Archive for September, 2019

ஸ்ரீ கோதை நாய்ச்சியார் தாலாட்டு

September 28, 2019

ஸ்ரீ வில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு புதல்வியான
ஸ்ரீ ஆண்டாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் ஸ்ரீ திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்புச் செய்யுள்–

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணு மென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனைய ர்கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங் கமுகு மா வாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பா மாலை பாடி மணி வண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனு தினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக் கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண்டிசை பாடச் 25

செண்பகப் பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடை பயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம்புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழையிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளி கூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள்விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விட்டு சித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப்பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண்வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணிவண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்துதான் செல்லுமென்றார்
சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலேதான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசையென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணேயென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மாமகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்குவந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதேநீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூமகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென்புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத்புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண்மணியே!
வாழைகளுஞ் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ்புதுவை காக்குமெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலைமுறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டுசித்தன் அமுதுமலர் தொடுத்துவைக்கத்
தொடுத்துவைத்த மலரதனைச் சூடியே நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டுசித்தர் அநுட்டான முதல்செய்து 145

எப்போதும் போல்கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்துவைத்த மாலைதன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில்கி லேசங்கொண்டு
என்னரசி கோதை குழல்போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான்பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான்கூப்பித் 155

துன்றிவளர் கோதையரும் சூட்டியே தானும்வைத்தாள்
அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நாமுமக்குச் சாத்தவந்தேன்
என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன்மகளும் பூச்சூடி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும்
இன்றுமுதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக்
கோதை குழல்சூடிக் கொணர்வீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! 170

என்றுரைக்க மணிவண்ண னேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடுவேற்கண் மையெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேட்க
அப்போது விட்டுசித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர்சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர்
இவர்கள் பதியன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத்தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ்வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லாநோன்பு உகந்துதா னேற்கவென்று
மணிவண்ண னைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேட்க
மகிழ்ந்து மணிவண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பிரியமாய்த் தான்கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான்நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான்குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம்புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார்மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள்முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வான்
என்றுசொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில்மேகங்கள் அரங்கருக்குத் தூதுவிட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்யவட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன்
என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கிச்
சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம்வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப்போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார்
நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடிச்
சென்று திருவரங்கந் திருக்கோயில் தான்புகுந்து
ஒருமனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான்தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியைவிட்டு
எப்போது மைய ரிணையடியைத் தான்தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிநீர் வண்ண அழகாய் மணம்புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர்தமை
மன்றல்செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம்புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்து 245

தப்பாமல் நான்வருவேன் சீர்கோதை தன்னோடும்
என்றுசொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்யவென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்யவென்று 250

ஓலையெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பலாதூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம்போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர்கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம்பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன்மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பலவோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும்வைத்து
நாரணனைப் போற்றி நான்மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின்கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான்பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவைநகர் மாமறையோர் தாம்வாழி!
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஏழாம் பாசுரம் –

September 28, 2019

சேதனர் எல்லாருக்கும் செய்ய அடுப்பது -அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகையாய் இருக்க –
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து -சம்சார பந்தம் வர்த்திக்கும் படி பண்ணா நிற்பார்கள் –
இது என்ன படு கொலை –
இவ் வனர்த்தம் என்னால் பொறுக்கப் போகிறது இல்லை -என்றார் கீழ்

அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் –
நாம் முந்துற முன்னம் இவ் வனர்த்தத்தைத் தப்பி
இவ் வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்

நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று
ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –

அவன் சர்வ பதார்த்தங்களையும் திரு வயிற்றிலே வைத்து நோக்குகிற போது-
நம்மோடு ஓக்க அவன் திரு வயிற்றிலே புக்குப் புறப்பட்டவர்களிலே சிலரை ஆஸ்ரயித்து –
பலத்துக்கு அவர்கள் கை பார்த்து இருக்கையாகிற இப் புன்மை இன்றிக்கே ஒழியப் பெற்ற
இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-

அல்லாத திவ்ய பிரபந்தங்களை-
அந்தாதி ஆக்கிக் கொண்டு போந்த இவர்
இத்தை அந்தாதி ஆக்க மாட்டாதே
உகப்புக்கு இதுக்கு மேற்பட்ட இல்லாமையால் இவ் வனுபவத்தோடே தலைக் கட்டுகிறார்-

இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் உகப்பின் மிகுதியால்
மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் என்றவாறு

நளிர் மதிச் சடையானும் என்று தொடங்கி
யாவையும் யுலகமும் யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ

நளிர் மதி சடையனும் நான் முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

நளிர் மதி சடையனும் -குளிர்ந்த சந்திரனை தலையிலே தரித்துள்ள ருத்ரனும்
நான் முகக் கடவுளும்-நான்கு முகங்களுடைய பிரமனும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா-தளிர் போன்ற அழகிய தேஜஸ்ஸை யுடைய தேவர்கள் அதிபதி இந்திரன் இவர்கள் முதலான
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட-எல்லா விதமான லோகங்களும் எல்லா சேதனர்களும் உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமியும் ஜலமும் அக்னியும் காற்றும் தேஜஸ்ஸினால் வியாபிக்கப்பட்டுள்ள ஆகாசமும்
மலர் சுடர் பிறவும் -மலர்ந்த கிரணங்களை யுடைய சந்த்ர ஸூரியர்களும் மற்றும் உள்ள வஸ்துக்களும்
சிறிதுடன் மயங்க-ஒரே காலத்தில் வயிற்றில் ஏக தேசத்தில் சேரும்படி
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்-ஒரு வஸ்துவும் வெளிப் படாதபடி எல்லா வற்றையும்
அகப் படக் கரந்து -உள்ளே இருக்கும் வண்ணம் உண்டு வயிற்றிலே மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த -ஓர் ஆலின் இலை மேல் நித்திரை செய்யுமவனாய்
எம் பெரு -என்னுடைய ஸ்வாமியாய் -பெரியவனாய் –
மா மாயனை அல்லது-அளவிட்டு அறிய முடியாதவனாய் ஆச்சர்ய சக்தி யுடைய ஸ்ரீ மந் நாராயணனை ஒழிய
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?– வேறான பெரிய தேவதையை நாம் ஆஸ்ரயணீயராக உடையோமோ

நளிர் மதி சடையனும்
சாதக வேஷம் தோற்ற ஜடையை தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்-
துர்மானத்தாலே -ஸூக பிரதாநன்-என்று தோற்றும்படி
தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்திரனை ஜடையில் தரித்த ருத்ரனும்

நான் முக கடவுளும்
அவன் தனக்கும் கூட ஜனகனுமாய்
ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக நாலு முகத்தை யுடையனாய் இருக்கிற
சதுர்முகனாகிற தெய்வமும்

இவர்கள் இருவரும் இரண்டு காரியத்துக்கும் கடவராய் அதிகாரிகளாய் இறே இருப்பது –
குசவனையும் -தண்டமாகிற புறமடக்கியும் போலே –

தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
போக ப்ரவணன் ஆகையால் அப்சரஸ்ஸுக்களை மெய்க் காட்டிக் கொண்டு வடிவைப் பேணி
தேவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமாக

யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
எவ் வகைப்பட்ட லோகங்களையும் –
அவ் வவ லோகங்களில் உண்டான எல்லாச் சேதனரையும் தப்பாமே

நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
அவர்கள் எல்லாருக்கும் காரணமாய் இருக்கிற பூத பஞ்சகமும் –

சுடர் இரு விசும்பும் -என்றது
உண்டாம் இடத்திலே
மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால்
அழியும் இடத்தில்
அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற

மலர் சுடர் பிறவும்
சந்த்ர ஸூர்யர்களும் -மற்றும் உள்ள மனுஷ்யாதிகளும் இவை யடைய

சிறிதுடன் மயங்க
சிறியதாய்க் கொண்டு உடனே மயங்க
சில பேருக்கு இடைச் சொல்லி உண்பார் பலர் உண்டால் சோறு மட்டமாம் போலே –
ரஷ்யமாய்க் கொண்டு நாநா வாய்ப் புகுகிற பதார்த்தங்கள் அளவுபடும்படியாக வாயிற்று
தன் திரு வயிற்றில் வைக்கிற போது பாரிப்பின் பெருமை –
இவை அடங்க அல்பமாகக் கொண்டு
ஓன்று ஒன்றை விடாதே தன் பக்கலிலே கலச

அன்றிக்கே –
சிறிது உடல் மயங்க -என்று பாடமாய்
ஓர் ஆலந்தளிரின் உள்ளடங்கின வடிவில் கலச
உடன் உடல் என்கிற இடத்தில் -னகர-லகரங்களுக்கு ஒரு விரோதம் இல்லை

ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும் அகப் படக்
ஒரு பதார்த்தமும் பிரி கதிர் படாத படி எல்லாவற்றையும்

கரந்து
பிரளயம் வந்தால் முன்புற்றைக் காட்டிலும் திரு வயிற்றை இளைத்துக் காட்டலாம் படி
ஒரு விக்ருதி இன்றிக்கே இருக்கை

ஓர் ஆல் இலை சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது
இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே
கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய

பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –ஸ்ரீ முதல் திருவந்தாதி -69-

பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு –
யசோதா ஸ்தநந்தய மத்யந்தம் விமுக்தம்
(மிகவும் அழகியதான யசோதையின் கைக் குழந்தை )-என்னும்படி
முக்தமான வடிவை யுடையவனாய் சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து

ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் —
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்ந்த
ஈசன் தன்னை —-ஸ்ரீ பெரிய திருமொழி -2-10-1-என்கிறபடியே
முகிழ் விரியாத ஆலந்தளிரிலே-
தரிக்கைக்கு ஒரு யசோதாதிகள் இன்றிக்கே இருக்க
நீ கண் வளர்ந்து அருளினவற்றை மெய் என்று ஆப்தரான ரிஷிகள் எழுதா நின்றார்கள்

கதம் ந்வயம் சிஸூ சேதே லோகே நாசமுபாகதே
சாகாயாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூசிஸ் மித –பாரதம் -ஆற –188-94-
(உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக் கிளையில் உள்ள இளம் தளரில்
இனிய புன் முறுவலுடன் கூடிய இக் குழந்தை எப்படிப் படுத்துக்க கொண்டு இருக்கிறது)என்று
ஆயிற்று அவர்கள் எழுதுகிற பாசுரம்

ஆல் அன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
அவ்வால் தான் அன்று மண்ணைக் கரைத்து பொகட்ட ஜகத்திலே உள்ளதோ-
நிராலம்பநமான ஆகாசத்தில் உள்ளதோ –
அன்றிக்கே கார்ய ஆகாரம் குலைந்து கரந்து கிடக்கிற மண்ணிலே உள்ளதோ –

சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு–
பருவம் நிரப்புவதற்கு முன்னே ஏழு பிராயத்தில் ஒருபடிப்பட
மலையைத் தரித்துக் கொண்டு நின்ற நீ சொல்லு –
இதுவும் ஓர் ஆச்சர்யம் இறே –

இதுவும் சொல்ல வேணும் -அதுவும் சொல்ல வேணும் -இம் மூன்றும் விஸ்மயமாய் இருப்பன
சில அகடிதங்களாய் இருந்தன

அவன் பின்னை இவர்களுக்குச் சொன்ன உத்தரம் ஏது-என்று ஸ்ரீ பட்டரைக் கேட்க
அவன் தானும் -ஆழ்வார் வந்தால் கேட்கக் கடவோம்-என்று நினைத்து இருந்தான் காணும் -என்ன
பின்னையும் நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ –
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார் -என்று–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது –
பெரு மா மாயன் -என்று
அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்

முந்துற ரக்ஷகன் ஆகிறேன் -என்று பச்சை இடுவித்துக் கொண்டு -சில நாள் கழிந்தவாறே வடிவைக் காட்டி –
நான் உன்னைப் போலே சாதகன் காண் -என்று சொல்ல –
அவனை விட்டால் போலே எடுத்துக் கழிக்கைக்குத் தான் ஒரு தேவதை உண்டோ நமக்கு –

மார்க்கண்டேயனை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லிப் பச்சை இடுவித்துக் கொண்டு
அநந்தரம் ஜடையைக் காட்டி –
நானும் உன்னைப் போலே சாதகன் -ஒரு தலையைப் பற்றிக் காண் இருப்பது -என்னை ஆஸ்ரயியுங்கோள்-என்று
பிறர் சொல்லும் வார்த்தையை மெய் என்று விஸ்வசித்து இருக்கும் படி -பிரமித்தாய் ஆகாதே -பொறு –
உனக்கு ஆஸ்ரயணீய ஸ்த்தலம் காண் -என்று கொடு போய்
சர்வேஸ்வரனைக் காட்டிக் கொடுத்தான் இறே –

கண்டும் தெளிந்து கற்றார் கண்ணற்க்கு ஆளின்றி யாவரோ
வண்டு உன் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி யீசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்குத் தன்னோடும் கொண்டு உடன் சென்று உணர்ந்துமே–திருவாய் -7-5-7- என்றபடி –

ப்ரஹ்மாணம் நீல கண்டஞ்ச யாஸ் ஸாந்யா தேவதாஸ் ஸ்ம்ருதா
பிரதி புத்தாந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வம் -350-36–
(பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள்
ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –)என்றபடி
ப்ரஹ்மாவையும் ருத்ரனையும் அல்லாத தேவதைகளையும் அறிவுடையராய் இருப்பார் ஆஸ்ரயியார்கள் –

அதுக்கு அடி என் என்னில் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தில் இவனுக்கு அபேக்ஷை உண்டானால்
அவர்கள் அது கொடுக்க மாட்டார்களே —
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வம் இல்லாமையால் –
இனி இவ்வருகே சிலவற்றை இறே கொடுப்பது -அவை அல்பம் இறே –
அவை அவன் இவனுக்குக் கொடுக்கவுமாம் இவன் அவனுக்குக் கொடுக்கவுமாய் இறே இருப்பது –

ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிஷித்தாஸ் து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி-
(ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில்
ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்
இப்படி அறிந்து இம் மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –)-என்று அன்றோ சாஸ்த்ர விதி

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாத்துவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –ஸ்ரீ நான்முகன் -68-என்னக் கடவது இறே

பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க
பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –

பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே

ஆகவே
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஆறாம் பாசுரம் –

September 27, 2019

இவற்றினுடைய சத்தையை சார்த்தமாக உபாதானம் பண்ணி ஸ்ருஷ்டித்து –
ஸ்ருஷ்டித்த அநந்தரம்-
இனிமேல் அவை பட்டது படுகின்றன என்று இராதே
சிறியத்தை பெரியது நலிந்து மஹாபலி போல்வார் பருந்து இறைஞ்சினால் போலே அபஹரிக்க-
ஸ்ரீ யபதியானவன் தன் மேன்மை பாராதே
தன்னை அழித்து ரஷித்த செயலை அனுசந்தித்து
சேதனராய் இருப்பார்க்கு இவனுக்கு மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்க இறே
செய்ய அடுப்பது-என்றார் கீழே –

இவர்கள் தாங்கள் சேதனரான பின்பு இதிலே உருப்படாது ஒழிவார்களோ-என்று
லௌகீகரைப் பார்த்தார்
அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –

நான் என்றும் என்னது என்றும் –
பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்

ஏகஸ்மிந் நப்யதிக்ராந்தே முஹுர்ர்த்தே த்யாந வர்ஜிதே
தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திதம் ப்ருசம்-
(பகவத் த்யானம் இல்லாமல் ஒரு முஹூர்த்தம் சென்றாலும் திருடர்களால் திருடப்பட்டவன் போல்
உறக்கக் கதறுவதே தகுந்தது)-என்கிறபடியே –

பகவத் தியானத்துக்கு விச்சேதம் பிறந்தால் அதுக்குப் பரிஹாரமாகத் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகை –
சீரிய தனம் அபஹ்ருதமானால் எல்லாரும் அறியக் கூப்பிடுமா போலே
கீழ்ப் பிறந்த விச்சேதத்துக்குக் கூப்பிடக் கடவது இறே

அப்படித் தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க –
அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-
தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–

உலகு-இப்பூ மண்டலத்தை
படைத்து -ஆதி காலத்திலேயே உண்டாக்கி
இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்ட பித்தியில் இருந்து குத்தி எடுத்து
உண்டு -பிரளய காலத்தில் அமுது செய்து
உமிழ்ந்து-அவாந்தர ஸ்ருஷ்ட்டி காலத்தில் வெளிப் படுத்தி
அளந்து -திரிவிக்ரம அவதாரத்தில் திருவடிகளால் அளந்து
தேர்ந்து -அதற்கும் மேலே ரக்ஷண உபாயத்தை சிந்தை செய்து
அளிக்கும் -ரக்ஷிக்கும் படியான
முதல் பெரும் கடவுள் -ஆதி காரணனும் பரதேவதையுமான ஸ்ரீமன் நாராயணன்
நிற்ப -ஆஸ்ரயணீயனாக இருக்க -அவனை விட்டு –
புடை பல அவனுடைய விபூதியாக சொல்லப்பட்டனவாய் -பலவகைப் பட்டவனாய்
தானறி தெய்வம் -ஆஸ்ரயிக்கும் தான் அறிந்த சில தேவதைகளை
பேணுதல் -ரக்ஷகனாக ஆதரிக்கை
தனாது புல் அறிவு -தன்னுடைய கீழான புத்தியை
ஆண்மை பொருந்தக் காட்டி-பெரியோர்கள் மனத்தில் படும்படி காண்பித்து
ஈன்றோள் இருக்க-பெற்றவள் இருக்கும் போது-அவளைக் கவனியாமல்
மணை நீர் ஆட்டி -அசேதனமான மணைக்கு நீராட்டுவது போல் இருக்கிறது
செய்கை-அத் தேவதைகளின் செய்கைகள்
கொல்வன முதலா-ஹிம்ஸிக்கை முதலிய
அல்லன முயலும்-செய்யத் தகாத கார்யங்களைச் செய்கையாகிற
இனைய-இப்படிப்பட்ட தன்மையை உடையவை
அளி-அத்தேவதைகள் அளிக்கும் பலமாவது
துன்பு -துன்பத்துடன் கூடிய
இன்பு-ஸூகமாகவே இருக்கும் -ஆகையால் அத் தேவதைகளை ஆஸ்ரயிக்கை
தொல் மா மாயப் பிறவி யுள் -அநாதியாய்-பெரியதாய் -ஆச்சர்ய கரமான சம்சாரத்தில் நின்றும்
நீங்கா-நீங்குகை அன்றிக்கே
பல் மா மாயத்து -பலவாய் பெரியதாய் மோகத்தை உண்டாக்கக் கூடிய சப்தாதி விஷயங்களில்
அழுந்து மா நளிர்ந்தே –நன்றாக அழுந்துகைக்கு இடமாகும்
ஒ! ஒ! உலகினது இயலவே–உலகின் ஸ்வபாவம் என்னே –

ஒ! ஒ!
இருந்தார் இருந்த இடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார்

உலகினது இயலவே
ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே
இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே –
இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே –

நீர் இங்கனே ஓ என்று இட்டு நெடு வாசி படக் கூப்பிடுகைக்கு லோகமாகத் தான் செய்தது என் என்னில் –
ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி
இரா நின்றார்கள்

உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி –
பின்னை கர்ப்பத்தில் தரித்து –
பிரசவ வேதனையை அனுபவித்து –
அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்
அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே

அவளை விட்டு
ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே
இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே
இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே
வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்

நீர் -ஈன்றோள் -என்று தாயாக நினைக்கிறது தான் ஆரை என்னில்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப
இவை அடங்கலும் போக மோக்ஷ ஸூந்யமாய்த் தமோ பூதமாய்-
ஆஸீதிதம் தமோ பூதம் -என்றபடி
அசித் கல்பமாய் இழந்து கிடக்கிற போது

இவற்றினுடைய தசையைக் கண்டு -ஐயோ என்று இரங்கி
பஹு ஸ்யாம் என்று ஸ்ருஷ்டித்து

ஸ்ருஷ்டமான அநந்தரம்
பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்து

திரிய பிரளயம் வரும் என்று முற்கோலி
திரு வயிற்றிலே வைத்து உள்ளே கிடந்து தளராதபடி

வெளிநாடு காண உமிழ்ந்து

எல்லை நடந்து மீட்டு –
இப்படி சர்வ வித ரக்ஷணங்களையும் பண்ணச் செய்தே

பின்னையும் தன்னை விஸ்வசித்து அருகே கிடந்தவனை –
மடி தடவினவனைப் போலே அநு தபித்து-
ஒன்றும் செய்யாதானாய் மேன்மேல் என ரக்ஷண உபாயங்களை சிந்தித்து –

ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –
ஆரோ வருவார் -என்று

குஹேநே சார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசாந் பஹுந்
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதி தி -அயோத்யா -59-3-
பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன் )
என்கிறபடியே அவசர பிரதீஷனாய் நிற்க

இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனே யாகிலும் ஆஸ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும்
அத்விதீய பரதேவதை இவன் அல்லது இல்லை என்கை

யயாதி சாதன அனுஷ்டானம் பண்ணி ஸ்வர்க்கத்திலே இந்திரனோடே அர்த்தாசநத்திலே இருக்கச் செய்தே –
கர்ம பூமியில் புண்ய க்ருத்துக்கள் யார் -என்று அவனைக் கேட்க –
ஒரு தேவதை முன்பே பொய் சொல்லிற்றாக ஒண்ணாது என்று –
நான் வர்த்தித்த காலத்தில் என்னை எல்லார்க்கும் மேலாகச் சொல்லுவார்கள் -என்ன –

ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் –
த்வம்ச என்று பூமியிலே விழும்படி சபித்தான் என்று இவ்விடத்தை
ஸ்ரீ பட்டர் வாசித்துப் போந்த காலத்திலே

இந்திரன் தன்னை ஆஸ்ரயித்துப் பெற்ற உத்கர்ஷமாய் இருக்க அர்த்தாசநத்திலே இருந்தது பொறுக்க மாட்டாமை –
ஆத்ம பிரசம்ஸை பண்ணினாய் -என்றறொரு வ்யாஜத்தை இட்டுத் தள்ளினானாய் இருந்தது –
இது தான் வேத உப ப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தமான மஹா பாரதத்தில்
எவ் வர்த்தத்தினுடைய விசதமமாக ருஷி எழுதினான் -என்று கேட்க

தான் தன்னோடு ஓக்க உத்கர்ஷத்தைக் கொடுக்க வல்லதுவும் –
அத்தைப் பொறுக்க வல்லதுவும்
பரதேவதையான பின்பு ஆஸ்ரயிக்கப்படுமதுவும்
பரதேவதை – அல்லாதார் ஆஸ்ரயணீயர் அல்லர் என்னும் இடம் பிரகாசிகைக்காக -என்று அருளிச் செய்தார்

அவனை விட்டால் சுருக்கம் ஒழிய அவனோடே தோள் தீண்டியாய் இருப்பாரை ஆஸ்ரயிக்கப் பெறினுமாம் இறே
புடை பல தானறி தெய்வம் பேணுதல்
ஒரு புடைகளிலே -அர்த்தவாதித்து
அவனுடைய விபூதியைப் பேசுகிற இடத்திலே அவனுடைய உத் கர்ஷத்துக்காக
இவ்வருகே சிலருக்கு சில மினுக்கம் சொல்லுமே –
அத்தைக் கொண்டு கிடந்த இடம் அறியாமே
ஒதுங்கிக் கிடைத்தவற்றை யாயிற்று ஆதரிப்பது –
அது தன்னிலும் ஒரு தேவதையே இவனுடைய சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்க மாட்டாதே –
ஒருவனாய் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கிறான் அன்றே –
அது வேண்டில் –

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் தனம் இச்சேத் ஹுதாசநாத்
ஈஸ்வராத் ஞானம் அந்விச்சேத் இச்சேத் கதிம் இச்சேத் ஜனார்த்தநாத் -ப்ரஹ்மாண்டம்
(ஆரோக்யத்தை சூரியனிடம் இருந்தும் -பணத்தை அக்னியிடம் இருந்தும்
ஞானத்தை ஈஸ்வரனிடம் இருந்தும் விரும்பக் கடவன்
மோக்ஷத்தை ஜனார்த்தனிடம் இருந்து விரும்பக் கடவன்)–என்னக் கடவது இறே

ஆக விபூதி காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –
புத்ர காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் –
பசு காமன் ஆகில் இன்னானைப் பற்றுவான் என்று இங்கனே ஒன்றுக்கு ஒருவராய் பலராய் இருக்கும் –
தான் அறி தெய்வம்
பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற
தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது

பேணுதல்
அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை
பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று
கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று
அத் தேவதைகளுக்கு ஈஸ்வரத்வம் சம்பாதித்துக் கொடுக்கையும்

தானது–
இவன் சொன்ன போதாக அவை ஆஸ்ரயணீயங்கள் ஆகிறனவும் அல்ல –
இவன் தான் அங்கே சில பெற்றான் ஆகிறானும் அல்லன்
இத்தால் பலித்தது ஆயிற்று –
விசேஷஞ்ர்க்கு தன் அறிவில் குறைவை பிரகாசிப்பித்தானாம் அத்தனை –

தானது–புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி-
தன்னுடைய ஞானத்தில் அல்பதையை விசேஷஞ்ஞர்க்கு தேறும்படி தெரிவிப்பித்து
பலம் பெரும் போது பர தேவதையை ஆஸ்ரயித்துப் பெற வேணுமே

ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய–ப்ருஹதாரண்யம் -6-5-6-
(கேட்கத்தக்கதும் நினைக்கத் தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத் தக்கது )என்றும்

(வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாய -புருஷ ஸூக்தம்

வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம் மாதிரி அறிபவன் இப் பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது)

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நாந்யப் பந்தா -என்றும்
உபாசன வாக்யங்களிலே சொன்னபடியே
காரண வஸ்துவை உபாசிக்கின்றது அன்று இறே

கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை
ஆட்டை அறுத்துத் தா
பிரஜையை அறுத்துத் தா -என்பன சிலவும்
நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டு பரிமாற வேண்டுவன சிலவும் இவையாயிற்று செயல்கள் —

ஆஸ்ரயணங்கள் தாமே நரகமாய் இருந்ததே –
இப்படி ஆஸ்ரயித்துப் பெரும் பலத்தைப் பார்த்தால்
அதை பெருமதில் பெறாது ஒழிகை நன்றாய் இருக்குமே

இன்பு துன்பு அளி
ஸூக துக்க மிஸ்ரமான பலத்தை யாயிற்று தருவது –
நிஷ்க்ருஷ்ட ஸூகமான மோக்ஷம் அவற்றுக்கு இல்லையே

ஆக –
செய்ததாயிற்று என் என்னில் –
தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் –
பவ உபகரண பூதனாய் –
நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான்
நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று

தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து –
பழையதாய் காரணமாய் இருக்கிற மா மாயம் உண்டு —
இம் மாயை
தேவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை –7-14-
இது ஒருவரால் கடக்க ஒண்ணாது -என்று அவன் அருளிச் செய்த பிரகிருதி –
இப் பிரக்ருதி சம்பந்த நிபந்தந ஜென்மங்களில் புக்கு மீள விரகு இன்றிக்கே பலவகைப்பட்ட இருக்கிற
மா மாயம் உண்டு -சப்தாதி விஷயங்கள் -அவற்றிலே

நளிர்ந்தே அழுந்துமே
எடுத்தது அனையும் தரை அளவும் அழுந்தா நின்றன

உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி
நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து
அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –
இது என்ன படு கொலை என்கிறார்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஐந்தாம் பாசுரம் –

September 27, 2019

மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –

உறங்குகிற பிரஜைக்குத் தான் அறிந்தபடி ஹிதம் பார்க்கும் தாயைப் போலே
நீ பண்ணின உபகாரம் அறிகைக்கு அடி ஒருவரும் இன்றியே இருக்க –
அமிழ்ந்து கிடந்தவற்றை அடைய உண்டாக்கி –
உண்டானவற்றுக்குக்-(உண்டாக்கினவற்றுக்குக் ) காவலாக திக் பாலாதிகளை அடைத்து விட்ட அநந்தரம்-

சிறியத்தை பெரியது நலியாதபடி நீ நாட்டுக்குக் காவலாக நிறுத்தின இந்திரன்-
ஒரு ஆஸூர பிரக்ருதியான மஹாபலி கையிலே ராஜ்யத்தைப் பறி கொடுத்துக் கண் பிசைய –

முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று
கை வாங்கி இராதே –

ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து-
இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்
திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?

மா முதல் -பரம காரணனான உன்னுடைய
அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-திருப் பாதம் ஆகிற ஒரு சிவந்த தாமரைப் பூவை கவிழ்த்துப் பரப்பி
மண் முழுதும் அகப்படுத்து -பூமிப் பரப்பு எல்லாம் கைப் பற்றியும்
ஒண் சுடர் அடி போது ஓன்று-அழகிய தேஜஸ்ஸை யுடைய புஷ்பம் போன்றதான மற்றொரு திருவடியை
நான் முகப் புத்தேள் -பிரமனாகிற தேவதையின்
நாடு வியந்து உவப்ப –லோகமானது அதிசயப்பட்டு மகிழ்ச்சி யுறவும்
வானவர் நெறீ இ முறை -அவ்வுலகத்தில் உள்ள தேவதைகள் -சரியான வழியில் செல்லுகையை முறையிடுகிற
முறை வழி பட -ஸாஸ்த்ர வழிப்பட வணங்கும் படியும்
விண் செலீ இ-ஆகாசத்தில் செலுத்தியும்
தாமரை காடு மலர்க் கண்ணொடு-தாமரைப் பூக்கள் நிறைந்த காடு புஷ்பித்தால் போலே இருக்கிற திருக் கண்களோடே கூட
கனி வாய் உடையதுமாய் -பழம் போன்ற சிவந்த திருப் பவளத்தை யுடையதாய்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன-அநேகமான கிரணங்களை உடையதாய் -ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தால் போலே இருக்கிற
முடி பற்பல-பல க்ரீடங்களையும்
கற்பகக காவு வன்ன-கற்பக வனம் போல் இருக்கிற
தழைத்த ஆயிரம் தோள்-ஓங்கி வளர்ந்துள்ள ஆயிரம் திருத் தோள்களையும் உடையனாய்
நெடியோய்க்கு அல்லதும் -எல்லாருக்கும் மேலானவனாய் விளங்குகிற எம்பெருமானை ஒழிந்த மற்று எவர்க்கும்
அடியதோ வுலகே –இவ் வுலகமானது அடிமைப் பட்டதோ –

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே

திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –

வளர்ந்த திருத் தோள்கள்
வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன

அன்று கரு மாணியாய்
ஸ்ரீ யபதியான நீ –
உண்டு -என்று இட்ட போதொடு -இல்லை என்று மறுத்த போதொடு வாசியற
ப்ரீதியோடே போம்படியான
இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையையாய்க் கொண்டு இரந்து
உன் படி ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்து வர்த்திக்கிறவனே
நீ இச் செயல் செய்தது இந்திரன் ஒருவனுடைய அபேக்ஷிதம் செய்கைக்கு அன்று இறே
ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
கீழ்ச் சொன்ன படியே –

மா முதல் அடிப் போது -என்று
பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –

அன்றிக்கே
மா முதல் அடிப்போது -என்றது
திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்

அடிப்போது -என்றது
அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –
அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி
அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை

கவிழ்த்து அலர்த்தி
திருவடியைப் பரப்பி எல்லாவற்றையும் அளந்து கொள்ளுகிற இடத்தில் சிறியதின் தலையில் பெரியது இருந்தால்
சிறியது நெருக்குண்ணக் கடவது –
அப்படியே திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் நெருங்குண்டது இல்லையோ என்னில் –
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது
ஒண் மிதி என்னக் கடவது இறே

மண் முழுதும் அகப்படுத்து
புனலுருவி என்கிறபடி –
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டது அடையத் தன் கீழே இட்டுக் கொண்டு –

இது வாகில் இத் திருவடி செய்தது –
மற்றைத் திருவடி செய்தது என் என்னில்

ஒண் சுடர் அடி போது
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய்
எழுந்து என்று தொடங்கி –மண் முழுதும் அகப்படுத்து –என்கிறபடியே
மேல் உள்ள லோகங்கள் அடைய அளந்து கொண்டது –

ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –

விண் செலீ இ
விண்ணை அடைய வியாபித்தது –
எவ்வளவில் சென்றது என் என்னில்

நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
சதுர்முகன் ஆகிற தேவதையினுடைய லோகமானது இத்தைக் கண்டு வியப்பதும் செய்தது –
அந் நீர்மை ஏறிப் பாயாததொரு மேடு தேடித் போந்தோம் ஆனோம் –
நீர்மை இங்கே வந்து ஏறுவதே –
இஃதோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று விஸ்மயப்படுவதும் செய்தது
திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே

அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே என்று உகப்பதும் செய்து
அவ்வளவில் ப்ரஹ்மா செய்தது என் என்னில் –

குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை அங்கு –ஸ்ரீ நான்முகன் -9-என்கிறபடியே

நினைவு இன்றிக்கே இருக்க திருவடி கையிலே வந்து இருந்தவாறே
அலாப்ய லாபத்தால் தடுமாறிச் சுற்றிலே பார்த்தான் –
அவ்வளவில் தர்ம தத்வம் நீராய்க் குண்டிகையிலே புக்கு இருந்தது –
அத்தைக் கொண்டு திருவடியை விளக்கினான் –
அவ்வளவில் இது நமக்கு நல்ல இடம் -என்று சிவன் தன் தலையை மடுத்தான்-

த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹாமுநே
க்ருஹீத்வா தர்மபாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்க்யாதி ரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீதிய வதாரணார்த்
வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–ஈஸ்வர சம்ஹிதை —

(மா முனிவரே திரு உலகு அளந்து அருளின அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான் )–என்று
பாவநார்த்தம் ஜடா மத்யே–சிரஸா ஹர–தன்னுடைய ஸூத்யர்த்தமாக ஜடையில் தரித்தான் –

யோக்யோஸ் மீதிய வதாரணார்த்–
திருவடிகளுக்கு யோக்யர் அல்லாதார் இல்லை என்று பார்த்தான்

வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–என்கிறபடியே
நற் சரக்கு வந்தால் விடுவார் இல்லை இறே
கிடையாதது கிடைத்தவாறே விடேன் என்று தலையில் வைத்துத்
திருவடியைக் கட்டிக் கொண்டு நெடுங்காலம் நின்றான்

சது முகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி –ஸ்ரீ பெரியாழ்வார் -4-7-3-என்று இறே
கங்கைக்கு வரலாறு (வரவாறு ) சொல்லுகிறது

முந்துற ப்ரஹ்மாவின் கையிலே இருந்து
பின்னர் சர்வேஸ்வரன் திருவடிகளில் தங்கி –
அநந்தரம் ருத்ரன் தலையிலே வந்து விழுந்தது –

இத்தால் ப்ரஹ்மா தான் பெற்றது என் என்னில்

தவம் செய்து நான்முகன் பெற்றான் தாரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் -கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -78-என்றபடி

அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்

குறை கொண்டு –
தன்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு

குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
வேதத்தில் அநந்ய பரமான வாக்யங்களைக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி

கறை கொண்ட –
இவன் ஆவி விவேகத்தால் விளைவது அறியாமே அநர்த்த ரூபங்களாய் இருக்குமவற்றைச் செய்யா நின்றான் –

இனி இங்கன் ஒத்த அமங்களங்கள் வாராது ஒழிய வேணும் -என்று
விஷம பிரஜைகள் மேலே தீர்த்தைக் கொண்டு விநீதனாக வேணும்-என்று தெளிக்குமா போலே
ருத்ரன் ஜடையில் விழும்படி கழுவினான் –

இதுவாகில் அவன் செயல் –
அவ்வவ லோகத்தில் உள்ள தேவதைகள் செய்தது என் என்னில்

வானவர் முறை முறை வழி பட நெறீ இ
தேவர்கள் நெறி பட்டு
வானவர் நெறீ இ-முறை முறை வழிபட -என்று அந்வயம் –

தேவர்கள் நெறி பட்டு பகவத் சமாஸ்ரயணம் பண்ணும்படியைச் சொல்லுகிற
சாஸ்திரங்களின் வழியே திரளாக ஆஸ்ரயிக்க-
திரு அணுக்கன் திரு வாசலில் திரள் திரளாகப் புக்கு திருவடி தொழுமா போலே
ஸமாராதன விதியின் படி வழிபட்டு ஆஸ்ரயிக்க

அவ்வளவில் அவன் செய்தது என் என்னில்

தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்

கற்பகக காவு பற்பல வன்ன –
பலவான கற்பகச் சோலை -போலே –
இப்படி இருக்கிறது எது என்னில்

முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச்சோலை போலே இருக்கிறது –
அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –

நெடியோய்
இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் –
தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தபித்து –
மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி
லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –
செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் -என்றபடி

நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ
மங்களா சாசனம் பண்ண

எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
சொல்லிக் காண்

நீ அன்றோ நெடியோன் –
அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்
நீ அன்றோ என்றவாறு

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –நாலாம் பாசுரம் –

September 27, 2019

கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –
ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –

அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய வென்று-
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –
என்று ஆயிற்று இருப்பது –

ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி –
அது தன்னைப் பலவாகி-
ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இவர் அவ்வளவு அமையாமல்
முதலிலே கல்பத்தை விவஷித்து
அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-

யாவகை உலகமும் யாவரும் இல்லா-எவ்வகைப்பட்ட லோகங்களும் -எவ்வகைப்பட்ட பிராணிகளும் இல்லாதவாறு
மேல் வரும் பெரும் பாழ் காலத்து -முன்னவே கழிந்து போன மிகவும் நீண்ட உலகம் அழிந்து கிடந்த பிரளய காலத்தில்
இரும் பொருள்க்கு- எல்லாம்-எண்ணற்ற ஜீவ ராசிகளுக்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி-அடைவதற்கு அரியனாய்-ஒப்பற்றவனாய் -ஸஹாயம் அற்றவனாய் காரண வஸ்துவாக தானே நின்று
தெய்வ நான் முக கொழு முளை-தேவதை யாகிய பிரமன் என்னும் பூரணமான அங்குரத்தையும்
முக் கண் ஈசனோடு தேவு பல ஈன்று -மூன்று கண்களையுடைய ருத்ரனுடன் -பல தேவதைகளையும் படைத்து
நுதலி-இவர்களை ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்காக சங்கல்பித்து
மூ உலகம் விளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் படைத்த திரு நாபியை யுடையவனாய்
மாய -ஆச்சர்ய சக்தி யுக்தனாய்
கடவுள் -பரதேவதையாய்
மா முதல் அடியே–பரம காரண பூதனான எம்பெருமான் திருவடிகளை
ஊழி தோற் ஊழி ஓவாது -கல்பங்கள் தோறும் இடைவிடாமல்
வாழிய வென்று யாம் தொழ இசையும் கொல்?-வாழ வேண்டும் என்று நாம் மங்களா சாசனம் செய்து ஸ்துதிக்க நேர் படுமோ –

ஊழி தோறு ஊழி —
கல்பம் தோறும் கல்பம் தோறும் –

ஓவாது –
அது தான் நித்ய அக்னி ஹோத்ரமாக ஒண்ணாது –
ஒரு ஷணமும் இடை விடாதே
இத்தால் மேல் எல்லாம் கூடிச் செய்யப் புகுகிறது என் என்னில்

வாழிய வென்று-என்னும் அத்தனை –
சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்

யாம்
ஆயுர் ஆசாஸ்தே -(யஜுர் அஷ்ட -3-5-நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன் )-என்று
கண்டது அடைய எனக்கு என்று போந்த
நாம்
இப்போது அது தவிர்ந்து

தொழ
தொழுகை யாகிறது மங்களா சாசனம் பண்ணுகை யாயிற்று –

இசையும் கொல்?
எனக்கு என்று போந்த அது தவிர்ந்து உனக்கு என்கையாகிறது நெடு வாசி இறே –
கூடாத இப் பேற்றோடே கூடுவார்க்கு
இப்படி பிரார்த்திக்கிறது அவனுடைய எந்தச் செயலை அனுசந்தித்து என்னில்

யாவகை -இத்யாதி
முன்பே உள்ளதொரு வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணின அளவு அன்றிக்கே –
முதலிலே அழிந்து கிடந்த வஸ்துவை அடி தொடங்கி உண்டாக்கி
நமக்குப் பண்ணி அருளிய மஹா உபகாரகத்துக்கு –

யாவகை உலகமும்
இங்கன் இட்டு மூன்று லோகம் கழிந்து மேலே ஒரு லோகம் குடி வாங்கக் கடவதாய்-
அவ் வருகு ஓன்று குடி இருக்கக் கடவதாய் இருபத்தொரு பிரளயம் உண்டு இறே –
அப்படி அன்றிக்கே எவ் வகைப்பட்ட லோகங்களும் –

அன்றிக்கே
யாவரும் இல்லா
எல்லாரும் ஓக்க லயிக்கச் செய்தே –
மார்க்கண்டேயாதிகள் -நித்யத்வம் -என்று அலைவாரும் உண்டு இறே
அங்கனும் ஒருவரும் இன்றிக்கே

மேல்
மேல் என்றது -பண்டு -என்றபடி –

வரும்
வரும் என்றது போன என்றபடி –
பண்டு போன

பெரும் பாழ் காலத்து
கர்க்ஷகன் உவர்த் தரையை உவர் கழிய நீர் நிறுத்துமா போலே –
விளைக்கைக்கு இவற்றினுடைய துர் வாசனையை அழிக்கைக்காக
ஒரு ப்ரஹ்மாவினுடைய ஆயூஸ்ஸூ அத்தனையும் அழித்திட்டு வைத்து இருக்குமாய்த்து

இரும் பொருள்க்கு எல்லாம்
தேவ மனுஷ்யாதி ரூபமாய் -அஸங்யேயமாய் =அசித் ஸம்ஸ்ருஷ்டங்களான ஜீவ வஸ்துக்களுக்கு எல்லாம்

அரும் பெறல்
இவ்வளவில் வந்து முகம் காட்டுவான் ஒருவனைக் கிடையாது இறே –
ஆகையால் பெறுதற்கு அரிய

தனி வித்து ஒரு தான் ஆகி
நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும்
தானே யாய்

வித்து -என்கையாலே –
காரண வஸ்து என்கை –

தனி -என்கையாலே
ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-
(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )-
என்றபடி அத்விதீயன் -என்கை

ஒரு -என்கையாலே
இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –

தான் ஆகி –
கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி –
இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் –
இது அதுக்கு த்ருஷ்டாந்தம்

தெய்வ நான் முக-
இதர சஜாதீயனான சதுர்முகன் ஆகிற

கொழு முளை ஈன்று –
இவ் வருகில் கார்ய வர்க்கத்தை அடைய உண்டாக்குகைக்கு
ஈடான சக்தியை யுடைய ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து

அவன் ஒருவனும் மூன்று காரியமும் செய்ய மாட்டான் இறே -அதற்காக
முக் கண் ஈசனோடு தேவு பல
சம்ஹார ஷமனான ருத்ரனோடே கூட
மற்றும் காரியத்துக்கு வேண்டும் தேவதைகள் பலரையும் உண்டாக்கி –
இவை பலரும் தேவைக்கு எல்லாம் அவன் பண்ணி அருளிய வியாபாரம் என்னில்

நுதலி
(ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது)
பஹுஸ்யாம் –என்று சங்கல்பித்து
நுதலி -என்றது –
கருதி என்றபடி –

மூ உலகம் விளைத்த உந்தி
கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று
அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி
திரு உந்தி என்ற ஒரு பத்மமாய்
அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று

மாய கடவுள்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை

மா முதல் அடியே
மா முதல் மாயக் கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக் கடவுள் என்னுதல் –
மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –

திருவடி –
திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்

அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்
உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –மூன்றாம் பாசுரம் –

September 26, 2019

முதலிட்டு இரண்டு பாட்டால் –
அதில் முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –

இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்

இப் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம் மூன்று -மூன்று லோகங்களும் நல்வழியில் செல்லும்படியாக திரு உள்ளத்தில் நிலைப்பவனாய் –
உடன் வணங்கு தோன்று புகழ் -அம் மூன்று உலகங்களும் ஒருபடிப்பட்டுத் தொழுகை யாகிற பிரசித்தமான புகழை உடையவனாய்
ஆணை மெய் பெற நடாய -தன் ஆணையைச் சரி வர நடத்துமவனாய்
தெய்வம் மூவரில்- முதல்வனாகி -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் என்னும் மூவரில் மேலானவனாய்
சுடர் விளங்கு அகலத்து-ஆபரணங்களின் ஒளியை உடைத்தான் திரு மார்பை உடையவனாய்
வரை புரை திரை பொர-மலை போன்ற அலைகள் மொத்த நின்றதாய்
பெரு வரை வெரு வர-பெரிய பர்வதங்கள் நடுங்கும் படியாக
உருமு உரல் ஓலி மலி -இடியின் முழக்கம் போன்ற கோஷமானது மிகுந்து இருப்பதான
நளிர் கடல் -குளிர்ந்த சமுத்திரத்தை
படம் அரவு அரசு -படங்களை யுடைய சர்ப்ப ராஜாவாகிற வாஸூகியினுடைய
உடல் தட வரை சுழற்றிய -சரீரத்தை மிகப் பெரிய மந்த்ர மலையில் சுற்றிக் கடைந்தவனாய்
தனி மா தெய்வத்து -ஒப்பற்ற பர தேவதையாய் உள்ள எம்பெருமானுக்கு
அடியவர்க்கு -தாச பூதரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு –
இனி நாமாள் ஆகவே- இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –இனி நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இடை விடாமல்
அடியவர்களாம் படி -இப் பேறு பொருந்துமோ

குறிப்பில் கொண்டு நெறிப் பட
உலகம் மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன்–என்று இவனோடு அந்வயித்தல் –

குறிப்பில் கொண்டு நெறிப் பட –
நெறிப் பட -குறிப்பில் கொண்டு-
(ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது)
பஹுஸ் யாம் -என்று சங்கல்பிக்கும் படி அரும்பும் படி திரு உள்ளத்தில் கொண்டு
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நெறிப் படும் படியாக -வழி படும்படியாக திரு உள்ளத்திலே கொண்டு -என்றுமாம்
இப்படி நெறிப்படுவார் சிலராய் -சிலர் அன்றிக்கே இருக்கை அன்றிக்கே –

உலகம் மூன்று
தன்னை ஒழிந்தார் அடையத் தன்னை ஆஸ்ரயிக்கும் படியாக –
அது தன்னில் –
அந்யோந்யம் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயருமாகிற வைஷம்யம் உண்டே யாகிலும்
தன் அளவில் வந்தால்
எல்லாரும் ஓக்கக் கூடித் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும்படிக்கு ஈடாக

உடன் வணங்கு
தனித்தான போதாயிற்று அவாந்தர விஷயம் உள்ளது –
இவன் பக்கலிலே எல்லாரும் கூடித் திருவடிகளில் ஆஸ்ரயிப்பார்கள் –
இத்தால் வந்த பிரசித்தி கிடந்த இடம் தெரியாதபடி ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்குமோ என்னில்

தோன்று புகழ்
ஸ்ருதி பிரசித்தம் –
மூல பிரமாணத்தில் பறை சாற்றுவதாய் இருக்குமே

ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி
ஆணையை பத்தும் பத்தாக -பரிபூர்ணமாக -நடத்தா நிற்பானுமாய் –
பழுது படாத ஆணையாய் அன்றோ இருக்கும் –
தெய்வம் மூவரில் முதல்வனாகி அன்றோ –

அன்றிக்கே
தெய்வம் மூவரில் முதல்வனாகி
இவர்களும் தன்னோடு சமானருமாய்-
அவனோ ஈஸ்வரன் -இவர்களோ ஈஸ்வரர்கள் -என்று கண்டவர்க்கு
இவர்கள் பக்கலிலேயும் ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி இறே
தான் இவர்களுக்குக் கொடுத்து வைத்து இருக்கும் தரம் –
ஆகையால் நடாய தெய்வம் மூவர் -என்று இவர்களோடு அந்வயிக்கவுமாம்

மூவரில் முதல்வனாகி
தன்னை ஒழிந்த இருவர் அளவில் அவர்களுடைய சரீரத்துக்கு ஆத்மாவுக்கும் நியாமகனாய் –
தன் அளவிலே அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நின்று -அதுக்கு நியாமகனாய் –
அன்றிக்கே
இந்திரனையும் கூட்டி மூவர் என்னவுமாம் –
அவர்களுக்கும் காரண பூதன் என்றவாறு

சுடர் விளங்கு அகலத்து
ஆபரண சோபையை யுடைத்தான திரு மார்பை யுடையவனாய் –
தட வரை சுழற்றிய -என்றத்தோடு அன்வயம்

அன்றிக்கே
சந்தர ஸூர்யர்களால் விளங்கா நின்றுள்ள ஆகாசத்தில் பாழ் தீரும்படியாக -என்னுதல்-
மலை போன்று கிளறும் அலைகள் -என்றத்தோடு அந்வயம்

வரை புரை-இத்யாதி
அவன் ஆஸ்ரித அர்த்தமாகச் செய்யும் செயல்களில் இது ஒன்றும் அமையாதோ
இவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கு

வரை புரை திரை பொர
மலையோடு ஒத்த திரை –
அவை மலையும் மலையும் தாக்கினால் போலே தன்னில் தான் பொருகிற போது

பெரு வரை வெரு வர
குல பர்வதங்கள் நடுங்க

உருமு உரல் ஓலி மலி
அப்போது உருமு இடித்தால் போலே இருக்கிற த்வனியானது மிக

நளிர் கடல்
பொறி எழக் கடையச் செய்தேயும்
அவனுடைய கடாக்ஷ மாத்திரத்தாலே கடல் குளிர்ந்த படி
கடந்த வேகத்தால் குமுறாதபடி நடுங்க என்னுதல்

நளிர் –
குளிர்ச்சியையும்
நடுக்கத்தையும் காட்டும்

படம் அரவு அரசு உடல்
ஒரு சேதனனைப் பற்றிக் கடையச் செய்தேயும் ஒரு நலிவு இன்றிக்கே இருக்கையில் ஸ்வ ஸ்பர்சத்தால்
வந்த ப்ரீதிக்குப் போக்கு வீடு விட்டு படத்தை விரிக்கிற அரவரசு -வாஸூகி –
அதனுடைய உடலைச் சுற்றி

தட வரை
கடலை கண் செறி இட்டால் போலே இருக்கும் மந்த்ர பர்வத்தைக் கொடு புக்கு நட்டு

சுழற்றிய
கடல் கலங்கிக் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து அம்ருதம் படும் அளவும் செல்ல
தொட்டார்க்கு எல்லாம் நான் கடைந்தேன் என்று சொல்லலாம் படி தானே சுழன்று வரும்படி வாக யாயிற்று
கொடு புக்கு வைத்த நொய்ப்பம்

தனி மா தெய்வம்
அத்விதீய பர தெய்வம் –
இப்படி அத்விதீய பர தெய்வத்துக்கு ஆளாகவோ ஆசைப்படுகிறது என்னில்

அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து
அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

இனி நாம்
ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும்
என்னது என்றும் போந்தோம்

இனி சேஷித்த காலமாகிலும்
இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் –
அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்

ஆளாக
சேஷ பூதராக

ஆளாகவே
அவர்களுக்கும் ஆளாய் –
நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் –
ஆளாகவே —
ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக

இசையும் கொல்
அவன் ஆள் பார்த்து உழி தருவான் -நான்முகன் -60-ஆகையால்
இவ்வர்த்தத்தில் இவனை இப்போதாக இசைவிக்க வேண்டா –
இவர் எப்போது என்று பிரார்த்திக்கிறவர் ஆகையால் இவர்க்கு இசைவு உண்டு

இசையுங்கொல் என்பான் என் என்னில் –
பாகவத சேஷத்வமாகை யாகிறது கூடுவது ஓன்று அல்லாமையாலே
கூடாத அர்த்தம் இங்கனே கூட வற்றோ -என்கிறார் –

ஊழி தோறு ஊழி
இந்த பாகவத சேஷத்வம் தான் சில காலமாய்க் கழிய ஒண்ணாதே –
கல்பம் தோறுமாக வேணும் –
அது தன்னிலும்

ஓவாதே
ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –

அவாப்த ஸமஸ்த காமனாய்-
ஸ்ரீ யபதியாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான(திருவாய்-1-1-1 ) சர்வேஸ்வரன்
சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்து அவதரித்த இடத்து –
துஷ் ப்ரப்ருதிகளான சிசுபாலாதிகள் அது பொறுக்க மாட்டாமே முடிந்து போனால் போலே –

இப்போது பாகவதர்களுடைய பெருமை அறியாதே
இவர்களும் நம்மோடு ஓக்க அன்ன பானாதிகளாலே தரியா நின்றார்கள் ஆகில் நம்மில் காட்டில் வாசி என் என்று
சஜாதீய புத்தி பண்ணி சம்சாரிகள் அநர்த்தப் படுகிற படி

அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே
இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –இரண்டாம் பாசுரம் –

September 26, 2019

வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நாந்ய பந்தா வித்யதே அயநாய–ஸ்ரீ புருஷ ஸூக்தம் —

(வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம்மாதிரி அறிபவன் இப்பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது )–என்று கொண்டு

த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –

அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும்
பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –

முதல் பாட்டில் -வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –
அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும்
பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –

அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–

உலகு படைத்து உண்ட எல்லா உலகங்களையும் ஸ்ருஷ்டித்து -பிரளய காலத்தில் விழுங்கிய
எந்தை அறை கழல்-என் ஸ்வாமியாகிய எம்பெருமானுடைய -சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகளாகிற
சுடர் பூம் தாமரை சூடுதற்கு -ஜ்வலிக்கும் படியான அழகிய தாமரைப் பூவை அணிவதற்காக
அவாவு ஆர்-ஆசையினால் நிறைந்த
உயிர் உருகி யுக்க நேரிய காதல்-ஆத்மாவானது உருகி விழ-அதனால் உண்டான பக்தி ரூபமான அன்பு என்ன
அன்பில் இன்பு–பக்தியினால் உண்டான பரமபக்தி ரூபமான ப்ரீதியில் உள்ள இனிமை என்ன
ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் -இவைகளில் உள்ள இனிமையின் வை லக்ஷண்யம் ஆகிற அமுதக்கடலில் மூழ்கி இருக்கும் படியான
சிறப்பு விட்டு-மேன்மையை விட்டு
ஒரு பொருள்க்கு-கீழான புருஷார்த்தத்துக்காக
அசைவோர் அசைக-அல்லல் உறுபவர்கள் அலையட்டும்
திரு வோடு மருவிய இயற்க்கை -ஐஸ்வர்யத்தோடு கூடிய ஸ்வ பாவத்தோடும்
மாயாப் பெரு விறல் -அழியாத மிகுந்த பலத்தோடும்
உலகம் மூன்றினோடு -மூன்று உலகங்களோடும் கூட
நல் வீடு பெறினும்-மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற்றாலும்
கொள்வது எண்ணுமோ -இவற்றைப் பெறுகைக்கு நினைக்குமோ
தெள்ளியோர் குறிப்பே -தெளிந்த ஞானத்தை உடைய பெரியோர்களுடைய அபிப்ராயம்

உலகு படைத்து
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத–சாந்தோக்யம் –62-3–
(அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) என்கிற
சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் உண்டாக்கி –

உண்ட
உண்டான இவற்றுக்கு பிரளய ஆபத்து வர –
இவற்றை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷித்துப் பண்ணி அருளிய
வியாபாரத்தால் கண்ணழிவு அற்ற மேன்மை சொல்லுகிறது

எந்தை
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான மேன்மையை உடையனாய் இருந்து வைத்து –

மூ உலகு அளந்த
எத்தனை யேனும் தம்மைத் தாழ நினைத்து இருந்தபடியால்
தம்மை விஷயீ கரித்தவத்தால் வந்த நீர்மை சொல்லுகிறார்

மூ உலகு அளந்த –
இதனுடைய எல்லை தாமாக நினைத்து இருக்கிறார்

அறை கழல் சுடர் பூம் தாமரை
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தாய் அத்யுஜ்ஜ்வலமாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளை
இத்தால் அழகு -சொல்லுகிறது

இம் மேன்மையாலும்
நீர்மையாலும்
வடிவு அழகாலும் விளைந்த
பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –

தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே
கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31-
(திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம்
இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான்
அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே

சூடுதற்கு அவாவு ஆர் உயிர்
சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –

உருகி யுக்க
அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்

அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –

பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது

அன்பில் இன்பு
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே
அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -சத்வ ஸூத்தவ் தருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் 7-26-2-
(உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது)
இத்யாதிகளை நினைக்கிறது –
நிலை நின்ற நினைவு என்னும் பக்தி அவஸ்தை -என்றபடி –

விஷயம் குணாதிக விஷயம் ஆகையால்-அந்த அன்பிலே ஓர் இன்பு உண்டு -இனிமை –
அது என் பட்டது -அது தான் இனிதாய் இருக்கும் இறே
துக்காத்மக விஷயத்தைப் பற்றி வந்தது இன்றிக்கே
ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷவாகமம் தர்மயம் ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-
(வித்யைகளுக்குள்ளும் ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது –
பாபங்களைப் போக்கடிப்பதில் உயர்ந்தது -என்னை நேரில் காட்டுவது இது தான்
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாதது –) என்கிறபடியே
ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யத்தையாலே இது தானே ரசிக்கும் இறே –
அது தான் என் போலே என்னில்

ஈன் தேறல்
அமுத சமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாய் இருக்கும் –
விஷயத்தினுடைய வை லக்ஷண்யத்தாலே -அது தான்
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்
அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய-தைத்ரீயம் -ஆனந்தவல்லி -5-
(அப்படிப்பட்ட இந்த விஞ்ஞான மெய்ஞான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனும்
அந்த ஜீவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஆனந்த மெய்ஞான பரமாத்மா)
என்கிற விஷயத்தைப் பற்றி வருகையால் -ஒரு ரஸ சாகரமாய் இருக்கும் இறே
விலக்ஷண விஷயமாகையாலும் -இவனுடைய ருசியாலும் ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் இறே

அமுத வெள்ளத்தானாம்
இன்ப வெள்ளத்திலே உளனாகையாகிற-இன்பத்தில் திளைத்துத் திக்கித் திணற வைக்கும் அன்றோ என்றபடி –

சிறப்பு விட்டு
இந்த பரம பக்திகளை யுடையனாகை யாகிறது இறே ஐஸ்வர்யம் —
அத்தை விட்டு

ஒரு பொருள்க்கு
இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவை இறே –
அவை யாகிறன–
தர்ம அர்த்த காம மோக்ஷங்களில் சொல்லுகிறவை இறே –
அவற்றை ஒன்றாக நினைத்து இராத அநாதரம் தோற்ற ஒரு பதார்த்தம் என்கிறார் –

அசைவோர் அசைக
அவை தான் இது போல் ஸூலபமாய் இராது யத்னித்து பெற வேண்டுமதாய் –
பெற்றாலும் பிரயோஜனம் அல்பமாய் இருக்கும் – அவற்றுக்கு ஆசைப்படுவோர் அங்கனம் கிலேசப்படுக –

கிலேசோ அதிகாரஸ் தேஷாம் அவ்யக்த அசக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத்பி ரவாப்யதே –ஸ்ரீ கீதை -12-5-
(அவ்யக்தம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட மனத்தை யுடையவர்களுக்கு
அதை அடையும் விஷயத்தில் மிகவும் துக்கம் உள்ளது
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆத்ம ச்வரூபத்தை அடைவது மிகவும் கடினம் அன்றோ)என்கிறபடியே
நிரூபித்தால் துக்காத்மகம் என்றாலும் நாட்டிலே சில புருஷர்கள் அவற்றை விரும்பா நின்றார்களே என்ன
அறிவு கேடர் படியோ நான் சொல்லுகிறது –
புத்திமான்கள் இவற்றை ஸ்வீ கரிப்பதாக மநோ ரதிப்பார்களோ

திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு
ஐஸ்வர்யம் நிலை நின்று அது தானே யாத்ரையாய் இருப்பது –
இத்தாலும் பலம் இல்லை இறே
போக்தாவுக்கு சக்தி வை கல்யம் உண்டாகில் –
அவனும் ஒரு நாளும் அழியாத மிடுக்கை உடையனாவது –
ஐஸ்வர்யம் தான் ப்ராதேசிகம் ஆவது அன்றிக்கே த்ரை லோக்யமும் விஷயமாவது –
இத்தோடு அடுத்து

நல் வீடு பெறினும்
நல் வீடு என்று உத்தம புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே
நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

பெறினும்
இது தான் பெறக் கடவது என்று இருக்கை அன்றிக்கே
இதிலே தோள் மாறும்படி யானாலும்
மநோ ரதமாக இல்லாமல் பெற்றே தீர்ந்தாலும்

கொள்வது எண்ணுமோ
இவை ஸ்வீ கரிக்கக் கடவதான மநோ ரத சமயத்திலே தான் உண்டோ
ஐஸ்வர்யம் அஸ்திரம் ஆகையால் கழி யுண்டது –
ஆத்ம லாபம் பரிச்சின்னம் ஆகையால் கழி யுண்டது –
பகவத் புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பை ஒழிய வேறு ஒரு உடம்பைக் கொண்டு போய்
அனுபவிக்குமதாகையாலே கழி யுண்டது

அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே
இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )-
விசார விஷயமோ –
ஆனாலும் சிலரும் நினையா நிற்கிறார்கள் என்னில்

தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ
சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல
சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

சார அசார விவேகஞ்ஞா காரீயம் சோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம் –நிகமன ஸ்லோகம்
(சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக்காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்யப்பட்டது) -என்றவாறு

கேடில் சீர் வரத்தானாம் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத் தன் நாடு நண்ணினும்
வீட தான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடும் ஆசை யல்லது ஓன்று கொள்வனோ குறிப்பில் –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -108-

இத்யாதிகளை இங்கே அனுசந்திக்கத்தக்கவை –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாசிரியம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் தனியன் வியாக்யானம் —ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகையும் வியாக்யானமும் –முதல் பாசுரம் –

September 26, 2019

ஸ்ரீ நம்மாழ்வார் -நம் குலபதே-நம் சடகோபனை பாடினாயோ –
பாடினார் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அருள் மாரி–ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -படைத்தான் கவி –திருமாலவன் கவி –வேதம் தமிழ் செய்த மாறன் —
சடாரி உபநிஷதாம் உப காந மாத்ர போக –ஸ்ரீ மன் நாத முனிகள்
யம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை–
குருகூர் சடகோபன் பண்ணிய தமிழ் வேதம் பணிப் பொன் போலே சர்வாதிகாரம் —
ஓ ஒ உலகின் இயல்வே என்று இதர புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் வெறுத்து –
பரம புருஷ ஏக பரமாய் இருக்குமே —
சம்ஸ்க்ருத வேதம் கட்டிப் பொன் போலே-ஸமஸ்த புருஷார்த்தங்களையும் உபாயாந்தரங்களையும் சொல்லுமே –
ஆகவே இவை சுடர் மிகு சுருதி -வேதாந்த பரமாய் இருக்குமே

ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட
சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்

ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திருவிருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திருவாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்

வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்

சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்

———————-

அவதாரிகை —
ஸ்ரீ திருவாசிரியமாகிற திவ்ய பிரபந்த தர்சியாய் -தேசிகராய் இருக்கிறவரை -நிர்மலமான ஹ்ருதயத்தில் வைத்து
விஸ்ம்ருதி இன்றிக்கே நிரந்தர மங்களா சாசனம் பண்ணுங்கோள் –என்கிறது

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்—(ஸ்ரீ யஜ்ஜ மூர்த்தி )- அருளிச் செய்த தனியன்-

காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-

காசினியோர் தாம் -இப்பூமியில் உள்ள மநுஷ்யர்கள்
வாழ -உய்யும் பொருட்டு
கலி யுகத்தே -கலி யுகத்திலே
வந்து -பரமபதத்தில் நின்றும்
உதித்து-அவதரித்து
ஆசிரியப் பா வதனால் -ஆசிரியப்பா என்னும் பாட்டுக்களாலே
அரு மறை நூல் விரித்தானை-சிறந்த வேதமாகிய ஸாஸ்த்ரத்தை பரப்பியவரும்
தேசிகனை -எல்லாருக்கும் ஆசார்யரும்
திகழ வகுளத் தாரானை-விளங்கா நின்றுள்ள மகிழம் பூ மாலையை அணிந்தவருமான
பராங்குசனை -நம்மாழ்வாரை
மாசடையா மனத்து வைத்து -அழுக்கு அற்ற மனஸ்ஸிலே வீற்று இருக்கச் செய்து
மறவாமல் வாழ்த்துதுமே-மறவாதபடி மங்களா ஸாஸனம் பண்ணக் கடவோம்

காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –
(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )

கலி யுகத்தே வந்து உதித்து–
கலவ் புந பாபரதாபி பூதே பக்தாத்மநா ச உத்பபூத –ஸ உத் பபூவ
(பாபத்திலேயே ஈடுபட்ட மனிதர்கள் நிறைந்த கலி காலத்திலே அந்த பகவான் பக்த ரூபியாகத் தோன்றினார்)–என்கிறபடியே
ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில் யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி
ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று

(க்ருத யுகம் -ஸ்ரீ தத்தாத்ரேயன் -ஸ்ரீ பரசுராமன் ப்ராஹ்மண வர்ணம்
த்ரேதா யுகம் –ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -ஷத்ரிய வர்ணம்
த்வாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான
ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்
கலி யுகம் -சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக )

வந்து உதித்து
லோகாந்தரத்தில் நின்றும் இங்கே வந்து திருவவதரித்தார் என்னுமது தோற்றுகிறது –

முன்னம் வந்து உதித்து–(உபதேச ரத்ன -7)-என்கிறபடியும் –
வகுள பூஷண பாஸ்கர ( ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4-) உதயம் இறே
மேலே வகுளத் தாரானை-என்று இறே இருக்கிறது –

(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)

(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

திரு அவதரித்துச் செய்த கார்யம் இன்னது என்கிறது மேல்
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை-
தமிழுக்கு வெண்பா இத்யாதி அநேகம் பாக்கள் உண்டாய் இருக்கவும்
ஆசிரியப்பாவாலே யாயிற்று திருவாசிரியம் செய்து அருளினது

அரு மறை நூல் விரிக்கை யாவது
அரிய வேதம் ஆகிற சாஸ்திரத்தை விஸ்திருதமாக்கி –
அதுவே நிரூபகமாம் படி யானவரை –
அரு மறை நூலை வண் தமிழ் நூல் –திருவாய்-4-5-10-ஆக்கினவரை –

(உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-)

தேசிகனை பராங்குசனை
வேதார்த்த தர்சியான-சாஷாத்கரித்த – ஸ்ரீ பராங்குச தேசிகரை –

திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –
தாமம் துளபமோ வகுளமோ -என்னக் கடவது இறே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமாம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –

மாசடையா மனத்து வைத்து
மாசற்றார் மனத்துளானை –திருமாலை -22-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாமே–திருவாய் -9-2-4-இத்யாதிகள் படியே
நிர்மலமான மனஸ்ஸிலே வைத்து
வண் குருகைக் கோனாரும் நம்முடைக் குடி வீற்று இருந்தார் -என்னும்படி ச ஹ்ருதயமாக வைத்து –
விஷய வைராக்யமுடைய பரம ஹம்ஸராகையாலே மானஸ பத்மாஸனத்தில் இறே இருப்பது

(பேசிற்றே பேச லல்லால் பெருமை யொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்-திருமாலை -22-)

(புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-)

வகுளத் தாரானை மாசடையா மனத்து வைத்து
நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து பக்தி பண்ணி வைத்து

(ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-)

(எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –)

மறவாமல் வாழ்த்துதுமே-
விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்
அவரும்
ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே
ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

—————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை

ஸ்ரீ திருவிருத்தத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
(மயர்வற மதி நலம் அருளினான் என்கிறபடியே )
அவனுடைய நித்ய விபூதி யோகத்தையும் லீலா விபூதி யோகத்தையும் அனுசந்தித்து –
நித்ய விபூதியில் உள்ளார் நிரதிசய அனுபவமே யாத்ரையாய் இருக்கிற படியையும்
அது உண்டு அறுக்கைக்கு ஈடான ஆரோக்யத்தை உடையராய் இருக்கிற படியையும்

இவ் வருகு உள்ளார் கர்ம பரதந்த்ரராய் –இதர விஷயங்களில் பிரவணராய் -தண்ணியதான தேஹ
யாத்திரையே போகமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்து –

ப்ராதாக்களில் சிலர் ஜீவிக்க ஒருவன் குறைய ஜீவிக்கப் புக்கால் தன் குறையை அனுசந்தித்து வெறுக்குமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனுடன் நித்ய அனுபவம் பண்ணுவார்களோடு ஓக்க தமக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
தாம் அத்தை இழந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –
இதுக்கு அடி தேஹ சம்பந்தம் -என்று பார்த்து
இத்தைக் கழித்துக் கொள்ளலாம் வழி தன் பக்கல் ஒன்றும் காணாமையாலே
இந்த பிரகிருதி ப்ராக்ருதங்களினோட்டை சம்பந்தத்தை அறுத்துத் தர வேண்டும் என்று
அவன் திருவடிகளில் விண்ணப்பம் செய்தார்

இது பின்னை பொய்ந்நின்ற ஞானமும் –இத்யாதி முதல் பாட்டுக்கு கருத்து அன்றோ என்னில்-
முதலிலேயும் இப்பாசுரத்தை அருளிச் செய்து
முடிவிலேயும் -அழுந்தார் பிறப்பாம் பொல்லா அரு வினை -100-என்று
உபக்ரம உபஸம்ஹாரங்கள் ஏக ரூபமாய் இருக்கையாலே
இப்பிரபந்தத்துக்கு தாத்பர்யமும் அதுவே –
தாம் நினைத்த போதே தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையால்
பிறந்த ஆற்றாமை ஆவிஷ்கரித்த படி நடுவில் பாட்டுக்கள் அடைய –

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –

இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ்வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே

இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை – தண்மையை – அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ்வருகே போய்-பரமபதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க
அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –

————————

ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –
இனி இவ்வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –

ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-

ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி
ரூபம் தன்னையும் விட்டு உபமானத்திலே இழிந்து
அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

செக்கர் மா முகில் உடுத்து -சிவந்த பெரிய மேகத்தை அரையிலே கட்டி
மிக்க செம் சுடர்-மிகவும் சிறந்த கிரணங்களை யுடைய
பரிதி சூடி-சூரியனை தலையிலே தரித்து
அம் சுடர் மதியம் பூண்டு-அழகிய குளிர்ந்த கிரணங்களை யுடைய சந்திரனை அணிந்து
பல சுடர் புனைந்த -நக்ஷத்ரங்களாகிற அநேக தேஜஸ்ஸூக்களைத் தரித்து உள்ளதாய்
பவள செம் வாய்-பவளங்களைப் போன்ற சிவந்த இடங்களை உடையதாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்-விளங்கும்படியான பச்சை நிறத்தை உடைத்தான் மரகத மலையானது
கடலோன் கை மிசை-கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைகளாகிற கையின் மேலே –
கண் வளர்வது போல்-நித்திரை செய்வது போலே
பீதக ஆடை முடி பூண் முதலா-பீதாம்பரம் கிரீடம் கண்டிகை முதலான
மேதகு பல் கலன் அணிந்து -பொருந்தி தகுதியாய் இருக்கிற பல ஆபரணங்களையும் அணிந்து
சோதி வாயவும் –ஒளிவிடா நின்றுள்ள திருப்பவளமும்
கண்ணவும்-திருக் கண்களும்
சிவப்ப -சிவந்து இருக்கும்படியாகவும்
மீது இட்டு-போட்டியில் வெற்றி கொண்டு
பச்சை மேனி மிக பகைப்ப-பச்சை நிறமானது மிகவும் விளங்குபடியாகவும்

நச்சு வினை -எதிரிகளை அழிக்கையில்-விஷத்தைப் போன்ற செயல்களை உடையனாய்
கவர் தலை -கவிழ்ந்து இருந்துள்ள தலைகளை உடையனாய்
அரவின் அமளி ஏறி-ஆதி சேஷனாகிற படுக்கையில் ஏறி
எரி கடல் நடுவுள் -அலை எறியும்படியான கடலின் நடுவே
அறி துயில் அமர்ந்து-ஜகத் ரக்ஷண சிந்தை யாகிற யோக நித்திரையை அடைந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள்-அனைத்து தேவர்கள் கூட்டங்களும்
கை தொழ கிடந்த-கை கூப்பி வணங்கும் படி பள்ளி கொண்டு இருப்பவனும்
தாமரை வுந்தி -எல்லா உலகத்தின் உத்பத்திக்கும் காரணமான நாபீ கமலத்தை யுடையவனும்
தனி பெரு நாயக-ஒப்பற்ற சர்வாதிகனுமாய் இருப்பவனுமான எம்பெருமானே
மூ வுலகு அளந்த சேவடியோயே –மூன்று உலகங்களையும் அளந்த திருவடிகளை யுடையவனே-

செக்கர் மா முகில் உடுத்து
ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்
ஸ்யாமமான நிறத்துக்குப் பரபாகமான சிவப்பை யுடைத்தாய் -கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம்படியான –
மா -தலைப்பும் கொச்சமும் வைத்து உடுக்கலாம் படியான பெரிய அளவு –
அளவை யுடைத்தாய் -ஸுவ் குமார்யத்துக்குச் சேர்ந்து குளிர்ந்து இருக்கிற முகிலை அரையிலே பூத்தால் போலே உடுத்து
படிச்சோதி ஆடையொடும் –கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்னும்படி –

மிக்க செம் சுடர் பரிதி சூடி –
திவி ஸூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்திதா
யதி பா சத்ருசீ சா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்மந –ஸ்ரீ கீதை –11-2-என்று சொல்லுகிறபடியே
(ஆயிரம் சூர்யர்களுடைய ஒளியானது ஒரே காலத்திலே ஆகாயத்திலே தோன்றிற்றாகில்
அந்தப் புருஷனுடைய ஒளிக்கு அது ஸமானம் ஆகலாம்)
சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —
அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –
பச்சை மா மலை போல் மேனியை யுடைய எம்பெருமான் -மிகச் சிவந்து இருந்துள்ள
கிரணங்களை யுடைய பரிதியைச் சூடி –

அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-

பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு

பவள செவ்வாய்
பவளமாகிய சிறந்த வாயை யுடைத்தாய் –
உபமேயத்தில் வந்தால் பவளம் போல் சிவந்த அதரத்தை யுடையவன் என்கிறது –
இங்கே பவளம் போலே சிவந்த இடங்களை யுடைத்தாய் என்கிறது –

திகழ பசும் சோதி மரகத குன்றம் கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
தனக்கு இவ்வருகு உள்ளவை எல்லாம் -( இதர மலைகள் எல்லாம் )கீழாம் படி மிகைத்து உஜ்ஜவலமாகா நின்றுள்ள
ஸ்யாமமான தேஜஸ்ஸை யுடைத்தான மரகத கிரியானது –
கடலுக்கு அதிபதியான வருணனுடைய திரைக் கையிலே கண் வளர்ந்து அருளுவது போலே

சாய்வது போல் என்ன அமைந்து இருக்க
உபமானத்திலும் கூசி
கண் வளர்வது போல் -என்கிறார் –

திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –

(இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் போது உபமானத்தை இட்டுச் சொன்னார் என்று கருத்து )

பீதக ஆடை –
செக்கர் மா முகில் உடுத்து -என்கிறது
முடி –
செஞ்சுடர் பரிதி சூடி -என்கிறது
பூண் –
அஞ்சுடர் மதியம் பூண்டு -என்கிறது
முதலா மேதகு பல் கலன் அணிந்து –
பல சுடர் புனைந்த என்றத்தை

மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்

கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாய் இருந்துள்ள பல ஆபரணங்களையும் அணிந்து –
அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாய் இருக்கை
பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6-
ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் –
(நூபுரம் முதலாகிய கணக்கற்ற திவ்ய ஆபரணங்களை யுடையவன் )
ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்

சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப
த்ருஷ்டாந்தத்தில் ஒன்றைச் சொல்லி இங்கே இரண்டைச் சொல்லுவான் என் என்னில் –
அதுக்காக இறே -பவளச் செவ்வாய் என்று கீழே
சிவந்த இடங்கள் என்கிறது –

மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப
கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து-
ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக –
அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க
திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்

நச்சு வினை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் –மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே –
தனி இடத்திலும் எதிரிகளாய் வருவாரும் முடியும்படியான நச்சுத் தொழிலை யுடைத்தாய் இருக்கை –

கவர் தலை
பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –

அரவின் அமளி ஏறி
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை உடையனான திரு அனந்தாழ்வானாகிற படுக்கையில் ஏறி
படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –
அமளி -படுக்கை –

எறி கடல் நடுவுள்
ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற கடலிலே

அறி துயில் அமர்ந்து
அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி –
அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்-
சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்
அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும்
இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –

ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் –
த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் –
திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழ
நாட்டுக்கு ஆஸ்ரயணீயராக ப்ரசித்தரானவர்கள் தங்கள் பஃன அபிமானராய்த் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் தொடக்கமாக அநேக தேவதா சமூகமானது தங்கள் இறுமாப்பைப் பொகட்டு சாய்ந்து அருளின அழகிலே
தோற்று எழுத்து வாங்கி நிற்பார்கள் –
இவர்கள் இப்படியே தொழா நின்றால் அவன் செய்வது என் என்னில்

கிடந்த
கடலிலே இழிந்த கொக்குத் திரள்கள் விக்ருதமாம் காட்டில் அக்கடலுக்கு ஒரு வாசி பிறவாது இறே-
ஏக ரூபமாய் சாய்ந்து அருளுமாயிற்று –
சில தொழா நிற்கக் கிடந்தோம் என்கிற துணுக்கும் பிறவாதாயிற்று -ஐஸ்வர்யச் செருக்காலே –
இவருக்கு இரண்டும் ஸ்வரூப அந்தர் கதமாயிற்று –
கேழ்த்த சீர் அரன் முதலாகக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால்
உன் தொல் புகழ் மாசூணாதே –திருவாய் -3-1-7-

தாமரை வுந்தி
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய்
இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன

தனி பெரு நாயக
இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்
தனி
அத்விதீய நாயகன் –
புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம்
ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித-
ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-

(தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை ) -என்றால் போலே

ஆபேஷிகமான ஐஸ்வர்யத்தை உடையராய் இறே இவர்கள் இருப்பது –
இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் தான் நிர்வாஹகனாய் இருக்கிறாவோபாதி
தனக்கு அவ்வருகு ஒரு நிர்வாஹகனை
உடையான் அல்லாத அத்விதீய பர தேவதை

தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –

மூ வுலகு அளந்த
தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடலில் -. திருக்குறளில் -சில பாடல்கள்–

September 25, 2019

பரிபாடல் தொல்காப்பியத்துக்கும் முன் என்பர் –
இளம் பெரு வழுதியார் –கடுவன் இள வெழியநியார் -கீரந்தையார் -நல்லேழினியார் – ஆகிய நால்வரும்
இயற்றியவை –பரி மேல் அழகர் உரை உண்டு -( ஸ்ரீ சூர்ய நாராயண சாஸ்திரி )
திருப்பரங்குன்றம்-திருமாலிருஞ்சோலை பற்றி உண்டே

இரண்டாம் சங்கம் -3700–வருஷங்கள் மூன்றாம் சங்கம் -1850-வருஷங்கள் -அது முடிந்து -1000-வருஷங்கள் முடிந்தன –
இரண்டாம் சங்கத்துக்கு –துவரைக் கோமான் -ஸ்ரீ கிருஷ்ண பகவானே இருந்ததாக உண்டாம்

திருமாற்கு இரு நான்கு செவ்வேளுக்கு முப்போதொரு பாட்டு காட்டுக்கு ஓன்று
மருவினிய வைகை இருபத்தாறு மா மதுரை நான்கு என்பர் செய்ய பரிபாடல் திறம் —

திருமாலுக்கு -8-/ செவ்வேல் முருகற்கு –31-/காட்டுக்கு -1-/ வைகை ஆற்றுக்கு -26-/மதுரைக்கு -4-ஆக -70-
இப்பொழுது -33-மட்டுமே உண்டு -இவற்றில் -22-ஓலைச்சுவடியில்
(இந்த -22-பாடல்களில் –திருமாலுக்கு -6-முருகனுக்கு -8-வைகைக்கு -8-)
மீதம்-11- நச்சினார்க்கு இனியார் உரைகளிலும் உள்ளவை-(இவற்றுள் -1-திருமாலுக்கு -6-முருகனுக்கு -4 வைகைக்கு -)

இந்த -7-பாடல்கள் திருமாலுக்கு -இவற்றுள் -6-திருமாலிருஞ்சோலை அழகருக்கும் -1-இருந்தையூர் பெருமாளுக்கும்

சோழ வர்மன் -சிபி -இஷுவாகு வம்சம்
நாவலம் தீவை சிலப்பதிகாரமும் சொல்லும்

————————

“செய்யாட் கிழைத்த திலகம்போல் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது
பொய்யாதலுண்டோ மதுரை புனைதேரான்
வையை உண்டாகும் அளவு. “–பரிபாடல் திரட்டில்

(திருமகளுக்கு இட்ட திலகம் போல, ஒப்பனை செய்யப்பட்ட பாண்டியனது வையை ஆறு மதுரை மாநகரத்துக்கு இட்ட திலகம் போன்றது.
அந்த ஆறு உள்ள வரையிலும் மதுரை மாநகர் சீர் பெற்று புகழ் பரப்பி விளங்கும் என்பது பொய்யாகுமோ? )

—————-

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

(எமது அழகிய மதுரை , மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும் . மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும் .
மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும் . சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள் ,
அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர் . அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர் , அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர் .
அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை , வைகறைப் பொழுதில் ஓதும் இசையே ,
மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உறையூர்)
கோழியின் குரல் கேட்டு தூக்கம் கலைவது போல் அல்ல , நாம் வாழும் ஊரே . வாழிய இவ்வூரே.)

—————-

கடவுள் வாழ்த்து –கீரந்தையார் பாட்ட-நன்னாகனாரிசை–பண்ணுப்பாலை யாழ்.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-

எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-

சேவல் அம் கொடியோய் –

நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.(இவை நான்கும் அராகம்)

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:(இது ஆசிரியம்)

அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35(இது பேரெண்)

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.(இது ஆசிரியம்)
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-

யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)

——————

பாடல் 01–
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-

எவ்வுயிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இயல்பை உடைய , சினத் தீயை உமிழுகின்ற படம் விரிந்த
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் உன் தலை மீது நிழலாக இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும் மலர் மார்பினை உடையவன் நீ.
குற்றமில்லா வெண்மையான சங்கினைப் போன்ற நிறத்தையும், மிக உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் கட்டப்பட்ட
யானைக் கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும் இருக்கும் கலப்பையினை உடையவனும்,
ஒற்றைக் குழையை அணிநதவனுமாகிய பலதேவனாகவும் நீ விளங்குகின்றாய்.

எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-
சேவல் அம் கொடியோய்

கருடச் சேவல் கொடியைக் கொண்டவனே! தாமரை போன்ற அழகிய கண்களை உடையவன் நீ .
காயாம் பூவினது நிறத்தை உடையது உன் மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம்
கௌஸ்துப மாலையை உடையவன் நீ.
கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி உளாய்.

நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நாவன்மை உடைய அந்தணர் உணர்தற்குரிய அரு மறைப் பொருளே !
நினது அருளாலே உனது வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள், உன்னுடைய அருள் தழுவுதலாலே
நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற வல்லவர்கள் ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).
தம் அறியாமையினாலே உன்னோடு போர் செய்வோம் என்று வந்த அவுணர்களுடைய வலிமை கெடும் வண்ணம்,
போரின் கண் வென்ற குற்றமற்ற தலைமை உடைய அண்ணலே !

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20-

காமன், சாமன் என்னும் இருவருடைய தந்தையே !
விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவனே !
உன் வரவினை, (அவதாரத்தை அல்லது வரலாற்றை ) விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்பது,
மயக்கம் தீர்ந்த தேர்ச்சி பெற்ற முனிவருக்கும் அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை உடையவனே !
முனிவர்களுக்கே அப்படி என்றால், நீ எப்படிபட்டவன் என்று உரைப்பது எங்களுக்கு மட்டும் எப்படி எளிதாகும் ?
அழகிய தாமரை மலரின் கண் வீற்றிருக்கும் திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே!
அறிவதற்கு இயலாதது உன் வரலாறு என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் ,
உன் மேல் எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும் பெருமையுடையது என்பதால், நாங்கள் கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி எங்களை வெறுத்து விடாமல் அருள வேண்டும்.

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

வெற்றி மிகுந்த பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்,
நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;
நன்னெறியில் செல்லும் திறனில்லாதவரை, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும் நீயே;
அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;
அழகும், எழுச்சியும் உடைய வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ;
சுடுகின்ற சுடரை உடைய சூரியனும் நீயே.

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,

ஐந்து தலைகளைத் தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்,
கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;
அவனால் செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே;
நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;
பூவின் மேல் இருக்கும் பிரம்மனும் நீ;
அவன் செய்யும் நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே;

வானின் கண் உயரும் மேகமும் நீ;
மாகம் என்னும் வானமும் நீ;
இந்தப் பூமியும் நீ;
நீண்டு நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
நீ இவரைப் போன்றவன், இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு காணப்படாமையால்,

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும் ஆள்வதற்கு அடையாளமாக
நின் வலப் பக்கத்தே ஏந்தி, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!
உன் புகழ்தான் உனக்கு ஒப்புமையானது.
புள் என்னும் கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.
முறுக்கிய சங்கினை உடையவன் நீ.

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)

இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும்
மாறுபாட்டினை உடைய சக்கரப்படையை உடையவன் நீ.
கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை உடைய திருமேனியை உடையவன் நீ.
அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.
என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு ஒன்று கூடி,
உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக,
பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.
வாய்மொழிப் புலவனே!
வாய்மொழியாகச் சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!
உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் .

———————
பாடல் 02
(வராக கற்பம்)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

(திருமாலின் நிலைகள் )
நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

(திருமாலின் சிறப்பு)
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35

————-

பாடல் 03 (மாஅயோயே)பாடியவர் -கடுவன் இளவெயினனார்/இசையமைத்தவர்–பெட்டனாகனார்/பண் -பாலையாழ்

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை,
இரு கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

—————

இரணியனைத் தடிந்தமை )

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20

தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

(கருடக் கொடி )
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

(பகையும் நட்பும் இன்மை )
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

———–

பாடல் 13 (மணிவரை)பாடியவர் –நல்லெழுதியார்/ இசையமைத்தவர் பெயர் அறியப்படவில்லை/பண் -நோதிறம்

(திருமாலைத் தொழுவார் பெறும் பேறு)
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்–
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் –தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

(எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை)
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20
நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25

(பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்)

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்–
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்–
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் — ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

(புகழ்ந்து போற்றுதல் )
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்–அருள், செறல், வயின் மொழி; 45
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை– 50
அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!– 60
அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்–
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

———————-

பாடல் 15 (புலவரை)-பாடியவர் -இளம்பெருவழுதியார்/இசையமைத்தவர் -மருத்துவன் நல்லச்சுதனார்/பண் -நோதிறம்
(திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு )

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று–அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10
சிறந்தது–கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

(‘திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக’ எனல்)
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்–
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்–
நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!

(மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்)
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.

(சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்)
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே–
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.

(குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் )
மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது–ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45

(குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்)
தையலவரொடும், தந்தாரவரொடும்
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்–
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.

(பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்)
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66

—————

வான் ஆர் எழிலி மழை வளம் தந்த
தேன் ஆர் சிமைய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர் கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வா
நின் திருந்து அடி தலை உறப் பரவுதும் தொழுது –

(முகில் மலையின் கண் மழையை மிகுதியாகப் பொழிய ,
அந்நீர் நான் மாடக் கூடலில் உள்ள மக்கள்
விரும்பி எதிர் கொள்ளும்படி வருகின்ற துறையிடத்தே உள்ள
இருந்தையூர் என்னும் பதியில் எழுந்தருளியுள்ள செல்வ (திருமாலே )!
நின் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம் .)

இருந்து அருளும்-செல்வன் -திரு நிறை மார்பன் -ஸ்ரீ கூடல் அழகர்- பெருமாள் பெயராலே திவ்ய தேசப் பெயர்
“செல்வனைப் போலத் திருமாலே ! நானும் உனக்குப் பழவடியேன் ”,
நான் மாடக் கூடல் -மதுரைக்கு முன் நாள் திரு நாமம்

இரும் துறையூர் –நீராடும் துறை
“ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும்
நீடு நீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள் ..” (மதுரைக் காண்டம் – துன்ப மாலை–சிலப்பதிகாரம் ஸ்ரீ இருந்த வளமுடையார் —

வானின் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணரர் பாற்று -திருக்குறள் –
இங்கும் மருந்து என்கிறதே

நின் திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.-திருந்தடி – திருத்தமான அடி
திருந்தடி எம் தலை மீது பொருந்தும் வண்ணம் , உன்னைத் துதித்து வணங்குகின்றோம்
இருக்கும் நிலையில் இருந்து , மேம்பட்ட நிலைக்கு , திருத்தி எடுத்துச் செல்லும் அடியாக இருந்ததனால் , அது திருந்தடி ஆயிற்று எனலாம் .
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் “.(ஆழ்வார்)
மகாபலியின் தலை மீது தன் அடி வைத்து அவனை அடக்கவும் செய்தார் , ஆட் கொள்ளவும் செய்தார் .
ஆட் கொண்டதன் பயனாக , அடுத்த மன்வந்திரத்தில் , அவனுக்கு இந்திர பதவியும் அருளினார் .

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதர்கெந்ட்ரு
எந்நாளும் நின்றிமையோர்கள் ஏந்தி இறைஞ்சி யினமினமாய் ,
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே ,
மெய்ன்னான் எய்தி என்னாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே ?”(ஆழ்வார்)

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.

(இருந்தையூரின் ஒரு பக்கத்தில் ,வேங்கையும் , வெண் கடம்பும் , மகிழ மரமும் ,அரும்புகள் மலர்ந்த நிலையில்
மற்றும் பல மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க ,நீல நிறம் கொண்ட மலை உள்ளது .)
இவ்வாறு இருந்தையூரின் மலை வளம் சொல்லப்படுகிறது .

ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.

( இருந்தையூரின் மற்றொரு பக்கம் , விண்ணென விரிந்த நீர் நிலைகள் உள்ளன .
அவற்றின் கண் உள்ள தாமரைப் பூக்களின் நடு நடுவே , வண்டுகள் தேன் பருக விரும்பி ஆர்பரித்துக் கொண்டிருக்கும் .
ஆங்கே , கயல் மீன்கள் விண் மீன்களைப் போல ஒளி வீசிக் கொண்டிருந்தன )இவ்வாறு இருந்தையூரின் நீர் வளம் சொல்லபடுகிறது .

ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து
திரி நரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.

(இருந்தையூரின் மற்றொரு பக்கம் ,கருப்பஞ்சாறு பிழியப்படும் ஒலியுடன் , கள்ளுண்டு – அதனால் அறிவிழந்து திர்பவர்களும் ,
அந்த சாறு பிழியப்படும் ஒலிக்கு மாறு பட்டு ஒலிக்கும் வண்ணம் , ஏர் மங்கலப் பாட்டுப் பாடி வயலில் நாற்று
நட்டு வேலை செய்யும் ஆண்களும் , பெண்களும் இருக்கும் ,திரு எனப்படும் திருமகளும் விரும்பத் தக்க வயல் நிலைமைகள் .)
இவ்வாறு இருந்தையூரின் நில வளம் சொல்லபடுகிறது.

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)-வந்தே மாதரம் -மஹா கவி பாரதியார்

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.

(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில் நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)
இங்கே கேள்வித் திறத்தின் திரிவில்லா அந்தணர் என்று – வேதம் மற்றும் ஞான வழியில் தவறாத அந்தணர்கள் என்று காட்டுகிறது .
எங்கே அந்தணர்கள் நெறி தவறாமல் வாழ்கிறார்களோ , அங்கே மற்றவர்களும் , நெறி தவறாமல் வாழ்வார் என்று கூறப்படுகிறது .

ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு

(அங்கே மற்றொரு பக்கத்தில் , உண்ணக்க்கூடியவையும் , பூசக்கூடியவையும் , பூணக் கூடியவையும் , உடுக்ககூடியவையும் ,
மஞ்சனமாடக் கூடியவையும் ஆகிய பொருட்களையும் , மேலும் பொன் , மணி மற்றும் மலையில் கிடைத்த பொருட்கள் ,
கடலில் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் , பட்டாலும் , பருத்தியாலும் நெய்த துணிமணிகளை விற்கும்
வணிகர்கள் வாழும், அழகாகப் புனையப் பட்ட தெருவும் இருந்தது .)

ஒருசார்
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

(ஒரு புறம் , மென்புலம் என்னும் மருத நிலத்திலும் , மற்றும் ,வன்புலம் என்னும் குறிஞ்சி, முல்லை நிலத்திலும்
தொழில் செய்யும் களமர் மற்றும் உழவர் வாழும் இடம் இருந்தது . இருந்தையூர் என்னும் அந்தப் பதியில்,
இம்மக்கள் அனைவரும் கூடி இன்பமாக வாழ்ந்து வந்தனர் .)

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

இரு கேழ் – இரண்டு விதமாக கருமை நிறம் உடைய /உத்தி – பாம்பினது படத்தின் கட்பொறி /எருத்தின்– கழுத்து–

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் ,
மணம் கமழும் மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள் செய்தவண்ணமும்,
பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல்.
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ்
தெரி அரி மது மகிழ்பு அரி மலர்
மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று
அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.

(நீல மணி போன்ற நிறத்தினையும் அழகினையும் , கூறாகப் பிரித்து , அழகு படுத்தப பட்ட கூந்தலையும் , தெளிவான ஒலி எழுப்பும்
நெகிழ்ந்த சிலம்பினையும், வண்டுகள் மது உண்ணும் மலர் போன்ற அழகிய கண்களையும் , ஒளி பொருந்திய நெற்றியையும் , அழகாலும் ,
நடையாலும் மயில் போலவும் , அவற்றினின்று மாறுபட்டும் விளங்கும் பெண்கள் , மத யானை நடை உடைய தங்கள்
கணவன்மாரோடு , இணைந்து , அழகுபட வந்து , தங்கள் துன்பமும் , பிணியும் தீர்ந்து , நல்லவற்றை எல்லாம் தரவல்ல ,
தொன்று தொட்டு புகழ் உடைய மலையின் அடிவாரத்தில் , கல் சேர்ந்து கிடக்கும்
குள வாய் என்னும் நகரில் அமர்ந்த அந்த இறைவனைத் தேடி வருவார் .)

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் , மணம் கமழும்
மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள்
செய்தவண்ணமும், பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.

(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில்நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)

ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உண்டாம் இதில் -கடலில் இழந்த பின்பு மதுரையை பாண்டியர் நிர்மாணம் செய்தர் என்பர்
ஆகவே தான் இன்றும் நவகிரஹ சந்நிதி கூடல் அழகர் கோவிலில் உண்டே

————

திருக்குறள் -ஸ்ரீ கீதார்த்தம்

ஸ்திதிப்ரதஞ்ஞன் -மத்பாவம்
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து-பத்து பாட்டுக்களில் ஏழிலும் திருவடி

(1) ‘வாலறிவன் நற்றாள் ’ (குறள்-1) – நற்றாள் “நல்ல அடி ” -“
அடலாழி கொண்ட அறிவன் ” (ஆழ்வார்)
(2) “மண்மிசை ஏகினான் மாணடி” (குறள்- 3) – மாணடி “மாட்சிமை பொருந்திய அடி ” –
“மனனக மலமற மலர்மிசை எழுதரு மனனுணர் வளவிலன் ”(ஆழ்வார்).
(3) “வேண்டுதல் வேண்டாமை இலானடி ” (குறள் 4) –
“கொள்கை கொளாமை இலாதான் என் கலி ராகமிலாதான் ” (ஆழ்வார்)
(4) “தனக்குவமை இல்லாதான் தாள் ” (குறள்- 7) –
“தன்னோப்பாரில்லா அப்பன் ” (ஆழ்வார்)
(5) “அறவாழி அந்தணன் தாள் ” (குறள்- 8) –
“அறவனை ஆழிப்படை அந்தணனை ” (ஆழ்வார்)
(6) எண்குணத்தான் தாள் ” (குறள்- 9) – -(-வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -ஞானம் -பலம் -பிராப்தி -பூர்த்தி–பரிமேலழகர் உரை )
(7) “பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி ” (குறள் -10)
திருக்குறள் இரண்டு அடிகளால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் விவரிக்கும் –
குறளன்- வாமனன் இரண்டு திருவடிகளாலே அனைத்தையும் அளந்தான்

மடியிலா மன்னவன் எய்தும் உலகு அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு -சோம்பல் இல்லாத அரசன்
உலகு அளந்த உலகங்கள் எல்லாம் எய்துவான் -குறள்
ஒரு குறள் பாடும் குறள் பாடும் -வாமனன் பற்றிய குறள் –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி —

September 24, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அம்ருதா ஸ்வாதிநீ -ரஹஸ்யங்களில் நான்காவது-ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி –
ஸ்ரீ ரெங்கத்தில் -அருளிச் செய்யப்பட்டவை
மூன்றாவதான ஸ்ரீ தத்வ சிகாமணி லுப்தம்
இதில் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய ஸ்ரீ நியாய தத்வ க்ரந்தத்தின் மங்கள ஸ்லோகம் பிரமாணமாக உதாஹரிக்கப் பட்டுள்ளது

மங்களா சரணம் -அவதாரிகை -சாத்விக புராண உபாதேய தமத்வம் -வராஹ புராண ஏற்றம் -வக்த்ரு வை லக்ஷண்யம் –
வராஹ அவதாரத்தின் உத்கர்ஷம் -ஸ்ரோத்ரு வை லக்ஷண்யம் -சரணாகதி பிரகரணத்தின் உத்கர்ஷம் –
வராஹ சரம ஸ்லோகத்தின் பெருமை -ஸ்லோக த்வயத்தின் சமுச்சிதார்த்தம்–
ஸ்த்திதே மநசே விவரணம் -ஸூஸ்வஸ்தே சரீரே விவரணம் -தாது சாம்யே ஸ்த்திதே விவரணம் -சதி சப்தார்த்தம் –
ய சப்தார்த்தம்-நர சப்தார்த்தம்-ஸ்மர்த்தா சப்தார்த்தம்-விஸ்வரூப சப்தார்த்தம்-மாம் சப்தார்த்தம்-அஜம் சப்தார்த்தம்-
உத்தர ஸ்லோகஸ்ய சரண்ய க்ருத்ய பரத்வம் -தத சப்தார்த்தம்-தம் சப்தார்த்தம்-மத் பக்த சப்தார்த்தம்-
ம்ரியமாண சப்தார்த்தம்-து சப்தார்த்தம்-காஷ்ட்ட பாஷாண சந்நிப சப்தார்த்தம்-அஹம் ஸ்மராமி விவரணம் –
நயாமி சப்தார்த்தம்-பரமாம் கதிம் விவரணம் -ஸ்லோக த்வய சமுச்சித அர்த்தம்
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் -வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம் –

மங்களா சரணம்
ஸ்த்திர சர ஜெகன் மாது ஷோண்யா க்வசித் சதுர அர்ணவீ விபூதி சபதி க்ரோட க்ரீடாம் விபாவயத ப்ரபோ
ஸ்ருதி பரிபண ஸ்லோக த்வந்த் வாத்மநா பரி பக்த்ரிமோ ரமயது மநஸ் சத்துவ அவஸ்தா நாம் ரஹஸ்ய சிகா மணி

க்வாபி கல்பாந்த வே சந்தே குரதக்நே சம் உத்த்ருதாம்
வஹதே மேதிநீம் முஸ்தாம் மஹதே போத்ரிணே நம

க்வாபி -ஒரு
கல்பாந்த வே சந்தே -பிரளய கால கடலாகிய குட்டையில்
குரதக்நே -கால் குளம்பே அளவாய் உள்ள
சம் உத்த்ருதாம் -கிடந்தது எடுக்கப் பட்ட
வஹதே மேதிநீம் -தரித்துக் கொண்டு இருக்கிற பூமியாகிய
முஸ்தாம் -கோரைக்கிழங்கை
மஹதே போத்ரிணே நம -மிகப்பெரிய ஸ்ரீ மஹா வராஹ நாயனாருக்கு நமஸ்காரம் –

——–
அவதாரிகை
திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு
வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண் மகளார்
கருத்து ஒன்ற ஆதி வராஹம் உரைத்த கதி அறிவார்
பொருத்தம் தெளிந்து உரைக்கப் பொய்யிலா மதி பெற்றனமே –

——–
சாத்விக புராண உபாதேய தமத்வம் –
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேத மா மயம் பிரதரிஷ்யிதி–ஆதி -1-293-என்கிறபடியே வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக
ப்ரவர்த்தங்களான புராணங்களில் சங்கீர்ண ராஜஸ தாமச புராணங்களுக்குக்
காரண தோஷமும் -பாதக ப்ரத்யயமும் உண்டான படியால் இவற்றை ஆதரிக்குமவர்கள்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மலிந்து வாது செய்வீர்களும்-என்று வேத பாஹ்ய கோடியிலே கோப்புண்டார்கள்-
சாத்த்விக புராணங்களுக்குக் காரண தோஷமும் பாதக ப்ரத்யயமும் இல்லாத படியாலும்
வைதிக பரிக்ரஹ பிராஸுர்யத்தாலும் இவையே உப ப்ரும்ஹணங்களிலே உபாதேய தமங்கள்
—-

வராஹ புராண ஏற்றம் –
இவை தம்மில் ஸ்ரீ வராஹ புராணம்
பாசி தூர்த்துக் கிடந்த பார் மாடிக்கு பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே –என்றபடியே
ஒன்றாலும் சலிக்க ஒண்ணாத படி -தத்துவ ஹித புருஷார்த்தங்களில் ஸூ ப்ரதிஷ்டிதமாய் இருக்கும்
—————-
வக்த்ரு வை லக்ஷண்யம் –
இதற்கு வக்த்ரு வை லக்ஷண்யத்தாலும் ஸ்ரோத்ரு வை லக்ஷண்யத்தாலும் அதிசயம் உண்டு –
வக்த்ரு வை லக்ஷண்யம் ஏது என்னில்– இதற்கு வக்தாவான ஸ்ரீ ஞானப் பிரான்
பரம விப்ரலம்ப பிரமாத சக்தி சம்பாவனை உடைய ஷேத்ரஞ்ஞரைப் போல் அன்றிக்கே
ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையால் இவனுக்கு ப்ரமமும் ப்ரமாதமும் கூடாது –
ப்ரத் யுபகாராதி நிரபேஷ பரம காருணிகன் ஆகையால் ஆஸ்ரிதர் திறத்தில் இவனுக்கு விப்ரலம்ப கத்வம் கடியாது
சர்வஞ்ஞ சர்வத்ருக் சர்வ சக்தி ஞான பலர்த்தி மாந் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-47-இத்யாதிகளில் படியே
சர்வ சக்தி யாகையாலே இவனுக்கு அசக்தி பிரசங்கமும் இல்லை
—————————-
வராஹ அவதாரத்தின் உத்கர்ஷம் –

இவ்வவதாரத்திற்கு இவன் தன்னுடைய அவஸ்தாந்தரங்களில் காட்டில் ஏற்றம் உண்டு -எங்கனே என்னில்
இவ்வவதாரம் ஒரு வழியாலே கரை ஏறினவர்களைக் கூட்டிக் கொண்டு இருக்கிற அளவேயான பர ரூபம் போல்
அன்றிக்கே அழுந்தினவர்களைக் கரையாத படி எடுத்துக் கரை ஏற விடும்படியாய் இருக்கும் –

வ்யூஹங்களைப் போலே பத்தரானவர்களை ஆஸ்ரயிக்க மேலான நிலத்தில் இருக்கை அன்றிக்கே
பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே ஆஸ்ரிதர் பக்கல் தன் பக்தி தோன்ற
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் என்கிறபடியே அவர்கள் இருந்த கீழ் நிலத்திலும் சென்று
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் -என்னும்படியாய் இருக்கும் –

ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் போலே தான் பெற்ற பிரஜைகள் உலாவித் திரியும் அளவில் ஈஷண மாத்திரத்தாலே ரஷிக்கும்
அளவன்றிக்கே -இங்கே பிரஜைகள் நினைக்கவும் மாட்டாதே காஷ்ட்ட பாஷாண ஸந்நிபராய் விழுந்து கிடக்கிற அளவிலே
அவர்களுக்கு அடைத்த நினைவைத் தான் அனுஷ்ட்டித்து ரஷிக்கிறான் என்னும் படிக்குத் தன் பாசுரம் யுண்டு

ஸ்ரீ கூர்ம அவதாரம் போலே ஒரு பூதரம் பிரமிக்கைக்கு அதிஷ்டானமாய் நிற்கை அன்றிக்கே –
இது தான் பூதரமாய் -பூமியும் பூ தரங்களும் கலங்காதே
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் –நான்றில ஏழ் மண்ணும்— தானத்தவே –என்கிறபடி
நிலை நிற்கப் பண்ணுமதாய் இருந்தது

ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் போலே தட்டுப் பட்டது ஒன்றையும் பிளக்குமது அன்றிக்கே
இது பூமி எல்லாம் தட்டுப் படாதபடி -அத்ரும்ஹத் -என்கிறபடியே இறுகப் பண்ணுமதாயத்து

ஸ்ரீ வாமன அவதாரம் போல் -பொல்லாக் குறள் உறவாய் பொற்கையிலே நீர் ஏற்றுத் தன்னுடைய பூமியைப்
பிறருக்குக் கொடுக்க கொள்ளுகை அன்றிக்கே இது மஹா பலசாலியான அசுரனை நிராகரித்துத்
தன் பூமியைத் தானே கைக்கொண்ட அவதாரமாய் இருக்கும்

விரோதி நிராகரணத்துக்கு மழு எந்த வேண்டும் ஸ்ரீ பரசுராம அவதாரத்தைப் போல் அன்றிக்கே
இவ்வவதாரத்தில் விரோதி நிராகரணத்திற்கு பூமி தானே சாக்ஷியாம் படி இருந்தது

ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனார் அவதாரம் போல் பூமியில் உள்ள சராசரங்களைத் தன் பதத்தில் ஏற்றும் அளவே
அன்றிக்கே -இது பூமி தன்னைத் தோளிலே ஏற்றும் அவதாரமாய் இருந்தது –

ஸ்ரீ பலபத்ர அவதாரம் போலே பூமிக்கு ஷதியைப் பண்ணுவதோர் வந்தேறியான உபகரணத்தைக் கையிலே கொண்டு
இருக்கை அன்றிக்கே இது பூமிக்கு ஷதி வாராத படி எடுக்கும் சகஜமான முக்க்ய உபகரணத்தை உடைத்தாய் இருக்கும்

சிஷ்யஸ்தே யஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் –ஸ்ரீ கீதை -2-7-என்றவனுக்கு உபதேசிக்கத் தொடங்கி-
கர்ம யோகாதிகளிலே அதிகரித்துக் கடையாய் இருபத்தொரு ஸ்லோகத்திலே பரம ஹிதத்தைக் காட்டின
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போல் அன்றிக்கே இது அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்தா ச த்வயி மாதவ -ஸ்ரீ வராஹ புராணம் –
என்றார்க்கு ஆரம்பத்திலே முழுகி மண் -மண்ணம்-கொண்டு உபதேசிக்கும்படியாய் இருந்தது

கற்கியாம் இன்னம் -என்னும்படி பாவ் யுபகாரமான கல்கி அவதாரம் போல் அன்றிக்கே
இது பூத உபகாரம் உண்டான அவதாரமாய் இருந்தது

ஆகையால் இப்புராண ப்ரவர்த்தகமான இவ்வவதாரத்துக்கு மானம் இல்லாதாப் போலே உபமானமும் இல்லையே
இவ்வவதாரத்தை மந் வதி பரம ஆப்த பரி கணநையில் தர்ம ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர்கள் தாங்களே சேர்த்தார்கள் –
இப்படி வக்த்ரு வை லக்ஷண்யத்தால் இப்புராணம் உத்க்ருஷ்டம்
——————
ஸ்ரோத்ரு வை லக்ஷண்யம் –
ஸ்ரோத்ரு வை லக்ஷண்யத்தாலும் இது சர்வ உத்க்ருஷ்டம் -எங்கனே என்னில்
ஸ்ரீ பூமிப்பிராட்டியை -ஜகத்துக்கு ஈஸாநா -என்று ஸ்ருதி சொல்லுகையாலே
சேதன அசேதன ரூபமான ஜகத்தில் காட்டில் இவளுடைய உத்கர்ஷம் பிரசித்தம்
க்ருதாகசஸ் ஷாம்யதி கேசவ ஸ் ரிதாந் அகிஞ்சநாந் தாந் கமலா கடாக்ஷயேத்
ந ச ப்ரஸஜ்ய பிரதி ஷேத ஸீதி யத் ஷமா த்வமே வோர்வி ஸஹஸ்வ மாம் அபி –என்கிறபடி
சர்வ சஹையான இவளுக்கு ஸ்ரீ சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் காட்டிலும்
ஷமாதி குண பூயஸ்த்தை உண்டாய் இருந்தது –

அப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகள் தாங்களே அறிவார்கள் –
ஆகையால் கர்ம வஸ்யரானவர்கள் ஸ்வ கார்யார்த்தமாகக் கேட்க உறவில்லாத ஷேத்ரஞ்ஞர் உபதேசிக்க –
ப்ரவர்த்தங்களான புராணாந்தரங்கள் போல் அன்றிக்கே சர்வ லோக ஜனனியான இவள் ஜகத் ஹிதார்த்தமாகக் கேட்க
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய –கீதை -11-43-என்கிறபடியே சர்வ லோக பிதாவானவன் அருளிச் செய்ய
ப்ரவ்ருத்தமான புராணம் ஆகையால் இது எல்லாவற்றிலும் அதிகம்
——————-
சரணாகதி பிரகரணத்தின் உத்கர்ஷம் –
ஸர்வேஷாம் இவ தர்மாணம் உத்தம வைஷ்ணவோ விதி -என்று ஸ்ரீ மஹா பாரதத்தில் சொன்ன
விசேஷ தர்ம பிராஸுர்யத்தாலும் இது சர்வ உத்க்ருஷ்டம்
இதில் முமுஷுக்களுக்கு சாஷாத் வா பரம்பரயா வா மோக்ஷ உபாயமாக விஹிதங்களான
சம்மார்ஜன உபலேபந சூர்ண சித்ர மாலாகரண தீபாரோபண ஹவிர் நிவேதன நந்த நவன கரண விமான நிர்மாண
ப்ரதக்ஷிண ப்ரணாம கதா ஸ்ரவண ஸ்துதி சங்கீர்தன குணகதன கீதந்ருத்த தாரண த்யானாதி-விசேஷ தர்மங்கள் தம்மில்
சர்வாதிகாரமுமாய் ஸூ கரமுமாய் ஸ்வாது தமமுமான உபாய விசேஷத்தைப் ப்ரதிபாதிக்கிற இப்பிரகரணம் உப ஜீவ்ய தமம்-
இவ் உபாய விசேஷம் -சா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் சர்வ காம பலப்ரதா –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -என்றும்
தாவதார்த்திஸ் ததா வாஞ்ஜா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதிகளில் படியே
யாதாதிகாரம் மோக்ஷ தத் உபாயாதிகளை சாதிக்க நற்றாய் இருக்கும் –
——————
வராஹ சரம ஸ்லோகத்தின் பெருமை –

இத்தை ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்வா பாவிக சார்வஞ்யத்தாலே அறிந்து இருக்கச் செய்தேயும்-
பிரஜா ஹிதார்த்தமாக -மாதா கேட்க -சர்வ பூத ஸூஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை -என்று
பிரசித்தமாக வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி -அஞ்ஞருமாய் அசக்தருமான அதிகாரிகளுக்கு
குரு உபாயத்தை விதித்தால் அது குருவியின் கழுத்தில் கட்டின பனங்காய் போலேயாம்
இவர்களுக்கு விஹிதமான அந்திம ப்ரத்யமும் மரண அவஸ்தையில் மனஸ் ஸூ ப்ராப்த விஷயத்தில்
ப்ரதிஷ்டித்தமாக மாட்டாமையாலே ஸ்வ யத்னத்தால் சாதிக்கப் போகாது
ஆன பின்பு ஸ்வரூப பரிகராதிகளால் சுமை அற்ற தொரு லகு உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும்
என்று விண்ணப்பம் செய்ய

சித்த உபாய பூதராய் சர்வஞ்ஞருமான ஸ்ரீ வராஹ நாயனார் தம்முடைய வசீகரண அர்த்தமாக சாத்தியமான
ஞான யஜ்ஜ சாரத்தையும் இவ்வளவிலே பிரசன்னராய்
ஜன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித்
தன் தாளிணைக் கீழ் கொள்ளும் படியையும்
ஸ்த்திதே மனசி -என்று தொடங்கி இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
இவ்வடைவே ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களையும் ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களையும்
ச ப்ராதுஸ் சரணவ் காடம்–அயோத்யா –31-2-
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா–அயோத்யா –31-25-என்ற இரண்டு ஸ்லோகங்களையும்
அகலகில்லேன் முதலான இரண்டு பாட்டுக்களையும் அன்யோன்ய உபகாரங்களாக அனுசந்திப்பது

—————
ஸ்லோக த்வயத்தின் சமுச்சிதார்த்தம்–

இவை இரண்டில்
பூர்வ ஸ்லோகம் –
மத் க்ருதே சர்வ பூதா நாம் லகு உபாயம் வத ப்ரபோ –என்று கேட்ட உபாய விசேஷத்தை
கால அதிகார பிரகார விஷய விசேஷங்களோடே கூடக் காட்டுகிறது
உத்தர ஸ்லோகம்
உபாசனத்துக்குப் போலே அந்திம ப்ரத்யயமும் உபாய கோடியிலே சொருகி ஸ்வ யத்ன சாத்தியம் ஆக வேண்டாத படி
சர்வ பர ஸ்வீ காரம் பண்ணின சரண்யனுடைய வியாபார விசேஷத்தாலே தேச காலாதி பரிச்சேத ரஹித
கைங்கர்ய பர்யந்த பரம புருஷார்த்த லாபத்தைக் காட்டுகிறது

——————

ஸ்த்திதே மநசே விவரணம் -சப்தார்த்தம் –
ஸ்த்திதே மநசி ஸூஸ் வஸ்த்த்தே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்த்த்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மா மஜம்

இங்கே -ஸ்த்திதே மநசி -என்ன வேண்டுமோ -சர்வ ஸ்ம்ருதிகளுக்கும் மனஸ்ஸினுடைய ஸ்த்தி
வேண்டி அன்றோ இருப்பது என்னில்
சஞ்சலம் ஹி மந கிருஷ்ண –ஸ்ரீ கீதை -6-34-என்றும்
அசம்சயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் ஸலம் –ஸ்ரீ கீதை -6-35-என்றும் சொல்லுகிறபடியே
வானரம் போலே கட்டி வைத்தாலும் காபேயம் விடாத மனஸ்ஸூ ஒரு ஸூஹ்ரு தம் விசேஷம் அடியாக உண்டான
சத்வ உன்மேஷ வசத்தால் சதாச்சார்ய உபதிஷ்டமான பரதத்வ பரம ஹித பரம புருஷார்த்தங்களிலே
தெளிவும் துணிவும் த்வரையும் பிறக்கும்படி ப்ரதிஷ்டித்தமான அளவு ஒழிய
இங்கு சொல்லுகிற ஸ்மரண விசேஷத்துக்குக் கர்மாந்தரங்களில் போலே ஒரு தேச கால விசேஷ நியமமில்லை –
புண்ய அபுண்ய தேச கால விசேஷங்களால் வருவதொரு பல உத்கர்ஷ அபகர்ஷமும் இல்லை என்கைக்காக
இங்கு மநஸ்ஸூ ஸ்த்திமாய் உள்ள இடத்தில் -என்கிறது –

——————–
ஸூஸ்வஸ்தே சரீரே விவரணம் -சப்தார்த்தம்
ஆனால் சரீர ஸ்வாஸ்த்த்யம் இல்லாத போது மநஸ்ஸூ னுடைய ஸ்த்த்தி கூடுமோ –
அப்போது இவன் பிரமாத நித்ராதிகளால் அபேக்ஷித ஸ்மரணத்தைப் பண்ண மாட்டாது ஒழியானோ –
ஆகையால் -ஸூஸ்வஸ்தே சரீரே-என்ன வேண்டுமோ என்னில்
சில கர்மங்களுக்கு சரீர அவஸ்தா ரூபமான வயோ விசேஷமும் -ஸூத்யாதிகளும் -பிராங்முக ஆஸீ நத்வாதிகளும் –
அபேக்ஷிதங்களாய் இருக்கும் -இதற்கு அப்படி அன்று –
சாஸ்த்ரார்த்த ப்ரதிஸந்தானத்திற்கு அநு குணமான சரீரத்தினுடைய ஸூஸ்வஸ்த்த தசையே வேண்டுவது
மற்றும் யோக உப யுக்த மநோ நியமத்துக்குச் சொன்ன அப்யாசா திகளும் வேண்டாம் என்கைக்காக
சரீர -ஸூஸ்வஸ்த மான அளவிலே -என்கிறது
இங்கு ஸூஸ்வஸ்தம் ஆகையாவது அபேக்ஷித விஸ்மரண உன்மாத நித்ராதி ஹேதுவான தசை கழிகை-
ஸூஸ்வஸ்தம் ஆகையாவது சத்வ உன்மேஷ விசேஷத்தாலே பரம புருஷார்த்த ருசி பிறக்கைக்கு அனுகுணமாகை
———————
தாது சாம்யே ஸ்த்திதே விவரணம் -சப்தார்த்தம்
இந்த சரீர ஸ்வாஸ்த்த்யம் தான் ஆயுர்வேத யுக்தமான தாது சாம்யத்தை ஒழிய வருமோ -ஆனால் –
தாது சாம்யே ஸ்த்த்திதே -என்றது என் என்னில் -இவ்விடத்தில் சர்வருக்கு சம்பாவிதமான தாது ஸாம்யத்தாலே வரும்
சரீர ஸ்வஸ்த்த்தை ஒழிய சமாதி பரர்களுக்குப் போலே ஆசன பிராணாயாமாதி களாலே ஒரு அபூர்வ
சரீர ஸ்வாஸ்த்த்யம் தேட வேண்டாம் என்றபடி
இங்கு பிரபத்திக்கு வேண்டும் அளவு மநஸ் ஸ்த்த்தித் யாதிகளைச் சொல்லுகிறது ஆகையால்
ஆதி வ்யாதிமான்களுக்கு பிரபத்தி சொல்லுவது விருத்தம் அன்று –

——————–
சதி சப்தார்த்தம் –
இப்படிகளாலே
பிரபத்தே க்வசித் அபி ஏவம் பராபேஷா ந வித்யதே -ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -என்று சொன்ன
நைரபேஷ்யம் பிரகாசிதம் ஆயிற்று –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் –
மஹதா புண்ய பண்யேந க்ரீதேயம் காயநவ்ஸ் த்வயா
ப்ராப்தும் துக்கோததே பாரம் த்வர யாவந் ந பித்யதே –ஸ்ரீ வராஹ புராணம்
சரீரமான படகு உன் புண்யத்தால் வாங்கப்பட்டது -சம்சார கடலின் அக்கரையை படகு அடைவதற்குள் அடைவாய் -விரைவாயாக –
கிளர் ஓளி இளமை கெடுவதன் முன்னம் -என்னும் அர்த்தம் தோற்ற
சதி -என்கிறது –
இது மூன்றிலும் அந்வயிக்கிறது –

———————–
ய சப்தார்த்தம்-நர சப்தார்த்தம்-

சாஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் -என்கிறபடியே பிரபத்தியினுடைய சர்வாதிகாரத்வம் தோற்ற -யோ நர-என்கிறது
இங்கு வர்ணாஸ்ரமாதி நியமம் இல்லை -சத்ய வசனாதிகளைப் போலே சாமான்ய தர்மம் ஆகையால்
சரண்ய சரணாகதி தத் பல ஞானமுடையார் எல்லாருக்கும் ருசி பிறந்த போது
சர்வ யோக்யம் அநாயாசம் -என்றும்
சர்வ லோக சரண்யாய —என்கிற விஷயத்தைப் பற்றக் குறையில்லை என்று தாத்பர்யம்
ஆனாலும் ய-என்கிற அளவே அமையாதோ -நர -என்றது மிகுதி அன்றோ – -இது தான் –
சித்த கந்தர்வ யஷாஸ் தத த்வாம் சரணம் கதா –பாலா -15-24-என்றும்
ததுபர்யபி பாதராயண சம்பவாத்–ஸ்ரீ சாரீர ஸூத்ரம் -1-3-25–என்றும்
தேவாதிகளுக்கும் பரம புருஷ ஸமாச்ரயண அதிகாரம் சொன்ன இடங்களோடே விரோதியாதோ என்னில்

துர்லபோ மானுஷோ தேஹ –
மானுஷ்யம் ப்ராப்ய லோகே அஸ்மிந் -இத்யாதிகளில் படியே ஸ்த்தாவராதி தசை கழிந்த மஹா லாபத்தையும்
விசித்ரா தேஹ சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்–இத்யாதிகளில் சொன்ன வழி தப்பினால் உள்ள அநர்த்தத்தையும்
நினைப்பிக்கையாலே -நர -சப்தம் ச பிரயோஜனம் -இது தேவாதிகளுக்கு வ்யச்சேதகம் அன்று –
கர்மபூமி கதரான உசித அதிகாரிகளை முன்னிட்டுத் தேவாதிகளையும் உப லஷிக்கிறது
இங்கு நர சப்தம் யோகத்தால் ஆத்ம வாசியாய் விதி ஸ்வ பாவத்தால் ஸாஸ்த்ர வஸ்யர் எல்லாரையும் காட்டுகிறதாகவுமாம்

———————-
ஸ்மர்த்தா சப்தார்த்தம்-

யாவனொரு நரன் -என்கிற இத்தால் எல்லாருக்கும் நினைவு கூடாது -இவ்வதிகாரி துர்லபன்-என்கிற அர்த்தம் தோற்றுகிறது-
இப்படி காலத்தையும் அதிகாரத்தையும் சோதித்து -அகிஞ்சன தமனான இவ்வதிகாரியினுடைய
க்ருத்ய விசேஷத்தை அருளிச் செய்கிறான் ஸ்மர்த்தா –
உபாசனம் போலே பிரபதனமும் ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்து அளவன்றிக்கே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடி
விதேயமாய் இருபத்தொரு ஸ்ம்ருதி விசேஷம் ஆகையால் இங்கே அவிதேய ஞானவாதிகளுக்கு அவகாசம் இல்லை –
இந்த ஸ்ம்ருதியில் ஆவ்ருத்திக்கு ஞாபகம் இல்லாமையாலும் –
ப்ரகாரணாந்தரங்களிலே-ஸக்ருத் -சப்தாதிகளாலே -அநா வ்ருத்தி காண்கையாலும்-
இங்கு சர்வ காலத்திலும் சர்வருக்குமாம் என்கையாலும் –
பிராரப்த சரீர அவசானத்தில் மோக்ஷம் என்று தோற்றுகிற ஸ்வா ரஸ்யத்திற்கு பாதகம் இல்லாமையாலும்
ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நிரபேஷதை சொல்லுகையாலும்
தத -என்கிற சப்தம் ஆவ்ருத்திக்கு விலக்காகத் தோற்றுகையாலும்
இது உபாஸனாதி சாஸ்திரங்களில் சொல்லுகிற ஸ்ம்ருதி அன்று
இங்கும் ஸக்ருத் ஏவ ப்ரபந்நாயா -என்கிற அர்த்தம் தோற்றுகிறது
இது பிராரத்தநா பூர்வ பர ந்யாஸம் -என்னும் இடமும்
இதற்கு மஹா விஸ்வாசாதிகள் அங்கங்கள் என்னும் இடமும்
வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் இதற்கு அங்கங்கள் அன்றிக்கே ஸ்வ தந்த்ரர் ஆஜ்ஜையாலே வருகின்றன என்னும் இடமும்
பிரகாரணாந்தரங்களிலே கண்டு கொள்வது

—————————
விஸ்வரூப சப்தார்த்தம்-மாம் சப்தார்த்தம்-அஜம் சப்தார்த்தம்-

இது பூர்வ பிரகரணத்தாலும் உத்தர ஸ்லோகத்தாலும் -மோஷார்த்த பிரபத்தி யாகையாலே தன்னை ஒழிந்தார்
முமுஷுக்களுக்கு ஆஸ்ரயணீயர் அல்லர் என்கைக்காகவும்-
தன்னை ஆஸ்ரயித்தே மோக்ஷம் பெற வேண்டும் என்கைக்காகவும்
இப்பிரபத்திக்கு இலக்கான தன் படிகளை -பரத்வ ஸுலப்ய ப்ரதிஷ்டாபகமாகப் பத த்ரயத்தாலே அருளிச் செய்கிறான்

விஸ்வரூப சப்தார்த்தம்
இதில் விஸ்வரூபம் என்கிற பதம் -நாரங்களை அயனமாக உடையவன் என்கிறால் போலே –
விஸ்வத்தையும் தனக்கு சரீரமாக உடையவன் என்கிறது –
இத்தால் சர்வத்துக்கும் ஆராதமுமாய்-நியாந்தாவுமாய் -சேஷியுமாய் -இவை தம்மால் இவற்றினுடைய
சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தாதிகள் தான் இட்ட வழக்காய்-கைங்கர்ய உத்தேஸ்யனுமாய் –
ஸ்வார்த்தமாக சாது பரித்ராணாதிகளும் ப்ரவர்த்திக்கிறான் என்றும் –
ஆஸ்ரயணீயன் சர்வ வ்யாப்தனாகையாலே ஆஸ்ரயிப்பார்க்கு நித்ய ஸந்நிஹிதன் என்றும் தோற்றுகிறது

மாம் சப்தார்த்தம்
ஸ்வரூப சந்நிதி ஸூரிகளுக்கும் -முக்தருக்கும் -யோகிகளுக்கும் -காணலாம் அத்தனை அன்றோ –
விக்ரஹ விசிஷ்டனானாலும் பர வ்யூஹங்கள் இங்குள்ளார்க்கு இலக்காக வற்றோ என்னில் –
இந்த விபூதியில் எல்லாரும் ஆஸ்ரயிக்கலாம் படி விபவ ரூபத்தால் வந்து நிற்கிற நிலையும்
இதற்கு மூலமாய் ஆஸ்ரயணீயதைக்கு உறுப்பான கிருபாதிகளும் தோற்ற மாம் என்கிறான் –
சமுத்திதோ நீல அசல இவ மஹான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26–
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப —-கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்கிறபடியே
போக்கற்று விழுந்தாரை எடுக்கைக்கு அநு குணமான ஸூபாஸ்ரய விக்ரஹ விசேஷத்தோடே தோற்றின என்னை நினைக்குமவனுக்கு
ஆயாச ஸ்மரணே கோ அஸ்ய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்கிறபடியே
இந்த பகவானை த்யானம் செய்வதில் அருமை இல்லையே என்று தாத்பர்யம் –

விஸ்வரூபம் -மாம் -என்கிற பதங்களால்-
ஜகத் ஹித அவதாரத்வ -சரண்யத்வ -ப்ராப்த்த்ய உபயுக்த சர்வ கல்யாண குணாகரத்வமும் சித்திக்கிறது –
இது அனுக்த சமுச்சய அர்த்தகமான ச காரத்தாலே யாகவுமாம் –

அஜம் சப்தார்த்தம்-
ஆனால் விஸ்வரூபம் என்கிற பதத்தில் சொன்ன -சர்வ சரீரத்வத்தாலும் -மாம் -என்கிற பதத்தில் பலிதங்களான
சர்வ உபாதாநத்வ-நிமித்வத்வங்களாலும் -சேதன அசேதன தோஷங்கள் எல்லாம் சங்கிக்கலாம் படி அன்றோ இருப்பது –
பிறக்கின்றவன் தனக்கும் மற்றும் பிறப்பாருடைய பிரகாரங்கள் உண்டாக வேண்டாவோ –
அவதாரங்களில் சோக மோஹாதிகள் சொல்லவும் காண்கிலமோ -இப்படியானால் –
ஸ்வ ரஷனே அபி அசக்தஸ்ய கோ ஹேதூ பர ரஷனே –சாந்தி பர்வம் -294-19-என்கிற சோத்யம் வாராதோ என்ன
அஜம் -என்று
புருஷாந்தர சஜாதீய ஜென்ம நிஷேதத்தாலே தன்னுடைய ஹேய பிரதிபடத்வத்தைக் காட்டுகிறான் –

இங்கே ஜனனத்தை நிஷேதித்தது மற்றும் உள்ள பாவ விகாரங்கள் -ஷடூர்மிகள்-என்றால் போலே சொன்ன
சேதன அசேதன தோஷங்கள் எல்லாத்தையும் நிஷேதிக்குமதுக்கு உப லக்ஷணம் ஆகையால்
அசக்தி ரூபமான தோஷம் கழிந்து ஹேயபிரதிபடத்வமும் சித்திக்கிறது –
அவதாரங்களில் சோகாதிகள் சொன்ன இடத்துக்கு அபிநயத்திலே தாத்பர்யம் –
இவ்வர்த்தத்தை வெளியிடுகிற-மனுஷ்ய தேஹி நாம் சேஷ்டாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18–
ஈஸந் நபி மஹா யோகீ–உத்யோக பர்வம் -67-1-
தேந வஞ்சயதே லோகாந் –உத்யோக -67-15-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது –
—————————-
உத்தர ஸ்லோகஸ்ய சரண்ய க்ருத்ய பரத்வம் –
இப்படி கீழ் பூர்வ ஸ்லோகத்தால் சித்த உபாய பூதனான சரண்யனையும் -இவனுடைய வசீகரண அர்த்தமாக
சாத்தியமான அதிகாரி க்ருத்ய விசேஷத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் பிரசித்தி தோற்ற அனுவாத ரூபமான வாக்யத்தாலே காட்டி
பர ஸ்வீகாரம் பண்ணின தன்னுடைய க்ருத்யமாக
ஜன்ம சன்மாந்தரம் காத்து –இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ அநிஷ்ட நிவர்த்தநத்தையும்
பரம புருஷார்த்த ப்ராபணத்தையும் ப்ரபன்னன் திறத்தில் வாசி தோற்ற உத்தர ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறான்

தத தம் ம்ரியமாணம் து காஷ்ட்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதாம்

———————
தத சப்தார்த்தம்-
தத -என்கிற பதத்தால்-ஸ்மரணம் ஹேதுவாக -என்று பொருளானால் இதற்கு ஒரு பிரயோஜனம் இல்லை –
தம் -என்கிற அளவாலும் இது தோற்றும் –
இப்படியே ஸ்மரணத்திற்கு பின்பு -என்று தாத்பர்யம் கொண்டாலும் மிகுதியாம்-ஆகில் என் என்னில் –
ஆர்த்தி விசேஷாதிகளால் ப்ரபத்திக்கு அனந்தர க்ஷணத்தில் சரீர பாதம் பிரஸ்த்துதம் ஆனாலும்
இந்த ஸ்மரணத்து அளவே வ்யாஜமாக சரீராந்தரத்தில் பிரவேசியாதபடி அப்போதே ரஷிப்பான்-
இவனுக்குப் பர ந்யாஸம் பண்ணின விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை என்று தோற்றுகைக்காக-
தத -என்கிறது –
——————
தம் சப்தார்த்தம்-
தம் -என்றது க்ருதக்ருத்யனாய் -சாதக விருத்தியான தனக்கு வரும் மரணத்தை
பிரியாதிதியைப் போலே பார்த்து இருக்குமவனை என்றபடி
——————–
மத் பக்த சப்தார்த்தம்-
மத்பக்தம் -என்றது -நம்மையே நிரதிசய போக்யமாக உகந்து பற்றினவனை என்கிறது –
தம் -மத் பக்தம் -என்கிற இரண்டு பதத்தாலுமாக -அநந்ய உபாயனுமாய் -அநந்ய ப்ரயோஜனமுமானவனை –
இத்தால் ஐஸ்வர்ய கைவல்ய அர்த்த ப்ரபன்னரையும் -மோஷார்த்த உபாசக்கரையும் வியவச்சேதிக்கிறது –
காருணிகனான ஈஸ்வரன் எல்லாருக்கும் மோக்ஷம் கொடுக்க ப்ராப்தனே யாகிலும் அநாதி கர்ம ப்ரவாஹ விஷமிதரான
அதிகாரிகளுக்கு நிர் வ்யாஜமாக மோக்ஷம் கொடுத்தால் -கர்மாநுரூப பல ப்ரதாயித்வ நியமம் குலையும் –
அது குலையாமைக்காக இப்பதத்தில் சொன்ன ஆகாரம் உடையோருக்கு மோக்ஷம் என்கிறது –
காருண்யம் ஒன்றையும் பிரதானம் ஆக்கி ஸாஸ்த்ர சித்த ஸ்வ தந்த்ர வ்யவஸ்த்தையைக் குலைக்கப் பார்த்தால்
ஸத்ய சங்கல்ப்யத்தை இல்லாமையால் இஸ் ஸ்வா தந்தர்யமும் அழிந்து நிரீஸ்வர வாதமும் பிரசங்கிக்கும் –
இப்படியே சர்வரும் ஈஸ்வர கிருபையால் நித்ய முக்தராகத் தட்டு என் என்கிற சோத்யமும் பரிஹ்ருதம்
ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வாதிகள் இல்லாத போது ஒருவனை விசேஷித்து
ஈஸ்வரன் என்கைக்கு பிரமாணம் இல்லை இறே
இங்கே மத் பக்தம் -என்கிற பதம் –
பக்தி யோக நிஷ்டனைச் சொல்லுகை லகு உபாய உபதேச பிரகரணத்திற்கும் –
தத் அநு குணங்களான பூர்வ ஸ்லோகத்தில் பதங்களுக்கும்
இஸ் ஸ்லோகத்தில் அந்திம தசையில் -காஷ்ட்ட பாஷாண சந்நிபம் -என்கிறதுக்கும் அநு குணமாகாது –
பஸ்ஸாத் பாவியாய்க் கத்யந்தரம் உண்டான ஒரு பதத்தைக் கொண்டு பூர்வ பாவியான பிரகரணத்தையும்
ஸ்வ வாக்கியத்தில் அநேக பத ஸ்வாரஸ்யத்தையும் பாதிக்கை நியாய விருத்தம்
————————
ம்ரியமாண து சப்தார்த்தம்-
இவனுக்கு இனி ஜன்மாந்தரங்கள் இல்லை -மரணமானால் -என்கிறபடியே பிராரப்த சரீரம் விடும் அளவே ப்ராப்திக்கு வேண்டுவது என்று தோற்றுகைக்காக
ம்ரியமாணம் -என்கிறான்
மரித்தவனை -என்னாதே–ம்ரியமாணனை
நயிப்பிப்பேன் -என்கிற இத்தால் தான் விண்ணுலகம் தர வரைகின்ற படியைத் தோற்றுவிக்கிறான்
து காஷ்ட்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதாம்

து-என்கிற இது
அல்லாதார் மரணம் போலே இங்கு உள்ளார்க்கும் லோகாந்தரத்தில் உள்ளார்க்கும் இவன் சோஸ்யனாம் படி அன்றிக்கே –
ஸ்ரீ வைகுண்ட நாதனும் ஸூரி களும் முக்தரும் நல் விருந்து வருகிறது என்று வீடு திருத்தும் படியாய்
இங்கும் க்ருதக்ருத்யரான ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும் நாமும் இது பெற்றிலோமே என்று நாக்கு நீளும்படியான
நல்லதோர் அவப்ருதம் இது என்று இம்மரணத்தினுடைய மஹா உத்சவத்தையும்
இதற்கு பிரசஸ்த தேச கால நிமித்தங்கள் நிரூபிக்க வேண்டா –
ஆயுர் அவசானத்து அளவிலே இவனுக்கு பல சித்தி என்னும் இடத்தைத் தோற்றுவிக்கிறது

——————-
காஷ்ட்ட பாஷாண சந்நிப சப்தார்த்தம்-

காஷ்ட்ட பாஷாண சந்நிபம் -என்கிறது -முன்புற்ற கார்ப்பண்யம் போலே உபாயத்துக்கு உறுப்பாகிறது அன்று –
பின்புற்ற அர்ச்சிராதி கதி போல் பல கோடி கடிதமாய் வருகிறதும் அன்று
இவனுக்கு ஸ்ரீ த்வய அனுசந்தாதிகளைப் போலே இன்குற்ற புருஷார்த்த விசேஷமாய் இருப்பதும் ஓன்று அன்று
இப்படி இருக்க இவனுடைய அசித் கல்பதையைச் சொல்லுகிற இது பூர்வ உத்தரங்களுக்கு அநுப யுக்தமாய் –
இவ்வளவும் அன்றிக்கே பிரபன்னனுக்கு நிந்தையும் ஆகாதோ என்னில் -இது

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிறபடியே
உபாயத்தினுடைய ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நைர பேஷ்யத்தையும்
சந்தாம் -தைத்ரீயம் -இத்யாதிகளில் படியே ஜுகுப்ஸா விஷய தசையில் சரண்யனுடைய வாத்சல்ய விசேஷத்தையும்
ஒரு பிரகாசமும் அற்றுக் கிடக்கிற இவனை பிரதீ பவத் ஆவேச -சாரீரிகம் -4-4-5-என்கிறபடியே
ஒரு காலே சர்வஞ்ஞன் ஆக்குகின்ற ஆச்சர்ய சக்தி யோகத்தையும்
ப்ரபன்னன் இப்படி தீர்க்க நித்திரை பண்ணும் போது சர்வவித பந்துவான அந்தர்யாமியை ஒழிய மற்று ஒருவரும்
தட்டி எழுப்ப மாட்டார்கள் -என்னும் அர்த்தத்தையும் விஸ்தரித்து
காலும் கையும் விது விதிர்த்து ஏறி கண் உறக்கமாவதன் முன் –வேலை வண்ணனை –மேவ வேண்டும் என்று
முமுஷுக்களுக்கு சரண்ய வசீகரணத்தில் விரைதல் பிறப்பிக்கைக்காகவும் இப்பதம் பிரயுக்தம் ஆகிறது ஆகையால்
இது உப யுக்தமாய் உபாயாதிகளுடைய ஸ்துதியுமாகிறது –

ஆனாலும் ஒரு த்ருஷ்டாந்தமே அமையாதா என்னில் சாதர்ம்யத்தில் அதிசயம் தோற்றுகைக்காகப்
பல த்ருஷ்டாந்தம் சொல்லக் கடவது என்று ஆலங்காரிகர் சொன்னார்கள் –
இவன் சைதன்ய ஆஸ்ரயமான அஹம் அர்த்தமாய் இருந்தானே யாகிலும் அப்போதையில் அஞ்ஞானத்தை
நிரூபித்துப் பார்த்தால் காஷ்ட்ட பாஷாணங்களினுடைய அந்யோன்ய வைஷம்யத்து அளவும் போரும் இதனை
அவற்றுக்கும் இவனுக்கும் உள்ள வைஷம்யம் என்று கருத்து ஆகவுமாம்–இப்படியானால்
ததா ப்ரலீநஸ்தமஸீ மூட யோநிஷு ஜாயதே -ஸ்ரீ கீதை –14-15-என்றும்
யம் யம் வாபி ஸ்மரந் பாவம் -8-6- என்றும் சொல்லுகிற பிரமாணங்கள் சேரும்படி என் என்னில் –
அவை சாமான்ய விசேஷம் -இது விசேஷ விசேஷம்

நஷ்ட ஸ்ம்ருதிரபி பரித்யஜந் தேஹம்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதும் அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் –இத்யாதிகளுக்கும் இதுவே நிர்வாகம்
சரீர பாத ஸமயே து கேவலம் மதிய யைவ தயயா அதி பிரபுத்த –ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்று
பிரபன்னர் தங்களிலே சிலரைப் பற்ற என்று சிலர் நிர்வஹிப்பார்கள்-
அங்கன் அன்றிக்கே
காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம்
நஷ்ட ஸ்ம்ருதிரபி பரித்யஜந் தேஹம்–இத்யாதிகளை ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய நிவ்ருத்தியிலே தாத்பர்யம்
மதிய யைவ தயயா அதி பிரபுத்த-இத்யாதி வாக்கியம்
ஸ்வ யத்னம் இன்றிக்கே இருக்க பகவத் கிருபா மாத்திரத்தில் அந்திம பிரத்யய விசேஷம் ப்ரபன்னர் எல்லாருக்கும்
வருகிற படியைக் காட்டுகிறது என்றும் சிலர் நிர்வஹிப்பார்கள்

—————-
அஹம் ஸ்மராமி விவரணம் -சப்தார்த்தம்-
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா சர்வ –ஸ்ரீ நியாய தத்வம் -என்னும்படியாய் இருக்கிற ஈஸ்வரன்
ஷேத்ரஞ்ஞரைப் போலே மறப்பது ஒரு காலமும் நினைப்பது ஒரு காலமும் இன்றிக்கே இருக்க
இப்போது -அஹம் ஸ்மராமி -என்பான் என்னில்
பிரபன்னனுக்கு அப்போது ஸ்வ யத்னத்தால் ஸ்மரணம் இல்லையே யானாலும் இந்த ஸ்மரணம் முதலாயாதல்
இதற்கு மேலேயாதலால் உள்ள பலம் எல்லாம் பர ஸ்வீ காரம் பண்ணி ஸ்வீ க்ருத நிர்வஹண ஷமனுமான
தன்னாலே சித்திக்கும் என்று தோற்றுகைக்காகத் தன்னுடைய ச அனுக்ரஹ புத்தி விசேஷத்தை ஸ்மரண சப்தத்தால் உபசரிக்கிறான்
இங்குற்ற வர்த்தமான வ்யபதேசத்தாலே
இவ்வநுக்ரஹத்துக்கு பின்பு ஒரு நிக்ரஹம் வாராது என்னும் இடம் தோற்றுகிறது
இதில் உத்தமனே அமைந்து இருக்க சரம ஸ்லோகத்தில் போலே மிகுதியான -அஹம் -என்கிற பதத்தாலே
ஸ்வா தந்தர்யம் அடியாக சர்வ ஷேத்ரஞ்ஞர் நிறத்திலும் விபரீத கர்மாநுரூபமான நிக்ரஹத்தில் பிரவ்ருத்தனாய்
லீலா ரசத்தை அனுபவித்துப் போந்த தான் காருண்யம் அடியாக வ்யாஜ விசேஷ அனுக்ரஹ ப்ரவ்ருத்தனாய்
ஆஸ்ரித ரக்ஷண ரசத்தை அனுபவிக்க நினைத்த போதே மோக்ஷம் கொடுக்க வல்ல படியையும் –
அப்போது விலக்க வல்லார் இல்லாத படியையும் தான் கட்டின காலாதிகளை ஒழியத் தனக்கு வேறு ஒரு
சஹகாரி வேண்டாத படியையும் தோற்றுவிக்கிறான்

காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம் –அஹம் ஸ்மராமி -என்கிற இரண்டாலும்
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர ததோ மே தத் கதம் மந –சாந்தி பர்வம் -46-11-என்கிற பிரகாரத்தைக் கழிக்கிறான் –
இதில் புருஷ வ்யாக்ரரான பீஷ்மர் நினைக்க இவன் திரு உள்ளம் அங்கே சென்றத்தை அருளிச் செய்கிறான்

மத் பக்தம் -அஹம் ஸ்மராமி -என்கிற இத்தால் நித்ய அனுபவம் பெறுகைக்கு ஒரு நினைவு பண்ணினவனைப் பற்ற
நாமும் நித்ய அனுபவம் கொடுக்கைக்கு ஒரு நினைவைப் பண்ணுவுதோம் என்றதாயிற்று –

———————-

நயாமி சப்தார்த்தம்-பரமாம் கதிம் விவரணம் -சப்தார்த்தம்-

இப்படி -தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைத்து
அருள் செய்யும் அப்பன் –பெரிய திருமொழி -7-3-2-
என்னும்படியான தன் நினைவு பரம புருஷார்த்த பர்யந்தமாகிற படியைப் பற்ற -நயாமி பரமாம் கதிம் -என்கிறான் –

நயாமி -என்கிறதிற்குச் சேற்றிலே விழுந்த சிறு பசல்களை எடுக்க விழுந்த பிதாவைப் போலே
இவனுடைய தேகத்துக்கு உள்ளே ஹார்த்தனாய் நிற்கிற நான் தானே அப்ராக்ருத பர்யங்க ஆரோஹண பர்யந்தமாக நடத்துவன்
நடுவு வரும் அர்ச்சிராதிகளும் இவனை எதிர் கொண்டு சத்கரித்து தரம் பெறுகைக்கு நாம் அடைத்த நிலைப் பேறு என்று தாத்பர்யம் –
கீழ்ச் சொன்ன பிரபத்தி சகல பல சாதனமாக வற்றாய் இருந்ததே யாகிலும் அநந்ய ப்ரயோஜனனான இவனுக்கு
ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுத்தல்
மது வித்யாதிகளில் போலே ஐஸ்வர்ய ஆத்ம ரூப ஷூத்ர பல வ்யவஹிதமாக மோக்ஷம் கொடுப்புதல் செய்யேன் –
அவ்யஹிதமாகப் பரம புருஷார்த்தத்தை அடைவிப்பேன் என்கிற விசேஷம் தோற்ற -பரமாம் கதிம் -என்கிறான்
இங்கு கதிம் -என்கிறது -ப்ராப்யத்தை -என்றபடி –
பரமாம் கதி -என்கிறது முக்தா நாம் பரமாம் கதி -சஹஸ்ர நாமம் -என்கிறபடியே
பரம ப்ராப்யனான தன்னை யாதல் -தன் விஷயத்தில் பரி பூர்ண அனுபவத்தை யாதல் –
அவ்வனுபவ பரி வாஹமான கைங்கர்ய விசேஷத்தை யாதல் சொல்லுகிறது –
இவற்றில் ஒன்றைச் சொன்னாலும் மாற்று உள்ளவையும் சொல்லிற்றாய் விடும்
இதில் நயாமி -என்கிற இத்தால் தன்னுடைய ப்ராபகத்வமும்
பரமாம் கதிம் -என்கிற இத்தால் தன்னுடைய ப்ராப்யத்வமும் சொல்லிற்றாகை உசித தமம்
பரமையான கதி -என்று அர்ச்சிராதி கதியை யாதல் -பரம பதத்தை யாதல் -சொல்லுவார்க்கு
முடிவில் அவனுடைய ப்ராப்தியிலே தாத்பர்யம் –

—————————

ஸ்லோக த்வய சமுச்சித அர்த்தம்

இப்படி இரண்டு ஸ்லோகத்தாலும்
இச்சேதனன் முமுஷுவாயும் முக்தனாயும் இரண்டு விபூதியிலும் பெரும் பேறு சொல்லிற்று ஆயிற்று
நயாமி -என்கிற இதில் -பரஸ்மை பதத்தாலே ஸ்வதஸ் சர்வ சேஷியான தன்னுடைய ஆஸ்ரித பிரயோஜன பிரதான
அபிசந்தியைத் தோற்றுவிக்கிறான் –
அசித்தின் உடையவும் அசித் பிராயருடையவும் வியாபாரம் ஸ்வ ப்ரயோஜன பர ப்ரயோஜனங்கள் இரண்டையும்
உத்தேசியாதே பர ப்ரயோஜன அர்த்தமாக இருக்கும் –
ஞாதாவான அவஸ்தையில் ப்ரயோஜநாந்தர பரன் பர ப்ரயோஜன அர்த்தமாக ப்ரவர்த்திக்கும் போது
ஸ்வ ப்ரயோஜனத்தை உத்தேச்யமாகக் கொண்டு நடக்கும் –
அநந்ய ப்ரயோஜனான ஞாதா ஸ்வ ப்ரயோஜனத்திலும் பர ப்ரயோஜன உத்தேசேந ப்ரவர்த்திக்கும்
நிருபாதிக சர்வ சேஷியான சர்வேஸ்வரன் -ஸ்வம் உத்திஸ்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-87-என்கிறபடியே
பர ப்ரயோஜனத்திலும் ஸ்வ ப்ரயோஜன அர்த்தமாக ப்ரவ்ருத்தித்தாலும்
இவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்ய பிரகாரத்தைச் சொல்லப் பார்த்தால்
வரத சகல மேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-என்கிறபடியே–
ஸ்வ ப்ரயோஜனத்திலும் பர ப்ரயோஜன அர்த்தமாகப் ப்ரவர்த்திக்கும் என்னலாம் –
இவ்வர்த்தங்களை
காஷ்ட்ட பாஷாண ஸந்நிபம்
ஸ்மர்த்தா
மத் பக்தம்
அஹம் ஸ்மராமி
நயாமி -இத்யாதிகளிலே அனுசந்திப்பது

——————-
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –

இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே

——————-
வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்

ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –