ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–ஸ்லோகங்கள்-1-10 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -ஸ்ரீ ஸூந்தரபாஹு ஸ்தவம் –
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்- ஸ்ரீ ஸ்தவம் -இவை ஸ்ரீ பஞ்ச ஸ்தவங்களின் அடைவுகள்
நூறு ஸ்லோகங்கள் கொண்டவை -ஒவ் ஒரு தசகமும் ஒரு வ்ருத்தமாக அமைந்துள்ளது
இது போன்றே ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தயா ஸ்தானமும் சதகம் தோறும் ஒரு வ்ருத்தமாக அமைந்து இருக்கும்

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய விவரணமாயும் அர்த்த பஞ்சக விஸ்தீரணமாயுமாய் இருக்கும்
ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
அநந்யார்ஹ சேஷத்வமே ஆத்ம ஸ்வரூபம்
கல்யாண குண அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
அஹங்கார மமகாரங்களே தத் விரோதி
தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் சர்வேஸ்வரன் திருவடிகளே கண் அழிவு அற்ற உபாயம்
ஜிதேந்த்ரியம் தொடக்கமாக கைங்கர்யம் ஈறாக உபாய பலம் –
இவற்றை அனைத்தையும் அருளிச் செய்கிறார் இதில்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்ய நம உத்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே மங்கள ஸூத்ரதாம்

———–

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

நித்யம் இந்திரிய பத அதிகம் மஹ யோகி நாம் அபி ஸூ தூரகம் திய
அப்ய அநுஸ்ரவ சிரஸ்ஸூ துர்க்க்ரஹம் ப்ரா துரஸ்தி கரி சைல மஸ்தகே –3-

நித்யம் இந்திரிய பத அதிகம் -சாஸ்வதமானதாய் -சஷுராதி இந்திரியங்களின் வழியைக் கடந்ததாய்
யோகி நாம் திய அபி ஸூ தூரகம்-யோகிகளுடைய புத்திக்கும் அதிக தூரத்தில் உள்ளதாய்
அநுஸ்ரவ சிரஸ்ஸூ அப்ய துர்க்க்ரஹம் -வேதாந்தங்களிலும் அளவிட்டு அறியக் கூடாததான -ஆனந்த குணம் ஒன்றையும் அளவிடப்புகுந்து மீண்டதே
மஹ –மஹா விலக்ஷண தேஜஸ்ஸான -ஸ்ரீ தேவ பெருமாள் -சூர்யன் நக்ஷத்ராதி தேஜஸ்ஸுக்கள் ஒரு கால விசேஷத்தில் அழியக் கூடியவை
கரி சைல மஸ்தகே –ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தில்
ப்ரா துரஸ்தி –விளங்கா நின்றது

——————————–

வல்லிகா சுருதி மதல் லிகா மயீ யேந பல்லவித விஸ்வ சாகயா
ஸ்வ ஸ்ரியா கரி கிரே அநு க்ரியாம் வஷ்டி ம்ருஷ்ட வரதம் தம் ஆஸ்ரயே –4-

சுருதி மதல் லிகா மயீ -ஸ்ரேஷ்டமான வேதம் ஆகிற
வல்லிகா -கொடியானது
யேந பல்லவித விஸ்வ சாகயா -யாவன் ஒரு தேவ பிரான் ஆகிற தளிரை உடைத்தான் சகல சாகைகளையும் உடைய
ஸ்ரீ ஹஸ்தி கிரி பக்ஷத்தில் யாவன் ஒரு பேர் அருளாளனாலே தளிர் பெற்ற எல்லாக் கிளைகளையும் உடைத்தான்
ஸ்வ ஸ்ரியா -தனது சோபையினாலே
கரி கிரே அநு க்ரியாம் வஷ்டி-ஸ்ரீ ஹஸ்தி கிரியினுடைய அநு காரத்தை -சாம்யத்தை விரும்புகின்றதோ —
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ –
தம் ம்ருஷ்ட வரதம் ஆஸ்ரயே –அந்த பூர்ண ஸ்ரீ வரதனை ஆஸ்ரயிக்கிறேன்-பரி சுத்தனான வரதனை என்றுமாம்

ஹஸ்தி கிரிக்கும் ஸ்ருதிக்கு சாம்யம் -சாகைகளும் பல்லவமும் -சாகைகளுக்கு அழகு பல்லவங்களால் –
வேத சாகைகள் எம்பெருமானாலே சஞ்ஜாத பல்லவங்களாய் இருக்கின்றன என்றால்
வேதங்கள் எல்லாம் பகவத் பரங்களாய் இருந்து கொண்டு அழகாக விளங்குகின்றன என்றபடி
ஸ்ரீ பேர் அருளாளனுடைய நித்ய சந்நிதியாலே திவ்ய கடாக்ஷமே விளை நீராகக் கொண்டு செழிப்புற்று விளங்குகை என்றுமாம்
மதல்லிகா சப்தம் -சிரேஷ்ட வாசகம் -சிரேஷ்ட பிராமண சுருதி -என்றபடி

—————————————–

யம் பரோக்ஷம் உபதேசதஸ் த்ரயீ நேதி நேதி பர பர்யுதாஸத
வக்தி யஸ் தம் அபரோக்ஷம் ஈஷயதி ஏஷ தம் கரி கிரிம் ஸமாஸ்ரயே—5-

த்ரயீ-வேதமானது-ப்ருஹதாரண்யகம்
நேதி நேதி-இதி ந இதி ந இதி -இவ்வளவல்லன் இவ்வளவல்லன் என்று
பர பர்யுதாஸத உபதேசதஸ்–மேன்மேலும் மறுத்துக் கொண்டு போவதாகிற உபதேசத்தால்
யம் பரோக்ஷம் -யாவன் ஒரு வரதனை இந்திரியங்களுக்கு வெளிப்பட்டவனாய் -அபரிச்சின்னனாய்
வக்தி தம்-சொல்லி நின்றதோ அந்த வரதனை
ய ஏஷ-யாதொரு இந்த ஹஸ்த கிரி
அபரோக்ஷம் ஈஷயதி–சாஷாத்தாக சேவை சாதிப்பிக்கின்றதோ
தம் ஏதம் கரி கிரிம் -அந்த இந்த ஹஸ்த கிரியை
ஸமாஸ்ரயே—ஆஸ்ரயிக்கின்றேன்

கீழ் ஸ்லோகத்தில் வேத -ஸ்ரீ ஹஸ்தி கிரி சாம்யம் -இதில் அதினிலும் இதுக்கு உத்கர்ஷம்
ப்ருஹதாரண்யம் -4-3-1-
த்வே வாவ ப்ரஹ்மணோ ரூபே –என்று தொடங்கி ஸ்தூல ஸூஷ்ம பிரபஞ்சம் அனைத்தும் ப்ரஹ்ம ரூபமாக பராமர்சித்து –
ஆகார விசேஷத்தையும் சொல்லி -இவற்றோடு விசிஷ்டமான ப்ரஹ்மம் நேதி நேதி என்று சொல்லி –

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-21-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் -அத்தையே நிராகரித்தது நேதி நேதி என்று
தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம்
தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது
பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்
ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்மவச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –
ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்-
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பரமமான வஸ்து வேறே ஓன்று இல்லை என்று பரம உத்க்ருஷ்டமாக சொல்லி வைத்தும்
ப்ரத்யக்ஷமாகக் காட்டித்தர வில்லையே –
இந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியோ சகல ஜன சாஷாத்கார யோக்யமாகக் காட்டித் தாரா நின்றது
ஆகவே அந்த வேதத்தில் அலைந்து வருந்துவதை விட இதை பற்றியே உஜ்ஜீவிப்போம்

——————-

ஏஷ ஈஸ இதி நிர்ணயம் த்ரயீ பாகதேய ரஹிதேஷு நோ திசேத்
ஹஸ்தி தாமநி ந நிர்ணயேத க தேவராஜம் ஈஸ்வரஸ் த்விதி–6-

த்ரயீ-வேதமானது
ஏஷ ஈஸ இதி நிர்ணயம்-தேவ பிரான் சர்வேஸ்வரன் என்கிற நிர்ணயத்தை
பாகதேய ரஹிதேஷு–வேதார்த்தத்தை நன்றாக ஆராய்ந்து அறிய மாட்டாத துர்பாக்யசாலிகள் இடத்தில்
நோ திசேத் -உண்டு பண்ணாமல் போனால் போகட்டும்
ஹஸ்தி தாமநி து –ஸ்ரீ ஹஸ்தி கிரியான ஸ்தானத்திலோ என்றால்
தேவராஜம் அயம் ஈஸ்வர இதி -ஸ்ரீ தேவப்பெருமாளை சேவித்து இவனே சர்வேஸ்வரன் என்று
க ந நிர்ணயேத -எவன் நிச்சயிக்க மாட்டான்
வேதாந்தம் மூலம் அறிபவர் -ஜாயமான கால கடாக்ஷத்தாலோ ஆச்சார்ய கடாக்ஷத்தாலோ தானே –
நீயோ சர்வ ஜன நயன ஸூலப விஷயமாய்க் கொண்டு சேவை சாதிப்பதால்
குத்ருஷ்டிகளும் பேர் அருளாளன் அல்லது பரதெய்வம் இல்லை என்று கை எழுத்து இடுவார்களே
ஹஸ்தி கிரி தாமநி என்னாதே ஹஸ்தி தாமநி–என்றது ஏக தேச கிரஹணம்

————————–

ஹை குத்ருஷ்ட்டி அபி நிவிஷ்ட சேதஸாம் நிர்விசேஷ ச விசேஷதா ஆஸ்ரயம்
சம்சயம் கரிகிரிர் நுததி அசவ் துங்க மங்கல குண ஆஸ்பத ஹரவ்-7-

துங்க மங்கல குண ஆஸ்பத ஹரவ்–சிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான எம்பெருமான் இடத்தில்
குத்ருஷ்ட்டி அபி நிவிஷ்ட சேதஸாம்-குத்ஸிதமான யோஜனைகளில் பொருந்தின மனசை யுடைய தூர்வாதிகளுக்கு உண்டாய் இருக்கிற
நிர்விசேஷ ச விசேஷதா ஆஸ்ரயம்
சம்சயம்–இவன் குணங்கள் உடையவனா இல்லாதவனா என்று இரண்டு கோடிகளைப் பற்றிய சந்தேகத்தை
அசவ் கரிகிரிர் நுததி -இந்த ஸ்ரீ ஹஸ்தி கிரி போக்கடிக்கின்றதே –
ஹை–இது பிரசித்தம் அன்றோ
ஆக ஸம்சயங்களை விளைக்க வல்ல வேதங்களைக் காட்டிலும்
ஸம்சயங்களைப் போக்கடிக்க வல்ல ஸ்ரீ ஹஸ்தி கிரியே பரம ப்ராப்யம் என்றதாயிற்று –

—————————————-

நியாய தர்க்க முனி முக்கிய பாஷிதை சோதிதைஸ் ஸஹ கதஞ்சன த்ரயீ
ஜோஷயேத் ஹரிம் அநம்ஹஸோ ஜநாந் ஹஸ்தி தாம சகலம் ஜனம் ஸ்வயம் -8-

த்ரயீ சோதிதைஸ்-வேதமானது நன்றாக சோதிக்கப்பட்ட
நியாய தர்க்க முனி முக்கிய பாஷிதை ஸஹ-மீமாம்ச நியாயங்கள் என்ன தர்க்கங்கள் என்ன
வ்யாஸ பராசராதி முனிவர்களுடைய சொற்களாகிய புராணங்கள் என்ன -ஆகிய இவற்றோடு கூடிக் கொண்டு
கதஞ்சன-கஷ்டப்பட்டு
அநம்ஹஸோ ஜநாந்-புண்ய சாலிகளான சில பேர்களுக்கு
ஜோஷயேத் ஹரிம்-எம்பெருமானை பரதத்வமாக உணர்த்தும்
ஹஸ்தி தாம து ஸ்வயம் -ஸ்ரீ ஹஸ்திகிரியோ என்றால் தானாகவே
சகலம் ஜனம்-புண்யசாலிகள் பாபிகள் என்ற வாசி இன்றியே அனைவருக்கும்
ஹரிம் ஜோஷயதி -எம்பெருமானை சேவை சாதிப்பிக்கின்றது

வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கு அன்றோ இவன்
வேதாந்தம் போலே பலவற்றைக் கொண்டு சோதனை பண்ணி யதார்த்தர்தாம் கொள்ள வேண்டாம்படி
அனாயாசமாகவே ஸ்ரீ ஹஸ்தி கிரி பரம்பொருளை யதாவாகப் பிரகாசிப்பிக்கின்றதே

——————

அத்புதம் மஹத் அசீம பூமகம் கிஞ்சித் அஸ்தி கில வஸ்து நிஸ்துலம்
இத்யகோஷி யதிதம் தத் அக்ரத தத்த்யமேவ கரி தாம்நி த்ருச்யதே -9-

அத்புதம் -ஆச்சர்யகரமாயும்
மஹத் -அபரிச்சின்ன ஸ்வரூபத்தை உடையதாயும்
அசீம பூமகம் -எல்லையில்லா வைபவத்தை யுடையதாயும்
அத ஏவ -இப்படி இருப்பதனாலேயே
நிஸ்துலம்-ஒப்பற்றதாயும்
கிஞ்சித் வஸ்து அஸ்தி இதி -ஒரு வஸ்து இருக்கின்றது என்று
யத் கில அகோஷி-யாது ஒரு வஸ்து வேதாதிகளிலே சொல்லப்பட்டு இருக்கின்றதோ
யாதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா
எப்பால் எவர்க்கும் நலத்தால் அப்பால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன்
தத் இதம் -அந்த இந்த வஸ்து
கரி தாம்நி அக்ரத தத்த்யமேவ த்ருச்யதே-ஸ்ரீ ஹஸ்தி கிரியில் இதோ வாஸ்தவமாகவே காணப்படுகின்றதே
வேதாதிகள் கவி காட்டுகிறாப் போலே ஓன்று பத்தாக சொல்வது எல்லாம் சொன்னது ஒக்கும் ஒக்கும் என்று
வியக்கும்படி அத்யாச்சர்யமான வைபவத்துடன் அன்றோ ஸ்ரீ பேர் அருளாளன் இங்கே சேவை சாதித்து அருளுகிறார்

—————-

ஸம்வதேத கில யத் பிரமாந்தரை தத் பிரமாணம் இதி யே ஹி மேநிரே
தந்மதே அபி பத மாநதாம் கதா ஹஸ்தி நா அத்ய பரவஸ்து நி த்ரயீ -10-

யத் பிரமாந்தரை-பிரமாணமாக அபிமானிக்கப்படுகின்ற யாதொன்றானது வேறு ப்ரமாணங்களோடு
ஸம்வதேத கில தத் பிரமாணம் இதி-இணங்குமோ அது அன்றோ பிரமாணம் என்று
யே மேநிரே தந்மதே அபி-யாவர் சிலர் எண்ணினார்களோ அவர்கள் மதத்திலும்
அத்ய ஹஸ்தி நா த்ரயீ –இப்போது ஸ்ரீ ஹஸ்தி கிரியினாலேயே வேதமானது
பரவஸ்து நி -பரம்பொருள் ஆகிற எம்பெருமான் விஷயத்தில்
மாநதாம் கதா -ப்ராமாண்யத்தை அடைந்தது
பத ஹி-சந்தோஷக் குறிப்பு

ஆதவ் வேதோ பிரமாணம் -வைதிக சித்தாந்தம்
வேத பாஹ்யர்களோ ஸ்வத பிரமாணம் ஒன்றும் இல்லை என்பர்
அந்த வேதத்துக்கு ப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கக் கூடியது ஸ்ரீ ஹஸ்தி கிரியேயாம் -அதாவது
ஈஸ்வரன் ஒருவன் உண்டு
ஸ்ரீ மன் நாராயணனே தத்வம்
அவனுக்கு குணங்கள் உண்டு
விக்ரஹங்கள் உண்டு
விபூதி உண்டு –இத்யாதிகள் கை இலங்கு நெல்லிக்கனி போலே காணலாமே
சம்வதேத -ஒரு பிரமானத்துக்கு இன்னும் ஒரு பிரமாணம் உதாஹரித்தால் அது சம்வாத பிரமாணம்
பிரமாந்தரை -பிரமாணந்தரை -பிரமா சப்தம் பிரமாண பர்யாயம்
ஸ்ரீ பட்டரும் -தத் சார்வாக மாதே அபி ரெங்க ரமண ப்ரத்யக்ஷவத் ச பிரமா –ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்-
பிரமா சப்தத்தை பிராமண பர்யாயமாக அருளிச் செய்கிறார்

இந்த முதல் பத்து ஸ்லோகங்களும் ரதோத்ததா வ்ருத்தம் –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: