விஷயம் –
சாந்தோக்யம் -7-24-1-பூமா பதம் பரமாத்மாவையே குறிக்கும்
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் அதி உபதேசாத் –
பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் -7-24-1-யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா
அத யத்ர நாந்யத் பச்யத் அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரியதாகும்
எதை அறியும் போது மற்று ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அதுவே சிறியதாகும்
பூமா -எங்கும் பரவி உள்ள விபு -விபுல-என்று மிகவும் பரவி உள்ள மிகப் பெரியது என்றவாறு
இந்த பிரகரணத்தின் தொடக்கத்தில் – 7-1-3-தரதி சோகம் ஆத்மவித் -என்று
ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான்-என்று தொடங்கி
பூமா என்பதைக் குறித்த ஞானத்தின் உணர்த்தி -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் –
இவை அனைத்தும் ஆத்மா மட்டுமே -என்று அதே ஆத்மா பதத்துடன் முடிக்கிறது –
எனவே இந்த ஆத்மா சப்தம் ஜீவாத்மாவா பரமாத்மாவா என்ற சங்கை வருமே
பூர்வ பக்ஷம்
ஸ்ருதம் ஹிந் ஏவம் ஏவ பகவத் த்ருச்சேப்ய–தரதி சோகம் ஆத்மவித் -7-1-3-என்று
ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான் என்று உங்களைப் போன்ற அறிஞர்கள் மூலமாக நான் கேள்விப்பட்டேன் -என்பதால்
ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ஸநத் குமாரரிடம் ஆத்மாவைக் குறித்து அறிய வந்தார் என்று அறியலாம்
நாமம் -பெயர் தொடங்கி–வாக்கு – மநஸ் -பிராணன் வரை உபாசிக்கப் பட வேண்டுமவற்றைச் சொல்லி
அஸ்தி பகவோ நாம்நோ பூய–7-1-5-
அஸ்தி பகவோ வாசோ பூய–7-2-2–பல கேள்விகளும் அவற்றுக்குப் பதிலாக
வாக் வாவ நாம்நோ பூயஸீ -7-2-1-
மநோ வாவ வாசோ பூய -7-3-1–என்ற பத்திகள் உண்டு
ஆனால் இங்கு பிராணன் பற்றி கேள்விகளோ பதில்களோ இல்லை என்பதால்
இங்கு பிராணனை அண்டி உள்ள ஜீவாத்மாவையே குறிக்கும் -வாயு விசேஷத்தை அல்ல என்றதாயிற்று
ப்ரானோ ஹ பிதா ப்ரானோ ஹ மாதா -7-15-1–போன்றவற்றால் பிராணன் சேதன வஸ்துவையே குறிக்கும் என்றதாயிற்று
ஆகவே -1-1-30–ஸூத்ரத்தில் கூறப்பட்ட -கௌஷீதகீ உபநிஷத்தில் -3-8-நாபி -ஆரவட்டத்தில் கோக்கப்பட்ட கம்பிகள்
உதாரணத்தில் கூறப்பட்ட ப்ராணன் பர ப்ரஹ்மமே என்று கொள்ளுதல் கூடாது
நாபி சக்கரம் உதாரணங்கள் ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
அசேதனங்கள் சேதனங்களைக் காட்டிலும் வேறானவை -அவை இருப்புக்கு சேதனங்களையே நம்பி உள்ளன –
அவை சேதனர்கள் அனுபவிக்கவே உள்ளன
இந்த சேதனனே இங்கு பிராணன் சப்தத்தால் சொல்லப்படுபவர் இப்படியாக பிராணனை அறிந்தவன் —
தம் ஏவ ஏஷ து வா அதிவததி –7-16-1-தான் உபாசிக்கும் வஸ்து அனைத்தையும் விட உயர்ந்தது என்று கூறுவான் என்று கூறப்பட்டது –
ஆக பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் ஸ்ரீ நாரத முனிவர் ஸ்ரீ சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க
வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி
ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி -உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி-7-16-1- என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான் என்றும்
யதா வை விஜாநாத்யத சத்யம் வததி -7-17-1–அனைத்தையும் அறிந்த பின் சத்யத்தைப் பேசுகிறான்
இத்தால் ப்ராணன் குறித்த ஞானத்துக்கு அங்கம் சத்யம் உரைத்தல் என்றதாயிற்று –
இதனைத் தொடர்ந்து மனனம் ஸ்ரத்தை உபாசனம் யத்னம் போன்றவையே உபாயம் ஆகும் என்று கூறப்படும் –
தொடர்ந்து -பூமா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்ய -என்று பூமா என்பதை அறிவதில் மட்டுமே ஆசை என்று
அந்த ஸூகமே பெரியது என்றதாயிற்று
ஆகவே பூமா என்றது பிரத்யகாத்மாவே -ஜீவாத்மாவே -என்றதாயிற்று
மேலும்
அஹம் ஏவ அதஸ்தந் அஹம் உபரிஷ்டாத் –என்று தொடங்கி -அஹம் ஏவ இதம் சர்வம் -7-25-1-என்று
அனைத்தும் நானே என்று ப்ரத்யத் காத்மாவின் வைபவம் கூறப்பட்டது
இப்படியாக பூமா என்று கூறப்பட்டவன் பிரத்யகாத்மா என்றான பின்னர் அந்த பிரகரணத்தில் வரும்
மற்ற அனைத்து வரிகளும் இதனை ஒட்டியே இருக்க வேணும் என்றதாயிற்று
ஆகவே-சம்ப்ரசாதா என்றது ஜீவனை யா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம்ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்
சித்தாந்தம் –
இப்படி கூறினால் -பூமா என்று -1-3-7-என்பது ப்ரஹ்மமே –காரணம்-ஸம்ப்ரஸாத -என்ற
ஜீவனைக் காட்டிலும் உயர்ந்தவனாக உபதேசிக்கப்பட்டுள்ளதால் –
ஸம்ப்ரஸாதம் -தூய்மையானது என்றும் -ஸூஷூப்தி -ஆழ்ந்த உறக்கம்
ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாத் சரீராத் சமுத்ராய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-8-3-4-என்பதால்
ஸம்ப்ரசாதன் ஆத்மா என்கிறது
இங்கு கூறப்படுவது என்ன வென்றால் பூமா என்றும் சத்யம் கூறப்படும் பதத்தால்
பர ப்ரஹ்மமே சொல்லிற்று ஆயிற்று –
நாமம் என்று தொடங்கி வரிசையாகக் கூறப்பட்டு ஜீவனைக் காட்டிலும் பெரியதாக வேறுபட்டதாக அறியப்படுபவன்
ப்ராணன் என்னும் சத்யம் என்னும் பாதங்களால் கூறப்படும் பரமாத்மாவே -பூமந் -மிகப்பெரியவன் என்றபடி
ஆனால் சத்யம் பிராணனை விட பூமா என்பான் என் என்னில்
ச வா ஏஷ ஏவம் பஸ்யன்நேவம் மந்வாந ஏவம் விஜாந நந்தி வாதி பவதி -7-15-4–என்று
மேலே காட்டப்பட்ட அதே புருஷன் இவ்விதமாகப் பார்த்து -தனக்குள் ஆலோசிப்பவனாக –
இப்படியாக அறிந்து கொண்டு அவனுடைய உபாஸ்ய பொருள்கள் அனைத்திலும் மிகப் பெரியது –
பிராணனை அறிபவன் உயர்ந்த பொருளைக் குறித்து உரைப்பதாக பிகூறி தொடர்ந்து
ஏஷ து வா அதி வததி ய சத்யே நாதி வததி சத்யம் -7-16-1-என்று உயர்ந்த பொருளில் நிலை நிற்பவன்
தனது உபாஸ்ய பொருள் மிகவும் உயர்ந்தது என்று கூறுகிறான் என்று உரைக்கப்பட்டது –
இங்குள்ள து என்ற பதம் மூலம் சத்யம் என்பதைக் குறித்துக் கூறுபவன் முன்பு பெரியத்தைக் குறித்து
கூறுபவனைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பதை உணர்த்தி
ஏஷ து வா அதி வததி -7-16-1-என்பதில் பிராணன் பெரியது என்று கூறுபவன் பற்றி ஏதும் கூறப்பட வில்லை –
ஆகவே முன்பு பெரியதாகக் கூறப் பட்டதின் காரணமாக உள்ள பிராணனைக் காட்டிலும்
இப்போது பெரியதாகக் கூறப் படுவதற்குக் காரணமாக உள்ள சத்யம் என்பது உயர்ந்தது என்றதாயிற்று
இதற்கு பூர்வ பக்ஷம்
பிராணனை மேலாக உபாசிக்கும் ஒருவனுக்கு -சத்யம் பேசுதல் என்ற உபாஸனைக்கு ஒரு அங்கமாக உள்ளதால் தான்
அது உபதேசிக்கப் பட்டது -ஆகவே இங்குள்ள பிரகாரணத்தில் ஒரு இடைவெளியும் இல்லை
இதுக்கு சித்தாந்தம்
ஏஷ து அதி வததி -7-16-1என்பதில் உள்ள து -ஆனால் -என்பதன் மூலம் -பிராண உபாசகனைக் காட்டிலும் வேறான ஒருவன்
அவன் இடம் சத்ய வதனம் -சத்யம் பேசுதல் ஒரு அங்கமாகவே உள்ளது
அடுத்து ஏஷ து வா அக்னி ஹோத்ரீ ய சத்யம் வததி -என்று அக்னிஹோத்ரியாக இருந்து யார் சத்யம் பேசுகிறானோ
என்பதன் மூலம் சத்யம் பேசுவதால் ஒருவன் அக்னி ஹோத்ரீ என்று அர்த்தம் அல்ல –
சத்யம் பேசுதல் அக்னி ஹோத்ரீக்கு ஒரு சிறப்பு என்றதாயிற்று
ஆனால் இந்த பிரகரணத்தில் பர ப்ரஹ்மமே சத்யம் என்ற பதம் மூலம் காட்டப்படுகிறது –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –தைத்ரியம் -2-1-1-என்று ப்ரஹ்மம் சத்யமாகவே கூறப்பட்டுள்ளது
இதன் காரணமாக ப்ரஹ்மத்தை மட்டுமே உபாசித்து ப்ரஹ்மமே அனைத்தையும் விட மேலானது என்று இருக்கிற சத்யா உபாசகன்
முன்பு கூறப்பட்ட பிராண உபாசகனைக் காட்டிலும் மேலானவாக உள்ளான்
அதிவாதித்வம் -என்பது தான் உபாசிக்கும் பொருள் மற்றைய உபாஸ்ய பொருள்களைக் காட்டிலும் மேலானது என்று
உறுதியாக விஸ்வஸித்து இருக்கும் தன்மை
பிராண அதிவாதி -நாமம் தொடங்கி ஆசை என்பதில் முடியும் பலவற்றையும் உபாசனம் செய்பவர்களை விட மேலானவன் –
அவன் பிராணனையே மேலான புருஷார்த்தமாகக் கொள்ளுகிறான்
ஆக இந்த நியாயத்தின் படியும் சத்யம் எனப்படும் ப்ரஹ்மத்தை மட்டும் உபாசித்து அதுவே எல்லையற்ற புருஷார்த்தம் என்பதால்
அதனைக் காட்டிலும் உயர்ந்த வேறு ஒன்றும் இல்லை என்பவனே உண்மையான அதிவாதி ஆகிறான் என்றதாயிற்று
ஆகவே –ஏஷ து வா அதி வததி ய சத்யேந அதி வததி-7-16-1-என்றது
சத்யேந-மூன்றாம் வேற்றுமை உருபு மூலம் சிறப்புத்தன்மை வெளியிடப்படுகிறது
இதனாலேயே சிஷ்யரான ஸ்ரீ நாரதர் ஸ்ரீ சனத் குமாரர் இடம் –
ஸோஹம் பகவ சத்யேந அதிவாதி -9-16–என்று பிரார்த்திக்கிறார்
இதற்கு -ஸ்ரீ ஸநத்குமார் -சத்யம் த்வேவ விஜிஜ்ஞாசி த்வயம் சத்யம் –ப்ரஹ்மம் -மட்டுமே
அறியப்பட வேண்டும் -இந்த ஆர்வமே வேண்டுவது என்கிறார்
ஆத்மத பிராண -7-26 – 3 —என்றும் தரதி சோகம் ஆத்மவித் -7-1-3-என்றும் இருப்பதால்
ஆத்மாவில் இருந்து பிராணன் -என்பதால் ஆத்மா பிராணனை விட வேறுபட்டது
மதிஸ் த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-18-1-என்று உபாசனத்துக்கு உபாயமாக உள்ள மனத்தை நன்றாக அறிய வேண்டும் என்று சொல்லி
மனனம் முன்பு கேட்டதை சிந்திப்பதே என்பதால் கேள்விக்கு உபாயமாக ஸ்ரத்தை இருக்க வேண்டுமே -இத்தையே
ஸ்ரத்தா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-19-1-என்று ஸ்ரத்தையை அறிய வேண்டும் என்றது
அந்த ஸ்ரத்தைக்கு ப்ரஹ்ம நிஷ்டை வேண்டுமே -அத்தை-நிஷ்டா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-1201-என்றும்
அதற்கு வேண்டிய ஈடுபாட்டை – க்ருதிஸ் த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-21-1-என்றும் இவை எல்லாம் ஸூக ரூபமாக இருப்பதை –
ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-22-1-என்று சொல்லி அந்த நிரதிசய ஸூக ரூபமே ப்ரஹ்மம் என்பதை –
பூமா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்யம்-7-23-1-என்று உயர்ந்த ஸூக ரூபமான ப்ரஹ்மத்தைக் குறித்து –
யத்ர நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா –7-24-1–என்று இத்தைக் காட்டிலும்
உயர்ந்த எதையும் கேட்பதோ அறிவதோ இல்லை என்றது
இதற்கு பூர்வ பக்ஷம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறான இந்த உலகம் துக்க ரூபமாயும் பரிமித ஸூக ரூபமாயும் இருக்க
அதே உலகம் ப்ரஹ்மத்தின் ஆனந்த ரூபமாகக் கொள்ளும் பொழுது ஸூகம் மட்டுமே உள்ளதாக எப்படி சொல்ல முடியும்
இதுக்கு சித்தாந்தம்
ஜீவர்கள் கர்மவசத்தால் துக்கம் அனுபவிக்க ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறாக இந்த லோகம் காணப்படுகிறது –
இந்த அவித்யாதிகள் கழிந்த பின்பு ஸூகம் மட்டுமேயாய் இருக்குமே –
பித்த பீதனானவனுக்கு பால் -ஆரோக்யமானவனுக்கு பால் வாசி போலே இதுவும்
ராஜாவுக்கு இன்பம் அழிக்கும் அனைத்தும் ராஜகுமாரனுக்கு இல்லாதது போலே -அதே ராஜகுமாரன் ராஜாவான பின்பே அத்தை உணர்வான்
லீலா கார்யம் என்று உணர்ந்து அத்தகைய ப்ரஹ்மாவை ஆத்மாவாகக் கொண்டது என்று உணர்ந்தாள் தானே
நிரதிசய ஸூகமாகவே இத்தையும் உணர்வோம்
எனவே அந்த ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது வேறு ஒன்றையும் காணவோ கேட்கவோ அறியவோ மாட்டோமே
இந்த கருத்தையே சாந்தோக்யம்
ஸ வா ஏஷ ஏவம் பஸ்யந்நேவம் -மந்வாந ஏவம் விஜாநந் நாத்ம
ரதிரத்ம க்ரீட ஆத்ம மிதுந ஆத்மாநந்த: ஸ ஸ்வராட் பவதி தஸ்ய ஸர்வேஷு
லாேகஷு காமசாரோ பவதி | அத யே அந்யதாதா விதுராந்ய ராஜா நஸ்தே ஷய்ய லோகா பவந்தி தேஷாம்
ஸர்வேஷு லோகேஷ்வ காமசாேரா பவதி -7-25-2–என்று
யார் ஒருவன் இப்படிக் காண்கிறானோ -இவ்விதமாக பூமா என்று எண்ணுகிறானோ -இவ்விதம் ப்ரஹ்மாவே அனைத்துக்கும்
ஆத்மா என்று அறிகிறானோ அவன் தனது ஆத்மாவான ப்ரஹ்மத்தை நேசிப்பவனாகவும் -ஆத்மாவைத் தனது க்ரீடைக்கு கொண்டவனாகவும்
தனது ஆத்மாவான ப்ரஹ்மத்துடன் சேர்ந்து ஆனந்தம் அடைந்து விருப்பம் போல் சஞ்சரித்து –
ஸ்வராட் -தனக்கு தானே யஜமானனாகவே -அதாவது கர்மவசப்படாமல் -இருப்பானே
இதே போலவே
ந பஸ்யோ ம்ருத்யும் பச்யதி ந ரோகம் நோத துக்கதாம்-சர்வே ஹ பஸ்ய பஸ்யதி சர்வம் ஆப்நோதி ஸர்வஸ -7-26-2-என்று
ப்ரஹ்மத்தை காண்பவன் மரணத்தைப் பார்ப்பதில்லை -நோய் அடைவதில்லை -துன்பம் அடைவதில்லை –
அனைத்தையும் கண்டு அனைத்து அபீஷ்டங்களையும் பெற்று இருப்பான் என்கிறது
ஆனந்த மய அப்யாஸத் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-1-13-என்று சொல்லிய படி ப்ரஹ்மம் பிராணன் என்ற பதத்தால் கூறப்பட்ட
ஆத்மாவை விட வேறுபட்டதாகவும் பூமா என்று உபதேசிக்கப்பட்டதாகவும் உள்ளது
ஆகவே பூமா என்றது ப்ரஹ்மமே என்றதாயிற்று
——————
1-3-8-தர்மோபபத்தே ச-
தர்மங்கள் -தன்மைகள் பொருந்த வேண்டும் என்பதால் பூமா என்றது ப்ரஹ்மமே என்றதாயிற்று
பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்
சாந்தோக்யம்-7-24-1- –ஏதத் அம்ருதம்—இயல்பாகவே அம்ருதத்வம் கொண்ட நிலை -பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவேதம் சர்வம் -7-25-1 -அவனே இவை அனைத்தும்
ஆத்மத பிராண -7-26-1-பிராணன் தொடக்கமாக அனைத்தையும் உண்டாக்குகிறான் -என்றும்
இப்படி பல வாக்கியங்கள் அவனுக்கே பொருந்தும்
அஹம் ஏவாதஸ்தாத்-7-25-1-நானே கீழும் உள்ளேன் என்று தொடங்கி அனைத்துக்கும் ஆத்மா ப்ரஹ்மம் என்றும்
அஹம் வடிவில் பூமா தன்மையுடன் கூடியதாக சொல்கிறது
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று
இதைத் தொடர்ந்து -அதாதோ அஹங்காராதேச-7-25-1-இனி அஹங்காரம் குறித்து உபதேசம் என்று தொடர்கிறது
மேலும் அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் பிரத்யாகாத்மா -ஜீவாத்மா -அனைத்துக்கும் ப்ரஹ்மமே ஆத்மாவாக உள்ளது என்று சொல்லும்
எனவே அஹம் -குறித்து உபதேசிக்கும் வாக்கியங்கள் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்ட பரமாத்ம த்யானத்தையே குறிக்கும்
இதனை -அதாத ஆத்மாதேச 7-25-2-இப்போது ஆத்மா குறித்து உபதேசம் என்று தொடங்கி
ஆத்மைவேதம் சர்வம் 7-25-2–இவை அனைத்தும் ஆத்மாவே என்று முடித்தது
மேலும் -தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஸ்யத ஏவம் மந்வா நஸ்யைவம் விஜாநத ஆத்மத பிராண —ஆத்மத ஆகாச –என்று
யார் ஒருவன் இவ்வாறு காண்கிறானோ -சிந்திக்கிறானோ -அறிகிறானோ -அவனுக்கு ஆத்மாவில் இருந்து பிராணனும் —
ஆத்மாவில் இருந்து ஆகாசமும் -இத்யாதியால் பரமாத்மாவிடம் இருந்து அனைத்து உத்பத்திகளும் என்றும்
அவனே பிரத்யகாத்மாவுக்கும் ஆத்மாவாக உள்ளான் என்றும் -அதாவது
உபாசகனின் உள்ளும் புறமும் இருந்து நியமிக்கும் பரமாத்மாவிடம் இருந்து அனைத்து உத்பத்திகளும் என்றதாயிற்று
ஆகவே அஹம் என்பதான உபாசனை ப்ரஹ்மத்தைக் குறித்தே -என்றும்
பூமா ப்ரஹ்மத்தையே குறிக்கும் என்றதும் சொல்லிற்று ஆயிற்று –
———————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply