் –அலங்கரிக்கப்பட்ட திருக்குரவை கோஷ்ட்டியை யுடைய
அபீஷ்ட கோபிகாபி–பிரியைகளான கோபி ஸ்த்ரீகளாலே
ஆக்ராதம் –மோரப்பட்ட
தே கபோலயோர் யுகம் –உன்னுடைய கபோல த்யவமும்
அநு வர்த்தி ததாதந ப்ரகர்ஷாத் இவ -இப்போதும் அநு வர்த்தித்து வாரா நின்ற
அப்போதைய ஹர்ஷ பிரகரக்ஷத்தாலே போலே
புல்லம் -விகசித்து இரா நின்றது

அர்ச்சையிலும் விபாவவதார வாசனை அனுவர்த்தித்து இருப்பதை
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அண்டர் கோன் அணி அரங்கன்
அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா
அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா –குரவைக்கூத்து -கோபிகள் இவன் கன்னத்தில் இட்ட முத்தங்களால்
ஹர்ஷ ப்ரகர்ஷ அனுவர்த்தியை இங்கு அனுபவிக்கிறார் –

————–

முகம் உன்னசம் ஆயதாக்ஷம் உத்யத் ஸ்மித தந்தம் ருசிர அதரம் நத ப்ரு
லஸத் அம்ச விலம்பி கர்ண பாசம் மயி தே நிச்சலம் அஸ்து ஹஸ்தி நாத –40-

ஹே ஹஸ்தி நாத —
உன்னசம் -உன்னதமான நாசிகையை யுடைத்தாயும்
ஆயதாக்ஷம் -நீண்ட திருக்கண்களை யுடைத்தாயும்
உத்யத் ஸ்மித தந்தம் -விம்மி வெளி எழுகின்ற புன்முறுவலை யுடைய திரு முத்துக்களை யுடைத்தாயும்
ருசிர அதரம் -அழகிய திரு அதரத்தை உடைத்தாயும்
நத ப்ரு -வளைந்த திருப் புருவங்களை உடைத்தாயும்
லஸத் அம்ச விலம்பி கர்ண பாசம் -விளங்குகின்ற தோள் வரை தொங்கும் சிறந்த செவிகளை யுடைத்தாயும் இருக்கும்
தே முகம் -உனது திரு முக மண்டலமானது
மயி நிச்சலம் அஸ்து -அடியேன் விஷயத்திலே நீடித்து இருக்கக் கடவது

திருமுக பூர்ண அனுபவம் இதில் –
ஆழ்வானுடைய சிந்தை யாகிற பெண் இனி மேல் தேவராஜனுடைய கண்டா ஸ்லேஷத்துக்குப் போகிறாள் ஆகையால்
நவோடையான பெண் பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்குப் போம் போது
ஜென்ம பூமியில் உள்ள உறவு முறையார் உள்ள இடம் எங்கும் புக்கு உப லாலித்து வருமா போலே
தனக்கு சிர பரிசிதங்களான நயன நாசிகாதி அவயவங்களை கண்டா ஸ்லேஷா பூர்வாங்கமாக
உப லாலனம் பண்ணி உகவா நின்றபடி
பிராக்ருத முக அவ லோகனத்தில் நசை ஒழிந்து–இன்று யாம் வந்தோம் இரங்கு-என்று
உன் கோயில் கடைத்தலை புகுந்த அடியேன் திறத்திலே உன் திரு ம் உக சோபா சேவை
நிரந்தரமாக தந்து அருள வேணும் என்கிறார் –
வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீர கிருஷ்ணாஜிநாம் பரம் -என்று மாரீசனுக்கு எங்கும் எப்போதும்
ஸ்ரீ ராம பிரான் தோற்றம் போலே
ஆழ்வானுக்கு தேவராஜனின் திரு முக மண்டல சேவை வேணும் என்று பிரார்த்தனை

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: