ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -முதல்-அதிகரணம் -த்யுப்வாத் யதிகரணம்–1-3-1—

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————————————————————————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் -முதல்-அதிகரணம் -த்யுப்வாத் யதிகரணம்-

முண்டக உபநிஷத்தில் -2-2-5-/6- த்யு லோகம் -பூமி போன்றவற்றுக்கு இருப்பிடமாக கூறப்பட்டவன்
பரமாத்மாவே என்பதே விஷயம்

1-3-1-த்யுத்வாத் யாதநம் ஸ்வ சப்தாத் –

ஆயதனம்-இருப்பிடமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -அவனுக்கு உரிய பதங்கள் காணப்படுவதால் -என்றவாறு
பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்

யச்மிந் த்யௌ ப்ருத்வீ ச அந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜான தாத்மாநம்
அந்யா வாசோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்று

யார் இடம் தேவலோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவை சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக -மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக –
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்கிறது

———–

பூர்வ பக்ஷம் –
இதில் சொல்லப்பட்டவன் ஜீவாத்மாவே

அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சரதே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்று

ஆரங்கள் தேரின் நாபியில் சேர்ந்து உள்ளவை போன்று எந்த ஜீவனிடம் அனைத்து நாடிகளும் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஜீவாத்மா பலவிதமாகப் பிறந்து சரீரத்தில் சஞ்சரிக்கிறான்

ஓதம் மன சஹ பிராணைச்ச சர்வை–முண்டகம் 2-2-5-என்று கீழே மனசானது அனைத்து ப்ராணன்களுடன் சேர்த்துக்
கோக்கப்பட்டுள்ளது என்றும் இருப்பதால்
பஞ்ச பிராணன் மனம் ஆகியவை ஜீவாத்மாவுடன் தொடர்பு கொண்டவை அன்றோ –
ஆகவே த்யு லோகம் பூமி இவற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவே -என்பது பூர்வ பக்ஷம்

——

இதற்கு சித்தாந்தம்
இங்கு ஆதாரமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -அவனுக்கே உரிய தன்மைகள் கூறப்படுவதால்
அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5-என்று-சேது -ஸீ தாது -சேர்த்துக்கட்டுவது மோக்ஷம் அளிப்பது
மோக்ஷத்துக்கு இட்டுச் செல்லும் பாலம் அவனே என்பதால்
மேலும்
ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்று
அவனை அறிந்தவனே முக்தனாகிறான் -மோக்ஷத்துக்கு வேறே பாதை இல்லை என்றும்
மேலும்
முண்டக உபநிஷத்தில் -யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று
யார் அனைத்தையும் அறிந்தவனோ அனைத்தையும் உணர்ந்தவனோ –
அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன
மேலும்
நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம்
சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்
மேலும் 
பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக-பலவாக அவதரிக்கிறார் என்று
ஞானவான்கள் அறிகிறார்கள் என்றும்
மேலும்
ஸ்ரீ கீதையில் -அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம்
அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -4-6 -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————–

1-3-2- முக்தோபஸ் ருப்ய வ்யபதேசாத் ச –

முக்தி அடைந்தவர்களால் அடையப்படுபவன் என்று கூறுவதாலும் -பரமாத்மாவே என்றவாறு –

முண்டக உபநிஷத் -யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்று
எந்த ப்ரஹ்ம ஞானி -பொன்னிறமானவனும் -அனைத்தையும் நியமிப்பவனும் -அனைத்துக்கும் காரணமான பரம புருஷனை
எப்போது காண்கிறானோ அப்போதே புண்ய பாபங்களை விட்டு தோஷங்கள் அற்று ஸாம்யா பத்தியை அடைகிறான்

யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்
நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-
இவ்வாறு ப்ரஹ்மத்தை மட்டுமே குறிக்கும் பதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவையே சொல்லும்

—————

1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருத் ச –

அதனைக் கூறும் சப்தம் இல்லாத காரணத்தால் இங்கு கூறப்படுவது பிரகிருதி இல்லை –
ப்ராணனுடன் கூடிய ஜீவாத்மாவும் அல்ல
இங்கு அனுமானம் என்ற சொல் -அளக்கப்படுதல் -என்ற தாதுப் பொருளால் -பிரக்ருதியைக் குறிக்கும்

முன்பு உள்ள சூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் -இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை
என்றவாறு-

————–

1-3-4-பேத வ்யபதேசாத் –

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –

முண்டக –3-1-2–சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமாநமிதி வீத சோக -ஸ்வேதாஸ்வர -4-7-இரண்டிலும் உள்ளபடி
அநீச -பதம் பிரக்ருதியைக் குறிக்கும்

மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் -அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும்
வேறுபட்டவன்-நியமிப்பவன் -மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –
இந்த வாக்கியம் இந்த பிரகரணத்திலே உள்ளது –
ஆகவே சர்வ ஆதாரமாக உள்ளவன் பரமாத்மாவே என்றதாயிற்று

———–

1-3-5- பிரகரணாத்–

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு வேறு எதையும் கூறப்படாத காரணத்தால்
இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்-
முண்டக உபநிஷத்–1-1-5- -அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்று
அங்கே சொல்லப்பட்டவரும் இங்கு சொல்லப்படுபவரும் பரமாத்மாவே என்றவாறு –

—————-

1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

முண்டக உபநிஷத்தில்
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே -ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –

த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
அழகான சிறகுகள் என்னும் ஞானத்தை துணையாகக் கொண்டவை -ஒன்றுக்கு ஓன்று நடிப்புடன் உள்ள இரண்டு
பறவைகள் ஒரே மரத்தில் -சரீரத்தில் -கர்மபலனை அனுபவிக்காமல் தேஜஸ்ஸுடன் உள்ள பரமாத்மாவே
அனைத்துக்கும் ஆதாரம் என்றவாறு- உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

முதல் அதிகரணம் முற்றிற்று

———————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: