ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஏழாம் அதிகரணம்-தேவதாதிகரணம் -1-3-7-

விஷயம்
தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனத்தில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம்

1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-

ப்ரஹ்ம உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

கீழே ப்ரஹ்ம உபாசனா அதிகாரம் மநுஷ்யர்களுக்கே என்றதால் தேவர்களுக்கு உண்டோ இல்லையோ
என்ற சங்கை வருமே -அந்த விசாரணையே இங்கு

பூர்வ பக்ஷம்
தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -அவர்களுக்கு சாமர்த்தியம் இல்லை என்பதால் –
ப்ரஹ்ம உபாஸனைக்கு அங்கங்களாக விவேகம் விமோகம் போன்றவை கை கூடாது –
தேவர்களுக்கு சரீரம் உள்ளது என்று எந்த பிரமாணமும் இல்லை -சரீரம் இருந்தால் துன்பம் ஏற்படும்
அத்தை தீர்த்துக் கொள்ள உபாஸிக்க வேண்டும்
எனக்கே சாமர்த்தியம் இல்லாமையாலும் தேவை இல்லாமையாலும் தேவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரம் இல்லை என்று பூர்வபக்ஷம்

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே -சாந்தோக்யம் -தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

சித்தாந்தம்
தத் உபரி அபி பாதராயண சம்பவாத்–
தத் -என்று அந்த ப்ரஹ்ம உபாசனம் –
உபரி -மற்ற தேவர்களுக்கும்
சம்பவதி -உண்டு
இப்படியாக பகவத் பாதாரயணர் எண்ணுகிறார் -அவர்களுக்கு அர்த்தித்தவம் சாமர்த்தியம் இரண்டும் உண்டு என்பதால்
ஆத்யாத்மீகம் போன்ற துக்கங்கள் உண்டே இவர்களுக்கும்
கூர்மையான தெளிவான சரீரங்கள் இந்திரியங்கள் உண்டே இவர்களுக்கும்
சத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –
தத் தேஜ அஸ்ருஜத –சாந்தோக்யம் -6-2-1-என்றும்
அநேந ஜீவேந ஆத்மனா அநு பிரவிஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி -6-3-2- இத்யாதியால்
தேவ மனுஷ்யாதி ஸ்ருஷ்ட்டி பற்றி சுருதி சொல்லும்
தத்தோபயே தேவாஸூரா அநுபுபுதிரே தே ஹோசு–இந்த்ரோ ஹை வை தேவா நாம் அபி ப்ரவவ்ராஜ விரோசன
அஸூரானாம்-தவ் ஹ த்வாத்ரிம்சத் வர்ஷாணி ப்ரஹ்மசர்யமூஷது-தவ் ஹ ப்ரஜாபதி உவாச -8-7-2-/3 —
பிரஜாபதி உபதேசத்தைக் கேட்க வந்தனர் –
இவற்றால் தேவர்களுக்கு சரீரம் இந்திரியங்கள் உண்டு
வஜ்ர ஹஸ்த புரந்தர -இந்திரன் வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டு இருந்தான்
இவற்றால் சரீரம் உண்டு என்றும் தேவர்கள் ஸ்வ பாவம் பதவிகள் இன்பங்கள் செய்கைகள் இப்படி பலவற்றிலும்
வேறுபாடுகள் உண்டு என்பதையும்
அவர்கள் உபாசித்தே பதிவுகள் பெறுகிறார்கள் என்றும் உண்டே –
எனவே அவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்றது ஆயிற்று –

————–

1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–

யாகம் போன்ற கர்மங்களில் விரோதம் ஏற்படுமே என்றால் பல சரீரங்கள் உள்ளதால் விரோதம் இல்லை -என்றபடி

பூர்வ பக்ஷம்
தேவர்களுக்கு சரீரம் உள்ளது என்று கொண்டால் பலரும் பல யாகங்களை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது விரோதம் உண்டாகும்
அக்னிம் அக்ந ஆவாஹ -அக்னியை அழைத்து வா -இந்திர ஆகச்ச ஹரிவ ஆகச்ச -இந்திரனே வா பச்சைக் குதிரையுடன் வா –
கஸ்ய வா ஹ தேவா யஜ்ஜம் ஆகச்சந்தி கஸ்ய வா ந -பஹு நாம் யஜமாநா நாம் யோ வை தேவதா
பூர்வே பரிக்ருஹணாதி ச ஏனா ஸ்வோ பூதே யஜதே -யாருடைய யாகங்களில் தேவர்கள் அடைகிறார்கள்
யாருடைய யாகங்களில் அடைவது இல்லை –
இது போன்ற விரோதம் வரும் என்பர்

சித்தாந்தம்
அநேக பிரதிபத்தேர் தர்சநாத் -சக்தி காரணமாக ஒரே நேரத்தில் பல சரீரங்கள் கொள்ளலாமே
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

————————-

1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-

இந்திரன் முதலான சப்தங்களில் விரோதம் வரும் என்றால் வேத சப்தங்களில் இருந்தே வருவதால் விரோதம் இல்லை என்றவாறு

பூர்வ பக்ஷம்
கடந்த ஸூத்ரத்தைப் போலே விரோத சப்தம் முதலில் கொண்டு -தேவர்கள் சரீரம் கொள்கிறார்கள் என்றும் கொண்டால்
சரீரம் அநித்தியம் என்பதால் -இந்திராதி சப்தங்கள் பயன் அற்றதாகிப் போகுமே-ஆகவே வேதங்களும் அநித்யமாகி விடுமே என்பர்

சித்தாந்தம்
தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-
மாடு பூ போலே இந்திரன் போல்வனவும் ஜாதிப் பெயர்களே –
வேதேந நாம வ்யாகரோத் சதாசதீ பிரஜாபதி -என்றபடி நான்முகன் வேதத்தின் துணை கொண்டே
சத் என்றும் அசத் என்றும் வேறுபடுத்துகிறான்

ததா சா பூ ரிதி வ்யாஹரத்ஸ பூமிக்கு அஸ்ருஜத-ச புவ இதி வ்யாஹரத்ஸ அந்தரிக்ஷம் அஸ்ருஜத-என்று
பூ -பதத்தை- என்று உச்சரித்து பூமியைப் படைத்தான்-புவ -பதத்தை உச்சரித்து அந்தரிக்ஷத்தைப் படைத்தான்
பதத்தை உச்சரித்த பின்பு ரூபம் தன்மை நினைவு கூர்ந்து படைத்தான் என்றவாறு

ஸர்வேஷாம் து ச நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாச்ச
நிர்மமே –மனு -1-21-என்றபடி அந்த அந்த ஜாதிக்கு உரிய தன்மைகளுடன் என்பதையே ஸம்ஸ்தா-பதம் -காட்டும்

நாம ரூபம் ச பூதா நாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்சனம் -தேவ சப்தேப்ய ஏவாதவ்
தேவாதீ நாம் சகாரா ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5-62–

ஆகவே விரோதம் இல்லை என்றதாயிற்று

—————————

1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —

ஆகவே வேதத்தின் நித்யத்தன்மை சம்பவிக்கிறது

மந்த்ர க்ருதோ வ்ருனீதோ–தைத்ரியம் -மந்த்ரங்களை உண்டாக்கியவர்களை வேண்டுகிறான்
வேத வாக்கியம் மூலமாக அந்த காண்டம் ஸூக்தம் மந்த்ரம் ஆகியவற்றை ஏற்படுத்திய ரிஷிகளுடைய
உருவம் சக்தி போன்றவற்றை நான்முகன் நினைவு கூர்கிறான்
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்பய -மந்த்ரங்களை உண்டாக்கிய ரிஷிகளுக்கு நமஸ்காரம்
அதே மந்த்ரங்களை நினைவு கூர்ந்து உண்டாக்கும் சக்தியை அளிக்கிறான் –
இந்த சக்தி கொண்டு தவம் இருந்து அதே மந்த்ரங்களை அறிகிறார்கள் –
எனவே வேதம் நித்யம் -இந்த ரிஷிகள் இந்த மந்த்ரங்களை உண்டாக்கினவர்கள் என்பதில் எந்த விரோதங்களும் இல்லை
விஸ்வாமித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை -இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

பூர்வ பக்ஷம்
நைமித்திக பிரளயத்தில் நான்முகன் இவ்வாறு செய்யலாம் –
ஆனால் பிராகிருத பிரளயத்தின் பொழுது நான்முகனும் அழிகிறானே
பரிணாமம் பூதாதி அஹங்காரம் போன்ற சப்தங்களும் அழியுமே-

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரத்தில்

——————–

1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

பிராகிருத பிரளயத்தின் ஸ்ருஷ்டிக்கப்படும் போது முன்பு உள்ளது போன்று நாம ரூபம் கொண்டவையாய் இருப்பதால் விரோதம் இல்லை –
வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டது –

பஹுஸ்யாம் என்று சங்கல்பித்து -மஹத் தொடங்கி ப்ரஹ்மாண்டம் வரை -ஹிரண்ய கர்பன் -ப்ரஜாபதியையும் -சேர்த்தே ஸ்ருஷ்டிக்கிறான் –
வேதங்களையும் பூர்வ அநு பூர்வி வரிசையில் நான்முகனுக்கு உபதேசம் செய்து ஒவ் ஒன்றிலும் அந்தராத்மாவாக புகுந்து நியமிக்கிறார்
ஆகவே வேதம் பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் – -அபவ்ருஷேயம்-
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும் -ஸ்வேதா –6-18-
மனு ஸ்ம்ருதியிலும்
ஆசீத் இதம் தமோ பூதம் -1-5-என்று தொடங்கி -யோ அபித்யாய சரீராத் ஸ்வாத் சிஷ்ருஷு விவிதா பிரஜா –
அப ஏவ சசார்ஜதவ் தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத் –தத் அண்டம் அபத்வைமம் சஹஸ்ராம்சு ஸமப்ரபம் –
தஸ்மிந் ஐஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹா -1-8-/9-என்றும்
ஸ்ரீ நாரத புராணத்திலும்
தத்ர ஸூப்தஸ்ய தேவஸ்ய நாபவ் பத்மம் ஜாயத-பத்மம் பூந்மஹத் -தஸ்மிந் பதமே மஹா பாகா வேத வேதாங்க பாரகா-ப்ரஹ்ம
உத்பன்ன ச தேநோக்த பிரஜா ஸ்ருஜ மஹா மதே -3-1-2–என்றும்
ஸ்ரீ வராஹ புராணத்திலும்
பரோ நாராயணோ தேவ தஸ்மாத் ஜாத சதுர்முக –90-3-என்றும்
ஆதி சர்கம் அஹம் வஹ்ய–2 5–என்று தொடங்கி
ஸ்ருஷ்ட்வா நாரம் தோயம் அந்த ஸ்திதோஹம் யேந ஸ்யாத்மே நாம நாராயணோதி -கல்பே கல்பே தத்ர சயாமி பூயஸ் ஸூப்தஸ்ய
மே நாபிஜம் ஸ்யாத் யதாப்ஜம் -ஏவம் பூதஸ்ய மே தேவி நாபி பத்மே சதுர்முகே-உத்பன்ன ச மயா ப்ரோக்த
பிரஜா ஸ்ருஜ மஹாமதே -2-12-/13-என்று முடிக்கப்பட்டது
தைத்ரியம் –
சூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே  –
ஆகவே தேவர்களுக்கு அர்த்தித்தவம் மற்றும் சாமர்த்தியம் இரண்டும் உள்ளதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்றதாயிற்று –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: