ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்–நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்-நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –1-
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –2-
வீடு செய்மின்-இறை யுன்னுமின் நீரே-என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இறே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு -நலத்தால் அடைய -என்கிறது

பத்துடையோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால் முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும் என்று உரைத்த-3-
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
அவதரித்த இடத்தே-பஷிக்கும்-ரஷஸ் ஸூக்கும் மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர் என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச நலங்கி – நாயகனைத் தேடி மலங்கியது–4-
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இறே –

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று நீங்க நினை மாறனை–5-
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண எண்ணுகிற ஸ்ரீ ஆழ்வாரை-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன் ஓதி-6-
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம் ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே – என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே-பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
அந்தரங்கமான சிநேகத்தோடு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன் பற்றும் அவர்க்கு என்று பகர்–7-
ஜன்ம சம்பந்தம் அற்று-நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுக்ரஹிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு–குணைர் விருருசேராம-என்னும்படி-நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று பகர்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய ஒர்ந்தவன்–8-
சஞ்சலமாய்-நின்றவா நில்லா நெஞ்சும் – அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே செவ்வை கெட நடக்கும் குடிலரோடு கூடிக் கலந்து –
சர்வ ஸ்மாத் பரனானவன் அடிமை கொள்ளும்-நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின–9-
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஹ்ருஷ்டனாய் சாத்மிக்க சாத்மிக்க சர்வ அவயவங்களிலும்
சம்ஸ்லேஷிக்கும் ரசம் தன்னைப் பெற்று-பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அணையும் சுவை யாவது -அருகலில் அறுசுவை- ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘ ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து தருமாறு ஓர் ஏது-ஹேது- அற-திறமாகப் பார்த்துரை செய்-10-
ஸ்ரீ சர்வேஸ்வரன் எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே சஷூர் விஷயமாம் படி வந்து
ஒரு ஹேது இன்றிக்கே நிர்ஹேதுகமாக பல ஸ்வரூபனான தன்னையே தருகிற பிரகாரத்தை –
பொரு மா நீள் படை என்று துடங்கி கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
நிர்ஹேதுக கிருபையை அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து அந்த பிரகாரத்தை அருளிச் செய்தபடி –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுதார்-11-
ஆராத காதல் -என்னும்படி விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு-அசேதனங்கள் ஆகையாலே தம்முடைய
துக்கத்தை ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சம துக்கிகளாக அழுத ஸ்ரீ ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார் –

திருமால் பரத்துவத்தை -நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து அற்றார்கள் யாவரவர் அடிக்கே –12-
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியையாலே அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
அன்றிக்கே –
ஸ்ரீ திருமால் பரத்வத்தை தாம் நண்ணி அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
இப்படி அவதாரே பரத்வத்தை ஸூஸ்பஷ்டமாம் படி அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே –
அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் -அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-

வந்துள் கலந்த மாலினிமை யானது அனுபவித்தற்காம் துணையா -வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற-13-
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல் சங்கோசம் அற ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது ச ஹிருதயமாக சம்ஸ்லேஷித்த சாரஸ்யம் ஆனது-ஏவம் வித ரஸ்யதையை
அனுபவிக்கைக்கு அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அனுகூல சஹவாஸம் அபேஷிதமாய்
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று அபி நிவேசத்திலே ஊன்றி

அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து-14-
ஸ்ரீ வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள் அவர்கள் சங்கத்திலே சங்கதராய் -ஆனந்தத்தை அடையாத
அபூர்த்தியாலே-வாடி வாடும் -என்று மிகவும் வாடி –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று நிரவதிக சிநேக உக்தரான
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூஹ்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிரூபித்து-தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை-தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்-தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –
மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார்-

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன் வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம் தீர்ந்தார்–15-
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத் தேசத்திலும் அத் தேசிகர் இடத்திலும் உண்டான அதி ஸ்நேஹத்தாலே –
அடியார்கள் உண்டு -அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் -அவர்களோடு கூட ஸ்ரீ சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
சர்வ ஸ்மாத் பரனான தான் ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் பரமாபதமா பன்னரான-இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ஸ்லேஷித்த ஔதார்யத்தாலே -மலை போலே பெருத்து அவயவ சௌந்தர்யாதிகளையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமானது –

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –16-
ஒரு நீராக கலந்த பின்பு சத்தை பெற்று சம்பன்னரான ஸ்ரீ ஆழ்வார் -அல்லாவி -என்று அகல நினைக்கிற நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் விசாரித்து -அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த–எம்பிரான் எம்மான் நாராயணனாலே–17-
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்தார்-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட–18-
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள்
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே உபாயாந்தர நிரபேஷமாக திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடு கூட்ட-மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு இணக்குப் பார்வை போல் சஜாதீயராய் இணங்கி –

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த–19-
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு-யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
ஆய்ந்து–இவ்வர்த்தத்திலே பொருந்தி

வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் -20-
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –
தளர்வு – மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் -அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்
ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி -க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன் இன்ன வளவென்ன கரணக் குறையின் கலக்கத்தை
ஸ்ரீ கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-
முந்துற முன்னம்-ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே அழகர் உடைய ஸ்ரீ அழகிலே யாயிற்று அகப்பட்டது –
கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
ஸ்ரீ பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர வேங்கடத்துப் பாரித்தார்–23-
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே-சர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று
சென்னி ஓங்கு தண் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்தார் –

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –
வகுள தரரான ஆழ்வார் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து -அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார்

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால் அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்–25-
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்து அநாதரித்த படி-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு இந்நிலத்தில்
அர்ச்சாவதாரம் எளிது என்றான்–26-
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி
இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது-பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு -இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –
ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய் நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன்–27-
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே-போக்யதையை அனுசந்தித்து ஸ்நேஹார்த்தரதா
யுக்தா சித்தராய் தன் நிஷ்டராய் இருக்கை
ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார்

கரணங்கள் ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—————–28-
பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக -பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்-
சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே அவனை அனுபவிக்க
வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் -கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட-இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும் என்னுடனே மாதவனை ஏத்தும் எனும்–29-
சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணும்-

சன்மம் பல செய்து இவ் வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் –30-
ஆஸ்ரித அர்த்தமாக அசங்க்யதமான அவதாரங்களைப் பண்ணி
விரோதிகளைப் போக்கி ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் நன்மை யுள்ளது ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே இறே
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை மால் குணத்தை நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்-

காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்–32-
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான பர அவஸ்தய தத் அனுபவங்களை அப்போதே பெற வேணும் என்று
இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –
பர விஷய பக்தி ஏகதேசமாய்-விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனார் –

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே ஓவாத காலத் துவாதிதனை -மேவிக் கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம்–33-
கீழில் திருவாய் மொழியில்-தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம் நிவ்ருத்தமாம்படி கால சக்கரத்தான் ஆகையாலே –
இவரோடு சேர்ந்து-அந்த கால உபாதியைக் கழித்து -கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி அருளி
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி ஏக தத்வம் என்னலாம்படி-சம்ஸ்லேஷித பிரணயித்வ குணம்-

காதல் பித்தேறி -எண்ணிடில் முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு————34-
ஸ்ரீ ஆழ்வார் அபலையினுடைய அவஸ்தையை அடைந்து என் கொடியே பித்தே -என்னும்படி பக்தியாலே காதல் பித்தேறி
பித்தேறின ஆகாரத்தோடே தாம் நிரூபிக்க புகில்-மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம்
தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்–35-
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அத்யந்த வ்யாமோஹத்தை-
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி-மிகவும் ஹ்ருஷ்டராய் -தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்-அறிவு கலங்கி-அங்கு
காணவும்-கேட்கவும்-பேசவும் பின் செல்லவும்-ஷமையாய் இருந்தாள்-
இங்கு-குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றேன் -என்கிறது —

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால வருந்தி
இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே–37-
பிரணயிநிகளோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று தோழி சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து –
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு-பத்தும் பத்தாக அபேஷித்து
பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு-இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –

என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால் என் தனக்கும் வேண்டா வெனு மாறன்–38-
ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு புறத்தியான மாமை முதலான
உடைமையோடு உயிரோடு வாசி அற வேண்டா பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை-
தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் -ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –

மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன்–39-
பிரபல கர்மங்களாலே அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற இவ்வாத்மாக்கள்
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல்-இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே —என்று கூப்பிட்ட பின்பு-அடைந்தேன் உன் திருவடியை – என்னும்படி
சமாஹிதராய் சம்சாரிகள் நோவுக்கு நொந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி–40-
தேவு ஒன்றும் இலை என- சர்வ ஸ்ரஷ்டாவான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள் ஒருவரும் இல்லை என்று
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
விரகத பூர்வகமாக-ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள் –

பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே–41-
இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –
யதா ஞானம் உடையார் பேறும் சத்யமான பேற்றை உபகரித்த இப் பேற்றை ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார்

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி–42-
நித்ய சித்தர்–ஸ்வேததீப வாசிகள் முதலான ஸ்ரீ திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக-தம் கண்களாலே கண்டு
கண்டோம் கண்டோம் கண்டோம்-கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக -என்று மங்களா சாசனம் பண்ணினார்-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்–43-
அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே -அபி நிவேசம் அதிசயிக்கையாலே – பழிக்கு அஞ்சாமல் -ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே அஞ்சாதே – அப் பழிச் சொல்லே தாரகமாக
ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்

மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய–44-
ஆதித்யனும் அஸ்தமித்து பிரியம் சொல்லுவார் ஹிதம் சொல்லுவார் பழி சொல்லுவார் எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும் மடலூர்வதும் கூடாத படியாக -அதுக்கு மேலே அத்யந்த அந்தகாரத்தோடே ராத்ரியானது
கூட்டுப் படையோடு கூடி நின்று இட்ட அடி பேராமல்-தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –

அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த -45-
ருசி ஜனக லாவண்ய விபவமானது-உருவ வெளிப்பாடாய் -குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத-திவ்ய ஆபரண-திவ்ய அவயவ சோபைகள் ஆனது அவை கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே உடனா வனுகரிக்கலுற்று திடமாக வாய்ந்து அவனாய்த்தான் பேசும்-46-
சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை-பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து –அவசன்னராய் —
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று -திருட அத்யாவச்ய யுக்தராய்-வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன் பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்-47-
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
மோஷ சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே தளர்ந்து மிக -தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்–48-
ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –
முடியாத வபி நிவேசத்தோடே -தரியேன் இனி -என்றும் -உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை

திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித் துன்புற்றுச் சொன்ன சொலவு-49-
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்-ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்-கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் -அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-

சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர்–50-
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார்-

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த காதலுடன் தூதுவிடும்–51-
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என-அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்றுதன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-தான் தள்ளி –
அவனும்-உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன்–52-
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை-கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் அவனுக்கு
அவகாசம் அறும்படி ஊடும் படியையும்-கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே -உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும்-53-
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –
இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட -விருத்த விபூதியன் என்று –

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் —54-
முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில் ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும்

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்-துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால்-
நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்–55-
முந்துற முன்னம்-பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார்

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல்–56-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்-மிகவும் அவசன்னராய் —
தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க வேண்டினால் போல்
அன்றிக்கே-தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்தார் –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான் கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் –57-
உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இத்தால் வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள் என்றது ஆயிற்று –

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும்–58-
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி -பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று-ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் -ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத காதலுடன் கூப்பிட்ட–59-
அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –
பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய் ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும் -விண் மீது இருப்பு அரிதாம் படி –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தி-

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன்–60-
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே -என்று
இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார்-

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் -எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் -61-
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி -அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-அவன் மேலே பழி இட்ட படி

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர்–62-
திவா ராத்திரி விபாகம் அற-அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக -ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது -த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும் அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே
திருத் தாயார் என்ற பேரை யுடையராய் தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம் தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும்–63-
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு -சென்று புகுவதாக ஒருப்பட- இவ் வதி பிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க -திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த–64-
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த–65-
ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை -அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின்
ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று-பூமியில் உண்டானவர்கள் உடைய
ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை – ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட-66-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை -மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து பிரத்யஷ அனுபவம்
பண்ண வேணும் என்று இச்சித்து அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த –67-
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் -எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய்
தனித் தனியும் -ஒரு முகமாயும்-பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த–68-
சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது-
தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட -விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த —

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும் என் தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்று கவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர்–69-
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ – சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே-பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும் ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய–70-
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே-இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு – தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார்-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால் மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த–71-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன் ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு
நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி -மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசிப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து-

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த–72-
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் அறிய -என்னுதல்
இந்த விபூதியிலே-சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார் அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த–73-
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே-ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் எனப் பயம் தீர்ந்த-

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத் தானுகந்த–74-
வார்கடா வருவி -என்று தொடங்கி –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் -அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து-நிர்ப்பயராய்-அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடாயாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ் உற்ற–75-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-
மிக்க விடாயை யுடையராய்-காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி கடல் போலே அது அபி விருத்தமாய் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்க–76-
ஆர்த்தி சமிக்கைக்கு மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட–77-
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து -என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் –
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் -இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற
வாசி வையாமல்-ஒரு நீராகக் கலந்து -பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்–78-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் -திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்–79-
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில் அந்ய சேஷத்வம் இல்லாத
கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் -கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே கலவிக் குறிகளை அருளிச் செய்யப் புகுகையாலே –
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது – பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடுபடுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான்–80-
உத்துங்கத்வமான வடிவு அழகிலும்-தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
ஆத்மா பிராப்தி-பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும்–81-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும் ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த –82-
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே -கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு-குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்-வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு-எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த–83-
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே-நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் -சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று-அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த–84-
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி -யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான -வெளி இட்டார்

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த–85-
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும் ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-
விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த–86-
உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து –கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு
அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும்–87-
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில் அவன் விஷயமாக
ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் -வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார்
நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர் மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான்–88-
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் -ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார்
விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் -திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –
மிகவும் த்வரித்து -அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த–89-
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் -அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க -அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று
நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும் அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை – அலமாப்பை -ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல்
அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார்

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து –
மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும்-90-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே-உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் – அங்கனும் அன்றிக்கே-அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு நாள் அவதி இட்டுக் கொண்ட
தாம்-ஹ்ருஷ்டராய் -நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து அத்யா சன்னனாய் இருக்கிறவனை –
மேலான அவனை-ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும் ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காள மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும்–91-
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் -சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-
சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை வழிக்கு ரஷகமான கதி ஆக்கி -பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்று எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய ஸ்ரீ ஆழ்வார்

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல் தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான்–92-
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே – துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே படமுடை அரவில் பள்ளி பயின்ற
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தைதான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த–93-
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்- திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய்
இருக்கிற தேசத்தை -நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே -தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று பஹூ முகமாக சங்கிக்க-
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்—

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல் கண்டுரைத்த–94–
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான் சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான்–95-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே-பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை -த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சங்க்ரஹமாக அருளிச் செய்து -பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த–96-
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்-அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே-மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து-ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-
பெரிய வானிலே இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார்

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில் வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட–97-
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
பிறவி அஞ்சிறையிலே-ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
இதன் தோஷ தர்சன பூர்வகமாக-அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டுஅரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்–98-
ஸ்ரீ யபதியானவன் தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு -அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே
இட்டு வைத்து அகற்றி விடுவான் என் -இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீஅஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற
என் விஷயத்தில் இப்படிச் செய்வான் என் – இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண -இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்-இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்–99-
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும் ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும் ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும் காட்ட அதிலே ஆழம் கால் பட்டு-
அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அடைவே அனுபவித்து-க்ருதார்த்தராய் -ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்-
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் – எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே-இவரும் நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய் அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-
பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய் அத்தை அப்போதே பெறாமல் மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்து-தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு வீடு திருத்தி -என்றும்-விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்-த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே பர பக்தி பர ஞான பரம பக்தி உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி-என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: