ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -மூன்றாம் அதிகரணம் -அக்ஷராதிகரணம் –1-3-3-

விஷயம்
மூலப்பிரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அக்ஷரம் என்பது பரமாத்மாவே

1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-

மூல ப்ரக்ருதியைத் தாங்கி நிற்பதால் அக்ஷரம் என்பது பரமாத்மாவே

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8–)என்று
வசக்னு மகரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல
நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல
எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –

இங்கு சங்கை -அக்ஷரம் -பிரதானமா -ஜீவாத்மாவா -பரமாத்மாவா –
பூர்வ பக்ஷம்
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று
அக்ஷரத்தைக் காட்டிலும் மேலான நான்முகனைக் காட்டிலும் மேலானவன் என்று அக்ஷரம் பிரதானமாக சொல்லி
மேலும் ஸ்தூலமாக இல்லாது இருக்கும் தன்மைகள் பிரக்ருதிக்குச் சேரும்
ஆனால்
யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-எதன் மூலம் அக்ஷரம் அறியப் பட்டதாகிறதோ -என்பதால்
அக்ஷரம் பரமாத்மாவை குறிக்கும் என்று சொல்வீர்களானால்
அக்ஷரம் என்ற பதப்பொருள் சுருதி மூலமும் பிரமாணங்கள் மூலமும் அறியப்படும் பொருளாகிய பிரதானமே-என்பர் பூர்வ பஷி
மேலும் இங்குள்ள பிரகரணத்தில் முதலில் -ப்ருஹத் -3-8-6-யத் ஊர்த்வம் கார்க்கி திவோய தர்வாக் ப்ருதிவ்யா -என்று தொடங்கி –
அனைத்தும் அவற்றின் காரண பூதமாக உள்ள ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாகக் கொண்டுள்ளன -என்று சொல்லி தொடர்ந்து –
கஸ்மின் நு கல்வாகச ஒதாச்ச ப்ரோதச்ச –5-8-7-என்று இந்த ஆகாசம் எதில் ஓன்று பட்டு நிற்கிறது -என்று கேட்டு அதுக்கு விடையாக
ஏதஸ்மிந் து கல்வஷரே கார்க்கி ஆகாச ஒதாச்ச ப்ரோதச்ச –ப்ருஹத் -3-8-7-என்று இந்த அஷரத்தால் ஆகாசம் ஓன்று பட்டு இருக்கிறது
ஆகவே அனைத்துக்கும் ஆதாரமாகவும் சுருதி அல்லாமல் மற்ற பிரமாணங்களால் அறியப்படும் அக்ஷரம் பிரதானமே ஆகும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
திவோயதர்வாக் ப்ருதிவ்யா யதந்த்ரா த்யாவா ப்ருதிவீ இமே யத்பூதஞ்ச பவச்ச பவிஷ்யச் சேத்யாசஷதே-என்று கேட்டு
ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று
அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-
சித்தாந்தம்
அக்ஷரம் அம்பராந்த த்ருதே -அக்ஷரம் என்பது பர ப்ரஹ்மமே யாகும்
அம்பரம் ஆகாசம் -அதன் முடிவானதான அக்கரை-இது அவ்யாக்ருதம் -இந்த அக்ஷரம் என்பதே அவற்றின் ஆதாரம்
கஸ்மின் நு கல்வாகச ஒதாச்ச ப்ரோதச்ச –5-8-7-என்பதில் உள்ள ஆகாசம் வாயுவுடன் கூடிய ஆகாயத்தைக் குறிக்காமல்
அத்தைத் தாங்கி நிற்கும் அதன் முடிவாக உள்ள அவ்யாக்ருதம் -மூல பிரக்ருதியையே குறிக்கும்
இந்த அவ்யாக்ருதம் என்பதற்கும் ஆதாரமாக உள்ளதான அக்ஷரம் என்பது இங்கு அவ்யாக்ருதத்தைக் குறிப்பதாகக் கூற முடியாதே

இங்கு ஒரு கேள்வி எழலாம் -இங்கு வாயுவுடன் சேர்ந்த ஆகாசம் இல்லை என்று எவ்வாறு கூறலாம்
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச பவிஷ்யச்
சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4 –என்று அனைத்தும் முக்காலத்திலும் உள்ள விகார பொருள்கள்
ஆகாசத்தை அண்டி நிற்கின்றன என்பதால் -இது வாயுவுடன் கூடிய ஆகாசமாக இருக்க முடியாதே
ஆகவே இது காரண நிலையில் உள்ள ஸூஷ்ம பொருளான பிரதானமே என்றதாயிற்று
எனவே தான் -கஸ்மின் து கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ருஹத் -5-8-7– என்று
இந்த ஆகாசம் எதில் ஒன்றுபட்டுள்ளது என்று அந்த ஸூஷ்ம வஸ்து எது என்று கேட்கப்பட்டது –
இத்தகைய ஸூஷ்ம வஸ்துவின் ஆதாரமாக கூறப்படும் அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாதே

பூர்வ பக்ஷம்
சுருதி போன்றவை அல்லாமல் மற்ற பிரமாணங்கள் மூலம் அறிவது போன்றவை இருந்தால்அந்த பொருளே கொள்ள வேண்டுமே –
அக்ஷரம் -அழியாத பொருள் -எழுத்து போன்ற அர்த்தங்களும் உண்டே
இவ்வாறு கொண்டால் அக்ஷரம் என்பது ஜீவாத்மா வாக இருக்கலாமே –
அசேதனங்களுக்கு ஆதாரம் -ஸ்தூலமாக இல்லாமை -போன்ற தன்மைகள் பொருந்தும்
மேலும் பிரத்யகாத்மாவை அக்ஷரம் என்று -அவ்யக்தம் அஷரே லீயதே –ஸூபால –2-என்றும்
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் –ஸூபால -7-என்றும்
ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தே அக்ஷர உச்யதே –ஸ்ரீ கீதை -15-16- என்றவைகளும் உண்டே

—————————

1-3-10-சா ச பிரசாச நாத் –

அவ்யக்தத்தைத் தங்குவது சக்தியால் என்பதால் -என்றவாறு

அஷரம் சூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால் உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் -ப்ருஹத் ஆரண்யாகாவில்-

அஷரச்ய பிரசாச நே கார்க்கி சூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
சூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே-

சித்தாந்தம் –
ஆகாயத்தின் எல்லை வரைத் தாங்கி நிற்பது அக்ஷரத்தின் கட்டளையால் -நியமனத்தாலே தான்
ப்ருஹ-3-8-9-
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்த்ர மசவ் வித்ருதவ் திஷ்டத-
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி த்யாவா ப்ருதிவ்யவ் வித்ருதே திஷ்டத –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி நிமேஷா முஹுர்த்தோ அஹோராத்ராண் யர்த்தமாசா மாசா
ருதஷஸ் ஸம்வத்ஸரா இதி வித்ருதாஸ் திஷ்டந்தி

அக்ஷரத்தின் கட்டளையால் -சூர்ய சந்தர ஸ்வர்க்க பூமி -நிமேஷம் முஹூர்த்தம் தொடங்கி வருஷம் போன்றவை நிலை பெறுகின்றன –
பிரசானநம் -உயர்ந்த கட்டளை நியமனம் -பிரத்யகாத்மாக்கு -ஜீவாத்மாக்கு பந்த தசையில் இது சம்பவிக்காது –
எனவே அக்ஷரம் என்றது புருஷோத்தமனே என்பது சித்தாந்தம் –

————

1-3-11-அந்ய பாவயா வ்ருத்தே ச –

வேறு தன்மை கொண்டவை தள்ளப்பட்டதாலும் –

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க -தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால் அஷரம் பரம் பொருளே –

சித்தாந்தம் –
ப்ருஹ-3-8-11–
தத்வா ஏதத் அக்ஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ருஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு அமதம் மந்த்ரு- அவிஞ்ஞாதம் விஞ்ஞாத்ரு
நாந்யததஸ் அஸ்தி த்ரஷ்ட்ரு நாந்யத் அத அஸ்தி ஸ்ரோத்ரு நாந்யத் அத அஸ்தி மந்த்ரு நாந்யத் அத அஸ்தி விஞ்ஞாத்ரு
ஏதஸ்மிந்நு கல்வஷரே கார்க்கி ஆகாச ஒதச்ச ப்ரோதச்ச இதி கார்க்கி —

இந்த அக்ஷரம்
வேறு ஒன்றால் காண முடியாதபடியாயும் தான் காண்பதாகவும்
வேறு ஒன்றால் கேட்க முடியாத படியாயும் தான் கேட்ப தாகவும்
வேறு ஒன்றால் எண்ண முடியாத படியாகவும் தான் எண்ணும்படியாயும்
வேறு ஒன்றால் அறிய முடியாதபடியாயும் தான் அறியும்படியாயும் உள்ளது
இதனைக்காட்டிலும் காண்பவனோ கேட்பவனோ எண்ணுபவனோ அறிபவனோ இல்லையே
ஆகவே அசேதனமான பிரதானமோ பிரத்யாகாத்மாவோ அக்ஷரம் இல்லை என்றதாயிற்று –
பரம புருஷனே அக்ஷரம் எனப்படுபவன் என்றதாயிற்று –

அந்ய பாவ வ்யாவ்ருத்தி -மற்றவற்றின் இருப்பு மறுக்கப்படுகிறது –
ப்ருஹ -3-8-9-
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ததோ மனுஷ்யா ப்ரஸம்சந்தி யஜமாநம் தேவா தர்வீம் பிதர அந்வாயத்தா -என்று
இந்த அக்ஷரத்தின் கட்டளையால் மநுஷ்யர்கள் தங்களுக்கு தானம் அளிப்பவர்களை புகழ்கிறார்கள் –
யாகம் செய்யும் யஜமானர்களைத் தேவர்கள் கொண்டாடுகிறார்கள்
பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தர்வீ என்னும் ஹவிர்பாகத்தை கொண்டாடுகிறார்கள்
ஆகவே தானம் யாகம் ஹோமம் -இத்யாதி கர்மங்கள் அனைத்தும் இவனது ஆணைப்படியே-என்பதால் அக்ஷரம் என்று பர ப்ரஹ்மமே –

ப்ருஹ -3-8-10-
யோவா ஏதத் அக்ஷரம் கார்க்கி அவிதித்வா அஸ்மிந் லோகே ஜுஹோதி யஜதே தபஸ் தப்யதே பஹுநி வர்ஷ சஹஸ்ராணி
அந்தவ தேவாஸ்ய தத் பவதி யோ வா ஏதத் அக்ஷரம் கார்க்கி அவிதித்வா அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச க்ருபயா
அத ஏவ அக்ஷரம் கார்க்கி விதித்வா அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச ப்ராஹ்மண -என்று
ஆயிரம் வருடங்கள் ஆஹுதி கொடுத்தும் யாகம் செய்தும் தவம் செய்து வந்தாலும் இந்த அக்ஷரம் அறியாமல் பலன் இழந்து போவதும் –
உலகை விட்டு சென்றாலும் துக்கம் அடைந்தும் –
யார் ஒருவன் அக்ஷரம் அறிந்து உலகை விட்டுப் போகிறானோ அவன் ப்ரஹ்மத்தையே அடைகிறான் என்பதால்
அக்ஷரம் என்றது பர ப்ரஹ்மமே ஆகும் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: