ஸ்ரீ நம் ஆழ்வார் மங்களாசாசனம் செய்து அருளும் திவ்ய தேசங்கள் –ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரார்த்தங்கள் சம்பந்தம் –

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -ஸ்ரீ நரசிம்ஹ பிரியா -2005-நூலில் இருந்து –
ஸ்ரீ ஆழ்வார் மங்களாசாசனம் செய்து அருளும் திவ்ய தேசங்கள் –ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரார்த்தங்கள் சம்பந்தம் –

ஸ்ரீ குரு பரம்பர த்யான ஸ்லோகம்
ஆ பகவத்த பிரதிதாம் அநகாம் ஆச்சார்ய சந்ததிம் வந்தே
மனசி மம யத் ப்ரஸாதாத் வசதி ரஹஸ்ய த்ரஸ்ய சாரோயம்

சீரிய நான்மறைச் செம்பொருள் ரஹஸ்ய த்ரயம் –
இந்திரா சஹஸரம் நாராயணம் -ஸ்ரீ லஷ்மீ பதி -நாத சமாரம்பாம் -திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -பிரபன்ன ஜன கூடஸ்தர்
பின்னானார் வணங்கும் ஜோதியாக அர்ச்சா ரூப எம்பெருமான் -திவ்ய ரூபங்களை அடைவே காட்ட –
இப்படி மால் உகந்த ஆசிரியர் வார்த்தையின் சீரான ஆச்சார்ய ஹ்ருதயத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ திருவிருத்தத்தில் –ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை -ஸ்ரீ பெருமாள் கோயில் மூன்றையும்
ஸ்ரீ திருவாய் மொழியில் -31-திவ்ய தேசங்களையும் ஆழ்வார் மங்களாசாசனம் –

————–

1–திருவேங்கடம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –திரு விருத்தம்—8–

இந் நாட்டுத் தலைவர் செய்கைகளைப் பார்க்கில் ஸ்ரீ திருவேங்கட மலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதற்காகவே என்று தோன்றுகிறது
ஆச்சார்ய வத்தாயம் முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவாந் பவேத் -என்கிறபடியே
ஆச்சார்ய அபிமானத்தாலே பரம புருஷார்த்தம் -மற்றது கை யதுவே -என்கிறபடியே –
ஸ்ரீ நிவாஸ தயாம் போதியின் பரிவாஹமான சீதலமான குரு சந்ததியைப் பெறுமத்தை
வேங்கடத்து உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்றும் -என்றும் –
மோஷாந்த ஐஸ்வர்யம் பெறுமத்தை – பொருள் படைப்பான் -என்றும் காட்டின படி

இத்தால் ரஹஸ்ய த்ரயார்த்தம் பெறுவதற்கு முன் குரு பரம்பரா அனுசந்தானம் வேண்டும் என்பதைத் தெரிவித்த படி

—————–

2-திரு வெக்கா-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம் தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம்–26–

வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–
திரு வெஃகா திவ்ய தேசம் அருகில் திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூ சிதம்-இத்தால் என்பர்-

ஸ்வாபதேசம்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும்
இடத்தை யும் அறிந்த ,இவர்க்கு பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-
பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம் சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள்
சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

விண்ணோர் தொழும் கண்ணன்–ஸ்ரீ தேவப்பெருமாள் உபேயம் பலமாய் -ப்ரஹ்மாவின் அஸ்வமேத யாகத்தில் நின்றும் ஆவிர்பவித்தவன்
வெக்காவுது -வெக்கணை -யாகத்தை அணையாக இருந்து தடுத்த இடம்
உபாய பல பாவேந ஸ்வயம் வ்யக்தம் ப்ரஹ்ம -அவனை அடைய அவனே உபாயம் -சேது –
அம் பூம்தேன் இளம் சோலை அப்பாலது-என்று சம்சார ம்ருகாந்தரத்தில் இருக்குமவர்க்கு திரு வெஃகாவின் அருகில் உள்ள குளிர்ந்த சோலை திரு தண்கா
எப்பாலைக்கும் சேமத்ததே-இதில் ஸ்ரீ விளக்கு ஒளியாய் பிரகாசிப்பித்தும் -மரகதமாய் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக
தஸ்ய ச வசீகரணம் தச் சரணாகதி ரேவ-சரணாகதிக்கு வேண்டிய பரிபக்குவ நிலையை அருளி -எம்மா பாவியருக்கும் சேமத்தை நல்குமே –
இத்தால் நித்ய ஸூரி துல்யமான பகவத் அனுபவத்தை சரணாகதி மூலம் பெறலாம் என்றதாயிற்று

இத்தால் சித்த உபாய வசீகரணத்வம் நாம் அனுஷ்ட்டிக்கும் ஸாத்ய உபாயமான சரணாகதியே த்ருஷ்டா விஷயமானதால்
திரு வெஃகாவை மாத்ரம் நேரே உதாஹரணித்து அருளினார்

—————–

3–திருவரங்கம் —

தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –திரு விருத்தம்–28-

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்-கர்மத்தினால் செய்வோம் நாம் சோர்வின்றியே -என்கிறபடியே
எம்பெருமானுக்கு அடிமையே செய்வோம் –
நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –திரு அரங்கா அருளாய்–இத்தால் இதரர்களுக்கு அடிமை செய்யோம் –
அநந்யார்ஹ சேஷத்வத்தை அருளிச் செய்தபடி
இப்படி அயோக-அந்யோக வியவவச்சேதங்களால் -ஸ்வரூபத்தை -தத்வத்தைக் காட்டும் முகமாய் –
ஸ்ரீ திருமந்த்ரார்த்தை பிரதிபாதித்த படி

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் -பறவைகள் தம் அலகால் தன்னிடத்தில் உள்ள சங்கைக்
கொத்தாத படி அலை வீசும் காவேரி –
சார்ந்தவரை ரஷிக்கும் தண்மை எம்பெருமான் சம்பந்தம் பெற்ற அசேதனத்துக்கும் இருக்குமத்தைக் காட்டியதால்
உபாயமான சரணாகதி அனுஷ்டானம் தத் கரண மந்திரமான ஸ்ரீ த்வய அர்த்தத்தை சொன்ன படி
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன-மனம் தடுமாறும் அளவிலும் முன்பும் உண்டோ என்றது –
ஒரு போதும் இல்லை -என்றபடி
மோக்ஷயிஷ்யாமி மாஸூச -என்றபடி –புருஷார்த்தத்தைக் காட்டுவதன் மூலம் ஸ்ரீ சரம ஸ்லோக அர்த்தத்தை காட்டியபடி
இப்படி ரஹஸ்ய த்ரய அர்த்தங்கள் நமக்கு அறிய வேண்டிய சார தம அம்சம் என்று உணர்த்தி

இத்தால் சார தம நிஷ் கர்ஷம் செய்து அருளியபடி –

———————–

4-திருக்குறுங்குடி-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–1-10-9-

நம்பியை-பூர்ணணை -எங்கும் எப்போதும் -சர்வாத்மநா -தேச கால அவஸ்தா அபரிச்சேதன்
தென் குறுங்குடி நின்ற -ஸந்நிஹிதனாய் –ஸ்ரீ வைகுண்டத்தில் அல்லாது -இங்கேயே தனது பேறாக-ஸ்வார்த்ததா —
அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை–வடிவு அழகை உடையவனாய் -அத்தாலே நியமிக்குமவனாய் –
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை-நித்ய ஸூரிகளுக்கு ஜீவ ஹேதுவான அதி மநோஹர தேஜஸ்ஸை உடையவனாய் –
நாம் தரிக்கப்படுமவர்கள் -கைங்கர்யம் செய்யுமவர்கள் -சேஷதைக ஸ்வரூபம் ச
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–சர்வ விதத்தாலும் விட்டுப் பிரியாத சரீரமாய் -தஸ்ய சரீர லக்ஷணம் –
இருப்பதால் என் சொல்லி மறப்பது –

இத்தால் நம் தரிசனத்துக்கு அசாதாரணமான சரீராத்ம பாவ சம்பந்தமான பிரதான பிரதிதந்தரத்தை பிரதர்சித்த படி –

——————————-

5-திருமாலிருஞ்சோலை

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை
தளர் விலர் ஆகில் சார்வது சதிரே–2-10-1-

கிளர் ஒளி இளமை -மேன்மேலும் ஞான ஒளியை உடைய -ஞான மயமான -ப்ரத்ய காத்மா -ஜீவ ஸ்வரூபம்
கெடுவதன் முன்னம்-அழிவதன் முன்னம் -விரோதி ஸ்வரூபம் –
வளர் ஒளி மாயோன் -குன்றாத தேஜஸ்ஸை உடையவன் -பர ஸ்வரூபம்
மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை தளர் விலர் ஆகில் சார்வது –உபாய ஸ்வரூபம்
சதிரே– நிறம் பெறுதல் -ஸ்வரூப அநு ரூபம் -இத்தால் பல ஸ்வரூபம்

இத்தால்-இதில் அர்த்த பஞ்சகம் பிரதிபாதித்த படி

—————-

6-திருக்குருகூர் –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று, –காரண பூதன் பக்கலிலே -பிரளய தசையில் -சென்று ஓன்றுகிற
நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-இவ்வுலகைப் படைத்தான் -போக்தாவான சேதனத்தையும் -போக்யமான அசேதனத்தையும்
நின்ற ஆதிப் பிரான் நிற்க,-இவை இரண்டையும் ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத -என்கிறபடியே
கொண்டுள்ள ஈஸ்வரனையும் திரும்பி திரும்பி அருளிச் செய்வதால்

இத்தால் தத்வ த்ரய சிந்தனம் விதித்தபடி

சத்யம் -சத் யத் யம் -தத்வ த்ரயம்-

————————

7-ஸ்ரீ மத் த்வாராபதி

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே
அகப்பட்டேன்–ஸ்ரீ கிருஷ்ணனையே ஆஸ்ரயிக்கப் பெற்றேன்
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்! என்னை இனி உமக்கு ஆசை இல்லை -இதரர்கள்
மேல் ஆசை வைக்கவும் நியாயம் இல்லை என்றபடி

இத்தால் பாரமார்த்யத்தை உணர்த்திய படி

—————-

8–ஸ்ரீ வரமங்கை-(ஸ்ரீ வான மா மலை)

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட் டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே–5-7-1-

நோற்ற நோன்பிலேன் -கர்மா யோகத்தை உடையேன் அல்லேன்
அறிவிலேன் -ஞான யோகத்தையும்
நுண்ணறிவிலேன் -பகவத் கைங்கர்யத்துக்கான பக்தி யோகத்தையும் உடையேன் அல்லேன்
ஆகிலும் இனி உன்னை விட் டொன்று ஆற்ற கிற்கின்றிலேன் -இத்தன்மை எங்கனே என்னில்
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர் வீற்றிருந்த எந்தாய்! -அரவின் அணை அம்மானே!-
உனக்கு மிகை அல்லேன் அங்கே–செந்நெல் கதிர்கள் தலை வணங்கப் பெற்றது போன்ற தாமரை மலர்களை உடைய
கழனி என்பதால் ஊர் வளமும்
வரனான பெருமாளும் மங்களமான பிராட்டியும் கைங்கர்ய ஸ்ரீ யை அருளும் ஊர் ஆதலால்
இத்தால் அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்கிறபடி

இத்தால் முமுஷுத்வத்தை -மோக்ஷத்தை விரும்பும் தன்மையைக் காட்டிய படி

——————–

9-திருக்குடந்தை

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை-செந்நெல் பயிர்கள் சாமரம் வீசவும் –
செழுமையான தீர்த்தங்கள் உள்ளதுமான ஊர்-பல பக்தியை அனுஷ்ட்டிக்கும்
ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனைக் குறிக் கொண்ட படி
தீர்த்தங்கள் என்றது -சரணாகதியை அனுஷ்ட்டிப்பித்து வைக்கும் ஆச்சார்யர்களை

இத்தால் அதிகாரி விபாகத்தைக் காட்டின படி –

——————–

10-திரு வல்ல வாழ்–

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

வானார் வண் கமுகும்-ஆகாசத்தை அளவிய பாக்கு மரங்களும் -பரமாகாசமான எம்பெருமானை சிரகாலம்
த்யானாதிகளைச் செய்யும் பக்தி யோகம் –
மது மல்லிகையும் கமழும்-வாசிக்கப் பெற்ற தேன் பெருகிற மல்லிகை எம்பெருமானை -ஸத்ய–வசீகரித்து –
அவன் அருள் பெற்றுத் தரும் பிரபத்தி
இப்படியான நல்லதொரு வாழ்ச்சி வகையைக் குறிக் கொள்ளும் திரு வல்லவாழ்-ஸ்தல விசேஷம் –

இத்தால் உபாய விபாகத்தைக் காட்டின படி

———————————

11-திரு வண் வண்டூர்-

வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–6-1-1-

செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–பிரிவுக்கு ஹேதுவான பாபத்தை உடையவளாயினும்
எம்பெருமானைப் பெற விருப்பம் உடைமையை
அஞ்சலி பரமாம் முத்ர ஷிப்ரம் தேவ ப்ரஸாதிநி -என்கிறபடியே கைகளைக் கூப்பி விண்ணப்பியுங்கோள் என்றபடி
காரணம் -செய் கொள் செந் நெல் உயர்-ஒரு முதலே களைத்து வரம்பு இல்லாமையால் பரமாகாசம் வரையில்
வளர்ந்து ஓங்கி நிற்கிற கழனி வளத்தை யுடைய ஊர் ஆகையால்
இப்படி விளைவிக்கக் கூடிய ஷட் பதர் -ஆச்சார்யர்கள் வளங்கள் கூடிய ஊர்

இத்தால் பிரபத்தி யோக்யதையைக் காட்டின படி

————–

12-திரு விண்ணகர் –

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே–6-3-1-

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே–-எல்லா ஸூக அனுபவங்களும் ஆயாசாதி மூலங்களான
கர்மங்களாலே பெறப்படுகின்றன -அநாயாசேந செய்யும் கார்யங்கள் எல்லாம் ப்ராயச -துக்க அனுபவங்களையே கொடுக்கின்றன
அப்படி இல்லாமல் பாலைவனத்தில் தடாகத்தைக் கண்டால் போலேயும் இந்தளத்தில் தாமரை பூத்தால் போலவும்
ஸூ கரமான அங்கங்களைக் கொண்டே கைங்கர்யத்தைப் பெற்றுத்தரும் -சரணாகதி
லஷ்மனோ லஷ்மி சம்பத -என்னும்படி பெற்றுத்தரும் ஸ்தல விசேஷத்தைக் காட்டா நிற்கும்

இத்தால் பரிகார விபாகத்தைக் காட்டின படி

————————————-

13-திருத் தொலை வில்லி மங்கலம்

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

துவளில் மா மணி மாட மோங்கு -நிர்த்தோஷங்களான மணிகளால் சமைந்த மாடங்கள் நிறைந்து இருக்கிற –
மத் ரக்ஷண பர -மத் ரக்ஷண பலம் ததா ந மம ஸ்ரீ பதே ரேவ -என்கிறபடியே யானவர்கள் நிறைந்த திவ்ய தேசம் –
ரஜஸ் தமஸ் கலவாதான ஸூத்த சத்வமயமான மாடங்கள் -ஓங்கி பிரகாசிக்கும் –
தொலை வில்லி -வில்லைத் தொலைத்த புருவத்தாள் -என்னும்படி -மற்றையோர் கண் அபிமானத்தைத் தொலைக்கப் பண்ணும்
கண் கொண்டு ஈஸ்வரோஹம் என்று இருப்பாரைத் தோற்ப்பித்து நமஸ்தே என்று திருவடிகளில் விழப்பண்ணும்-
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்களால்
மங்கலம் -உயர் நலத்தை உடையவனும் அத்தாலே அருள்பவனுமான அவனை
தொழும் இவளை -அநந்ய ப்ரயோஜனமாகப் பற்றும் இவள் -என்ற படி

இத்தால் சாங்க பிரபதனத்தை விதித்த படி

——————————————

14-திருக்கோளூர்

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-

திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-
அவன் சீர் வளம் மிக்கவன் ஊர்–உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே -கல்யாண குணங்களை பாடுமவர்களும் -அதனாலே சம்பத்தும் மிகுந்த ஊர்
எம்பெருமானாலே அங்கீ கரிக்கப்பட்ட ஜீவரத்னமான செய்த வேள்வியர் மலிந்து இருக்கிற ஊர்
நக்ஷத்ரங்களை ஒத்த வையத்தேவர் உறையுமத்தை திருக் கோளூர்-என்று திருத்தல விசேஷமும் காட்டுகிறது –
மேலும் தொல் வழியைக் காட்டும் அருள் மறையைத் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதரித்த திவ்ய தேசமும் இது வன்றோ

இத்தால் க்ருதக்ருத்யரைக் காட்டின படி

——————————–

15-திருத் தென் பேரை

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-

ஸூக வெள்ளத்தை உடையவன் -பிரிந்து இருக்கும் நிலையிலும் சேர்ந்து இருக்கும் போது உண்டான நிரதிசய ஸூகத்தை உடையவன் –
எம்பெருமான் நிராங்குச ஸ்வா தந்திரத்தால் -பரிபூர்ணனான செருக்கால்
மெய் மறந்து முறை தள்ளி உபேக்ஷை பண்ணினாலும் குறையுடையரான நாம் அவன் திருவடிகளில் பர சமர்ப்பணத்தைப் பண்ணினால்
முறை பார்க்காது முறை வழுவாமை வல்லராய் வர்த்திக்க திருப் பேரையில் சேர்வன் என்று அருளியதால்

ஸ்வ நிஷ்டை தெளிந்து ஸ்வ நிஷ்டாபிஜ்ஞானத்துடன் இருக்கக் காட்டின படி –

———————

16-திரு அயோத்தியை

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் லெறும் பாதி ஒன்று இன்றியே
நற் பால் அயோத்தியில் வாழும் சரா சரம் முற்றவும்
நற் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-

நல்ல இடத்தை உடைத்தானது-இங்கே நித்ய வாசம் செய்யும் மாத்திரத்தாலே ஸ்ரீ ராம பக்தியை விளைவிக்கும் இடம் –
நல் வாழ்க்கையை விளைவிக்கும் இடம் என்றதாயிற்று –
இத்தால் நாம் வேண்டின படி இங்கு சரீரம் தொடர்ந்து இருக்கும் காலத்திலும் -பலனை எதிர்பாராதே
ஸ்வயம் பிரயோஜனமாக ஸ்வரூப ப்ராப்தமான கைங்கர்யங்கள் அமைய பெரும் என்றபடி
ஊரும்-அபராஜித – மற்றவரால் வெல்ல முடியாத திரு அயோத்தியை இ றே
ஸ்வயம் பிரயஜனமான கைங்கர்யங்களிலே குறைவு பாரா என்றபடி

இத்தால் உத்தர க்ருத்யத்தைக் காட்டின படி –

———————————

17-திரு ஆறன் விளை-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

திருமகளோடே கூடி லோகங்களுக்கு ஸூகம் பிறக்கத் -தங்களுக்கு இனிமை பிறக்கும் படி ஆள்கின்ற எங்கள் பிரான் –
ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்து அருளிய மஹா உபகாரகன் -ஸ்ரீ திருவாய் மொழி கெட்டு அனுபவிக்க நல்ல பாங்கான
திவ்ய தேசம் என்று ஆதரித்துக் கொண்டு அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
திவ்ய தம்பதிகளும் லோகங்களுக்கு ஸூகம் உண்டாகும்படி ஸ்ரீ ஆழ்வாரைப் பாடச் செய்தது மாத்ரம் அன்றிக்கே
அத்தை சேர்ந்து கேட்டும் ஸ்ரீ ஆழ்வாருக்கு உகப்பை விளைவித்தார்கள் அன்றோ –

இத்தால் -மகாரஸ்துதயோர் தாச -என்கிறபடியான பகவச் சேஷ விருத்தியும்
பாகவத பர்யந்தமாக வேண்டின புருஷார்த்த காஷ்டையைக் காட்டின படி

——————————–

18–திரு வடமதுரை

வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ் செந்நெலும் வயல் சூழ் திரு வாறன் விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த-இட்டது எல்லாம் சம்ருத்தமாக விளைகிற தேசம் –
அதற்கு ஏற்ற கல்யாண குணங்களுடன் ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே சாது பரித்ராண அர்த்தமாக
ஸ்ரீ வடமதுரையில் ஆவிர்பவித்து அருளினான்
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் -அப்ராக்ருத திவ்விய சமஸ்தானத்தை திருமேனி உடையவனாயினும்
ஆயர் கொழுந்தாய் நடந்து அருளி உபகார சீலனாய் நின்று அருளினான்
இத்தால் -நான் இங்கு இருக்கும் நாள் வரை ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஞ்ஞா –என்கிறபடியே
பகவத் அபிமதமாக வர்த்திக்க ஸாஸ்த்ரம் ஆகிற கை விளைக்கைக் கொண்டு வர்ணாஸ்ரம தர்மங்களைக்
கடைப்பிடிக்கக் காட்டி அருளின படி –
இதுவே இங்கே மதுரமாய் அமையும் என்று திவ்ய தேசமும் காட்டா நிற்குமூர் அன்றோ
மேலும் இங்கு ஸ்ரீ வாமனாதிகளும் தபஸ்ஸுக்களை செய்து போந்தார் என்பது ஸூ ப்ரசித்தம்

இத்தால் -ஸாஸ்த்ரீய நியமனம் காட்டப்பட்டது

———————–

19-திரு தென் குளந்தை

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த
வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே- இனிக் கொடுக்ககேன்-ஐஸ்வர்யத்தையும் ரக்ஷணத்தையும் –
பரமோதார குணங்களையும் -மகிழ்விக்கும் தன்மையையும் -விரோதி நிரசனத்தையும்–இவற்றை எல்லாம் எம்பெருமான் பக்கலிலே
இருப்பதைக் காட்டிக் கொடுக்கும் கொடியையும் உடையவனை ஆதரித்துக் கூடச் சென்றதால் இனி ஒன்றும் இழக்க வேண்டியது இல்லை –
பண்டு நாம் அறியாது இருக்க -அவன் பக்கலிலே ருசியாலே குறை உண்டாகி புறம்பான வற்றாலே ருசி இருந்ததாலே
பல் வளையார் முன்பு பரிசு அழிந்தேன் –
அவனை அறியாதவர்கள் புறம்பு உண்டானவை எல்லாம் பெற்று இருக்கும் அளவிலே அவை எல்லாம் நாம் இழந்தது என்றபடி –
இத்தால் ந்யஸ்த பரனான பின்பு அவனை அநாதரித்து மற்றவற்றில் வைத்த ஆசை என்கிற அபராதத்துக்கு
பரிஹாரமாய் அது எல்லாம் இழக்க நேர்ந்த படி

இத்தால் அபராத பரிஹாரத்தைக் காட்டின படி -குளத்திலே ஸ்நாநாதிகள் பண்ண பாபாதிகள் தீருமாப் போலே
ஊரும் காட்டா நின்றது

————————–

20-திருப்புளிங்குடி

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடிகளும் மாடங்களும் நிறைந்த நக்ஷத்ரம் போல் மின்னும் இடத்திலும் -புளியைக் குடியாக உடையவர் இடத்திலும் –
எம்பெருமான் இடம் வலம் என்று வியத்யாஸம் பாராது ஒருபடியே உறைகிறான் என்றதால்
வைகுண்ட கதா ஸூதாரஸபுஜம் சேதசேரோசேத -என்கிறபடியே பாகவதர்கள் உகந்த ஸ்தலமே உயர்ந்தது என்று
ஸ்தான விசேஷத்தைக் காட்டின படி

——————————-

21-திரு வண் பரிசாரம் –

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே—8-3-7-

திரு வண் பரிசாரத்தில் இருந்து இங்கு வருவாரும் -இங்கு இருந்து அங்கு போவாரும் -கைங்கர்யம் செய்யும் பாரிப்புடன் அடியராய் –
ஆழ்வார் தாம் திருப்புளியின் அடியிலே இருக்கிறார் என்று எம்பெருமான் இடம் சொல்லாதே இருப்பதால் –
கைங்கர்யம் பண்ண மாட்டாதே தனிமைப்பட்டு இருப்பதாகக் கூறிய இத்தால் -இப்படியே இவ்வுலகில் குறையாளனாகவே
காலம் முடிந்தாலும் -நிர்யாணத்திற்கு இவ்வுடலை விடுவதற்கு நன்னிலம் ஆவது நற்பகலாமது
தன் நிமித்தம் என்னலுமாம் என்றபடியாய் குறையில்லை என்று காட்டின படி

இத்தால் நிர்யாணத்தை நிரூமித்தார்

———————-

22-திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு–

வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடி றுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

இப்பாட்டில் வில் விழாவுக்காக ஸ்ரீ கிருஷ்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து ஸ்ரீ மதுரைக்கு எழுந்து அருளும் போது
குவலயா பீடம் முதல் கம்ச வதம் முடிவான பராக்ரமங்களை எம்பருமான் காட்டி அருளியதை அனுசந்தித்து அருளுகிறார் –
ஸ்ரீ கிருஷ்ணன் சதுர்புஜனாய் சங்கு சக்ர தாரையாய் ஸ்ரீ மதுரையிலே எழுந்து அருளினார் –
ஸ்ரீ தேவகிப்பிராட்டியார் பிரார்த்தனை பேரில் அதை எல்லாம் மறைத்து திருவாய்ப்பாடிக்கும் எழுந்து அருளினான் –
பின்பு அக்ரூரர் மூலமாக வில் விழாவுக்காக அழைக்கப்பட்டு வீதியேற எழுந்து அருளி கம்சனால் தன்னை அழிக்கும் படி
நிறுத்தி இருந்தவர்களை எல்லாம் தான் அழித்து அருளி -ஸ்ரீ மதுரையில் மீண்டும் சங்கு சக்ர தாரியாய் சேவை தந்து அருளினான்
இத்தால் -இங்கு உள்ளவர்களான ஆராதிக்கப்பட வேண்டியவர்களால் லோக பாலர்களாய் நிறுத்தப்பட்டவர்கள் எல்லாம் ப்ரபன்னனாக்கி
ஸ்வ ஸ்வரூபத்தை பெறுமாறாய் பரமபதம் செல்லும் வழியில் இவனுக்கு வழி நெடுக தம் தாம் எல்லைகளில் உபசாரம் பண்ணுமது காட்டப்பட்டது –
செங்குன்றம் போல் நின்று தேவர்கள் தம் தாம் பதத்தை ஆளா நிற்கச் செய்தே ப்ரபன்னரானவர்கள் திறத்தில் மாத்ரம்
சிற்றாறு போலே உபசாராதிகளை நடத்துவதை ஊரும் குறிக்கிறது –
வழியில் விருத்தாந்தத்தை மாறுதலாகக் கூறியதால் பிரபன்னன் செல்லும் கதியைச் சிந்தித்து அறியப் பண்ணின படி

இத்தால் கதி சிந்தனம் செய்ய வேண்டியது ஸூ சிக்கப்பட்டது –

———————-

23-திருக் கடித்தானம்

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

செல்வர்கள் வாழும் -லஷ்மி சம்பன்ன என்கிறபடியே கைங்கர்ய ஸ்ரீ யை உடையவர்கள் வசிக்கும் இடம்
எல்லியும் காலையும்-பகல் இரவு என்பதுவும் பாவியாது -ஒரே பகலாய்
தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள்-சங்கோசம் அற பரிபூரணமான கைங்கர்ய ஸ்ரீ யை -நமக்கே –
சரணாகதனான நமக்கே தந்தருள் செய்வான்

இத்தால் -பரிபூர்ணமாக ஸ்ரீ பகவத் அனுபவத்தைக் காட்டி அருளின படி

———————-

24-திருப்புலியூர்

கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

பிரான் திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர் அரு மாயன் -உபகாரகனாய் -திருமாலாய் –
அத ஏவ ஸ்வாமியாய் -நீர் வாய்ப்பை யுடைய வயலால் அலங்க்ருதமான குட்ட நாட்டுத் திருப் புலியூரிலே
வர்த்திக்கிற பெறுதற்கு அரிய ஆச்சர்ய சேஷ்டித பூதன்
பேரன்றிப் பேச்சிலள் -எம்பெருமானோடே இயற்கையிலே புணர்ந்து அருளின புணர்ச்சியை அறியாமையாலும் —
இவள் எம்பெருமானோடே கலந்த கலவியை அறிந்து இருந்த இவருடைய தோழியானவள் -இவள் திருப்புலியூரிலே
எழுந்து அருளின எம்பெருமானுடைய குணங்களால் வசீக்ருதையாய்–
அவனையே வரனாகப் பார்க்க வேணும் என்னும் –இத்யாதி –திரு ஆறாயிரப்படி
பிராட்டியான பராங்குச நாயகி சித்த உபாயனான திருப்புலியூர் திருமாலுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களிலே
அகப்பட்டு இருப்பதால் அவனையே வரனாகப் பார்க்க வேணும் என்று
தோழியானவள் தாயார் முதலானவர்களிடம் கூறுகிறாள்

இத்தால்
அஸ்மத் தேசிக ஸம்ப்ரதாயை ரஹிதை-அத்யாபி நா லக்ஷிதை -ஸ்வ பிராப்தயே ஸ்வயமேவ சாதனதயா
ஜோகுஹ்யமாண ஸ்ருதவ் -என்கிறபடியே -நம் ஆச்சார்ய சம்பிரதாயத்தைச் சேராதவர்களாலே இதுவரையிலும் பார்க்கப் படாததான –
தன்னை அடைவதற்குத் தானே உபாயமாக இருப்பதாக வேதத்தில் பறை சாற்றப் படுகிறதான
சித்த உபாயத்தை தோழிமார் மூலம் தெளிவித்ததால் சோதனம் செய்தபடியாம்

இத்தால் சித்த உபாய சோதனம் காட்டப்பட்டது –

———————–

25-ஸ்ரீ வரகுண மங்கை -26-ஸ்ரீ வைகுண்டம்

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

சித்த உபாயனான எம்பெருமான் அடியிலே நாம் அறிவதற்கு முன்னம் நம் நெஞ்சிலே தன்னுடைய
ஸுவ்ஹார்த்தத்தைக் கொடுத்து -நின்றும் -ஜாயமான கடாக்ஷத்தைச் செய்து பழிகியவனாக நம்முள் வீற்று இருந்தும்
பின் உபாய அனுஷ்டானம் பண்ணின பின்பு சொந்தம் உடையவனாய் -சயனித்தும் செய்கிறான் –
இதில் பின்னிரண்டு இப்பிறவியில் ஏற்படுமது –

இத்தால் பிறக்கும் போது கடாஷித்தவனை -பகவத் கடாக்ஷம் பெற்றவனை -ஸாத்ய உபாயமான
உபாய அனுஷ்டானத்தாலே கைக்கொள்ளுகிறான் -என்றபடி –
இப்பாட்டின் திருவாறாயிரப்படி–தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -என்னை அடிமை கொண்டு அருளினால் போலே
இன்னும் உன் பரம காருண்யத்தாலே சோதி வாய் திறந்து தாமரைக் கண்களாலே நோக்கி
உன் திருவடிகளாலே என் தலையிலே வைத்து அருளி பிராட்டியாரோடே கூடி இருந்து அருளி
ஆழ்வார் அபேக்ஷித்தத்தைச் செய்து அருளினான் என்று
இத்தால் –
அத்யாத்ம ஸ்ருதி சம்பிரதாய கதகை அத்தா விஸூத்தா சயா –சித்த உபாய வசிக்ரியாம் இதி ந ஸாத்யாம்–என்கிறபடி
சித்த உபாய வசீகரண அர்த்தம் வேதாந்த ஸம்ப்ரதாயத்தினால் செய்ய வேண்டியதாகக் காட்டப்பட்ட சாத்ய உபாயம் காட்டப்பட்டது –
மேலும் திருவாறாயிரப்படி -இந்தக் கல்யாண குணத்தைக் கண்டு லோகம் எல்லாம் விஸ்மயப்பட
நாங்கள் கூத்தாடி நின்று இத்யாதிகளால்
சமத்யாபயத் -என்கிறபடி சோதனம் செய்து அருளப்பட்டதும் காட்டப்பட்டது –
இங்கே ஸ்ரீ வைகுண்டம் எம்பெருமானை சித்த உபாயனாகவும் -வரனான எம்பெருமானும் மங்கையான பிராட்டியும் –
அது தன்னிலும் புருஷகாரம் செய்யும் குணவதியாயும் இருந்து –
ஸாத்ய உபாயத்தை நடத்துமவர்களாய் -ஸ்ரீ வர குண மங்கையிலும் அனுசந்தித்த படி

இத்தால் ஸாத்ய உபாய சோதனம் -செய்யப்பட படி –

————————

27-திருக்காட்கரை

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்–எம்பெருமான் பண்டு கலந்து
பரிமாறினதை நினைந்து நெஞ்சு உருகுகிறது -வேட்கை பெருகுகிறது -இருப்பினும் அவன் திறத்து என்ன செய்ய முடியும் –
தொண்டன் ஆனதால் அவன் நினைவை மாத்ரம் விடாதே இருக்கிற படி –
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை-அவன் வீதியில் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழு நீர் வாசிக்கிற
உயர்ந்தோருடைய -பூ ஸூரர்களுடைய வேத ஒலியும் வேள்விப்புகையும் கமழ்கிற
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–காட்கரை அப்பனுடைய மாயம் -கிட்டின போது தாழ நின்று பரிமாறினதை
நினைக்கும் போது நெஞ்சம் உருகுகிறது -ஆசை பெருகுகிறது -இருப்பினும் அவன் திறத்து என்ன செய்ய முடியும் –
தொண்டன் ஆனதால் கலந்து பரிமாறின நினைவை ப்ரீதி அதிசயத்தினால் தவிராது கொண்டுள்ள படி –

இத்தால் -சாதுர் வர்ணயம் சதுர் வித ஆஸ்ரயம் முகே பேதே யதாவஸ்திதே வ்ருத்தம் தந்தியதம் குண அநு குணயா வ்ருத்யா
விசிஷ்டம் ஸ்ரிதா -தியாக உபப்லவ நித்ய தூர சரண வ்ரஜயா விதவ் கோவிதா-
சிந்தாம் அப்யுககத்தும் அந்தி மயுகேபி ஏகாந்திந -சந்திந-என்கிறபடி பிரபாவ வ்யவஸ்தையைக் காட்டி அருளின படி
ஸ்லோகார்த்தம் -வர்ணாஸ்ரம தர்மங்களின் வேறுபாடு சாஸ்திரங்களில் இருக்கச் செய்தே விஷ்ணு பக்தனுக்கு ஏற்ற
அனுஷ்டானத்துடன் வர்ணாஸ்ரமத்துக்கும் பொருத்தமான நடத்தையைக் கொண்டு மீறுகிற பாபத்தில் இருந்து விலகி
ப்ரபத்தியைச் செய்யும் ஸ்மார்த்தாக்களான பரமை காந்திகள் இக்கலி யுகத்திலும்
நம்முடைய சிந்தையை ஏற்றுக் கொண்டு சந்தோஷப் படுவதற்கு இருக்கிறார்கள் –

——————–

28-திரு மூழிக் களம்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல் -பகவத் விஷயத்தில் -உபகாரகரோடு ஐக ரஸ்யம் ப்ராப்தமாக இருக்க –
எம் -என்றது -ஒன்றைத் தம்மதாக்கிக் கொடுத்தால் அல்லது தரிக்க மாட்டாத உபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறது –
தன்னை பகவத் விஷயத்துக்கு ஆக்கின அன்றே தன்னது அடங்கலும் அங்குத்தைக்கு சேஷமாய் இருக்க
உபகார ஸ்ம்ருதி இறே இப்படி சொல்லுவித்தது -ஆத்ம சமர்ப்பணத்துக்கும் அடி இது இறே

இத்தால் வந்து கழல் பணிவார் தண்மை கிடக்க -தரம் -பெருமை -அளவு என்ற இயல்பு -சொல் –
இலதாம் உண்மை உரைத்தனர் ஓரம் தவிர உயர்ந்தனரே
பக்ஷபாதம் இல்லாத நம் ஆச்சார்யர்கள் பிரபன்னர்களுள் ஏற்றது தாழ்வு இருந்தாலும்
அவர்கள் பெருமை அளவிட முடியாது என்றபடி -ப்ரபாவ ரக்ஷையைச் -சொன்னபடி –

————————————-

29-திரு நாவாய்

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையாயின -ஸ்வரூப விரோதி -உபாய விரோதி -ப்ராப்ய விரோதிகளைப் போக்கும் –
ஆர்க்கு என்னில்
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-மகாரஸ்து தயார் தாச -என்று
பிரணவத்தில் காட்டின படி நின்று
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-நாராயணாயா என்கிற த்ருதிய பதத்தின் படியே
பரிமளமாயும்-ஸ்ரமஹரமாயும் -வசந்தமாயும் -உள்ள சோலைகளால் சூழப்பட்ட –
தன் பொருட்டே தன்னை அடைவிப்பவனான ஸ்ரீ கண்ணனுக்கே என்றே
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –நமஸ்ஸிலே காட்டின படி நீண்டு நிற்கும் ஸ்வ ரக்ஷண
பரத்தைக் குறுக்கி எம்பெருமான் இடத்திலே குறுக்கும் -சேர்ப்பவனுக்கு என்றபடி –

இத்தால் திருமந்த்ரார்த்தம் காட்டப்பட்டது –

——————————

30-திருக்கண்ணபுரம்-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற
வேண்டும் என்ற மநோ ரதமாய் -எண்ணமேயாய்ச் சென்றது –
இத்தால் திருமந்திரத்தில் காட்டின ஸ்வரூப உபாய புருஷார்த்தத்தை மநோ ரதித்த படி
மேலும் சர்வேஸ்வரன் சர்வ சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு ஸ்ரீ திருக்கண்ணபுரத்தில் சந்நிதி பண்ணி அருளினான் –
எல்லாரும் ஓக்க அவனை ஆஸ்ரயியுங்கோள்-ஆஸ்ரயிக்கும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள்-
அவ்வளவே கொண்டு அவன் தானே கை விடான் –
ஆன பின்பு எல்லாரும் ஓக்க அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பர உபதேசத்தில் ப்ரவர்த்திக்கிறார்
இத்தால் -யேந கேநாபி பிரகாரேண த்வய வக்தாத்வம் -என்கிறபடியே
கரண மந்திரமான ஸ்ரீ த்வயத்தின் அர்த்தம் காட்டப்பட்டது –
மாலை நண்ணித் தொழுது எழுமினோ –பூர்வ கண்டத்தின் அர்த்தம் -ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளைப் பற்றுகிறேன்
இது பர உபதேசமாய் மத்யம புருஷனாய்க் கிடக்கிறது
காலை மாலை கமல மலர் இட்டு நீர்-சர்வ காலத்திலும் தோஷம் அற்ற உயர்ந்தத்தை சமர்ப்பித்து
களையற்ற கைங்கர்யம் பெறுகைக்காக
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே-நாராயண சப்தார்த்தங்கள்

—————–

31-திருமோகூர்

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1-

மரண மஹா பயத்துக்கு விரோதி -நிரசன சீலனான காள மேகத்தை அல்லது துணை இல்லை
என்று அவனைப் பற்றுகிறார்
இது ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் உத்தர அர்த்தத்தின் அர்த்தம்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மாஸூச –
தாள தாமரை-உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்டும் உரம் பெற்ற மலர்க்கமலம்
தட மணி வயல் -வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும்
திரு மோகூர்-இத்தால் பூர்வார்த்தம் காட்டப்பட்டது
இங்கு அசேதன உதாஹரணம் -அசேதன பிராயமாய் சர்வ தர்மான் பரித்யாக ஸ்தித-த்வம் என்கிற
அநுவாத பக்ஷமாகவுமாம்

இத்தால் சரம ஸ்லோகார்த்தம் காட்டப் பட்டது

————————-

32-திரு அனந்தபுரம்-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் -ருசி பிறந்தவாறே உபாயமாகைக்கும் உடலாய் -ஞான பக்தி வர்த்தகங்களுமாய் –
விரோதியும் கிடக்கச் செய்தே -அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே திருவனந்த புரமே பரம ப்ராப்யம் என்று
அறுதி இட்டு நம்மோடு சம்பந்தம் உடைய அநு கூல ஜனங்கள் அடங்கப் போய் திரளுங்கோள்-என்கிறார்
இத்தால் –
மருள் அற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையகம் எல்லாம்
இருள் அற்று இறையவன் இணையடி பூண்டிட எண்ணி தலால்
தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால்
அருள் உற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினாரே-என்கிறபடியே
ஆச்சார்ய க்ருத்யத்தை பிரபன்ன ஜட கூடஸ்தர் ஆகையால் தாமே செய்து அருளுகிறார்
இங்கு இவ்வர்த்தம் தான் கொள்ளத் தகுமோ என்னில் —
இது தான் அல்லாத திருப்பதிகளுக்கும் ஒவ்வாது –என்னில் -எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்
ஒரோ இடங்களில் ஓர் அனுசந்தான விசேஷங்கள் ஓடினால் அதுக்குச் சேர வார்த்தை சொல்லும் அத்தனை இறே
என்று அன்றோ ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்

————————

33-திருவட்டாறு-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

எம்பெருமான் தான் அருள் சூடும் அடியரான அடியேற்கு அடியேனாய் இருக்கும் இதுவே படியாய் இருந்த எனக்கு
ஆழியான் நிரவதிக சம்ருதியைத் தருகையில் சமந்திரா நின்றான்
இத்தால் அஸிதில குரு பக்தி தத் ப்ரஸம் சாதி ஸீல பிரசுர பஹு மதி -குறைவற்ற ஆச்சார்ய பக்தி யுடையவனாய்
ஆச்சார்யரைப் புகழ்தல் முதலியவற்றையே செய்து மிகுந்த கௌரவ புத்தி உடையவனாய் இருப்பன் என்ற
சிஷ்ய க்ருத்யத்தையும் ஆழ்வார் தாமே அனுசந்தித்துக் காட்டின படி –

————————————-

34-திருப்பேர் —

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-

இப்படி அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என்னோடு கலந்து பரிமாறுகைக்கு ஹேது என் என்று எம்பெருமானைக் கேட்டால் —
என் பக்கலில் இல்லாத ஹேதுவை என் பக்கலிலே அத்யாரோபித்துச் சொல்லப் பார்க்கிலும் —
திருமாலிருஞ்சோலை மலை என்னும் இச்சொல்லைச் சொன்னேன் என்னும் இதுக்கு மேற்பட்டச் சொல்லலாவதொரு
ஹேது என் பக்கல் இல்லை -இச் சொல் இத்தனையும் மெய்யே சொன்னேன் என்பதே ஹேதுவாக –
இப்படி ஹேதுவாகக் கொள்ளுகைக்குக் காரணம்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்-திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-அதி ஸ்லாக்யமான ரத்னமான
ஆச்சார்யரான ஆழ்வாரை திருவரங்கன் இடத்திலே தன்னைத் தாண்டுவித்து சேர்விக்கிற பொன்னி -காவேரியின் தென் பக்கத்திலே
இருப்பதால் தானும் ஆழ்வாரை அடி ஒற்றியவர்களை நம்பெருமாள் திருவடியை அடைந்த வ்யாஜ மாத்ரத்தினாலே -பேர் அளவால் –
அனுக்ரஹிப்பவனாய் உள்ளான் என்பதை எழுந்து அருளி இருக்கும் இடத்தினாலே காட்டா நின்ற திருமால் -என்றபடி –

இத்தால் -கச்சித் ஆச்சார்ய த்ருஷ்ட்வா முஷித நிகில மோஹ –ஸூரி ப்ருந்தாபிநந்த்ய-என்கிறபடியே
பாக்யசாலியான அதிகாரி ஆச்சார்ய கடாக்ஷத்தினாலே நித்ய ஸூரிகளின் கூட்டத்தில் கொண்டாடப் படுகிறான் -என்று
நிகமித்தார் ஆயிற்று

————

இவ்வாறாய்-பீதக வாடைப்பிரானார் பிரம குருவாக வந்து அர்ச்சாவதாரங்களைப் பிரகாசிப்பிக்க –
ஸ்ரீ நம் பெருமாள் திருவடியை அடைந்த ஸ்ரீ நம்மாழ்வாரும் அருமறையின் பொருளான சரணாகதியை ப்ரதிபாதிக்கும்
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரார்த்தத்தை ஆய்ந்து எடுத்து அருளினார்
பவிஷ்யத் ஆச்சார்யர் என்று கொண்டாடப் பெற்றவரும் -நம் தர்சன ஸ்தாபகரான நம் ஸ்ரீ ராமானுஜன்
நாடும் நகரும் நன்கு அரிய ஸ்ரீ நம்பெருமாள் திரு உலகத்திலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் சேர்த்தியிலே
சரணாகதியை அனுஷ்டித்துக் காட்டி ஸ்ரீ கத்ய த்ரயத்தையும் நமக்காக அருளிச் செய்து அருளினார்
ஸ்ரீ வேதாந்த ச்சார்யார் -சர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் என்று திவ்ய தம்பதிகளாலே கொண்டாடப்பட்ட ஸ்ரீ தேசிகர் –
32-அதிகாரங்கள் கொண்ட ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரத்தை குரு பரம்பரையா பிரபாவத்துடன் அருளிச் செய்து
சரணாகதி அனுஷ்டானத்தை கண்டரவேண ஸ்தாபித்து அருளினார்
இப்படி ஆய்ந்து எடுத்தும் -அனுஷ்ட்டித்தும் -ஸ்தாபித்தும் செய்த பின்
இந்த சரணாகதியை யேந கேநாபி பிரகாரேண த்வய வக்தாத்வம் -என்று அருளிச் செய்தபடியே
உலகோர் எல்லாம் அனுஷ்ட்டிக்கும் படிக்கு ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் நியமித்து அருள
ஸ்ரீ சடகோப மஹா தேசிகன் அனுக்ரஹித்து அருளினார் –

———————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: