ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — நான்காம் அதிகரணம்–அந்தர்யாம்ய அதிகரணம் -1-2-4-

அந்தர்யாம்ய அதிகரணம்

விஷயம்
பிருஹத் -5-7-22-அந்தர்யாமியாக ஓதப்படுபவன் பரமாத்மாவே என்று நிரூபணம் –

—————————

1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்

அதிதைவம் அதிலோகம் அந்தர்யாமியாக உள்ளவன் பரம் பொருளே-அவனுக்கே உரிய தர்மங்கள் கூறப்படுவதால்

விஷயம் –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்-என்பதன் மூலம்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் — என்பதில் பரமாத்மாவே கண்ணில் உள்ளதாக ஓதப்படுகிறது என்று நிச்சயிக்கப்பட்டு –
அது மெய்யானதே ஆகும் என்று கூற உள்ளார் –
வாஜசநேயர்களில் இரண்டு பிரிவுகளான காண்வம் மற்றும் மாத்யந்தினம் ஆகிய இரண்டிலும்
பிருஹத் 3-7-3-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர யம் ப்ருத்வீ நீ வேத
யஸ்ய ப்ருத்வி சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயதி ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி யம்ருத -என்று
யார் ஒருவன் இந்த பூமியிலே நிற்கிறானோ -பூமியின் உள்ளே உள்ளானோ -அப்படி அவன் உள்ளதை பூமி அறியாமல் உள்ளதோ –
யாருடைய உடலாக இந்த பூமி உள்ளதோ -பூமியில் உள்ளே இருந்து இயக்குபவன் யாரோ
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அந்தர்யாமி யாவான் என்று படிக்கப்பட்டது –
இதன் பின்னர் – நீர் நெருப்பு வானம் -அந்தரிக்ஷம் -காற்று -த்யு லோகம் – சூர்யன்- திசைகள் சந்தரன் ஆகாசம் இருள் ஒளி–
போன்றவற்றின் அபிமான தேவதைகளின் உள்ளே வசிப்பவனாகவும் -அவனே அனைத்து உயிர்களின் உள்ளும் வசிப்பவனாகவும்
பிராணன் வாக்கு கண்கள் காதுகள் மனம் தோல் விஞ்ஞானம் புத்தி ரேதஸ் போன்ற அனைத்திலும் அந்தர்யாமியாக உள்ளவன்-
இப்படி ஒருவன் உள்ளதாகக் கூறி -ஒவ் ஒன்றின் உள்ளிலும் உள்ளவனாகப் படிக்கப் பட்டு –
அவ்விதம் அவன் உள்ளதை அவை அறியாமல் –ஒவ் ஒன்றும் அவன் சரீரமாக உள்ளன என்றும்
அவற்றை அவன் நியமிப்பவனாகவும் கூறி முடித்து
அவனை ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத –என்று முடிக்கப்பட்டது

ஆனால் மாத்யான சாகையில் மேலும் சில கருத்துக்கள் உள்ளன -அதாவது
ய சர்வேஷு லோகேஷு திஷ்டன் சர்வேஷு வேதேஷு ய சர்வேஷு யஜ்ஜேஷு -என்று
லோகங்கள் வேதங்கள் யஜ்ஜ்ங்களிலும் உள்ளான் என்றும் படிக்கப்பட்டுள்ளது
காண்வ சாகையில் -ப்ருஹு 3-7-22-
யோ விஞ்ஞாநே திஷ்டன் –யார் விஞ்ஞானத்தில் உள்ளானோ என்று படிக்கப்பட்டுள்ளது –
மேலும் ஏஷ த அந்தர்யாமி அம்ருத என்பதற்குப் பதிலாக
ச த அந்தர்யாமி அம்ருத -என்னும் வேறுபாடும் உள்ளது

இதில் சங்கை -அந்தர்யாமி ஜீவாத்மாவா பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
அந்தர்யாமியாகக் கூறப்படுபவன் ஜீவாத்மாவே –
அவனே–பிருஹத் -3-7-23- த்ரஷ்டா ஸ்ரோதா –என்று
அந்தர்யாமியாக உள்ளவன் கண்ணால் பார்ப்பவன் காதால் கேட்பவன்
இப்படி இந்திரிய ஜன்ய ஞானம் ஜீவாத்மாவுக்கே
மேலும் ப்ருஹ 3-7-23–
ந அந்ன்யோ தோஸ்தி த்ரஷ்டா -இவனை விடப் பார்ப்பவன் வேறே யாரும் இல்லை –
ஆக இங்கு அந்தர்யாமி ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்
அதிதைவம் -மற்ற தேவதைகளுக்கும் தைவம்
அதி லோகம் -அனைத்து லோகங்களுக்கும் தெய்வம் –
இவற்றால் அந்தர்யாமியாக சொல்பவன் பரமாத்மாவே
காண்வ சாகையில் உள்ள அதி தைவம் மாத்யந்தின சாகையில் உள்ள அதி லோகம் பதங்களை ஒட்டியே இந்த ஸூத்ரம்-
தர்ம வ்யபதேசாத்–பரமாத்மாவுக்கே உரிய தர்மங்கள் ஓதப்பட்டுள்ளதால் ஆகும்

இந்தப் பகுதியில் உத்தாலகர் ஒரு கேள்வி -பிருஹத் 3-7-1-
ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி பூதாநி யோ அந்தரோ யமயதி –என்று தொடங்கி
பிருஹத் 3-7-2-தம் அந்தர் யாமிணம் ப்ரூஹி -என்று முடித்து
அதுக்குப் பதிலாக யஜ்ஞவல்க்யரால் 3-7-3-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதியால்
அனைத்தையும் நியமிக்கும் தன்மையும் சர்வாத்மாவாக உள்ள தன்மையும் பரமாத்மாவுக்கு பொருந்தும்
தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
தைத்ரியம் -2-6-
தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6-
நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண
சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம்
ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில்
யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மா
அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே

ஆக சர்வாத்மாவால்வும் அனைத்தையும் சரீரமாகக் கொண்டும் அனைத்தையும் நியமித்தல்
பரமாத்மாவுக்கே பொருந்தும்

மேலும் த்ரஷ்டா -காண்பவன் என்றாலும் பரமாத்மாவைச் சொல்வதில் குறை இல்லையே
ஸ்வபாவிக்க சர்வஞ்ஞத்வம் ஸத்யஸகல்ப்பத்வம் உண்டே
ஸ்வேதாஸ்வர -3-19-
பச்யத்ய  சஷூ ச ஸ்ருணோத்ய கர்ண –அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா –
இந்திரியங்களின் அவசியம் இல்லையே அவனுக்கு
மேலும் பிருஹத் -3-7-23-
நாந்யே அதோ அஸ்தி த்ரஷ்டா என்று இவனைப் போலே இல்லையே
இவனே நியமிக்கிறான்-இவனை நியமிப்பவர்கள் யாரும் இல்லை —
யாராலும் பார்க்கப்படாமல் பார்க்கிறான்
மேலும் காணவ சாகை பிருஹத் -3-7-23-ஏஷ த ஆத்மா -இது உனது ஆத்மா என்றும்
மாத்யாந்தின சாகையில் -ச த ஆத்மா அவன் உனது ஆத்மா என்று வெவ்வேறு விதமாகவும் உண்டு
ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக தே என்று வேற்றுமை உருபால் பிரித்து சொல்வதால்
ஜீவாத்மாவின் அந்தராத்மாவாக ஜீவாத்மாவே இருக்க முடியாதே

—————

1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச

பிரக்ருதியும் ஜீவன்களும் அந்தர்யாமியாக இருக்க ஓயயலாதே-அவர்களுக்கு பொருந்தாத தன்மை கூறப்படுவதால்

சித்தாந்தம்
ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
ஸ்மார்த்தம்-என்பது ப்ரக்ருதி
சாரீர-என்பது ஜீவாத்மா
கீழே சொல்லப்பட்ட தன்மைகள் இவற்றுக்குப் பொருந்தாதே

—————-

1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

இரண்டு சாகைகளிலும் அந்தர்யாமியாய் வேறுபட்டவனாக கூறப்பட்டுள்ளதே

ப்ருஹத் ஆரண்யாகவில் -மாத்யந்தின சாகையில் -3-7-22
ய ஆத்ம நி திஷ்டன் ஆத்ம நோ அந்தர யமாத்மா நவேத யச்யாத்மா சரீரம்
யா ஆத்மா நமந்த்ரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் அம்ருத -என்றும் –
காண்வ சாகையில் -3-7-22-
யோ விஜ்ஞான திஷ்டன் -என்றும் சொல்லி இருப்பதால் பரமாத்வையே சொன்னதாயிற்று –

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: