ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –முதல் அதிகரணம்—ஆநுமாநிக அதிகரணம் -1-4-1-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் 29–ஸூத்ரங்கள் –

—————-

விஷயம்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதி ஜகத்தின் காரணப் பொருள் என்று
கூறப்பட வில்லை என்பது நிருபிக்கப் பட உள்ளது –

1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –

அவ்யக்தம் எனப்படும் மூல பிரக்ருதியே ஜகத் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் –
அது சரி அல்ல –
உருவகத்தில் தேராக உருவகம் செய்யப்பட சரீரத்தையே அவ்யக்தம் என்பதால் ஆகும்

பரம புருஷார்த்த சாதனமாக உள்ள ப்ரஹ்மத்தை அறிய இச்சை ஏற்பட வேண்டும் –
அந்த ப்ரஹ்மமே அறியத் தக்கது -என்றும் இதுவரை கூறப்பட்டது –
அந்த ப்ரஹ்மமே சகல காரணன் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
கபில மகரிஷியால் முன்பு கூறப்பட்ட ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரதானமும் புருஷர்களும் உண்டு என்பதை நிலை நிறுத்தும் விதமாக
ஒரு சிலர் ஒரு சில வேத சாகைகளில் இப்படிப்பட்ட பிரதானமே ஜகத் காரணம் என்று கூறுவதாக ஆஷேபம் எழுப்ப –
அத்தை தள்ளி ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்படுகிறது

கட உபநிஷத் –
இந் த்ரியேப்ய பரா ஹி யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரம் மந
மநசஸ்து பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர
புருஷான் ந பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி -3-10-/-11-என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –
இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –

பூர்வ பக்ஷம்
இங்கு பிரதானமே சொல்லப்படுகிறது -வேறு பதத்தால்- அவ்யக்தம் என்கிறது
சாங்க்ய மதம் -நிரீஸ்வர -மதம் -25-தத்துவமான புருஷனைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றும் இல்லை

சித்தாந்தம் –
ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத்
ஏகேஷாம்-ஒரு சில வேத சாகைகளில் சேர்ந்தவர்களால்
ஆநுமாநிகம்-பிரதானம் என்பதே காரணப் பொருளாகக் கூறப்படுகிறது
இதி சேத்-இப்படியாக கூறப்படுவது
ந-
அப்படி அல்ல -இங்குள்ள அவ்யக்தம் -என்ற பத மூலம் ப்ரஹ்மாத்மகம் இல்லாத பிரதானம் கூறப்படவில்லை
ஏன் என்றால்
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே
சரீரமாக உருவகம் செய்யப்பட்டதையே அவ்யக்தம் என்று கூறுகிறது –
அதாவது -ஆத்மா சரீரம் புத்தி மனம் இந்திரியம் இந்திரிய விஷயங்கள் இவற்றை
தேர் ஓட்டுபவன் தேர் போன்றவை உருவகப் படுத்தப் படுகிறது
தர்சயதி ச
இதனால் சரீரமே தேர் -அதுவே அவ்யக்தம் எனப்பட்டது

முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்—3-3-4-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –3-9–என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்
இத்தால் பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

சம்சாரத்தின் அக்கரையில் உள்ள ஸ்ரீ விஷ்ணுவின் பதத்தை அடைய விரும்பும் சேதனன் -உபாசகன் –
தேரில் அமர்ந்து செல்பவனாகக் கூறப்பட்டு அவனது சரீரம் இத்யாதி தேரின் அங்கங்கள் –
யார் ஒருவன் தேர் முதலானவற்றை தன் வசப்படுத்தி உள்ளானோ
அவனே ஸ்ரீ பரமபதம் அடைகிறான் என்றதாயிற்று

இந்த்ரியேப்ய பாரா ஹி அர்த்தா -இந்த்ரியங்களைக் காட்டிலும் இந்திரிய விஷயங்கள் மேலானவை
குதிரைகளை விட பாதைகள் மேலானவை –
இதை விட கடிவாளம் மேலானது -மனஸ் வலியது
அதை விட புத்தி -அறிவில் உறுதி இல்லாவிடில் மனசால் பயன் இல்லை –
அதுக்கும் மேலே கர்த்தாவான ஆத்மா -அவனே மஹான் என்று சிறப்பித்துச் சொல்லி –
பரார்த்து தஸ்ஸ்ருதே-2-3-10-இவற்றை நியமிக்கும் பர ப்ரஹ்மமே என்பதையே
கடவல்லி
புருஷான் த பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பரா கதி -3-11-என்று அவனை விட உயர்ந்த ஒன்றும் இல்லை –
அவனே பரமகதி என்றும்
இதே போலே அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் பிருஹு -3-7-22-
ய ஆத்மநி திஷ்டன் –இத்யாதியாலும்
ந அந்ய த்ரஷ்டா 3-7-23–என்றும் சொல்லப்படுகிறது

ஸ்ரீ கீதையிலும்
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக் விதம்–விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் ச ஏவ அத்ர பஞ்சமம் -18-14 –என்று
ஐந்து காரணங்களில் தைவத்தைச் சொல்லி
ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்த ஸ்ம்ருதிர் ஞானம் போஹனம் ச –15-15-இந்த தெய்வம் புருஷோத்தமனே -என்றும்
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி -பிராம்யன் சர்வ பூதாநி யந்த்ர ரூடாநி மாயயா –
தமேவம் சரணம் கச்ச சர்வ பாவேந பாரத -18-61-/62– என்று
அவனே மாயையால் சுழல வைக்கிறான் -அனைத்து விதங்களால் சரணம் புகுவாய் என்றதே
ஆகவே கட -3-3-ஆத்மாநம் ரதிநம் வித்தி –இத்யாதியால் உருவகப்படுத்தி
இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -3-10-என்று இந்த்ரியங்களைக் காட்டிலும் விஷயங்கள் உயர்ந்தவை என்று
அவற்றின் பெயரையே சொல்லி சரீரம் என்பதையே அவ்யக்தம் என்று கூறப்பட்ட தாகிறது –
பிரதானம் இங்கு பிரசங்கம் இல்லை என்றதாயிற்று –

அடுத்து -தர்சயதி ச -விளக்கம்
ஏஷ சர்வேஷு பூதேஷு கூட ஆத்மா ந ப்ரகாசதம்-த்ருச்யதே த்வக்யயா புத்தயா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி –3-12- என்றும்
எச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞ தத் யச்சேத் ஞான ஆத்மநி -ஞானம் ஆத்மநி மஹதி நியச்சேத் தத் யத் சாந்த ஆத்ம நிம்-3-13-என்றும்
புலன்களை அடக்கியே பர ப்ரஹ்மத்தை காண முடியும் -ஞான ஆத்மாநி இரண்டும் தனித்தனியாக ஏழாம் வேற்றுமை –
மனசை ஆத்மாவில் உள்ள ஞானத்தில் அடக்க வேண்டும் -என்று முன்பு சொன்ன புத்தியைச் சொன்னபடி
மேலே -ஞானம் ஆத்மநி மஹதி நியச்சேத் -என்று புத்தியானது ஆத்மாவில் அடைக்கப்பட வேண்டும் என்றும்
தத் யத் சாந்த ஆத்ம நிம்-அந்த ஆத்மாவை அந்தர்யாத்மாவான பரமாத்மாவிடம் அடக்க வேணும்
தத் -பரமபதத்தையே இலக்காகக் கொண்டு அதனை அடைகிறான் என்றபடி

இதுக்கு பூர்வபக்ஷம்
சரீரம் கண்களால் காணப்படும் -அவ்யக்தம் காணப்படாதது -இப்படியானதால் எவ்வாறு
அவ்யக்தம் என்பது சரீரத்தைக் குறிக்கும் –

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

———–

1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –

சூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே -கர்த்ருத்வ தகுதி அடைகிறது என்றவாறு
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

பஞ்சபூதங்கள் அவ்யாக்ருத -மாறுபடாத நிலையில் தகுந்த நேரத்தில் சரிரமாகும்
இத்தையே அவ்யக்தம் என்கிறோம்
தத் அர்ஹத்வாத் -கர்த்ருத்வ தகுதி அடைய என்றவாறு
எனவே சரீரம் -தேர் – தனக்கு சேஷியான ஆத்மாவுக்கு ஏற்றதான புருஷார்த்தம் பெற வைக்கும் சாதனம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
மாறுபாடு அடையாத பூத் ஸூஷ்மம்-இதுவே கபில தந்திரத்தின் படி அவ்யக்தம் என்று சொல்லலாமே

இதுக்கு சமாதானம் சுத்த ஸூத்ரம்

———–

1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

சுருதி ஸ்ம்ருதிகள் -பரமாத்மாவை அனைத்துக்கும் ஆத்மாவாக சொல்லுமே
ஸூபால உபநிஷத் -2-
பிருதிவி அப்ஸூ ப்ரலீ யதே என்று தொடங்கி -தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே –பூதாதிம் அர்ஹதி லீயதே –
மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் தமஸி லீயதே -தம பரே தேவ ஏகிபவதி —
என்று இருப்பது போலேயும்
தஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆப சரீரம் -யஸ்ய தேஜஸ் சரீரம் -யஸ்ய வாயு சரீரம் -யஸ்ய ஆகாசம் சரீரம் –
யஸ்ய அஹங்காரம் சரீரம் -யஸ்ய புத்தி சரீரம் -யஸ்ய அவ்யக்தம் சரீர -யஸ்ய அக்ஷரம் சரீரம் -யஸ்ய ம்ருத்யு சரீரம் –
ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால -3-என்றும் உள்ளதே

இதே போன்று ஸ்ரீ கீதையிலும்
பூமி ஆப அநலோ வாயு கம் மநோ புத்தி ஏவ ச அஹங்காரம் இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி அஷ்டதா -7-4-என்றும்
அபரா இயம் இத து அந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் -ஜீவ பூதாம் மஹா பாஹோ யயா இதம் தார்யாதி ஜகத்-7-5- என்றும்
ஏதத் யோநி இதி பூதாபணி ஸர்வாணி இதி உப தாரய அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத பிரபவ ப்ரளயஸ் ததா -7-6-என்றும்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -மயி சர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ர மணி கணாம் இவ -7-7-என்றும் உள்ளதே

இதே போலே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
வ்யக்தம் விஷ்ணு தத் அவ்யக்தம் புருஷ கால ஏவ ச –1-2-18- என்றும்
ப்ரக்ருதிர் யா மயா க்யாதா வ்யக்த அவ்யக்த ஸ்வரூபாணீ–புருஷச்ச அப்யுபாவேதவ் லீயதே பரமாத்மநி –
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார புருஷோத்தம -விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷு ச கீயதே -6-4-38-/39-
என்றும் கூறப்பட்டுள்ளதே

—————

1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-
அவ்யக்தத்தை அறியப்பட ஒன்றாக கபில தந்திரத்தில் கூறப்பட வில்லையே

—————–

1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–

அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறப்படுகிறதே என்றால் -அப்படி அல்ல –
பிரகரணத்தை ஆராய்ந்தால் அங்கு கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்

பூர்வ பக்ஷம்
கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே –என்ற
சுருதி வரியானது அவ்யக்தம் அறியப்பட வேண்டியது என்று கூறுகிறது

சித்தாந்தம்
அப்படி அல்ல -அனைத்தும் அறிந்த பரம புருஷனே அறியத் தக்கவனாக கூறப்படுகிறான் –
இந்த வரிகளுக்கு முன்னால்–கட -3-9-
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹவான் நர-
ச அத்வன பாரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்—ஞானத்தை தேர் ஓட்டுபவனாகவும் மனத்தைக் கடிவாளமாகவும்
கொண்டு ஸ்ரீ பரமபதத்தை அடைகிறான் -என்றும்
அதற்கு கீழே -ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடஸ் ஆத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வக்யயா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று அனைத்தும் அறிபவனாகிய
பரம புருஷனே இந்த பகுதியில் கூறப்படுகிறான் –

புருஷான் ந பரம் கிஞ்சித் –கட 3-12-புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை என்பது மறுக்கப்பட வில்லை
புருஷன் இங்கே கூறப்பட வில்லை
அந்த பரம் புருஷனுக்கே சப்தம் போன்ற குணங்கள் இல்லை என்பதை
முண்டகம்–1-1-5-
யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் – -என்று எது காண இயலாதோ எடுக்க இயலாதோ -என்ற சுருதி வாக்கியங்கள் உணர்த்தும்
மேலும் கட -3-15-
மஹத பரம த்ருவம்-என்று மஹத்தை விட பெரியது என்று கூறப்பட்ட வஸ்துவான
பரம் பொருள் தானே –
கட –3-10-
புத்தரோத்மா மஹான் பர -என்று புத்தியைக் காட்டிலும் மஹான் என்ற ஆத்மா பெரியது என்று
ஜீவாத்மாவை விட மேலானவன் என்று உணர முடியலாம்-

—————————

1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –

உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு —
மூன்றைக் குறித்தே அறிய வேண்டும் என்ற பதில் இருப்பதால் கேள்வியும் மூன்றையும் பற்றியே இருக்க வேண்டும்
மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்

சித்தாந்தம்
இந்த பிரகரணத்தில் -உபாயம் உபாசனம் —உபேயம்–அடையப்படும் பரமாத்மா -உபேதா அடைபவனாகிய ஜீவாத்மா –
ஆகிய மூன்றையும் குறித்த விளக்கம் -இவற்றைக் குறித்தே அறிய வேண்டும் என்னும்
விதி கேள்விகள் உள்ளன -அவ்யக்தம் பற்றி ஒன்றுமே இல்லை

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
புருஷார்த்தம் அடைய வல்ல -தனது தந்தை தன்னுடன் மகிழ்வுடன் இருக்கும் வரம் –
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்து–மோக்ஷ சாதனமாக உள்ள -நாசி கேதஸ் -என்ற பெயர் கொண்ட
அக்னி வித்யையை குறித்து அறிய வேண்டும் என்று கேட்டான்
ஸ்வர்க்கம் என்று உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமே கூறப்படுகிறது

கடவல்லி -1-1-13-
ச த்வம் அக்நிம் ஸ்வர்கயமவ்யேஷி ம்ருத்யோ ப்ரப்ரூஹி தம் ஸ்ரத்த தாநாய மஹ்யம் –
ஸ்வர்க்க லோகா அம்ருதத்வம் பஜந்தே ஏதத் த்விதீ யேந வ்ருண வரேண–என்று உபதேசிக்க பிரார்த்திக்கிறான்

கடவல்லி -1-1-13-
அம்ருதத்வம் பஜந்தே -பிறப்பு இறப்பு இல்லா அம்ருதத் தன்மை அடைகிறார்கள்
மேலும் -கடவல்லி -1-1-17-
த்ரிணாசிகேதஸ் த்ரி ப்ரேத்ய சந்திம் த்ரி கர்ம க்ருத தரதி ஜென்ம ம்ருத்யு -என்று நாசி கேதஸ்ஸின் மூன்று வித அநுவாகங்களை
-தாய் தந்தை குரு மூவரிடம் கற்று -அந்த அக்னியை மகிழ வைத்து -யஜ்ஜம் இயற்றுதல் -தானம் அளித்தல்-வேத அத்யயனம் செய்தல் –
ஆகிய மூன்று வித கர்மங்களை செய்து -சம்சாரம் கடந்து மோக்ஷம் அடைகிறான் –
அடுத்து 1-1-20-
யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத்யேக நாயமஸ்தீதி சைகே -ஏதத் வித்யாம் அநு சிஷ்டஸ் த்வயாஹம்
வரணாம் ஏஷ வரஸ் த்ருதீய –என்று மூன்றாவது கேள்வி

பின்பு அவனுக்கு மோக்ஷம் பற்றி அறிய தகுதி இருப்பதை பலவாறாக பரிசோதித்து யமன்
கட -2-12-
தம் துர் தர்ஸோ கூடம் அநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ்வ ரேஷ்டம் புராணம் -அத்யாத்ம யோகாதி கமேந தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி –என்று பரமாத்மாவை அறியும் ஞானி சம்சார கர்மவினைகளை விட்டு
அவனையே அடைகிறான் -என்று உரைத்தான்

தேவம் மத்வா –என்று அடையப்படு அவனது ஸ்வரூபம்
அத்யாத்ம யோகாதி கமேந-இலக்கை அடையும் பிரத்யாகாத்மாவின் ஸ்வரூபம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகவ் ஜஹாதி- ப்ரஹ்ம உபாசனையில் ஸ்வரூபம்
இதன் காரணமாக நசிகேதஸ் மீண்டும் -2-14-
அந்யத்ர தர்மாத் அந்யத்ர அதர்மாத் அந்யத்ர அஸ்மாத் க்ருத அக்ருதாத் -அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
தத் பச்யதி தத் வத -என்று
அனைத்துக்கும் வேறுபட்ட அந்த பரமாத்மாவை -மோக்ஷத்தை காண்கிறாய் அல்லவா –
அதனை எனக்கு கூற வேண்டும் என்று கேட்டான்

இதற்கு பதிலாக யமன் பிரணவத்தை புகழ்ந்து ப்ராப்ய ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பற்றி விளக்கினான்
இதுவே கட -2-15-
சர்வே வேதா யத் பதம் அமநந்தி தபாம்சி ஸர்வாணி ச யத் வதந்தி -யத் இச்சந்தோப்ரஹ்மசர்ய சரந்தி தத்தே பதம்
ஸங்க்ரஹேன பிரவீம் ஓம் இதி ஏதத் –என்று உபக்ரமித்து உபதேசித்து மீண்டும் பிரணவத்தை புகழ்ந்தான்
கட -2-18-
ஜீவாத்மா ஸ்வரூபம் -ந ஜாயதே ந ம்ரியதே வா விபச்சித் என்றும்
கட -2-20-
பர ப்ரஹ்மமான ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்வரூபம் –
அனோர் அணீயான்-என்று தொடங்கி
கட -2-24-
க இத்தா வேத யத்ர ச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி–என்று முடிய உபதேசிக்கப்பட்டது

இந்த வாக்யங்களுக்கு நடுவில் -2-24-
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயோ ந பஹுநா ஸ்ருதேந –என்று தொடங்கி உபாஸனையின் ஸ்வரூபம் சொல்லப்பட்டது
கட -3-1-மூலம்
ருதம் பிபந்தவ் –என்று இருவர் கர்ம பலனை புஜிக்கிறார்கள்-என்பதால் அவன் அருகிலே இருப்பதால் உபாஸனை எளிது என்றும்
கட -3-3-
ஆத்மாநம் ரதிநம் வித்தி -என்று தொடங்கி
கட -3-14-
துர்கே பதஸ் தத் கவயோ வதந்தி –என்று பாதை கடினம் என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்று நிகமிப்பதன் மூலம்
உபாஸனையின் வழி முறைகளும் உபாசகன் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் அடைதல் பற்றியும் கூறப்பட்ட இந்த பிரகரணத்தில்
கட -3-15-
அ சப்தம் அ ஸ்பர்சம் என்று முடிக்கப்பட்டுள்ளது –

இங்கு அறியப்பட வேண்டியவர்களாக மூன்று விஷயங்களும் -அவற்றைக் குறித்த கேள்விகளும் மட்டுமே உள்ளன –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை

—————–

1-4-7-மஹத்வத் ச –

மஹத் தத்வம் போன்றது என்றவாறு-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
கட -3-10-
புத்தேர் ஆத்மா மஹான் பர – புத்தியைக் காட்டிலும் மஹான் என்று கூறப்படும் ஆத்மா உயர்ந்தது -என்றது
சாமாநாதி கரண்யத்தால் –
கபில தந்திரத்தில் கூறப்பட்ட மஹான் சொல் இல்லை
இதே வரியில் ஆத்மா என்பதைக் காட்டிலும் அவ்யக்தம் மேம்பட்டது என்ற பொருளில் படிக்கப்பட்டதால்
இந்த அவ்யக்தம் கபில தந்திரத்தில் கூறப்பட்ட அவ்யக்தம் என்ற சொல்லைக் கருத்தில் கொண்டு
எடுக்கப்பட விலை என்று அறியலாம்

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: