ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -நாலாம் அதிகரணம்-ஈஷதி கர்மாதிகரணம் -1-3-4-

விஷயம்
ஞானிகளால் காணப்படுபவனாக ப்ரஸ்ன உபநிஷத்தில் கூறப்படும் புருஷன் பரமாத்மாவே –

1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

காணப்படுவதாக கூறப்படுபவன் பரமாத்மாவே -இவ்வாறு கூறப்படுவதால் —

அதர்வண வேதத்தைச் சேர்ந்த சிபி என்பாரின் புத்திரர் சத்யகாமன் என்பவன்
ஸூகேசர் -கார்க்க்யர் -கௌசல்யர் -பார்க்கவர் -கபந்தீ -ஆகிய ஐந்து முனிவர்களுடன்
பிப்பலாதர் என்கிற ரிஷியை காண வந்து கேட்ட கேள்வி

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று -ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று
ப்ரணவத்தைக் கொண்டு பரம புருஷனைத் த்யானம் செய்பவன் -பாம்பு சட்டையை உரிப்பது போலே பாபங்கள் நீங்கப்பெற்று
சாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான் –
இந்திரியங்களை விட உயர்ந்த ஜீவாத்மாக்களை விட உயர்ந்த இருதயத்தில் உள்ள புருஷோத்தமனைக் காண்கிறான்
இங்குள்ள த்யாயதீ-த்யானம் செய்தல் – ஈஷதீ-காணுதல் இரண்டுக்கும் ஒரே விஷயம் -த்யானம் செய்வதால் காண்கிறான் என்றவாறு

மேலும் யதா க்ரதுரஸ்மிந் லோகே புருஷ –சாந்தோக்யம் -3-14-1-எவ்விதம் தியானிக்கிறானோ -என்பதற்கு ஏற்ப
த்யானிக்கப்பட்ட விஷயமே அடையப்படுகிறது
இந்த தியானித்தல் காணுதல் இரண்டுக்கும் இலக்காக பரம புருஷனே பொருந்தும்

இங்கு சங்கை
சமஷ்டி ஷேத்ரஞ்ஞன் -ஜீவாத்மாக்கள் தொகுப்பான நான்முகனா –புருஷோத்தமனா

புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று என்பர் பூர்வபஷத்தில்
ஆனால் மேலே -யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச -என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேதாந்த -என்று நித்ய சூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

பூர்வ பக்ஷம்
நான்முகன் ஆவான் -ப்ரஸ்ன உபநிஷத் -5-1-ச யோ ஹ வை தத் பகவத் மனுஷ்யேஷு பிரயாணந்தம் ஓம்காரம்
அபித்யாயீத கதம் ச தேந லோகம் ஜயதி–என்று
ஓங்காரம் கொண்டு இடைவிடாமல் த்யானம் செய்கிறவர்கள் எங்கே போகிறார்கள் -என்று தொடங்கி
ஒரு மாத்திரை கொண்டதாக தியானித்தால்-அகாரம் அக்ஷரம் மட்டும் த்யானம் – மனுஷ்ய லோகமும் –
இரண்டு மாத்திரைகளாக தியானித்தால் -அகார உகாரங்கள் இரண்டையும் த்யானம் -அந்தரிஷித லோகமும் –
மூன்று மாத்திரைகளாக தியானித்தால் ப்ரஹ்ம லோகமும் என்று சொல்லி
ஏதஸ்மாத் ஜீவகநாத் பராத்பரம் -உயர்ந்த ஜீவாத்மாக்களை விட உயர்ந்த -என்பதால்-
சமஷ்டி புருஷனான நான்முகனைக் குறிக்கும் -என்பர் –

சித்தாந்தம் –
ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச -என்பதாகும்
ஈஷதி கர்ம ச -காணப்படும் புருஷன் பரமாத்மாவே –காண்பதை விளக்கும்
தம் ஓம் காரணே ஏவ ஆயதநேந அந்வேதி வித்வான் யத் தத் சாந்தம் அஜரம் அம்ருத்யும் அபயம் பரம் ச —5-7–என்று
அந்த உபாசகன் ஓம் அஷரத்துடன் சாந்தமான வயோதிகம் மரணம் பயம் அற்ற தன்மைகள் பரமாத்மாவுக்கே பொருந்தும்
ஏதத் அம்ருதம் அபாயம் ஏதத் ப்ரஹ்ம -சாந்தோக்யம் 4-15-1-போன்ற ஸ்ருதிகளில் காணலாம்
மேலும் -ஏதஸ்மாத் ஜீவக நாத் பராத்பரம் –ப்ரஸ்ன —5-5-என்பதால் பரமாத்மாவையே சொன்னதாகும்–
நான்முகனும் ஜீவ வர்க்கத்தால் ஒருவனே -இத்தை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –ஸ்வேதா -6-18- என்று முதலில் நான்முகனைப் படைக்கிறான் என்கிறதே –
ப்ரஹ்ம லோகம் அழியக் கூடியதே -ஆகவே யத் தத் சாந்தம் அஜரம் அம்ருத்யும் அபயம் பரம் ச —5-7 -இதற்கு பொருந்தாதே
யத் தத் கவயோ வேதயந்தே-5-7-என்று எத்தனை அறிந்தவர்கள் அறிகிறார்களோ என்பது நித்ய ஸூரிகளைச் சொல்லி –
அவர்கள் காணும் ஸ்ரீ பரம பதத்தை சொன்னபடி
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -5-10-என்பதால் அறியலாம்

ஆகவே
ஏதத் வை சத்யகாம பரம் ச அபரம் ச ப்ரஹ்ம யத் ஓம்கார தஸ்மாத் வித்வான் ஏதேந ஏவ ஆயதநேந ஏகதரமந்வேதி –ப்ரஸ்ன -5-2- என்று
பரம் அபரம்-உயர்ந்த தாழ்ந்த -என்றது காரியப்பொருளான தாழ்ந்த ப்ரஹ்மம் –
இஹ லோக ஐஸ்வர்யம் ஒரு மாத்திரை தியானத்தால் என்றும்
உயர்ந்த ப்ரஹ்மம் -ஸ்வர்க்காதி லோகம் இரண்டு மாத்திரை த்யான பலமாகவும்
மூன்று மாத்திரை த்யான பலமாக பர ப்ரஹ்மத்தையே அடைகிறான் என்றது ஆயிற்று

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: