ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஐந்தாம் அதிகரணம்- -1-3-5-

1-3-13-தஹர உத்தரேப்ய-

தகரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் பரமாத்மாவே என்றதாயிற்று

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -8-1-1-அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று

அன்வேஷ்டவ்யம் -தேடி அறிந்து கொள்ள வேண்டும்
விஜிஜ்ஞாசி தவ்யம்-அறிந்து உபாசனை-எம்பெருமானார் -மற்றவர் அறிந்தால் மோக்ஷம் –
ப்ரஹ்ம வேத -ப்ரஹ்மை ஏக பவதி -இங்கும் வேதம் -அறிந்து உபாஸிக்க வேண்டும்
நமக்குள் ப்ரஹ்மம் இருக்க -ப்ரஹ்மத்துக்குள் அவனது கல்யாண குணங்கள் இருக்கும் –
ஓட்டை மாடமான உடம்பை அவன் இருப்பதாலே ப்ரஹ்ம புரம்–ப்ரஹ்மத்துக்கு இருப்பிடம் – என்கிறோம் –
அவனும் ப்ரஹ்ம புரம் -ப்ரஹ்மமாகிய புரம் -சாமானாதி கரண்யம்
சத்யம் -மாறாமல் இருப்பதே -ஏதத் சத்யம் ப்ரஹ்ம புரம்
உயர்வற உயர் நலம் உடையவன் -தேடி அறிந்து உபாசனம் –

ஹிருதய தாமரையின் நடுவில் உள்ள தகர ஆகாசம்
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசமா -பிரத்யாகாத்மாவா -பரமாத்மாவா -என்ற சங்கை

பூர்வ பக்ஷம் –
பூத ஆகாசமே –
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம்-என்று தேடப்படும் பொருளுக்கு ஆதாரமாக உள்ளது பூத ஆகாசமே –

இதுக்கு சித்தாந்தம்
அதே உபநிஷத்தில் மேலே -தத் உத்தரேப்ய-இதனைத் தொடர்ந்து வரும் வாக்கியங்களின் காரணத்தால் –
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்யகாம சத்ய சங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5-என்பதால் பரம் பொருளே
இயற்கையாகவே இந்த தன்மைகள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் –
மேலும்
அத ய இஹ ஆத்மாநம் அநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச ஸத்யாந் காமாந்
தேஷாம் சர்வேஷு லாேகஷு காமசாேரா பவதி –சாந்தோக்யம் -8-1-6-என்றும்
யம் காமம் காமயதே சோஸ்ய சங்கல்பாத் ஏவ சமுதிஷ்டதி -தேந சம்பந்நோ மஹீயதே -8-2-10- என்றும்
இப்படி அறிபவன் சத்ய சங்கல்பாதி தன்மைகளைப் பெறுகிறான் என்பதால்
மேலும் அதே உபநிஷத்தில் மேலே -யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச–8-1-3- -என்று
என்று – பூத ஆகாசம் போலே இதுவும் பெரியது -என்று இருப்பதால் இது பூத ஆகாசம் ஆக மாட்டாதே –

இதற்கு இரண்டு ஆக்ஷேபங்கள் எழும்-ப்ரஹ்மத்தை பூத ஆகாசத்துடன் ஒப்பிட கூடாதே
சாந்தோக்யம் -ஜியாயாந் ப்ருதிவ்யா ஜியாயாந் அந்தரிஷாத் -சாந்தோக்யம் -3-14-3-அணைத்தலும் பெரியது என்பதால்
இதுக்கு சமாதானம் தஹராகாசம் ஹ்ருதய தாமரை நடுவில் உள்ள இடத்தை மட்டும் சொல்ல வந்தது இல்லை
என்று காட்டவே இந்த உதாரணம்

அடுத்தும் ஒரு ஆஷேபம்
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா-இத்யாதியால் தஹராகாசம் கூறப்படவில்லை
தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ் தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம்-என்பதால் தஹராகாசத்தை விட
வேறுபட்ட பாபங்கள் அற்ற பரமாத்மாவைத் தேட வேண்டும் என்றதாயிற்று –

இதுக்கு சமாதானம் -தஹராகாசமும் அதற்குள்ளும் உள்ள வஸ்துவும் தேடப்பட்ட வேண்டியது என்றதாயிற்று –
உபாசகன் சரீரமே ப்ரஹ்மபுரம் -அனுக்ரஹம் செய்யவே உபாசகனுக்கு அருகில் த்யானம் செய்வதற்காக
இடத்தில் ப்ரஹ்மம் உள்ளது
தஹாராகாசமும் அதற்குள் உள்ள கல்யாண குணக் கூட்டங்களும் உபாசனனுக்கு விஷயம்

உமே அஸ்மின் த்யாவ ப்ருத்வீ அந்தரேவ ஸமாஹிதே உபாவக்நிச்ச வாயுச்ச ஸூர்ய சந்த்ரமசாவுபவ்
வித்யுந் நக்ஷத்ராணி –8-1-3–என்று
அதற்குள் அனைத்து ஜகத்தையும் ஆதாரமாக தாங்கி நிற்பதாகச் சொல்லி
யச்சாஸ் யேஹாஸ்தி யச்ச நாஸ்தி சர்வம் தத் அஸ்மின் ஸமாஹிதம் –என்று
நிரதிசய இன்பம் அளிக்கவல்ல வஸ்து என்றதாயிற்று
இந்தக் காரணத்தால் ஏதத் சத்யத் ப்ரஹ்மபுரம் -8-1-5-என்று சொல்லப்படுகிறது
அஸ்மின் -மூலம் தஹராகாசத்தை சொல்லி
காமா -என்று கல்யாண குணக் கூட்டங்களைச் சொல்லி -ஸத்யஸங்கல்ப -இத்யாதி சொல்லி
அடுத்து யார் இவற்றை அறிகிறார்களோ
அத ய இஹ ஆத்மாநம் அநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச ஸத்யாந் காமாந்
தேஷாம் சர்வேஷு லாேகஷு காமசாேரா பவதி –சாந்தோக்யம் -8-1-6– என்று
இவ்வுலகை விட்டு அவனை அடைந்து வுயிருப்பம் போன்று சஞ்சரிக்கப் பெறுவார்கள்
எனவே தஹராகாசம் பர ப்ரஹ்மமே -ப்ரஹ்மமும் கல்யாண குணங்களும் தேடப்பட்ட வேண்டியவை என்றும் சொன்னதாயிற்று
வ்ருத்தி காரரும்-போதாயனர் -தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேச -என்று
அதற்குள் எது உள்ளதோ அது விரும்பத் தக்கது -என்று தெளிவு படுத்தினார் –

————–

1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –

செல்வதைக் கூறுவதாலும் –
தகுந்த சொல் உள்ளதாலும் –
வேறு இடத்தில் கூறப்படுவதாலும்-
அடையாளங்கள் உள்ளதாலும்
அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும் –தஹராகாசம் பர ப்ரஹ்மமே -பரம் பொருளே

சாந்தோக்யம் -தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2- -என்றும்
தங்கப்புதையல் இருப்பதை அறியாமல் மேலே நடந்தாலும் அறிய மாட்டார்களே —
ஆழ்ந்த உறக்கத்தில் அடிக்கடி ப்ரஹ்ம லோகம் அடைந்தாலும் அறியாமல் -பிரக்ருதியால் மறைக்கப்பட்டு
ஏதம் -இந்த தஹராகாசமே ப்ரஹ்ம லோகம்
ததா ஹி த்ருஷ்டம் -இப்படியே ஸ்ருதிகளில் காணப்படுகிறது
ஏவம் ஏவ கலு சோம்ய இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதி சது சம்பாத்யமாநே –சாந்தோக்யம் -6-9-2-என்று
ஒவ் ஒன்றும் சத் என்பதில் லயிக்கின்றன -ஆனால் லயித்தத்தை அறிவது இல்லை
சத் ஆகம்ய ந விது சதா ஆகச்சமாஹே-என்று சத் இடம் திரும்பி -அத்தையும் அறியாமல் உள்ளனர்
மேலும் -ஏஷ ப்ரஹ்ம லோக சம்ராடிதி-ப்ருஹ -4-3-32- என்று அரசனே இதுவே ப்ரஹ்ம லோகம் -என்றும் உள்ளதே

ப்ரஹ்மத்தினுடைய லோகம் என்று கொள்ளாமல் -ப்ரஹ்மம் ஆகிற லோகம் ப்ரஹ்மலோகம் -ப்ரஹ்மமே அடையப்படும் லோகம் –
ப்ரஹ்ம லோகமே தஹராகாசம் -என்பதையே -லிங்கம் ச என்று அருளிச் செய்தார்
அஹர் அஹர் கச்சன்ய-ஒவ் ஒரு நாளும் ஆழ்ந்த உறக்கத்தில் சென்று என்றும்
அந்தராத்மாவாக உயர்ந்த புருஷார்த்தமான தஹராகாசத்துக்கு சென்று-ஆனால் புரிந்து கொள்ளாமல் என்று –
தங்கப்புதையல் உதாரணம் –
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மன-அந்தரோ யம் ஆத்மா வேத ந யஸ்ய ஆத்மா சரீரம் யா ஆத்மாநம்
அந்தரோ யமயதி–அந்தர்யாமி ப்ராஹ்மணம் -3-7-22-என்றும்
அத்ருஷ்டோ த்ரஷ்ட அஸ்ருத ஸ்ருதோ–3-7-23-என்று
பார்க்கப் படாமல் பார்க்கின்றான் -கேட்கப்படாமல் கேட்க்கின்றான்-என்பதால் -தஹராகாசமே ப்ரஹ்மம் என்றதாயிற்று

இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

————–

1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –

ப்ரஹ்மத்தின் மகிமையால் அனைத்தையும் தாங்கி நிற்கும் மேன்மையானது தஹாராகாசத்தில்
காணப்படுவதால் இது ப்ரஹ்மமே ஆகும் -என்றவாறு

சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய–8-4-1–என்று
ஒன்றுடன் ஓன்று கலக்காமல் தாங்கி நிற்கிறது-உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்று –
தஹராகாசம் என்பதால் ப்ரஹ்மத்தின் மஹிமையை சொன்னவாறு
பரஸ்ய ப்ராஹ்மண மஹிமா –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண ஏஷாம் லோகா நாம சம்பேதாய–4-4-22- –
என்று இவனே அணையாக நிற்கிறான் என்றும் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டன் கார்க்கி –ப்ருஹ -3-8-9-என்றும்
அனைத்தையும் தாங்கி நிற்கும் தன்மை ப்ரஹ்மத்திடமே உள்ளது
அந்த மஹிமை தஹராகாசத்திலும் காணப்படுகிறது -ஆகவே தஹராகாசமே ப்ரஹ்மம் என்றதாயிற்று

————–

1-3-16-பிரசித்தே ச –

இது அனைவரும் அறிந்தது என்பதாலும் –

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால் தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்–2-7-தைத்ர்யம்
இந்த ஆகாசம் -ப்ரஹ்மம் -ஆனந்தமயனாக இல்லை என்றால் யாரால் மூச்சு விட இயலும் -வாழ முடியும் –
அந்யாத்க ப்ராணயாத்-நன்றாக காப்பாற்றுபவர் -இஹ பர அனைத்தையும் அருளுபவர் ப்ரஹ்மமே –
மேலும்
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாதேவ சமுத்பத்யந்தே–சாந்தோக்யம்-1-9-1- -என்று
அனைத்தும் ஆகாசத்தில் இருந்தே உத்பத்தி என்பதால் ஆகாசம் என்பது பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

ஜீவனாக இருக்கலாமோ என்ற சங்கையால் அடுத்த ஸூத்ரம்

———–

1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்

சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
தஹராகாசகம் ஜீவாத்மாவைச் சொல்லக் குறையில்லை என்பர்
ப்ரஹ்ம-தர்ம பூத ஞானத்தால் விபு என்று சொல்லலாமே –
சித்தாந்தம்
ந சம்பவத் -ஜீவாத்மாவுக்கு சம்பவிக்காதே
ஆத்மா சம்பிரசாதன் என்றும் பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

————-

1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –

அடுத்து காணப்படும் வரிகளால் கூறப்படலாம் என்றால் விளங்கப் பெற்ற ஸ்வரூபம் கொண்டவன் அல்லவா என்றவாறு

பூர்வ பக்ஷம்
ய ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக அவிஜிகத்ஸ அபிபாஷா சத்யகாம ஸத்யஸங்கல்ப ச அன்வேஷ்டவ்ய
ச விஜிஜ்ஞாசி தவ்ய -ச சர்வோச்ச லோகான் ஆப்னோதி சர்வோச்ச காமான் ய தம் ஆத்மாநம்
விஜா நாதி –சாந்தோக்யம் -8-7-1-என்று -யார் ஒருவன் இந்த ஆத்மாவை அறிகிறானோ அதன் பலனாக
அனைத்து லோகங்களையும் மற்றும் அனைத்து ஆசைகளையும் அடைகிறான் -என்று
இந்திரன் ப்ரஜாபதி சொற்களை மற்றவர் மூலம் கேட்டு அறிந்தான்

இங்கு எந்த ஆத்மாவைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று கூறப்பட்டது அதை அறிய இந்திரன் பிரஜாபதியிடம் சென்றான்
அவனுக்கு விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் பற்றி உபதேசித்து
பகவன் மர்த்யே வா இதம் சரீரமாத்தம் ம்ருத்யு நா -ததஸ்ய அம்ருதஸ்ய அசரீரஸ்ய ஆத்மன அதிஷ்டானம் -8-12-1-என்று
சரீர அநித்தியம் ஆத்மாவின் நித்யத்வத்தையும் சொல்லி
தொடர்ந்து
ந ஹ வை ச சரீரஸ்ய சதஸ் ப்ரிய அப்ரியோர் அபஹதிரஸ்தி -அசரீரம் வாவ சந்தம் ந ப்ரிய அப்ரியே ஸ்ப்ருசத-8-12-1- என்று
சரீர சம்பந்தத்தால் ஸூக துக்கங்கள் -கர்மங்கள் -இவை விடுபட்டு –
ஏவம் ஏவ ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண
அபி நிஷ்பத்யதே–சாந்யோக்யம் -8-12-3- என்று
ஸம்ப்ரசாதன் எனப்படும் ஜீவாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான்-என்று
ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை உணர்த்தினார்
தொடர்ந்து
ச உத்தம புருஷ ச தத்ர பர்யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண ஸ்த்ரீ பிர்வா யா நைர்வா ஞாநி பிர்வா
நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -8-12-13-என்று பர ப்ரஹ்மமே அடையப்படுபவன் ஆவான் என்று உபதேசம்
ச யதா ப்ரோக்ய ஆசரணே யுக்த ஏவம் ஏவாயம் அஸ்மின் சரீரே ப்ரானோ யுக்த –என்று
வண்டியில் குதிரை பூட்டப்பட்டது போலே சரீரத்தில் பிராணன் பூட்டப்பட்டுள்ளது -என்று ஜீவனுக்கு சரீரத்தால் கர்ம அனுபவம்
அத யத்ர ஏதத் ஆகாசம் அநு விஷண்ணம் சஷுஸ் ச சஷுஷா புருஷா தர்சனாய சஷுரத யோ வேதேதம் ஜிக்ரணீதி ச ஆத்மா
அபிவ்யா ஹராணீதி ச ஆத்மா அபிவ்யாஹாராய வாகத யோ வேதேதம் ஸ்ருணவா நீதி ச ஆத்மா ஸ்ரவணாய ஸ்ரோத்ரமத
யோ வேதேதம் மந்வாநீ தி ச ஆத்மா மநஸ் அஸ்ய தேவம் சஷுஸ் -சாந்தோக்யம் -8-12-4-/5-என்று
கண் முதலானவை இந்திரியங்கள் -ரூபம் முதலானவை அறியப்படும் வஸ்துக்கள் -ஆத்மா அறிபவன் -இவற்றில் வேறுபட்டவன் என்று சொல்லி

ச வா ஏஷ ஏதேந திவ்யேந சஷுஷா மனசா யேதான் காமான் பஸ்யன் ரமயதே ச ஏதே ப்ரஹ்ம லோகே -8-12-5-என்றும் –
தம் வா ஏதம் தேவா ஆத்மாநாம் உபாஸதே -தஸ்மாத் யேஷாம் சர்வே ச லோகா ஆத்தா சர்வே ச காமா -8-12-6-என்றும் இறுதியாக
ச சர்வோச்ச லோகான் ஆப்நோதி சர்வோச்ச காமான் ய தம் ஆத்மநம் விஜாநாதி இதி ஹ பிரஜாபதி உவாச -8-12-6-என்று
ஆத்மாவை அறியும் ஞானி ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -என்று நிகாமிப்பதால் ஜீவாத்மாவும் அபஹத பாப்மாதி குணங்கள்
சித்திக்கும் என்றதன் பின் தஹராகாசம் பற்றி வருவதால் ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷம்

சித்தாந்தம்
ஆவிர்பூத ஸ்வரூப து -என்று விடுதலை பெற்ற பின்பு -ஆனால் தஹராகாசம் ஸ்வரூபம் மறைக்கப்படாமல் –
அனைத்துக்கும் ஆதாரமாக -நியமிப்பவனாக –அணையாக இருக்கும் தன்மை -ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
சத்யம் -சத் -சேதனம் -தி -அசேதனம் -யம்-நியமித்தல் -காரணப் பெயர் ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
முக்தனுக்கும் சம்பவிக்காது என்பதை -ஜகத் வியாபார வர்ஜம் -4-4-17-என்பதில் விரித்து சொல்லப்படுகிறது

இதுக்கு பூர்வ பக்ஷம்
அத ய ஏஷ ஸம்ப்ரஸாத –சாந்தோக்யம் -8-3-4-என்று ஜீவாத்மாவை ஸம்ப்ரசாதன் என்று கூறப்படுகிறதே எதனால் என்பர்

இதற்கான சமாதானம் அடுத்த ஸூத்ரம்

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –
ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல் இயற்கையாகவே உள்ளன –
எனவா தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

—————-

1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –

ஜீவனைக் குறித்து உரைப்பது வேறு ஒரு பயனுக்காக என்றபடி

முக்தனுக்கு ஸ்வரூப ஆவிர்பாவம் பற்றி சொல்வது தகர வித்யை குறித்து ஞானம் பெற பயன்படும் என்பதாலே
இத்தைக் கருதியே -சர்வோச்ச லோகான் ஆப்நோதி சர்வோச்ச காமான் -8-12-6-என்றும்
ச தத்ர பர்யேதி ஐஷத் க்ரீடன் -8-12-3-என்ற பிரஜாபதி வாக்கியங்கள் புகழ்ந்து சொல்கிறது –
இதுவே தகர வித்யையின் பலன் என்பதால்

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

————-

1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –

பூர்வ பக்ஷம்
தஹர அஸ்மின் -8-1-1-வாக்கியத்தில் சிறிய அளவு கொண்டதாகக் கூறப்பட்டது -எனவே ஜாவாத்மாவுக்கே பொருந்தும்
மிக பெரிய பர ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாது

சித்தாந்தம்
நிஸாய் யத்வாத் ஏவம் -1-2-7 ஸூத்ரம்–(இதயத்தில் உள்ளான்) சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-
உபாசிப்பதற்கு மட்டுமே என்பதில் விளக்கப்பட்டுள்ளது
ஸ்வாபாவிக கல்யாண குணங்கள் ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
கிரந்தி த்வேவைநம் விச்சாத யந்தி -8-10-2- கர்மம் காரணமாக உண்டான
சரீரம் கொண்ட ஜீவாத்மா தஹர ஆகாசமாக இருக்க முடியாது

————–

1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –

பரமாத்மாவைப் போன்றே ஜீவாத்மா உள்ளதாலும் -தஹராகாசகம் பரமாத்மாவே -என்றவாறு

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -3-1-3 -என்பதால்-
ஒற்றுமையைக் குறித்தே பிரஜாபதி வாக்கியம் -தஹராகாசமாகிற ப்ரஹ்மத்தைப் போல என்றபடி
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

————–

1-3-22- அபி ஸ்மர்யதே-

ஸ்ம்ருதியிலும் இது போன்று கூறப்பட்டுள்ளதே -என்றபடி

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2–என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

சங்கர பாஷ்யத்தில் இத்தையும் முந்திய ஸூத்ரத்தையும் சேர்த்து தனியாக அநு க்ருத்ய அதிகரணம் ஆக்கி
முண்டக -தமேவ பாந்தம் அநு பாதி சர்வே தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி -2-2-13-என்று
அவன் ஒளிர்வதால் மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன என்பர் –
ஆனால் -அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த்த -1-2-22-என்றும்
த்யுப்வாத்யாயதநம் ஸ்வ சப்தாத்-1-3-1- என்று தொடங்கும் ஸூத்ரங்கள் கொண்ட
அத்ருச்யத்வாதி குணக அதிகாரணம் -த்யுப்யாத்யதிகரணம்-இவற்றில் பர ப்ரஹ்மத்தைக் குறித்து இந்த விஷயம் விளக்கப்பட்டது
மேலும் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் -1-1-25- போன்ற ஸூத்ரங்களில் ப்ரஹ்மம் பா ரூபம் தேஜஸ் நிரம்பியது என்று கூறப்பட்டது
இவ்விதம் தனியாக அதிகரணத்துக்கு எந்த பூர்வ பஷமும் எழ வில்லை –
இந்த ஸூத்ரத்திலும் அது போன்ற முரணான சொற்கள் ஏதும் இல்லை –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: