Archive for October, 2019

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -61-70–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 22, 2019

சம்போர் அம் போருஹ முக சகா சந் ஸஹாங்கச் ச சாங்க
குர்வன் சேவாம் வரத விகலோ வ்ருத்த ஹீநஸ் ஸூ வக்ரஸ்
த்வத் பாதாப்ஜே ப்ரியமக நகச் சத்ம நாச்ரித்ய நித்யம்
சத் வ்ருத்தோ அபூத் ச ச தச குண புஷ்கலோ நிஷ் கலங்க -61-

அம் போருஹ முக–தாமரை போன்ற திரு முகத்தை உடையவனாய்
ப்ரியமக–யஜ்ஜ பிரியனான
ஹே வரத
ஏற்கனவே
ஸஹாங்க–பாபம் உடையவனாக –/-2-களங்கத்தை உடையவனான
ச சசாங்க –அந்தச் சந்த்ரனானவன்
சம்போர் –ருத்ரனுக்கு
சகா –தோழனாய் இருந்து கொண்டு
சேவாம் குர்வன் –சிரோ பூஷணமாய்ச் சேவையைச் செய்தவனாயும்
விகலோ –வித்யா விஹீனனாய் -/-2-மூளியாய்
வ்ருத்த ஹீநஸ் –சதாசார ஹீனனாய் -/-2-உருண்டை வடிவம் இழந்தவனாய்
ஸூ வக்ரஸ்–குடிலை ஹ்ருதயனாய் -/-2-மிகவும் கோணலான ஆகாரம் உடையவனாய்
சந் -ஆகா நின்று கொண்டு
நகச் சத்மந –நகங்கள் என்கிற வ்யாஜத்தாலே
த்வத் பாதாப்ஜே நித்யம் ஆஸ்ரித –உன் திருவடித் தாமரைகளை தினமும் ஆஸ்ரயித்து
நிஷ் கலங்க -களங்கம் அற்றவனாய்
புஷ்கலோ -நித்யம் பூர்ணனாய்
சத் வ்ருத்தோ -சதாச்சார்யம் உடையவனாய் –உருண்டை வடிவம் உடையவனாய்
தச குண –பதின் மடங்கு பெருகினவனாய்
அபூத் –ஆனான்

பத்து திரு விரல்களிலும் பத்து சந்திரனானான்-நகத்வ அவஸ்தையில் பூர்ணனானான்

யோ ஜாத க்ரஸிரமர மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்பு நா சோயம் யச் சரணாஸ்ரயீ சச தரஸ் நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜ்வல தயா சார்தம் பஹத்வம் ததா யதாஸ்தம் தருஷண்ட சைல நிலையம்
வந்தாமஹீ ஸூந்தரம் -என்றும் அங்கும் உண்டே –

————

த்வத் பாதாப்ஜே ப்ரஜாதா ஸூரசரித் அபவத் ப்ராக் சதுர்த்தா ததஸ் தாஸூ
ஏகாம் தத்தே த்ருவஸ் சா த்ரி புவநம் அம்புநாத் த்ரீந் பதோ பாவ யந்தீ
தத்ரைகா கம் வ்ரஜந்தீ சிவயதி து சிவம் சா புநஸ் சப்த தாபூத்
தாஸ்வேகா காம் புநாநா வரத சகரஜ ஸ்வர்க்க சர்கம் சகார–62-

ஹே வரத
த்வத் பாதாப்ஜே –உன் திருவடித் தாமரையில்
ப்ரஜாதா -உண்டான
ஸூரசரித் –கங்கையானது
ப்ராக்-முந்துற முன்னம்
சதுர்த்தா–நான்கு பிரிவாக
அபவத் -ஆயிற்று
ததஸ் –பிறகு
தாஸூ –அந்த நான்கில்
ஏகாம் – த்ருவஸ் -தத்தே ஸ்ம —ஒன்றைத் உத்தான பாத சக்ரவர்த்தி திரு மகனான –
த்ருவனானவன் தரித்தான்
சா –என்னால் தரிக்கப்பட்ட அது
த்ரீந் பதோ-மூன்று மார்க்கங்களை
பாவ யந்தீ சதீ –உண்டாக்கா நின்று கொண்டு
த்ரி புவநம் –ஸ்வர்க்க -அந்தரிக்ஷ -பாதாள லோக த்ரயத்தை
அம்புநாத் –பரிசுத்தம் ஆக்கிற்று
தத்ர –மூன்று வழியாகப் பெருகின அவற்றுள்
கம் வ்ரஜந்தீ –அந்தரிக்ஷம் நோக்கிச் செல்கின்ற
ஏகா து -ஒரு நதியோ என்றால்
சிவம் சிவயதி –ருத்ரனைப் பரி சுத்தம் ஆக்குகிறது
கஸ்ய பாதோதகேந ச சிவ ஸ்வ சிரோத்ருதேந –ஸ்ரீ ஆளவந்தார்
சா புநஸ் –சிவனால் தரிக்கப்பட்ட கங்கையோ என்றால்
சப்த தாபூத் -ஏழு பிரிவாக ஆயிற்று
தாஸூ -அவைகளில்
காம் புநாநா–பூமியைப் பரி சுத்தமாகச் செய்கின்ற
ஏகா -ஒரு கங்கை யானது
சகரஜ ஸ்வர்க்க சர்கம் சகார–சகர புத்ரர்களுக்கு ஸ்வர்க்க ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிற்று –
சகர புத்திரர்களை ஸ்வர்க்கம் அடையச் செய்தது -என்றவாறு

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–
திரு பாத தீர்த்தம் பலபடியாக பெருகின படியை அனுபவிக்கிறார்
இந்த ஸ்லோகத்தால் சர்வ லோகத்தையும் பரிசுத்தப் படுத்த வல்ல
ஸ்ரீ பாத தீர்த்தத்தின் மஹிமையை வெளியிட்டு அருளினார்

இந்த ஸ்லோகம் ஸ்ரக்தா வ்ருத்தம்

————————

பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –63-

ஹே வரத
பரிஜன-சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும்
பரி பர்ஹா -சத்ர சாமராதி பரிச் சதங்களும்
பூஷணாநி –கிரீட குண்டலாதி பூஷணங்களும்
ஆயுதாநி –திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்
ஞான சக்த்யாதயஸ் தே ப்ரவர குண கணாச்ச –ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்
பரமபதம் –பரமபதமும்
அத அண்டானி -அண்டங்களும்
ஆத்ம தேஹஸ் -ஸ்வ அசாதாரண விக்ரஹமும்
ததாத்மா –திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்
சகலமேதத் –ஆகிய இவை எல்லாவற்றையும்
சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

ஸ்ரீ த்வய விவரணமாகவே இந்த ஸ்தகம்
முதல் ஸ்லோகம் ஸ்ரீ மத் சப்தார்த்தம் –
மேல் முதல் சதகம் நார பதார்த்தவேந ஸ்ரீ திருமலையின் சிறப்பை அருளிச் செய்து
நாராயண பதம் -குண பிரதான விவஷையாலே -திருக் கல்யாண குணங்களை த்வதீய சதகத்தில் அருளிச் செய்து
திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் உண்டே -ஆகவே வடிவு அழகு அனுபவத்தில் இது வரை அனுபவம்
இது ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி திரு மேனி அனுபவத்தில் கொண்டு மூட்டிற்று
அதுக்கு முக உரை இந்த ஸ்லோகம்

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம் -ததா அபி புருஷா காரோ
பக்தா நாம் த்வம் ப்ரகாஸஸே -ஸ்ரீ ஜித்தாந்தா ஸ்லோக விவரணம் இது –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று வாய் வெருவுகையாலே பரிஜனம் ஆஸ்ரிதற்கு ப்ராப்யம்
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை மத் தைவதை பரிஜநைஸ் தவ சங்க ஸீய–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
சத்ர சாமராதி -கைங்கர்ய உபகரணங்களும் ஆஸ்ரித அர்த்தமே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய்
திவ்ய ஆயுத பாரதந்தர்யத்தை ஜெயத்ர வத பிரகாரணத்திலே கண்டு தெளியலாம்
ஞானம் அஞ்ஞர்க்கு –சக்தி அசக்தர்க்கு -க்ஷமை சாபராதற்கு -கிருபை துக்கிகளுக்கு -வாத்சல்யம் ச தோஷர்க்கு –
சீலம் மந்தர்க்கு -ஆர்ஜவம் குடிலர்க்கு -ஸுவ்ஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -மார்த்தவம் விஸ்லேஷ பீருக்களுக்கு –
ஸுவ் லப்யம் காண ஆசைப்பட்டார்க்கு –
ஆஸ்ரித விரோதி நிரசனார்த்த தயா க்ரோதாரபி கல்யாண குண சப்தேந ஸங்க்ரஹ —
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே
திவ்ய மங்கள விக்ரஹமும் ஆஸ்ரிதர்க்கே
பரமபதத்தில் ஸூரி யோக்யம் –
வ்யூஹத்தில் ஸ்வேதா தீப வாசிகளுக்கு போக போக்யம் -ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயம்
விபவத்தில் -அதீந்த்ரிய விக்ரஹத்தை சாது பரித்ராண அர்த்தமாக இந்திரிய கோசரமாக்கி அனுபவிப்பிக்கும்
பின்னானார் வணங்கும் சோதியே அர்ச்சை-அஸ்மதாதிகளுக்கே
திவ்யாத்மா ஸ்வரூபமும் பரார்த்தமாய் -நிலாத் தென்றல் சந்த நாதிகள் போலவே –

இந்த ஸ்லோகம் மாலினீ வ்ருத்தம்

———————–

அநாப்தம் ஹி ஆப்தவ்யம் ந தவ கில கிஞ்சித் வரத தே
ஜெகஜ் ஜென்ம ஸ்தேம ப்ரலய விதயோ தீ விலசிதம்
ததாபி ஷோ தீயஸ் ஸூர நர குலேஷு ஆஸ்ரித ஜனாந்
சமாஸ்லேஷ்டும் பேஷ்டும் தத் அஸூக க்ருதாம் சாவதரஸி–63-

ஹே வரத
தவ அநாப்தம் –உனக்கு முன்பு கிடைக்காததாய்
ஆப்தவ்யம் –பிறந்து படைக்க வேண்டியதாக
கிஞ்சித் ந கில ஹி –ஒன்றும் இல்லை இறே-ஏன் என்றால்
ஜெகஜ் ஜென்ம ஸ்தேம ப்ரலய விதயோ —
ஜகத்துக்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார கார்யங்கள்
தே தீ விலசிதம் -உனது சங்கல்பத்தின் விலாசமாகவே நிகழ்கின்றது அன்றோ
ததாபி -அப்படிப்பட்ட அவாப்த ஸமஸ்த காமனாயினும்
ஆஸ்ரித ஜனாந் –க்ஷண விரஹ அஸஹிஷ்ணுக்களான பாகவதர்களை
சமாஸ்லேஷ்டும்-அணைக்கைக்காகவும்
தத் அஸூக க்ருதாம்–அந்த பாகவதருக்கு தீங்கு இழைக்கும் துஷ்டர்களை
பேஷ்டும் ச–பொடி படுத்துவதற்கும்
ஷோ தீயஸ் ஸூர நர குலேஷு வதரஸி—அதி ஷூத்ரமான தேவ மனுஷ்யாதி ஜாதிகளில் அவதரித்து அருளா நின்றாய்

கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே
என் கண்கட்க்குத் திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையார்த்தே
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்
சங்கல்ப மாத்திரத்தாலே சர்வத்தையும் நிர்வகிக்க வல்ல சர்வசக்தியான சர்வேஸ்வரன் தன்னை அழிய மாறி
இதர சஜாதீயனாய் அவதரித்துக் கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபங்களான
அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் ப்ரஹ்லாதன் மஹரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில்
அவ்வவர் பண்ணின அபிசார சஹியாமையாலேயே என்று ஆப்ததமரான நஞ்சீயர் அருளிச் செய்வார்
என்று மா முனிகள் வியாக்யானம்

இந்த ஸ்லோகம் சிகிரிணீ வ்ருத்தம் –

———————-

விவேகதியம் ஏகத ஹி அபிநிவேச லேசா ஹரேத்
மஹத் த்வபிநிவேசம் கிமுத தந் மஹிம் நஸ் தவ
அஹோ வி சத்ருஸே ஜகத் அவததர்த்த பார்த்தாதிகம்
நிஜம் ஜனம் உதஞ்சயந் வரத தம் சமாஸ்லேஷக–65-

ஹே வரத
ஏகத -ஒரு வஸ்துவில் உள்ள
அபிநிவேச லேசா -ஆசாலேசமும்
விவேகதியம் -இது தக்கது இது தகாதது என்கிற பகுத்தறிவு ஆகிற விவேக ஞானத்தை
ஹரேத் ஹி –கொள்ளை கொள்ளும் இறே
மஹத் அபிநிவேசம் து -அதிகமான ஆசையோ என்றால்
கிமுத -விவேகத்தை அழிக்கும் என்பதில் என்ன சம்சயம்
தத் –ஆகையால்
தவ மஹிம்நஸ்–உனது பெருமைக்கு
வி சத்ருஸே-அனுரூபம் அல்லாத
ஜகதி–இந்த லோகத்தில்
பார்த்தாதிகம்-அர்ஜூனாதிகளை
நிஜம் ஜனம் உதஞ்சயந்–பந்து ஜனமாக சம்பாவியா நின்ற
தம் சமாஸ்லேஷக— –அந்த அர்ஜூனாதி ஜனத்தை தன்னோடே ஒரு நீராக்கச் செய்கிறவனாய்
அவததர்த்த -அவதரித்து அருளினாய்
அஹோ-இது ஒரு ஸுவ்சீல்யம் இருந்தபடி என் –

அபி நிவேச வஸீக்ருதே சேதஸாம் பஹு விதாம் அபி சம்பவதி ப்ரம–ஆகம ப்ராமாண்யம் -ஆளவந்தார்
ஆசை பெருக ஆராய்ச்சி குறுகுமே
மஹதோ மந்தைஸ் ஸஹ நிரந்தரேண சம்ஸ்லேஷமே ஸுவ்சீல்யம்
இருள் தரும் மா ஞாலத்தில் திருவவதரிக்கை -அர்ஜுனன் அக்ரூரர் விதுரர் மாலா காரார் இத்யாதிகளுடன்
ஸம்ஸ்லேஷிக்கையில் உள்ள அதி அபி நேசமே ஹேது என்றதாயிற்று

இந்த ஸ்லோகம் ப்ருத்வீ வ்ருத்தம்

——————-

சம்ஸ்லேஷ பஜதாம் த்வரா பரவச காலேந சம்சோத்ய தாந்
ஆநீய ஸ்வ பதே ஸ்வ சங்கம க்ருதம் சோடும் விலம்பம் பத
அஷாம் யந் ஷமிணாம் வரோ வரத சந்நத்ர அவதீர்னோ பவே
கிம் நாம ஸ்வம் அசம்ஸ்ரிதேஷு விதரந் வேஷம் வ்ருனீஷே து தாந் –66-

ஹே வரத
ஷமிணாம் வரோ த்வம் –பொறுமை சாலிகளுள் சிறந்த நீ
பஜதாம்-பக்தர்களுடைய
சம்ஸ்லேஷ –கலவியில்
த்வரா பரவச –மிகவும் த்வரிதரனாய்
அத ஏவ
தாந் -அந்த பக்தர்களை
காலேந சம்சோத்ய –காலக்ரமமாக -சீர் திருத்தி
ஸ்வ பதே ஆநீய–தனது நிலையிடமாகிய பரமபதத்தில் கொணர்ந்து சேர்த்துக் கொண்டு –
அல்லது உனது திருவடி சேர்த்துக் கொண்டு
ஸ்வ சங்கம க்ருதம் விலம்பம் –அவர்களை உன்னோடு அணையச் செய்வதில் ஏற்படுகிற விளம்பத்தை
சோடும்–ஸஹிப்பதற்கு
அஷாம் யந் -வல்லவன் அல்லனாய்
அத்ர–இருள் தரும் மா ஞாலத்தில்
அவதீர்னோ பவே -பிறந்தாயில் பிறந்திடு கிடாய்
அதை பற்றி நான் கேட்க வரவில்லை
கிம் து –பின்னையோ என்றால்
அசம்ஸ்ரிதேஷு–அநாஸ்ரிதர்கள் இடத்தில்
வேஷம்-உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை
விதரந்-அநு பாவ்யமாய்க் கொடா நின்றவனாய்
தாந் த்வம் வ்ருனீஷே –நீ திரு உள்ளம் பற்றுகிறாயே
இதம் கிம் நாம –இது என் கொல்

ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி-நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தே ப்ரஜாயதே
ஒன்றி ஒன்றி நல் தவம் செய்து ஊழி ஊழி தோறு எலாம்–இந்த க்ரமத்தில் வரும் அளவும் பார்த்து இருக்கும்
விளம்ப ஸஹிஷ்ணுத்வம் அவனுக்கு இல்லையே
ஞானீத் வாத்மைவ மே மதம் -அபிநிவேச அதிசயத்தால் திருவவதாரம்
ஆனால் -வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர் செய்து நின்ன செற்றத்தீயின் வெந்தவர்க்கும்
வந்து உனை எய்தலாகும் என்பர் –திருச்சந்த –111-
நிராங்குச ஸ்வாதந்தர்யம் கரை அழியப் பெருகப் புக்கால் –உக்காந்தார் யுகாவாதார் என்று வாசி வையாதே
ஓக்கத் திரு உள்ளம் பற்றுகிறது என் கொல் என்று தலை சீய்க்கிறார்

——————-

வரத யதி ந புவி நாவாதரிஷ்யஸ் சுருதி விஹிதாஸ் த்வத் உபாசந அர்ச்சாநாத்யாஸ்
கரண பத விதூரகே சதி த்வயி அவிஷயதா நிக்ருதா கில அபவிஷ்யந் –67-

ஹே வரத
புவி-இவ்வுலகில்
நாவாதரிஷ்யஸ் யதி –நீ அவதரியாமல் போவாய் ஆகில்
த்வயி -பர வ்யூஹ அந்தராம்யாகாரமாய் இருக்கிற நீ
கரண பத விதூரகே சதி –இந்திரிய மார்க்கங்களுக்கு தூரஸ்தனாய் இருக்கும் அளவில்
சுருதி விஹிதாஸ் -வேதங்களில் விதிக்கப்பட்ட
த்வத் உபாசந அர்ச்சாநாத்யாஸ் –உன்னை உபாசித்தல் ஆராதித்தால் முதலிய கிரியைகள்
அவிஷயதா நிக்ருதா–நிர் விஷயங்களாய் ஒழிவதனால் திரஸ் க்ருதங்களாக
அபவிஷ்யந் கில–ஆகி விடும் அத்தனை அன்றோ –

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது–பரத்வம் அண்டத்துக்கு புறம்பே பெருகிக் கிடக்கும் ஆவரண ஜலம்
பாலாழி நீ கிடைக்கும் பண்பை நாம் கேட்டேயும்–காண அரிய வ்யூஹம் –துஷ் ப்ராபமான பாற் கடல்
கட்கிலீ–அஷ்டாங்க யோக மஹா யத்னம் கொண்டே காணும் படி – -பூதக ஜலம்-போலே அந்தர்யாமி
மண் மீது உழல்வாய் –பெருக்காறு போலே விபவம் -சஞ்சரித்து அருளாது ஒழிந்தால்
நிதித்யாசி தவ்ய –அர்ச்சயேத் –பிரணமேத் –ப்ரதக்ஷிணீ குர்யாத் –இவற்றுக்கு விஷயம் இன்றிக்கே ஒழியுமே

இந்த ஸ்லோகம் புஷ்பிதாக்ரா வ்ருத்தம் –

——————

யத் அபராத சஹஸ்ரம் அஜஸ்ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்
வரத தேந சிரம் த்வம் அவிக்ரிய விக்ருதிம் அர்ப்பக நிர்ப்பஜ் நாத் அகா-68–

சரண்ய ஹே வரத –சரண்யனான ஓ வரதனே
ஹிரண்ய-ஹிரண்ய கசிபு யானவன்
த்வயி–உன் விஷயத்தில்
அஜஸ்ரஜம் –ஸார்வ காலிகமான
யத் அபராத சஹஸ்ரம் –யாதொரு ஆயிரக் கணக்கான அபராதத்தை
உபாவஹத்–செய்தானோ
தேந –அந்த அபராத சஹஸ்ரத்தால்
சிரம் –நெடு நாள் வரையில்
அவிக்ரிய–விகாரமே யுண்டாகாது இருந்த
த்வம்–நீ
அர்ப்பக நிர்ப்பஜ் நாத்–சிறு குழந்தை யாகிற ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த நலிவு காரணமாக
விக்ருதிம் அகா— மனோ விகாரத்தை அடைந்தாய் –

ஆஸ்ரித விஷயத்தில் பஷ பாதம் பிரசித்தம் அன்றோ –
த்வயி கிஞ்சித் சமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –என்பவன் அன்றோ
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தாள் வந்நகாநாம் என்றே துரத்தினால் ஈரரியாய் நேர்
வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்ததூன் –முதல் திருவந்தாதி -90-ஒட்டி இந்த ஸ்லோகம்

இந்த ஸ்லோகம் த்ருத விலம்பித வ்ருத்தம்

————————–

த்வாம் ஆம நந்தி கவய கருணை அம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை
ஏதேஷு கேந வரத உத்தர கோசலஸ்தா பூர்வம் ச தூர்வம் அப ஜந்தா ஹி ஜந்தவஸ் த்வாம்–69-

கருணை அம்ருதாப்தே வரத–அருளாகிய அமிருதத்துக்கு கடல் போன்ற ஓ வரதனே
கவய–பராசர பாரஸர்யாதி கவிகள்
த்வாம் -உன்னை
ஞான க்ரியா பஜன லப்யம்–ஞான யோக கர்ம யோக பக்தி யோகங்களால் ப்ராப்யனாகவும்
அந்யை அலப்யம் –உபாயாந்தரங்களினாலே அப்ராப்யனாகவும்
ஆம நந்தி –ஓதி வைத்து இருக்கிறார்கள்
பூர்வம்–முன்பு ஸ்ரீ ராமாவதாரத்தில்
உத்தர கோசலஸ்தா ச ஜந்தவா –உத்தர கோசலத்தில் உள்ள ஜந்துக்கள்
ச தூர்வம்–த்ருணம் உட்பட
த்வாம்-அபி ஜந்த–உன்னை அடைந்தவன் அன்றோ -அப்படி அடைந்ததானது
ஏதேஷு கேந –கீழ்ச் சொன்ன கர்ம ஞான பக்தி யோகங்களுள் எந்த உபாயம் கொண்டு –

யாதிருச்சிகம் ப்ராசங்கிகம் ஆனு ஷங்கிகம் போன்ற ஸூஹ்ருத விசேஷங்கள் -ஸாஸ்த்ர விஹிதமும் சேதன விதிதமும்
இன்றிக்கே தானே கல்பித்தும் கல்பித்த அவற்றை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போறும் சஹஜ காருண்ய விசேஷம்
தேவபிரான் கருணைக்கு பிறந்தகம் -பேர் அருளாளன் அன்றோ
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையே பற்றாசாக அன்று சாராசரங்களை வைகுந்தத்துக்கு ஏற்றி அருளினாய்

இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம்

——————–

பஜத்ஸூ வாத்சல்ய வசாத் சமுத் ஸூகஸ் பிரகாமம் அத்ர அவதரேர் வரப்ரத
பவேச்ச தேஷாம் ஸூலபோ த கிந்ந்விதம் யதங்க தாம் நா நியதஸ் புராருதஸ்–70-

அங்க வரப்ரத–வாராய் வரதனே
த்வம் பஜத்ஸூ –நீ பக்தர்கள் பக்கலிலே
வாத்சல்ய வசாத் –ப்ரீதி விசேஷத்தாலே
சமுத் ஸூகஸ் –மிக்க விருப்பம் யுடையவனாய்
அத்ர -இவ் விபூதியிலே
பிரகாமம் அவதரேர் -வேண்டியபடி அவதரித்துக் கொள்
அத தேஷாம்–அதற்கு மேல் அந்த அன்பர்களுக்கு
ஸூலப்பச்ச–ஸூ லபனாயும்
பவே–ஆகு கிடாய்
புரா -பண்டு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில்
தாம் நா–தாம்பினால்
நியதஸ்-கட்டுண்டவனாய்
அருதஸ் இதி யத் –அழுதாய் என்பது யாது ஓன்று உண்டோ
இதம் கிம் நு -இது என் கொல்

இது என்ன ஸுவ்லப்ய பரம காஷ்டை என்று உள் குலைந்து உருகி அருளுகிறார்

இந்த ஸ்லோகம் வம்சஸ்த வ்ருத்தம்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -51-60–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 21, 2019

யா தாமோதர இதி நாமதா தவாஸீத் ச தாமா கில கிண காரிணீ பபூவ
தந் நூநம் வரத வலி த்ரயச் சலேந த்வந் மத்ய பிரதம விபூஷிணீ பபூவ –51-

ஹே வரத
யா தாமா -யாதொரு தாம்பானது
தவ தாமோதர இதி நாமதா ஆஸீத் -உனக்குத் தாமோதரன் என்னும் பெயரைத் தந்ததோ
ச கில கிண காரிணீ பபூவ-அந்தத் தாம்பு அன்றோ தழும்பையும் உண்டு பண்ணிற்று
தத் த்ரயச் சலேந–அந்தத் தழும்பானது த்ரிவளி என்கிற வ்யாஜத்தாலே
த்வந் மத்ய பிரதம விபூஷிணீ பபூவ -உனது மத்யம பிரதேசத்துக்கு முதன்மையான பூஷணம் ஆயிற்று

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதிரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த தாமோதரா
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் பொறி கொள் சிறை யுவணமூர்ந்தாய் வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாம்பே கொண்டார்த்த தழும்பு
மும்மடியாகக் கட்டியதால் வளி த்ரயம் -ஸுலப்ய ஸுலப்யங்களை வெளிப்படுத்தும் கோலமே
முதன்மை யாகுமே

இந்த ஸ்லோகத்தால் கண்ண பிரானுக்கும் தேவ பிரானுக்கும் உள்ள
தாதாத்ம்யத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

————-

யாத்ருக் பீஜாத் யுஷித புவி யத் வஸ்து ஹஸ்தீஸ ஜாதம்
தத் தாத்ருஷம் பலதி ஹி பலம் த்வய அபி ஈஷா மஹே தத்
யஸ்மாத் அண்டாத் யுஷித உதரே தாவகேந் ஜாய மானம்
பத்மம் பத்மாநந கில பலதி யண்ட ஷண்டாந் அகண்டாந் -52-

பத்மாநந–தாமரை போன்ற திரு முகத்தை உடைய
ஹஸ்தீஸ–ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
யாத்ருக் பீஜாத் யுஷித புவி –எந்த ஜாதீயமான விதை பொருந்திய இடத்தில்
யத் வஸ்து ஜாதம் -எந்த வஸ்துவானது உண்டானதோ
தத் தாத்ருஷம் பலம் –அந்த வஸ்துவானது அந்த விதையின் சஜாதீயமான பலத்தை
பலதி ஹி-உண்டாக்குகின்றது அன்றோ
தத் த்வய அபி -அந்த நியாயத்தை உன்னிடத்திலும்
ஈஷா மஹே –காண்கின்றோம்
தத்
யஸ்மாத் -யாது ஒரு காரணத்தால்
அண்டாத் யுஷிதே -அண்டங்கள் வசிக்கப் பெற்ற
தாவகே உதரே — உனது திரு வயிற்றில்
ஜாய மானம் பத்மம் -உண்டாகிற நாபிக் கமலமானது
அகண்டாந் -அளவற்ற
யண்ட ஷண்டாந் – பலதி -கில –அண்ட சமூகங்களை உண்டாக்குகின்றது

ஸிம்ஹ அவலோக ந்யாயத்தாலே தெரியவும் திரு நாபீ கமல அனுபவம்
கடலை விதைத்தால் காராமணி விளையாது -காராமணி விதைத்தால் கடலை விளையாதே
திரு உதரம் அண்டங்களுக்கு இருப்பிடம் -ஆகவே அதில் உண்டான திரு நாபீ கமலம்
நிஜ பீஜ ஸஜாதீயங்களான அண்டங்களை உண்டு பண்ணா நின்றது –
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன் எந்தை பெம்மான்

எம்பெருமானுடைய பரத்வம் மூதலிக்க அடி இடுகின்ற ஸ்லோகம் இது

இந்த ஸ்லோகம் முதல் கொண்டு உள்ள தசகம் -மந்தாக்ராந்தா வ்ருத்தம்

——————

அஜ்ஜே யஜ்ஜேஸ்வர கில ஜநே க்வாப்ய அதர்சம் விமர்சம்
விச்வா தீச கதம இதி தந் நிர்ணயம் வர்ணயாம
வ்யாவக்ரோசீ ந்ருஷு ஸமுதிதா யாந் உபாச்ரித்ய தேபி
ப்ரஹ்மாத்யாஸ் தே வரத ஜெனிதாஸ் துந்த கந்த அரவிந்தே–53-

யஜ்ஜேஸ்வர ஹே வரத -சர்வ யஜ்ஜ சமாராத்யனான ஓ வரதனே
க்வாபி அஜ்ஜே ஜநே -அடியேனாகிற ஒரு மூட ஜனத்தின் இடத்தில்
விச்வா தீச கதம இதி விமர்சம் –சகல லோகங்களுக்கும் தலைவன் யார் என்னும் ஆராய்ச்சியில்
அதர்சம் -நோக்கினேன் -சர்வேஸ்வரன் யார் என்று அஞ்ஞனான அடியேன் ஆராய்ந்து பார்த்தேன் -என்கை
தந் நிர்ணயம் வர்ணயாம-அவ்வாராய்ச்சி முடிவை சொல்கின்றோம்
யாந் உபாச்ரித்ய –யாவர் சிலர் ப்ரஹ்மாதிகளைப் பற்ற
வ்யாவக்ரோசீ -பரத்வ விஷயமான -மாறான -கோலாஹலம் –
ந்ருஷு ஸமுதிதா -வேதாந்த ப்ரவணரான மனிதர்கள் இடத்தில் உண்டாயிற்றோ
தே ப்ரஹ்மாத்யாஸ் அபி -அந்த பிரமனாதி தேவதாந்தரங்களும்
தே துந்த கந்த அரவிந்தே-உந்தியை மூல கந்தமாக உடைய தாமரை மலரில்

நளிர் மதிச் சடையனே என்பாரும் நான் முகக் கடவுளே என்பாரும் இமையவர் தலைவனே என்பாரும்
கார்ய வர்க்கத்தில் ஏக தேசம் அன்றோ
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கே —
திரு நாபிக்கமலத்தை தொழுது பரத்வ சங்கை தீர்த்துக் கொள்ளலாமே
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹு தாசனான் -சர்வ பூத அந்தராத்மாநாம் விஷ்ணும் ஏவ யஜந்தி தே —
இத்யாதிகளில் மஹரிஷிகள் அறுதி இட்ட படி ராஜ சேவகர் ராஜாவுக்கு சட்டை மேலே மாலையையும் ஆபரணத்தையும்
இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே பிரயோஜனமாகத் தெளிந்து இருக்குமா போலேயும்–
க்ருதக்ருத்யாதிகாரம் -ரஹஸ்ய த்ரயம் -தேசிகன் –

————–

முஷ்ணந் கிருஷ்ண ப்ரிய ஜன ஜனைர் ஐய்ய ஹையங்க வீநம்
தாம்நா பூம்நா வரத ஹி யயா த்வம் யசோதா கராப்யாம்
பத்தோ பந்த ஷபண கரணீம் தாம் கிலாத்யாபி மாதுஸ்
ப்ரேம்ணா காத்ராபரணம் உதார பந்த நாக்க்யம் பிபர்ஷி–54-

ஹே வரத
கிருஷ்ண த்வம் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்து அருளின நீ
ஐய்ய ஹையங்க வீநம் -ஜெயித்து சம்பாதிக்கக் கூடிய நவ நீதத்தை -கவ்யத்தை –
ப்ரிய ஜன ஜனைர் ஸஹ –தோழன்மாரோடே கூட
முஷ்ணந் -களவாடினவனாய்
யசோதா கராப்யாம்-யசோதா பிராட்டியின் திருக்கைகளால்
யயா தாம்நா பூம்நா பத்தோ–யாதொரு தாம்பினால் மிகவும் கட்டுண்டவனாய்
அபூ -ஆனாயோ
பந்த ஷபண கரணீம் -சம்சார பந்தம் என்னும் கட்டை அவிழ்த்துத் தொலைக்க வல்ல
தாம் -அந்தத் தாம்பை
அத்யாபி -ஸ்ரீ பேர் அருளாளனாக சேவை சாதிக்கும் இப்போதும்
மாதுஸ் ப்ரேம்ணா -தாய் இடத்தில் அன்பினால்
உதார பந்த நாக்க்யம் -உத்தர பந்தனம் என்று பெயர் பூண்ட
காத்ராபரணம் பிபர்ஷி-தேஹ பூஷணமாக சாத்தி அருளா நின்றாய் –

திரு நாபீ கமலத்தை விட திரு உதர பந்தத்தின் உத்கர்ஷம்-
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் விகணயதி வைச்வர்யம் வ்யாக்யாதி
ரெங்க மகேசிது ப்ரணத வசதாம் ப்ரூதே தாமோதரத்வகரஸ் கிண ததுபய குணாக்ருஷ்டம் பட்டம்
கிலோதர பந்தனம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய் வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காணேடீ என்று
ஏசும்படி போலே -சகல வஸ்துக்களுக்கும் கடவனானானாலும் அஞ்ஞாரையும் அசக்தரையும் போலே
களவு வழியிலே கைப்பற்றி ஸுலப்யத்தை பிரகாசப் படுத்திக் கொண்டு இருந்தாய்
பூம் நா -வாஹுல் யேந அதிசயேந அத்யர்த்த -மிகவும் -முதலிலே திரு வயிற்றிலே கட்டி பிறகு
திரு வயிற்றையும் குரலையும் இணைத்துக் கட்டின மிகைப்பு
அவனுடைய அனுக்ரஹ பரிவாக ரூபமான இந்த பந்தத்தை அனுசந்திக்க பந்த நிவ்ருத்தயே பலம்
தாம்புகளால் புடைக்க அலருமவன் அன்றோ -அந்த மாதாவின் ப்ரேமமே இந்த உதர பந்தன திரு ஆபரணம்

—————

ஸுந்தர்யாக்க்யா சரித உரசி விஸ்தீர்ய மத்யாவருத்தா
ஸ்தாந அல்பத்வாத் விஷம கதிஜ ஆவர்த்தகர்த்தாப நாபி
ப்ராப்ய பிராப்த ப்ரதிம ஜனகம் விஸ்த்ருதா ஹஸ்தி நாத
ஸ்ரோதோ பேதம் பஜதி பவத பாத தேச அபதேசாத் –55-

ஹே ஹஸ்தி நாத
உரசி விஸ்தீர்ய –திரு மார்பில் பரவி பெருகிக் கொண்டு வரும் அளவில்
மத்யாவருத்தா -மத்ய பிரதேசத்தால் தடைப்பட்ட தாய்
ஸ்தாந அல்பத்வாத் -அவகாசம் ஸ்வல்பமாய் இருந்ததால் உண்டான
விஷம கதிஜ ஆவர்த்தகர்த்தாப நாபி -விஷம கதியால் உண்டான குழி போன்று இருக்கிற நாபியை உடைத்தான்
ஸுந்தர்யாக்க்யா சரித -ஸுந்தர்யம் என்று பெயர் பெற்ற நதியானது
பிராப்த ப்ரதிம -அடையப்பட்ட ப்ருதத்வத்தை உடைய -கனமான
ஜனகம் ப்ராப்ய-ஜனக பிரதேசத்தை அடைந்து
விஸ்த்ருதா -சதீ -முன்பு திரு மார்பில் போலே பரவியதாய்க் கொண்டு
பவத பாத தேச அபதேசாத் –உன்னுடைய திருவடிகள் என்கிற வ்யாஜத்தாலே
ஸ்ரோதோ பேதம் பஜதி -ப்ரவாஹ பேதத்தை அடைகிறது -இரண்டு வாய்க்காலாய் பிரிகிறது என்றபடி

பெரிய வரை மார்பு அன்றோ இவனது –
திருவடிகள் ஸுந்தர்யமே வடிவு எடுத்தால் போன்றுள்ளவை என்றதாய்த்து

——————

ரம்பாஸ் தம்பாஸ் கரிவர கராஸ் காரபாஸ் சாரபாஜ
வேஷா ஸ்லேஷா அபி மரகதஸ்தம்ப முக்யாஸ் துலாக்யாஸ் அபி
சாம்யம் சம்யக் வரத ந ததுஸ் சர்வம் உர்வோஸ் த்வ தூர்வோ
ந ஹி ஐஸ்வர்யம் தததி ந ததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா –56-

ஹே வரத
சாரபாஜ -பலிஷ்டங்களான
ரம்பாஸ் தம்பாஸ் -வாழைத்தண்டுகள் என்ன
கரிவர கராஸ் -கஜேந்திரனின் துதிக்கைகள் என்ன
காரபாஸ் –கரப பிரதேசங்கள் என்ன
மரகதஸ்தம்ப முக்யாஸ் –மரகத மயமான தூண் முதலியவை என்ன
ஆகிய இவை எல்லாம்
வேஷா ஸ்லேஷா -திருத் துடைகளினுடைய ஆக்ருதி போன்ற ஆக்ருதியின் சம்பந்தத்தை உடையவர்களாய்
அத ஏவ
துலாக்யாஸ் அபி -உபமானமாகப் போறும் பிரசித்தியை உடையவை யாயினும்
உர்வோ-பருத்து இருக்கிற
த்வ தூர்வோ–உனது திருத்துடைகளுக்கு
சர்வம் சாம்யம் –சர்வாத்மநா சாம்யத்தை
சம்யக் ந ததுஸ் -நன்றாகக் பெறவில்லை
ஹி -ஏன் என்றால்
தே -கீழ்ச் சொன்ன ரம்பாஸ் தம்பாதிகள்
ததா ஐஸ்வர்யம் –அப்படிப்பட்ட சக்தி விசேஷத்தை
ந தததி –வஹிக்கின்றன அல்லவே
ததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா –ந தததி –எப்போதும் யவ்வன ஆரம்பமேயாய் இருக்கிற அப்படிப்பட்ட அழகுகளையும் –
அல்லது யவ்வன ஆரம்பத்தில் உண்டாக்க கூடிய அப்படிப்பட்ட விகாசங்களையும் வஹிக்கின்றன அல்லவே
அடி பெருத்து நுனி சிறுத்து இருக்கையாலே மட்டுமே இவை த்ருஷ்டாந்தங்களாக சொல்லப்படுகின்றன
ஹஸ்தி ஹஸ்த யுகலாப ஸூ வ்ருத்தவ் ராஜதஸ் க்ரம க்ரஸவ் ச சதூரூ ஸூந்தரஸ்ய வன பூதரபர்த்து- என்று அங்கும் உண்டே
பிரதான அம்சங்களில் குறை உற்று இருக்குமே –
ஐஸ்வர்யம் -சக்தி -மதுகைடப சம்ஹார வ்ருத்தாந்தம்

—————-

யா தே காத்ரே வரத ஜனிதா காந்தி மயீ யா ஆபகா பூத்
தஸ்யாஸ் ஸ்ரோதா த்விதயமிஹ யத் யாதி பாத பிரவாதம்
தஜ்ஜாத ஊர்த்வ ப்ரமியுக மிவ உத்பாநு நீ ஜாநு நீ தே
ஸ்யாத் உஷ்ணோர் வா காகுதயுகளம் யவ்வன ஐஸ்வர்ய நாம் நோ –57-

ஹே வரத
தே காத்ரே –உனது திரு மேனியில்
காந்தி மயீ–காந்தி ஸ்வரூபமான
யா ஆபகா-யாதொரு நதியானது
ஜனிதா –உண்டாக்கப்பட்டு இருக்கிறதோ
தஸ்யாஸ்–அந்த நதியினுடைய
யத் ஸரோதா த்விதயம் -இரண்டு பிரிவான யாதொரு பிரவாஹமானது
இஹ -இந்தத் திரு மேனியில்
பாத பிரவாதம் –திருவடிகள் என்கிற வ்யாஜத்தை
யாதி -அடைகின்றதோ
உத்பாநு-மேல் கிளர்ந்த சோபையை யுடைய
தே ஜாந-உனது முழந்தாள்கள்
தஜ்ஜாத ஊர்த்வ ப்ரமியுக மிவ–பாத பிரவாதத்தை அடைந்த அந்த ப்ரவாஹ த்வயத்தில் உண்டான
ஊர்த்வ ஆகாரமான இரண்டு நீர்க்குமிழி போலே
பாத –விளங்குகின்றன
வா -அல்லது
யவ்வன ஐஸ்வர்ய நாம் நோ –யவ்வனம் என்னும் ஐஸ்வர்யம் என்னும் பெயரை உடைய
உஷ்ணோர் காகுதயுகளம் -ஸ்யாத்-இரண்டு எருதுகளினுடைய இரண்டு முசுப்புகளாம்

யவ்வன வ்ருஷ ககுதோத் பேத நிபம் நிதராம்பாதி விபோ ரூபபயம் ஜானு
சுபாக்ருதிகம் –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் ஸ்லோகம்

————-

ப்ரேம்ணா ஆக்ராதும் கரிகிரிசிரஸ் அதோமுகீ பாவ பாஜோ
அங்கரி த்வந்த ஆஹ்வய கமலயோர் தண்டகாண்ட யமாநே
அத்ரிஸ் ஸ்பர்சோத்பவ ஸூகத உத் கண்டகே ரோம ஹர்ஷத்
த்ரஷ்டுர் த்ருஷ்டிர் வரத கிம் அலம் லங்கிதும் ஜங்கிகே தே -57-

ஹே வரத
கரிகிரிசிரஸ் –கரி கிரியின் உச்சியை
ப்ரேம்ணா ஆக்ராதும் –போக்யதா அதிசய ப்ரயுக்தமான ஆக்ராணம் செய்வதற்கு
அதோமுகீ பாவ பாஜோ –கவிழ் முகமாய் இருக்கும் நிலைமையை அடைந்துள்ள
அங்கரி த்வந்த ஆஹ்வய கமலயோர் –திருவடி இணைகள் என்னும் தாமரை மலர்களினுடைய
தண்டகாண்ட யமாநே –நாளத்தண்டு போன்றனவாய்
அத்ரிஸ் ஸ்பர்சோத்பவ ஸூகத –திருமலையோட்டை ஸ்பர்சத்தால் உண்டான ஸூகத்தினால் ஆகிய
ரோம ஹர்ஷத் -உத் கண்டகே—மயிர்க்கூச்சு எறிவதால் கண்ட கிதங்களாய் இருக்கிற
தே ஜங்கே –உனது கணைக்கால்கள்
த்ரஷ்டுர் த்ருஷ்டிர் -சேவிப்பவனுடைய கண்கள்
கிம் அலம் லங்கிதும் -விட்டு அவ்வருகே போக வல்லதோ –

அத்யந்த ப்ரீதி விஷயமான வாஸ்துவில் ப்ரீதி பரீவாஹமாக செய்யும் செயல்களில் உச்சி முகருகை-
என்பது ஓன்று உண்டே
ஏன் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாது உச்சி –
திருமலையை உச்சி முகந்து மகிழ திருவடித்தாமரை அதோ முகத்வத்தைப் பிராபிக்க-
கணைக்கால்கள் நாளத்தண்டு ஸ்தானத்தைப் பிராபித்தனவே

அதோ முக ந்யஸ்த பதாரவிந்தயோ -உதஞ்சி தோதாத்த ஸூநால சந்நிப –விலங்க்ய ஜங்கே க்வநு ரம்ஹதோ
த்ருஸவ் வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –என்று அங்கும் உண்டே
நாளமாக சொன்னால் -ரோமாஞ்சம் -இஷ்ட தம வஸ்து சங்கத்தால்
வைத்த கண் வாங்காதே அமையும் கொட்டாமல் சதா தர்சனம் பண்ணிக் கொண்டே இருக்கும் படி
திருக் கணைக் கால்களின் அழகு –

——————–

பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம்
யச்ச அம்லாநம் வரத சததாத்யாச நாத் ஆசநாப்ஜம்
ஆம்நாயநாம் யதபி ச சிரோ யச்ச மூர்த்தா சடாரே
ஹஸ்த்யத்ரேர் வா கிமதி ஸூ கதம் தேஷு பாதாப்ஜ யோஸ் தே –59-

ஹே வரத
பக்தாநாம் –பக்தர்களான யோகிகளுடைய
வபுஷி -சரீரத்தில்
பண்டிதம் -ஞான விகாச சாலியாய்
தஹரம் –தஹரம் என்று பேர் உடையதாய்
யத் புண்டரீகம் -யாதொரு தாமரை உண்டாய்
பரமபதத்தில்
சததாத்யாச நாத் – அபி – அம்லாநம் –நீ எப்போதும் வீற்று இருந்த போதிலும் வாட்டம் அடையாத
ஆசநாப்ஜம் ச யத் –ஆஸனத் தாமரை என்று யாது ஓன்று உண்டோ
ஆம்நாயநாம் சிரோபி யதபி -வேதாந்தம் என்பது யாதொன்று உண்டோ
சடாரே மூர்த்தா யச் ச–நம்மாழ்வாருடைய திரு முடி யாது ஓன்று உண்டோ
ஹஸ்த்யத்ரேர் மூர்த்தா யச் ச-இந்த ஹஸ்தி கிரியின் சிகரம் யாது ஓன்று உண்டோ
தேஷு–ஆக பிரசித்தமான இந்த ஸ்தானங்களுக்குள்
தே பாதாப்ஜ யோஸ் தே –அதி ஸூகதம்-கிம் வா -உன் திருவடித் தாமரைகளுக்கு
மிக்க ஸூகத்தைக் கொடுக்கும் இடம் ஏது கொல்

திரு ஹஸ்திகிரி மலையின் உச்சியே யாம் என்கிற தமது திரு உள்ளக்கருத்தை ப்ரஸ்ன முகேன அருளிச் செய்கிறார்

போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலுள் வாழ வல்ல என் மாய மணாளா நம்பி
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்
நான் மறை உச்சியில் நன்கு விளங்கிய நாரணனார் பதம்
வந்து எனது உச்சி உளானே
திருமாலிருஞ்சோலை மலையே
திருப்பாற் கடலே என் தலையே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம –சாந்தோக்யம் -2-1-1-
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் தஹர அதிகரண ப்ரமேயம் அனுசந்திப்பது

பிராமண பலத்தால் பக்த ஜன ஹ்ருதய புண்டரீகாதிகள் பாங்கான பிரதேசமாக இருந்தாலும்
ப்ரத்யக்ஷத்திலே ஸ்ரீ ஹஸ்திகிரி மூர்த்தாவே பாங்கான பிரதேசம் என்று சொல்லலாமே
நீயே சோதிவாய் திறந்து அருளிச் செய்து அருளுவாய்

சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை யுறையும் ஆயா -எனக்கு உரையாய் இது –
மறை நான்கின் உள்ளாயோ-தீ ஒப்பு கை மறையோர் சிறு புலியூர் சல சயனத்தாயோ –
உனது அடியார் மனத்தாயோ -அறியேனே –பெரிய திருமொழி -7-9-7–
ஸுவ்பரி -பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை
என்னும் படி குறைவற வர்த்திக்கும் படியைக் காட்டிக் கொடுத்தான்

——————-

பத்யாஸ் வத்ய அங்குளீஷு வரத ப்ராந்ததஸ் காந்தி ஸிந்தோ
வீசி வீதி விபவம் உபயீஷு அம்பசோ லம்பிதாஸூ
விந்தந்ந் இந்துஸ் பிரதிபலநஜாம் சம்பதம் கிம் பதம் தே
சாயாச்சத்மா நகவிததி தாம் லம்பிதஸ் சும்பிதஸ் சந் –60-

ஹே வரத
காந்தி ஸிந்தோ –காந்திக் கடலினுடைய
அம்பசோ ப்ராந்ததஸ்–நீரைச் சுற்றி
வீசி வீதி விபவம்–அலை வரிசையின் சோபையை
லம்பிதாஸூ –அடைவிக்கப்பட்டு இருக்கிற
பத்யாஸ் உபயீஷு அங்குளீஷு –திருவடிகளில் உண்டான இரண்டு வகுப்பான திரு விரல்களில்
பிரதிபலநஜாம் சம்பதம்–பிரதிபலிப்பதனால் உண்டான சோபையை
அத்ய விந்தந்ந் –இப்போது அடைகிறவனாய்
அத ஏவ
சாயாச்சத்மா–ப்ரதிச்சாயா ஸ்வரூபனான
இந்துஸ் –சந்த்ரனானவன்
நகவிததி தாம்-நக பங்க்தியாய் இருக்கையை
லம்பிதஸ் சந் –அடைவிக்கப் பட்டவனாய்
தே பதம் –உனது திருவடியை
கிம்
சும்பிதஸ் கிம் — -விளங்கச் செய்தனன் கொல்

காந்தி சமுத்திரம் -இருக்க அலைகளும் இருக்குமே -அவையே திரு விரல்கள் –
அதில் பிரதிபலியா நின்ற சந்திரன் -ப்ரதிச்சாயை வியாஜத்தாலே திரு நக பங்க்தி

ஸுவ்ந்தர்ய சாரம் அம்ருத சிந்து வீசீச்ரேணீ ஷு பாதாம் குலி நாமிகா ஸூ – ந்யக்க்ருத்ய
சந்த்ரச்ரியமாத்ம காந்த்யா நகா வலீ சம்பாதி ஸூந்தரஸ்ய —

பிரதிபலநஜாம் சம்பதம்-என்றது சங்கரன் சடையினில் தங்கிச் சீர் குலைந்து இருக்குமவனுக்கு
கிடைத்த ஐஸ்வர்யம் என்றவாறு –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -41-50–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 21, 2019

பத்மாயாஸ் ப்ரணய ரஸாத் ஸமாஸ ஜந்த்யா ஸ்வம் பாஹும் ஸூ பஹு மதோ புஜேன தேந
காம் நாம அந்வ பவத் அஹோ தஸாம் தாதத்வே கண்டஸ் தே கரி கிரி நாத கம்பு காந்த -41-

ஹே கரி கிரி நாத
கம்பு காந்த -சங்கம் போல் அழகிய
தே கண்ட — உன்னுடைய திருக் கழுத்தானது
ப்ரணய ரஸாத்-ப்ரீதி ரசத்தாலே
தேந புஜேன ஸ்வம் பாஹும்ஸமாஸ ஜந்த்யா-அப்படிப்பட்ட உன்னுடைய புஜத்தோடே தன்னுடைய புஜத்தைத் தழுவி முழுசா நின்ற
பத்மாயாஸ் -பிராட்டிக்கு
ஸூ பஹு மதஸ் ஸந் -மிகவும் பஹு மான பாத்திரமாய்க் கொண்டு
தாதத்வே–அக்காலத்திலே
காம் நாம தஸாம் அந்வ பவத் அஹோ-எந்த அவஸ்தையை அனுபவித்ததோ -அந்தோ –

திருக்கழுத்தானது -க்ரமுக தருண க்ரீவை போலவும் சங்கம் போலவும் -ரேக த்ரய விபக்த அங்கமாய் இருக்குமே –
அத்தைக் கண்டவாறே -ப்ரணய விலகல் லஷ்மீ விஸ்வம்பரா கரகந்தலீ கனக வலய கிரீடா சம்க்ராந்தரேக
இவோல்லசந் -என்றால் போலே ஆழ்வான் ஈடுபடுகிறார்
தழுவி முழிசிப் பரிமாறின சமயங்கள் பலவும் உண்டே
திருப் பாற் கடல் கடைந்த போது திவ்ய மால்யாம்பர தரையாய்-சர்வ பூஷண பூஷிதையாய் சகல தேவர்களும் பார்க்க
கரவத அநந்தரம் பண்ணி அருளிய பரிஷ்வங்கம் -ஒளஷதமாக காடாலிங்கனம்
இவை எல்லாம் ஆழ்வானுக்கு விவஷிதம் இல்லையாம்
விசேஷித்து கிருஷ்ணாவதாரத்தில் கண்டா ஸ்லேஷம் பண்ணி அருளி
எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டால் இந்தப்பக்கம் நின்றவர் என் சொல்லார் என்று
அஞ்ச வேண்டிய நிலத்தில் இன்றிக்கே
பொய்கை முது மணல் முல்லை பந்தல்களிலே பண்ணும் விகாரம் ஆகையால்
ஆலிங்க தாயாம் புநர் ஆயதாஷ்யா மாம் ஆஸாஸ் மஹே விக்ரஹயோர பேதம் -என்னும்படி
ப்ரணய ரசம் மீதூர்ந்து இருக்கும் அன்றோ
அர்ச்சையிலும் விபவதார தாதாம்ய அனுசந்தான உறைப்பு இருக்கும் படி –
பிராட்டி யுடைய பஹு மான விசேஷங்களுக்குப் பாத்திரமான உனது திரு மிடரானது –
நெஞ்சால் நினைப்பரிதால்–சொலப் புகில் வாய் அமுதம் பரக்குமே –
அந்த சமயத்தில் இமிடறு படும் பாட்டை நேராக காணப் பெறாத இழவு சொல் நலத்தில் வெளிப்படுகிறதே

இந்த ஸ்லோகம் தொடங்கி -11-ஸ்லோகங்கள் ப்ரஹர்ஷிணீ வ்ருத்தம்

—————

சாயாமா த்ருத பரிணத்தய அப்தயோ வா தாத்ருஸ்யஸ் ஸ்புட மத திசச் சதஸ்ரஸ்
ஸத்வாரோ வரத வர பிரதாஸ் த்வதீயாஸ் பாஸந்தேந் புஜ பரிகாஸ் தமால நீலா–42-

ஹே வரத
தமால நீலாஸ் -பச்சிலை மரம் போலே கறுத்தவையாயும்
வர பிரதாஸ் -அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அளிக்க வல்லவையாயும்
ஸத்வாரோஸ் -நான்காயும் உள்ள
த்வதீயாஸ் புஜ பரிகாஸ் சாயாமா –ஊழல் தடி போன்ற உனது புஜங்களானவை தீட்சியோடே கூடி
த்ருத பரிணத்தய –சுற்றுப் பரப்பு உடைத்தான்
அப்தயோ வா -கடல் போலவோ
அத -அன்றி
தாத்ருஸ்யஸ் சதஸ்ரஸ் திசோ வா –அத்தனை நீட்சியும் சுற்றுப்பரப்பும் உடைத்தான் நான்கு திசைகள் போலவோ
பாஸந்தே–விளங்கா நின்றன
ஸ்புடம் -உத்ப்ரேஷா ஸூசக மவ்யயம்

பாஹுச் சாயாம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மனா -ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே விஞ்சி விஸாதல மங்கலமாய் இருக்குமே
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அன்றோ பேர் அருளாளன்
கற்பகக் காவென நற் பல தோளன்
பறிக்கும் -ஊழல் தடி -ஆஸ்ரயித்தர் அஞ்ச வேண்டாம் படி ரக்ஷணத்துக்கு ஸூ த்ருட பரிகரம்
நீளம் -சுற்றுடைமை -நைல்யம் -ஸ்ரமஹரத்வம்-வதூஸ் சங்கத்தவம் – பற்ற கடல் போலே –
இத்தாலேயும் திருப்தி பெறாதே –
நான்கு திசைகள் -கடலுக்கு அகல நீளங்கள் ஓர் அளவிலே விச்சித்தி உண்டே –
திக்குகளில் விஸ்தாரம் அங்கன் அல்ல இறே

—————–

ஆஸ்லேஷ வரத புஜாஸ் தவ இத்திராயாஸ் கோபீ நம் அபி மத ராஸ பந்தநே வா
பந்தே வா முதம் அதிகம் யசோதயாஸ் ஆஹோ ஸம்ப்ராப்தாஸ் தவ நீத மோக்ஷ தோஷாத் –43-

ஹே வரத
தவ புஜாஸ் –உன்னுடைய புஜங்கள்
இத்திராயாஸ் ஆஸ்லேஷ வா –பிராட்டியின் ஆலிங்கத்தினாலேயோ
கோபீ நம் அபி மத ராஸ பந்தநே வா –ஆய்ச்சிகளுக்கு அபிமதமாகத் திருக் குரவை கோத்ததிலேயோ
ஆஹோ–அல்லது
தவ நீத மோக்ஷ தோஷாத் –வெண்ணெய் களவு கண்ட குற்றத்துக்காக
யசோதயாஸ் பந்தே வா -யசோதையினால் கட்டுண்டதாலேயோ
அதிகாம் முதம் ஸம்ப்ராப்தாஸ் -அதிகமான மகிழ்ச்சியை அடைந்தன

மீண்டும் திருப்புஜ அனுபவம் –
அபிமதலாபம் கிடைக்கப் பெற்ற ஹர்ஷத்தாலே ஓங்கி உலகளந்தது போலே –
வளர்த்திக்கு ஹேதுக்கள் இதுவோ அதுவோ என்று –ப்ரச்ன த்ரயங்கள் –
பத்மா பரிஷ்வங்கமோ -ராஸ பந்தநமோ -தாம பந்தநமோ -மூன்றனுள் அளவிறந்த ஹர்ஷம்
எந்த அவசரத்தில் சொல்லாய் என்கிறார் –

——————

சாலீயா இவ விடபாஸ் ச பல்லவாக்ராஸ் கல்லோலா இவ ஜலதேஸ் ஸவித்ருமாக்ராஸ்
போகீந்த்ரா இவ ச பணாமணீத்த வக்த்த்ரா பாஸந்தே வரத புஜாஸ் தவா ருணாக்ராஸ் –44-

ஹே வரத
ருணாக்ராஸ் தவ புஜாஸ் – சிவந்த நுனிகளை யுடைய -சிவந்த திரு விரல்களை யுடைய -உன்னுடைய புஜங்கள்
ச பல்லவாக்ராஸ் சாலீயா-தளிரொடு கூடின நுனிகளை யுடைத்தான சால வ்ருஷத்தினுடைய
இவ விடபாஸ் -கிளைகள் போலவும்
ஸவித்ருமாக்ராஸ் ஜலதேஸ் -பவளங்களோடு கூடின நுனிகளை யுடைய கடலினுடைய
கல்லோலா இவ -பெரிய அலைகள் போலவும்
பணாமணீத்த வக்த்த்ரா-படங்களினுடைய மணிகளால் பிரகாசிக்கின்ற முகங்களை யுடைய
போகீந்த்ரா இவ ச-சேஷன் வாஸூகி முதலிய அரவரசர்கள் போலவும்
பாஸந்தே –விளங்குகின்றன —

இந்த ஸ்லோகத்தால்
பணைகள் போலவும் -அலைகள் போலவும் -அரவங்கள் போலவும் -நீண்டு மநோ ஹரங்களாய் விளங்கும் திருக்கைகளையும்
செவ்விதழ் போலவும் பவளங்கள் போலும் செம்மணி போலும் விளங்குகின்ற திரு விரல்களும் அனுபவிக்கப் பட்டன
அருணாக்ர–திரு விரல்களுக்கு வாசகம் வ்யக்தமாக இல்லை எனிலும் அக்ர பதம் அங்குளியை லஷிக்கிறது

——————–

அம்போதேஸ் ஸ்வயம் அபி மந்தநம் சகர்த்த ஷோணீத்ரம் புநர் அபிபச் ச சப்த ராத்ரம்
சப்தா நாம் வீவலயசி ஸ்ம கண்டம் உஷ்ணம் அம்லாநா வரத ததாபி பாணயஸ் தே –45-

ஹே வரத
ஸ்வயம்-நீ தானே
அம்போதேஸ் அபி மந்தநம் சகர்த்த -கடல் கடைவதை செய்து அருளி நின்றாய்
புநர்-அன்றியும்
ஷோணீத்ரம் அபிபச் ச சப்த ராத்ரம் -கோவர்த்தன மலையை ஏழு நாள் அளவும் தாங்கி நின்றாய்
சப்தா நாம் உஷ்ணம் கண்டம் ச -ஏழு ரிஷபங்களினுடைய கழுத்தையும்
வீவலயசி ஸ்ம -நப்பின்னைப் பிராட்டிக்காக முறித்தாய்
ததாபி-இத்தனையும் செய்து வைத்து அருளையும்
தே பாணயஸ் அம்லாநா –உனது திருக்கைகள் வாட வில்லை –
இத்தனை ஆனைத் தொழில்கள் செய்தாலும் வாட வில்லையே என்று விஸ்மிதராகிறார் –

சமுத்திர மதனம் -கோவர்த்தன உத்தரணம்-சப்த ரிஷப பஞ்சனம் மூன்று திவ்ய சேஷித்தங்களையும்
அருளிச் செய்கிறார்
அந்த மிடுக்குத் தோன்ற ஸ்ரீ ஹஸ்தி கிரி மூர்த்தாவில் எழுந்து அருளி சேவை சாதிக்கின்றானே –
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிட்று இல
வடிவேறு திரு உகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் ஸம்பிரதம் -பெரியாழ்வார்

—————-

ரிங்காதோ வ்ரஜ சதந அங்கணேஷு கிம் தே கோயஷ்டி கிரஹண வசாந்நு கோப கோஷ்ட்யாம்
ஆலம்பாத் ஹய நய ஸூத்ர தோத்ரயோர் வா பாணீநாம் வரத தவ அருணத்வம் ஆஸீத் -46-

ஹே வரத
வ்ரஜ சதந அங்கணேஷு–திருவாய்ப்பாடியில் உள்ள மனைகளின் முற்றங்களில்
ரிங்காதோ கிம் -தவழ்ந்து விளையாடிதானாலேயோ
கோப கோஷ்ட்யாம் –ஆயர்கள் திரளிலே
கோயஷ்டி கிரஹண வசாந்நு -பசுக்களை மேய்க்கும் கோல்களைப் பிடித்ததாலேயோ
ஹய நய ஸூத்ர தோத்ரயோர் ஆலம்பாத் வா –பார்த்த சாரதியாய் இருந்த போது தேர்க் குதிரைகளை
சிஷித்து நடத்தும் கருவிகளாய் இருந்த கடிவாளத்தையும் சாட்டையும் பிடித்ததானாலேயோ
தவ பாணீநாம் –உனது திருக்கைகளுக்கு
அருணத்வம் ஆஸீத் -சிகப்பு உண்டாயிற்று –

தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்க தவழ்ந்து போய் பொன் முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளைகின்றான்
தண்ணம் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்து எழுந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணில் செம்பொடி யாடி வந்து –
வேலிக் கோல் வெட்டியிலே யசோதை யானவள் காக்கையை நோக்கி
காலிப்பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
லீலா யஷ்டிம் கரகி சலயே தஷிணேந் யஸ்ய தன்யாம் –ஸ்ரீ தேசிகரும் இத்தை ஒட்டியே அனுபவம்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
தோத்ரம் -குதிரைச் செலுத்தும் சாட்டை
ரிங்கா -பாலானாம் ஹஸ்த பாத கைமணம் -இரண்டு கைத்தலங்களையும் தரையிலே ஊன்றி
முழந்தாள்களாலே தவழ்ந்து செல்லுகை –

———————–

சர்வஞ்ஞாஸ் சமுசித சக்தயஸ் சதைவ த்வத் சேவா நியம ஜூஷஸ் த்வத் ஏக போகாஸ்
ஹேதீநாம் அதிபதயஸ் சதா கிம் ஏதாந் சோபார்த்தம் வரத பிபர்ஷி ஹர்ஷதோ வா -47-

ஹே வரத
ஹேதீநாம் அதிபதயஸ்–திவ்ய ஆயுத தலைவர்களான சங்க சக்ராதிகள்
சர்வஞ்ஞாஸ் -சர்வஞ்ஞர்களாயும்
சமுசித சக்தயஸ் -அந்த ஞானத்துக்கு ஏற்ற சக்தி உள்ளவர்களாயும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஓக்க அருள் செய்பவன் அன்றோ –
த்வத் ஏக போகாஸ்-அநந்ய போகர்களாயும்–அத ஏவ —
சதைவ –எப்போதும்
த்வத் சேவா நியம ஜூஷஸ் –உன்னையே சேவித்துக் கொண்டு இருப்பதில் நையத்யம் உடையவர்களாயும்
சந்தி -இருக்கிறார்கள்
ஏதாந்-இப்படிப்பட்டவர்களை
சோபார்த்தம் வா -அழகுக்காகவோ
ஹர்ஷதோ வா -சந்தோஷத்தினாலோ
சதா பிபர்ஷி–எப்போதும் வஹித்துக் கொண்டு இருக்கிறாய்

ரதாங்க சங்க அஸி கதா தநுர் வரை –ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் திவ்ய ஆயுத கோடியிலும்
திவ்ய ஆபரண கோடியிலும் பரிகணநம் உண்டு அன்றோ
ஆயுதத்வ ஆகாரேண சதா தாரணம் அநாவஸ்யம் ஆகையால் ஆபரணத்வேன தாரணமே அடுக்கும் என்று
திரு உள்ளம் பற்றி ப்ரஸ்ன வ்யாஜ்யேன அருளிச் செய்கிறார்
மாணிக்ய மந்திரத்துக்கு மங்களார்த்தமாக மணி விளக்கு ஏற்றுமா போலே சோபார்த்தமாகவே ஏந்தி உள்ளாய் –
ஆபரணங்களை அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ –
வகுத்த ஸ்தானத்தில் இல்லாத பொழுது அழகு இழக்குமே
அத்தானிச் சேவகரை ஹர்ஷ மிகுதியால் அணைத்துக் கொண்டு இருக்குமா போலே இவர்களுடைய
ஸர்வஞ்ஞத்வ- சர்வசக்தித்வாதி அனுசந்தான ஜெனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
விடமாட்டாதே தரித்துக் கொண்டுள்ளாயா

—————————–

கிம் தாதுர் ககந விதாந் மாத்ருகா அபூத் வஷிஸ் தே வரத வரேண்ய யத்ர நாம
பத்மாயா முகம் அத கௌஸ்துபச் ச ஜாதவ் சந்த்ர அரக்கவ் உடு நிகாரயதே து ஹார –48-

ஹே வரத வரேண்ய-வரம் அழிக்கும் தேவர்களில் சிறந்த வரதராஜனே
யத்ர வஷிஸி–யாதொரு திரு மார்பில்
பத்மாயா முகம்-பிராட்டியின் திரு முகமும்
அத கௌஸ்துபச் ச -கௌஸ்துப மணியும்
சந்த்ர அரக்கவ் ஜாதவ் -சந்த்ர ஸூர்யர்களாய் ஆயினவோ
ஹாரஸ் து –முக்தா ஹாரமோ என்றால்
உடு நிகாரயதே–நக்ஷத்ர சமூகம் போன்றதோ
ததிதம் -அப்படிப்பட்ட இந்த
தே வக்ஷஸ் -உன்னுடைய திரு மரபானது
தாதுர் -ப்ரஹ்மாவுக்கு
ககந விதாந் மாத்ருகா அபூத் நாம -ஆகாசம் என்ற பூதத்தை ஸ்ருஷ்டிப்பதற்கு மூல நிதர்சனமாக ஆயிற்றோ –

உனது திருமார்பையே மாத்ருகையாக நான்முகனுக்கு காட்டி அருளினாயோ
பிரதி சம்பந்தி புத்ரிகை –
ககனம் ஆகிற புத்ரிகைக்கு திரு மார்பு மாத்ரிகை –சத்ருசம் -சாதரம்யம்
இத்தால் திரு மார்பின் வைஸால்யமும் நைர்மல்யமும் அருளிச் செய்யப்பட தாயிற்று –

——————-

அண்டா நாம் த்வத் உதரம் ஆம நந்தி சந்தஸ் ஸ்தானம் தத் வரத கதம் நு கார்ஸ்யம் அஸ்ய
மஹாத்ம்யம் ஸ்வத இஹ யேஷு நூநம் ஏஷாம் ருத்திஸ் ஸ்யாந் மஹி மகரீ ந ஹீதரேஷாம் –49-

ஹே வரத
த்வத் உதரம்-உனது திரு வயிற்றை
அண்டா நாம் -அண்டங்கள் அனைத்துக்கும்
ஸ்தானம் -இருப்பிடமாக
சந்தஸ்-பராசராதி ப்ரஹ்ம வித்துக்கள்
ஆம நந்தி -இயம்புகின்றனர்
அண்டரண்ட பகிரண்டத் தொரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்டவன் அன்றோ
தத் அஸ்ய கார்ஸ்யம் -அப்படி இருக்க இந்தத் திரு வயிற்றுக்கு மெலிவானது
கதம் நு-எங்கனேயோ -என்று–உண்டது உருக்காட்டாதே சிறுத்துக் கிடப்பான் என் -என்று சங்கித்துத் தாமே ஸமாஹிதர் ஆகிறார் –
இஹ யேஷு–இந்த யுலகில் எந்த வஸ்துக்களில்
மஹாத்ம்யம் –பெருமையானது
ஸ்வத –ஸ்வதஸ் சித்தமோ
ஏஷாம்-இந்த வஸ்துக்களுக்குத் தான்
ருத்திஸ்–உண்டாகிற அந்த ஸம்ருத்தியானது
–பெருமையை விளைக்க வற்று
இதரேஷாம் -இயற்கையான பெருமை இல்லாத -மற்ற வஸ்துக்களுக்கு உண்டாகிற
ருத்திஸ் -ஸம்ருத்தி யானது
மஹி மகரீ ந ஹீ–பெருமையை விளைக்க வல்லது அன்று
நூநம் –இது திண்ணம்

மஹாத்ம்யம் –ஆகார ப்ரயுக்த மஹாத்ம்யமும் குண ப்ரயுக்தமான மஹாத்ம்யமும் உண்டே –
சிறு மா மனுசர் என்று உண்டே
குலம் ரூபம் வாயோ வித்யா -போன்ற சிறந்த குணங்களால் வந்த மஹாத்ம்யம் போலே
இங்கு குண ப்ரயுக்தம் இல்லை ஸ்வரூப மஹாத்ம்யம் என்றவாறு –

——————

ஸுந்தர்ய அம்ருத ரஸவாஹ வேகஜஸ் ஸ்யாத் ஆவர்த்த ஸ்தவ கில பத்ம நாப நாபிஸ்
தத் பத்மம் வரத விபாதி காந்தி மய்யாஸ் லஷ்ம்யாஸ் தே சகல வபுர் ஜூஷஸ் நு சத்ம–50-

பத்ம நாப ஹே வரத
தவ நாபி
ஸுந்தர்ய அம்ருத ரஸவாஹ வேக ஜஸ் –திருமேனி அழகு ஆகிற அம்ருத ரஸ ப்ரவாஹத்தின் வேகத்தால் உண்டான
ஆவர்த்த ஸ்யாத்–சுழியாம்
தத் பத்மம்-அந்த நாபியில் உள்ள தாமரை மலரானது
தே சகல வபுர் ஜூஷஸ்–உன்னுடைய திரு மேனி எங்கும் வியாபித்து இருக்கிற
ஸ்தவ கில நாபிஸ்
காந்தி மய்யாஸ் லஷ்ம்யாஸ் –காந்தி யாகிற லஷ்மிக்கு
சத்ம-நு -விபாதி–இருப்பிடம் போலே விளங்குகின்றது –

கொப்பூழில் எழு கமலப் பூ அழகில் ஈடுபட்டு திரு நாபியையும் திரு நாபி கமலத்தையும் வர்ணிக்கிற படி –
ஸுந்தர்ய ப்ரவாஹத்தின் வேகத்தால் உண்டான சுழியே திரு நாபி
தன் நாபி வலயத்துப் பேர் ஓளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து –பெரிய திரு மடல்
திரு நாபி லாவண்ய சம்பத்தை ஸ்ரீ லஷ்மீ முகேன ரூபணம் பண்ணி –
திரு நாபீ கமலம் திரு மேனி முழுமைக்கும் சோபாவஹமாய் இருக்கும் படியை அனுபவிக்கிறார்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -31-40–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 20, 2019

பரபாகம் இயாத் ரவேஸ் தமிஸ்ரா வர தாத்ய த்வயி தந்நிசாமயாம
கமிதா தவ வக்த்ர சித்ர பாநோ பரபாகம் நநு கௌந்தலீ தமிஸ்ரா –31-

ஹே வரத
தமிஸ்ரா-இருள் திரளானது
ரவேஸ் -ஸூர்யனுக்கு
பரபாகம் –பரபாகம் என்னும் படியை
இயாத் –அடையட்டும்
தத் அத்ய -அந்த நிலையை இப்போது
த்வயி –உன் பக்கலிலே
நிசாமயாம –காணா நின்றோம் -எங்கனே என்னில்
தவ –உன்னுடைய
கௌந்தலீ தமிஸ்ரா –திருக் குழல் கற்றையில் உள்ள இருளானது
வக்த்ர சித்ர பாநோ–திரு முக மண்டலமாகிற ஸூர்யனுக்கு
பரபாகம் கமிதா நநு -பரபாக சோபையை அடைவிக்கப் பட்டு இரா நின்றது இறே

சதுர்த்த தசகம் -திரு முக மண்டல வர்ணந பரமாய்ச் சொல்லுகிறது –
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியோடு தோள் தீண்டியான திரு முக மண்டலத்தின் வெளிச்சிறப்பும்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்-என்று
நித்ய சந்தேக ஜனகமான திருக்குழல் கற்றையின் ஒழுங்கும் –
ஆக இப்படி சாமாநாதி கரண்யம் ஹி தேஜஸ் திமிரயோ குத-என்ன ஒண்ணாமே ஒரு சேர்த்தியாக
அமைந்து இருக்கும்படிக்கு சமத்கார பாசுரம் –

கரிய திரு மேனியில் ஹிரண்ய வரணையான பிராட்டி ஒரு பரபாகம்
கொவ்வைக்கனி போன்ற திரு அதரத்துக்கு-மல்லிகை அரும்பு போன்ற திரு முத்துக்கள் ஒரு பரபாகம்
அதி விசால தமலா நிபமான பாஹுக்களில் கனகமய கடக அங்கதங்கள் விளங்குவது ஒரு பரபாகம்
பகலுக்கு இரவு பரபாகம் என்று லௌகிக மாக சொல்ல முடியாதே –
இப்படி அசங்கடிதமான வ்யவஹாரம் சங்கடிதம் ஆயிடுக என்று ஆபத்தி பண்ணுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஸ்ரீ பேர் அருளாளனுடைய குந்தளங்கள் காள ராத்திரி போலே கறுத்து விளங்குகின்றன என்பதும்
திரு முக மண்டலம் கதிர் ஆயிரம் இரவி போலே ஜ்வலியா நின்றது என்பதும்
இந்த திரு முக திரு குந்தளங்கள் உடைய பரபாக பராசபர ஸ்ரீ பரம போக்யமாய் இரா நின்றது என்பதும்
இதனால் சித்திக்கும்

இந்த தசகம் வசந்த மாலிகா வ்ருத்தம்

————–

உபயோரபி பஷயோஸ் திதிர் யா விஷமீ பாவ நிராசதா அஷ்டமீதி
உபமாநஜ சம்பதே ஹி ச இந்தோ வரத அபூத் பவதோ லலாட லஷ்ம்யா –32-

உபயோரபி பஷயோஸ் -சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் இரண்டு பக்ஷங்களிலும் உள்ள
அஷ்டமீ இதி யா திதி -அஷ்டமீ என்கிற யாதொரு திதியானது
இந்தோ-சந்திரனுக்கு
விஷமீ பாவ நிராசதா–விஷமத் தன்மையைப் போக்கடிக்க வல்லதோ
ச இந்தோ –அந்த அஷ்டமீ திதியானது அந்த சந்திரனுக்கு
பவதோ லலாட லஷ்ம்யா -ஸஹ -உன்னுடைய திரு நெற்றியின் அழகோடு
திதிர் யா
உபமாநஜ சம்பதே ச -ஓப்பிடுவதனால் உண்டாகும் செல்வத்தின் பொருட்டும்
அபூத்-ஆயிற்று

சந்திரனுக்கு விஷம நிலையைப் போக்கி சம நிலை கொடுக்கும் திதி அன்றோ அஷ்டமீ திதி –
அதுக்கும் மேலே அன்றோ உன்னுடைய திரு நெற்றியுடன் சொல்லும் ஒப்புமை

——————-

அலகாலி சிகீர்ஷயா கிலாத்தா ஸூபரீ ஸிஷிஷயா லலாட பட்டே
ஸூமஷீ நிகஷீக்ருதா ப்ருவவ் தே வரத ஸ்யாத் அக்ருதத்வதஸ் து நைவம் –33-

ஹே வரத
விதாத்ரா -ப்ரஹ்மாவினால்
ஆத்தா -கையில் எடுத்துக் கொல்லப்பட்டதாய்
ஸூபரீ ஸிஷிஷயா–அதன் கருமையை நன்றாகப் பரீக்ஷித்துப் பார்க்க வேணும் என்ற விருப்பத்தினாலே
லலாட பட்டே-திரு நெற்றியாகிற கற்பலகையிலே
நிகஷீக்ருதா-உரைக்கப்பட்ட
ஸூமஷீ -நல்ல மையானது
தே அலகாலி சிகீர்ஷயா -உன்னுடைய திருக்குழல் கற்றையை நிரூபிக்க வேணும் என்கிற இச்சையினாலே
ப்ருவவ்-புருவங்களாக
அபூத் -ஆயிற்று
து –இப்படி உத் ப்ரேஷிக்கலாமாயினும்
கிலாத்தா
அக்ருதத்வதஸ் –உன்னுடைய திரு மேனி க்ருத்ரிமம் அன்று ஆகையால் -ஸ்வயம் வ்யக்தமாகையாலே
ஏவம் ந ஸ்யாத் –இங்கனே உத் ப்ரேஷிக்கலாகாது
விதாத்ரா பதம் அத்யாஹரித்து-திருப்புருவங்களின் அமைப்பை உல்லேகித்து
பின்பு அவை ஒப்பில்லாதவை என்னும் இடத்தை ஸ்தாபிக்க பாசுரம் விட்டபடி –
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உட் கொண்ட நீல நன்னூல் தழை கொல்–என்று
முந்துற உத்ப்ரேஷித்து அப்போதே அது அநுப பன்னம் என்று திரு உள்ளம் பற்றி –
அன்று மாயன் குழல் -என்றார் இறே —

———————–

ஸ்ரவசஸ் ச த்ருதஸ் ச சப்த ரூப க்ரஹனே தே ந ஹி ஜீவவத் வ்யவஸ்தா
உபயோ அகிலேஷண ஷமத்வாத் வரதாத ஸ்ரவண ஆஸ்ரய த்ருஸவ் தே –34-

ஹே வரதாத
தே ஸ்ரவசஸ் ச த்ருதஸ் ச -உன்னுடைய திருச் செவிக்கும் திருக் கண்ணுக்கும்
சப்த ரூப க்ரஹனே -சப்தத்தையும் ரூபத்தையும் க்ரஹிக்கும் விஷயத்தில்
ஜீவவத்-ஜீவாத்மாவுக்குப் போலே
வ்யவஸ்தா ந ஹி-இன்ன இந்திரியம் இன்ன குணத்தைத் தான் கிரஹிக்க வற்று என்கிற வ்யவஸ்தை இல்லை யன்றோ
உபயோ -அந்த இரண்டு இந்திரியங்களும்
அகிலேஷண ஷமத்வாத் –எல்லாவற்றையும் ப்ரத்யஷிப்பதில் சமர்த்தங்களாய் இருப்பதால்
தே த்ருஸவ் ஸ்ரவண ஆஸ்ரய –உன்னுடைய திருக் கண்களானவை திருச் செவிகளை ஆஸ்ரயமாக யுடையன ஆயின

காமம் கர்ணாந்த விஸ்ராந்தே விசாலே தஸ்ய லோசனே–என்று சாமான்ய புருஷர்களுக்கு இருக்குமது
பரம புருஷனுக்கு சதா குணிதமாய் இறே இருப்பது –
திருக்கண்கள் திருச்செவி அளவும் நீண்டு விளங்கும்படியை இப்படி பல வகையாக வருணிப்பார்களே
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்திலே -க்ருபயா பரயா கரிஷ்யமானே-என்கிற ஸ்லோகத்திலே வர்ணித்தார்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி —என்னும்படி இறே
எம்பெருமான் படி இருப்பது –
பஸ்யத்ய சஷுஸ் ச ஸ்ருணோத்ய கர்ண –என்றும் இறே ஒதிக் கிடக்கிறது
சகல இந்திரியங்களும் எம்பெருமானுக்கு அகிலேஷன ஷமமாய் இருக்க இங்கு இரண்டையும் மட்டுமே அருளிச் செய்தது
ப்ரக்ருதத்தில் இவ்விரண்டுக்கும் விவஷதை உள்ளதாகையாலே உபயோ என்கிறது

————————-

கருணா ரஸ வாஹி வீக்ஷண ஊர்மே வரத பிரேம மய ப்ரவாஹ பாஜ
தத தீர வன ஆவளீ ப்ருவவ் த்ருக் சல ஸிந்தோஸ் தவ நாசிகா இவ சேது –35-

ஹே வரத
கருணா ரஸ வாஹி வீக்ஷண ஊர்மே –க்ருபா ரசத்தைப் பெருக்கா நின்ற கடாக்ஷமாகிற அலைகளை யுடைத்தாயும்
பிரேம மய ப்ரவாஹ பாஜ -ப்ரணய ரூபமான ப்ரவாஹத்தை யுடைத்தானதாயும் இருக்கிற
தவ த்ருக் சல ஸிந்தோஸ் –உன் திருக்கண்கள் ஆகிற அசையும் கடலுக்கு
ப்ருவவ்–திருப் புருவங்களானவை
தத தீர வன ஆவளீ இவ –பரம்பியதாய்க் கரையில் உள்ளதான சோலை போலும்
நாசிகா சேதுர் இவ –திரு மூக்கானது அணை போலும் –

திரு மூக்கின் அழகு அனுபவம் இதில் -ஸிம்ஹ அவளாக நியாயத்தாலே திருப்புருவ அழகையும் அனுபவிக்கிறார்
ஆஸ்ரித வாத்சல்ய அதிசயத்தாலே எப்போதும் அலை பாயா நின்று இருப்பதால் கடல் என்றும்
திருப்புருவ வட்டங்கள் கடல் கரையில் இருக்கக் கடவ சோலைச் செறிவோ என்னும்படியும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கு –
கடல் இடையே கட்டிய அணையோ-என்னும்படியாய் இரா நின்றது –

————————

விபவம் விவ்ருணோதி விஸ்த்ருணீதே ருசம் ஆவிஷ் குருதே க்ருபாம் அபாரம்
அபி வர்ஷதி ஹர்ஷம் ஆர்த்த பாவம் தநுதே தே வரதைஷ த்ருஷ்ட்டி பாத –36-

ஹே வரத
தே ஏஷ த்ருஷ்ட்டி பாத –உன்னுடைய இந்த கடாக்ஷமானது
விபவம் -உன்னுடைய உபய விபூதி ஸார்வ பவ்மத்வத்தை
விவ்ருணோதி –வ்யக்தம் ஆக்குகின்றது –
ருசம் -சோபையை
விஸ்த்ருணீதே -பரவச் செய்கின்றது
அபாரம் க்ருபாம் –எல்லையில்லாத கருணையை
ஆவிஷ் குருதே -வெளிப்படுத்துகின்றது
ஹர்ஷம் அபி வர்ஷதி –ஆனந்தத்தை பெருகச் செய்கிறது
ஆர்த்த பாவம் தநுதே –நெஞ்சு கசிந்து இருத்தலை உண்டாக்குகிறது –

எம்பெருமான் பக்கலிலே நாலடி வரப் புகுர நின்றவர்கள் –
தொண்டர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்று அன்றோ பிரார்த்தனை
தேவராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே -த்வத் ஈஷண ஸூதா ஸிந்து வீசிவி ஷேபஸீகரை –
காருண்ய மருதா நீதைச் சீத சைலாபி ஷிஞ்ச மாம் -என்ற பிரார்த்தனை தானும் மிகையாம் படி அன்றோ
ஆஸ்ரிதர் திறத்தில் ஸ்ரீ பேர் அருளானின் கடாக்ஷ தாரைகள்

பிருந்தாவனம் பகவதா கிருஷ்னேந அக்லிஷ்ட்ட கர்மணா சுபேக மனசா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப் சதா –என்று
மானஸ அனுதியானத்துக்குள்ள பெருமை இதுவானால் த்ருஷ்டிப்பாதத்தின் பெருமை சொலப்புகில் வாய் அமுதம் பரக்குமே
த்ருஷ்டிபாதம் பட்ட இடம் ஸார்வ பவ்மனாம் படியாய் இருக்குமே
விவ்ருணோதி —ருசம்
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
திருமேனியில் பிரவஹியா நின்ற திவ்ய லாவண்ய தரங்கனி தரங்கள் அடங்கலும் திருக்கண் நோக்கிலே
தொடை கொள்ளலாம் படி அன்றோ கடாக்ஷம்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்
நெடு நோக்கு கொண்டு முக்திர் மோஷா மஹா ஆனந்தத்தைக் கொடுக்கும் அன்றோ

—————-

அருண அதர பல்லவே லசந்தீ வரதாஸவ் த்விஜ சந்த்ர சந்திரிகா தே
அதி வித்ருமம் அஸ்த நிஸ்தல ஆலி ருசம் ஆவிஷ்க்ருதே ஹி புஷ்கராஷே–37-

புஷ்கராஷே ஹே வரத-தாமரைக்கு கண்ணனான வரம் தரும் பெருமானே
தே அருண அதர பல்லவே –உன்னுடைய சிவந்த தளிர் போன்ற திரு அதரத்திலே
லசந்தீ -விளங்குகின்ற
அசவ் த்விஜ சந்த்ர சந்திரிகா -இந்த சந்திரன் போன்ற திரு முத்துக்களின் ஓளி
அதி வித்ருமம் அஸ்த நிஸ்தல ஆலி ருசம்-பவளத்தின் மேலே வைக்கப்பட்ட முத்து வரிசையின் சோபையை
ஆவிஷ்க்ருதே ஹி -வெளிப்படுத்து கின்றது போலும்

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போலே நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே
நளிர் வெண் பல் முளை இலக –பெரியாழ்வார்
நா விளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவன்
உரியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் களவு காணும் போது தன் நிறத்தின் இருட்சியாலும்
அவ்விடத்தின் இருட்சியாலும் தெரியாமலே தடவா நிற்கச் செய்தே கையிலே வெண்ணெய் தாழிகள் அகப்பட்ட
சந்தோஷத்தினால் வாய் மலர அப்போது ப்ரசரிக்கும்
த்விஜ சந்த்ர சந்திரிகையே கை விளக்காக அமுது செய்யும்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டு அடியுண்டு அழுமாகையாலே திருப்பவளா நிலவு அங்கே ஸக்ருத் ஸேவ்யமாய் இருக்கும்
திருவத்தி மலையிலேயே பக்த திரளைக் கண்டு களிப்புக்கு கால உபாதி இல்லாமையால் நிரந்தரமாக இருக்கும் அழகிலே ஈடுபடுகிறார்
நித்திலம் -முத்துக்கு வாசகமாய் –
நின்றவூர் நித்திலத்தை –
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை –
நித்திலங்கள் பவ்வத் திரை யுலவு –
இங்கு எல்லாம் நிஸ்தலம் சொல்லே நித்திலம்

————-

ஸ்மித நிர்ஜ் ஜரிகா விநிஷ்பதந்தீ தவ வக்ஷஸ்தல பூதலே விசீர்னா
வரத ப்ரபி பர்த்தி ஹார லஷ்மீம் அபி முக்தா வலிகா நதீவ தஜ்ஜா –38-

ஹே வரத
விநிஷ்பதந்தீ-திரு முகமாகிற உன்னத ஸ்தானத்தில் நின்றும் விழா நின்ற
தவ ஸ்மித நிர்ஜ் ஜரிகா வக்ஷஸ்தல பூதலே –உன்னுடைய புன்முறுவலாகிற அருவியானது திரு மார்பு ஆகிற தரையிலே
விசீர்னா சதீ–இறைந்ததாய்க் கொண்டு
ஹார லஷ்மீம்-சஹஸ்ர அஷ்டிக ஹார சோபையை
ப்ரபி பர்த்தி -அடைந்திட நின்றது
அபி முக்தா வலிகா -எகாவலி ஹாரமும்
தஜ்ஜா நதீவ பாதி –அந்த அருவியில் நின்றும் உண்டான ஆறு போலே விளங்கா நின்றது

அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அத்யந்த மதுர மந்தகாச விலாசம் தன்னையும் மீண்டும் உப ஸ்லோகிக்கிறார்
மந்தகாச பிரபா பிரசரம் அநேக அஷ்டிக முக்தா ஹாரம் என்று உல்லே கிக்கிறார்

—————-

பரிமண்டித ராச மண்டலாபிஸ் வரத ஆக்ராதம் அபீஷ்ட கோபிகாபி
அநு வர்த்தி ததாதந ப்ரகர்ஷாத் இவ புல்லம் ஹி கபோலயோர் யுகம் தே –39-

ஹே வரத
பரிமண்டித ராச மண்டலாபிஸ் –அலங்கரிக்கப்பட்ட திருக்குரவை கோஷ்ட்டியை யுடைய
அபீஷ்ட கோபிகாபி–பிரியைகளான கோபி ஸ்த்ரீகளாலே
ஆக்ராதம் –மோரப்பட்ட
தே கபோலயோர் யுகம் –உன்னுடைய கபோல த்யவமும்
அநு வர்த்தி ததாதந ப்ரகர்ஷாத் இவ -இப்போதும் அநு வர்த்தித்து வாரா நின்ற
அப்போதைய ஹர்ஷ பிரகரக்ஷத்தாலே போலே
புல்லம் -விகசித்து இரா நின்றது

அர்ச்சையிலும் விபாவவதார வாசனை அனுவர்த்தித்து இருப்பதை
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அண்டர் கோன் அணி அரங்கன்
அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா
அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா –குரவைக்கூத்து -கோபிகள் இவன் கன்னத்தில் இட்ட முத்தங்களால்
ஹர்ஷ ப்ரகர்ஷ அனுவர்த்தியை இங்கு அனுபவிக்கிறார் –

————–

முகம் உன்னசம் ஆயதாக்ஷம் உத்யத் ஸ்மித தந்தம் ருசிர அதரம் நத ப்ரு
லஸத் அம்ச விலம்பி கர்ண பாசம் மயி தே நிச்சலம் அஸ்து ஹஸ்தி நாத –40-

ஹே ஹஸ்தி நாத —
உன்னசம் -உன்னதமான நாசிகையை யுடைத்தாயும்
ஆயதாக்ஷம் -நீண்ட திருக்கண்களை யுடைத்தாயும்
உத்யத் ஸ்மித தந்தம் -விம்மி வெளி எழுகின்ற புன்முறுவலை யுடைய திரு முத்துக்களை யுடைத்தாயும்
ருசிர அதரம் -அழகிய திரு அதரத்தை உடைத்தாயும்
நத ப்ரு -வளைந்த திருப் புருவங்களை உடைத்தாயும்
லஸத் அம்ச விலம்பி கர்ண பாசம் -விளங்குகின்ற தோள் வரை தொங்கும் சிறந்த செவிகளை யுடைத்தாயும் இருக்கும்
தே முகம் -உனது திரு முக மண்டலமானது
மயி நிச்சலம் அஸ்து -அடியேன் விஷயத்திலே நீடித்து இருக்கக் கடவது

திருமுக பூர்ண அனுபவம் இதில் –
ஆழ்வானுடைய சிந்தை யாகிற பெண் இனி மேல் தேவராஜனுடைய கண்டா ஸ்லேஷத்துக்குப் போகிறாள் ஆகையால்
நவோடையான பெண் பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்குப் போம் போது
ஜென்ம பூமியில் உள்ள உறவு முறையார் உள்ள இடம் எங்கும் புக்கு உப லாலித்து வருமா போலே
தனக்கு சிர பரிசிதங்களான நயன நாசிகாதி அவயவங்களை கண்டா ஸ்லேஷா பூர்வாங்கமாக
உப லாலனம் பண்ணி உகவா நின்றபடி
பிராக்ருத முக அவ லோகனத்தில் நசை ஒழிந்து–இன்று யாம் வந்தோம் இரங்கு-என்று
உன் கோயில் கடைத்தலை புகுந்த அடியேன் திறத்திலே உன் திரு ம் உக சோபா சேவை
நிரந்தரமாக தந்து அருள வேணும் என்கிறார் –
வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீர கிருஷ்ணாஜிநாம் பரம் -என்று மாரீசனுக்கு எங்கும் எப்போதும்
ஸ்ரீ ராம பிரான் தோற்றம் போலே
ஆழ்வானுக்கு தேவராஜனின் திரு முக மண்டல சேவை வேணும் என்று பிரார்த்தனை

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -21-30–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 20, 2019

இது முதல் –62-ஸ்லோகம் அளவாக -திவ்ய மங்கள விக்ரஹ வடிவு அழகு வர்ணனம்
அவற்றுள் முதல் நான்கால் சமுதாய ரூபேண அனுபவம் –
மேல் ஆதி ராஜ்யம் அதிகம் தொடங்கி ப்ரத்யங்க சோபை அனுபவம்
பிரதம சதகத்தில் ஸ்ரீ பேர் அருளாளனை ஒரு பொருளாக மதியாதே அவன் வர்த்திக்கும் ஸ்ரீ ஹஸ்தி கிரியையே
பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தவர் அத்தை விட்டு இங்கு இவன் அழகிலே ஊன்றுகைக்கு அடி –
ஸ்ரீ பேர் அருளாளன் இதில் ஏகதேசம் என்னலாம் படி இரா நின்றான் அன்றோ –
ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ திருமலையை அனுபவித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -வடமா மலை யுச்சியை -என்னுமா போலே
ஸ்ரீ திருமலையில் ஏக தேசம் என்னலாம் படியாய் -கற்பக தரு பஹு சாகமாய் பணைத்து பூத்தால் போலே நிற்கிற
இவருடைய ஸுவ்ந்தர்யத்தை அனுபவிக்கிறார்

பாணி பாத வதந ஈஷண சப்தை அம்புஜாநி – அபதிசந்-வரத த்வம்
பஹுபிஸ் -அதி விசால தமாலாம்ஸ் து ஆஞ்ஞநம் கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் –21-

ஹே வரத
பாணி பாத வதந ஈஷண சப்தை –திருக் கை -திருவடி -திரு முகம் -திருக் கண் என்னும் திரு நாமங்களாலே
அம்புஜாநி -தாமரை மலர்களையும்
பஹுபிஸ் -புஜங்களினாலே
அதி விசால தமாலாம்ஸ் து –மிகப் பெரிய பச்சிலை மரங்களையும்
அபதிசந் -மறைத்துக் கொண்டு இரா நின்ற
த்வம் -நீ
ஆஞ்ஞநம் கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் -ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு அஞ்சன மயமான சிகரமாக ஆகின்றாய்

பர்வத ஏகதேசமாகச் சொன்னால் அதற்கு ஏற்ற லக்ஷணங்கள் அமைந்து இருக்க வேணுமே என்ன
பாணி பாத –இத்யாதி
தாமரைக்காடும் தாமரை வ்ருக்ஷங்களுமாய் இறே மலை முக்காடு இருப்பது
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணனையும் அரவிந்தம் அடியும் அஃதே என்னும்படியான
ஸ்ரீ பேர் அருளாளன் திருக்கைகள் திருக்கண்கள் திருமுகம் திருவடிகள் என்னும் அவய வாபதேசத்தாலே –
தாமரை மலர்கள் நிறைந்து திகழ நிற்பதாலும் புஜ தண்டங்கள் என்னும் வ்யாஜத்தாலே தாமல வருஷங்கள் விளங்கா நிற்பதாலும்
இவன் தன்னையே -கரி கிரேர் அஸி ஸ்ருங்கம் -என்கிறது –
மலை முகடு தான் மேக சமூகங்களுக்கு இருப்பிடமாய்க் கொண்டும் ஸ்வ பாவமாகவும் கறுத்து இருக்கும் இறே
நீல மேக நிபனான இவனுக்கு அக்காராத்தாலும் குறை இல்லையே -இது தோன்ற அஞ்சனம் என்கிறது

அல்லி போல் உள்ளங்கையும் -இதழ் போலே விரல்களும் -தாது போலே ரேகைகளும் -வி லக்ஷணமான காந்தமும் –
மிருதுவான ஸ்பர்சமும் -புரா இதழ் போலே ஸ்யாமமான புறங்கையில் பசுமையும் –
ஏவமாதியான லக்ஷணங்களை உடைத்தாய் இருக்கையாலே பாணியானது அம்புஜம் என்னலாம் படி இருக்குமே
இப்படியே மேலும் கண்டு கொள்வது
கீழே பாணி என்றது பஞ்ச சாகாச் சய பாணி -என்ற கோசத்தின் படியே விரல்களோடே கூடின மணிக்கட்டு அளவான பாகம்
பாஹு சப்தம் தோளுக்கு கீழ்ப்பட்ட தண்டாகாரமான பாகம் -புஜத்தை சொன்னபடி
இவன் தோள் நிழலில் ஒதுங்கினவர்களுக்கு மதிளுக்குள்ளே இருப்பாரைப் போலே பயம் கெட்டு-ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே விஞ்சி இருப்பதால் அதி விசால தமாலங்களாக-பாஹுவை வர்ணிக்கலாம்
கற்பகக் காவென நற்பல தோளன்-பாஹு பி பஹு வசனம் சதுர்புஜத்வத்தைப் பற்ற –
அர்த்திதார்த்த பரிதார்த்த தீஷிதனுக்கு இரண்டு திருத்தோள்கள் போராதே-
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் -என்று
திவ்ய அவயவங்கள் சஹஸ்ர சாகமாக பணைக்கும் இறே

இந்த ஸ்லோகம் தொடங்கி இத் தசகம் ஸ்வாகதா வ்ருத்தத்தில் அமைத்த ஸ்லோகங்ககள்

——————–

த்வ உதார புஜம் உந் நஸம் ஆயத் கர்ண பாச பரிகர்ம சதம்சம்
ஆயதாக்ஷம் அபிஜாத கபோலம் பாரணீயதி வரப்ரத த்ருங்மே -22-

ஹே வரப்ரத
த்ருங்மே- மே த்ருக-அடியேனுடைய கண்ணானது
உதார புஜம் -ஒவ்தார்யமுள்ள பாஹுவை யுடையவனும் -அலம் புரிந்த நெடும் தடக்கை —
கொடுக்கையே விளை நீராக வளர்ந்த திருக்கை அர்த்திகள் இருக்கும் அளவும் செல்ல நீண்ட திருக்கை –
பாஹுச் சாயாம வஷ்டப்த–லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும் படி அன்றோ திருப்புஜங்களின் பெருமை
உந் நஸம் -உன்னதமான திரு மூக்கை யுடையவனும் -மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ –
நித்ய சந்தேக ஜனகமாய் -கோல நீள் கொடி மூக்கு
ஆயத் கர்ண பாச -நீண்ட சிறந்த செவிகளை அலங்காரமாகக் கொண்ட நல்ல
பரிகர்ம சதம்சம்–திருத் தோள்களை யுடையவனும்
ஆயதாக்ஷம் -செவி யளவும் நீண்ட திருக் கண்களை உடையவனுமான
அபிஜாத கபோலம்-ஆபி ஜாத்யம் பொருந்திய கண்டா ஸ்தலங்களை உடையவனுமான
த்வாம் -உன்னை
பாரணீயதி -பூர்ண அனுபவம் பண்ண விரும்புகிறது

உபோஷிதனாய் இருந்தவன் வயிறார உண்பதை -பாரணை -என்பர்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை என்று இருக்கும் ஸ்ரீ ஆழ்வான் –
கண்டு கொண்டேன் கண்ணிணைகள் ஆரக் களித்து–என்கிறபடியே எம்பெருமானின் திரு மேனியை சேவிக்கப் பெறும்
நாளை த்வாதசியாகவும் அது பெறாத நாளை அன்று அவை எனக்குப் பட்டினி நாளே -என்கிறபடி ஏகாதசியாகவும்
திரு உள்ளம் பற்றி இருக்கிறார் ஆகையால் நித்ய த்வாதசியாக வேணும் என்று பார்க்கிறார் –

—————————-

நீல மேக நிபம் அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் அநந்த சயம்
அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் நேத்ர சாத்குரு கரீச சதா மே –23-

ஹே கரீச
நீல மேக நிபம் -கரு முகில் போன்றவனாய்
அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் -மை வண்ண நறுங்குஞ்சி குழலை உடையவனாய்
அநந்த சயம் -ஸ்ரீ திரு அனந்தாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுபவனாய்
அப்ஜ பாணி பதம் -தாமரை போன்ற திருக்கைகளும் திருவடிகளையும் உடையவனாய்
அம்புஜ நேத்ரம் -தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனாய்
த்வாம் சதா மே –உன்னை எப்போதும் அடியேனுக்கு
நேத்ர சாத்குரு –சஷுர் விஷயமாகி அருள்
த்வாம் மே த்ருக் பாரணீயதி –என்று கீழே அருளிச் செய்ததையே விசததமமாக இங்கே அருளிச் செய்கிறார்
கார் காலத்து எழுகின்ற கார் முகில் போல் வண்ணனாய்
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழத் திகழுமவனாய்
ஐவாய் அரவணை மேல் ஆதிப்பெருமானாய்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைப் பாதம் கைகள் கண்கள் விளங்குமவனாய்ப் பேர் அருளாளப் பெருமாளாய் இருக்கிற நீ
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடாதே
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினாரே-என்னும்படி
கண்ணுள் நின்று அகலாதே அருள வேணும் என்கிறார்

நீல மேக நிபம் –முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே —
தாபத்ரயா தூரர்க்குத் தாப ஹரமாய்-
விரக தாப தூரர்க்கு அந்த தாபத்தையும் மாற்றக் கடவதாய் இருக்கும் வடிவு அன்றோ

அஞ்சன புஞ்ஜ ஸ்யாம குந்தளம் –நீல மேக நிபம் என்கிற வடிவும் ஸ்படிகம் என்னும் படியாய்த்து திருக்குழலின் இருட்சி –
ஒண் சுடர்க்கற்றை என்று சொல்லுகிற தேஜோ ரூபமான திருமேனியில் நின்றும் கிளம்பினது ஒரு மை போலே இருக்கை
திருக்குழலை சேவிக்கப் பெற்றவர்களுக்கு சர்வமும் பிரகாசிக்கும் படி சித்தாஞ்சனமாய் இருக்கை –
பிங்கல ஜடோ தேவ என்றும் -ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -என்றும் சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய காண ஒண்ணாமையாய் இருக்கும் மயிர் போல் அன்றியே
சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே -என்கிறபடியே
கண்டவர்கள் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து ஸ்யாமளமாய் இருக்கை –

அநந்த சயம் -அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் –
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –ஸ்ரீ பூதத்தாழ்வார்
பணி பதி சயநீ யாத் உத்தித த்வம் ப்ரபாதே –ஸ்ரீ வேதாந்தாசார்யர்

அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் -பாணி பாத நேத்ரம் -மூன்று திவ்ய அவயவங்களுக்கும்
தாமரை யையே ஒப்புக் சொல்கிறார் ஆகில் ஒரு ஸமஸ்த பதமாக பிரயோகிக்கலாமே –
பத பேதம் எதனால் பண்ண வேண்டும்
அப்ஜ பாணி பத லோசந ரம்யாம் என்று சொல்ல அடுக்குமே
அப்ஜ அம்புஜ -என்று பிரித்து பின்ன பதங்களால்
கண்ணும் வாயும் கைத்தளமும் அடியிணையும் கமல வண்ணம் -என்று சேர அனுபவித்தவர்
போக்ய அனுசந்தான காஷ்டையிலே நின்றவாறே
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –என்று வாய் வெருவிற்று
இவ்வாழ்வான் தாமும் ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவத்தில்
அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்று வாய் வெருவினபடி காணலாமே

த்வம் சதா மே நேத்ர சாத்குரு -அவ்வண்ணத்தவர் நிலை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
என்னும்படி அஞ்சி அகல வேண்டாதபடி
கண்டு கொண்டேன் கண்ணினை ஆரக் களிக்கும் படி சதா தர்சனம் தந்து அருள வேணும் என்கிறார்

——————–

த்வக் ச த்ருக ச நிபபாசதி ஜிஹ்வா விஹ்வலா ஸ்ரவணவத் பர வ்ருத்தவ்
நாசிகா த்வயி கரீச ததேதி ப்ராப்நுயாம் கதம் இமாம் ஸ்வித் அவஸ்தாம் -24-

ஹே கரீச
த்வக் ச -த்வக் இந்த்ரியமும்
த்ருக ச -சஷுர் இந்த்ரியமும்
நிபபாசதி -மிகவும் பானம் பண்ண விரும்புகின்றது
ஜிஹ்வா ஸ்ரவணவத் –ரஸ இந்த்ரியமானது ஸ்ரோத்ர இந்த்ரியத்தோடே ஒப்ப
பர வ்ருத்தவ் -இந்திரியங்களின் வியாபாரத்தில்
விஹ்வலா-சாபல்யம் உடைத்தாய்
பவதி -ஆகிறது
நாசிகா -க்ராண இந்த்ரியமும்
ததா -இப்படியே இந்த்ரியாந்தர விருத்தியை விரும்பி நிற்கிறது
இதி இமாம் அவஸ்தாம் -என்று சொல்லக் கூடிய -முக்தி தசையில் விளையக் கூடிய -இந்த அவஸ்தையை
அஹம் -அடியேன் -இந்த விபூதியிலே
த்வயி -உன் விஷயத்தில்
கதம் ஸ்வித் ப்ராப்நுயாம் –எங்கனேயோ அடைந்திடுவேன்

நம்மாழ்வார் செய்ய தாமரைக் கண்ணனில் –
தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்ற கண் விடாய்த்த மாத்திரம் அன்றிக்கே
தாமும் தம்முடைய கரண க்ரமமுமாக -முடியானாலே -நோவு பட்டுக் கூப்பிட்டால் போலே
சேதன சமாதியாலே இந்திரியங்கள் விடாய்க்கும் படியான அவஸ்தை -போஜனத்துக்கு மிக்க பசி போலே
பகவத் அனுபவத்துக்கு பாங்கான ஸாமக்ரியாய் இருக்கும்
அதே போலே தமக்கு உள்ள அபிநிவேச அதிசயத்தை-பக்திப் பெரும் காதலை – உந் மஸ்தக தசையை -அருளிச் செய்கிறார் இதில் –
நீல மேக நிபம் –த்வாம் நேத்ர சாத்குரு சதா மே-என்று கீழே பிரார்த்தித்த சதா தர்சனம்
இந்த அவஸ்தை பிறவாத அன்று கடிக்க மாட்டாமையாலும் -கடித்தாலும் ரசிக்க மாட்டாதாகையாலும்
அந்த அவஸ்தையையும் கைங்கர்யத்தையோ பாதி பிரார்த்திக்கிறார்
ப்ராப்னுயாம் -பிரதான கிரியை / நிபி பாஸதி-விஹ்வலா -அவாந்தர கிரியை

——————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

உத்தரத்யுபரி பக்த ஜநாந் இதி ஊர்த்தவ ஆஸ்ரயண ஸூஸித சக்திம்
ஊர்த்வ புண்ட்ர திலகம் பஹு மாநாத் கிம் பிபர்ஷி வரத ஸ்வ லலாடே -26-

ஹே வரத
அயம் ஊர்த்வ புண்ட்ர திலக -இந்த ஊர்த்வ புண்ட்ர திலக மானது
உத்தரத்யுபரி பக்த ஜநாந் -பக்த ஜநாந்-யுபரி உத்தர-பகவத் பக்தர்களை ஊர்த்வ கதியை அடைவிக்கின்றது
இதி -என்று
ஊர்த்தவ ஆஸ்ரயண ஸூஸித சக்திம் –ஊர்த்வ ஆகார விசிஷ்டமாய் இருக்கையினால் ஸூஸிக்கப்பட்ட சக்தியை யுடைய
ஊர்த்வ புண்ட்ர திலகம் ஸ்வ லலாடே -ஊர்த்வ புண்ட்ர திலகத்தை தண் திரு நெற்றியிலே
பஹு மாநாத் கிம் பிபர்ஷி -நம் அடியார் உகந்தது என்கிற ப்ரீதி விசேஷத்தாலேயோ தரியா நின்றாய் –

சேதனர்க்குத் தானே கர்ம அங்கமாக விதி பிராப்தம் -அலங்காரமாக சாத்திக் கொண்டுள்ளான் என்கிறதை விட –
பஹு மாநாத் கிம்-அடியார் உகந்தது ஏது ஆகிலும் நமக்கு அதுவே உபாதேயம்-என்று இருப்பானே

—————–

கர்ணிகா தவ கரீச கிமேஷா கர்ண பூஷணம் உத அம்ச விபூஷா
அம்ச லம்பி அலக பூஷணம் ஆஹோ மாந ஸஸ்ய மம வா பரி கர்ம –27-

ஹே கரீச
தவ ஏஷா கர்ணிகா -உன்னுடைய இந்த கர்ண பூஷணமானது
கர்ண பூஷணம் கிம் -திருச் செவிகளுக்கு அலங்காரமோ
உத -அல்லது
அம்ச விபூஷா -திருத் தோள்களுக்கு அலங்காரமோ
ஆஹோ -அங்கன் அன்றிக்கே
அம்ச லம்பி அலக பூஷணம் -திருத் தோள்களில் அலையா நின்ற திருக்குழல்களுக்கு அலங்காரமோ
வா மம -அங்கனும் அன்றிக்கே அடியேனுடைய
மாந ஸஸ்ய பரி கர்ம –இதயத்துக்கு அலங்காரமோ

இப்படி சதுஷ்ட்ய அவகாஹியான சங்கை
முராரி -உலகத்தாருக்கு குண்டலங்களால் காதுக்கு சோபையும் இல்லை –
குண்டல தாரணத்துக்கு தான் குத்தப்படும் துக்கமும் சுமக்கும் துக்கமும் தானே -கபாலத்துக்கே அழகு என்பான்
பை விடப் பாம்பு அணையான் திருக்குண்டல காதுகளே-என்னும் படி சேர்த்தி அழகு அந்யாத்ருசமாய் இருப்பதால்
மின்னு மணி மகர குண்டலங்கள் திருகி செவிகளுக்குத் தான் அலங்காரமோ என்கிறார்
உதக்ரபீநாம்ச விலம்பி குண்டல -என்று திருக்குண்டல திருத்தோள்கள் சேர்த்தி அழகை ஸ்ரீ ஆளவந்தார் அனுபவித்தார்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் -என்றும்
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட -என்றும்
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ -என்றும்
சொல்லுகிறபடியே திருத் தோள்களின் மேலே உலாவி அலையும் திருக் குழல்கள்
குழல் மின் தாழ மகரம் சேர் குழை இருப்பது விளங்கி ஆட –
திருக்குழல்கள் -திரு மகரக் குழை -இரண்டின் பரபாக சேர்த்தி ரசத்தை அனுபவிக்கிறார்
இம்மூன்று சேர்த்தி அழகையும் –
திருச் செவி -திருக் குண்டலங்கள் / திருத் தோள்கள் திருக் குண்டலங்கள் / திருக் குழல் திருக் குண்டலங்கள்
அனுபவிக்க விரும்பி –உள் குழைந்து உருகும் – அடியேனுடைய மனஸுக்குத்தான் அலங்காராமோ
உன்னுடைய நிருபாதிக போக்யமான திவ்ய அவயவங்களை அலங்காரம் வேண்டாமே –
அடியேனுடைய மனஸுக்கே தான் என்று சித்தாந்தம் –
குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
ஆர்க்கும் அறிவு அரிதே -மயல் கொண்டு இருந்து கிடைக்கும் என் நெஞ்சு ஒன்றுக்குமே
விளக்கம் தருவது என்கிறார் என்றபடி

——————–

திருக்குண்டலங்களின் அழகு திருத்தோள்களின் அழகிலே கொண்டு மூட்ட அத்தை அனுபவித்து இனிதராகிறார் –

பாரிஜாத விடபாந் அபிதோ யா புஷ்ப சம்பத் உதியாத் கரி நாத
தாம் விடம் பயதி தானாக பாஹுஷு ஆததா து கடக அங்கதி லஷ்மீஸ் –28-

ஹே கரி நாத
தாவக பாஹுஷு–உனது புஜங்களிலே
ஆததா-பரம்பி யுள்ள
கடக அங்கதி லஷ்மீஸ்து –கை வளை என்ன தோள் வளை என்ன இவற்றின் சோபையோ என்றால்
பாரிஜாத விடபாந் அபிதோ –கல்ப வ்ருக்ஷத்தின் கிளைகளைச் சுற்றி
யா புஷ்ப சம்பத் உதியாத் –யாதொரு புஷ்ப சோபை உண்டாகுமோ
தாம் விடம் பயதி -அந்த சோபையை அநுகரிக்கின்றது

கீழே ஞானிநாம் அக்ரேஸரான ஸ்ரீ ஆழ்வானுடைய சதுஷ்ட்ய சங்கை களைப் பரிஹரிக்க முடியாமல் லஜ்ஜையால் நிருத்தரனாய்
கவிழ்த்தலை இட்டு நிற்கவும் மாட்டாதே-தோளைத் திருப்புவது -மார்பை நெறிப்பது -பீதாக வாடையை உதறுவது –
திருக்குழலைப் பேணுவதாக -ஸ்ரீ மத் கம்பீர சேஷ்டிதங்களைப் பண்ண
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து
தன்னையும் மறந்ததே -புத்தி ப்ரசம்சத்தை விளைக்க வல்ல திவ்ய அவயவங்கள் ஆகையால் –
கீழ்ப் பண்ணின ப்ரச்னங்களுக்கு ப்ரத்யுத்தா பிரதீக்ஷையை மறந்து –
இது ஒரு தோள் அழகு இருந்தபடி என் -இது ஒரு தோள் வளை இருந்தபடி என் -என்று
அவற்றிலே ஊன்றி வர்ணிக்கத் தொடங்குகிறார்

கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம் –அம்புஜ நேத்ரம் –என்றவர் சிறிது ஆராய்ந்தவாறே –
என் சொன்னோம் ஆனோம் -என்று அநு சயித்து
அதீர்க்கம் அப்ரமேதுகம் க்ஷண உஜ்ஜ்வலம் ந கோசரம் அந்தக்கரணஸ்ய பஸ்யதாம் அநுப்ஜமப்ஜம் நு கதம்
நிதர்சனம் வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-என்பர்
ஆகையால் லௌகிக விஷய த்ருஷ்டாந்தங்களை விட்டு அபூத உவமை கொண்டு வர்ணித்து
நிஸ்சமாப்யதிகம் என்னும் அதிசயத்தை விலக்கி அருளுகிறார் –

பாரிஜாத தரு ஸ்தானீயன் ஸ்ரீ பேர் அருளாளன் -அர்த்திதார்த்த பரிதான தீக்ஷிதன் அன்றோ –
காரானை இடர் கடிந்த கற்பகம் அன்றோ -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் தானே
அவன் கல்ப சாகியானால் அவனுடைய பாஹுக்கள் கல்ப சாகையாகக் குறை இல்லையே-
கற்பகக் காவன நற்பல தோளன் –
திரு முழங்கைக்குக் கீழே கடக லஷ்மியும்-அதுக்கு மேலே அங்கத லஷ்மியாக விரவி
பாஹு தண்டங்களை ஜ்யோதிச் சக்கரம் ஆவரித்துக் கொண்டு இருக்கும் நிலைக்கு
பிரசித்த உவமானம் இல்லாமையால் அபூத உவமை சொல்ல வேண்டும் இறே
விடபஸ்தானம் –பாஹுக்கள்
விடபத்தை முட்டாக்கு இட்டுக் கிடக்கிற புஷ்பங்களின் ஸ்தானத்தில் -கடக்க அங்கதங்கள்
திருவாய் 3-10-1-ஜன்மம் பல பல செய்து -ஈட்டில் –
ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினால் போலே யாயிற்று வடிவும் திவ்ய ஆயுதங்களும்
சேர்ந்த சேர்த்தி இருப்பது -என்கிற ஸ்ரீ ஸூக்தி இந்த ஸ்லோகத்தை அடி ஒற்றியே –

——————

மத்யமாந சல பேநில சிந்து ப்ரோத்திதி க்ஷண தஸாம் கமிதவ் தே
வக்ஷஸி ஸ்புரித மௌத்திக ஹாரே கௌஸ்துபச் ச கமலா ச கரீச –29-

ஹே கரீச
ஸ்புரித மௌத்திக ஹாரே-தள தள என்ற முக்தா ஹாரத்தை யுடைத்தான
மத்யமாந சல பேநில சிந்து ப்ரோத்திதி –கடையப்படா நின்றதும் -அத ஏவ -அசையா நின்ற –
நுரைகளை யுடைத்தாயும் இரா நின்ற கடலில் நின்றும் –
க்ஷண தஸாம் -உதித்த சமயத்தின் அவஸ்தையை
தே வக்ஷஸி-உனது திரு மார்பில்
கௌஸ்துபச் ச கமலா ச கமிதவ் –ஸ்ரீ கௌஸ்துப மணியும் ஸ்ரீ பிராட்டியும் அடைக்கப் பட்டுள்ளன

அல்லாத அவயவங்களும் திரு மார்பும் ஒரு தட்டாய் இருக்குமே –
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி–
பரதத்வத்துக்கு ப்ரகாசகமான திவ்ய அவயம் அன்றோ திரு மார்பு
சமுத்திர ஸ்தானத்தில் -திரு மார்பும்
நுரைகள் ஸ்தானத்தில் -முத்தா ஹாரங்களும்
அந்த நுரைகளின் இடையே ஸ்ரீ கௌஸ்துபமும் ஸ்ரீ கமலையும் உதிக்கப் பெற்றது போலே
திருமார்பில் திகழ்கின்றன என்றபடி –

——————-

அஞ்சன ஷிதி ப்ருதோ யதி நாம உபத்யகா வரத ஹேம மயீ ஸ்யாத்
தாத்ருசீ தவ விபாதி து லஷ்மீ ஆம்பரீ பத விடம்பித வித்யுத் –30-

ஹே வரத
விடம்பித வித்யுத் –மின்னல் போன்றதான
தவ ஆம்பரீ லஷ்மீஸ் து –உனது திருப்பீதாம்பர சோபையோ என்னில்
அஞ்சன ஷிதி ப்ருதோ -அஞ்சனமயமான தொரு மலையினுடைய
உபத்யகா–தாழ் வரையானது
ஹேம மயீ-ஸ்வர்ண மயமாக
ஸ்யாத் யதி நாம -இருக்குமே யாகில்
தாத்ருசீ –அது போன்றதாக
தவ விபாதி –விளங்குகின்றது
பத–ஆச்சர்யம்

திருவரைக்குப் பரபாக ரசாவகமான திருப்பீதாம்பரம் படியை அபூத உவமை இதில்
மை வண்ண மலைக்கு -அஞ்சன பர்வத ஸ்தானத்தில் -ஸ்ரீ பேர் அருளாளன்
ஹிரண்மய தாழ் வரை -ஸ்தாநு –ஸ்தானத்தில் –திருப்பீதாம்பரம்
விடம்பித வித்யுத் -விசேஷணம் த்ருஷ்டாந்த கோடியிலே ஹேமமயீ-என்றதுக்கு அநு குணம்
அஞ்சன ஷிதி ப்ருத-என்றதுக்கு அநு குணமாக தார்ஷ்டாந்தகத்தில் வசன வ்யக்தி ஒன்றும் இல்லை என்றாலும்
ஸ்ரீ பேர் அருளாளனுடைய திரு உருவ வண்ணம் கீழே சொல்லிற்றே-ஸூ பிரசித்தம் –
த்ருஷ்டாந்த பலத்தாலும் ஸூ வ்யக்தம் -ஆகவே இங்கு சொல்லிற்று இல்லை –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -ஸ்லோகங்கள் -11-20–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 18, 2019

குணா யத்தம் லோகே குணி ஷு ஹி மதம் மங்கல பதம்
விபர்யஸ்தம் ஹஸ்தி ஷிதிதர பதே தத் த்வயி புந
குணாஸ் ஸத்யஞான ப்ரப்ருதய உத த்வத் கத தயா
சுபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம சுருதி வசாத் –11-

லோகே குணி ஷு-உலகத்தில் குணசாலிகன் இடத்தில்
மங்கல பதம் -இவர்கள் நல்லவர்கள் என்ற சொல்லானது
குணா யத்தம் ஹி மதம் -குணங்களை பற்றி அன்றோ எண்ணப் பட்டு இருக்கிறது
ஹஸ்தி ஷிதிதர பதே–ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதனே
தத் த்வயி புந -அந்த விஷயமானது உன்னிடத்திலோ என்றால்
விபர்யஸ்தம் -மாறுபாடாய் இருக்கிறதே -அதாவது குணத்தைப் பற்றி வந்தது அல்லவே
ஹி-ஏன் என்றால்
ஸத்யஞான ப்ரப்ருதய-சத்யா ஞானம் முதலிய
குணாஸ் -குணங்களானவை
த்வத் கத தயா -உன்னை அடைந்து இருப்பதனால்
உத
சுபீ பூயம் யாதா இதி -மங்களத் தன்மையை அடைந்தன வென்று
சுருதி வசாத் நிரணைஷ்ம–வேதங்களைக் கொண்டு நிர்ணயித்தோம்

ஸ்வத ஏவ மங்கள மயன் அன்றோ -அவன் சம்பந்தத்தால் மங்களத் தன்மை அடையும் –
அவன் சம்பந்தம் இல்லாதவை தானே ஹேயமாகும்
ஸர்வஸ்ய சைவ குணதோ ஹி விலக்ஷணத்வம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
குணஜம் குணிநோ ஹி மங்கலத்வம் பிரமிதம்-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்

இந்த பாசுரம் தொடங்கி –அநந்ய அதீனத்தவம் –என்னும் அளவுள்ள சதகம் சிகரிணீ வ்ருத்தம் —

—————–

நிராபாதம் நித்யம் நிரவதி நிரம்ஹோ நிருபமம்
சதா சாந்தம் சுத்தம் பிரதிபடம் அவத்யஸ்ய சததம்
பரம் ப்ரஹ்மாம் நாதம் சுருதி ஸ்ரசி யத் தத் வரதே தே
பரம் ரூபம் சாஷாத் ததிதம் அபதம் வாங்மனசயோ –12-

வேதத்தில் கூறப்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை பூர்வ அர்த்தத்தால் அருளிச் செய்து
உத்தர அர்த்தத்தால் அந்த ஸ்வரூபம் சாஷாத் நீயே தான் -இப்படிப்பட்ட உன்னை
வாய் கொண்டு ஸ்துபிப்பதும் நெஞ்சு கொண்டு சிந்திப்பதும் முடியாத கார்யம் என்கிறார்

நிராபாதம்-உபாதானம் சஹகாரி நிமித்தம் -மூன்றுமே -இவனே
ஜகத்தாய் பரிணமிகையாலே உபாதானமாய் இருக்கும் -ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லையே –
விஸிஷ்ட விசேஷண சத்வாரமாகவே பரிணாமம் –
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வ பாவம் ஒரு சர்வ சக்திக்குக் கூடாது ஒழியாது இறே-
அந்த நிர்வாரத்தையே இங்கு நிராபாதம் -என்கிறது

நித்யம் –
கால அபரிச்சேதன்
நிரவதி –
எல்லை இல்லாமை -சேதன அசேதன வியாபகம் -விபு -தேச அபரிச்சேதன் –
நிருபமம்–
இன்ன வஸ்து போலே என்று இல்லாதவன் -வஸ்து பரிச்சேதம்
சர்வ அந்தர்யாமி யாகையாலே சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகார்யந்தரம் இல்லாதபடி இருப்பான்
ஆக த்ரிவித பரிச்சேதத்தையும் சொல்லிற்று ஆயிற்று

நிரம்ஹோ -சுத்தம்- அவத்யஸ்ய பிரதிபடம்–
இரண்டு விசேஷணங்களாலும் உபய லிங்கம் – அகில ஹேயபிரத்ய நீகமும் கல்யாணைகதாநத்வமும் சொல்லிற்று ஆயிற்று
நிரம்ஹோ — அவத்யஸ்ய பிரதிபடம்-இரண்டும் சொல்வதால்
புநர் யுக்தி தோஷம் இல்லை -ஓன்று தான் ஹேய குண ஸூந்யன் என்றும்
தன்னைச் சேர்ந்தவர்கட்க்கும் ஹேய சம்பந்தம் உண்டாக்காத படி நோக்கும் திறமையைச் சொல்லிற்று

சதா சாந்தம் –
சீறு பாறு இல்லாமல் சதா அனுகூல்யமாய் -அத ஏவ நித்ய போக்யமாய் -இருக்கும்
ஆக பூர்வ அர்த்தத்தால் ப்ரஹ்ம ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்லிற்று

இனி உத்தர அர்த்தத்தில் இப்படிப்பட்ட ஸ்வரூபம் ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஸ்வரூபத்தில் காட்டில் அபிந்நம் என்றும்
வாசா வருணிப்பதற்கும் மனசா சிந்திப்பதற்கும் முடியாதது என்றும் தலைக் கட்டுகிறார்

—————–

பிரசாந்த அநந்த ஆத்ம அநுபவஜ மஹா ஆனந்த மஹிம
ப்ரசக்த ஸ்தைமித்ய அநு க்ருத விதரங்க அர்ணவ தசம்
பரம் யத் தே ரூபம் ஸ்வ சத்ருச தரித்ரம் வரத தத்
த்ரயீ பிஸ் ப்ரஷந்தீ பர நிரஸநே ஸ்ராம்யதி பரம் –13-

பிரசாந்த -மிக அனுகூலமாயும்
அநந்த -அபரிச்சின்னமாயும் இருக்கிற
ஆத்ம அநுபவஜ -ஸ்வ ஸ்வரூபத்தினுடைய அனுபவத்தால் உண்டாகிற
மஹா ஆனந்த மஹிம ப்ரசக்த -அதிக ஆனந்த அதிசயத்தாலே நேர்ந்த
ஸ்தைமித்ய -நிச்சலமாய் இருக்கும் தன்மையால்
அநு க்ருத -அநு கரிக்கப் பட்டு இருக்கிற
விதரங்க அர்ணவ தசம் -ஓய்ந்து இருக்கிற அலைகளை உடைய சமுத்ரத்தினுடைய அவஸ்தையை யுடைத்தானதாயும்
ஸ்வ சத்ருச தரித்ரம்-தன்னோடு ஒத்த வேறு ஒன்றை யுடைத்தது ஆகாததாயும்
பரம் யத் தே ரூபம் -சர்வோத்தமாயும் இருக்கிற யாதொரு ஸ்வரூபமானது
தே -அஸ்தி -உனக்கு இரா நின்றதோ
வரத தத் பிஸ் ப்ரஷந்தீ-அந்த ஸ்வரூபத்தை ஸ்பர்சிக்க வேணும் என்று விரும்பா நின்ற
த்ரயீ -வேதமானது
பர நிரஸநே பரம் ஸ்ராம்யதி -ஹேயமான அவயவம் விகாரம் முதலியவற்றை மறுப்பதில் மாத்திரம் சிரமப்படுகிறது

அதிபதி தாவதி ஸ்வ மஹிம அநு பவ ப்ரபவத் ஸூக க்ருத நிஸ் தரங்க ஜல தீயித நித்ய தசம் –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்த்வ
ஸ்லோகத்தின் பூர்வ அர்த்தமே இங்கும் பூர்வ அர்த்தம் –

எம்பெருமானுக்கு நித்யோதித தசை தனது ஸ்வ ஸ்வரூப அனுபவம் –
சாந்தோதித தசை தனது விபூதியை அனுபவிப்பது
இங்கு நித்யோதித தசா விசிஷ்டமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தைப் பேசுகிறார்
தன்னைத்தான் அனுபவிக்கும் ஆனந்தமானது தன்னை ஸ்தப்தானாகச் செய்து -அலை ஓய்ந்த கடல் தானோ இது –
என்னும்படி ஆக்கி விட்டது என்றபடி
இப்படிப்பட்ட சிறந்த ப்ரஹ்ம ஸ்வரூபம் ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஸ்வரூபத்தில் வேறுபட்டது இல்லை –
என்பதை ததேவேதம் ரூபம் -என்கிறது
பர ஸ்வரூபத்தை வேதம் -நிஷ்கலம் நிஷ்க்ரியம்-யத் தத் அத்ரேஸ்யம் -அக்ராஹ்யம் -என்று
பர நிரசனத்தையே விசேஷமாகப் போந்தது ஒழிய
உள்ள கல்யாண குணங்களை ஆழ்ந்து அனுபவிக்க வில்லை என்கிறது நான்காம் பாதம் –
இத்தால் பகவத் ஸ்வரூபத்தை வாசா மகோசரமான வை லக்ஷண்யம் வ்யஞ்சிதம் –

——————

ந வக்தும் ந ஸ்ரோதும் ந மநிதும் அத உபாஸிஸிஷிதும்
ந ச த்ரஷ்டும் ஸ்ப்ரஷ்டும் ததநு ந ச போக்தும் ஹி ஸூசகம்
யத் பரம் வஸ்து யுக்தம் ந து வரத சாஷாத் ததஸி போ
கதம் விஸ்வஸ்மை த்வம் கரிபுரி புரஸ் திஷ்டச இஹ–14-

ஹே வரத
யத் பரம் வஸ்து–யாதொரு பரதத்வமானது
வக்தும் ந ஸூசகம் -இப்படிப்பட்டவன் என்று உபதேசிக்கக் கூடாததாயும்
ஸ்ரோதும் ந ஸூசகம்-ஒருவன் உபதேசிக்க செவி சாய்த்து கேட்க்க கூடாததாயும்
மநிதும் ந ஸூசகம்-கேட்ட அர்த்தங்கள் நெஞ்சில் பதியும் படி சிந்தனை -மனனம் பண்ணக் கூடாததாயும்
அத -அதற்கு மேல்
உபாஸிஸிஷிதும் ந ஸூசகம்—தைல தாரை போலே அவிச்சின்ன ஸ்ம்ருதி -சந்ததியாகிய-உபாஸனையை விரும்பக் கூடாததாயும்
த்ரஷ்டும் ந ஸூசகம்—தர்சனம் -ப்ரத்யக்ஷ சாமானகாரமான விலக்ஷண சாஷாத் காரம் கூடாததாகவும்
ஸ்ப்ரஷ்டும் ந ஸூசகம்-தொடக் கூடாததாகவும் -சாஷாத்காரத்துக்கு பிறகு
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது –தழுவுவன் –என்றால் போலே ஆசை கிளர்ந்து தொடுகை –
ததநு -அதற்கு மேல்
போக்தும்ந ஸூசகம்-அனுபவிப்பதற்குக் கூடாததாயும் -கீழே சொல்லிச் சொல்லாத இந்திரியங்களுக்கு
விஷயமாகக் கூடிய அனுபவத்தை சொன்னவாறு –

ஆக ஒருவித அனுபவத்துக்கும் கூடாத ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் என்றவாறு

யுக்தம்-ஸ்ருதிகளில் சொல்லப் பட்டுள்ளதோ
தத் -அந்தப் பரதத்வமானது
சாஷாத் த்வம் அஸி நது -சாஷாத் நீயே யன்றோ ஆகிறாய்
த்வம் -இப்படி ஸர்வதா துர்லபனான நீ
இஹ-இவ்வுலகத்தில்
கரிபுரி புரஸ்-ஸ்ரீ ஹஸ்திகிரியின் முன்னே
கதம் -எப்படி
விஸ்வஸ்மை திஷ்டசே -சர்வ ஜனங்களுக்கும் தன் கருத்தை வெளியிட்டுக் கொண்டு நிற்கிறாய்

வேதாந்தம் -ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்றும் சொல்லி வைத்து
ந சஷுஷா க்ருஹ்யதே ந அபி வாசா -என்றும் சொன்னாலும்
அங்கனம் ஓதப்பட்ட பரம் பொருள் சாஷாத் சாஷாத் பேர் அருளாளன் ஆகிய நீயே காண்
நீ இந்த உலகில் சர்வ ஸூலபனாய் திரு அவதரித்து ஸ்ரீ ஹஸ்தி கிரியின் முன்னே
தன்னை வெளியிட்டுக் கொண்டு நிற்பது என்னோ
நின்று அருளுவதாலேயே தன் கருத்தை உலகோர்க்கு உணர்த்தி அருளுகிறாய் -அதாவது
நான் உங்களை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போக அன்றோ வந்து இருக்கிறேன் -என்பதே உனது திரு உள்ளம்
இது என்ன ஸுலப்ய ஸுசீல்ய பரம காஷ்டை -என்கிறார் –

————–

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

ஹே வரத
ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
இதி -ஆகிய இவையாகிற
பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்
த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

—————–

குணைஷ் ஷட்பிஸ் த்வதை பிரதம தர மூர்த்திஸ் தவ பபவ்
ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரி பிரபு
வ்யவஸ்தா யா சைஷா நநு வரத சா ஆவிஷ்க்ருதி வசாத்
பவாந் சர்வத்ரைவ த்வ கணித மஹா மங்கள குண –16-

த்ரியுக வரத-மூ விரண்டு குணங்களை யுடைய வரதனே
தவ பிரதமதர மூர்த்திஸ்-உன்னுடைய எல்லா மூர்த்திகளிலும் முதன்மையரான பர வாஸூதேவ மூர்த்தி யானது
ஏதை -இந்த கீழ்ச் சொன்ன
ஷட்பிஸ் குணை பபவ்–ஆறு குணங்களால் விளங்கிற்று
ததஸ் திஸ்ரஸ் த்ரய –அதற்கு மேல் மூன்று மூர்த்திகள்
தேஷாம் த்ரிபி யுகளைர் அபி –அந்த குணங்களுடைய மூ விரண்டு களாலே பிரகாசித்தன
ஏஷா வ்யவஸ்தா யா-இப்படிப்பட்ட வ்யவஸ்த்தை யாது ஓன்று உண்டு
சா -அந்த வ்யவஸ்தை யானது
ஆவிஷ்க்ருதி வசாத் -குணங்களை வெளியிடுதல் பற்றியாம்
பவாம்ஸ்து-நீயோ என்னில்
சர்வத்ரைவ -எல்லா மூர்த்திகளிலும்
அகணித மஹா மங்கள குண –எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களை யுடையையாய் இரா நின்றாய்

ஞானம் பலம் விபுலம் -ஸ்லோகம் -அதுமானுஷ ஸ்த்வ ஸ்லோகம் -சுருங்க அருளிச் செய்ததை இங்கு விரித்து அருளிச் செய்கிறார்

சங்கர்ஷண மூர்த்தியில் ஞான பலமும் -ப்ரத்யும்ன மூர்த்தியை ஐஸ்வர்ய வீரியமும் -அநிருத்த மூர்த்தியில் சக்தி தேஜஸ் -புஷ்கலமாய் இருக்கும்

ததஸ் திஸ்ர–வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்திரங்கள் சொல்லும் -நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க
வ்யூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில் அனுசந்தேய குண பேதம் இல்லாமையால் த்ரி வ்யூஹம் என்கிறது –
இப்பஷத்தை-குணைஷ் ஷட்பிஸ் த்வதை-ஸ்லோகத்தில் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரா தத்வ த்ரய சிந்தனை அதிகாரம் ஸ்ரீ ஸூக்தி

—————

இயம் வையூஹீ வை ஸ்திதிரத கில இச்சா விஹ்ருதயே
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் அவதரன்
சஜாதியஸ் தேஷாமிதி து விபாக்க்யாம் அபி பஜந்
கரீச த்வம் பூர்ணோ வர குண கணைஸ் தாந் ஸ்தகயஸி –17-

ஹே கரீச
இயம் ஸ்திதி–கீழ்ச் சொன்ன வியவஸ்தையானது
வையூஹீ-வை -வ்யூஹத்தைப் பற்றியதாம்
அத கில-அதுக்கும் மேலே
இச்சா விஹ்ருதயே -இஷ்டப்படி விளையாடுவதற்கு
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் -உன்னுடைய விபூதியாகிய
தேவ மனுஷ்ய திர்யக்குகளின் நடுவில் அவதரன்-அவதரித்தவனாய்
விபாக்க்யாம் பஜந் -விபவ அவதாரம் என்னும் என்னும் திரு நாமத்தை உடையவனாய்
வர குண கணைஸ்-சிறந்த குணங்களின் சமூகங்களால்
பூர்ணா அபி -நிறைந்தவனாய் இருந்தாலும்
தேஷாம் -அந்த தேவ மனுஷ்ய திர்யக்குகளுக்கு
சஜாததீய இதி து -சஜாதீயன் என்ற காரணத்தால்
தாந் ஸ்தகயஸி –அந்த குண சமூகங்களை மறைத்துக் கொண்டு இருக்கிறாய்

கோவர்த்தன உத்தரணம் -சேது பந்தனம் -அம்ருத மைதானம் இத்யாதிகள் மூலம் அபார சக்தி விசேஷம் ஆவிஷ்கரித்தமை அறியலாம்
விபவம் விபூதி வாசகமாய் -தேவாதி ஜாதிகளில் ஒருவன் என்றும் சகல கல்யாண குண விஸிஷ்டனாய் அவதாரம் என்றுமாம் –
ஸ்வ இச்சையே அவதார ஹேது

——————-

பரோ வா வ்யூஹோ வா விபவ உத வர்ச்சாவதாரண
பவந் வாந்தர்யாமீ வர வரத யோ யோ பவசி வை
ச ச த்வம் சந் ஐஸாந் வர குண கணாந் பிப்ரத் அகிலான்
பஜத்ப்யோ பாஸ்யேவம் சததம் இதரேப்யஸ் து இதரதா-18-

வர வரத-சிறந்த வரங்களை அருளும் பேர் அருளாளனே
த்வம் -நீ
பரோ வா -பர வாஸூ தேவனாகவோ
வ்யூஹோ வா -வ்யூஹ மூர்த்தியாகவோ
விபவ பவந் வா -விபவ அவதாரமாக பிறந்தவனாயோ
உத வர்ச்சாவதாரண பவந் வா-அல்லது அர்ச்சையாக அவதரித்தவனாகோ
வாந்தர்யாமீ வா -அந்தர்யாமியாகவோ
யோ யோ பவசி வை –எவ்வெவனாக இருக்கிறாயோ
ச ச சந் ஐஸாந் –அவ்வவனாகக் கொண்டு ஈஸ்வரனுக்கு உரிய
அகிலான் வர குண கணாந் –சிறந்த கல்யாண குண சமூகங்கள் எல்லாவற்றையும்
பிப்ரத் -தன்னிடத்தில் உடையவனாய்
ஏவம் -இப்படி சகல குண விஸிஷ்ட வேஷனாக
சததம் -எல்லா அவஸ்தைகளிலும்
பஜத்ப்யோ பாசி –ஆஸ்ரிதர்களுக்கு தோற்று
இதரேப்யஸ் து இதரதா பாசி -அநாஸ் ரிதர்களுக்கு -வேறு விதமாக -குண சூன்யனாக தோற்றுகிறாயே –

கல்யாண குணங்கள் ஆவிர்பாகத்துக்கும் திரோபாவத்துக்கும் விஷய விபாகம் பண்ணுகிறார் இதில்

—————–

தயா ஷாந்தி ஒவ்தார்யம் ரதிம சமதா ஸுவ்ஹ்ருத த்ருதி
பிரசாத பிரேம ஆஜ்ஜா ஆச்ரித ஸூலபதாத்யா வர குணா
ததா ஸுவ்ந்தர்யாத்யாஸ் தவ வரதராஜ உத்தம குணா
வி ஸீமாந அசங்க்யா ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே -19-

ஹே வரதராஜ
தவ -உன்னுடைய
வி ஸீமாந -எல்லை அற்றதுகளும்
அசங்க்யா-எண்ணிறந்ததுகளுமான
தயா ஷாந்தி ஒவ்தார்யம் ரதிம -தயை பொறுமை ஒவ்தார்யம் ஸுவ்குமார்யம்
சமதா ஸுவ்ஹ்ருத த்ருதி-சமத்துவம் -நத்யஜேயம் கதஞ்சன–தன்னடியார் திறத்து இத்யாதி –
ஸுஹ்ருத்வம் -உறைப்பு
பிரசாத பிரேம ஆஜ்ஜா -கனிவு அன்பு ஆணை –பீஷ்மரும் யேஹ்யேஹி புல்லாம்புஜா பத்ர நேத்ர -என்னும்படி அன்றோ பிரசாதம்
ஆஸ்ரித ஸூலபதாத்யா -ஆஸ்ரித ஸுலப்யம்–தர்மர் உகந்த உருவம் இத்யாதி – முதலிய
வர குணா -சிறந்த ஆத்ம குணங்களும்
ததா ஸுவ்ந்தர்யாத்யாஸ் உத்தம குணா-அப்படிப்பட்ட ஸுவ்ந்தர்யம் முதலிய சிறந்த தேஹ குணங்களும்
ப்ரணத ஜன போகம் ப்ரஸூவதே -ஆஸ்ரித ஜனங்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றன

ஸுவ்ந்தர்யாதி ஆதி சப்தத்தால் -ஸுகுமார்ய லாவண்ய யவ்வனம் முதலிய குணங்களும்
ஸுவ்குமார்யம் உபய கோடி குணம்
அனைத்து குணங்களும் ஒரு வியக்திக்கே போக ஹேதுவானாலும்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்
ஸுர்யாதிகளுக்கு விஷயம் பிரதி கூலர்
இவற்றுக்கு அடியான ஞான சக்த்யாதிகளுக்கு சர்வரும் விஷயம்
ஞானம் அஞ்ஞருக்கு
சக்தி அசக்தர்க்கு
க்ஷமை ச அபராதருக்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் ச தோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
ஸுவ்ஹார்த்தம்-துஷ்ட ஹ்ருதயர்களுக்கு
மார்தவம் விஸ்லேஷ பீருக்களுக்கு
ஸுவ் லப்யம் காண ஆசைப்படுவர்களுக்கு-இவ்வடைவிலே ப்ரணத ஜன போக பிரதமாகக் குறை இல்லை –

——————–

அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிக கிரஸ்
பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே
உபாலம்ப அயம் போஸ் ச்ரயதி பத சார்வஞ்ஞயம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவ ஆகலயஸி –20-

போ வரத
வைதிக கிரஸ் -வேத வாக்குகளானவை
தவ -உனக்கு
அநந்ய அதீநத்வம் -பிறருக்கு வசப்பட்டு இராமையாகிற ஸ்வா தந்திரத்தை
ஜகுர்-சொல்லி உள்ள
வயம் து -நாங்களோ என்றால்
ப்ரணத பரதந்த்ரம்-அடியவர்களுக்கு பரவசனான
த்வாம்-உன்னை
பராதீநம் -பரதந்த்ரனாக
மநுமஹே -எண்ணுகிறோம்
அயம் -இப்படிப்பட்ட
உபாலம்ப-தூஷணமாவது
தே -உன்னுடைய
சார்வஞ்ஞயம் அபி ச்ரயதி –சர்வஞ்ஞத்தையும் பற்றுகிறது
பத –ஆச்சர்யம்
யத –ஏன் என்றால்
இஹ பக்தேஷு -இவ்விபூதியில் உள்ள பக்தர்கள் இடத்தில்
தோஷம் நைவ ஆகலயஸி –குற்றத்தை சிறிதும் பார்க்கிறாய் இல்லை இறே

வியாஜ்ய ஸ்துதி அலங்கார மரியாதையாலே ஸ்ரீ பேர் அருளாளனுடைய ஆஸ்ரித பாரதந்தர்ய குணத்தையும்
வாத்சல்ய குணத்தையும் அருளிச் செய்கிறார் –
அர்ச்சா பராதீனத்தவம் அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் சாதாரணமாய் இருந்தாலும்
ஸ்ரீ பேர் அருளாளன் பக்கலிலே இது நெடு வாசியாய் இருக்கும்
திருக் கச்சி நம்பி பக்கலிலே சர்வாத்மநா பரதந்த்ரனாய் இருந்தும்
உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமானாரையும் தாரை வார்த்து தத்தம் பண்ணும் படி ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையருக்குத்
தோற்று நின்றதும் முதலான வ்ருத்தாந்தங்களை அனுசந்திப்பது –
அஷ்ஷ்ரிதா பரதந்த்ரனான நிலையிலே ஈடுபட்டு வித்தாராகிறார் இதில்
ஸ்வா தந்த்ரத்துக்குக் கண் அழிவு சொன்னால் போலே சர்வஞ்ஞத்துக்கும் கண் அழிவு சொல்கிறார் மேல்
குன்றனைய குற்றங்கள் இருந்தும் அவற்றை அறியாமல் ஒழிவதால் நீ அ விஞ்ஞதன் அன்றோ

உபாலம்ப-தூஷண -கர்ப்பிதமாய் இருந்தாலும் தாத்பர்ய வ்ருத்தியினால் அவனது கல்யாண குணங்களை ப்ரசம்சித்த படி –
ஆகவே வியாஜ்ய ஸ்துதி அலங்காரம் ஆகிறது –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–ஸ்லோகங்கள்-1-10 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

October 17, 2019

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -ஸ்ரீ ஸூந்தரபாஹு ஸ்தவம் –
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்- ஸ்ரீ ஸ்தவம் -இவை ஸ்ரீ பஞ்ச ஸ்தவங்களின் அடைவுகள்
நூறு ஸ்லோகங்கள் கொண்டவை -ஒவ் ஒரு தசகமும் ஒரு வ்ருத்தமாக அமைந்துள்ளது
இது போன்றே ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தயா ஸ்தானமும் சதகம் தோறும் ஒரு வ்ருத்தமாக அமைந்து இருக்கும்

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய விவரணமாயும் அர்த்த பஞ்சக விஸ்தீரணமாயுமாய் இருக்கும்
ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
அநந்யார்ஹ சேஷத்வமே ஆத்ம ஸ்வரூபம்
கல்யாண குண அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
அஹங்கார மமகாரங்களே தத் விரோதி
தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் சர்வேஸ்வரன் திருவடிகளே கண் அழிவு அற்ற உபாயம்
ஜிதேந்த்ரியம் தொடக்கமாக கைங்கர்யம் ஈறாக உபாய பலம் –
இவற்றை அனைத்தையும் அருளிச் செய்கிறார் இதில்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்ய நம உத்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே மங்கள ஸூத்ரதாம்

———–

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

நித்யம் இந்திரிய பத அதிகம் மஹ யோகி நாம் அபி ஸூ தூரகம் திய
அப்ய அநுஸ்ரவ சிரஸ்ஸூ துர்க்க்ரஹம் ப்ரா துரஸ்தி கரி சைல மஸ்தகே –3-

நித்யம் இந்திரிய பத அதிகம் -சாஸ்வதமானதாய் -சஷுராதி இந்திரியங்களின் வழியைக் கடந்ததாய்
யோகி நாம் திய அபி ஸூ தூரகம்-யோகிகளுடைய புத்திக்கும் அதிக தூரத்தில் உள்ளதாய்
அநுஸ்ரவ சிரஸ்ஸூ அப்ய துர்க்க்ரஹம் -வேதாந்தங்களிலும் அளவிட்டு அறியக் கூடாததான -ஆனந்த குணம் ஒன்றையும் அளவிடப்புகுந்து மீண்டதே
மஹ –மஹா விலக்ஷண தேஜஸ்ஸான -ஸ்ரீ தேவ பெருமாள் -சூர்யன் நக்ஷத்ராதி தேஜஸ்ஸுக்கள் ஒரு கால விசேஷத்தில் அழியக் கூடியவை
கரி சைல மஸ்தகே –ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தில்
ப்ரா துரஸ்தி –விளங்கா நின்றது

——————————–

வல்லிகா சுருதி மதல் லிகா மயீ யேந பல்லவித விஸ்வ சாகயா
ஸ்வ ஸ்ரியா கரி கிரே அநு க்ரியாம் வஷ்டி ம்ருஷ்ட வரதம் தம் ஆஸ்ரயே –4-

சுருதி மதல் லிகா மயீ -ஸ்ரேஷ்டமான வேதம் ஆகிற
வல்லிகா -கொடியானது
யேந பல்லவித விஸ்வ சாகயா -யாவன் ஒரு தேவ பிரான் ஆகிற தளிரை உடைத்தான் சகல சாகைகளையும் உடைய
ஸ்ரீ ஹஸ்தி கிரி பக்ஷத்தில் யாவன் ஒரு பேர் அருளாளனாலே தளிர் பெற்ற எல்லாக் கிளைகளையும் உடைத்தான்
ஸ்வ ஸ்ரியா -தனது சோபையினாலே
கரி கிரே அநு க்ரியாம் வஷ்டி-ஸ்ரீ ஹஸ்தி கிரியினுடைய அநு காரத்தை -சாம்யத்தை விரும்புகின்றதோ —
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் அன்றோ –
தம் ம்ருஷ்ட வரதம் ஆஸ்ரயே –அந்த பூர்ண ஸ்ரீ வரதனை ஆஸ்ரயிக்கிறேன்-பரி சுத்தனான வரதனை என்றுமாம்

ஹஸ்தி கிரிக்கும் ஸ்ருதிக்கு சாம்யம் -சாகைகளும் பல்லவமும் -சாகைகளுக்கு அழகு பல்லவங்களால் –
வேத சாகைகள் எம்பெருமானாலே சஞ்ஜாத பல்லவங்களாய் இருக்கின்றன என்றால்
வேதங்கள் எல்லாம் பகவத் பரங்களாய் இருந்து கொண்டு அழகாக விளங்குகின்றன என்றபடி
ஸ்ரீ பேர் அருளாளனுடைய நித்ய சந்நிதியாலே திவ்ய கடாக்ஷமே விளை நீராகக் கொண்டு செழிப்புற்று விளங்குகை என்றுமாம்
மதல்லிகா சப்தம் -சிரேஷ்ட வாசகம் -சிரேஷ்ட பிராமண சுருதி -என்றபடி

—————————————–

யம் பரோக்ஷம் உபதேசதஸ் த்ரயீ நேதி நேதி பர பர்யுதாஸத
வக்தி யஸ் தம் அபரோக்ஷம் ஈஷயதி ஏஷ தம் கரி கிரிம் ஸமாஸ்ரயே—5-

த்ரயீ-வேதமானது-ப்ருஹதாரண்யகம்
நேதி நேதி-இதி ந இதி ந இதி -இவ்வளவல்லன் இவ்வளவல்லன் என்று
பர பர்யுதாஸத உபதேசதஸ்–மேன்மேலும் மறுத்துக் கொண்டு போவதாகிற உபதேசத்தால்
யம் பரோக்ஷம் -யாவன் ஒரு வரதனை இந்திரியங்களுக்கு வெளிப்பட்டவனாய் -அபரிச்சின்னனாய்
வக்தி தம்-சொல்லி நின்றதோ அந்த வரதனை
ய ஏஷ-யாதொரு இந்த ஹஸ்த கிரி
அபரோக்ஷம் ஈஷயதி–சாஷாத்தாக சேவை சாதிப்பிக்கின்றதோ
தம் ஏதம் கரி கிரிம் -அந்த இந்த ஹஸ்த கிரியை
ஸமாஸ்ரயே—ஆஸ்ரயிக்கின்றேன்

கீழ் ஸ்லோகத்தில் வேத -ஸ்ரீ ஹஸ்தி கிரி சாம்யம் -இதில் அதினிலும் இதுக்கு உத்கர்ஷம்
ப்ருஹதாரண்யம் -4-3-1-
த்வே வாவ ப்ரஹ்மணோ ரூபே –என்று தொடங்கி ஸ்தூல ஸூஷ்ம பிரபஞ்சம் அனைத்தும் ப்ரஹ்ம ரூபமாக பராமர்சித்து –
ஆகார விசேஷத்தையும் சொல்லி -இவற்றோடு விசிஷ்டமான ப்ரஹ்மம் நேதி நேதி என்று சொல்லி –

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-21-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் -அத்தையே நிராகரித்தது நேதி நேதி என்று
தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம்
தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது
பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்
ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்மவச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –
ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்-
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பரமமான வஸ்து வேறே ஓன்று இல்லை என்று பரம உத்க்ருஷ்டமாக சொல்லி வைத்தும்
ப்ரத்யக்ஷமாகக் காட்டித்தர வில்லையே –
இந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியோ சகல ஜன சாஷாத்கார யோக்யமாகக் காட்டித் தாரா நின்றது
ஆகவே அந்த வேதத்தில் அலைந்து வருந்துவதை விட இதை பற்றியே உஜ்ஜீவிப்போம்

——————-

ஏஷ ஈஸ இதி நிர்ணயம் த்ரயீ பாகதேய ரஹிதேஷு நோ திசேத்
ஹஸ்தி தாமநி ந நிர்ணயேத க தேவராஜம் ஈஸ்வரஸ் த்விதி–6-

த்ரயீ-வேதமானது
ஏஷ ஈஸ இதி நிர்ணயம்-தேவ பிரான் சர்வேஸ்வரன் என்கிற நிர்ணயத்தை
பாகதேய ரஹிதேஷு–வேதார்த்தத்தை நன்றாக ஆராய்ந்து அறிய மாட்டாத துர்பாக்யசாலிகள் இடத்தில்
நோ திசேத் -உண்டு பண்ணாமல் போனால் போகட்டும்
ஹஸ்தி தாமநி து –ஸ்ரீ ஹஸ்தி கிரியான ஸ்தானத்திலோ என்றால்
தேவராஜம் அயம் ஈஸ்வர இதி -ஸ்ரீ தேவப்பெருமாளை சேவித்து இவனே சர்வேஸ்வரன் என்று
க ந நிர்ணயேத -எவன் நிச்சயிக்க மாட்டான்
வேதாந்தம் மூலம் அறிபவர் -ஜாயமான கால கடாக்ஷத்தாலோ ஆச்சார்ய கடாக்ஷத்தாலோ தானே –
நீயோ சர்வ ஜன நயன ஸூலப விஷயமாய்க் கொண்டு சேவை சாதிப்பதால்
குத்ருஷ்டிகளும் பேர் அருளாளன் அல்லது பரதெய்வம் இல்லை என்று கை எழுத்து இடுவார்களே
ஹஸ்தி கிரி தாமநி என்னாதே ஹஸ்தி தாமநி–என்றது ஏக தேச கிரஹணம்

————————–

ஹை குத்ருஷ்ட்டி அபி நிவிஷ்ட சேதஸாம் நிர்விசேஷ ச விசேஷதா ஆஸ்ரயம்
சம்சயம் கரிகிரிர் நுததி அசவ் துங்க மங்கல குண ஆஸ்பத ஹரவ்-7-

துங்க மங்கல குண ஆஸ்பத ஹரவ்–சிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான எம்பெருமான் இடத்தில்
குத்ருஷ்ட்டி அபி நிவிஷ்ட சேதஸாம்-குத்ஸிதமான யோஜனைகளில் பொருந்தின மனசை யுடைய தூர்வாதிகளுக்கு உண்டாய் இருக்கிற
நிர்விசேஷ ச விசேஷதா ஆஸ்ரயம்
சம்சயம்–இவன் குணங்கள் உடையவனா இல்லாதவனா என்று இரண்டு கோடிகளைப் பற்றிய சந்தேகத்தை
அசவ் கரிகிரிர் நுததி -இந்த ஸ்ரீ ஹஸ்தி கிரி போக்கடிக்கின்றதே –
ஹை–இது பிரசித்தம் அன்றோ
ஆக ஸம்சயங்களை விளைக்க வல்ல வேதங்களைக் காட்டிலும்
ஸம்சயங்களைப் போக்கடிக்க வல்ல ஸ்ரீ ஹஸ்தி கிரியே பரம ப்ராப்யம் என்றதாயிற்று –

—————————————-

நியாய தர்க்க முனி முக்கிய பாஷிதை சோதிதைஸ் ஸஹ கதஞ்சன த்ரயீ
ஜோஷயேத் ஹரிம் அநம்ஹஸோ ஜநாந் ஹஸ்தி தாம சகலம் ஜனம் ஸ்வயம் -8-

த்ரயீ சோதிதைஸ்-வேதமானது நன்றாக சோதிக்கப்பட்ட
நியாய தர்க்க முனி முக்கிய பாஷிதை ஸஹ-மீமாம்ச நியாயங்கள் என்ன தர்க்கங்கள் என்ன
வ்யாஸ பராசராதி முனிவர்களுடைய சொற்களாகிய புராணங்கள் என்ன -ஆகிய இவற்றோடு கூடிக் கொண்டு
கதஞ்சன-கஷ்டப்பட்டு
அநம்ஹஸோ ஜநாந்-புண்ய சாலிகளான சில பேர்களுக்கு
ஜோஷயேத் ஹரிம்-எம்பெருமானை பரதத்வமாக உணர்த்தும்
ஹஸ்தி தாம து ஸ்வயம் -ஸ்ரீ ஹஸ்திகிரியோ என்றால் தானாகவே
சகலம் ஜனம்-புண்யசாலிகள் பாபிகள் என்ற வாசி இன்றியே அனைவருக்கும்
ஹரிம் ஜோஷயதி -எம்பெருமானை சேவை சாதிப்பிக்கின்றது

வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கு அன்றோ இவன்
வேதாந்தம் போலே பலவற்றைக் கொண்டு சோதனை பண்ணி யதார்த்தர்தாம் கொள்ள வேண்டாம்படி
அனாயாசமாகவே ஸ்ரீ ஹஸ்தி கிரி பரம்பொருளை யதாவாகப் பிரகாசிப்பிக்கின்றதே

——————

அத்புதம் மஹத் அசீம பூமகம் கிஞ்சித் அஸ்தி கில வஸ்து நிஸ்துலம்
இத்யகோஷி யதிதம் தத் அக்ரத தத்த்யமேவ கரி தாம்நி த்ருச்யதே -9-

அத்புதம் -ஆச்சர்யகரமாயும்
மஹத் -அபரிச்சின்ன ஸ்வரூபத்தை உடையதாயும்
அசீம பூமகம் -எல்லையில்லா வைபவத்தை யுடையதாயும்
அத ஏவ -இப்படி இருப்பதனாலேயே
நிஸ்துலம்-ஒப்பற்றதாயும்
கிஞ்சித் வஸ்து அஸ்தி இதி -ஒரு வஸ்து இருக்கின்றது என்று
யத் கில அகோஷி-யாது ஒரு வஸ்து வேதாதிகளிலே சொல்லப்பட்டு இருக்கின்றதோ
யாதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா
எப்பால் எவர்க்கும் நலத்தால் அப்பால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன்
தத் இதம் -அந்த இந்த வஸ்து
கரி தாம்நி அக்ரத தத்த்யமேவ த்ருச்யதே-ஸ்ரீ ஹஸ்தி கிரியில் இதோ வாஸ்தவமாகவே காணப்படுகின்றதே
வேதாதிகள் கவி காட்டுகிறாப் போலே ஓன்று பத்தாக சொல்வது எல்லாம் சொன்னது ஒக்கும் ஒக்கும் என்று
வியக்கும்படி அத்யாச்சர்யமான வைபவத்துடன் அன்றோ ஸ்ரீ பேர் அருளாளன் இங்கே சேவை சாதித்து அருளுகிறார்

—————-

ஸம்வதேத கில யத் பிரமாந்தரை தத் பிரமாணம் இதி யே ஹி மேநிரே
தந்மதே அபி பத மாநதாம் கதா ஹஸ்தி நா அத்ய பரவஸ்து நி த்ரயீ -10-

யத் பிரமாந்தரை-பிரமாணமாக அபிமானிக்கப்படுகின்ற யாதொன்றானது வேறு ப்ரமாணங்களோடு
ஸம்வதேத கில தத் பிரமாணம் இதி-இணங்குமோ அது அன்றோ பிரமாணம் என்று
யே மேநிரே தந்மதே அபி-யாவர் சிலர் எண்ணினார்களோ அவர்கள் மதத்திலும்
அத்ய ஹஸ்தி நா த்ரயீ –இப்போது ஸ்ரீ ஹஸ்தி கிரியினாலேயே வேதமானது
பரவஸ்து நி -பரம்பொருள் ஆகிற எம்பெருமான் விஷயத்தில்
மாநதாம் கதா -ப்ராமாண்யத்தை அடைந்தது
பத ஹி-சந்தோஷக் குறிப்பு

ஆதவ் வேதோ பிரமாணம் -வைதிக சித்தாந்தம்
வேத பாஹ்யர்களோ ஸ்வத பிரமாணம் ஒன்றும் இல்லை என்பர்
அந்த வேதத்துக்கு ப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கக் கூடியது ஸ்ரீ ஹஸ்தி கிரியேயாம் -அதாவது
ஈஸ்வரன் ஒருவன் உண்டு
ஸ்ரீ மன் நாராயணனே தத்வம்
அவனுக்கு குணங்கள் உண்டு
விக்ரஹங்கள் உண்டு
விபூதி உண்டு –இத்யாதிகள் கை இலங்கு நெல்லிக்கனி போலே காணலாமே
சம்வதேத -ஒரு பிரமானத்துக்கு இன்னும் ஒரு பிரமாணம் உதாஹரித்தால் அது சம்வாத பிரமாணம்
பிரமாந்தரை -பிரமாணந்தரை -பிரமா சப்தம் பிரமாண பர்யாயம்
ஸ்ரீ பட்டரும் -தத் சார்வாக மாதே அபி ரெங்க ரமண ப்ரத்யக்ஷவத் ச பிரமா –ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்-
பிரமா சப்தத்தை பிராமண பர்யாயமாக அருளிச் செய்கிறார்

இந்த முதல் பத்து ஸ்லோகங்களும் ரதோத்ததா வ்ருத்தம் –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண ஸூதா –வாக் அம்ருத வர்ஷீ ஸ்ரீ . உ . வே . வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிகள் —

October 16, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

வ்யூஹேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ
ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயிநீ –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –
அகில குண பரிபூர்ணனான எம்பெருமான் ஸ்ரீ ராமனாக திருவாவதரிக்க ஸ்ரீ பிராட்டியும் ஜனக குல ஸூந்தரியாக திருவவதரித்தாள்-

புநஸ் ச பத்மா ஸம்பூதா ஆதித்யோஸ் பூத் யதா ஹரி
யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம்
ராகவவேஸ் பவத் சீதா ருக்மிணீ க்ருஷ்ண ஜென்மநி
அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ
விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத் யேஷாஸ் ஆத்மநஸ் தநும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-/144–145- என்று
ஆத்யன் -பத்மை /பரசுராமன் -தரணி/ ஸ்ரீ ராகவன் ஸ்ரீ சீதாபி பிராட்டி /ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி -என்று
இவனுக்குத் தக்க அவளும் தன்னை அமைத்து கொள்கிறாள் என்கிறார் ஸ்ரீ பராசர மகரிஷியும் –

யதிமநு ஜதிரஸ் சாம் லீலயா துல்ய வ்ருத்தே
ரநுஜநுரநுரூபா தேவி நாவா தரிஷ்ய
அசர சம பவிஷ்யந் நர்ம நாதஸ்ய மாதர்
தர தள தரவிந்தோ தந்த காந்தாயதாஷி –ஸ்ரீ குணரத்ன கோசம் –
ஸ்ரீ பராசர பட்டரும் லீலையில் பொருட்டே மிதுன தம்பதிகளின் திரு அவதாரம்

இவர்கள் இருவர் சரிதமாகவே ஸ்ரீ வாலமீகி பகவான் ஸ்ரீ ராமாயணத்தை செய்து அருளினார் –
ப்ரமேய பூதனான பகவான் திருவாவதரிக்கும் போது பிராமண பூதமான வேதமும் திரு அவதரிக்கும் –

வேத வேத்யே பரே பும்சி ஜாதி தசாரதாத்மஜ
வேத ப்ராசேதஸா தாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -ஸ்ரீ ஸ்காந்த புராண வசனம்

வேத வேத்ய நியாய லப்யம்
வேத உப ப்ரும்ஹணம் – எனவும்
ஆதி காவ்யம் – எனவும்
பக்தி வெள்ளம் – எனவும்
சரணாகதி சாஸ்திரம் -எனவும்
ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -எனவும்
ஸ்ரீ சீதையா சரித்திரம் -ஸ்ரீ ராமாயணம் சொல்லப்படும்

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திஸ் ச நியதா வீர பாவோ நான்யத்ர கச்சதி –உத்தர ஸ்ரீ ராமாயணம் -40-15-
ஸ்ரீ ராமன் ஆராதித்த ஸ்ரீ பெரிய பெருமாளைக் கண்ணாரக் கண்டும்
ஸ்ரீ ராமனால் தழுவப்பட்டத் தம் திரு மேனியை மனம் குளிர நுகர்ந்து கொண்டும்
ஸ்ரீ ராம கல்யாண குண ப்ரகாசகமான ஸ்ரீ ராமாயணத்தைக் காது குளிரக் கேட்டுக் கொண்டும்
இந்த நில உலகிலேயே ஸ்ரீ திருவடி எழுந்து அருளி
மற்று ஓன்று காணாவே என்று இருக்கும் படி அன்றோ ஸ்ரீ ராமபிரானுடைய குண பூர்த்தி
இவ்விஷயத்தையே ஸ்ரீ கூரத்தாழ்வான் –தாத்ருக் குண -அதிமானுஷ ஸ்தவம் -32-என்று பேசி அகம் மகிழ்கிறார்

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் என்று ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்த ஸ்ரீ நம்மாழ்வார்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றேர் -என்றும்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ-7-5-1 -என்றும்
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-என்றும்
ஸ்ரீ நாச்சியாரும்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -13-1-என்றும்
வேம்பேயாக வளர்த்தாள்-13-7-என்றும்
கொள்ளை கொள்ளிக் குறும்பன் -13-8-என்றும்
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இணையான -12-என்றும்
குணாபிராமனான ஸ்ரீ ராமன் இடம் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்கள் –

மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயீ ததை வார்த்ரா பராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்சை விபீஷணம் சரணமித் யுக்தி ஷமவ் ரஷத
சாநஸ் சாந்த்ர மஹாக சஸ் ஸூக யது ஷாந்திஸ் தவாஸ் அகஸ்மிகீ –ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

அணி மிகு செந்தாமரைக் கையின் உத்க்ருஷ்டம் -அச்சுதன் கைம்மேல் என் கை -6-9-
ஸ்ரீ பெருமாளாலே நாச்சியார் விழி விழிக்கப் போகாது இறே

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –ஸ்ரீ வசன பூஷணம் -5-

மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த்
தன் சரிதை கேட்டானை -10-8-ஸ்ரீ குலசேகரப் பெருமாளும்

இமவ் முநீ பார்த்திவ லக்ஷணாந்விதவ் குலீலவவ் சைவ மஹா தபஸ்விநவ்
மாமபி தத் பூதிகரம் ப்ரசக்ஷதே மஹாநுபாவம் சரிதம் நிபோதத–பால -4-35-

ததஸ்து தவ் ராமவச ப்ரசோதி தாவகாயதாம் மார்க்க விதாந ஸம்பதா
ச சாபி ராம பரிஷத் கத சநைர் பு பூஷயா சக்தம நா ப பூவ ஹா -பால -4-36-
இத்யாதியால் தன்னை தாழ விட்டு திரு வவதரித்தமையை ஸ்ரீ வால்மீகி பகவானும் அருளிச் செய்கிறார்

ராஜா தசரதோ நாம —ஸூந்தர -31-2-ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பிராட்டியையும் தரிக்கப் பண்ணினாரே-
ஐயன் வந்தான் ஆரியன் வந்தான் -என்று ஸ்ரீ பரத்தாழ்வானும் ஸ்ரீ திருவடி முகத்தால்
ஸ்ரீ ராம வ்ருத்தாந்தத்தைக் கேட்டுத் தரிக்கப் பெற்றான்

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -391-பரார்த்தி-திரு நாமத்துடன் தொடங்கும் பிரகாரண அவதாரிகையில்
ஸ்ரீ பராசர பட்டார் -இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் -என்று
ஸ்ரீ இராமாயண படனம் சகல ஷேம ப்ரதம்-என்பதால்
ஸ்ரீ இராமாயண ப்ரவசனமும்
ஸ்ரீ இராமாயண ச்ராவணமும்
ஸ்ரீ இராமாயண பாசனமும் செய்து
செங்கண் திரு முகத்துச் செல்வத் திரு மாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்

நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செயல்களின் வியாக்யானங்களிலும்
ஸ்ரீ ரஹஸ்ய க்ரந்தங்களிலும் அவற்றின் வியாக்யானங்களிலும்
ஸ்ரீ இராமாயண பிராமண வசனங்கள் மூலமாக த்ருஷ்டாந்த பரமாக இருக்கும் விவரணங்கள்
துல்யமாகவும் பரம விலக்ஷணமாகவும் ஐக கண்டமாயும் ரஸவாஹமாயும் இருப்பதை கண்டு அனுபவிக்கலாம்
வியாக்கியான சக்ரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த தனி ஸ்லோக
வியாக்யானங்களும் பரம விலக்ஷணமாய் இருக்கும்
பல நுண்ணிய வேத வேதாந்த தாத்பர்யங்களையும்
சிந்தாந்தக் கோட்ப்பாடுகளையும்
தத்வார்த்தங்களையும்
சீரிய சம்பிரதாய அர்த்த விசேஷங்களையும்
இவற்றால் வெளியிட்டு அருளினார்கள்

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-
இப்படி தான் -சப்த பிரயோகத்தால் ஸ்ரீ ராமாவதார ஏற்றத்தை அருளிச் செய்கிறார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்
அல்லாத இடங்கள் சக்தி ஏக தேசம் -அவன் தானே மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரக்ஷணம் பண்ணினான் தன்னை -என்கிறார் திருக்கண்ண புறத்தை நிகமித்து அருளும் கலியனும்

ஸ்ரீ ஆளவந்தார் நியமனத்தின் படியே ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி என்னும் ஸ்ரீ சைல பூர்ணர் என்னும்
ஸ்ரீ பாஷ்ய கார உத்தம தேசிகர் -எனப்படும்
ஒரு சம்வத்சர காலம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு கீழ்த் திருப்பதியில் திருமலை அடிவாரத்தில் உபதேசித்து அருளினார் –
இவரே பிதா மஹயாபி பிதா மஹாய -தாதா -பிதாவே என்று ஸ்ரீ திருவேங்கடமுடையான் அழைத்து அருளியதால் –
இவர் வம்சமே தாதாச்சார்யர்கள்
இந்த அர்த்த விசேஷங்கள் தான் நாம் வாழையடி வாழையாக பரம போக்யமாக அனுபவிக்கப்பட்டு
ஏடுபடுத்தப்பட்டு அனுபவிக்கலாம் படி காணக் கிடக்கின்றன

ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகதவத்தாலே -ஸ்ரீ மா முலைகளின் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்தி
நித்தியமாக ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் ஸ்ரீ ராமாயணம் பாராயணம் செய்ய
ஸ்ரீ உடையவர் திருச் செவி மடுத்துக் கேட்டருளி திரு உள்ளம் பூரிப்பதாக ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரிதை கூறும்

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் –
வாசம் அஹோசர மஹா குண தேசிகார்ய கூராதி நாதர் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-திருவாய் மொழி முழுவதுமே ஸ்ரீ ராமாவதார பரமாகவே
அனுபவித்து கால ஷேபம் செய்வார் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் கல்யாண குணக் கடல் -மற்ற திரு அவதாரங்களில் ஸ்ரீ எம்பெருமான் வெளிப்படுத்திய
ப்ரகாசப்படுத்திய திருக் கல்யாண குணங்கள் எல்லாம் இவற்றுக்கு ஏக தேசமானவையே –
ஸ்ரீ ரெங்கேச புரோகிதர்களான ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமாவதாரத்திலேயே ஈடுபட்டு இருப்பர் –
இஷ்வாகு குலத்திலே திருவவதரித்ததே ஸ்ரீ ப்ரணவாகார விமானத்தில் எழுந்து அருளி இருக்கும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் செய்யவே தானே இவர்களுக்கு ஈடுபாடு

குண பரீவாஹம்
ஸ்ரீ பகவத் திரு அவதாரங்களை -குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம் -என்று ஸ்ரீ பராசர பட்டார் அனுபவம்
ஜிலோச்ச் வாசா பரிவாஹா -அமர கோசம்
பூரோத் பீடே தடாகஸ் ச பரீவாஹ ப்ரதிக்ரியா -தடாகாந்தே ப்ரவ்ருத்த ஜல நிர்க்கமாய க்ருத மார்க்க பரீவாஹ–
திருக் கல்யாண குணங்களின் நிற்க மார்க்கமே போக்கு வீடே திரு அவதாரம் -என்றவாறு
அவனோபாதி கல்யாண குணங்களும் நித்யம்
உயர்வற உயர் நலம் உடையவன் -ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்கயேய குண கண -ஸ்ரீ ஆளவந்தார்
தோஷோபதாவதி சமாதிசயாந சங்க்யா நிர்லேப மங்கள குணவ் கதுகா -ஸ்ரீ பராசர பட்டர்
அனந்தன் உடைய கல்யாண குணங்களும் அநந்தம்
நாந்தம் குணாநாம் கச்சந்தி தேநாநந்தோ அயம் உச்யதே -என்றால் போலே
ஈறில வண் புகழ்
உலப்பில் கீர்த்தி
பண்டித பாமர விபாகமர ஈடுபடுத்தும் ஸ்ரீ ராமாவதாரம் -குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
ஸ்ரீ ஜெயதேவ கவி பிரசன்ன ராகவ நாடகத்தில்
நட கதம் புநரமீ கவய சர்வே ராம சந்த்ரமேவ வர்ணயந்தி
ஸூத்ரதார -நாயம் கவீநாம் தோஷ யத ஸ்வ ஸூக்தீ நாம் பாத்ரம் ரகு திலகமேகம்
கலயதாம் கவீநாம் கோ தோஷ சது குண கணா நாம் அவ குண
யதே தை நிஸ்சேஷை அபர குண லுப்தை ரிவ ஜகத்யசா வேகஸ் சக்ரே சதத ஸூக சம்வாச வசதி – என்கிறார்

இவ்வுலகங்கள் இராமன் பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வான்
கீழ் மகன் தலை மகனுக்கு சம சஹாவாய் -தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு
பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் ஸஹ போஜனமும் -85-ஸ்ரீ நாயனார் இவனது ஸுலப்யம் அனுபவிக்கிறார்
ஸ்ரீ ராம அவதார தத்துவமே ஸுசீல்யம் -ஸ்ரீ பராசர பட்டார்
க குணவான் -வசீ வதாந்ய குணவான் -ஸ்ரீ ஆளவந்தார் -மஹதோ மந்தை ஸஹ நீரந்தரேண ஸம்ஸ்லேஷ ஸுசீல்யம்
கங்கா குலத்திலே ஸ்ரீ குகப்பெருமாளுடன் பம்பா தீரத்தில் மஹா ராஜரான ஸூக்ரீவனுடனும்
கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுடன் கலந்து ஸுசீல்யம் காட்டி அருளினார் ஸ்ரீ பெருமாள்
வேடன் குரங்கு இருக்கத்தான் என்று அவர்கள் நைச்யத்தையும்
நித்ய ஸூரி நாதத்வமாகிற தன் மேன்மையையும் பாராதே கலந்தார்
விபீஷணனை ராவணன் குலா பாம்சனான் என்றான்
இஷ்வாகு வம்சயனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார்

பரத்வமும் ஆஸ்ரயமான பகவத் விஷயத்தை விட்டுப் பிரியாதே
தன்னடையே பீறிட்டுப் பிரகாசிக்கும் -பஷிக்கு மோக்ஷம் அளித்ததிலும்-குரங்குகளைக் கொண்டு கடலை அடைத்ததிலும் –
இக்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ஸ்ரீ லங்கா பட்டாபிஷேகம் நடத்தி வைப்பதிலும் காணலாமே –
சத்யேன லோகாஞ்ஜயதி த்விஜாந் தாநேந ராகவ
குரூஞ் சுஸ்ரூஷயா வீரோ தநுஷா யுதி சாத்ரவாந் –அயோத்யா -12-29-நம்பிள்ளை ஜடாயு மோக்ஷ காரண சமாதானம்

மா மாயன் -மாதவன் -வைகுந்தன்
லோக நாத மாதவ பக்த வத்சலா
ஸஹ சீதம் ந்யவேஸத்-

தப ஸ்வாத் யாய நிரதம் தபஸ்வீ வாக் விதாம் வரம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம் –குரு வந்தன பரமான மங்கள ஸ்லோகம்
நாரதருக்கு -மூன்று அடை மொழிகள் –
தப ஸ்வாத் யாய நிரதர் -புலன்களை அடக்கி நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் செய்பவர் –
வேதம் ஓதி ஓதுவித்தல் -இவற்றில் நிஷ்டர்
வாக் விதாம் வரர்-சிறந்த வாக் வைபவத்தை உடையவர்
முனி புங்கவம் -முனி ஸ்ரேஷ்டர்
வால்மீகி-சிஷ்யர் -தபஸ்வீ
இருவரும் பரிப்ரஸ்னம்-விளைவே ஸ்ரீ ராமாயணம்

கோந் வஸ்மிந் சாம்ப்ரதம் லோகே
1-குணவான்
2-கஸ் ச வீர்யவான்
3-தர்மஞ்ஞ ச
4-க்ருதஞ்ஞ ச
5-சத்ய வாக்யோ
6-த்ருட வ்ரத
7-சாரித்ரேண-ச கோ யுக்த
8-சர்வ பூதேஷு -கோ ஹித
9-வித்வான் க
11-க சமர்த்தஸ் ச
12-கஸ் ஸைக ப்ரியதர்சன ஆத்மவான் கோ
13-ஜிதக்ரோதோ
14-த்யுதிமான் கோ
15-ந ஸூயக
16-கஸ்ய பிப்யதி தேவாஸ் ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –

தச வர்ஷா சஹஸ்ராணி தச வர்ஷ சதாநி ச –
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத் மஜம்
ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ ஸீதாயா சரிதம் மஹத்
த்ரை லோக்ய ராஜ்யம் ஸீதாயா சகலம் நாப்நியாத்
கௌசல்யா லோக பர்த்தாரம்
கௌசல்யா ஸூ ப்ரஜா
கௌசல்யா நந்த வர்த்தந
ஜனகாநாம் குலே கீர்த்தி மாஹரிஷ்யதி
சீதா பர்த்தாரமா ஸாத்ய ராமம் தசாரதாத் மஜன் –பால -64-7–

பூர்ண அவதாரம் -பரத்வ ஸுலப்ய ஸுந்தர்ய பரிபூர்ணன்
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாஷவ் சீரக்ருஷ்ணாஜி நாம்ப ரவ் –ஆரண்ய -19-14-
பரத்வ ஸுலப்ய ஸுந்தர்ய பரமாக மூன்று வியாக்கியானங்கள் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
இதே போலவே -கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்டே நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் –பால -23-2-

ஸ்ரீ பரசுராமன் ஷத்ரிய தேஜஸ் -ஸ்ரீ பெருமாளுடைய ப்ரஹ்ம தேஜஸ் -வைத்து ஜெயமோ என்னில் –
மானுஷ்ய அவதாரம் மெய்ப்பாடு தோற்ற இருக்க வேண்டுமே
அப்ரமேயம் ஹீ தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஸ்ரீ பிராட்டியைக் கைப்பிடித்த தேஜஸ் அன்றோ

பஞ்ச பிரகார விசிஷ்டன் என்பதை
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந் ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி
சமநு ப்ரவிஷ்டஸ் பிரஜாபதி சரதி கர்ப்பே அந்த–என்றும்
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ
அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ஸஹோம் –என்றும்
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்து உறைவாய்-என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநம் பததாம் அத பூர்வ ஸ்மாதாபி பூர்வ ஸ்மாத் ஜ்யாயாந் சைவ
உத்தர உத்தரை –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம்

ஸ்ரீ வைகுண்டம்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு –தெளி விசும்பு திரு நாடு -உம்பரால் அறியலாகா ஓளி-
தன்னுடைய சோதி -சேன் உயர் வானம் –
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை மண் மகளும் ஆய் மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணன்

வ்யூஹம்
ஷாட் குண பரிபூர்ணன் ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவன்
சங்கர்ஷணன் -ஜீவ தத்வ அதிஷ்டாதா -ஜகத் சம்ஹார கர்த்தா -ஞான பல பரிபூர்ணன்
ப்ரத்யும்னன் –மனஸ் தத்வ அதிஷ்டாதா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா -ஐஸ்வர்ய வீர்ய பரிபூர்ணன்
அநிருத்தன் -அஹங்கார அதிஷ்டாதா -ரக்ஷண கர்த்தா -சக்தி தேஜஸ் பூர்ணன்

அந்தர்யாமித்வம்
யேஷாம் இந்தீவரயுச்யாமோ ஹ்ருதயே ஸூ ப்ரதிஷ்டித –
ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனாய்-விலக்ஷண திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்துள் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
புந்தியில் புகுந்து தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே
திருக் கடித்தானமும் என்னுடையச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான்

விபவம்
அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை அதி வ்ருத்தாமர விக்ரம ப்ரதாபை அதி லிங்கித சர்வ லோகா சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம் –ஸ்ரீ கூரத்தாழ்வான்
அதி யத்புத ஸ்வபாவங்கள் -வியாபாரங்கள் -அலங்காரங்கள் -விக்ரமங்கள் பிரதாபங்கள் -இவற்றால்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயனான புருஷோத்தமனின் விபவ அவதாரங்கள்
மத்ஸ்ய கூர்ம வராஹ வாமன நரஸிம்ஹ ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்கள்

அர்ச்சாவதாரம்-
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -என்கிறபடியே அவர்கள் இட்ட பெயரே பெயராகவும்
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாய்க் கொண்டு சர்வ ஸூலபனாய்-சர்வ ரக்ஷகனாய் –
கோயில்களிலும் க்ருஹங்களிலும் தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் இருப்பு
பஞ்ச பிரகாரங்களில் பகவான் சர்வத்ரைவ த்வ கணித மஹா மங்கள குண -என்கிறபடியே
சகல கல்யாண பூர்ணனாயே இருந்தாலும் இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே
செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குலமுதல் என்று அஞ்சாதபடி ஓளி வரும் இணைவனாம் என்றவை
பரத்வமாம் படி அவனாகும் ஸுலப்ய காஷ்டை–
பின்னானார் வணங்கும் சோதி
சர்வம் பூர்ணம் ஸஹோம்
பெருக்காறு போலே விபவம் -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
பிரத்யா சன்னமாயும் தாத் காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பாஸ்ஸாத்யனாவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே யாய்த்து
மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் தத்கால வர்த்திகளுக்கு ஆசிரயணீயமாய்
பிற்காலத்தில் உளனான இவனுக்குக் கிட்டாத படியான விபவம்
அவை போல் அன்றிக்கே விடாய்த்தவனுக்கு விடாய் கெடப் பருகலாம் படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே யாய்த்து
இவனுக்கு தேச கால கரண விக்ரக்ருஷ்டம் இன்றிக்கே கோயில்களிலும் க்ருஹங்களிலும் என்றும் ஓக்க எல்லார்க்கும்
கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற அர்ச்சாவதார –ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்-

பற்பல திவ்ய தேசங்களிலும் சகல கல்யாண குண பரிபூர்ணனாய் சேவை சாதித்தாலும்
திருவரங்கம் திருப்பதியாம் திருவாளர் திருப்பதியில் அந்த வைபவம் அபரிச்சின்னமாய் இருக்கும்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் அன்றோ
பதின்மர் பாடும் பெருமாள் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்
ஆழ்வார்கள் அடியார்கள் ஆச்சார்யர்கள் அனைவரும் அரங்கன் இடம் மண்டினார்கள்
விபவ அவதாரமான ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனே ஆழங்கால் பட்டு –
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாகமத் -என்னும் படி ஆராவமுதம்
ஆழங்காலில் இழிவார் ஒரு கொம்பைக் கொடியைப் பிடித்து இழியுமாப் போல்
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவிக்கும் பொழுது ஸ்ரீ பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிகிறது

சத்யலோகத்தில் நான்முகன் ஆராதிக்க –
இஷ்வாகு ஸ்ரீ ரெங்க விமானத்தோடே அவன் இடம் பெற்று திரு அயோத்யையில் பிரதிஷ்டை செய்து திருவாராதனம் செய்து –
தன்னைத்தானே ஆராதிக்க அன்றோ ஸ்ரீ பெருமாள் இஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்து அருளினான்
யாம் காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதாரே –ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான்
மநு குல மஹீ பால -ஸ்ரீ பராசர பட்டர்
தன்னிலும் சீரிய ஸ்ரீ கோயில் ஆழ்வாரை எழுந்து அருளிவித்துக் கொடுத்தது -ஸ்ரீ தேசிகன் -ஸ்ரீ அபயப்ரதான சாரம் –

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ . உ . வே . வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — ஆறாம் அதிகரணம்-வைஸ்வாநர அதிகரணம் -1-2-5-

October 14, 2019

வைஸ்வாநர அதிகரணம் –

விஷயம்
முண்டக உபநிஷத் -2-1-1-மற்றும் சாந்தோக்யம் -5-12-18–ஆகியவற்றில் கூறப்படும்
வைஸ்வா நரன் என்பவன் பரமாத்மாவே என்று நிரூபணம்

————————-

1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-

சாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்

விஷயம்
சாந்தோக்யம் -5-11-6-
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை
எங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி
சாந்தோக்யம் -5-18-1-
யஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –
அதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்

சங்கை வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ

பூர்வ பக்ஷம்
வைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்
பிருஹத் -5-9-1-
அயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய
ஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு
ரிக்வேதத்தில்
விச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இரவு வேறுபடுத்த
அக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு
ருக்வேதம் 1-98-1-
வைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –
அவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்
தைத்ரிய ப்ராஹ்மணம் 3-11-8-
ததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்
ப்ரஸ்ன உபநிஷத் -1-7-
ச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று
பரமாத்மா பொருளில் படிக்கப்படுகிறது
ஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
சாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்
ப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்
சாந்தோக்யம் -5-11-1-
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி
அவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –
சாந்தோக்யம் 5-11-2-
உத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
இவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்
சாந்தோக்யம் -5-11-4-
அச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
கேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று
ஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –

அஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி
யஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
யாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –
ஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று
மேலும் சாந்தோக்யம் 5-18-1-
ச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்
சாந்தோயம் -5-24-3-
தத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று எஜமானின் பாபங்கள் போகின்றன –

பரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்

————

1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –

இவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்
வைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்

சித்தாந்தம்
அதர்வண வேதம் -முண்டக -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்
விஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்
சாந்தோக்யம் -5-4-1-
அசவ் வை லோக அக்னி -என்றும்
த்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்
ஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்
சாந்தி பர்வம் -47-68-
யஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்
தஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே

த்யு லோகம் ஸ்வர்க்காதிகளும் வைச்வா நரனுக்கு தலையாக சொல்லிற்று
கேகேய அரசன்
சாந்தோக்யம் 5-12-1-
ஓவ்ப மன்யவ கிம் த்வம் ஆத்மா நம் உபாஸதே – நீர் உபாசிக்கும் ஆத்மா யார் என்று கேட்க
விதமேவ பகவோ ராஜன் -நான் நிலத்தை -சுவர்க்கத்தை -உபாசிக்கிறேன் –
அவனுக்கு ஸ்வர்க்கம்-ஸூ தேஜா- தலைப்பக்கம் மட்டுமே என்று உணர்த்தினான்
இதே போன்று மற்ற ரிஷிகள் -ஆதித்யன் -வாயு -ஆகாசம் -நீர் -பூமி –
இவை ஒவ் ஒன்றுக்கும் முறையே விஸ்வ ரூப ப்ருதக் வர்த்மா-பஹுல -ரசி -பிரதிஷ்டா என்று பெயர் –
இவையே முறையே கண் பிராணன்-சந்தேகம் என்னும் – சரீர நடுப்பாகம் -மூத்திரப்பை -பாதங்கள் -என்று சொல்லி
வைச்வா நரன் பரமபுருஷனே என்று உபதேசித்தார்

இதில் உதித்த சங்கைகளை தீர்க்க அடுத்த ஸூத்ரம்

—————–

1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –

சப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது
என்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –
ஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –
அந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்
வைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்

பூர்வ பக்ஷம்
வைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –
சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –
யஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்
ஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –
சதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யம் -5-18-2-ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று
வைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –
வாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –
மேலும் சாந்தோக்யம் -5-19-1-
தத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று
ப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்
இது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்
சரீரத்துக்குள்ளே இருப்பதாக ஓதப்பட்டுள்ளது
இந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –
எனவே பரமாத்மாவாக இருக்க முடியாது

சித்தாந்தம்
ததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது
ஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –
வைச்வா நரவித்யா பிரகரணம் –
ச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யத்தில் –
ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்
யாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்
ஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-
அசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே
எனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்
புருஷம் அபி ஏ நம் அதீயதே –
இந்தக்கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-
அஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்
சதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே
மேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி
ஸ்வேதாஸ்வர -3-14-
சஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –
ஸ்வேதாஸ்வர -3-15-
ததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-

————–

1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –

தேவதையான ஸூர்யனும் -பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல

—————-

1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –

வைச்வாநரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –
அக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி –

சித்தாந்தம்
வைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்பட்டு –
அக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –
ஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி
விச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்
அக்ரம் நயதீத்  யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன்  என்றும் ஜைமினி கூறுகிறார்-
பரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்
அக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -5-18-1-
யஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று
யார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்
அளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே
ஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே
அளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி
ஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம் –

————-

1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-

உபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –
பிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-
ஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்
நீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –
உபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது

இதுக்கு பூர்வ பக்ஷம்
பரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————-

1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-

பாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு
சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது
ஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்
சர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்
அனைத்து ஆத்மாக்களிலும் உண்கிறான்
ப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்
கர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –
அவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்

இதுக்கு பூர்வ பக்ஷம்
வைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்
போன்றவையாகக் கூற வேண்டும்
ஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————

1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –

உபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது
வைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்
என்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே

சாந்தோக்யத்தில் –
உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று
மார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்
சாந்தோக்யம் -5-24-1-
ய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய
சர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ
ஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்
ப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
ஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-

————–

1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

இப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்

உபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –
மூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்
இப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-

சித்தாந்தம்
சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே
த்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்
சரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது
தொடர்ந்து சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை
அக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —

உபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்
உபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்
உபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்
உபாசகனின் இடைப்பகுதி பஹுளம்-ஆகாசம்
உபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை
உபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி
உபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /
மனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /
இவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் செய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்
இத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன

இப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –

இரண்டாம் பாதம் சம்பூர்ணம்

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–இரண்டாம் பாதம்-அந்ய யோக வ்யவச்சேத பாதம் — ஐந்தாம் அதிகரணம்-அத்ருஸ்யத்வாதி கரணம் -1-2-5-

October 13, 2019

அத்ருஸ்யத்வாதி கரணம் –

விஷயம்
முண்டக 1-1-5-/6-அக்ஷரம் எனப்படும் மூலப்ப்ரக்ருதி -இதனைக் காட்டிலும் மேலான ஜீவன் –
அவனைக்காட்டிலும் மேலான அக்ஷரம் எனப்படும் பரமாத்மாவே என்று நிரூபணம்

————————

1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-

அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்

முண்டக உபநிஷத் -1-1-5 /6-
அத பரா யயா தத் அஷரம் அதி கமே யத் தத் த்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்த்ரம் அவர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத் அபாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
முண்டக உபநிஷத்-2-1-2-
அஷராத் பாரத பர -என்றும்-

சங்கை -இங்கே காணப்படாத தன்மைகளுடன் கூடிய அக்ஷரம் இரண்டு இடங்களில் படிக்கப்படுகிறது –
ப்ரக்ருதியும் புருஷனுமா -இரண்டுமே பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
இங்கு பிரக்ருதியும் புருஷர்களும் சொல்லிற்று
பிருஹத் 3-7-23-அத்ருஷ்டோ திருஷ்டோ –
முண்டக -2-1-2-அஷராத் பரத பர -என்று அஷரத்துக்கு காணப்படாத தன்மையும் –
ஸ்தூல மூல பிரக்ருதியைச் சொல்லி -இந்த பிரதானத்தைக் காட்டிலும் மேலான சமஷ்டி புருஷனையும் சொல்லிற்று
இப்படி புருஷனால் நிர்வகிக்கப்படும் பிரதானமானது மஹத்தாதி அனைத்தையும் ஏற்படுத்துகிறது என்பர் –
இதனை அடி ஒட்டியே முண்டக 1-1-7-
யதோர்ணாபி ஸ்ருஜதே க்ருஹ்ணேதே ச யதா ப்ருதிவ்யாம் ஒளஷதய சம்பந்தி யதா சதா புருஷாத் கேஸலோமாநி
ததா ஷராத் சம்பவ தீஹ விஸ்வம் –என்று
சிலந்திப்பூச்சி வலை -மண் தாவரம் -உடலில் முடி நகம் -போலே அக்ஷரத்தில் இருந்து உலகம் –
ஆகவே இங்கு பிரதானமும் ஜீவாத்மாவும் சொல்லப்பட்டது

சித்தாந்தம்
முண்டகம் 1-1-5-யயா தத் அக்ஷரம் அதிகம்யதே-என்று எந்த ஒரு வித்யையால் அக்ஷரம் அறியப்படுகிறதோ -என்றும்
முண்டக -1-1-7-தத் அஷராத் சம்பவ தீஹ விஸ்வம் -இந்த அக்ஷரத்தில் இருந்து இந்த உலகம் வெளிப்படுகிறது
என்பதால் இந்த அக்ஷரமே காரணம்
தொடர்ந்து -முண்டக -1-1-9-
ய சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே -என்று
அனைத்துக்கும் பிறப்பிடம் அவனே என்றும்
ததாஷராத் சம்பவதீஹ விச்வம் -என்றும்
பரம் பொருளில் இருந்து அஷரம்-அழிவு இல்லாத -உலகில் உள்ள அனைத்தும் தோன்றின-
மேலும் முண்டக -2-1-2-அஷராத் பரத பர-என்று அஷரத்துக்கும் அப்பால் பட்டவன்
இங்கு கீழே சொன்ன அக்ஷரம் இல்லை
இங்கு அக்ஷரம் அசேதனமான பிரக்ருதியையே சொல்லும்

———————

1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-

தனித்துக் கூறுவதாலும் -வேறுபாட்டினை உரைப்பதாலும் -பிரகிருதி மற்றும் புருஷர்கள் கூறப்பட வில்லை

சித்தாந்தம்
முண்டகம் 1-1-1-
ச ப்ரஹ்ம வித்யாம் சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் அதர்வாய ஜ்யேஷ்ட புத்ராய பிராஹா -என்று
நான்முகன் தனது மூத்த புத்திரனான அதர்வனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க
அந்த பரம்பரையில் வந்த அங்கிரஸ்ஸும் ப்ரஹ்ம வித்யை அறிந்து இருந்தான்
முண்டக -1-1-3-
ஸுவ்நகோ ஹ வை மகாசாலோ அங்கிரஸம் விதிவத் உபசன்ன பப்ரச்ச கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே
ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -என்று மகாசாலர் என்னும் ஸுவ்நக பகவான் அங்கிரஸ்ஸு இடம் கேட்க
முண்டக 1-1-4-
தஸ்மை ச ஹி உவாச த்வே வித்யே வேதி தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்ம விதோ வதந்தி பரா ச ஏவ அபரா ச -என்று
உயர்ந்த தாழ்ந்த இரண்டு ப்ரஹ்ம வித்யை பற்றிச் சொல்ல -ப்ரஹ்மத்தை நேராகவும் ஆழ்ந்த த்யானத்தாலும் –
உபாசனத்தால் அந்தர்யாமி தயாவாகும் இரண்டு விதம்
நேரடியாக -அபரோக்ஷ ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
இதனை முண்டகம் -3-2-3-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய-என்று சொல்லுமே
உபாசனம் -சாதன சப்தகம் -விவேகாதிகள் -இதனை பிருஹத் -4-4-22-
தமேதம் வேதாநு வசநேந ப்ரஹ்மணா விவிதஷயந்தி யஜ்ஜேன தாநேந தபஸா நாசகேந -என்று சொல்லும்
இவை இரண்டையும் ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-60-60-
தத் பிராப்தி ஹேதுர் ஞானம் ச கர்ம சோக்தம் மஹா முநே ஆகமோத்தம் விசோகச்ச த்விதா ஞானம் ததோச்யதே–என்று
வேத ஜன்ய ஞானமும் -விவேகாதி ஜன்ய கர்மம் -என்றும் உண்டே
முண்டக -1-1-5-தத்ர அபரா ருக்வேதா யஜுர் வேதா -அபார வித்யை ருக் யஜு வேதங்களால் கிட்டும் -என்றும்
தர்ம சாஸ்த்ராணி -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம் யதே -என்று
எந்த ஒரு மேலான வித்யையில் அக்ஷரம் என்ற ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -என்றும் சொல்லுமே

தொடர்ந்து -1-1-6-யத் தத்ரேஸ்யம் -எதனைக் காண இயலாதோ -என்று பரோக்ஷ அபரோக்ஷ ஞானங்கள் இரண்டுக்கும்
விஷயமான ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லி -1-1-7-யதோர்பண நாபி ஸ்ருஜதே க்ருண்ஹதே ச –என்று
சிலந்திப் பூச்சி நூலை உமிந்து இழுத்துக் கொள்வதைப் போலே பிரபஞ்ச ஸ்ருஷ்ட்டி –
என்பதை -1-1-8-தபஸா சீயதே-( சீயதே என்றால் வளருகிறது ) ப்ரஹ்ம ததோ அன்னம் அபி ஜாயதே அந்நாத் பிரானோ
மன சத்யம் (சத்யம் என்று அனைத்து சரீரங்கள் ) லோகா கர்மஸூ சாம்ருதம் -என்று
தபஸ்ஸால்-ஞானத்தால் – ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தில் இருந்து அனைத்து -உத்பத்தி
யஸ்ய ஞான மாயம் தபஸ் 1-1-9-
அடுத்து முண்டக -1-1-9-ய சர்வஞ்ஞ சர்வ வித் -என்று அனைத்தையும் அறிபவன் -எண்ணியதை முடிக்க வல்லவன்
அக்ஷர ஏதத் கார்ய ஆகாரம் ப்ரஹ்மம் நாம ரூபம் ச ஜாயதே -உயர்ந்த ப்ரஹ்மத்தில் இருந்தே வெளிப்படுகிறது

தத் ஏதத் சத்யம் –ப்ரஹ்மத்தின் ஸ்வபாவிக சத்யத் தன்மை சொல்லி
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஸ்யன் தாநி த்ரேதாயாம் பஹுதா சந்த தாநி தாந்யா சரத நியதம் சத்ய காமா -என்று
ப்ரயோஜனாந்தரங்களை விட்டு ப்ரஹ்ம ப்ராப்திக்கே -ஏஷ வா பன்ன-இதுவே உனது மார்க்கம்
ப்லவா ஹி ஏதே அத்ருடா யஜ்ஜ ரூபா அஷ்டாத ஸோக்தமவரம் ஏஷு கர்ம ஏதச்சேயோ யே அவி நந்ததி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி –என்று மூடர்கள் அல்ப பலன்களுக்கு யாகம் செய்கிறார்கள்
முண்டக 1-2-11-தபஸ் ஸ்ரத்தே ஹி உபவஸந்தி –என்று பலத் த்யாக பூர்வக தபஸ்ஸால் ப்ரஹ்ம பிராப்தி
பரீஷ்ய லோகான் – அல்ப அஸ்திரத்வாதி தன்மைகள் கொண்ட லோகங்களைப் புரிந்து கொண்டு
முமுஷுவாக குருவை அணுக அவனுக்கு குரு உபதேசம்
முண்டக -2-1-1-ததே தத் சத்யம் யதா ஸூ தீப்தாம் -என்று தொடங்கி
முண்டக -2-1-10-ஸோ அவித்யா க்ரந்திம் விக்ர தீஹ ஸோம்ய-என்று அறியாமை என்னும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்கிறான்
முண்டக -2-2-1–ஆவி சந்நிஹிதம்-யோகிகளால் காணப்படுகிறான்
சாம்யாபத்தி பெறுகிறான் -இப்படியாக சுருதியில் பிரகரணம் முடிகிறது

இவ்வாறு பல அசாதாரண விசேஷணங்களையும் சொல்லி மேலே ப்ரஹ்மத்துக்கும் பிரகிருதி ஜீவ வேறுபாட்டை
முண்டக -2-1-2-
திவ்யோ ஹி அமூர்த்த புருஷ ச பாஹ்யாப் யந்தரோ ஹி அஜ அப்ரானோ ஹி அமாந சுப்நோ ஹி அஷராத் பரத பர-என்றும் சொல்லுமே
ஆகவே அக்ஷரம் என்பது பரமாத்மாவே தான் –அச் -தாது -பரவி இருப்பதை குறிக்கும்
ஷர -வெளி வருதல் -உண்டாக்குதல் பொருளில்
அக்ஷரம் -வேறு ஒன்றால் உண்டாக்கப்பட்டு வருதல் இல்லாதது என்றுமாம்
ஆகவே நாம ரூபம் வேறுபாடு இல்லாத பிரதானம் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்பட்டாலும்
ஸூஷ்ம நிலையில் அனைத்திலும் பரவி உள்ளது என்பதாலும் -மஹத்தாதிகள் போலே உண்டாவது இல்லை என்பதாலும்
இவ்விதம் அக்ஷரம் என்ற பதம் கொண்டு கூறப்பட்டாலும் அது எதில் இருந்தும் வெளி வருவது இல்லை என்பதால்
தனிப்பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டிய தகுதி அதற்கு இல்லையே

————

1-2-24-ரூபோ பன்யா சாத் ச –

உலகம் அனைத்தும்-அக்ஷரத்தின் சரீரம் — பரம்பொருளின் அங்கம் என்பதால் அஷரம் எனபது பரம் பொருளே

முண்டக உபநிஷத் -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷூஷீ சந்திர சூர்யௌதிச-ஸ்ரோத்ரே வாக்விவ்ருதாச்ச வேதா
வாயு பிரானா ஹ்ருதயம் விச்வமச்ய பத்ப்யாம் ப்ருத்வி ஹ்யேஷ சர்வ பூதாந்தராத்மா -என்று
அவனுக்கு அக்னி எனப்படும் த்யுலோகம் தலை -சந்திர ஸூர்யர்கள் கண்கள்-திசைகள் காதுகள் -வேத ஒலியே பேச்சு-
வாயு மூச்சு – உலகம் இதயம் -பூமியே கால்கள் -அனைத்துக்கும் அந்தராத்ம்னா-

அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டுள்ள இப்படிப்பட்ட வடிவம் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவுக்கே மட்டுமே கூடும்
ஆகவே அத்ருஸ்யத்வம் -காணப்படாமை -போன்ற தன்மைகள் கொண்டதாகக் கூறப்படும்
பூத யோனி அக்ஷரம் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-