ஸ்ரீ பாகவத புராண ஏற்றம் —

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வ்யாஸ தேவர்-ஸ்ரீ பாதராயணர் என்றும் சொல்லப்படுபவர்
குரு வம்சம் மூல புருஷர்

பாகவத இத பாகவதம் -அவனைப் பற்றிய அனைத்தும் விளக்கும்

ஸ்ரீ ஜனமேயஜன்-ஸ்ரீ பரிஜித்தின் குமாரர் -ஸ்ரீ வைசம்பாயனிடம் கேட்டுக் கொண்டான் –
முன்பு ஸ்ரீ ஸூக மகரிஷி ஸ்ரீ பரிக்ஷித்துக்கு சொன்னதையே

ஸ்ரீ வீர ராகவையம் வியாக்யானம் -உண்டே-

ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ சூதர் -ஸ்ரீ பவ்ராணிகர்–ரிஷிகளுக்கு சொல்ல
ஸ்ரீ ஸுநகர் ஸ்ரீ வியாசருக்கு சொல்ல –
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ சுகருக்கு சொல்ல -ஸ்ரீ சுகர் ஸ்ரீ பரிக்ஷித்துக்கு சொல்ல –
ஸ்ரீ ரோமஹர்ஷனரும் பரீக்ஷித் கேட்க்கும் போது கேட்க -அவர் பிள்ளை ஸ்ரீ சூதர் கேட்டு அறிந்தார்

பக்திக்கு இளமை திரும்பி -ஞான வைராக்யம் வயசானாலும் -இன்றும் பக்தி தாண்டவமாடும் பிருந்தாவனத்தில்
சப்தாஹம் நடக்கும் இடத்தில் ஸ்ரீ கண்ணன் உள்ளான் நம்பி லக்ஷம் மக்கள் கூடும் இடம்
பக்தியும் முக்தியும் சேர்ந்தே முன் யுகங்களில் இருக்க -ஞானம் வைராக்யம் தூங்கி போக -எழுப்ப அசரீரி –
சத் கர்மாவை செய்ய ஸ்ரீ நாரதருக்கு சொல்ல -ஸ்ரீ சனகாதிகள் -இடம் என்ன செய்ய வேண்டும்
ஸ்ரீ பாகவத புராணம் வாசிப்பதே ஸத்கார்யம்

18000 ஸ்லோகங்கள் –12 ஸ்கந்தங்கள் –
காசி கங்கா புஷ்கரம் யமுனை இதுக்கு நிகரான பாவனம் இல்லை –
தானே ஞானம் வைராக்யம் பிறக்கும் இத்தைக் கேட்டாலே -சப்தாஹ முறை -கலியுகம் எளிமையாக்க-
ஸ்ரீ உத்தவர் இடம் -ஸ்ரீ பாகவத புராணத்துக்குள் இருப்பேன் –
என்னை அனுபவிக்கும் பலன் கிட்டும் -சேவநாத் ஸ்ரவணாத் பாடாத் தர்சநாத் பாப விநாசம் –
ஆனந்தவனம் சென்று பாட

——————-

ஸ்கந்தம் -1-

அத்யாயம் -1-ரிஷிகளின் கேள்விகள்
அத்யாயம் -2-பரத்வமும் பரத்வ கைங்கர்யமும்
அத்யாயம் -3-ஸ்ரீ கிருஷ்ணனே ஸ்ருஷ்ட்டி கர்த்தா
அத்யாயம் -4-ஸ்ரீ நாரதர் தோன்றுகிறார்
அத்யாயம் -5-ஸ்ரீ நாரதரின் ஸ்ரீ வியாச பகவானுக்கு ஸ்ரீ பாகவத உபதேசம்
அத்யாயம் -6-ஸ்ரீ நாரத -ஸ்ரீ வியாச பகவான் சம்வாதம்
அத்யாயம் -7-துரோணர் பிள்ளை தண்டனை பெற்றது
அத்யாயம் -8-குந்தி தேவி பிரார்த்தனை -ஸ்ரீ பரீக்ஷித் ரக்ஷணம் பெற்றது
அத்யாயம் -9-ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதியில் ஸ்வர்க்கம் போதல்
அத்யாயம் -10-ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் துவாரகைக்கு எழுந்து அருளுதல்

அத்யாயம் –11-ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் துவாரகையில் நுழைதல்
அத்யாயம் -12-ஸ்ரீ பரீக்ஷித் பிறப்பு
அத்யாயம் -13- திரிதராஷ்ட்ரர் மறைவு
அத்யாயம் -14-ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுதல் –
அத்யாயம் -15-ஸ்ரீ பாண்டவர்கள் ஸ்வர்க்கம் செல்லுதல்
அதிகாரம் -16-ஸ்ரீ பரிஷித் கலி யுகம் பிறப்பு
அதிகாரம் -17-கலிக்கு ஒதுக்கிய இடங்கள்
அதிகாரம் -18-ஸ்ரீ பரிக்ஷித்துக்கு வந்த சாபம்
அதிகாரம் -19-ஸ்ரீ ஸூக தேவ கோஸ்வாமி உபதேசம்

—————–

ஸ்கந்தம்-2- அண்ட ஸ்ருஷ்ட்டி விவரணம்

அத்யாயம் -1-ப்ரஹ்ம ஞானத்துக்கு முதல் அடி
அத்யாயம் -2-மனதுள்ள ப்ரஹ்மம்
அத்யாயம் -3-சுத்த ப்ரஹ்ம கைங்கர்யம் -மானஸ அனுபவம்
அத்யாயம் -4-ஸ்ருஷ்ட்டி க்ரமம்
அத்யாயம் -5-ப்ரஹ்மமே சர்வ காரண காரணத்வம்
அத்யாயம் -6-ப்ரஹ்மம் தானே அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்
அத்யாயம் -7-ப்ரஹ்ம அவதாரங்களின் சுருக்க விவரணம்
அத்யாயம் -8-பரீக்ஷித் மகாராஜாவின் கேள்விகள்
அத்யாயம் -9-ப்ரஹ்மத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே பதில்கள்
அத்யாயம் -10-ஸ்ரீ மத் பாகவதமே அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும்

——————–

ஸ்கந்தம் -3-

அத்யாயம் -1-ஸ்ரீ விதுரரின் கேள்விகள் அத்யாயம் -2-ஸ்ரீ கிருஷ்ணனை நினைவூறுதல்
அத்யாயம் -3-ஸ்ரீ க்ருஷ்ண லீலைகள் -ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு வெளியில் –
அத்யாயம் -4-ஸ்ரீ விதுரர் ஸ்ரீ மைத்ரேயரை அணுகுதல்
அத்யாயம் -5-ஸ்ரீ விதுரர் ஸ்ரீ மைத்ரேயர் சம்வாதம்
அத்யாயம் -6-அண்டங்கள் ஸ்ருஷ்ட்டி
அத்யாயம் -7-ஸ்ரீ விதுரரின் மீதி கேள்விகள்
அத்யாயம் -8-திரு நாபி கமலத்தில் இருந்து நான் முகன் உத்பத்தி
அத்யாயம் -9-நான்முகனின் வேண்டுதல்
அத்யாயம் -10-ஸ்ருஷ்டிகளின் பாகங்கள்

அத்யாயம் -11-காள பரிணாமம்
அத்யாயம் -12-குமார சம்பவமும் மற்றவையும்
அத்யாயம் -13-மஹா வராஹ அவதாரம்
அத்யாயம் -14-திதி தேவியின் கர்ப்பம்
அத்யாயம் -15-ஸ்ரீ வைகுண்ட விவரணம்
அத்யாயம் -16-வாசல் காப்பார்கள் சாபம்
அத்யாயம் -17-ஹிரண்யாக்ஷனின் ஜெயம்
அத்யாயம் -18-மஹா வராஹம் ஹிரண்யாக்ஷனை போர் இடுதல்
அத்யாயம் -19- ஹிரண்யாக்ஷ நிரசனம்
அத்யாயம் -20-நான்முகனின் ஸ்ருஷ்ட்டி

அத்யாயம் -21-மனு கர்தம சம்வாதம்
அத்யாயம் -22-கர்தப முனி தேவஹூதி கல்யாணம்
அத்யாயம் -23-தேவஹுதியுடைய சோகம்
அத்யாயம் -24-கர்தப முனியுடைய சன்யாசம்
அத்யாயம் -25-ப்ரஹ்ம கைங்கர்ய சீர்மை
அத்யாயம் -26-பிராகிருத தண்மை
அத்யாயம் –27-பிராகிருத தன்மைகளை பற்றிய ஞானம்
அத்யாயம் -28-கபில முனிவர் உபதேசம் -பிராகிருத தண்மை
அத்யாயம் -29-கபில முனிவர் உபதேசம் -ப்ரஹ்ம கைங்கர்யத்தின் சீர்மை
அத்யாயம் -30-கபில முனிவர் உபதேசம் -சேதனர்களின் சம்சார சாகர அல்ப நிலை

அத்யாயம் -31-கபில முனிவர் உபதேசம் -சேதனர்களின் சம்சார சாகர மக்ந நிலை
அத்யாயம் -32-கபில முனிவர் உபதேசம் -சேதனர்களின் சம்சார சாகர அஸ்திர நிலை
அத்யாயம் -33-கபில முனிவர் நடவடிக்கை

—————–

ஸ்கந்தம் -4-

அத்யாயம் -1-மனு வம்ச விவரணம்
அத்யாயம் -2-தக்ஷனின் சிவனுக்கு சாபம் அத்யாயம் -3 – சிவனுக்கும் சதிக்கும் சம்வாதம் –
அத்யாயம் -4-சதி சரீரத்தை விடுதல்
அத்யாயம் -5-தக்ஷனின் யாகத்தில் தடங்கல்
அத்யாயம் -6-நான்முகன் சிவனுக்கு ஆறுதல்
அத்யாயம் -7-தக்ஷனின் யாக ஆஹுதி
அத்யாயம் -8-துருவன் காட்டுக்கு போதல்
அத்யாயம் -9-துருவன் மீண்டு வருதல்
அத்யாயம் -10-துருவ மஹாராஜர் -யக்ஷர்கள் சண்டை

அத்யாயம் -11-துருவனுக்கு சண்டை போடாமல் இருக்க ஸ்வயம்பு முனியின் அறிவுரை
அத்யாயம் -12-துருவ மஹாராஜர் தபம்
அத்யாயம் -13-துருவ மஹாராஜர் சந்ததி விவரணம்
அத்யாயம் -14-வேணே அரசர் விருத்தாந்தம்
அத்யாயம் -15-ப்ருது பிறப்பும் முடி சூடலும்
அத்யாயம் -16-ப்ருது அரசர் முடி இழத்தல்
அத்யாயம் -17-ப்ருது மஹா ராஜரின் கோபம் -பூமா தேவியின் மேல்
அத்யாயம் -18-ப்ருது மஹா ராஜர் பூமா தேவி -பசுவைக் கறத்தல்
அத்யாயம் –19-ப்ருது மஹா ராஜரின் அவச மேத யாகம்
அத்யாயம் -20-ஸ்ரீ விஷ்ணு ஆவிர்பாவம் -ப்ருது மஹா ராஜரின் யாகத்தில் –

அத்யாயம் -21-ப்ருது மஹா ராஜருக்கு உபதேசம்
அத்யாயம் -22-ப்ருது மஹா ராஜர் -நான்கு குமாரர்கள் சந்திப்பு
அத்யாயம் -23-ப்ருது மஹா ராஜர் வீட்டுக்கு திரும்புதல்
அத்யாயம் -24-சிவனின் பாடல்
அத்யாயம் -25-புரஞ்சன அரசரின் குணங்கள்
அத்யாயம் -26-புரஞ்சன அரசர் வேட்டைக்கு சென்று மனைவியை பெறுதல்
அத்யாயம் -27-சந்தவேகர் -முற்றுகை -ப்ருக அரசரின் கோட்டையை –
அத்யாயம் -28- புரஞ்சனார் அடுத்த பிறவியில் பெண்ணாவது
அத்யாயம் -29-நாரதர் –ப்ராஸீனபர்ஹி அரசர் சம்வாதம்
அத்யாயம் -30-ப்ராசேதாஸ் அரசரின் நடவடிக்கை

அத்யாயம் -31-நாரதர் ப்ராசேதாசுக்கு உபதேசம்

————–

ஸ்கந்தம் -5-

அத்யாயம் -1-பிரியவ்ரத மஹா ராஜர் நடவடிக்கை
அத்யாயம் -2-ஆக்னீத்ர மஹாராஜர் நடவடிக்கை
அத்யாயம் -3-ரிஷபதேவர் பிறப்பு –நாபி அரசரின் மனைவிக்கு -மேரு தேவிக்கு –
அத்யாயம் -4-ரிஷபதேவரின் குணங்கள்
அத்யாயம் -5-ரிஷப தேவரின் உபதேசம் -அவர் குமாரர்களுக்கு
அத்யாயம் -6-ரிஷப தேவரின் நடவடிக்கைகள்
அத்யாயம் -7-பரத அரசரின் நடவடிக்கைகள்
அத்யாயம் -8- பரத மஹாராஜரின் மாரு பிறப்பு
அத்யாயம் -9-ஜட பரதர் உயர்ந்த குணங்கள்
அத்யாயம் -10-ஜட பரதர்-ரகுகுணர் சந்திப்பு

அத்யாயம் -11-ஜடபரதர் ரகு குணருக்கு உபதேசம்
அத்யாயம் -12-ஜடபரதர் ரகு குணர் சம்வாதம் –
அத்யாயம் -13-மீண்டும் சம்வாதம்
அத்யாயம் -14-பிராகிருத சம்சாரமும் -பெரிய காட்டுக்கும் உள்ள ஒற்றுமை
அத்யாயம் -15-பிரியவ்ரதர் சந்ததியோரின் பெருமை
அத்யாயம் -16-ப்ரஹ்மமே சத்யம் என்று உணர்தல்
அத்யாயம் –17-கங்கா தேவியின் வம்சம்
அத்யாயம் -18-அநேக அவதாரங்களுக்கு பிரார்த்தனை
அத்யாயம் -19-ஹனுமான் பிரார்த்தனையும் நாரதர் பிரார்த்தனையும் பாரத வர்ஷத்தின் மஹிமையும்
அத்யாயம் -20-த்வீபங்களின் அமைப்பும் -அவற்றில் உள்ளோரின் ஸ்தோத்ரங்களும்

அத்யாயம் -21-சூர்ய பகவான் விவரணம்
அத்யாயம் -22-கிரகங்களின் சுழற்சியும் அவற்றின் பாதிப்பும்
அத்யாயம் -23-சிசுமாரா நக்ஷத்ர கூட்டம்
அத்யாயம் -24-மேல் லோகங்கள் விவரணம்
அத்யாயம் -25-அநந்தனின் ஏற்றம்
அத்யாயம் -26-நரகங்கள் விவரணம் -கர்ம பலன்களும்

———————-

ஸ்கந்தம் -6-சேதனர்களின் கடைமைகள்

அத்யாயம் -1-தர்மமும் அதர்மமும் -அஜமிலாரின் சரித்திரம்
அத்யாயம் -2-அஜாமிலர் -விஷ்ணு தூதர் -திரு நாம சங்கீர்தன மஹிமை
அத்யாயம் -3-யமதர்ம ராஜரின் தூதர்களுக்கு கட்டளை
அத்யாயம் -4-ஹம்ஸ குஹ்ய ஸ்தோத்திரங்கள் -தக்ஷ பிரஜாபதி
அத்யாயம் -5-நாரத முனிக்கு தக்ஷ பிரஜாபதியின் சாபம்
அத்யாயம் -6-தக்ஷனின் பெண்களும் வம்சாவளியும்
அத்யாயம் -7-இந்திரனின் அபராதம் -பிரஹஸ்பதி இடம்
அத்யாயம் -8-இந்திரனை ரஷிக்க மந்த்ரம்
அத்யாயம் -9-வ்ருத்தாசுர அரக்கன் தோற்றம்
அத்யாயம் -10-தேவர்கள் -வ்ருத்தாசுர அரக்கன் போர்

அத்யாயம் -11-வ்ருத்தாசுரனின் குணங்கள்
அத்யாயம் -12-வ்ருத்தாசுரனின் மறைவு
அத்யாயம் -13-இந்திரனுக்கு வந்த துன்பம்
அத்யாயம் -14-சித்ர கேது அரசனின் புலம்பல்
அத்யாயம் -15-நாரதர் -அங்கீரர் -இருவரின் உபதேசம் -சித்ரகேதுவுக்கு
அத்யாயம் -16-சித்ரகேது ப்ரஹ்மத்தை தர்சனம்
அத்யாயம் -17-பார்வதி தேவையுடைய சாபம் சித்ரகேதுவுக்கு
அத்யாயம் -18-திதி இந்திரனை முடிக்க விரதம்
அத்யாயம் -19-பும்ஸவனம் செய்தல்

—————–

ஸ்கந்தம் -7-ப்ரஹ்ம ஞானம் -பிராப்தி விவரணம் –

அத்யாயம் -1-ப்ரஹ்மம் ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன்
அத்யாயம் -2-ஹிரண்யகசிபு உடைய சோகம்
அத்யாயம் -3-ஹிரண்ய கசிபு நித்தியமாக இருக்க திட்டம்
அத்யாயம் -4-ஹிரண்ய கசிபுவின் அட்டகாசம்
அத்யாயம் -5-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் பிறப்பு
அத்யாயம் -6-ஸ்ரீ பிரகலாத ஆழ்வானின் உபதேசம் -அசுரர் பிள்ளைகளுக்கு
அத்யாயம் -7-கருவிலே இருக்கும் பொழுதே கற்றவை
அத்யாயம் -8-ஸ்ரீ நரஸிம்ஹர்-ஹிரண்ய கசிபுவின் நிரசனம்
அத்யாயம் -9-ஸ்ரீ நரஸிம்ஹரை -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானின் ஸ்தோத்ரம்
அத்யாயம் -10-ஸ்ரீ பிரகலாத ஆழ்வானின் மஹிமை -திரிபுரம் எரித்த விருத்தாந்தம்

அத்யாயம் -11-நான்கு வர்ணங்களின் பிரிவு
அத்யாயம் -12-நான்கு ஆஸ்ரமங்களின் பிரிவு -சரீர விமோசனம்
அத்யாயம் -13-ஞானிகளின் லக்ஷணம்
அத்யாயம் -14-க்ராஹஸ்த்ர ஆஸ்ரம தர்மம்
அத்யாயம் -15-நாரதர் உபதேசம்

———————

ஸ்கந்தம் -8-சம்ஹார விவரணம்

அத்யாயம் -1-மனுக்களின் விவரணம்
அத்யாயம் -2-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் துயரம்
அத்யாயம் -3-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் சரணாகதி ஸ்தோத்ரம்
அத்யாயம் -4-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் பிராப்தி
அத்யாயம் -5-ஐந்தாவது ஆறாவது மனுக்கள் -நான்முகன் தேவர்களின் -அசுரர்களின் ஸ்தோத்திரங்கள்
அத்யாயம் -6-தேவர்கள் அசுரர்கள் சமாதானம்
அத்யாயம் -7-அமுத மதனமும்-ருத்ரன் நஞ்சு உண்டதும்
அத்யாயம் -8- கடைந்த கடலில் இருந்து வந்தவை -ஸ்ரீ மஹா லஷ்மி திரு மார்பில் ஏறி அருளி -தன்வந்திரி தோற்றம்
அத்யாயம் -9-மோஹினி அவதாரம் -அமுதம் கொடுத்தல்
அத்யாயம் -10-அசுரர் தேவர் சண்டை

அத்யாயம் -11-அசுரர்கள் ஒதுக்கப்பட்டு –
அத்யாயம் -12-சிவனின் ஸ்தோத்ரம் மோஹினி மூர்த்திக்கு
அத்யாயம் -13-மேல் வர போகும் மனுக்களின் விவரணம்
அத்யாயம் -14- அண்டங்களின் நிர்வாகம்
அத்யாயம் -15-மஹாபலி தேவர்களை வெல்லுதல்
அத்யாயம் -16-அதிதி தேவி -பய விரத அனுஷ்டானம்
அத்யாயம் -17-பர ப்ரஹ்மமே திருவவதரிக்க ஒப்புக் கொள்ளுதல்
அத்யாயம் -18- ஸ்ரீ வாமன மூர்த்தி திருவவதாரம்
அத்யாயம் -19-யஜ்ஜ வாடம் சென்று யாசித்தல்
அத்யாயம் -20-ஓங்கி உலகு அளந்த விருத்தாந்தம்

அத்யாயம் -21-மகாபலியை வெல்லுதல்
அத்யாயம் -22-மஹாபலி முடிவு
அத்யாயம் -23-தேவர்கள் இழந்த ஐஸ்வர்யம் பெறுதல்
அத்யாயம் –ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி திருவவதாரம்

——————-

ஸ்கந்தம் -9-

அத்யாயம் -1-சுத்யும்ன அரசர் பெண்ணாவது
அத்யாயம் -2-மனு வம்சம் -ஆறு தலைமுறைகள்
அத்யாயம் -3-சுகன்யா -ஸியவன மனுவின் கல்யாணம்
அத்யாயம் -4-அம்பரீஷ மஹாராஜர் மீது துர்வாசர் அபராதம்
அத்யாயம் -5-அம்பரீஷரின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஸ்தோத்ரம் -துர்வாசர் ரக்ஷணம்
அத்யாயம் -6-ஸுவ்பரி முனிவர் முடிவு
அத்யாயம் -7-மாந்தாதா அரசரின் சந்ததி
அத்யாயம் -8-சக்கர மன்னர் பிள்ளைகள் கபிலதேவரை சந்தித்தல்
அத்யாயம் -9-அம்சுமானின் சந்ததி
அத்யாயம் -10-ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் செயற்பாடுகள்

அத்யாயம் -11-ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
அத்யாயம் -12-ஸ்ரீ குசருடைய சந்ததி
அத்யாயம் -13-நிமி சரித்திரம் -அவன் பிள்ளை மிதிலனின் சந்ததி
அத்யாயம் -14-புரூரவ அரசன் -ஊர்வசி கண்டு மயங்குதல்
அத்யாயம் -15-ஸ்ரீ பரசு ராமர் திருவவதாரம்
அத்யாயம் -16-இருபத்தொரு ஷத்ரிய நிரசனம்
அத்யாயம் -17-புரூரவ அரசகுமாரர்கள் சந்ததி
அத்யாயம் -18-யயாதி அரசர் யவ்வனம் மீண்டும் பெறுதல்
அத்யாயம் -19-யயாதி அரசர் முடிவு -ஆசைக்கடலில் ஆழ்தல்
அத்யாயம் -20-பவ்ரூவ அரசர் சந்ததி பரதர் வரை

அத்யாயம் -21-பரத அரசர் சந்ததி -ரந்திதேவர் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -22-அஜாமிதர் சந்ததி -பாண்டவர்களும் கௌரவர்களும்
அத்யாயம் -23-யயாதி சந்ததி -ஸ்ரீ கிருஷ்ணர் ஆவிர்பாவம்
அத்யாயம் -24-யதுகுலம்-விரிஷிநி குலம்-ப்ரிதா-ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமை

——————–

ஸ்கந்தம் -10-

அத்யாயம் -1-ஸ்ரீ கிருஷ்ண லீலை -உபக்ரமம்
அத்யாயம் -2-தேவர்கள் -ஸ்ரீ கிருஷ்ண ஆவிர்பாவத்துக்காக இரத்தல்
அத்யாயம் -3-ஸ்ரீ கிருஷ்ணர் ஆவிர்பாவம்
அத்யாயம் -4-கம்சனின் அட்டூழியம்
அத்யாயம் -5-ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் -ஸ்ரீ நந்தகோபர் ஸ்ரீ வஸூ தேவர் சந்திப்பு
அத்யாயம் -6-பூதநா நிரசனம்
அத்யாயம் -7-சகடாசூர வதம் -த்ரீனாவர்த்த ஜெயம் -ஸ்ரீ யசோதா பிராட்டிக்கு வையம் எல்லாம் வாயில் காட்டுதல்
அத்யாயம் -8- ஸ்ரீ கிருஷ்ண பால லீலைகள்
அத்யாயம் -9-கட்டுண்ணப் பண்ணிய லீலை
அத்யாயம் -10-கௌரவ புத்திரர்கள் ஜனனம்

அத்யாயம் -11-வத்ஸாசுர பகாசுர நிரசனம்
அத்யாயம் -12-அகாசூர வதம்
அத்யாயம் -13-நான்முகன் கோப குமாரர்கள் பசுக்களை கவர்ந்து செல்லுதல்
அத்யாயம் -14-நான்முகன் ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்தோத்ரம் பண்ணுதல்
அத்யாயம் -15-தேனுகா நிரசனம் -பொய்கையை நஞ்சூட்டுதல்
அத்யாயம் -16-காளியனை வெல்லுதல்
அத்யாயம் -17-காட்டுத்தீ விழுங்குதல்
அத்யாயம் -18-ப்ரலம்பனை ஸ்ரீ பரசுராமர் நிரசனம்
அத்யாயம் -19-மீண்டும் காட்டுத்தீயை விழுங்குதல்
அத்யாயம் -20-மழைக்காலம் -ஸ்ரீ பிருந்தாவன மஹிமை

அத்யாயம் -21-கோபிகள் திருப் புல்லாங்குழல் அனுபவம்
அத்யாயம் -22-வஸ்திராபரணம்
அத்யாயம் -23-வைதிகர் மனைவிகளுக்கு அனுக்ரஹம்
அத்யாயம் -24-ஸ்ரீ கோவர்த்தன வ்ருத்தாந்தந்தம் -இந்திரனின் தோல்வி
அத்யாயம் -25-ஸ்ரீ கோவர்த்தன தாரணம்
அத்யாயம் -26-இந்திரனின் ஸ்தோத்ரம் -சுரப்பியின் ஸ்தோத்ரம்
அத்யாயம் -27-நாரதர் கோபிகள் -சம்வாதம் கர்க வசனம்
அத்யாயம் -28-வருண லோகத்தில் இருந்து ஸ்ரீ நந்தகோபனை ஸ்ரீ கிருஷ்ணன் ரஷித்தல்
அத்யாயம் -29-ராஸக்ரீடை
அத்யாயம் -30-கோபிகள் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராதா இருவரையும் தேடுதல்

அத்யாயம் -31-விரஹத்தால் கோபிகள் பாடுதல்
அத்யாயம் -32-ஸ்ரீ கிருஷ்ணன் மீண்டும் கோபிகள் உடன் கூடுதல்
அத்யாயம் -33-ராஸக்ரீடை
அத்யாயம் -34-ஸூதர்சன மஹிமை -சங்கசூடன் நிரசனம்
அத்யாயம் -35-கோபிகா கீதம் –
அத்யாயம் -36-அரிஷ்தாசூர நிரசனம்-அக்ரூரரை அனுப்புதல்
அத்யாயம் -37- கேசி – வ்யோம -வதம் -நாரதர் ஸ்ரீ கிருஷ்ணன் வ்ருத்தாந்தம் சொல்லுதல்
அத்யாயம் -38- அக்ரூரர் பாரிப்பும் கோகுலத்தில் வரவேற்பும்
அத்யாயம் -39-ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ பலராமர் ஸ்ரீ வட மதுரைக்கு எழுந்து அருளுதல்
அத்யாயம் -40-அக்ரூரர் ஸ்தோத்ரம்

அத்யாயம் -41-ஸ்ரீ வடமதுரையில் நுழைதல்
அத்யாயம் -42-வில் விழாவில் வில்லை முறித்தல்
அத்யாயம் -43-குவலயாபீட நிரசனம்
அத்யாயம் -44-மல்யுத்தம் -கம்ச வதம்
அத்யாயம் -45-ஸ்ரீ சாந்தீப புத்ரனை மீட்டி அருளுதல்
அத்யாயம் -46-ஸ்ரீ உத்தவர் ஸ்ரீ கோகுலம் சென்று ஸ்ரீ நந்த கோபருடன் பேசுதல்
அத்யாயம் -47-கோப கீதம்
அத்யாயம் -48-ஸ்ரீ கிருஷ்ணரின் ஆஸ்ரித அனுக்ரஹம்
அத்யாயம் -49-அக்ரூரரின் ஹஸ்தினாபுர விஜயம்
அத்யாயம் -50-ஸ்ரீ த்வாராகா நிர்ணயம்

அத்யாயம் -51-முசுகுந்த வ்ருத்தாந்தம்
அத்யாயம் -52-ஸ்ரீ ருக்மிணி தேவி சந்தேசம்
அத்யாயம் -53-ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி தேவியை கூட்டிச் செல்லுதல்
அத்யாயம் -54-ருக்மியை வென்று ஸ்ரீ ருக்மிணி தேவியை மனம் புரிதல்
அத்யாயம் -55-ப்ரத்யும்ன வ்ருத்தாந்தம்
அத்யாயம் -56-சியமந்தக மணி மீட்டுதல் -ஸ்ரீ ஜாம்பவதி ஸ்ரீ சத்யா பாமா திருக்கல்யாணம்
அத்யாயம் -57-சத்ரஜித் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -58-ஸ்ரீ காளிந்தீ -ஸ்ரீ மித்ரவிந்தா -ஸ்ரீ ஸத்யா -ஸ்ரீ லஷ்மணா -ஸ்ரீ பத்ரா -இவர்களுடன் திருக்கல்யாணம்
அத்யாயம் -59-முரன் -பவ்ம நிரசனம் -ஸ்ரீ பூமா தேவி ஸ்தோத்ரம்
அத்யாயம் -60-ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி தேவி இடம் விளையாடல்

அத்யாயம் -61-ஸ்ரீ பலராமர் ருக்மியை நிராசனம் -அனிருத்த ஆழ்வான் திருக்கல்யாணம்
அத்யாயம் -62-ஸ்ரீ உஷை -ஸ்ரீ அநிருத்த ஆழ்வான் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -63-பாணனை வெல்லுதல்
அத்யாயம் -64-ந்ரிக அரசன் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -65- ஸ்ரீ பலராமன் யமுனையை இழுத்து போக்கை மாற்றுதல்
அத்யாயம் -66-பவ்ண்டரீக வாசுதேவ வ்ருத்தாந்தம்
அத்யாயம் -67-ஸ்ரீ பலராமர் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -68-சாம்பன் கல்யாணம்
அத்யாயம் -69-நாரதர் கண்ட காட்சி
அத்யாயம் -70-ஸ்ரீ கிருஷ்ணர் விருத்தாந்தம் -ஸ்ரீ நாரதர்-ஸ்ரீ கிருஷ்ணர் சந்திப்பு

அத்யாயம் -71- -உத்தவர் சொன்னதன் பேரில் இந்த்ரப்ரஸ்தம் செல்லுதல்
அத்யாயம் -72-பீமன் ஜராசந்தனை நிரசித்தல் -சிறைப்பட்ட அரசர்களை விடுவித்தல்
அத்யாயம் -73-ஸ்ரீ கிருஷ்ணன் அரசர்களை ஆசீர்வதித்தல்
அத்யாயம் -74-ராஜசூய யாகம் -சிசுபால நிரசனம்
அத்யாயம் -75-ராஜசூய யாக பூர்ணாஹுதி -துரியோதனரை இகழ்தல்
அத்யாயம் -76-வருஷிணிக்களுக்கும் சால்வர்களுக்கும் சண்டை
அத்யாயம் -77-சால்வார் சவ்பர்கள் கோட்டைகள் தகர்ப்பு
அத்யாயம் -78-தந்தவக்ரன் நிரசனம்-புல்லைக் கொண்டே ரோமஹர்ஷகன் ஜெயம்
அத்யாயம் -79-ஸ்ரீ பலராமரின் தீர்த்த யாத்திரை
அத்யாயம் -80-ஸ்ரீ சுதாமர் ஸ்ரீ கிருஷ்ணனை சந்தித்தல்

அத்யாயம் -81-ஸ்ரீ சுதாமரை கௌரவம்
அத்யாயம் -82-பிருந்தாவன வாசிகள் ஸ்ரீ கிருஷ்ணரை தேடி வருதல்
அத்யாயம் -83-திரௌபதி ஸ்ரீ கிருஷ்ண பட்ட மஹிஷிகளை சந்தித்தல்
அத்யாயம் -84-ஸ்ரீ வாசுதேவர் குருஷேத்ரத்தில் உபதேசம்
அத்யாயம் -85-ஸ்ரீ தேவகி பிராட்டி மற்றைய பிள்ளைகளை மீட்டுதல்
அத்யாயம் -86-அர்ஜுனன் சுபத்ரா தேவியைக் கடத்தி செல்லுதல்
அத்யாயம் -87-வேத குஹ்ய ரஹஸ்யங்கள்
அத்யாயம் -88-வ்ரிகாசூரன் இடம் இருந்து ருத்ரனை ரஷித்தல்
அத்யாயம் -89-ப்ராஹ்மணர் பிள்ளைகளை மீட்டுதல்
அத்யாயம் -90-ஸ்ரீ கிருஷ்ண மஹாத்ம்ய சுருக்கம்

———————–

ஸ்கந்தம் -11-

அத்யாயம் -1-யது குல சாபம்
அத்யாயம் -2-நிமி மஹா ராஜர் ஒன்பது யோகேந்திரர்களை சந்திப்பது
அத்யாயம் -3-மாயை -கர்மம் இவற்றில் இருந்து நிவர்ப்பித்து பர ப்ரஹ்ம பிராப்தி
அத்யாயம் -4-ஸ்ரீ நர -நாராயண திருவவதாரங்களும் மற்ற திருவவதாரங்களும்
அத்யாயம் -5-ஸ்ரீ வாசுதேவருக்கு ஸ்ரீ நாரதரின் உபதேசங்கள்
அத்யாயம் -6- ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள -நான்முகன் உணர்த்த -உத்தவருக்கு ரஹஸ்ய உபதேசம்
அத்யாயம் -7-அவதூதன் விருத்தாந்தம்
அத்யாயம் -8-பிரகிருதி தன்மை-பிங்கள விருத்தாந்தம்
அத்யாயம் -9-விஷயாந்தர வைராக்யம்
அத்யாயம் -10-பந்த மோக்ஷ ஹேது

அத்யாயம் -11-பந்த ஹேதுவும் மோக்ஷ உபாயமும் விளக்கம் –
அத்யாயம் -12-மஹா விசுவாசமம் ரஹஸ்ய உபாயங்களும்
அத்யாயம் -13-ஸ்ரீ ஹம்ஸாவதாரம் -நான்முக புத்ரர்களுக்கு விளக்கம்
அத்யாயம் -14-ஸ்ரீ விஷ்ணு த்யானம்
அத்யாயம் -15-சித்தி விளக்கம்
அத்யாயம் –16-பரஞ்சோதி ஸ்வரூபம்
அத்யாயம் -17-வர்ணாஸ்ரம தர்மங்கள் -நாவாய் -தோணி –
அத்யாயம் -18-வைராக்யங்கள் -வீடு பெறுதல்
அத்யாயம் -19-ப்ரஹ்ம ஞான பூர்த்தி
அத்யாயம் -20-பக்தி யோக மஹிமை -ஞானம் வைராக்யம்

அத்யாயம் -21-தர்ம அதர்ம விபாகம்
அத்யாயம் -22-ப்ரக்ருதி புருஷ விபாகம் -போக உபகரணம் -போக்தா
அத்யாயம் -23-சகிப்புத்தன்மை -அவாந்தி ப்ராஹ்மணர் பாட்டு
அத்யாயம் -24-சாங்க்ய மதம்
அவதாரம் -25-அசித் த்ரயங்கள்
அவதாரம் -26-புரூரவா ஸ்தோத்ரம்
அவதாரம் -27-திவ்ய மங்கள ரூப மஹிமை
அவதாரம் -28-ஞான யோக மார்க்கம்
அவதாரம் -29-பக்தி யோக மஹிமை

———————-

ஸ்கந்தம் -12-

அத்யாயம் -1-யது குல வம்சர் இழிவு நிலை
அத்யாயம் -2-யுத்த காலத்தில் நம்பிக்கை அத்யாயம் -3-ஸ்ரீ பூமாதேவியின் ஸ்தோத்ரம் -கலியுக தோஷங்களும் பரிகாரங்களும்
அத்யாயம் -4-பிரளய வகைகள்
அத்யாயம் -5-பரீக்ஷித் மஹாராஜருக்கு சரம உபதேசங்கள்
அத்யாயம் -6-பரீக்ஷித் மஹாராஜர் மோக்ஷம் -வேத உபதேசம்
அத்யாயம் -7-சம்ஹிதா வகைகளும் புராணங்களுள் உள்ள பத்து விஷயங்களும்
அத்யாயம் -8-மார்க்கண்டேயரின் வைராக்ய சீர்மை -அவரது ஸ்ரீ நர நாராயணர்களுக்கு பிரார்தனை
அத்யாயம் -9-மார்கண்டேயருக்கு பரப்ரஹ்ம மஹிமை காட்டுதல்
அத்யாயம் -10-சிவன் மார்கண்டேயருக்கு உபதேசம்

அத்யாயம் -11-ஸ்ரீ மஹா விஷ்ணுவின் விசேஷணங்கள்-சூர்ய கதி மூலம் மாசங்களின் அடைவுகள்
அத்யாயம் -12-ஸ்ரீ மத் பாகவதத்தில் உள்ளவற்றின் தொகுப்பு
அத்யாயம் -13-ஸ்ரீ மத் பாகவதத்தில் மஹிமை

————————

ஆத்ம தேவர் -துந்துளி-பத்னி -துங்க பத்ரா நதி -புத்ர பாக்யம் -பிரார்த்தித்து-பசுவிடம் கொடுக்க
கோ கர்ணன் பசு போன்ற காது -சத்சங்கம் -ஞானவான் –
துந்துகாரி -தங்கை இடம் -நல்ல நடத்தை இல்லாமல் -மரித்து-காற்று ரூபத்தில் வந்து –
பாபம் தொலைத்து முக்தி வாங்கி தா பிரார்த்திக்க –
இப்படி அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பாகவதம் கொடுக்கும்
ஏழு நாள் கேட்டாலே போகும் -மூங்கில் கண்கள் ஏழு தடவை வெடித்து -நான் முக்தனாவதை காட்டும்
ஸ்ரத்தை-உடன் -மனனம் பண்ணி முமுஷுவாக ஆர்த்தியும் வேண்டுமே
ஆவணி தொடக்கி -மார்கழி வரை -ஐந்து மாதங்கள் சப்தாகம் சொல்வது ஸ்ரேஷ்டம்
வேத மரம் பழுத்து ரசமாக பாகவதம் -ரசிக்கத்தன்மை இருந்தால் பருகலாம் –

–24 அவதாரங்களைச் சொல்லும் –மானஸ புத்திரர்களும் அவன் அவதாரம் – வராஹம் அடுத்து –
நாரதரே அவன் அம்ச அவதாரம் -நர நாராயண நான்காவது / கபிலர் -தத்தாத்ரேயர் ஆறாவது
புத்தராக -21-அவதாரம் –அடுத்து கல்கி

அர்ஜுனன் பிள்ளை -அபிமன்யு- உத்தரை இருவருக்கும் -பரீக்ஷித்

கட்டுவாங்கன் ஒரே முகூர்த்தத்தில் சாதனை
த்யானம் -ப்ரஹ்மாத்மகம் -ஸமஸ்த ஜகத் -பண்ணுவது விட திவ்ய மங்கள விக்ராஹ த்யானம் எளிமை அன்றோ

முதல் நாள் -3 ஸ்கந்தம் -22 அத்யாயம் வரை
இரண்டாம் நாள் –5 ஸ்கந்தம் -12 அத்யாயம்
மூன்றாம் -நாள் -7 ஸ்கந்தம் நரஸிம்ஹ சரித்திரம்
நாலாம் நாள் –கிருஷ்ண ஆவிர்பாவ பர்யந்தம் 10 ஸ்கந்தம் 3 அத்யாயம்
ஐந்தாம் நாள் ஸ்ரீ ருக்மிணி திருக்கல்யாணம் -10 -54 அத்யாயம் வரை
ஆறாவது நாள் – 11 -13 அத்யாயம் வரை ஹம்ச அவதாரம் வரை
கடைசி ஏழாவது நாள் -பூர்த்தி -12 அத்யாயம் – 13 அத்யாயம் வரை

கபிலர் தேவ பூதி உபதேசம்
-16-குணங்கள் -பொறுமை இரக்கம் ஸூஹ்ருத் சத்ருக்கள் இல்லாமல் சாந்தம் சத்வ குணமுடன் சாதுவாக
அநந்ய பக்தி அனைத்தையும் புல்லாக கொண்டு அவன் கைங்கர்யம் –இவை இருந்தால் மோக்ஷம் சித்தம்
ஆத்ம சோதனம்-
மனஸ் சுத்திக்கு வழி –16-தேவ பூதிக்கு -மூன்றாம் ஸ்கந்தத்தில்
வர்ணாஸ்ரம தர்மம்- திருவாராதனம் அஹிம்சா -திவ்ய மங்கள விக்ரஹ பிராவண்யம் -பாகவத சேஷத்வம் – வைராக்யம் –
நாரதர் துருவனுக்கு-உபதேசம் -துவாதச அக்ஷரம் -நமோ பகவதோ வாசுதேவாயா -மதுவனம் -சென்று

தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம் பிறர் துன்பம் பொறாமை -யமம் நியமம் புலன்கள் அடக்கி -அத்யாத்ம அநு ஸ்மரணம்

பிராசனபர்கீஸ் நாரதர் சம்வாதம் உடல் ஆத்மா கதை
பிரிய வரதன் சரித்திரம் ஐந்தாம் ஸ்கந்தம் சப்த த்வீபங்களும் நவ வருஷம் பூலோக விளக்கம் -ஆதி ஜடவரதர் வியாக்யானம்
கிருத யுக பரதன் -மானாக பிறந்து ஜடபாரதர் அடுத்த பிறவியில் –
ரகு குணன்-அரசனுக்கு உபதேசம்
அடுப்பு பானை தண்ணீர் அன்னம் -போலே உடம்பு ஆத்மா –
கிம் புருஷ வர்ஷத்தில் ஹனுமான் சிரஞ்சீவி இருந்து த்யானம் -பாகவதம் சொல்லுமே

திருவாதிரை நக்ஷத்ரம் மிக பெரியது சுருங்கி பெருக்கும் –500 முதல் 800 பங்கு சூரியனை விட
மேஷ ராசி -கூட்டம் -அஸ்வினி பரணி பிரதானம் -புலோலி கோலம் மேஷம் ஆடு போலே –
சித்ர மாதம் -பிறப்பு -நுழைவது -பின்னாலே தெரிவதால் –
நான் நகருகிறோம்-அப்ரதிக்ஷணமாக -நக்ஷத்ர கூட்டமும் சூரியனும் நகராதவை
தன்னை தானே சுற்றுவது பகல் இரவு
சூரியனையும் சுத்தி
சந்திரன் பூமியை சுற்றி வர 29 1 /2 நாள் -நேரே பின்னால் எந்த நக்ஷத்ரம் தெரிகிறது
அதில் இருப்பதாக –354 சந்த்ர மாத பஞ்சாங்கம் 365 சூர்யா மாத பஞ்சாங்கம்
திதி -சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கோணம் -13 deg –180 பவுர்ணமி அம்மா அருகில் அமாவாசை –
வியாழன் -12 வருஷம் சூத்ரா -ஒரு வருஷம் ஒரு ராசி
88 நாளில் புதன் சுற்றி வரும் -ஞானம் அறிவுக்கு
சனி -ஒரு ராசிக்கு 30 மாதங்கள் -மெதுவாக செல்பவர்

திரு நாம சங்கீர்தன மஹாத்ம்யம் ஆறாவது அம்சம் அஜாமளன்-பிள்ளை நாராயணனைக் கூப்பிட்டு
சாது சமாகம் கிடைக்க செய்த தப்பு உணர்ந்து முக்தி பெற்றான் என்றபடி

26000 வருஷம் பின்பு கொண்டை அதே நிலை 2160 ஒவ் ஒரு ராசி அயனாம்சம் பஞ்சாங்கம்
கொண்டை தலையில் -பம்பரம் -நிற்க போகும் பொழுது தலை மட்டும் சுற்றும்

அவதூத சந்நியாசி

பிருதிவி ஒரு குரு -எவ்வளவு ஆபத்து வந்தாலும் அசையாமல் இருந்து லோகத்தை ஜெயிக்கலாம்
வாயு -எதுக்கும் பற்று இல்லாமல் -பூ மணம் சுமந்து வந்தாலும் -துர்நாற்ற காற்று -ஆத்மா சரீரம் -கர்மா நிபந்தனம்
ஆகாசம் -தாண்ட முடியாது -அனைத்துக்கும் இடம் கொடுத்தாலும் சம்பந்தம் கொள்ளாதே
ஆப -தண்ணீர் -அழுக்கை போக்கி -ஞானி சம்சாரிகளை திருத்தி
நெருப்பு -வஸ்து வடிவம் கொண்டு எரிந்தாலும் அருவமாய் -ஆண் ஆலன் இத்யாதி
சந்த்ரமா –கலைகள் -போலே ஆத்மாவுக்கு பால்யாதிகள்-ஷட் பாவ விகாரம்
ரவி -இல்லாவிட்டால் அணுவும் அசையாது –
கபோதம் -புறா -பட்டம் இல்லாமல்
மலைப்பாம்பு -இருந்த இடம் நகராமல் -யோகி பகவான் ரஷிப்பான்
சிந்து கடல் -ஆழம் காண முடியாதே
விட்டில் பூச்சி -கண்ணால் கண்ட பளபளப்புக்கு சிக்கும்
தேனீ -மதுக்ருது-சேர்த்து வைத்து இழக்கும்
யானை -உரசும் இன்பத்தில் -பெண் யானை கண்ணி வைத்து அகப்படும்
மது -வேடன் -சந்நியாசி -மற்றவர் சேர்த்து வைத்ததை கொள்ளலாம் பாபம் இல்லாமல் –
மான் -சங்கீத ஆசை -சிக்கும்
மீன் -நாக்கு ருசிக்கு
வேசி -மனஸ் இல்லாமல் -சுவர்க்கம் -முனி இவளை நினைத்து நரகம்
காக்கா -வடை -காசி இருக்கும் வரை வருவார்
சிறுவர் -மானம் அவமானம் இல்லாமல் -சண்டை ஒரு நாள் -விளையாட்டு அடுத்து
குமாரி -வளையல்கள் -நெல் குத்தி -தனியாக இருந்தால் நிம்மதி -அடுத்த ஆள் வந்த உடன் பயம்
சரக்ருதி -கொல்ல பட்டறை எடுத்த கர்மமே கண்
சர்ப்பம் -வேறே இடம் மாறி -சன்யாசியும் சஞ்சரித்து
சிலந்தி பூச்சி -தானே கட்டி விளையாடி அழித்து-தன்னுள்ளே இத்யாதி
குழவி கொட்டி தன்னோடு சாம்யம் -இப்படி -24-குரு
சரீரம் -25-குரு -இனி மேல் இவர் உடன் கூடக் கூடாது என்று அறியும்படி பண்ணி
வாஸு தேவ சர்வம் -26-அறிந்து கீழ் எல்லாம் தள்ளி பகவானைப் பற்றி -உத்தவர் -கிருஷ்ணன் சம்வாதம்

——————————

கலி யுகம் –432,000 வருஷங்கள் ….த்வாபர யுகம் –864,000 வருஷங்கள் …த்ரேதா யுகம் –1,296,000 வருஷங்கள் …
சத்யா யுகம் –1,728,௦௦௦வருஷங்கள் …so ஒரு சதுர் யுகம் =4,320,000 years… 4.32 மில்லியன் வருஷங்கள் …
நாம் இருப்பது ஸ்வேத வராஹ கல்பம் –முந்திய கல்பம் பத்ம கல்பம் –வைவச மன்மந்த்ரம் -28-வது சதுர் யுகம்
( 28 சதுர் யுகம் -306.72 million years..கலி பிறந்து 5100 + வருஷங்கள் )
100 சதுர் யுகம் -ஒரு கல்பம் -நான்முகனுக்கு ஒரு நாள்– / 100 சதுர் யுகம் -ஒரு இரவு –4.32 பில்லியன் வருஷங்கள்
ஒரு கல்பத்துக்கு -14-மன்வந்தரங்கள்
தேவ வருஷத்தில் ஒரு நாள் நமக்கு ஒரு வருஷம் -அவர்களது ப்ராத காலம்-3-5- -A-M- நமது மார்கழி மாதம்

——————————-

ஸ்ரீ நாரதர் ஸ்ரீ வேத வியாசருக்கு உபதேசம் -சதுஸ் ஸ்லோகங்கள் —
ஸ்கந்தம் -2-அத்யாயம் -9-ஸ்லோகங்கள் –33-தொடங்கி -36-வரை
இவற்றை விளக்கியே முழு ஸ்ரீமத் பாகவதமும்

கிருஷ்னே ஸ்வ தமோபாகதே -தர்ம ஞானதிபி ஸஹ
கலவ் நஷ்ட த்ர்சம் ஏச புராணர்கோ துணோதித –ஸ்ரீ மத்ஸ்ய புராண ஸ்லோகம்
ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைச்சோதிக்கு எழுந்த அருளின பின்பு -அஞ்ஞான அந்தகாரத்தில் இருக்கும்
கலியுக மக்களுக்காகவே ஸ்ரீமத் பாகவத்துக்குள்ளே உறைந்துள்ளான்

சர்க்கஸ் ச பிரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச
வம்சய அநு சரிதஸ் ச ஐவ புராணம் பஞ்ச லக்ஷணம்
ஸ்ருஷ்ட்டி -சம்ஹாரம் -வம்சாவளி -மன்வந்தரங்கள் -பிரதான அரசர்களின் நடவடிக்கை -ஆகிய
ஐந்தும் உள்ளவையே புராணம் எனப்படும்

வைஷ்ணவம் நாரதியஞ்ச தத பாகவதம் கருடஞ்ச தத் பத்மம் வராஹம் -ஸூப தர்சனே சாத்விகநி புராணாநி விஜிநேயாநி ஸூபாநி வை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்த்தம் மார்க்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ரஜஸாநி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் தத் லிங்கம் ஸ்கந்தம் ததைவ ச அக்நேயம் சதேதாநி தமஸாநி நிபோதமே

யத்ர அதிக்ரித்ய காயத்ரீம் வர்ணியதே தர்ம விஸ்தார
விருத்தாசுர வதோபேத மத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ தத்யாத் தேமஸி ம்ஹாசம் அந்விதம்
ப்ரவ்ஷ்ட தபத்யாம் பவ்ர்நாம் ஆஸ்யா ம ச யாதி பரமாம் கதிம்
அஷ்ட தச சஹஸ்ராணி புராணம் தத் ப்ரகீர்த்திதம் -ஸ்ரீ மத்ஸ்ய புராணம் -(53.20-22),
இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எழுத்து சிம்ஹாசனத்தில் வைத்து புரட்டாசி மாச பவ்ரணமி அன்று
தானம் செய்பவர் பரம புருஷார்த்தம் அடைவார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூத்ரணம் பாரத அர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ்
வேதார்த்த பரிப்ரும்ஹித புராணம் சம ரூப சாஷாத் பாகவதோதிதா
துவாதச ஸ்கந்த யோக்தோயம் சத விச்சேத சம்யுத கிரந்தோ
அஷ்டா தச சஹஸ்ரா ஸ்ரீ மத் பாகவதபிதம் — ஸ்ரீ கருட புராணம் –ஸ்ரீ ஹரி பக்தி -விலாசம் –10.394-395:
ப்ரஹ்ம சூத்ர சாரம் -மஹா பாரத சாரம் -காயத்ரி மந்த்ர வியாக்யானம் –
வேதார்த்த நிர்ணயம் -மிக உயர்ந்த புராண ஸ்ரேஷ்டம்-

பரம காருணிகனான ஸூஹ்ருத் தானே ஸ்ரீ மத் பாகவதமாக திரு அவதாரம் –
சேது -சம்சாரம் கடக்க தானே அணையாக –
முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருவடிகள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்
ஐந்தாவது ஸ்கந்தம் திரு நாபி
ஆறாவது ஸ்கந்தம் திரு மார்பு
ஏழாவதும் எட்டாவதும் திருக்கைகள்
ஒன்பதாவது ஸ்கந்தம் திருக்கழுத்து
பத்தாவது ஸ்கந்தம் திரு முகராவிந்தம்
அடுத்த ஸ்கந்தம் -லலாட பட்டகம்
இறுதி ஸ்கந்தம் -திரு அபிஷேகம் –ஸ்ரீ பத்ம புராணம்

அஹம் வேத்மி ஸூகோ வேத்தி வியாஸோ வேத்தி ந வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ராஹ்யம் ந புத்தயா ந ச திகயா–ருத்ர வசனம் –
நான் அறிவேன் -ஸூகர் அறிவார் -வியாசர் அறிவாரோ அறியாரோ என்னும் படி இருக்கும்
பக்தி ஒன்றாலே பாகவதர்கள் அறிவார்கள் -கேவல ஞானத்தாலோ-வியாக்கியானங்களைப் படித்தோ அறிய முடியாதே

ஸ்வயம்பூர் நாரத சம்பு குமார கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாசகிர் வயம் –
நாரதர் -சம்பு -வையாசகி என்னும் ஸூக தேவர் -மூவரும் இறையடியாக பிருந்தாவன மதுரா ரசம் பருகினார்கள்
ஸூக தேவர் -பிராட்டி உடைய கிளி ஸ்வரூபம்
நாரதர் -ராச லீலை அனுபவித்து -கோபி ஸ்வரூபம் –
சம்பு -ராச லீலை அனுபவித்து -கோபி ஸ்வரூபம்

——————

கலி யுகம் ஆரம்பம் -2:27a.m. on February 18th in the year 3102 B.C-
ஸ்ரீ கிருஷ்ணர் -125-வர்ஷங்களும் -4-மாதங்களும் இங்கு இருந்து அருளி தன்னுடைச் சோதி எழுந்து அருளிய பின்பு

—————————–

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஜென்மாதி அஸ்ய யதா அன்வயத் இதரச அர்த்தேசு அபிஜன ஸ்வராட்
தேந ப்ரஹ்ம ஹ்ருதய ய ஆதி காவ்யே முக்யந்தி யத் ஸூரா தேஜா வரி ம்ருதம் யதா வினிமய
யத்ர த்ரி சர்க்க அமர்ச ஸ்வேந சதா நிரஸ்த குஹ்யாம் சத்யம் பரம் தீமஹி –1-1-1-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஜனமேயஜன்-ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைசம்பாயன்-ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரிஜித் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸூக தேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: