ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -11-20–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

குணா யத்தம் லோகே குணி ஷு ஹி மதம் மங்கல பதம்
விபர்யஸ்தம் ஹஸ்தி ஷிதிதர பதே தத் த்வயி புந
குணாஸ் ஸத்யஞான ப்ரப்ருதய உத த்வத் கத தயா
சுபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம சுருதி வசாத் –11-

லோகே குணி ஷு-உலகத்தில் குணசாலிகன் இடத்தில்
மங்கல பதம் -இவர்கள் நல்லவர்கள் என்ற சொல்லானது
குணா யத்தம் ஹி மதம் -குணங்களை பற்றி அன்றோ எண்ணப் பட்டு இருக்கிறது
ஹஸ்தி ஷிதிதர பதே–ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
தத் த்வயி புந -அந்த விஷயமானது உன்னிடத்திலோ என்றால்
விபர்யஸ்தம் -மாறுபாடாய் இருக்கிறதே -அதாவது குணத்தைப் பற்றி வந்தது அல்லவே
ஹி-ஏன் என்றால்
ஸத்யஞான ப்ரப்ருதய-சத்யா ஞானம் முதலிய
குணாஸ் -குணங்களானவை
த்வத் கத தயா -உன்னை அடைந்து இருப்பதனால்
உத
சுபீ பூயம் யாதா இதி -மங்களத் தன்மையை அடைந்தன வென்று
சுருதி வசாத் நிரணைஷ்ம–வேதங்களைக் கொண்டு நிர்ணயித்தோம்

ஸ்வத ஏவ மங்கள மயன் அன்றோ -அவன் சம்பந்தத்தால் மங்களத் தன்மை அடையும் –
அவன் சம்பந்தம் இல்லாதவை தானே ஹேயமாகும்
ஸர்வஸ்ய சைவ குணதோ ஹி விலக்ஷணத்வம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
குணஜம் குணிநோ ஹி மங்கலத்வம் பிரமிதம்-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்

இந்த பாசுரம் தொடங்கி –அநந்ய அதீனத்தவம் –என்னும் அளவுள்ள சதகம் சிகரிணீ வ்ருத்தம் —

—————–

நிராபாதம் நித்யம் நிரவதி நிரம்ஹோ நிருபமம்
சதா சாந்தம் சுத்தம் பிரதிபடம் அவத்யஸ்ய சததம்
பரம் ப்ரஹ்மாம் நாதம் சுருதி ஸ்ரசி யத் தத் வரதே தே
பரம் ரூபம் சாஷாத் ததிதம் அபதம் வாங்மனசயோ –12-

வேதத்தில் கூறப்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை பூர்வ அர்த்தத்தால் அருளிச் செய்து
உத்தர அர்த்தத்தால் அந்த ஸ்வரூபம் சாஷாத் நீயே தான் -இப்படிப்பட்ட உன்னை
வாய் கொண்டு ஸ்துபிப்பதும் நெஞ்சு கொண்டு சிந்திப்பதும் முடியாத கார்யம் என்கிறார்

நிராபாதம்-உபாதானம் சஹகாரி நிமித்தம் -மூன்றுமே -இவனே
ஜகத்தாய் பரிணமிகையாலே உபாதானமாய் இருக்கும் -ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லையே –
விஸிஷ்ட விசேஷண சத்வாரமாகவே பரிணாமம் –
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வ பாவம் ஒரு சர்வ சக்திக்குக் கூடாது ஒழியாது இறே-
அந்த நிர்வாரத்தையே இங்கு நிராபாதம் -என்கிறது

நித்யம் –
கால அபரிச்சேதன்
நிரவதி –
எல்லை இல்லாமை -சேதன அசேதன வியாபகம் -விபு -தேச அபரிச்சேதன் –
நிருபமம்–
இன்ன வஸ்து போலே என்று இல்லாதவன் -வஸ்து பரிச்சேதம்
சர்வ அந்தர்யாமி யாகையாலே சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகார்யந்தரம் இல்லாதபடி இருப்பான்
ஆக த்ரிவித பரிச்சேதத்தையும் சொல்லிற்று ஆயிற்று

நிரம்ஹோ -சுத்தம்- அவத்யஸ்ய பிரதிபடம்–
இரண்டு விசேஷணங்களாலும் உபய லிங்கம் – அகில ஹேயபிரத்ய நீகமும் கல்யாணைகதாநத்வமும் சொல்லிற்று ஆயிற்று
நிரம்ஹோ — அவத்யஸ்ய பிரதிபடம்-இரண்டும் சொல்வதால்
புநர் யுக்தி தோஷம் இல்லை -ஓன்று தான் ஹேய குண ஸூந்யன் என்றும்
தன்னைச் சேர்ந்தவர்கட்க்கும் ஹேய சம்பந்தம் உண்டாக்காத படி நோக்கும் திறமையைச் சொல்லிற்று

சதா சாந்தம் –
சீறு பாறு இல்லாமல் சதா அனுகூல்யமாய் -அத ஏவ நித்ய போக்யமாய் -இருக்கும்
ஆக பூர்வ அர்த்தத்தால் ப்ரஹ்ம ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்லிற்று

இனி உத்தர அர்த்தத்தில் இப்படிப்பட்ட ஸ்வரூபம் ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஸ்வரூபத்தில் காட்டில் அபிந்நம் என்றும்
வாசா வருணிப்பதற்கும் மனசா சிந்திப்பதற்கும் முடியாதது என்றும் தலைக் கட்டுகிறார்

—————–

பிரசாந்த அநந்த ஆத்ம அநுபவஜ மஹா ஆனந்த மஹிம
ப்ரசக்த ஸ்தைமித்ய அநு க்ருத விதரங்க அர்ணவ தசம்
பரம் யத் தே ரூபம் ஸ்வ சத்ருச தரித்ரம் வரத தத்
த்ரயீ பிஸ் ப்ரஷந்தீ பர நிரஸநே ஸ்ராம்யதி பரம் –13-

பிரசாந்த -மிக அனுகூலமாயும்
அநந்த -அபரிச்சின்னமாயும் இருக்கிற
ஆத்ம அநுபவஜ -ஸ்வ ஸ்வரூபத்தினுடைய அனுபவத்தால் உண்டாகிற
மஹா ஆனந்த மஹிம ப்ரசக்த -அதிக ஆனந்த அதிசயத்தாலே நேர்ந்த
ஸ்தைமித்ய -நிச்சலமாய் இருக்கும் தன்மையால்
அநு க்ருத -அநு கரிக்கப் பட்டு இருக்கிற
விதரங்க அர்ணவ தசம் -ஓய்ந்து இருக்கிற அலைகளை உடைய சமுத்ரத்தினுடைய அவஸ்தையை யுடைத்தானதாயும்
ஸ்வ சத்ருச தரித்ரம்-தன்னோடு ஒத்த வேறு ஒன்றை யுடைத்தது ஆகாததாயும்
பரம் யத் தே ரூபம் -சர்வோத்தமாயும் இருக்கிற யாதொரு ஸ்வரூபமானது
தே -அஸ்தி -உனக்கு இரா நின்றதோ
வரத தத் பிஸ் ப்ரஷந்தீ-அந்த ஸ்வரூபத்தை ஸ்பர்சிக்க வேணும் என்று விரும்பா நின்ற
த்ரயீ -வேதமானது
பர நிரஸநே பரம் ஸ்ராம்யதி -ஹேயமான அவயவம் விகாரம் முதலியவற்றை மறுப்பதில் மாத்திரம் சிரமப்படுகிறது

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அநு பவ ப்ரபவத் ஸூக க்ருத நிஸ் தரங்க ஜல தீயித நித்ய தசம் –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்த்வ
ஸ்லோகத்தின் பூர்வ அர்த்தமே இங்கும் பூர்வ அர்த்தம் –

எம்பெருமானுக்கு நித்யோதித தசை தனது ஸ்வ ஸ்வரூப அனுபவம் –
சாந்தோதித தசை தனது விபூதியை அனுபவிப்பது
இங்கு நித்யோதித தசா விசிஷ்டமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தைப் பேசுகிறார்
தன்னைத்தான் அனுபவிக்கும் ஆனந்தமானது தன்னை ஸ்தப்தானாகச் செய்து -அலை ஓய்ந்த கடல் தானோ இது –
என்னும்படி ஆக்கி விட்டது என்றபடி
இப்படிப்பட்ட சிறந்த ப்ரஹ்ம ஸ்வரூபம் ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஸ்வரூபத்தில் வேறுபட்டது இல்லை –
என்பதை ததேவேதம் ரூபம் -என்கிறது
பர ஸ்வரூபத்தை வேதம் -நிஷ்கலம் நிஷ்க்ரியம்-யத் தத் அத்ரேஸ்யம் -அக்ராஹ்யம் -என்று
பர நிரசனத்தையே விசேஷமாகப் போந்தது ஒழிய
உள்ள கல்யாண குணங்களை ஆழ்ந்து அனுபவிக்க வில்லை என்கிறது நான்காம் பாதம் –
இத்தால் பகவத் ஸ்வரூபத்தை வாசா மகோசரமான வை லக்ஷண்யம் வ்யஞ்சிதம் –

——————

ந வக்தும் ந ஸ்ரோதும் ந மநிதும் அத உபாஸிஸிஷிதும்
ந ச த்ரஷ்டும் ஸ்ப்ரஷ்டும் ததநு ந ச போக்தும் ஹி ஸூசகம்
யத் பரம் வஸ்து யுக்தம் ந து வரத சாஷாத் ததஸி போ
கதம் விஸ்வஸ்மை த்வம் கரிபுரி புரஸ் திஷ்டச இஹ–14-

ஹே வரத
யத் பரம் வஸ்து–யாதொரு பரதத்வமானது
வக்தும் ந ஸூசகம் -இப்படிப்பட்டவன் என்று உபதேசிக்கக் கூடாததாயும்
ஸ்ரோதும் ந ஸூசகம்-ஒருவன் உபதேசிக்க செவி சாய்த்து கேட்க்க கூடாததாயும்
மநிதும் ந ஸூசகம்-கேட்ட அர்த்தங்கள் நெஞ்சில் பதியும் படி சிந்தனை -மனனம் பண்ணக் கூடாததாயும்
அத -அதற்கு மேல்
உபாஸிஸிஷிதும் ந ஸூசகம்—தைல தாரை போலே அவிச்சின்ன ஸ்ம்ருதி -சந்ததியாகிய-உபாஸனையை விரும்பக் கூடாததாயும்
த்ரஷ்டும் ந ஸூசகம்—தர்சனம் -ப்ரத்யக்ஷ சாமானகாரமான விலக்ஷண சாஷாத் காரம் கூடாததாகவும்
ஸ்ப்ரஷ்டும் ந ஸூசகம்-தொடக் கூடாததாகவும் -சாஷாத்காரத்துக்கு பிறகு
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது –தழுவுவன் –என்றால் போலே ஆசை கிளர்ந்து தொடுகை –
ததநு -அதற்கு மேல்
போக்தும்ந ஸூசகம்-அனுபவிப்பதற்குக் கூடாததாயும் -கீழே சொல்லிச் சொல்லாத இந்திரியங்களுக்கு
விஷயமாகக் கூடிய அனுபவத்தை சொன்னவாறு –

ஆக ஒருவித அனுபவத்துக்கும் கூடாத ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் என்றவாறு

யுக்தம்-ஸ்ருதிகளில் சொல்லப் பட்டுள்ளதோ
தத் -அந்தப் பரதத்வமானது
சாஷாத் த்வம் அஸி நது -சாஷாத் நீயே யன்றோ ஆகிறாய்
த்வம் -இப்படி ஸர்வதா துர்லபனான நீ
இஹ-இவ்வுலகத்தில்
கரிபுரி புரஸ்-ஸ்ரீ ஹஸ்திகிரியின் முன்னே
கதம் -எப்படி
விஸ்வஸ்மை திஷ்டசே -சர்வ ஜனங்களுக்கும் தன் கருத்தை வெளியிட்டுக் கொண்டு நிற்கிறாய்

வேதாந்தம் -ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்றும் சொல்லி வைத்து
ந சஷுஷா க்ருஹ்யதே ந அபி வாசா -என்றும் சொன்னாலும்
அங்கனம் ஓதப்பட்ட பரம் பொருள் சாஷாத் சாஷாத் பேர் அருளாளன் ஆகிய நீயே காண்
நீ இந்த உலகில் சர்வ ஸூலபனாய் திரு அவதரித்து ஸ்ரீ ஹஸ்தி கிரியின் முன்னே
தன்னை வெளியிட்டுக் கொண்டு நிற்பது என்னோ
நின்று அருளுவதாலேயே தன் கருத்தை உலகோர்க்கு உணர்த்தி அருளுகிறாய் -அதாவது
நான் உங்களை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போக அன்றோ வந்து இருக்கிறேன் -என்பதே உனது திரு உள்ளம்
இது என்ன ஸுலப்ய ஸுசீல்ய பரம காஷ்டை -என்கிறார் –

————–

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

ஹே வரத
ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
இதி -ஆகிய இவையாகிற
பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்
த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

—————–

குணைஷ் ஷட்பிஸ் த்வதை பிரதம தர மூர்த்திஸ் தவ பபவ்
ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரி பிரபு
வ்யவஸ்தா யா சைஷா நநு வரத சா ஆவிஷ்க்ருதி வசாத்
பவாந் சர்வத்ரைவ த்வ கணித மஹா மங்கள குண –16-

த்ரியுக வரத-மூ விரண்டு குணங்களை யுடைய வரதனே
தவ பிரதமதர மூர்த்திஸ்-உன்னுடைய எல்லா மூர்த்திகளிலும் முதன்மையரான பர வாஸூதேவ மூர்த்தி யானது
ஏதை -இந்த கீழ்ச் சொன்ன
ஷட்பிஸ் குணை பபவ்–ஆறு குணங்களால் விளங்கிற்று
ததஸ் திஸ்ரஸ் த்ரய –அதற்கு மேல் மூன்று மூர்த்திகள்
தேஷாம் த்ரிபி யுகளைர் அபி –அந்த குணங்களுடைய மூ விரண்டு களாலே பிரகாசித்தன
ஏஷா வ்யவஸ்தா யா-இப்படிப்பட்ட வ்யவஸ்த்தை யாது ஓன்று உண்டு
சா -அந்த வ்யவஸ்தை யானது
ஆவிஷ்க்ருதி வசாத் -குணங்களை வெளியிடுதல் பற்றியாம்
பவாம்ஸ்து-நீயோ என்னில்
சர்வத்ரைவ -எல்லா மூர்த்திகளிலும்
அகணித மஹா மங்கள குண –எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களை யுடையையாய் இரா நின்றாய்

ஞானம் பலம் விபுலம் -ஸ்லோகம் -அதுமானுஷ ஸ்த்வ ஸ்லோகம் -சுருங்க அருளிச் செய்ததை இங்கு விரித்து அருளிச் செய்கிறார்

சங்கர்ஷண மூர்த்தியில் ஞான பலமும் -ப்ரத்யும்ன மூர்த்தியை ஐஸ்வர்ய வீரியமும் -அநிருத்த மூர்த்தியில் சக்தி தேஜஸ் -புஷ்கலமாய் இருக்கும்

ததஸ் திஸ்ர–வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்திரங்கள் சொல்லும் -நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க
வ்யூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில் அனுசந்தேய குண பேதம் இல்லாமையால் த்ரி வ்யூஹம் என்கிறது –
இப்பஷத்தை-குணைஷ் ஷட்பிஸ் த்வதை-ஸ்லோகத்தில் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரா தத்வ த்ரய சிந்தனை அதிகாரம் ஸ்ரீ ஸூக்தி

—————

இயம் வையூஹீ வை ஸ்திதிரத கில இச்சா விஹ்ருதயே
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் அவதரன்
சஜாதியஸ் தேஷாமிதி து விபாக்க்யாம் அபி பஜந்
கரீச த்வம் பூர்ணோ வர குண கணைஸ் தாந் ஸ்தகயஸி –17-

ஹே கரீச
இயம் ஸ்திதி–கீழ்ச் சொன்ன வியவஸ்தையானது
வையூஹீ-வை -வ்யூஹத்தைப் பற்றியதாம்
அத கில-அதுக்கும் மேலே
இச்சா விஹ்ருதயே -இஷ்டப்படி விளையாடுவதற்கு
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் -உன்னுடைய விபூதியாகிய
தேவ மனுஷ்ய திர்யக்குகளின் நடுவில் அவதரன்-அவதரித்தவனாய்
விபாக்க்யாம் பஜந் -விபவ அவதாரம் என்னும் என்னும் திரு நாமத்தை உடையவனாய்
வர குண கணைஸ்-சிறந்த குணங்களின் சமூகங்களால்
பூர்ணா அபி -நிறைந்தவனாய் இருந்தாலும்
தேஷாம் -அந்த தேவ மனுஷ்ய திர்யக்குகளுக்கு
சஜாததீய இதி து -சஜாதீயன் என்ற காரணத்தால்
தாந் ஸ்தகயஸி –அந்த குண சமூகங்களை மறைத்துக் கொண்டு இருக்கிறாய்

கோவர்த்தன உத்தரணம் -சேது பந்தனம் -அம்ருத மைதானம் இத்யாதிகள் மூலம் அபார சக்தி விசேஷம் ஆவிஷ்கரித்தமை அறியலாம்
விபவம் விபூதி வாசகமாய் -தேவாதி ஜாதிகளில் ஒருவன் என்றும் சகல கல்யாண குண விஸிஷ்டனாய் அவதாரம் என்றுமாம் –
ஸ்வ இச்சையே அவதார ஹேது

——————-

பரோ வா வ்யூஹோ வா விபவ உத வர்ச்சாவதாரண
பவந் வாந்தர்யாமீ வர வரத யோ யோ பவசி வை
ச ச த்வம் சந் ஐஸாந் வர குண கணாந் பிப்ரத் அகிலான்
பஜத்ப்யோ பாஸ்யேவம் சததம் இதரேப்யஸ் து இதரதா-18-

வர வரத-சிறந்த வரங்களை அருளும் பேர் அருளாளனே
த்வம் -நீ
பரோ வா -பர வாஸூ தேவனாகவோ
வ்யூஹோ வா -வ்யூஹ மூர்த்தியாகவோ
விபவ பவந் வா -விபவ அவதாரமாக பிறந்தவனாயோ
உத வர்ச்சாவதாரண பவந் வா-அல்லது அர்ச்சையாக அவதரித்தவனாகோ
வாந்தர்யாமீ வா -அந்தர்யாமியாகவோ
யோ யோ பவசி வை –எவ்வெவனாக இருக்கிறாயோ
ச ச சந் ஐஸாந் –அவ்வவனாகக் கொண்டு ஈஸ்வரனுக்கு உரிய
அகிலான் வர குண கணாந் –சிறந்த கல்யாண குண சமூகங்கள் எல்லாவற்றையும்
பிப்ரத் -தன்னிடத்தில் உடையவனாய்
ஏவம் -இப்படி சகல குண விஸிஷ்ட வேஷனாக
சததம் -எல்லா அவஸ்தைகளிலும்
பஜத்ப்யோ பாசி –ஆஸ்ரிதர்களுக்கு தோற்று
இதரேப்யஸ் து இதரதா பாசி -அநாஸ் ரிதர்களுக்கு -வேறு விதமாக -குண சூன்யனாக தோற்றுகிறாயே –

கல்யாண குணங்கள் ஆவிர்பாகத்துக்கும் திரோபாவத்துக்கும் விஷய விபாகம் பண்ணுகிறார் இதில்

—————–

தயா ஷாந்தி ஒவ்தார்யம் ரதிம சமதா ஸுவ்ஹ்ருத த்ருதி
பிரசாத பிரேம ஆஜ்ஜா ஆச்ரித ஸூலபதாத்யா வர குணா
ததா ஸுவ்ந்தர்யாத்யாஸ் தவ வரதராஜ உத்தம குணா
வி ஸீமாந அசங்க்யா ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே -19-

ஹே வரதராஜ
தவ -உன்னுடைய
வி ஸீமாந -எல்லை அற்றதுகளும்
அசங்க்யா-எண்ணிறந்ததுகளுமான
தயா ஷாந்தி ஒவ்தார்யம் ரதிம -தயை பொறுமை ஒவ்தார்யம் ஸுவ்குமார்யம்
சமதா ஸுவ்ஹ்ருத த்ருதி-சமத்துவம் -நத்யஜேயம் கதஞ்சன–தன்னடியார் திறத்து இத்யாதி –
ஸுஹ்ருத்வம் -உறைப்பு
பிரசாத பிரேம ஆஜ்ஜா -கனிவு அன்பு ஆணை –பீஷ்மரும் யேஹ்யேஹி புல்லாம்புஜா பத்ர நேத்ர -என்னும்படி அன்றோ பிரசாதம்
ஆஸ்ரித ஸூலபதாத்யா -ஆஸ்ரித ஸுலப்யம்–தர்மர் உகந்த உருவம் இத்யாதி – முதலிய
வர குணா -சிறந்த ஆத்ம குணங்களும்
ததா ஸுவ்ந்தர்யாத்யாஸ் உத்தம குணா-அப்படிப்பட்ட ஸுவ்ந்தர்யம் முதலிய சிறந்த தேஹ குணங்களும்
ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே -ஆஸ்ரித ஜனங்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றன

ஸுவ்ந்தர்யாதி ஆதி சப்தத்தால் -ஸுகுமார்ய லாவண்ய யவ்வனம் முதலிய குணங்களும்
ஸுவ்குமார்யம் உபய கோடி குணம்
அனைத்து குணங்களும் ஒரு வியக்திக்கே போக ஹேதுவானாலும்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்
ஸுர்யாதிகளுக்கு விஷயம் பிரதி கூலர்
இவற்றுக்கு அடியான ஞான சக்த்யாதிகளுக்கு சர்வரும் விஷயம்
ஞானம் அஞ்ஞருக்கு
சக்தி அசக்தர்க்கு
க்ஷமை ச அபராதருக்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் ச தோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
ஸுவ்ஹார்த்தம்-துஷ்ட ஹ்ருதயர்களுக்கு
மார்தவம் விஸ்லேஷ பீருக்களுக்கு
ஸுவ் லப்யம் காண ஆசைப்படுவர்களுக்கு-இவ்வடைவிலே ப்ரணத ஜன போக பிரதமாகக் குறை இல்லை –

——————–

அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிக கிரஸ்
பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே
உபாலம்ப அயம் போஸ் ச்ரயதி பத சார்வஞ்ஞயம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவ ஆகலயஸி –20-

போ வரத
வைதிக கிரஸ் -வேத வாக்குகளானவை
தவ -உனக்கு
அநந்ய அதீநத்வம் -பிறருக்கு வசப்பட்டு இராமையாகிற ஸ்வா தந்திரத்தை
ஜகுர்-சொல்லி உள்ள
வயம் து -நாங்களோ என்றால்
ப்ரணத பரதந்த்ரம்-அடியவர்களுக்கு பரவசனான
த்வாம்-உன்னை
பராதீநம் -பரதந்த்ரனாக
மநுமஹே -எண்ணுகிறோம்
அயம் -இப்படிப்பட்ட
உபாலம்ப-தூஷணமாவது
தே -உன்னுடைய
சார்வஞ்ஞயம் அபி ச்ரயதி –சர்வஞ்ஞத்தையும் பற்றுகிறது
பத –ஆச்சர்யம்
யத –ஏன் என்றால்
இஹ பக்தேஷு -இவ்விபூதியில் உள்ள பக்தர்கள் இடத்தில்
தோஷம் நைவ ஆகலயஸி –குற்றத்தை சிறிதும் பார்க்கிறாய் இல்லை இறே

வியாஜ்ய ஸ்துதி அலங்கார மரியாதையாலே ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஆஸ்ரித பாரதந்தர்ய குணத்தையும்
வாத்சல்ய குணத்தையும் அருளிச் செய்கிறார் –
அர்ச்சா பராதீனத்தவம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் சாதாரணமாய் இருந்தாலும்
ஸ்ரீ பேர் அருளாளன் பக்கலிலே இது நெடு வாசியாய் இருக்கும்
திருக் கச்சி நம்பி பக்கலிலே சர்வாத்மநா பரதந்த்ரனாய் இருந்தும்
உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமானாரையும் தாரை வார்த்து தத்தம் பண்ணும் படி ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையருக்குத்
தோற்று நின்றதும் முதலான வ்ருத்தாந்தங்களை அனுசந்திப்பது –
அஷ்ஷ்ரிதா பரதந்த்ரனான நிலையிலே ஈடுபட்டு வித்தாராகிறார் இதில்
ஸ்வா தந்த்ரத்துக்குக் கண் அழிவு சொன்னால் போலே சர்வஞ்ஞத்துக்கும் கண் அழிவு சொல்கிறார் மேல்
குன்றனைய குற்றங்கள் இருந்தும் அவற்றை அறியாமல் ஒழிவதால் நீ அ விஞ்ஞதன் அன்றோ

உபாலம்ப-தூஷண -கர்ப்பிதமாய் இருந்தாலும் தாத்பர்ய வ்ருத்தியினால் அவனது கல்யாண குணங்களை ப்ரசம்சித்த படி –
ஆகவே வியாஜ்ய ஸ்துதி அலங்காரம் ஆகிறது –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: