ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -எட்டாம் அதிகரணம்-தேவதாதிகரணம் -1-3-8-

1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-

மது வித்யை போன்ற வித்யைகளுக்கு அதிகாரம் ஏற்படாது என்பதால் தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி –
இது பூர்வபக்ஷம் மட்டுமே உள்ள ஸூத்ரம்

சாந்தோக்யம் –3-1-1-
ஸூர்ய பகவானை தேனாக தியானிக்கும் வித்யை -ஸூர்ய மண்டலத்தை தேவதைகள் உட் கொள்ளும் தேனாகவும்–
மேல் உலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும் -வேதங்கள் இதிகாச புராணங்கள் -வண்டுகளாகவும்
வஸூக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மற்றும் ம்ருத் ஸாத்ய கணங்கள் நான்கு திசைகளிலும் மேல் புறத்திலும் நிற்பதாகக் கருதி
ஸூர்ய பகவானின் அந்தர்யாமியாக உபாசனம் செய்வதே மது வித்யை ஆகும்

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால் எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
அசம்பாவித
முன்பே தேவர்கள் வஸூ தன்மை அடைந்ததால் பொருந்தாதே
அசவ் வா ஆதித்யோ தேவ மது —சாந்தோக்யம் -3-1-1-என்று இந்த ஆதித்யன் தேவர்களின் மெதுவாக உள்ளான் என்று தொடங்கி –
தத் யத் ப்ரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி-3 6-1–என்று கூறி
ச ய ஏதத் ஏவம் அம்ருதம் வேத வஸூநாம் ஏவ ஏகோ பூத்வா அக்நே நைவ முகேந ஏதேவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி-3-6-3-என்று
இவ்விதம் உள்ள அம்ருதத்தை அறிபவன் அக்னியை முன்னிட்டு வஸூ வாகிறான் –
பின்னர் அந்த அம்ருதத்தைக் கண்டு அந்தப்பார்வை மூலம் மன நிறைவு கொள்கிறான் -என்று நிகமிக்கப்படுகிறது-

————-

1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம்-4-4-16- -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

இதுவும் பூர்வ பஷ ஸூத்ரம்-

—————

1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் -அடுத்த கல்பத்தில் ஏற்படுவதால்

30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் -தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

வஸூ ஆதித்யன் பதவிகளை அடைந்த பின்பு தங்களுக்கு அந்தராத்மாவான ப்ரஹ்ம உபாசனம் பண்ணலாமே
அடுத்த கல்பத்திலாவது ப்ரஹ்மம் அடைய என்றும் -அதே பதவிகளைப் பர என்றும் உபாஸனை இருக்கலாமே –
அத தத் ஊர்த்வம் உதேத்ய-3-11-1-என்று பிறகு மேல் எழுந்து என்றும்
அத தத் ஊர்த்வ ந ஏவோ தேவாதேதா-3-11-1–என்றும் அதனைக் காட்டிலும் அதன் பின்னர் உயர்ந்த -என்றும் உள்ளதால்
கார்ய நிலை காரண நிலை இரண்டிலும் உள்ளதாக உபாசனம் செய்து
ந ஹ வா அஸ்மா உ தேதி ந நிம்நோசதி சக்ருத்திவா ஹ ஏவ அஸ்மை பவதி -ய ஏதாமேவ ப்ரஹ்ம
உபநிஷதம் வேத –3-13-1–என்று உபாசனம் மூலம் வஸூ தன்மை அடையப்பட்டு ப்ரஹ்மத்தை அடைவதைக் கூறும்
மேலும் ப்ருஹ
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -4-4-16-என்று ஜ்யோதிகளுக்கு எல்லாம் ஜ்யோதி என்றதும்
ப்ரஹ்மமே உபாசிக்கப்படும் வஸ்துவாக உள்ளதால்
வ்ருத்தி காரரும் -போதாயனரும் -ப்ரஹ்மமே எங்கும் உபாசிக்கப்படுவதால் மது வித்யை தேவர்களுக்கும் சம்பவிக்கும் என்றபடி

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: