ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஆறாம் அதிகரணம்-பிரமிதாதிகரணம் -1-3-6-

விஷயம் –
இருதயத்தில் கட்டை விரல் பருமன் கொண்டவனாகக் கூறப்படுபவன்
சர்வேஸ்வரனான பரமாத்மாவே என்று நிரூபிக்கப்படுகிறது

1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–

கடவல்லியில்
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி-ஈஸோநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -ஏதத்வை தத் -4-12-என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக -ஈஸாநோ பூத பவ்யஸ்ய ச ஏவாத்ய ச உ ச்வ –4-13- என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா சதா ஜனாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்டாய தம் ஸ்வாத் சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்ஜாதி வேஷீகாம் த்யைர்யேண தம் வித்யாச் சுக்ரம் அம்ருதம் –6-17-என்றும்
அவனே அடையப்பட வேண்டியவன்-அனைவருடைய ஹ்ருதயத்தில் உள்ளான் –
அவனை உபாசகன் முஞ்சை என்னும் புல்லில் இருந்து ஈர்க்கைக் பிரிப்பது போலே பிரித்து அறிய வேண்டும்
என்றும் கூறப்பட்டுள்ளது

சங்கை -இங்கு கூறப்படுபவன் பிரத்யகாத்மா -(ஜீவாத்மாவா )-பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
பிரத்யகாத்மாவே ஆவான் -ஜீவாத்மா கட்டை விரல் அளவே உள்ளான் என்று சுருதி வேறு இடத்தில் கூறுவதால்
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்று பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம்
என்பதால் அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
கடோ உபநிஷத்தில் -ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை
பரம் பொருளுக்கே உண்டு -எனவே அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-
பிராண அதிப சஞ்சரதி ஸ்வகர்ம அபி அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூபா சங்கல்பம் அஹங்காரம் அந்வி தோ ய -5-7-என்று
ஜீவன் கர்மங்களுக்கு ஏற்ப சஞ்சரிக்கிறான் -கட்டை விரல் அளவே உள்ளான் -சங்கல்பம் அஹங்காரம் கூடியவனாக உள்ளான்
சூர்யன் போலே பிரகாசிக்கிறான் -என்றது
மேலும் பரமாத்மாவானவன் கட்டை விரல் அளவு உள்ளதாக எந்த சுருதியில் கூறப்பட வில்லை
ஜீவன் இந்திரியங்களை நியமிப்பதால் ஈசன் என்னலாம்

சித்தாந்தம்
ஈஸாநோ பூத பவ்யஸ்ய -இறந்த காலம் எதிர் காலம் நியமிப்பவன் கர்மவசப்பட்ட ஜீவாத்மாவாக முடியாது
ஆகவே பரமாத்மாவே தான்

பூர்வ பக்ஷம்
பரமாத்மாவைக் கட்டை விரல் அளவாகக் கூறுவது எப்படி

அடுத்த ஸூத்ரம் இத்தை விளக்கும்

————–

1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

மனிதனுக்கே அதிகாரம் உள்ளதால் -அந்த ஹ்ருதயத்துடன் தொடர்பு உள்ளதால் ஆகும் என்றபடி

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –
ஹிருதயம் கட்டைவிரல் அளவு இருப்பதால் அதற்கு ஏற்ற படி பரமாத்மாவையும் சொன்னபடி
ஜீவாத்மாவும் ஹ்ருதயத்தில் உள்ளதால் அவனும் கட்டை விரல் அளவு என்னலாம்
சுருதி உண்மையில் அரிசியின் நுனியைக் காட்டிலும் நுண்ணியவன் என்கிறது
மானிடர்களுக்கு மட்டுமே உபாஸிக்க அதிகாரம் -குதிரை பாம்பு போன்றவற்றுக்கு ஹ்ருதயம் கட்டை விரல் அளவு இல்லை
இவற்றை பற்றி மேலும் விவரங்கள் -1-3-40-ஸூத்ர விளக்கத்தில் உள்ளன

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: