ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –மூன்றாம் பாசுரம் –

முதலிட்டு இரண்டு பாட்டால் –
அதில் முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –
இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்
இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம் மூன்று -மூன்று லோகங்களும் நல்வழியில் செல்லும்படியாக திரு உள்ளத்தில் நிலைப்பவனாய் –
உடன் வணங்கு தோன்று புகழ் -அம் மூன்று உலகங்களும் ஒருபடிப்பட்டுத் தொழுகை யாகிற பிரசித்தமான புகழை உடையவனாய்
ஆணை மெய் பெற நடாய -தன் ஆணையைச் சரிவர நடத்துமவனாய்
தெய்வம் மூவரில்- முதல்வனாகி -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் என்னும் மூவரில் மேலானவனாய்
சுடர் விளங்கு அகலத்து-ஆபரணங்களின் ஒளியை உடைத்தான் திரு மார்பை உடையவனாய்
வரை புரை திரை பொர-மலை போன்ற அலைகள் மொத்த நின்றதாய்
பெரு வரை வெருவர-பெரிய பர்வதங்கள் நடுங்கும் படியாக
உருமு உரல் ஓலி மலி -இடியின் முழக்கம் போன்ற கோஷமானது மிகுந்து இருப்பதான
நளிர் கடல் -குளிர்ந்த சமுத்திரத்தை
படம் அரவு அரசு -படங்களை யுடைய சர்ப்ப ராஜாவாகிற வாஸூகியினுடைய
உடல் தடவரை சுழற்றிய -சரீரத்தை மிகப்பெரிய மந்த்ர மலையில் சுற்றிக் கடைந்தவனாய்
தனி மா தெய்வத்து -ஒப்பற்ற பரதேவதையாய் உள்ள எம்பெருமானுக்கு
அடியவர்க்கு -தாச பூதரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு –
இனி நாமாள் ஆகவே- இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –இனி நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இடைவிடாமல்
அடியவர்களாம் படி -இப்பேறு பொருந்துமோ

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம் மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்முதல்வன்–என்று இவனோடு அந்வயித்தல் –

குறிப்பில் கொண்டு நெறிப் பட
பஹுஸ் யாம் -என்று சங்கல்பிக்கும் படி அரும்பும் படி திரு உள்ளத்தில் கொண்டு
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நெறிப் படும் படியாக -வழி படும்படியாக திரு உள்ளத்திலே கொண்டு -என்றுமாம்
இப்படி நெறிப்படுவார் சிலராய் -சிலர் அன்றிக்கே இருக்கை அன்றிக்கே –

உலகம் மூன்று
தன்னை ஒழிந்தார் அடையத் தன்னை ஆஸ்ரயிக்கும் படியாக -அது தன்னில் –
அந்யோந்யம் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயருமாகிற வைஷம்யம் உண்டே யாகிலும் தன் அளவில் வந்தால்
எல்லாரும் ஓக்கக் கூடித் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும்படிக்கு ஈடாக

உடன் வணங்கு
தனித்தான போதாயிற்று அவாந்தர விஷயம் உள்ளது -இவன் பக்கலிலே எல்லாரும் கூடித் திருவடிகளில் ஆஸ்ரயிப்பார்கள் –
இத்தால் வந்த பிரசித்தி கிடந்த இடம் தெரியாதபடி ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்குமோ என்னில்

தோன்று புகழ்
ஸ்ருதி பிரசித்தம் -மூல பிரமாணத்தில் பறை சாற்றுவதாய் இருக்குமே

ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி
ஆணையை பத்தும் பத்தாக -பரிபூர்ணமாக -நடத்தா நிற்பானுமாய் -பழுது படாத ஆணையாய் அன்றோ இருக்கும் –
தெய்வம் மூவரில் முதல்வனாகி அன்றோ –
அன்றிக்கே
தெய்வம் மூவரில் முதல்வனாகி
இவர்களும் தன்னோடு சமானருமாய்-அவனோ ஈஸ்வரன் -இவர்களோ ஈஸ்வரர்கள் -என்று கண்டவர்க்கு
இவர்கள் பக்கலிலேயும் ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி இறே தான் இவர்களுக்குக் கொடுத்து வைத்து இருக்கும் தரம் –
ஆகையால் நடாய தெய்வம் மூவர் -என்று இவர்களோடு அந்வயிக்கவுமாம்
மூவரில் முதல்வனாகி
தன்னை ஒழிந்த இருவர் அளவில் அவர்களுடைய சரீரத்துக்கு ஆத்மாவுக்கும் நியாமகனாய் –
தன் அளவிலே அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நின்று -அதுக்கு நியாமகனாய் –
அன்றிக்கே
இந்திரனையும் கூட்டி மூவர் என்னவுமாம் -அவர்களுக்கும் காரண பூதன் என்றவாறு

சுடர் விளங்கு அகலத்து
ஆபரண சோபையை யுடைத்தான திரு மார்பை யுடையவனாய் -தடவரை சுழற்றிய -என்றத்தோடு அன்வயம்
அன்றிக்கே
சந்தர ஸூர்யர்களால் விளங்கா நின்றுள்ள ஆகாசத்தில் பாழ் தீரும்படியாக -என்னுதல்-
மலை போன்று கிளறும் அலைகள் -என்றத்தோடு அந்வயம்

அவன் ஆஸ்ரித அர்த்தமாகச் செய்யும் செயல்களில் இது ஒன்றும் அமையாது இவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கு
வரை புரை திரை பொர
மலையோடு ஒத்த திரை -அவை மலையும் மலையும் தாக்கினால் போலே தன்னில் தான் பொருகிற போது

பெரு வரை வெருவர
குல பர்வதங்கள் நடுங்க

உருமு உரல் ஓலி மலி
அப்போது உருமு இடித்தால் போலே இருக்கிற த்வனியானது மிக

நளிர் கடல்
பொறி எழக் கடையச் செய்தேயும் அவனுடைய கடாக்ஷ மாத்திரத்தாலே கடல் குளிர்ந்த படி
கடந்த வேகத்தால் குமுறாதபடி நடுங்க என்னுதல்
நளிர் -குளிர்ச்சியையும் நடுக்கத்தையும் காட்டும்

படம் அரவு அரசு உடல்
ஒரு சேதனனைப் பற்றிக் கடையச் செய் தேயும் ஒரு நலிவு இன்றிக்கே இருக்கையில் ஸ்வ ஸ்பரிசத்தால்
வந்த ப்ரீதிக்குப் போக்கு வீடு விட்டு படத்தை விரிக்கிற அரவரசு -வாஸூகி –
அதனுடைய உடலைச் சுற்றி

தடவரை
கடலை கண் செறி இட்டால் போலே இருக்கும் மந்த்ர பர்வத்தைக் கொடு புக்கு நட்டு

சுழற்றிய
கடல் கலங்கிக் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து அம்ருதம் படும் அளவும் செல்ல
தொட்டார்க்கு எல்லாம் நான் கடைந்தேன் என்று சொல்லலாம் படி தானே சுழன்று வரும்படி வாக யாயிற்று
கொடு புக்கு வைத்த நொய்ப்பம்

தனி மா தெய்வம்
அத்விதீய பர தெய்வம் -இப்படி அத்விதீய பர தெய்வத்துக்கு ஆளாகவோ ஆசைப்படுகிறது என்னில்

அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
இனி நாம்
ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்
இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்டா நாம் -அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்
ஆளாக
சேஷ பூதராக
ஆளாகவே
அவர்களுக்கும் ஆளாய் -நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் –
ஆளாகவே –ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக

இசையும் கொல்
அவன் ஆள் பார்த்து உழி தருவான் -நான்முகன் -60-ஆகையால் இவ்வர்த்தத்தில்
இவனை இப்போதாக இசைவிக்க வேண்டா –
இவர் எப்போது என்று பிரார்த்திக்கிறவர் ஆகையால் இவர்க்கு இசைவு உண்டு
இசையுங்கொல் என்பான் என் என்னில் -பாகவத சேஷத்வமாகை யாகிறது கூடுவது ஓன்று அல்லாமையாலே
கூடாத அர்த்தம் இங்கனே கூட வற்றோ -என்கிறார் –

ஊழி தோறு ஊழி
இந்த பாகவத சேஷத்வம் தான் சில காலமாய்க் கழிய ஒண்ணாதே -கல்பம் தோறுமாக வேணும் -அது தன்னிலும்
ஓவாதே
ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –
அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸ்ரீ யபதியாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய
ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்து அவதரித்த இடத்து -துஷ் ப்ரப்ருதிகளான சிசுபாலாதிகள்
அது பொறுக்க மாட்டாமே முடிந்து போனால் போலே -இப்போது பாகவதர்களுடைய பெருமை அறியாதே
இவர்களும் நம்மோடு ஓக்க அந்ந பானாதிகளாலே தரியா நின்றார்கள் ஆகில் நம்மில் காட்டில் வாசி என் என்று
சஜாதீய புத்தி பண்ணி சம்சாரிகள் அநர்த்தப் படுகிற படி
அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: