ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -21-30–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

இது முதல் –62-ஸ்லோகம் அளவாக -திவ்ய மங்கள விக்ரஹ வடிவு அழகு வர்ணனம்
அவற்றுள் முதல் நான்கால் சமுதாய ரூபேண அனுபவம் –
மேல் ஆதி ராஜ்யம் அதிகம் தொடங்கி ப்ரத்யங்க சோபை அனுபவம்
பிரதம சதகத்தில் ஸ்ரீ பேர் அருளாளனை ஒரு பொருளாக மதியாதே அவன் வர்த்திக்கும் ஸ்ரீ ஹஸ்தி கிரியையே
பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தவர் அத்தை விட்டு இங்கு இவன் அழகிலே ஊன்றுகைக்கு அடி –
ஸ்ரீ பேர் அருளாளன் இதில் ஏகதேசம் என்னலாம் படி இரா நின்றான் அன்றோ –
ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மலை யுச்சியை -என்னுமா போலே
ஸ்ரீ திருமலையில் ஏக தேசம் என்னலாம் படியாய் -கற்பக தரு பஹு சாகமாய் பணைத்து பூத்தால் போலே நிற்கிற
இவருடைய ஸுவ்ந்தர்யத்தை அனுபவிக்கிறார்

பாணி பாத வதந ஈஷண சப்தை அம்புஜாநி – அபதிசந்-வரத த்வம்
பஹுபிஸ் -அதி விசால தமாலாம்ஸ் து ஆஞ்ஞநம் கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் –21-

ஹே வரத
பாணி பாத வதந ஈஷண சப்தை –திருக் கை -திருவடி -திரு முகம் -திருக் கண் என்னும் திரு நாமங்களாலே
அம்புஜாநி -தாமரை மலர்களையும்
பஹுபிஸ் -புஜங்களினாலே
அதி விசால தமாலாம்ஸ் து –மிகப் பெரிய பச்சிலை மரங்களையும்
அபதிசந் -மறைத்துக் கொண்டு இரா நின்ற
த்வம் -நீ
ஆஞ்ஞநம் கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் -ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு அஞ்சன மயமான சிகரமாக ஆகின்றாய்

பர்வத ஏகதேசமாகச் சொன்னால் அதற்கு ஏற்ற லக்ஷணங்கள் அமைந்து இருக்க வேணுமே என்ன
பாணி பாத –இத்யாதி
தாமரைக்காடும் தாமரை வ்ருக்ஷங்களுமாய் இறே மலை முக்காடு இருப்பது
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே என்னும்படியான
ஸ்ரீ பேர் அருளாளன் திருக்கைகள் திருக்கண்கள் திருமுகம் திருவடிகள் என்னும் அவய வாபதேசத்தாலே –
தாமரை மலர்கள் நிறைந்து திகழ நிற்பதாலும் புஜ தண்டங்கள் என்னும் வ்யாஜத்தாலே தாமல வருஷங்கள் விளங்கா நிற்பதாலும்
இவன் தன்னையே -கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் -என்கிறது –
மலை முகடு தான் மேக சமூகங்களுக்கு இருப்பிடமாய்க் கொண்டும் ஸ்வ பாவமாகவும் கறுத்து இருக்கும் இறே
நீல மேக நிபனான இவனுக்கு அக்காராத்தாலும் குறை இல்லையே -இது தோன்ற அஞ்சனம் என்கிறது

அல்லி போல் உள்ளங்கையும் -இதழ் போலே விரல்களும் -தாது போலே ரேகைகளும் -வி லக்ஷணமான காந்தமும் –
மிருதுவான ஸ்பர்சமும் -புரா இதழ் போலே ஸ்யாமமான புறங்கையில் பசுமையும் –
ஏவமாதியான லக்ஷணங்களை உடைத்தாய் இருக்கையாலே பாணியானது அம்புஜம் என்னலாம் படி இருக்குமே
இப்படியே மேலும் கண்டு கொள்வது
கீழே பாணி என்றது பஞ்ச சாகாச் சய பாணி -என்ற கோசத்தின் படியே விரல்களோடே கூடின மணிக்கட்டு அளவான பாகம்
பாஹு சப்தம் தோளுக்கு கீழ்ப்பட்ட தண்டாகாரமான பாகம் -புஜத்தை சொன்னபடி
இவன் தோள் நிழலில் ஒதுங்கினவர்களுக்கு மதிளுக்குள்ளே இருப்பாரைப் போலே பயம் கெட்டு-ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே விஞ்சி இருப்பதால் அதி விசால தமாலங்களாக-பாஹுவை வர்ணிக்கலாம்
கற்பகக் காவென நற்பல தோளன்-பாஹு பி பஹு வசனம் சதுர்புஜத்வத்தைப் பற்ற –
அர்த்திதார்த்த பரிதார்த்த தீஷிதனுக்கு இரண்டு திருத்தோள்கள் போராதே-
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் -என்று
திவ்ய அவயவங்கள் சஹஸ்ர சாகமாக பணைக்கும் இறே

இந்த ஸ்லோகம் தொடங்கி இத் தசகம் ஸ்வாகதா வ்ருத்தத்தில் அமைத்த ஸ்லோகங்ககள்

——————–

த்வ உதார புஜம் உந் நஸம் ஆயத் கர்ண பாச பரிகர்ம சதம்சம்
ஆயதாக்ஷம் அபிஜாத கபோலம் பாரணீயதி வரப்ரத த்ருங்மே -22-

ஹே வரப்ரத
த்ருங்மே- மே த்ருக-அடியேனுடைய கண்ணானது
உதார புஜம் -ஒவ்தார்யமுள்ள பாஹுவை யுடையவனும் -அலம் புரிந்த நெடும் தடக்கை —
கொடுக்கையே விளை நீராக வளர்ந்த திருக்கை அர்த்திகள் இருக்கும் அளவும் செல்ல நீண்ட திருக்கை –
பாஹுச் சாயாம வஷ்டப்த–லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும் படி அன்றோ திருப்புஜங்களின் பெருமை
உந் நஸம் -உன்னதமான திரு மூக்கை யுடையவனும் -மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ –
நித்ய சந்தேக ஜனகமாய் -கோல நீள் கொடி மூக்கு
ஆயத் கர்ண பாச -நீண்ட சிறந்த செவிகளை அலங்காரமாகக் கொண்ட நல்ல
பரிகர்ம சதம்சம்–திருத் தோள்களை யுடையவனும்
ஆயதாக்ஷம் -செவி யளவும் நீண்ட திருக் கண்களை உடையவனுமான
அபிஜாத கபோலம்-ஆபி ஜாத்யம் பொருந்திய கண்டா ஸ்தலங்களை உடையவனுமான
த்வாம் -உன்னை
பாரணீயதி -பூர்ண அனுபவம் பண்ண விரும்புகிறது

உபோஷிதனாய் இருந்தவன் வயிறார உண்பதை -பாரணை -என்பர்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை என்று இருக்கும் ஸ்ரீ ஆழ்வான் –
கண்டு கொண்டேன் கண்ணிணைகள் ஆரக் களித்து–என்கிறபடியே எம்பெருமானின் திரு மேனியை சேவிக்கப் பெறும்
நாளை த்வாதசியாகவும் அது பெறாத நாளை அன்று அவை எனக்குப் பட்டினி நாளே -என்கிறபடி ஏகாதசியாகவும்
திரு உள்ளம் பற்றி இருக்கிறார் ஆகையால் நித்ய த்வாதசியாக வேணும் என்று பார்க்கிறார் –

—————————-

நீல மேக நிபம் அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் அநந்த சயம்
அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் நேத்ர சாத்குரு கரீச சதா மே –23-

ஹே கரீச
நீல மேக நிபம் -கரு முகில் போன்றவனாய்
அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் -மை வண்ண நறுங்குஞ்சி குழலை உடையவனாய்
அநந்த சயம் -ஸ்ரீ திரு அனந்தாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுபவனாய்
அப்ஜ பாணி பதம் -தாமரை போன்ற திருக்கைகளும் திருவடிகளையும் உடையவனாய்
அம்புஜ நேத்ரம் -தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனாய்
த்வாம் சதா மே –உன்னை எப்போதும் அடியேனுக்கு
நேத்ர சாத்குரு –சஷுர் விஷயமாகி அருள்
த்வாம் மே த்ருக் பாரணீயதி –என்று கீழே அருளிச் செய்ததையே விசததமமாக இங்கே அருளிச் செய்கிறார்
கார் காலத்து எழுகின்ற கார் முகில் போல் வண்ணனாய்
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழத் திகழுமவனாய்
ஐவாய் அரவணை மேல் ஆதிப்பெருமானாய்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைப் பாதம் கைகள் கண்கள் விளங்குமவனாய்ப் பேர் அருளாளப் பெருமாளாய் இருக்கிற நீ
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடாதே
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினாரே-என்னும்படி
கண்ணுள் நின்று அகலாதே அருள வேணும் என்கிறார்

நீல மேக நிபம் –முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே —
தாபத்ரயா தூரர்க்குத் தாப ஹரமாய்-
விரக தாப தூரர்க்கு அந்த தாபத்தையும் மாற்றக் கடவதாய் இருக்கும் வடிவு அன்றோ

அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் –நீல மேக நிபம் என்கிற வடிவும் ஸ்படிகம் என்னும் படியாய்த்து திருக்குழலின் இருட்சி –
ஒண் சுடர்க்கற்றை என்று சொல்லுகிற தேஜோ ரூபமான திருமேனியில் நின்றும் கிளம்பினது ஒரு மை போலே இருக்கை
திருக்குழலை சேவிக்கப் பெற்றவர்களுக்கு சர்வமும் பிரகாசிக்கும் படி சித்தாஞ்சனமாய் இருக்கை –
பிங்கல ஜடோ தேவ என்றும் -ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -என்றும் சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய காண ஒண்ணாமையாய் இருக்கும் மயிர் போல் அன்றியே
சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே -என்கிறபடியே
கண்டவர்கள் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து ஸ்யாமளமாய் இருக்கை –

அநந்த சயம் -அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் –
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –ஸ்ரீ பூதத்தாழ்வார்
பணி பதி சயநீ யாத் உத்தித த்வம் ப்ரபாதே –ஸ்ரீ வேதாந்தாசார்யர்

அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் -பாணி பாத நேத்ரம் -மூன்று திவ்ய அவயவங்களுக்கும்
தாமரை யையே ஒப்புக் சொல்கிறார் ஆகில் ஒரு ஸமஸ்த பதமாக பிரயோகிக்கலாமே –
பத பேதம் எதனால் பண்ண வேண்டும்
அப்ஜ பாணி பத லோசந ரம்யாம் என்று சொல்ல அடுக்குமே
அப்ஜ அம்புஜ -என்று பிரித்து பின்ன பதங்களால்
கண்ணும் வாயும் கைத்தளமும் அடியிணையும் கமல வண்ணம் -என்று சேர அனுபவித்தவர்
போக்ய அனுசந்தான காஷ்டையிலே நின்றவாறே
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –என்று வாய் வெருவிற்று
இவ்வாழ்வான் தாமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில்
அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்று வாய் வெருவினபடி காணலாமே

த்வம் சதா மே நேத்ர சாத்குரு -அவ்வண்ணத்தவர் நிலை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
என்னும்படி அஞ்சி அகல வேண்டாதபடி
கண்டு கொண்டேன் கண்ணினை ஆரக் களிக்கும் படி சதா தர்சனம் தந்து அருள வேணும் என்கிறார்

——————–

த்வக் ச த்ருக ச நிபபாசதி ஜிஹ்வா விஹ்வலா ஸ்ரவணவத் பர வ்ருத்தவ்
நாசிகா த்வயி கரீச ததேதி ப்ராப்நுயாம் கதம் இமாம் ஸ்வித் அவஸ்தாம் -24-

ஹே கரீச
த்வக் ச -த்வக் இந்த்ரியமும்
த்ருக ச -சஷுர் இந்த்ரியமும்
நிபபாசதி -மிகவும் பானம் பண்ண விரும்புகின்றது
ஜிஹ்வா ஸ்ரவணவத் –ரஸ இந்த்ரியமானது ஸ்ரோத்ர இந்த்ரியத்தோடே ஒப்ப
பர வ்ருத்தவ் -இந்திரியங்களின் வியாபாரத்தில்
விஹ்வலா-சாபல்யம் உடைத்தாய்
பவதி -ஆகிறது
நாசிகா -க்ராண இந்த்ரியமும்
ததா -இப்படியே இந்த்ரியாந்தர விருத்தியை விரும்பி நிற்கிறது
இதி இமாம் அவஸ்தாம் -என்று சொல்லக் கூடிய -முக்தி தசையில் விளையக் கூடிய -இந்த அவஸ்தையை
அஹம் -அடியேன் -இந்த விபூதியிலே
த்வயி -உன் விஷயத்தில்
கதம் ஸ்வித் ப்ராப்நுயாம் –எங்கனேயோ அடைந்திடுவேன்

நம்மாழ்வார் செய்ய தாமரைக் கண்ணனில் –
தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்ற கண் விடாய்த்த மாத்திரம் அன்றிக்கே
தாமும் தம்முடைய கரண க்ரமமுமாக -முடியானாலே -நோவு பட்டுக் கூப்பிட்டால் போலே
சேதன சமாதியாலே இந்திரியங்கள் விடாய்க்கும் படியான அவஸ்தை -போஜனத்துக்கு மிக்க பசி போலே
பகவத் அனுபவத்துக்கு பாங்கான ஸாமக்ரியாய் இருக்கும்
அதே போலே தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை-பக்திப் பெரும் காதலை – உந் மஸ்தக தசையை -அருளிச் செய்கிறார் இதில் –
நீல மேக நிபம் –த்வாம் நேத்ர சாத்குரு சதா மே-என்று கீழே பிரார்த்தித்த சதா தர்சனம்
இந்த அவஸ்தை பிறவாத அன்று கடிக்க மாட்டாமையாலும் -கடித்தாலும் ரசிக்க மாட்டாதாகையாலும்
அந்த அவஸ்தையையும் கைங்கர்யத்தையோ பாதி பிரார்த்திக்கிறார்
ப்ராப்னுயாம் -பிரதான கிரியை / நிபி பாஸதி-விஹ்வலா -அவாந்தர கிரியை

——————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

உத்தரத்யுபரி பக்த ஜநாந் இதி ஊர்த்தவ ஆஸ்ரயண ஸூஸித சக்திம்
ஊர்த்வ புண்ட்ர திலகம் பஹு மாநாத் கிம் பிபர்ஷி வரத ஸ்வ லலாடே -26-

ஹே வரத
அயம் ஊர்த்வ புண்ட்ர திலக -இந்த ஊர்த்வ புண்ட்ர திலக மானது
உத்தரத்யுபரி பக்த ஜநாந் -பக்த ஜநாந்-யுபரி உத்தர-பகவத் பக்தர்களை ஊர்த்வ கதியை அடைவிக்கின்றது
இதி -என்று
ஊர்த்தவ ஆஸ்ரயண ஸூஸித சக்திம் –ஊர்த்வ ஆகார விசிஷ்டமாய் இருக்கையினால் ஸூஸிக்கப்பட்ட சக்தியை யுடைய
ஊர்த்வ புண்ட்ர திலகம் ஸ்வ லலாடே -ஊர்த்வ புண்ட்ர திலகத்தை தண் திரு நெற்றியிலே
பஹு மாநாத் கிம் பிபர்ஷி -நம் அடியார் உகந்தது என்கிற ப்ரீதி விசேஷத்தாலேயோ தரியா நின்றாய் –

சேதனர்க்குத் தானே கர்ம அங்கமாக விதி பிராப்தம் -அலங்காரமாக சாத்திக் கொண்டுள்ளான் என்கிறதை விட –
பஹு மாநாத் கிம்-அடியார் உகந்தது ஏது ஆகிலும் நமக்கு அதுவே உபாதேயம்-என்று இருப்பானே

—————–

கர்ணிகா தவ கரீச கிமேஷா கர்ண பூஷணம் உத அம்ச விபூஷா
அம்ச லம்பி அலக பூஷணம் ஆஹோ மாந ஸஸ்ய மம வா பரி கர்ம –27-

ஹே கரீச
தவ ஏஷா கர்ணிகா -உன்னுடைய இந்த கர்ண பூஷணமானது
கர்ண பூஷணம் கிம் -திருச் செவிகளுக்கு அலங்காரமோ
உத -அல்லது
அம்ச விபூஷா -திருத் தோள்களுக்கு அலங்காரமோ
ஆஹோ -அங்கன் அன்றிக்கே
அம்ச லம்பி அலக பூஷணம் -திருத் தோள்களில் அலையா நின்ற திருக்குழல்களுக்கு அலங்காரமோ
வா மம -அங்கனும் அன்றிக்கே அடியேனுடைய
மாந ஸஸ்ய பரி கர்ம –இதயத்துக்கு அலங்காரமோ

இப்படி சதுஷ்ட்ய அவகாஹியான சங்கை
முராரி -உலகத்தாருக்கு குண்டலங்களால் காதுக்கு சோபையும் இல்லை –
குண்டல தாரணத்துக்கு தான் குத்தப்படும் துக்கமும் சுமக்கும் துக்கமும் தானே -கபாலத்துக்கே அழகு என்பான்
பை விடப் பாம்பு அணையான் திருக்குண்டல காதுகளே-என்னும் படி சேர்த்தி அழகு அந்யாத்ருசமாய் இருப்பதால்
மின்னு மணி மகர குண்டலங்கள் திருகி செவிகளுக்குத் தான் அலங்காரமோ என்கிறார்
உதக்ரபீநாம்ச விலம்பி குண்டல -என்று திருக்குண்டல திருத்தோள்கள் சேர்த்தி அழகை ஸ்ரீ ஆளவந்தார் அனுபவித்தார்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் -என்றும்
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட -என்றும்
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ -என்றும்
சொல்லுகிறபடியே திருத் தோள்களின் மேலே உலாவி அலையும் திருக் குழல்கள்
குழல் மின் தாழ மகரம் சேர் குழை இருப்பது விளங்கி ஆட –
திருக்குழல்கள் -திரு மகரக் குழை -இரண்டின் பரபாக சேர்த்தி ரசத்தை அனுபவிக்கிறார்
இம்மூன்று சேர்த்தி அழகையும் –
திருச் செவி -திருக் குண்டலங்கள் / திருத் தோள்கள் திருக் குண்டலங்கள் / திருக் குழல் திருக் குண்டலங்கள்
அனுபவிக்க விரும்பி –உள் குழைந்து உருகும் – அடியேனுடைய மனஸுக்குத்தான் அலங்காராமோ
உன்னுடைய நிருபாதிக போக்யமான திவ்ய அவயவங்களை அலங்காரம் வேண்டாமே –
அடியேனுடைய மனஸுக்கே தான் என்று சித்தாந்தம் –
குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
ஆர்க்கும் அறிவு அரிதே -மயல் கொண்டு இருந்து கிடைக்கும் என் நெஞ்சு ஒன்றுக்குமே
விளக்கம் தருவது என்கிறார் என்றபடி

——————–

திருக்குண்டலங்களின் அழகு திருத்தோள்களின் அழகிலே கொண்டு மூட்ட அத்தை அனுபவித்து இனிதராகிறார் –

பாரிஜாத விடபாந் அபிதோ யா புஷ்ப சம்பத் உதியாத் கரி நாத
தாம் விடம் பயதி தானாக பாஹுஷு ஆததா து கடக அங்கதி லஷ்மீஸ் –28-

ஹே கரி நாத
தாவக பாஹுஷு–உனது புஜங்களிலே
ஆததா-பரம்பி யுள்ள
கடக அங்கதி லஷ்மீஸ்து –கை வளை என்ன தோள் வளை என்ன இவற்றின் சோபையோ என்றால்
பாரிஜாத விடபாந் அபிதோ –கல்ப வ்ருக்ஷத்தின் கிளைகளைச் சுற்றி
யா புஷ்ப சம்பத் உதியாத் –யாதொரு புஷ்ப சோபை உண்டாகுமோ
தாம் விடம் பயதி -அந்த சோபையை அநுகரிக்கின்றது

கீழே ஞானிநாம் அக்ரேஸரான ஸ்ரீ ஆழ்வானுடைய சதுஷ்ட்ய சங்கை களைப் பரிஹரிக்க முடியாமல் லஜ்ஜையால் நிருத்தரனாய்
கவிழ்த்தலை இட்டு நிற்கவும் மாட்டாதே-தோளைத் திருப்புவது -மார்பை நெறிப்பது -பீதாக வாடையை உதறுவது –
திருக்குழலைப் பேணுவதாக -ஸ்ரீ மத் கம்பீர சேஷ்டிதங்களைப் பண்ண
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து
தன்னையும் மறந்ததே -புத்தி ப்ரசம்சத்தை விளைக்க வல்ல திவ்ய அவயவங்கள் ஆகையால் –
கீழ்ப் பண்ணின ப்ரச்னங்களுக்கு ப்ரத்யுத்தா பிரதீக்ஷையை மறந்து –
இது ஒரு தோள் அழகு இருந்தபடி என் -இது ஒரு தோள் வளை இருந்தபடி என் -என்று
அவற்றிலே ஊன்றி வர்ணிக்கத் தொடங்குகிறார்

கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம் –அம்புஜ நேத்ரம் –என்றவர் சிறிது ஆராய்ந்தவாறே –
என் சொன்னோம் ஆனோம் -என்று அநு சயித்து
அதீர்க்கம் அப்ரமேதுகம் க்ஷண உஜ்ஜ்வலம் ந கோசரம் அந்தக்கரணஸ்ய பஸ்யதாம் அநுப்ஜமப்ஜம் நு கதம்
நிதர்சனம் வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-என்பர்
ஆகையால் லௌகிக விஷய த்ருஷ்டாந்தங்களை விட்டு அபூத உவமை கொண்டு வர்ணித்து
நிஸ்சமாப்யதிகம் என்னும் அதிசயத்தை விலக்கி அருளுகிறார் –

பாரிஜாத தரு ஸ்தானீயன் ஸ்ரீ பேர் அருளாளன் -அர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதன் அன்றோ –
காரானை இடர் கடிந்த கற்பகம் அன்றோ -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் தானே
அவன் கல்ப சாகியானால் அவனுடைய பாஹுக்கள் கல்ப சாகையாகக் குறை இல்லையே-
கற்பகக் காவன நற்பல தோளன் –
திரு முழங்கைக்குக் கீழே கடக லஷ்மியும்-அதுக்கு மேலே அங்கத லஷ்மியாக விரவி
பாஹு தண்டங்களை ஜ்யோதிச் சக்கரம் ஆவரித்துக் கொண்டு இருக்கும் நிலைக்கு
பிரசித்த உவமானம் இல்லாமையால் அபூத உவமை சொல்ல வேண்டும் இறே
விடபஸ்தானம் –பாஹுக்கள்
விடபத்தை முட்டாக்கு இட்டுக் கிடக்கிற புஷ்பங்களின் ஸ்தானத்தில் -கடக்க அங்கதங்கள்
திருவாய் 3-10-1-ஜன்மம் பல பல செய்து -ஈட்டில் –
ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினால் போலே யாயிற்று வடிவும் திவ்ய ஆயுதங்களும்
சேர்ந்த சேர்த்தி இருப்பது -என்கிற ஸ்ரீ ஸூக்தி இந்த ஸ்லோகத்தை அடி ஒற்றியே –

——————

மத்யமாந சல பேநில சிந்து ப்ரோத்திதி க்ஷண தஸாம் கமிதவ் தே
வக்ஷஸி ஸ்புரித மௌத்திக ஹாரே கௌஸ்துபச் ச கமலா ச கரீச –29-

ஹே கரீச
ஸ்புரித மௌத்திக ஹாரே-தள தள என்ற முக்தா ஹாரத்தை யுடைத்தான
மத்யமாந சல பேநில சிந்து ப்ரோத்திதி –கடையப்படா நின்றதும் -அத ஏவ -அசையா நின்ற –
நுரைகளை யுடைத்தாயும் இரா நின்ற கடலில் நின்றும் –
க்ஷண தஸாம் -உதித்த சமயத்தின் அவஸ்தையை
தே வக்ஷஸி-உனது திரு மார்பில்
கௌஸ்துபச் ச கமலா ச கமிதவ் –ஸ்ரீ கௌஸ்துப மணியும் ஸ்ரீ பிராட்டியும் அடைக்கப் பட்டுள்ளன

அல்லாத அவயவங்களும் திரு மார்பும் ஒரு தட்டாய் இருக்குமே –
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி–
பரதத்வத்துக்கு ப்ரகாசகமான திவ்ய அவயம் அன்றோ திரு மார்பு
சமுத்திர ஸ்தானத்தில் -திரு மார்பும்
நுரைகள் ஸ்தானத்தில் -முத்தா ஹாரங்களும்
அந்த நுரைகளின் இடையே ஸ்ரீ கௌஸ்துபமும் ஸ்ரீ கமலையும் உதிக்கப் பெற்றது போலே
திருமார்பில் திகழ்கின்றன என்றபடி –

——————-

அஞ்சன ஷிதி ப்ருதோ யதி நாம உபத்யகா வரத ஹேம மயீ ஸ்யாத்
தாத்ருசீ தவ விபாதி து லஷ்மீ ஆம்பரீ பத விடம்பித வித்யுத் –30-

ஹே வரத
விடம்பித வித்யுத் –மின்னல் போன்றதான
தவ ஆம்பரீ லஷ்மீஸ் து –உனது திருப்பீதாம்பர சோபையோ என்னில்
அஞ்சன ஷிதி ப்ருதோ -அஞ்சனமயமான தொரு மலையினுடைய
உபத்யகா–தாழ் வரையானது
ஹேம மயீ-ஸ்வர்ண மயமாக
ஸ்யாத் யதி நாம -இருக்குமே யாகில்
தாத்ருசீ –அது போன்றதாக
தவ விபாதி –விளங்குகின்றது
பத–ஆச்சர்யம்

திருவரைக்குப் பரபாக ரசாவகமான திருப்பீதாம்பரம் படியை அபூத உவமை இதில்
மை வண்ண மலைக்கு -அஞ்சன பர்வத ஸ்தானத்தில் -ஸ்ரீ பேர் அருளாளன்
ஹிரண்மய தாழ் வரை -ஸ்தாநு –ஸ்தானத்தில் –திருப்பீதாம்பரம்
விடம்பித வித்யுத் -விசேஷணம் த்ருஷ்டாந்த கோடியிலே ஹேமமயீ-என்றதுக்கு அநு குணம்
அஞ்சன ஷிதி ப்ருத-என்றதுக்கு அநு குணமாக தார்ஷ்டாந்தகத்தில் வசன வ்யக்தி ஒன்றும் இல்லை என்றாலும்
ஸ்ரீ பேர் அருளாளனுடைய திரு உருவ வண்ணம் கீழே சொல்லிற்றே-ஸூ பிரசித்தம் –
த்ருஷ்டாந்த பலத்தாலும் ஸூ வ்யக்தம் -ஆகவே இங்கு சொல்லிற்று இல்லை –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: