ஸ்ரீ ராமானுஜர்-

ஸ்ரீ ராமானுஜர் திருவவதாரம்
பிங்கள வருஷம்-சித்திரையில் செய்ய திருவாதிரை -13th-April -1017–A-D-
சுக்ல பஷ பஞ்சமி -வெள்ளிக்கிழமை -கலியுகம் -4119

ஸ்ரீ எம்பார் திருவவதாரம் -அதே வருஷம் -தை புனர்பூசம்

உபநயனம் -7-வயசில்

ஸ்ரீ முதலியாண்டான் திருவவதாரம் -1028–A-D-

மூத்த சகோதரி -பூமா தேவி –திருக்கல்யாணம் -1025 –
இளைய சகோதரி –கமலாம்பாள் -திருக்கல்யாணம் -1028-

இவர் திருக்கல்யாணம்-16-வயசில் -தஞ்சாம்பாள் -ரஷாம்பாள் என்றும் -1033–

திருத்தகப்பனார் ஸ்ரீ சோமயாஜி திருநாடு அலங்கரித்தது -1035-

காசி யாத்திரை யாதவ ப்ரகாசனுடன் -1038-

ஸ்ரீ ஆளவந்தார் சரம விமல திரு மேனி தர்சனம் இந்த ஸ்ரீ ரெங்கம் -1042-வைகாசி -மூன்று திருவிரல்கள் வ்ருத்தாந்தம்

திருத்தாயார் திரு நாட்டுக்கு அலங்கரித்தது -1945-

பஞ்ச சம்ஸ்காரம் -ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ மதுராந்தகம் -1049-

ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ கோவிந்த பட்டரானது -1049-

வேதாந்த சாரம் -1050-

ஸ்ரீ கூரத்தாழ்வான் -ஸ்ரீ ஆண்டாள் தேவி திருக்கல்யாணம்-1945-

உடையவர் பட்டம் -1050-

திருக்கோஷ்டியூர் முதலில் எழுந்து அருளியது -1050- -18-தடவை எழுந்து அருளினது -1053-

ஸ்ரீ பெரிய கோயில் நம்பியை அமுதனார் ஆக்கியது -ஐப்பசி -1054-

முதல் பெண் புத்ரி ஸ்ரீ கூரேசருக்கு -1054-

கத்யத்ரயம் அருளியது -1054-பங்குனி உத்தரம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -1055-

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளினது -1056-ஆவணி

ஸ்ரீ திருவரங்க பெருமாள் அரையர் திருநாடு அலங்கரித்தல் -1057-

ஸ்ரீ கூரேசருக்கு இரண்டாவது பெண் புத்ரி பிறப்பு -1057-

ஸ்ரீ திருமலைக்கு ஸ்ரீ உடையவர் எழுந்து அருளியது -1057-

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் ஸ்ரீ திருமலையில் அருளிச் செய்தது -1058-

ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியானது -1059-

ஸ்ரீ சரஸ்வதி சந்நிதி என்று ஸ்ரீ போதாயன வ்ருத்தி பெற்றது -ஸ்ரீ பூரி மங்களாசாசனம் -மீண்டும் திருமலை எழுந்து அருளி –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து-ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் அருளியது -1060 —

ஸ்ரீ பாஷ்யம் நிகமனம்- -1062-

ஸ்ரீ பராசர பட்டார் ஸ்ரீ வேத வியாச பட்டார் -ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் நாம கரணங்கள்
ஸ்ரீ பிள்ளானை ஞான புத்ரனாகக் கொண்டு ஸ்ரீ ஆறாயிரப்படி அருளிச் செய்ய நியமனம் -1074-

ஸ்ரீ ஆறாயிரப்படி நிகமனம் -1076-

ஸ்ரீ ரெங்கம் விட்டு வெள்ளை சாத்தி புறப்பாடு -1076-

ஸ்ரீ மேல் நாடு நுழைதல் -1078-

ஸ்ரீ திரு நாரணன் மூலவர் பிரதிஷ்டை -1079-

ஸ்ரீ கூரேசர் தரிசனத்துக்கு தர்சனம் இழந்தது -1078-

ஸ்ரீ கூரேசர் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை எழுந்து அருளி ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் சாதித்தது -1079-

ஸ்ரீ செல்வப்பிள்ளையை வடக்கே பெற்றது -1081-

திருக்குலத்தார் -1083-

ஸ்ரீ லஷ்மி நாராயணர் பிரதிஷடை ஸ்ரீ தொண்டனூரில் -1085-

ஸ்ரீ பஞ்ச நாராயண பிரதிஷடை –பேலூர் -1089-

ஸ்ரீ தமர் உகந்த திருமேனி பிரதிஷ்டை -1090- ஸ்ரீ ரெங்கம் திரும்புதல் -1090–ஸ்ரீ கூரேசரும் திரும்புதல்

ஸ்ரீ நம்மாழ்வார் அர்ச்சா திருமேனி பிரதிஷ்டை -ஸ்ரீ ரெங்கத்தில் -1091–அத்யயன உத்சவம் புனர் நிர்மாணம்

ஸ்ரீ கோவிந்த ராஜர் பிரதிஷ்டை -1091-

ஸ்ரீ திருக்கச்சி நம்பி திரு நாடு அலங்கரித்தல் -1092-

ஸ்ரீ கூரேசரை ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் இடப்பணித்தல் -1093-

ஸ்ரீ பாஷ்யம் விரித்து உரை -1095-

ஸ்ரீ கூரேசர் திரு நாடு அலங்கரித்தல் -1107-

சதாபிஷேகம் -1117-

நூறு தடா அக்காரவடிசில் சமர்ப்பணம் -1097-

தாம் உகந்த திரு மேனி பிரதிஷ்டை ஸ்ரீ பெரும்புதூரில் -1119-

ஸ்ரீ திருநாடு அலங்கரித்தல் நித்ய கைங்கர்யத்துக்கு – -1137-பிங்கள -சுக்ல பஷ தசமி-மகா மாசம் –
திருவாதிரை நக்ஷத்ரம் உச்சிப்பொழுதில்

——————

ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே

1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –

நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —

————————————————

சாஷாத் ஆச்சார்யத்வைத்தை -நம் முதலிகள்-தம் தாம் ஆச்சார்யர்கள் அபிமானம் உத்தாரகம் –
சம்சாரம் தாண்ட -என்று அறுதி விட்டார்களே ஆகிலும் -முதல் படி இது –
ஆச்சார்யர்கள் உடையவரே உத்தாரகம் என்று காட்டிக் கொடுத்து-நீங்களும் இப்படியே
விஸ்வசித்து போங்கள் என்று அருளியதால் – இவரே சரம உபாயம் –

1–இருப்பிடம் -தொழும் பெரியோர் எழுந்து இருந்து ஆடும் இடம் -ஞானாதிகர் கழித்து வர்த்திக்கும் இடமே வாசஸ்தானம்
2–அனுபவ விஷயம் இங்கு இருக்கும் நாள் -உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி உள் மகிழ்ந்தே -இதுவே கர்த்தவ்யம்
3–ராமானுஜன் மிக்க சீலம் அல்லாது உள்ளாது என் நெஞ்சு
4–சாரா மனிசரை சேரேன்-இனி எனக்கு என்ன தாழ்வு -ஆதிக்யம் பார் -ஸ்வரூப ஹானி பிறக்கும் சேர்ந்தால்
5–புகழ் அன்றி என் வாய் பரவலாகாது -வாசா அனுசந்தேயம் இதுவே
6–மன்னு மா மலர் தாள் மறவேன் -எத்தை நினைத்தாலும் இவர் திருவடிகளையே -எவ்வாறு அடர்க்கும் தீ வினை
7–உன் தொண்டர்க்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -அநந்யார்ஹர் -இதுவும் உடையவர் இடமே பிரார்த்தித்து பெற வேண்டும்
8–மெய்யில் சீர் -திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமே -காஷாய சோபை -இல்லை எனக்கு எதிர் இல்லை எண்ணப் பண்ணுமே
9–திரு நாமங்களில் விஸ்வஸித்து -அடியார்களுக்கு கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம்
10–இது இல்லாமல் அகல் இடத்தர் ஏது பேறு என்று காமிப்பாரே துர்லபம்

சகல பிராமண ப்ரமேய தீர்க்க தர்சி வசன அனுஷ்டானங்களால் -சத்யம் சத்யம்
பொருந்தா நிலை -யாவதாத்மபாவி சம்சாரம் அநுவர்த்திக்கும்
உடையவருக்கு உடையவராய் இருப்பார்க்கு யாவதாத்மபாவி சர்வ அபீஷ்டங்களும் சித்திக்கும்

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: