ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் – –ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் -உத்தரார்த்தம் -அஹம் பதார்த்தம்/ த்வா பதார்த்தம் /சர்வ பாபேப்யோ பதார்த்தம்/மோக்ஷயிஷ்யாமி பதார்த்தம்/ மாஸூச பதார்த்தம்– –

ஆக பூர்வார்த்தம்
த்யாஜ்யமான சாதனங்களையும்
அவற்றினுடைய அனந்தத்யத்தையும்
தியாகத்தையும்
தியாக பிரகாரத்தையும்
தியாகம் அங்கம் என்னும் இடத்தையும்
ஸ்வீ கார்ய ஸ்வரூபத்தையும்
தந் நைரபேஷ்யத்தையும்
ஸ்வீ கார பிரகாரத்தையும்
ஸ்வீ காரத்தையும் –சொல்லிற்று

————————————–

ஆக இத்தால் அதிகாரி க்ருத்யம் சொல்லி
மேல் இப்படி பிரபத்தவ்யனான ஈஸ்வர க்ருத்யத்தையும்
பிரபக்தாவான அதிகாரி வுடைய க்ருத்ய லேசத்தையும் சொல்லுகிறது
பிரபத்தவ்ய க்ருத்யம் பிரபத்தவ்ய பல மோக்ஷ விரோதி சகல பாப நிவர்த்தகம்
ப்ரபந்ந க்ருத்யம் தத் பல நிர்ப்பரத்த்வ அநு சந்தானம்

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச
அஹம்
என்று கீழ்ச் சொன்ன உபாய பலமான இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாய் இருக்கையாலே
நிவர்த்யமான அநிஷ்ட ஸ்வரூபம் மேல் சொல்லக் கடவதாய்க் கொண்டு நிவர்த்தகமான ஸ்வரூபத்தை –
அஹம் -என்று காட்டுகிறது
உபாயமாக உன்னாலே ஸ்வீ கரிக்கப்பட்ட நான் -என்றபடி

மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனுக்கு பிரதிசம்பந்தியாய்க் கொண்டு -அஹம் -சப்தம் வாரா நிற்கப் பிரித்து
அஹம் என்கிற இதுக்கு ஒரு விவஷை யுண்டு -அதாவது
த்வத் ஸ்வீ க்ருதனான நான் -என்றவாறே ஸ்வீ கார்ய ரூபமான வாத்சால்யாதி குண வைசிஷ்டியே தோற்றும் –
அத்தை வியாவர்த்தித்துக் கார்ய கரத்வ உபயோகி ஞான சக்த்யாதி குண வைசிஷ்ட்டி தோற்றுகைக்காக-

அஹம்
தேவ மனுஷ்யாதி அபிமானிகளுடைய அஹம் அர்த்தம் அவ்வளவில் பர்யவசிக்கும்
பிரகிருதி ஆத்ம விவேகம் பண்ணின வனுடைய அஹம் அர்த்தம் ப்ரக்ருதே பரமாய்
பர சேஷமான ஆத்ம வஸ்துவின் பக்கலிலே பர்யவசிக்கும்
ஈஸ்வரனுடைய அஹம் அர்த்தம் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தங்களையும் தனக்கு விபூதியாக உடையவன்
ஆகையால் உள்ளது எல்லாம் காட்டும்
இவ் வஹம் சப்தம் கீழ்ச் சொன்ன இடத்தில் ஸுலப்யாதி குணோபேதனான நிலையைக் கழித்து
ஞானாதி குண பரிபூர்ணனான நான் என்கிறது
அதுக்கு அடி மேல் சொல்லுகிற பாப விமோசனத்துக்கு ஞான சக்த்யாதிகள் அபேக்ஷிதம் ஆகையால் –

ஆக
சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -நிருபாதிக சேஷியாய் –
நிரவதிக தயாவானான நான் என்றபடி
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ச தீஷு நேஹபாபம் பராக்ரமம் இதும் அர்ஹதி மாமகீநம் -என்று
ஞான சக்தி கிருபாதிகளைப் பாப நிவ்ருத்திக்குப் பரிகரமாக ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –

நிவர்த்தந அதிகாரி ஸ்வரூபமும் -நிவர்த்த்யம் இன்னது என்னும் இடம் அறிகைக்கும் சர்வஞ்ஞனாக வேணும்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -என்னக் கடவது இறே –

அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கு சர்வ சக்தியாக வேணும் -இந்த சர்வ சக்தித்வம்
முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த -என்று
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்த சக்தி யோகத்திலும்
பக்கமே கண்டாருளர் -என்று அதீந்த்ரியனான தன்னை இந்திரிய கோசரனாக்கின சக்தி யோகத்திலும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற-என்று அணு பூத வஸ்துக்களிலே விபுவான தான்
பரிசாமாப்ய வர்த்தித்தவ ரூப சக்தி யோகத்திலும்
நினைத்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே -என்று ஜகத்துக்கு உபாதானமாகா நிற்கப்
பரிணமியாதே காரணமான சக்தி யோகத்திலும் அதிகமாய் இருக்கும்
அதுக்கு அடி நித்ய சம்சாரியாய் -பகவத் விமுகனான சேதனனை -என்னை இசைவித்து நானும் பிசைந்தேன் என்றும் படி
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -என்கிறபடியே இசைவித்து
தேந சேத விவாத -என்கிற அவிவாதத்தை யுண்டாக்கிப் பாப விமோசனம் பண்ணுகையாலே எதிர்தலையை இசைவிக்க வேணும் –
அவற்றுக்குத் தன் இசைவே வேணும் -ஆகையால் இவற்றில் காட்டில் இதுக்கு ஆதிக்யம் உண்டு

சர்வ சக்தி யானாலும் அபூர்ணனாய் இருக்குமாகில் ப்ரயோஜனத்தில் நினைவாய் இவன் கார்யம் செய்யக் கூடாது –
அது வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கும் என்கிறது –
சர்வஞ்ஞனுமாய் -சர்வசக்தியுமாய் -அவாப்த ஸமஸ்த காமனானாலும் -பிறர் கார்யம் செய்யக் கூடாதே –
அது வேண்டாதபடி நிருபாதிக சேஷி என்கிறது

சர்வஞ்ஞத்வம் அபராதங்களை அறிகைக்கும்
சர்வசக்தித்வம் தத் அனுகுண தண்டதரனாகைக்கும்
அவாப்த ஸமஸ்த காமத்வம் சிலவற்றைக் கொடுத்து கழித்துக் கொள்ள ஒண்ணாமைக்கும்
சர்வ ஸ்வாமித்வம் இப்படிச் செய்யா நின்றால் நிவாரகர் இல்லாமைக்கும்
உறுப்பாய் இறே இதன் பூர்வம் போந்து

இப்போது அவற்றைக் கழித்து
சர்வஞ்ஞத்தை ரக்ஷண வீதியிலும்
சர்வ சக்தித்வத்தை ரக்ஷண வியாபாரத்திலும்
அவாப்த ஸமஸ்த காமத்வத்தை பிரயோஜன நிரபேஷ ரக்ஷணத்திலும்
ஸ்வாமித்வத்தைத் தன் பேறாகச் செய்கையிலும்
உபயுக்தம் ஆக்குகைக்கு பர துக்க அஸஹிஷ்ணுதா லக்ஷணமான பரம தயை வேணும்
இதுக்காக நிருபாதிக தயாவானாய் இருக்கும் என்கிறது –
ஆக க்ருபா ஸஹ க்ருதமான ஞான சக்த்யாதி குணங்களே இவனுக்கு உஜ்ஜீவன ஹேது ஆவது

விதி வாய்க்கின்று காப்பார் யார்
சேமம் செம் கோன் அருளே
ஆழியான் அருளே நன்று
துணியேன் இனி நின் அருள் அல்லது –இத்யாதிகளில் ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்
க்ருபயா கேவல மாதமஸாத் குரு
கேவலம் மதீயயைவ தயயா
க்ருபயா சரணம் பவ
தய ஸ்வ மாம் குணமய ரங்க மந்த்ர
தேஹி மே க்ருபயா நாத –இத்யாதிகளாலே கிருபையே உத்தாரகம் என்னும் இடத்தை
ஆச்சார்யர்களும் அருளிச் செய்தார்கள்

ஆக இந்த சர்வஞ்ஞத்வாதி குணங்கள் இவ் -வஹம்-அர்த்தத்தில் அநுசந்தேயங்கள்
இவை சேதனனுடைய அநந்ய சாதனத்வ வ்யவசாயத்துக்கும் அடியாய் –
ஈஸ்வரனுடைய விரோதி நிரசனத்துக்குப் பரிகரமுமாய் இருக்கும் –

மாம் -என்று தன் ஸுலப்யத்தைக் காட்டினான்
அஹம் -என்று பரத்வத்தைக் காட்டுகிறான்
மாம் -என்கிற நிலையிலே -தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்த ஸுலப்யம் தோற்றும்
அஹம் -என்கிற நிலையிலே தார் மன்னர் தங்கள் தலை மேலான பரத்வம் தோற்றும் –
மாம் -என்று
பற்றலர் வீயக் கோல் கைக் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் -என்று
கொல்லா மாக் கோலான உளவு கோலும் கையுமாக நிலையைக் காட்டினான்
அஹம் -என்று -வெள்ளை விளி சங்கு வெம் திடர் திருச்சக்கரம் ஏந்து கையன் -என்று கையும் திருவாழியுமான வேஷத்தைக் காட்டுகிறான் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -என்கையாலே மாம் என்று தர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டினான்
அஹம் சர்வே பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே -அஹம் -என்று அதர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டுகிறான்
மாம் -என்று சரணம் -என்கிற உக்தியும் சஹியாத நிரபேஷமான நிலையாகையாலே உக்திக்கு விபரீதமான நிலையைக் காட்டினான்
அஹம் என்று பாப விமோசகத் வத்தாலே -அனுஷ்டானத்துக்கு விபரீதமான நிலையைக் காட்டுகிறான்
அஹம் மோக்ஷயிஷ்யாமி என்கையாலே பந்தகனான நானே விமோசகன் ஆனால் வேறு நிவாரகர் உண்டோ என்று
தன்னுடைய சமாப்யதிக ராஹித்யத்தைச் சொல்லுகிறான்

ஆக
சர்வஞ்ஞனுமாய் -சர்வ சக்தியுமாய் -அவாப்த ஸமஸ்த காமனுமாய் -சர்வ ஸ்வாமியுமாய் -பரம தயாவுமான –
நான் என்றதாயிற்று –

——————-

அநந்தரம் -த்வா -என்று –
நிவர்த்த்ய பாப ஆஸ்ரய பூதனாய் –
நிவ்ருத்த்ய உபாயத்தைப் பற்றி அவன் பக்கலிலே சர்வ பரங்களையும் ந்யஸித்து
விமுக வ்யாவ்ருத்தி ஸூ சகமான ப்ரபத்தியை உடையவனாய் –
பாப நிவ்ருத்தி அவசர ப்ரதிக்ஷகனான அதிகாரியைச் சொல்லுகிறது

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் சரணம் வ்ரஜ -என்று விதித்த பிரகாரத்தில்
சாதனாந்தரங்கள் நமக்கு சாதனம் அன்று என்கிற பிரதிபத்தி விசிஷ்டனாய்
தத் ஹேதுவான ஸ்வரூப பாரதந்தர்ய ஞானவானாய்
தத் ஹேதுவான ஈஸ்வர ஏக ரஷ்யத்வ பிரதிபத்தி யுடையவனாய்
தத் கார்யமான பகவத் சேஷத்வ ஞானத்தையும்
தத் பர்யவசாந பூமியான ததீய சேஷத்வ ஞானத்தையும் யுடையவனாய்
புருஷாந்தரங்களில் விமுகனாய்
ஸ்வீ காரத்தில் உபாயத்வ புத்தியை ச வாசன பரித்யாகம் பண்ணி

ஞான க்ரியா பஜன சம்பத கிஞ்ச நோஹ மிச்சாதி கார சகநா நு சயா ந பிஞ்ஞ–இத்யாதிகளில் படியே –
சாதனாந்தரங்களில் அநந்வயத்தாலே அகிஞ்சனனாய் -அவற்றில் இச்சையும் இன்றிக்கே -அதிகாரமும் இன்றிக்கே –
அஞ்ஞான அசக்திகளையும் அபிராப்தியையும் அனுசந்தித்து -அத்தாலே தத் விஷயமான அநு சயமும் இன்றிக்கே
சித்த உபாய பிரதிபத்தி அனுவ்ருத்தியும் சாதனாந்தர சமானமாக அனுசந்தித்து இருப்பானாய் –
ஆக இப்படி -தியாக ஸ்வீ கார விசிஷ்டனாய்க் கொண்டு சர்வ ஸூலபனான என்னையே
நிரபேஷ உபாயமாகப் பற்றி க்ருதக்ருத்யனாய் நிற்கிற உன்னை என்றபடி –

அஹம் -என்கிற இடத்தில் –
சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய் உபாய பூதனானவனுடைய ஸ்வ இதர சகல சாதனாந்தர நைரபேஷ்யத்தாலும்
த்வா -என்கிற இடத்தில் –
அஞ்ஞான அசக்திகள் அபிராப்தியையும் யுடையனாய்க் கொண்டு
பரித்யக்த ஸமஸ்த சாங்க சாதனான வதிகாரியினுடைய ஆகிஞ்சன்யத்தாலும்
இந்த ரஷ்ய ரஷக பாவத்தினுடைய ஸுவ்சாத்ருஸ்யம் தோற்றுகிறது –

ஏவம் பூதனான அதிகாரியினுடைய க்ருதக்ருதையை -தஸ்யை வம் விதுஷ-என்கிற அநு வாகத்தாலே சொல்லிற்று
ஏவம் விதுஷ -என்று சத்யம் தபஸ் ஸூ தமம் முதலாக யஜ்ஜம் முடிவாக கர்ம யோகத்தைச் சொல்லி
மாநசம் என்று ஞானயோக பக்தி யோகங்களைச் சொல்லி இவற்றில் ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாகச் சொல்லி –
எல்லாத்துக்கும் மேலாக -ப்ரஹ்மணே த்வா மஹச ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத -என்று
ஸ்ரீ யபதியாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ ஸ்வாமியான நாராயணன் திருவடிகளில் ஆத்மாத்மீய அகில
பர சமர்ப்பணம் ஆகிற ப்ரபத்தியை ந்யாஸ சப்தத்தால் சொல்லி
தஸ்மான் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-என்று அந்த பிரபத்தியே சத்ய தபாதிகளான சாதனாந்தரங்களில் அதிகமாகச் சொல்லி
இப்படிக் கீழ் அநு வாக த்வயத்திலும் சொன்ன சாதனாந்தர தியாக நிவ்ருத்தி பூர்வகமான சித்த உபாய பரிக்ரஹத்தை –
ஏவம் விதுஷ -என்று சொல்லி -தஸ்ய -என்று இந்த சரணாகதி ஸ்வரூபத்தை யாதாவாக அநு சந்தித்த சேதனனுக்கு
ஸ்வீ க்ருத ந்யாஸ ரூப சாதன வைபவத்தால் சர்வ கர்ம அநு பூர்த்தியையும் சொல்லிற்று

ஆத்மா யஜமான –என்று தொடங்கி -ஸ்ரோத்தரமக்நீத்-என்று முடிவாக -சரணாகதி ஞானாவானான புருஷனுடைய
ஆத்மாத்மீயங்களை யாக உபகரணமாக வகுத்து இத்தை ஒரு யாகமாகச் சொல்லி –
யாவத்த்ரியதே சா தீஷா -என்று தொடங்கி -சர்வ வேத சம்வா ஏதத் ஸத்ரம்-என்று முடிவாக
அவனுடைய சரீர ஸ்திதி உள்ளளவும் தீக்ஷையாகச் சொல்லி இவனுடைய ஸ்திதி கமந சயாநாதி வ்யாபாரங்களாலே
சர்வ கர்மங்களினுடையவும் சித்தியாகச் சொல்லி -யந் மரணம் ததவப்ருதம்-என்று இந்த யாகத்துக்கு அவப்ருதம்
இவனுடைய சரீர விமோசனமாகச் சொல்லி –

ய ஏவம் வித்வா அநுதய கயநே ப்ரமீயதே -என்று தொடங்கி -ப்ரஹ்மணோ மஹிமாந மாப்நோதி -என்ற அறுதியாக
அர்ச்சிராதி மார்க்க கமனமும் -ஆதி வாஹிக ஸத்காரமும் -ஆவரணாதி லங்கனமும் -விராஜா ஸ்நாநமும் –
ஸூஷ்ம சரீர விதூநநமம் -அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக ஆவிர்பாவமும் -அப்ராக்ருத விக்ரஹ பரிக்ரஹமும் –
அகால கால்யமான திவ்ய தேச பிராப்தியும் -ஐரம்மதீய திவ்ய சர பிராப்தியும் -திவ்ய அப்சரஸ் ஸூக்களுடைய அப்ராக்ருத அலங்காரமும் –
திவ்ய கோபுர பிராப்தியும் -அனந்த கருடாதி ஸூரி பரிஷத் ப்ரதயுத கமனமும் ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேஸ்ம பிரவேசமும் –
அப்ராக்ருத திவ்ய மண்டப பிராப்தியும் -பரமாத்ம தரிசனமும் -பரம புருஷ ஸ்துதி பிரமாணதிகளும்-தத் சமீப பிராப்தியும் –
பர்யங்க ஆரோஹணமும் -பகவத் உத்சங்க ஆசனமும் -ஆலோக ஆலாப ஆலிங்க நாதிகளும்-ஸ்வரூப ரூப குண விக்ரஹாதி அனுபவமும் –
அனுபவ ஜெனித ப்ரீதி அதிசயமும் -ப்ரீதி ப்ரேரித அநேக விக்ரஹ பரிக்ரஹமும் -சர்வ தேசாதி விஸிஷ்ட சர்வ பிரகார கைங்கர்ய பிராப்தியும் –
கைங்கர்ய ஜெனித பகவந் முகோலாச அனுபவமும் ஆகிற புருஷார்த்த லாபத்தைச் சொல்லிற்று

விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோயே தேஷாம் ராஜந் சர்வ யஜ்ஜாஸ் ஸமாப்தா-என்றும்
க்ருஷிர்ப் பூ வாசகஸ் சப்த -இத்யாதிப்படியே சத்தா தாரகனும் மோக்ஷ ப்ரதனுமான கிருஷ்ணனையே
நிருபாதிக ரக்ஷகனான அறிந்தவர்கள் சர்வ யஜ்ஜ்ங்களும் பூர்ணமாக அனுஷ்ட்டித்தார்கள் என்று சொல்லிற்று

க்ருதாந்யநேந ஸர்வாணி தபாம் சித பதாம் வர –சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஜாஸ் சர்வ தாநாநி சஷணாத் –
க்ருதாந்ய நேந மோக்ஷஸ் சதஸ்ய ஹஸ்தே ந சம்சயே-என்று இந்த உபாய ஞானம் உள்ள புருஷனைக் கீழே சொல்லி
அவனாலே எல்லா தபஸ் ஸூ க்களும் பண்ணப்பட்டன-சர்வ யஜ்ஜ்ங்களும் பண்ணப்பட்டன –
எல்லா தீர்த்த ஸ்நானங்களும் பண்ணப்பட்டன -சர்வ தானங்களும் பண்ணப்பட்டன -மோக்ஷம் அவன் கையிலே –
இவ்வர்த்தத்தில் சந்தேகம் இல்லை என்று சொல்லிற்று

யாநி நிஸ்ரேய சார்த்தாநி ஸோதிதா நிதபாம் ஸிவை -தேஷாந்து தபஸாம் ந்யாஸம் அதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்று
மோக்ஷ சாதனமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தபஸ் ஸூ முதலான சாதனங்கள் எல்லாவற்றாலும்
ந்யாஸம் என்கிற சாதனமே உத்க்ருஷ்ட சாதனம் என்றும் சொல்லி –

சமித்சாதன காதீநாம் யஜ்ஜா நாம் ந்யாஸ மாத்மந -நமஸோ யோக ரோத்தேவேச ஸ்வத்வர இதீரீத —
யாக சாதந பூதேந ஸ்வாத் மநா சேஜ்ய மீஸ்வரம் -அயஜத்தா நி தர்மாணி ப்ரதமா நீதி சஸ்ருதம் -இத்யாதியாலே
சமிதாதி சாதனங்களால் பண்ணப்படுவதான யஜ்ஜ்ங்கள் எல்லாவற்றிலும் காட்டில் ஈஸ்வரன் பக்கலிலே
ஆத்ம பர ந்யாஸம் பண்ணி இருக்கும் அதுவே நல்ல யஜ்ஜமாவது என்றும்
யாக சாதனா பூதனான தன்னாலே இஜ்யனான சர்வேஸ்வரனை யஜிக்குமது பிரதான தர்மம் என்றும் சொல்லிற்று இறே

ஏவம் ரூபமான சரண வரணம் பண்ணி க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு
கிமஹம் சாது ந அகரவம் கிமஹம் பாபம் கரவம் -என்கிற ந்யாயத்தாலே
புண்ய கர்மங்கள் பண்ணாது இருந்தோம் -பாப கர்மங்கள் பண்ணினோமே என்கிற பயம் இல்லை –
உபாயத்வேந வரணீயனான ஈஸ்வரன் -ஸ்மராமி -என்கிறபடியே -இவனுக்கு அபேக்ஷித சகல க்ருத்யங்களும் நிர்வஹித்துக் கொண்டு
போருமாகையாலே இவனுக்கு கர்த்தவ்யம் ஸ்வ நிர்ப்பரத்வ அனுசந்தானம் பண்ணிக் கொண்டு இருக்கையும்
வாசநா நிபந்தனமாகப் பிறந்த தப்புக்களுக்கு உபாயத்தில் பண்ணின விஸ்வாச அதிசயத்தாலே நிர்ப்பரனாய் இருக்கையும் –

ஆக- த்வா -என்று
தியாக ஸ்வீ கார விசிஷ்டனான உன்னை என்று ஸ்வீ கர்த்தாவான அதிகாரி விசேஷத்தைச் சொல்லிற்று
மேல்
ஸ்வீ கார்ய வஸ்து க்ருத்யத்தையும் ஸ்வீ கர்த்தரு க்ருத்ய லேச ததையும் சொல்லுகிறது

———–

அஹம் -என்று நிவர்த்தக ஸ்வரூபம் சொல்லி
த்வா -என்று நிவர்த்தய ஆஸ்ரயம் சொல்லி
அநந்தரம் -சர்வ பாபேப்ய-என்று நிவர்த்தய ஸ்வரூபம் சொல்லுகிறது

சர்வ பாபேப்ய-
பாபமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -இதுவும் த்ரி ப்ரகாரமாய் இருக்கும்
பாப -சப்தத்தால் -அநாதத ரூப துக்க பல ஹேதுவானவற்றைச் சொல்லுகிறது
அதில் நரக பல ஹேதுவான கேவல பாபத்தைச் சொல்லுகிறது அன்று
பந்தகம் ஆகையால் புண்ய பாப ரூபமான உபாயவித கர்மத்தையும் சொல்லுகிறது –
அதுக்கு அடி மோக்ஷ விரோதி பிரகரணம் ஆகையால்
தத் ஸூ க்ருத துஷ் க்ருதே விதூ நதே -என்றும்
புண்ய பாபே விதூய -என்றும்
பாப க்ருத்யாம் -என்றும்
தஸ்ய பிரியா யஜ்ஜஸ் தபஸ் ஸூ க்ருதம் உபபந்தி அப்ரியா துஷ் க்ருதம் -இத்யாதிகளாலே
ஸூக்ருத சப்த வாசியான புண்யத்துடன் துஷ் க்ருத சப்த வாஸ்யமான பாபத்துடன் வாசியற-
இரண்டையும் உதறிப் பொகடும் என்றும்
ஸூக்ருதத்தை இவன் இருந்த நாளில் இவன் பக்கல் அனுகூலர் பக்கலிலும்
துஷ் க்ருதத்தை இவன் பக்கலில் பிரதிகூலித்தார் பக்கலிலும் பகிர்ந்திடும் என்று சொல்லுகையாலே
உபயமும் பாப சப்த வாஸ்யமாய் நிவர்த்தய கோடியிலே புகுமவை இறே

ஆழ்வாரும் -சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து –என்று
எள்ளில் எண்ணெயயைப் போலேயும் -ஆரணியில் அக்னியைப் போலேயும் விடாமல் பொருந்தி இருப்பதாய்
சர்வ சக்தியாலும் விடுவிக்க அரிதாம் படி வலித்தாய் இருக்கிற புண்ய பாப ரூபத்தாலே உபய விதமான கர்மங்களை
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி என்றார் இறே
வீடு திருத்துவான் -என்கிற மோக்ஷ பிரகரணம் ஆகையால்
ஐஹிகமான புத்ர பசு அந்நாதி ரூப பல ஹேதுவான புண்யத்துடன்
தாபா த்ரயாதி அனுபவ ஹேதுவான பாபத்துடன் ரௌரவாதி நரக ஹேதுவான பாபத்துடன் வாசியற
எல்லாவற்றையும் பாப சப்தத்தால் சொல்லுகிறது –

ஆக -பாப -சப்தத்தால் –
சாம்சாரிக சகல துக்க ஹேதுவாய் -நிரதிசய ஆனந்த ரூப பகவத் ப்ராப்திக்கும் -பிரதிபந்தகமான சகல கர்மங்களையும் சொல்லிற்று
ஸ்வரூப விரோதியாயும் -சாதன விரோதியாயும் -ப்ராப்ய விரோதியாயும்-பிராப்தி விரோதியாயும் –
சதுர் விதமாய் இறே விரோதி தான் இருப்பது –
அதில் ஸ்வரூப விரோதி -ப்ரணவத்தில் மத்யம பதத்தாலும் –
சாதன விரோதி-திரு மந்திரத்தில் மத்யம பதத்தாலும் -நிவ்ருத்தம் ஆயிற்று
ப்ராப்ய விரோதி -த்வயத்தில் சரம பதத்தால் நிவ்ருத்தம் ஆயிற்று
பிராப்தி விரோதி நிவ்ருத்தி சொல்கிறது இப் பதத்தாலே –

இதில் பஹு வசனத்தால்
பிராப்தி விரோதி பாஹுளயத்தைச் சொல்லுகிறது -அவை யாவன –
அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
அவித்யை யாகிறது -அஞ்ஞானம் -அது தான் ஞான அநுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -ரூபேண த்ரிவிதமாய் இருக்கும் –
ஞான அநுதயமாவது-ஒரு பதார்த்த விஷயமாக ஒரு ஞானமும் உதியாமை
அந்யதா ஞானம்-ஆவது -பதார்த்த விஷயமான ஸ்வ பாவத்தை அந்யதாவாக க்ரஹிக்கை
சம் ப்ரதி பன்னமாக ஸ்வேதமான சங்கத்தை பீதகமாய்- பிரமிக்குமா போலே
விபரீத ஞானமாவது -பதார்த்த ஸ்வரூபத்தை விபரீதமாக க்ரஹிக்கை -ரஜ்ஜுவில் சர்ப்ப புத்தி போலே
இவை மூன்றும்
ஆத்மா என்று ஒரு வஸ்து உண்டு என்று அறியாமையும்
ஆத்மா உண்டு என்று அறிந்தால் அவனை ஸ்வ தந்த்ரனாக நினைக்கையும்
ஆத்மாவானது தேகமே தான் என்று அறிகையும் –

கர்மா ஆவது
அக்ருத் கரண-க்ருத்ய அகரண-பகவத் அபசார -பாகவத அபசார -அஸஹ்யா அபசார -ரூபமாகவும்
புண்ய பாப ரூபமாகவும்
பாதகம் -அதி பாதகம் -மஹா பாதகம்
தொடக்கமான விசேஷங்களால் பஹு விதமாக -பூர்வா கோஸ்த்த ராக ரூபமாய் இருக்கும்

அக்ருத்ய கரணமாவது -சாஸ்திரங்களில் அவிஹிதமானவற்றைச் செய்கை
க்ருத்ய அகரணமாவது -விஹிதமானவற்றைச் செய்யாது ஒழிகை –
பகவத் அபசாரமாவது -பகவத் அர்ஹமான த்ரவ்யங்களைத் தான் ஜீவிக்கையும்
ஜீவிப்பார் பக்கல் சா பேஷனாயும் அயாசிதமாகவும் யாசிதமாகவும் ஜீவிக்கை யும் –
அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதி
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை தேவதாந்தரங்களோடே சமமாக நினைக்கையும்
அவனதான ஆத்மாத்மீயங்களைத் தன்னதாக நினைத்து இருக்கையும் முதலானவை –
பாகவத அபசாரமாவது
அர்த்த காம அபிமானாதிகள் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடே த்வேஷம் பண்ணுகையும்
ஞானாதிகர் ஆனவர் விஷயத்தில் ஞானத்வாரா உபாதேயர் என்று காண்கை அன்றிக்கே
ஜென்ம வ்ருத்தங்களை இட்டு குறைய நினைக்கையும்
விலக்ஷணர் – விகல கரணர் பாட பேதம் பக்கலிலே-ஷேப யுக்தி பண்ணுகையும்
அவர்கள் பக்கலிலே சஜாதீய புத்தியும் முதலானவை –
அஸஹ்யா அபசாரமாவது –
பகவத் பாகவத விஷயமான உச்சாரயங்கள் கண்டால் அசஹமானனாய்க் கொண்டு அதி வ்ருத்தி பண்ணுகை

பிரகிருதி சம்பந்தம் ஆவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீர சம்பந்தம் -இவை அடியாக வரக் கடவதான -ராக த்வேஷம் முதலானவை –
ருசி வாசனைகள் ஆவன-
குண தாரதம்யத்தாலே இந்த ஞானாதிகளைப் பற்றி வரக் கடவதான ருசியும்
அவற்றைப் பற்றி வருகிற அநாதி வாசனையும்
ஆழ்வாரும் -பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று பிரதானமான
அஞ்ஞான -அசத் ப்ரவ்ருத்தி -தேஹ சம்பந்தங்களை அருளிச் செய்து
இந்நின்ற நீர்மை -என்று தத்கதமான ருசி வாசனைகளை அருளிச் செய்து
இனி யாம் உறாமை -என்று அவை தான் பகவந் நிவர்த்த்யமாக அருளிச் செய்தார் இறே

ஆக –
பாபேப்ய-என்ற பஹு வசனத்தாலே -பிராப்தி விரோதி சகல பாபங்களையும் சொல்லிற்று –
ஆக
இவ்வளவாலே-சாதனாந்தர நிஷ்டனுடன் -சித்த சாதன நிஷ்டனுடன் -வாசியற –
சாதாரணமாக நிவர்த்திக்கப்படும் பாபங்களைச் சொல்லிற்று –

————

அநந்தரம் -சர்வ -சப்தத்தால் –
சித்த சாதன நிஷ்டனுக்கு -விசேஷ நிவர்த்த்யமான பாபத்தைச் சொல்கிறது -அதாவது
தததிகம உத்தர பூர்வாக யோரஸ்லேஷ விநாசவ் –தத் வியபதேசாத் – இதர ஸ்யாப்யே வமஸ்லேஷா -என்று
பூர்வாகத்துக்கு அஸ் லேஷத்தையும்-ப்ரமாதிகமாய்ப் பிறந்த உத்தராகத்துக்கு விநாசத்தையும் சொல்லி வைத்து
போகேநத் விதரேஷப யித்வாத சம்பத்ஸ்யதே -என்று அந்த பூர்வ உத்தராகங்களை ஒழிந்த பிராரப்த கார்யமான
புண்ய பாப ரூப கர்மங்கள் சாதனாந்தர நிஷ்டனுக்கு அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் என்று சொல்லிற்று
சித்த சாதன நிஷ்டனுக்கு அப்படி அன்றிக்கே ப்ராரப்தமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கொண்டு நிவர்த்தயாம் என்கிறது –
அதுக்கு அடி -பாப சப்த உப பதமான சர்வ சப்தத்தால் -நிவர்த்தய அம்சத்தைச் சொல்லுகையாலே –
சர்வ சப்தம் தனக்கும் சங்கோசம் இல்லாமையாலும்
மாஸூச -என்கிற சோக நிவ்ருத்தி -பாபங்களினுடைய நிரவசேஷ தியாகத்தில் அது கூடாமையாலும்
ப்ராரப்தமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –

சாதனம் பகவத் ப்ராப்தவ் ச யே வேதிஸ் திரா மதி -ஸாத்ய பக்திஸ் ஸ்ம்ருதா ஸைவ பிரபத்தி ரிதி கீயதே –
உபாயோ பக்தி ரேவதி தத் ப்ராப்தவ் யாதுசா மதி -உபாய பக்தி ரேதஸ்யா -பூர்வோக்தைவகரீயஸீ –
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசநீ -ஸாத்ய பக்திஸ் துசாஹநதரீ பிராரப்தஸ் யாபி பூய ஸீ -என்று
பகவத் ப்ராப்திக்கு பகவத் விஷயமே சாதனம் என்கிற நினைவுக்கு ஸாத்ய பக்தி என்று பெயர் –
அது பிரபத்தி என்று சொல்லப்படும் –
பகவத் பிராப்தி உபாயம் பக்தி என்கிற நினைவுக்கு உபாய பக்தி என்று பெயர் –
இதில் காட்டில் பூர்வ உக்தையான ப்ரபத்தியே ஸ்ரேஷ்டை –
உபாய பக்தியான பக்தி யோகம் பிராரப்த வ்யதிரிக்தங்களான பாபங்களைப் போக்கும் –
ஸாத்ய பக்தியான பிரபத்தி யோகம் -பிராரப்த ரூப பாபத்தையும் போக்கும் என்று சொல்லுகையாலும் –
ப்ரபத்தியானது பிராரப்த விநாசிநீ என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் –

ஆனால் பிரபன்னனுக்கு துக்க ஹேதுவான பிராரப்த சேஷம் அனுபவிக்க வேண்டுவான் என் என்னில் –
பிராரப்த கர்ம நிபந்தந சோகம் ஒழிய பிராரப்த சரீர விஷயமான சோகம் இல்லாமையால் –
உண்டாயிற்றாகில் அப்போதே நசிக்கும் -ஆகை இறே ஸ்ரீ பாஷ்யகாரர் –
ஆராப்த கார்யாந் அநாரப்த்த கார்யாம்ஸ் ச சர்வான் அசேஷத க்ஷமஸ்வ – என்று
ப்ராரப்தமும் ப்ரபத் தவ்யனான பகவான் க்ஷமிக்கத் தீருமாக அருளிச் செய்தது –

சரண்யனான ஈஸ்வரனும் -ஸ்மர்த்தா-என்று மாநாசமான -ப்ரபத்தியைச் சொல்லி
தத -என்று அதனுடைய நைரந்தர்யத்தைக் கழித்து -ம்ரியமாணம் -என்று சரீர அவசா நத்தில் பலமாகச் சொல்லி
ததஸ் சப்தத்தால் சாதகனின் காட்டில் ப்ரபன்னனுக்கு வாசி என்னும் இடத்தை ஸூசிப்பித்து
காஷ்ட பாஷாண ஸந்நிபம் -என்று அந்திம ஸ்ம்ருதிம் அந பேஷிதம் என்று –
அஹம் ஸ்மராமி-என்று அந்திம ஸ்ம்ருதியையும் தானே ஏறிட்டுக் கொண்டு
மத் பக்தன் -என்று அவனுடைய அந்தரங்கதையைச் சொல்லி
பரமாம் கதிம் நயாமி-என்று தானே ஆதி வாஹிகனாய்க் கொண்டு தேச விசேஷத்தை ப்ராபிப்பன் என்கையாலே
இவனுக்கு பிராரப்த கர்மம் அனுபவிக்க வேண்டாம் என்னும் இடத்தை அருளிச் செய்தான் –

நாவிர தோதுஸ் சரிதா ந நா சா ந தோ ந ஸமாஹிதா -ந சாந்த மாநஸோ வாபி பிரஞ்ஞா நே நைவ மாப் நு யாத் -என்று
துஷ் கர்மங்களில் நின்றும் நிவ்ருத்தன் அன்றாகிலும் இந்த பிரபத்தி ஞானத்தால்
ஞான லாபம் உண்டாகக் கடவது என்று சொல்லிற்று –
ஆகையால் பிராரப்த கர்மமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது

அதுக்கு மேலே -சர்வ தர்மான் -என்று த்யாஜ்யத்வேந விஹிதமான தர்மங்களில் உபாயத்வ புத்தி பின்னாற்றிற்று ஆகில்
அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –
அதுக்கு அடி சாதனாந்தர ஸத்பாவ பிரதிபத்தியும் அத்யந்தா பாவமாக வேணும் என்று பரி சப்தத்தால் சொல்லுகையாலே
சதாசார்ய உப திஷ்ட ஞானனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணின அநந்தரம் கர்ம ஹேதுக சரீரஸ்தன் ஆகையால்
அந்த கர்ம பராபல்யத்தாலும் அநாதி வாசனா நிபந்தனமாக புத்தி பூர்வகமாகவும் பிராமாதிகமாகவும் உண்டான பாபங்களும்
சர்வ சப்த வாஸ்யமாய்க் கொண்டு நிவ்ருத்தமாகக் கடவது

இவன் ஸ்வீ கரித்த சாதனம் பலாவ்யபசாரி யாகையாலும் -துன்ப வினைகள் என்றும் -உற்ற இரு வினையாய் என்றும்
பாவமும் அறமும் இறே உபாயபூதனனுடைய கோபமும் அருளும் ஆகையால் அவன் பொறுத்தேன் என்னத் தீருமது ஆகையாலும்
இவன் தான் பூர்வாகத்தோடு உத்தராகத்தோடு பிரார்ப்பத்தோடு வாசியற பிராப்தி விரோதி சகல அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான
இஷ்ட ப்ராப்திக்கு நிரபேஷ சாதனமாக பகவத் விஷயத்தைப் பற்றி இருக்கையாலும் சேதனகதமானவற்றில் சேஷிப்பது ஓன்று இல்லை இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் -வர்த்தமானம் வரத்திஷ்யமானஞ்ச சர்வம் க்ஷமஸ்வ -என்று
வர்த்தமான பாபத்தோடே கூட ஆகாமியான பாவத்தையும் கூட்டி அவை எல்லாவற்றையும் க்ஷமிக்க வேணும் என்று அபேக்ஷித்ததும் –
அத்தைப் பற்ற இறே உத்தராகம் அவசமாக வருமது ஆகையாலும் புத்தி பூர்வகமாக வந்தாலும் ஞானவானாகையாலே
அநந்தர க்ஷணத்தில் அநு ப்த்தனாகையாலும்
பிரபத்த்வயவனுடைய ஞான சக்தி பூர்த்திகளையும் கிருபையையும் அனுசந்தித்து அவ்வனுசந்தானத்தாலே
திருட சித்தனாம் ஆகையாலும் சர்வ சப்த அந்தர்பூதமாகக் கடவது

கால ஷேப அர்த்தமாகப் பண்ணும் அநு கொள்ள வ்ருத்திகளில் சாதன புத்தி பின்னாற்றிற்று ஆகில்
அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய
ஸக்ருத் ஏவம் ப்ரபந்நஸ்ய -என்று புந பிரபத்தி நிஷேத பூர்வகமாக ஸக்ருத் ப்ரபத்தியே அமையும் என்னா நிற்கச் செய்தேயும்
ஆபத்தசையில் கலக்கத்தாலே பிரபத்தி பண்ணினான் ஆகில் அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது
லோக ஸங்க்ரஹார்த்த ப்ரவ்ருத்திகளும் சர்வ சப்த அந்தர்பூதமாகக் கடவது

இவன் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினவன் ஆகையால் -ஏவம் பூத ஞானவான்களாய்
சித்த சாதன பரிக்ரஹம் பண்ணி இருக்கும் சாத்விக அக்ரேஸரானவர்களும் தம் தாமைப் பற்ற
விதி இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அத்தனை பாகம் இல்லாத சிஷ்ய புத்திரர்களை பற்ற நாம் இவர்கள்
உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவாகை ஒழிய நாசத்துக்கு ஹேதுவாகை ஒண்ணாது என்கிற ஆந்ரு சம்சயத்தாலே
அனுஷ்ட்டிக்க வேண்டுவன சில கர்மங்கள் உண்டு –
இவை ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்ட்டித்தாலும் ஒரு பலத்தோடு சந்திப்பிக்கக் கடவது –
அந்த பலத்தில் இவனுக்கு அபேக்ஷை இல்லாமையாலும் உண்டானாலும் அப்ராப்தம் ஆகையாலும்
அதுவும் பாபமே ஆகையால் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –

ஆக -சர்வ பாபேப்யோ -என்று
அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள்
பூர்வ உத்தராக ப்ராரப்தங்கள்
சரீர சம்பந்த நிபந்தனமாகவும்
அபிமான நிபந்தனமாகவும்
ஆந்ரு சம்சயத்தாலும் வரக்கடவதாய்
பிராப்தி விரோதமான சகல பாபங்களையும் சொல்லிற்று

அங்கன் அன்றியிலே
பாபேப்ய-என்கிற பஹு வசனத்தில் சர்வ பாபங்களும் உபாத்தமாயிற்றாய்
சர்வ சப்தத்தால் இவை எல்லாவற்றையும் என்று சாகல்ய பரமாகவும் சொல்லுவார்கள்

பாபங்களிலே சிறிது கிடப்பது பிரபத்தவ்யன் குறையால் யாதல்
பிறப்பத்தாவின் குறையால் யாதல் ஆக வேணும் இறே
அஹம் சப்த யுக்தமான ஞான சக்த்யாதிகளில் குறை இல்லாமையால் பிரபத்தவ்யன் பக்கலிலே குறை இல்லை
த்வா -என்கிற இடத்தில் தியாக ஸ்வீ காரங்களில் வைகல்யம் இல்லாமையால் பிரபத்தாவின் பக்கலிலே குறை இல்லை

————————–

மோக்ஷயிஷ்யாமி -என்று
ஏவம் ரூப சகல பாபங்களினுடையவும் நிவ்ருத்தி பிரகாரத்தைச் சொல்கிறது –
மோக்ஷயிஷ்யாமி-
யாவை சில பாபங்கள் நிமித்தமாக நீ பயப்படுறாய் -அந்த பாபங்கள் தானே உன்னை விட்டு போம்படி பண்ணுகிறேன்
இதில் -தாத் வர்த்தத்தாலேஅவை தான் என்னைப் பற்றின ராஜ குல சம்பந்தத்தால்
இவன் நமக்கு ஆஸ்ரயம் அன்று என்று கள்ளர் பட்டது பட்டுப் போம் என்றபடி –

அதாவது –
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -என்கிறபடியே –
ஆகாசத்தில் கரந்து கிடக்கிறதோ -சமுத்திர ஜலத்தில் கரைந்து போயிற்றோ -காற்றோடு பரந்து போயிற்றோ –
நெருப்பிலே புக்கு வெந்து போயிற்றோ -மஹா பிரஸ்தானம் போயிற்றோ –
கண்ட கே நைவ கண்டகம்-என்னுமா போலே கன்றாய் வந்த அஸூரனைக் கொண்டு விளாவாய் வந்த அஸூரனை
நிரசித்தவனுடைய திருவடிகளில் தலை சாய்த்த அளவிலே அநாதி காலம் என்னைக் குடிமை கொண்டு போந்த
வலிய பாபங்களைப் பார்ஸ்வத்திலும் கண்டிலோமீ என்று ஆஸ்ரய பூதனான இவனும் அறியாதபடி போகை–

நின்னுள்ளேனாய்ப் பெற்ற நன்மை -என்று நாம் பகவத் ரஷ்ய பூதர் என்கிற அனுசந்தான மாத்திரத்தாலே
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தன -என்கிறபடியே அநாதி கால ஆர்ஜிதமான மஹா பாபங்கள் எல்லாம்
காடு பாய்ந்து போயிற்று என்னா நின்றது இறே

யதை ஷீ கா தூல மக்நவ் ப்ரோதம ப்ரதூயேத ஏவம் ஹாஸ்யா ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -என்றும்
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கை -மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புக்கு
தரு வா நின்றனவும் தீயினில் தூசாகும் -என்கிறபடியே –
வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் சரண் -என்று நினைக்க
பூர்வ உத்தராக ப்ராரப்தம் முதலான சகல பாபங்களும் நெருப்பினால் போட்ட பஞ்சு போலே
பிணம் காண ஒண்ணாதபடி தக்தமாய் போம் என்கிறது

இதில் -ணி-ச்சாலே –
உபாய பூதனான ஈஸ்வரனுக்கு இந்த பாப விமோசனத்தில் ப்ரயோஜக கர்த்த்ருத்வம் ஒழிய
ஸ்வயம் கர்த்த்ருத்வம் இல்லை -ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் போலே தானே விட்டுப் போம் என்கிறது

இவை தான் விட்டுப் போகையாவது-புகுந்து கழிந்தது என்று தெரியாதபடி போகை -அதாவது
இவை ஸ்ம்ருதி விஷயமானாலும் -ஸ்வ நிர்ப்பரத்வ அநு சந்தானத்தாலே இவன் நிர்ப்பயனாம் படி போகை
மோக்ஷயிஷ்யாமி -என்கிற இடத்தில்
பவிஷ்ய தர்த்த ஸூ சகமான வசனம் பல விளம்பம் சொல்லுகிறது அன்று
ஏதத் கர்ம கரிஷ்யாமி -என்கிற இடத்தில் தாத் காலிகமான சங்கல்பத்துக்கு வாசகமாகிறாப் போலே
சத்ய காலீந விரோதி நிவ்ருத்தியில் சங்கல்பத்தைச் சொல்கிறது –
உபாய பூதனுடைய இந்த சங்கல்ப மாத்திரத்தாலே பிராப்தி விரோதி சகல பாபங்களும் போம் என்கையாலே –
பாபங்களாவன–பகவந் நிக்ரஹ ரூபமாய் இருப்பது ஒன்றாய் அவன் ஷமித்தேன் என்னத் தீரும் என்னும் இடம் தோற்றுகிறது –
சேதனன் பண்ணின கர்மங்கள் அப்போதே நசிக்கும் –
கிரியாவானவன் அஞ்ஞன் ஆகையால் மறக்கும் –
சர்வஞ்ஞனானவன் ஈஸ்வரனுடைய ஹ்ருதயத்தில் கிடந்து இறே இவை பல பர்யந்தம் ஆவது –
நிருபாதிக ரக்ஷகனான ஈஸ்வரன் -நீ என்னைக் கைக் கொண்ட பின் -என்கிறபடியே
இவனை ரஷ்யத்வேந அங்கீ கரித்த அன்று அவனைப் பொறுத்த போதே தீருமே -ஆகை யிறே
சர்வம் க்ஷமஸ்வ -என்றும்
கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு -என்றும் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்தது –
ஆகையால் இவனுடைய பூர்வாகத்தை க்ஷமித்து உத்தராகத்தில் அ விஞ்ஞாதவாய் இருக்கும்
ஆகையால் பாபங்கள் எல்லாம் பகவத் சங்கல்ப மாத்திரத்திலே நிவ்ருத்தமாம் என்றது ஆயிற்று –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இருப்பவை பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்து -என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடத்தின திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தையில் சொல்லுகிற சித்த சாதனத்தைப் பற்றினவர்களுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி பலமாய் இருக்க
ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்று ஜரா மரணாதி ஆஸ்ரயமான சரீர விமோசன மாத்ரத்தையே
பலமாக இழிந்த கேவலனைப் போலே விரோதி நிவ்ருத்த மாத்ரத்தையே பலமாகச் சொல்லுவான் என் –
சேஷத்வ ஞான பூர்வகமாக உபாய வரணம் பண்ணின இவ்வதிகாரிக்கு இஷ்ட ரூபமான கைங்கர்ய லாபமே பிரதான பலமாய் –
தத் சித்திக்காக விரோதி நிவ்ருத்தியும் அப்ரதான பலமாய்க் கொண்டு வருமதாய் இருக்க என்னில்

இவ்வுபாய வரணம் பண்ணின இவ்வதிகாரியுடைய பகவத் கைங்கர்யார்த்தித்தவம் ஆகிற முமுஷுத்வத்தாலும் –
பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ரூப ஞான பூர்வகமாக தத் அநு ரூப உபாய வரணம் பண்ணினவன் ஆகையாலும் –
இவன் ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஏவம் ரூப சேஷத்வமே நிலை நின்ற வேஷமாய் இங்கு நிவர்த்த்யமாகச் சொல்லுகிற
அவித்யாதிகள் வந்தேறி யாகையால் -அந்த விரோதி நிவ்ருத்தமானால் -மம சஹஜ கைங்கர்ய விதய-என்று
ஸ்வரூபத்துக்கு சகஜமாய் உபாய பலமாய் இவனுக்கு அபிமதமான கைங்கர்யம் -ஆவிஸ்ஸ்யு -என்கிறபடியே
தன்னடையே ஆவிர்ப்பவிக்கும் அதாகையாலும் மல யோகத்தால் மழுங்கின

மாணிக்கத்தை மாசறக் கடைந்தால் ஸ்வதஸ் ஸித்தமான ஓளி பிரகாசிக்குமா போலே
ஸ்வா பாவிகமான கைங்கர்யமும் பிரகாசிக்கும் ஆகையால் விரோதி நிவ்ருத்தியே பிரதானம் என்கிற ஆகாரம் தோற்ற
பிரதான பலமான கைங்கர்யம் சொல்லாதே தத் அங்கமான விரோதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று

சேஷோஹி பரமாத்மந -என்று சேஷித்வேந பிரசித்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அவித்யாதிகளான விரோதிகள்
வந்தேறி என்னும் இடம் தந் நிவ்ருத்தியே பிரதானம் என்னும் இடம் சொல்லுகிறது –
யதா ந க்ரியா தேஜ்யோத் ஸ்நா மல ப்ரஷாள நாந மணே-தோஷ ப்ராஹாணாந் நஞ்ஞாந மாத்மந க்ரியதே ததா
யதோத பாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் – ஸ்தேவநீய தேவ்யக்தி ரசதஸ் சம்பவ குக-
ததா ஹேய குணத்வம் சாதவ போதாதயோ குணா -பிரகாச யந்தே ந ஜன்யந்தே நித்யா யே வாத்மநோஹி தே -என்று
யாதொரு படி ரத்னத்துக்கு ஆகந்துகமான அழுக்கைப் போக்குகிற இத்தால் ஸ்வா பாவிகமான ஒளியைப் பிரகாசிப்பிக்கிறது ஒழிய
அபூர்வமான ஒளியை உண்டாக்குகிறது இன்றிக்கே ஒழி கிறது
அப்படியே ஆத்மாவுக்கு வந்தேறியான தோஷத்தை போக்குகிற இத்தால் ஸ்வா பாவிகமான ஞானத்தை பிரகாசிக்குமது ஒழிய
முன்பு இல்லாத ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது அன்று என்றும் –
யாதொருபடி கிணற்றைக் கல்ல ஜலமும் ஆகாசமும் அப்போது உண்டாகிறது அன்று இறே –
பூர்வமாக உள்வாயில் கிடக்கிறவற்றை பிரகாசிப்பிக்கிறது –
அப்படியே ஹேய குணங்கள் கழிகையாலே ஞானாதி குணங்கள் பிரகாசிக்கின்றன –
அவை ஆத்மாக்களுக்கு நித்யங்கள் அன்றோ இருப்பன என்றும் சொல்லிற்று

பகவச் சாஸ்த்ரத்திலும் –பூர்வம் முக்தா காம பந்தைர் மத்தேச பிராப்தி பூர்வகம் -நிஸ் சங்கோசா பவந்த்யேதே
மம சாதரம்யம் ஆகதா –ஆவிர்ப்பூதஸ் ஸ்வரூபாஸ் ச வித்வஸ்த அசேஷ கல்மஷ–
ஸமஸ்த ஹேய ரேதவம்சாத் ஞான ஆனந்த்தாத்யோ குணா -பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நிக்யாஹ் யாத்மகுணாஸ் சதே–என்று
ஸமஸ்த பிரதிபந்தக கர்மங்களாலும் முக்தராய் -நம்முடைய தேசத்தைப் பிராபித்து நம்மோடே சாதரம்யம் பெற்றவர்கள்
முன்பு சங்குசிதமான ஞானாதிகள் பிரகாசிக்கையாலே நிஸ் சங்கோசர்கள் ஆவார்கள் என்றும்
அசேஷ பாபங்களும் வித்வஸ்தங்களாய்ப் போகையாலே ஆவிர் பூதமான ஸ்வ பாவத்தை உடையவர்கள் என்றும் –
ஸமஸ்த ஹேயங்களும் கழிகையாலே ஞானாந்த குணங்கள் பிரகாசின்றன அத்தனை -உண்டாக்குகின்றன அன்று என்றும்
ஆத்மாவுக்கு நித்யங்களான குணங்கள் இ றே அவை என்று பகவான் தானே அருளிச் செய்தான்

ஸ்ருதியிலும் -பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ் பத்யதே
என்று பரஞ்சோதியைஸ் யைக் கிட்டினால் ஸ்வா பாவிகமான ஸ்வரூபம் பிரகாசிக்கும் என்று சொல்லிற்று இறே –
சம்பத்ய ஆவிர்பாவஸ் ஸ்வேந சப்தாத் -என்று ஸூத்ரத்திலும் சொல்லிற்று
ஆகையால் பிரதான பலம் இஷ்டபிராப்தி கைங்கர்யமே யாகிலும் -அதுக்கு
விரோதி நிவ்ருத்தி மாத்திரமே அபேக்ஷிதமாகிற ஆகாரத்தாலே பிரதானமாக விரோதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று

கேவலனுக்கு விரோதி நிவ்ருத்தி யானவாறே-பகவத் பிராப்தியும் -அனுபவமும் -அனுபவ ஜெனித ப்ரீதியும் –
ப்ரீதி காரித கைங்கர்யமும் -உண்டாகாது ஒழிவான் என் என்னில்
யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே -என்று கைங்கர்ய அர்ஹமான சேஷத்வ ஞானம் உடையவனாய்
தத் கார்யமான ஸ்வரூப பாரதந்தர்யத்தை அனுசந்தித்து தத் அனுரூபமான புருஷார்த்த அபேக்ஷையும் பண்ணி
தத் அனுரூப உபாய வரணமும் பண்ணுகை அன்றிக்கே
பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று -என்கிறபடியே ப்ரக்ருதி விநிர்முக்தாத்ம ஞான மாத்திரத்திலே நின்று
மின்மினி போல் தோற்றுகிற தன்னைக் கண்டு கொண்டு இருக்கிற அளவிலே புருஷார்த்தமாகச் சொல்லுகையாலே
அவனுக்கு பகவத் அனுபவமும் தத் ப்ரீதியும் ப்ரீதிகாரித கைங்கர்யமும் உண்டாயிற்று இல்லை –
அல்லது ஆத்மாவுக்கு கைங்கர்யம் ஆகிற புருஷார்த்த பிரார்த்தனை ஸ்வா பாவிக ஆகாரம் அல்லாமை அன்று

சேஷ பூதனுக்குக் கைங்கர்யம் சகஜம் -ஞாதாவுக்கு தத் பிரார்த்தனை சகஜம் -ஆயிருக்க
கேவலனுக்கு இந்த ஞானம் பிறவாது ஒழிந்தது சேஷியான ஈஸ்வரனுடைய இச்சாதீனமான விநியோகம் ஒழிய
ஸ்வாதீனமாக வருவது ஓன்று இல்லாமையால்
இஷ்ட பிராப்தி ரூபமான பகவத் அனுபவத்துக்கும் அர்ஹதா மாத்திரமே இவனுக்கு உள்ளது –
சேஷியானவன் அனுபவிக்கும் போது அல்லது அனுபவிக்க ஒண்ணாதே -ஆகையிறே
க்ரியதாம் இதி மாம் வத-என்றும் -கூவிக் கொள்ளாய் -என்றும் பிரார்த்தித்தும் -சர்வம் கரிஷ்யாமி -என்கிற
சங்கல்பத்து அளவில் நின்றதும் -ஆகையால் கைங்கர்யம் ஆத்மாவுக்கு சகஜமே யாகிலும்
தத்ரிரோதாயகமான விரோதியைப் போக்கிக் கைங்கர்யத்தை பிரகாசிப்பிக்கிறான் ஈஸ்வரனே என்கிறது –

ஆக ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று உபாய க்ருத்யம் சொல்லுகிறது

அன்றியிலே
மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு – மாமேவைஷ்யசி சத்யந்தே ப்ரதிஜாநே ப்ரியோஸிமே –என்று
என் பக்கலிலே நெஞ்சை வை -என்னையே ஸ்நேஹ பூர்வகமாக இடைவிடாமல் த்யானம் பண்ணு –
ஸர்வ கர்மங்களாலும் என்னையே ஆராதி-என் பக்கலிலே சமர்ப்பித்த ஸர்வ பரனாய்க் கொண்டு நமஸ்ஸைப் பண்ணு –
அநந்தரம் என்னையே அடையக் கடவை -நீ எனக்கு பிராப்யன் ஆகையால் உனக்கு சாத்தியமே ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் -என்று
கீழ்ச் சொன்ன ஸ்வ பிராப்திக்கு ஒரு ஸூகர சாதனத்தை விதிக்கிறது ஆகையால்
இஸ் ஸ்லோகத்தில் தனித்துப் பலம் சொல்லாதே அதுக்கு அபேக்ஷிதமான விரோதி நிவ்ருத்தி அங்குச் சொல்லாமையாலும்
இவ்வுபாய விசேஷ ஸ்வீ காரம் பண்ணின அதிகாரிக்கு விசேஷண நிவர்த்த்யமான விரோதி வேஷம் சொல்ல வேண்டுகையாலும்
பாபேப்யோ என்கிற பதத்தாலும்
ஸர்வ சப்தத்தாலும் –அந்த விரோதிகளைச் சொல்லி
மோக்ஷயிஷ்யாமி -என்று அவற்றினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்னவுமாம்

ஆக -அஹம் -என்று சொன்ன
உபாய பூதனுடைய க்ருத்யம் சொல்லிற்று-

—————

அநந்தரம் -த்வா -என்று நிர்த்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்ய லேஸம் சொல்லுகிறது
மாஸூச –என்று
மாஸூச –
சோகியாதே கொள் என்று விதிக்கிறது –
இத்தால் -வ்ரஜ -என்கிற விதியோபாதி சோக நிஷேத விதியும் கர்த்தவ்யம் என்னும் இடம் தோற்றுகிறது –

இனி சோகிக்கை யாவது
அநிஷ்ட நிவ்ருத்த ரூப பலத்துக்கு ஸ்வ இதர சகல ஸஹாய அஸஹமாய் வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
ஞானாதி குண விசிஷ்டமாய் இருக்கிற வஸ்துவை உபாயமாகப் பற்றி ஸ்வ பரங்களையும்
அவன் பக்கலிலே ந்யஸித்து நிற்கிற நிலைக்கு விருத்தம் இறே

ஆகையால் பிரணவத்தில்-பகவத் ஏக ரக்ஷ்ய பூதனாகவும் -பகவத் அநந்யார்ஹ சேஷ பூதனாகவும் -சொல்லப்பட்ட
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வ நிபந்தனமாக வருகிற ஸ்வ ரக்ஷகத்வ அபிமானத்தையும் -ஸ்வ சேஷித்வ அபிமானத்தையும் –
ஸ்வ ஸ்வாமித்வ அபிமானத்தையும் –
ஞானவாசி தாத்வ ஆஸ்ரயமான ஷஷ்டி அந்த மகாரத்தாலே அதை நிஷேதிக்கிற இடத்தில் நிஷேத்ய வாசியான
மகாரத்துக்கு முன்னே நிஷேத அக்ஷரமான ந காரம் முற்பட்டால் போலேயும்
புருஷார்த்தத்தில் ஸ்வ கீயத்வாதி நிஷேதம் பண்ணுகிற நமஸ் சப்தம் கைங்கர்ய
பிரார்த்தானா வாசி பதத்துக்கு முற்பட்டால் போலேயும்

ஸர்வ தர்ம பரித்யாகம் சொல்லுகிற இடத்தில் த்யாகத்தினுடைய வத்யநதா பாவத்தில் அல்லது
ஸ்வரூப பூர்த்தி இல்லாமையாலும் –
ஸ்வீ கார உபாயத்துக்கு உதயம் இல்லாமையாலும் தத் வாசகமான பரி சப்தம் தியாக சப்தத்துக்கு முற்பட்டால் போலேயும்
வ்ரஜ என்கிற விஹிதமான யுபாய ஸ்வீ காரம் சித்த உபாய விஷயமான பிரதிபத்தி மாத்ரமாய் –
தானும் உபாயமும் இன்றிக்கே ஸஹ காரியும் இன்றிக்கே ஒழிகையாலே
தத் வ்யாவர்த்தகமான -ஏக-பதம் ஸ்வீ கார விதானம் பண்ணுகிற வ்ரஜ என்கிற பதத்துக்கு முற்பட்டால் போலேயும்
ந்யஸ்த பரனான இவனுக்கு உண்டான சோக உதயமும்
ஸ்வ பல அன்வயத்தையும் ஸ்வ ரக்ஷண அன்வயத்தையும் காட்டும் ஆகையால்
சோகம் பிரஸ்த்துதம் ஆவதற்கு முன்பே நிஷேத அக்ஷரம் முற்படுகிறது

ஸ்வ கத ஸ்வீ காரம் -உபகார ஸ்ம்ருதியும் -ஸ்வரூப விருத்தமாய் –
பர ஸ்வீ கார விஷயத்துவமும் பரபல ப்ரபத்தியுமே ஸ்வரூபாயவாம் படி இறே
ஸ்வரூப யாதாத்ம்யத்தைப் பார்த்தால் இருப்பது –
ஆகையால் இவ்வதிகாரிக்கு யாவத் பல பிராப்தி நிர்ப்பரனுமாய் நிர்ப்பயனுமாய் இருப்பதே
கர்த்தவ்யம் என்கிறது -அதாவது
தன்னுடைய பாரதந்தர்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனனுடைய -ஞான சக்த்யாதி குண அனுசந்தானத்தாலும்
நிர்ப்பரனாய் இருக்கையும் -தான் சேஷபூதன் ஆகையால் பலித்வம் இல்லை –
பரதந்த்ரன் ஆகையால் உபாய கர்த்ருத்வம் இல்லை
பல அலாப நிபந்தனமாகவும் -உபாய அபாவ நிபந்தனமாகவும் சோகிக்க பிராப்தி இல்லை –
உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில் அவற்றினுடைய துஷ் கரத்வ
ஸ்வரூப அநநு ரூபத்வாதி தோஷங்கள் அறிந்திலனாயும்
இவற்றினுடைய தியாகத்தில் அல்லது சித்த உபாயம் அந்வயம் உண்டாகாது என்னும் இடம்
அறிந்திலன் ஆகில் உபாய அதிகாரம் இல்லை –
சித்த உபாய ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில் அவனுடைய சஹாயாந்தர அஸஹத்வமும் ஸ்வரூப ப்ராப்தயையும்
முதலான குணங்களையும் அறிந்திலன்
அதில் தனக்கு கர்த்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லை என்கிற ஆகாரமும் அறிந்திலன் ஆகில் உபேய அதிகாரம் இல்லை

ஆகையால்
முன்புற்றை சோக அனுவ்ருத்தி ஸாத்ய சாதன யாதாத்ம்ய ஞான கார்யம் –
பின்புற்றை சோக நிவ்ருத்தி -சித்த சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்
சித்த உபாய ஸ்வீ கார அநந்தரம் சோகம் அநு வர்த்திக்கிறது ஆகில் தியாக ஸ்வீ கரத்தில் அந்வயம் இல்லை –
துஷ் கரங்களாய் -ஸ்வரூப விருத்தங்களான சாதனாந்தரங்களினுடைய தர்சனமும்
ஸூ கரமுமாய் ஸ்வரூப அநு ரூபமான சாதன அதர்சனமும் தத் சாபேஷதையும் வ்யவஹிதத்வமும் அதில் அருமையும்
அசாமர்த்யமும் ஸ்வீ கர்த்தாவினுடைய கிஞ்சநதையும் -விரோதி பாஹுல்யமும் தன் நிவ்ருத்தியில் சக்தியும் இறே சோக காரணம்
இவை இல்லாமையால் சோகிக்க வேண்டா என்கிறது -எங்கனே என்னில்

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று -துஷ்கரத்வாதி தூஷித சாதனாந்தரங்களை த்யஜிக்கச் சொல்லுகையாலே
சாதனாந்தர தர்சனம் அடியாக சோகிக்க வேண்டா
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸூகர சாதனத்தைப் பற்றச் சொல்லுகையாலே அனுரூப சாதன
அதர்சன நிபந்தனமாக சோகிக்க வேண்டா
மாம் -என்று வாத்சல்யாதி குண விசிஷ்டனாகச் சொல்லுகையாலே ஸ்வ தோஷம் அடியாகவும் –
அவனுடைய அப்ராப்தி அடியாகவும் -தன்னுடைய தண்மை அடியாகவும் –
அவனுடைய துர் லபத்வம் அடியாகவும் சோகிக்க வேண்டா –
ஏகம் -என்று நிரபேஷமாகச் சொல்லுகையாலே சாபேஷதை அடியாக சோகிக்க வேண்டா
சரணம் -என்று -அவ்யவஹிதமாக சாதனமாகச் சொல்லுகையாலே வ்யவஹிதம் என்று சோகிக்க வேண்டா
வ்ரஜ -என்று மானஸ வியாபாரமாகச் சொல்லுகையாலே அருமை அடியாக சோகிக்க வேண்டா
அஹம் -என்று ஞானாதி குண பூர்ணமாகச் சொல்லுகையாலே அசாமர்த்யம் அடியாக சோகிக்க வேண்டா
அதில் சர்வஞ்ஞத்வத்தாலே நிவர்த்த அம்சமும் ப்ராப்தவ்ய அம்சமும் அறியான் என்று சோகிக்க வேண்டா
அவாப்த ஸமஸ்த காமனாகையாலே அபூர்த்தி அடியாக சோகிக்க வேண்டா
ஸ்வாமி யாகையால் அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா
கிருபாவத்தையாலே கார்யம் செய்யுமோ செய்யானோ என்று அஞ்ச வேண்டா
த்வா -என்று ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகையாலே ஸ்வ ரக்ஷண அந்வயம் அடியாக ரஷிக்க மாட்டான் என்று சோகிக்க வேண்டா
ஸர்வ பாப விமோசகன் ஆகையால் விரோதி பாஹுல்யம் அடியாக சோகிக்க வேண்டா
மோக்ஷயிஷ்யாமி -என்று அவை தானே விட்டுப் போம் என்கையாலே நிவ்ருத்தியில் சக்தி அடியாக சோகிக்க வேண்டா

ஆக
துஷ் கரத்வாதி தோஷ தூஷித சாதனாந்தரங்களை த்யஜித்து வத்சல்யனுமாய் -ஸ்வாமியுமாய் -ஸீலவானுமாய் -ஸூலபனுமாய் –
நிரபேஷனுமாய்-பரம ஆப்த தமனுமாய் -நிரவதிக தாயாவானுமாய் -இருக்கிற என்னைப் பற்றுகையாலும்
சக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவ அன்யதிஷ்யதே -என்று என்னையே நிரபேஷ உபாயமாகப் பற்றின உனக்கு
கர்தவ்ய அம்சம் இல்லாமையாலும் -சர்வஞ்ஞாதி குணாகனான நான் உன்னுடைய அவித்யாதி சகல பாபங்களையும்
மறுவலிடாத படி போக்கி அசங்குசிதமான அனுபவ கைங்கர்யங்களில் அந்வயிப்பித்து
ஆனந்த நிர்ப்பரனாம் படி பண்ணுகிறேன் என்கையாலும் ஒரு பிரகாரத்தாலும் சோகிக்க ஹேது இல்லை
நீ உன்னுடைய ஸர்வ பரங்களையும் என் பக்கலிலே வைத்து வாழும் சோம்பனாய்-செயல் தீரச் சிந்தித்து வாழ்ந்து
கண்ணனைத் தாள் பற்றிக் கேடு இன்றிக்கே இருக்கையாலே உன்னைப் பார்த்தால் சோகிக்க ஹேது இல்லை –
சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் ஜன்ம சன்மாந்தரம் காத்துத் தாளிணைக் கீழ் கொள்ளுமவனாய்-
இரு வல் வினைகளையும் சரித்து -வீடு திருத்தி விசும்பு ஏற வைக்கப் பாரிக்கையாலே
என்னைப் பார்த்தாலும் சோகிக்க ஹேது இல்லை
துன்பமும் இன்பமுமாகிய செய் வினையாய்
உற்ற இரு வினையாய்
நல்வினையும் தீ வினையுமாவன் -என்கிறபடியே
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களாய்
வினை பற்று அறுக்கும் விதியான நம்முடைய அதீனமாய் நாம் பொறுத்தோம் என்னத் தீருமதாகையாலே
விரோதியைப் பார்த்தாலும் ஹேது இல்லை –

இனி சோகித்தாயாகில்-நமக்கு சேஷமும் பரதந்த்ரமுமாய் -அத ஏவ -பல சாதனங்களில் அந்வயம் இன்றிக்கே இருக்கிற
உன் ஸ்வரூபத்தையும் அழித்து உன்னையும் பலியுமாக்கி ஸ்வ தந்திரனாயும் கொண்டு
ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் நில்லாதப் போலே ஹேயப்ரத்யநீகனான நம்முடைய சந்நிதியில்
ஹேயம் இல்லாது என்கிற நம் ப்ரபாவத்தையும் அழித்தாயாவுதி

ஈஸ்வரோஹம் அஹம் போகி-என்று அஹங்கார மமகார தூஷிதனாய் -ந நாமேயம் என்று மமக தூஷிதனாய் –
ரக்ஷகனான நானே ஷிபாமி -ந ஷமாமி -என்னும்படி பண்ணிக் கொண்டு அதுக்கு அடியான
பாபம் மூர்த்த அபிஷிக்தமாய் இருக்க சோகியாது இருந்த அறிவு கேட்டோபாதி போரும்–
நீயும் என் பக்கலிலே ந்யஸ்த பரனாய் -நானும் உன் கார்யம் எனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டு
சகல பாபங்களையும் போக்குவேன் ஆனபின்பு சோகிக்கையும்

சோகித்தாய் ஆகில் நீ பண்ணின பர ந்யாஸமும் வ்யர்த்தமாய் நான் பாப விமோசனம் பண்ணுகிறேன் என்றதும் நிரரார்த்தமாய்
உன் காரியத்துக்கு நீயே கடவையாய் பழைய பாப பல அனுபவமும் நீயுமாய் விடுவுதி
ஆனபின்பு சோகத்தை விட்டு நிர்ப்பரனுமாய் நிர்ப்பயனுமாய் மத் ப்ராப்தியிலே நிஸ் சம்சயனுமாய்க் கொண்டு
ஸூகமே இரு என்றதாயிற்று

ஆக
த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்
தியாகம் ஸ்வீ காரம் என்னும் இடத்தையும்
ஸ்வீ கார்யமான உபாயத்தை சீர்மையும்
தந் நைரபேஷ்யத்தையும்
உபாயத்வம் ஓவ் பாதிகம் அன்று நிருபாதிகமே என்னும் இடத்தையும்
ஸ்வீ காரம் மாநஸம் என்னும் இடத்தையும்
உபாயம் ஸர்வ சக்தி யுக்தம் என்னும் இடத்தையும்
அதிகாரியுடைய ஆகிஞ்சன்யத்தையும் –
நிவர்த்த்யமான பாபங்களையும்
தத பாஹுல்யத்தையும்
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும்
அதிகாரியினுடைய நிர்ப்பர-நிர்ப்பயத்வங்களையும் சொல்லித் தலைக் காட்டுகிறது

ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் முற்றிற்று

ஸ்ரீ திருவரங்கச் செல்வனார் என்னும் ஸ்ரீ பரகாலார்யர் அருளிச் செய்தவை ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் என்னும் இந்த ஸ்ரீ கிரந்தம்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: