ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்–நூறு திருவாய் மொழிகளின் பலன்களும் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு நாமங்களை

மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியடியாக
பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –
மாறன் சொல் நேராகவே விளைய மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதியே ஸ்ரீ வைகுண்டம் -இது பிரதிக்ஷமாக காணலாமே –

நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து–2-
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்-பரோபதேசம் பண்ணுகையாலே நித்யமுமாய்-நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்-
தர்ச நீயமான-உதாரமான ஸ்ரீ திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-தம் ஔதார்யத்தினாலே இந்த மகா பிருத்வியில்
உண்டானவர்கள் எல்லாரும் ஸ்ரீ பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழும் படி -தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்-பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று

மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-
ஸ்ரீ ஆழ்வார் இங்கே-இவ் விடத்திலே-கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே-
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்-
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-
ஸ்வ விநாசம் ஆனாலும் ஸ்ரீ ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விஸ்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை-
தன் செல்லாமையைக் காட்டி ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
நெடுமாலே – மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-
ஸ்ரீ திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

உரிமையுடன் ஓதி யருள் மாறன் -ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு —6-
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் உபதேசிக்கையாலே-இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு ———–7-
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று-நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய்-அங்கே  பற்றும் படி ஓடு-

செம்மை உரை செய்த மாறன் என ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை————–8-
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் என்று அனுசந்திக்க -ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய்
உள்ளவை எல்லாம் பொருந்தி சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் —————9-
இப்படிப் பெறாப் பேறு பெற்று-அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –பொரு -என்று ஒப்பாய்-அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் ————–10-
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சாந்து பஜித்திடுக –
திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக-
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலேதாம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து ————11-
அநந்ய பிரயோஜனராய்-அந்தரங்கமாக ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் ஸ்ரீ பகவத் சம்ச்லேஷம் யுண்டாய் ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

மாறன் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் ——————12-
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில்
அந்தரங்கராய் கிட்டினவர்களை மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—————13-
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின ஸ்ரீ ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்-அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே-

உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஸ்ரீ ஆழ்வார் –

சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை————-15-
ஸ்ரீ வானோர் தனித் தலைவன் -அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-

நைகின்ற தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்——16-
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

வீசு புகழ் மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை————–17-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—————–18-
ஏவம் வித உபதேஷ்டாவான ஸ்ரீ ஆழ்வார் உடைய புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஸ்ரீ ஆழ்வாருக்கு -செம்மா பாதம் -இறே எம்மா வீடு–பொசிந்து காட்டும் இங்கே –
இவருக்கு ஸ்ரீ மாறன் மலர் அடியே யாயிற்று-விபூதிஸ் சர்வம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

நம்முடைய வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —————19-
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி -தனியேன் வாழ் முதலே -என்கிற ஈஸ்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஸ்ரீ ஆழ்வாராய் இருக்கும் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று ஸ்ரீ ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி——–20-
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே -முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய் முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம்

திருமலையில் மூண்டு நின்ற மாறன்-அழகர் -வடிவழகைப் பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான்-21-
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி -படி கலனும் நடுவு உள்ளவையாய்-படியிலே உள்ள திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய்- பின்பு பெரு வெள்ளமாய்-நட்டாறாய்ச் சுளித்து அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்
இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய் -முற்றும் அனுபவித்தான் முன் –

அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்–கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து -22–
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –

மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-
நிரவதிக பக்தி உக்தரான ஸ்ரீ ஆழ்வார் -பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே மனசே நீயும் அபிராமமாய்
புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே காரணங்கள் போலே -அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே – என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது- மொய்ம்பு -மிடுக்கு
அவனுடைய உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும் அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும் அருளிச் செய்கையாலே வ்யாப்த அனுசந்தான ரூப வாச கைங்கர்யம் –
ஸ்ரீ திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்————-25-
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே பெறற்கு அரியதான பக்தியை மனஸே பண்ணு-

எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—————-26-
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு -சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக
யுடையரான ஸ்ரீ ஆழ்வார் – பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——–27-
வடிவு அழகிலும்-ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் -அடிமை ஆகாதார் -சன்ம ஷயம் பிறவாது
ஆகையால் ததீய சேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக மோஷ சித்தியாம் – என்றபடி –

கரணங்கள் ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—————–28-
கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க-ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்—————-29-
ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஸ்ரீ ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்———30-
இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை
லௌகிகராய் உள்ளவர்களே-நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்-அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்
சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்-

காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —————32-
இப்படி தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது -என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலரானார் -ஸ்ரீ திரு அயோத்தியில் பிறப்பு ஸ்ரீ ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
ஸ்ரீ திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று -ஸ்ரீ ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் ————33-
சம்ஸ்லேஷித பிரணயித்வ குணத்தை -ஸ்ரீ ஆழ்வார் சத்தை பெற்று-யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து ஸ்ரீ எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் -இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம்
சத்தை பெற்று வாழ்ந்தார்கள் –வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஸ்ரீ ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

மாறன் -காதல் பித்தேறி -எண்ணிடில் முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு————34-
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி
வ்யாமோஹ அதிசயத்தாலே-அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்-சென்ற துயர் மாறன் தீர்ந்து-35-
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ ஆழ்வார் கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி-மிகவும் ஹ்ருஷ்டராய் -தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஸ்ரீ ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று –
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
ஸ்ரீ கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு———–37-
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு – பத்தும் பத்தாக அபேஷித்து
பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு -இப்படி திவா ராத்திரி விபாகம் அற சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –
இனி ஸ்ரீ திரு நகரியில் ஸ்ரீ ஆழ்வார் பிரதான்யம் எங்கனே நடக்கக் கடவதோ என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு ——————38-
தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் -ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –
என்று இப்படி அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று————–39-
இப்படி ஸ்ரீ ஈஸ்வரனும் கூட கைவிட்ட சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஸ்ரீ ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள் அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா -தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை————-40-
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளுக்கு ஆட் சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருதமய தடாக அவகாகன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூகந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –
வகுளாபிராமம் ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா-என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை -தம் கரணங்கள் ஸ்ரீ குருகூர் நம்பி மொய் கழல்களிலே-காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் ஸ்ரீ மா முனிகள் திருக்கரங்கள் ஆசைப்படுகின்றன –

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —————41-
இரும்பைப் பொன் ஆக்குவது போலே-நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார்

திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மன மாசு———–42-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே-ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து-பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்-உழி பேர்த்திடும் கொன்றே -என்று-தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி-ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –

மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –43-
ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார் இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே இவரும் தளும்புகிறார்-

மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ———–44-
ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது-ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-
அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை-உரு வெளிப்பாடு என்கிற துறையிலே வைத்து அருளிச் செய்த
ஸ்ரீ நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் –

மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட் செய்ய நோற்றார் ———-46-
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று-இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்

எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது——————47-
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –
அவ்விடத்தில்-அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
ஸ்ரீ சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே -என்றத்தை அருளிச் செய்தபடி –

ஆற்றாமை பேசி யலமந்தான் -மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-
இத்தசையிலும் உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும் -களை கண் மற்றிலேன் -என்றும்-இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி
இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

மா நலத்தால் மாறன் சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற————-49-
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி -இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு -ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்-திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு——————50-
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய -பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –
மனசே தங்கிப் போரு-அவருக்கு நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே உனக்கும்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

கை கழிந்த காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –
நல்குதல் -கொடுத்தல்–52-

தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் -அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் -54-
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மாறன்–துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் — நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்–55-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் த்ரிவித கரணத்தாலும் யுண்டான தம்முடைய-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார்

மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் – ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை
புஜிககுமா போலே நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-
இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்யா ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே
நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –
ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே-ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்-ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –60-
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய
திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
ச க்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –
சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்
நெஞ்சே-வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்-

இன் புகழ் சேர் மாறன் என -குன்றி விடுமே பவக் கங்குல் -61-
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்-இது நிச்சயம் -/குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-
அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க -உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் -தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும்
பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

மாறன் சொல் -பன்னுவரே நல்லது கற்பார் -64-
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை – ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

வாய்ந்து உரைத்த மாறன் சொல் -பண்ணில் இனிதான தமிழ்ப் பா -65-
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-
பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே ஸ்ரீ பகவத் அலாபத்தாலே
கூப்பிடுகிற ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-
இப்படி ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே-என்று வெறுக்கிறார் –

அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

மாயன் வளம் உரைத்த மாறனை-நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் -69-
இப்படி க்ருதஞ்ஞாரான ஸ்ரீ ஆழ்வார் பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு -70-
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் -71-
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு -72-
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார்-

பயம் தீர்ந்த மாறன் வரி கழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் -73-
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய வரியை உடைத்தான
வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள் நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே -சாராயேல் –மானிடவரைச் சார்ந்து மாய் -74-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் -பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது -தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

அழுது அலற்றி தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் -அற்ற பொழுதானது எல்லியாம்-75-
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே அழுது-அலற்றும் யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

மாறன் கண்டு இந் நிலையைச் சொன்னான் இருந்து–76-
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை-

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு–77-
பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடிக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார்
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –

ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –

திறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் -தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும் ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும் ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான
ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே- இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

சீர் மாறன் தாளிணையே -உய்துனை என்று உள்ளமே ஓர்-82-
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்-பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை -நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-
உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று-மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை -நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் -மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் -84-
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் வெளி இட்டார்
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே -விலஷணமான ஆத்ம வஸ்து –
உஜ்ஜீவிக்கும்

மாறன் அருள் -உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை -அனுசந்திக்கும் அவர்களுக்கு-
மனஸ்ஸூ- நீராய் உருகும் –இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்
மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த –
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –
எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –
அன்றியே-என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-87-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் – துடர் அறு சுடர் அடி -போலே –

அறப் பதறிச் -செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88–
மிகவும் த்வரித்து -ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –
இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் -89-
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ -தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –
ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க -மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே -92-
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

மால் தெளிவிக்க தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு -93-
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய் அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே -சேவித்து-ஹ்ருஷ்டமாம் -மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –
ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்
உலகத்தார் புகழும் புகழ்–அருள் கொண்டாடும்படியான அருள்-

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-
விதி பரதந்த்ரனாய்–சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே-ஸ்ரீ பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று
செய்தாப் போலே இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே பர தந்த்ரனாய் நின்ற குண சுத்தியைப் பேசினபடி-என்கை –
விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் -நம் திரு –97-
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர் சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல் தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் -இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை -அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் -முடி மகிழ் சேர் ஞான முனி -99-
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் – எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே-இவரும்-நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே – பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் -இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
இத்தால்-அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகபன் -என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி-/இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம் /முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: