ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் – –ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் -பூர்வார்த்தம் – தர்மான் – சர்வ தர்மான்-பதார்த்தம் /த்யஜ-த்யஜ்ய- பரித்யஜ்ய -பதார்த்தம் — –

ஸ்ரீ பரகாலார்ய தாசேந ஸ்ரீ ரெங்க ஸ்ரீ மதானுதா
சரண்யாபி மத ஸ்லோக தாத்பர்யம் அநு சந்ததே

அபய ப்ரத குரு ஸூநுவான ஸ்ரீ ஸூந்தர வரதாச்சார்யரும் இஸ் ஸ்லோக தாத்பர்யம் அருளிச் செய்யும் இடத்தில்
மத் ப்ராப்த் யர்த்த தயா -இத்யாதியாலே என்னைப் பெறுகைக்கு உறுப்பாக என்னாலே சொல்லப்பட்ட எல்லா சாதனங்களையும்
ச வாசனமாக விட்டு அநந்தரம் என்னை ஒருவனையுமே என்னைப் பெறுகைக்கு சாதனமாக வியவசாயத்தைப் பண்ணு –
ஏவம் ரூப வியவசாய யுக்தனான யுன்னை ஞான சக்தியாதி சகல குணங்களாலும் பூர்ணனான நான்
என்னைப் பெறுகைக்கு பிரதிபந்தகங்களான எல்லாப் பாபங்களாலும் விரஹிதன் ஆக்குகிறேன்
சோகியாதே கொள் என்று இதர உபாய நிவ்ருத்தி பூர்வகமான சித்த உபாய வரணத்தை
இதுக்குத் தாத்பர்யமாக அருளிச் செய்தார் –

ஆகையால்
சகல சாதன அஸஹமான சித்த உபாயத்தை -சாதனாந்தர கர்மாதி தியாக விதான பூர்வகமாக விதிக்கையாலே
இஸ் ஸ்லோகத்துக்கு ஸ்வாரசிகமான வர்த்தம் இதுவே என்னும் இடம் சர்வ சம் பிரதி பன்னம் என்றதாயிற்று –
ஏவம் ரூபமான கர்மாதி உபாயங்களைக் கீழ் அடையப் பரக்கச் சொல்லி -அநந்தரம் -இப்பிரபத்தியைச் சொல்லி –
இதுக்கு அவ்வருகே ஓர் உபாயம் சொல்லாமையாலே இத்தைச் சரம ஸ்லோகம் என்று நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள் –

மாம் சரணம் வ்ரஜ -என்னையே உபாயமாக பற்று என்று தானே ஆதரித்து விதிக்கையாலும்
அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று நானே பாப விமோசனம் பண்ணுவிக்கக் கடவேன் என்று
ப்ரேமத்தோடே சொல்லுகையாலும் -சரண்ய அபிமதத்வம் இதுக்குத் தாத்பர்யம் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த சாதன தியாகத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ த்வயத்தில் ஈஸ்வர பாரதந்தர்ய நிபந்தனமாக உபாயம் சொல்லுகிறது
இதில் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய நிபந்தனமாக உபாயம் சொல்லுகிறது
ஆகையால் ஈஸ்வர ஸ்வரூபம் சொல்லுகை இதுக்கு பிரதான அர்த்தம் –

இவ்வுபாய ஸ்வீ காரம் ஸ்வீ கார்ய ஸ்வரூப தரிசனத்தால் அல்லது கூடாமையாலே அநு சந்தானம் ஸுலப்யம் என்று
நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வர்-
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வரூபமான உபாயத்தை பிரதாநயேந ப்ரதிபாதிக்கிறது –
அது இதர உபாய தியாகத்தால் அல்லது கூடாமையாலே சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று
தத் அங்கமான சாதனாந்தர தியாகம் சொல்லிற்று

அவன் உபாயத்வேந ஆஸ்ரயணீயனாம் போது ஆஸ்ரித கதமான தோஷாதிகள் பாராமல் ஆஸ்ரயணீயனாக வேண்டுகையாலே
தத் உபயோகியான வாத்சல்யாதி குணத்தை -மாம் -என்கிற இடத்தில் சொல்லுகிறது –

அவ்வுபாய கார்யமான இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு ஓர் அதிகாரி விசேஷ அபேக்ஷை உண்டாகையாலே
அவ்வதிகாரி விசேஷணமான சித்த உபாய பிரபத்தியை -சரணம் வ்ரஜ -என்கிற இடத்தால் சொல்லுகிறது –

அவ்வுபாய கார்யமான பாப விமோசனத்துக்கு அபேக்ஷிதமான ஞான சக்த்யாதி குண யோகத்தை -அஹம் -என்று காட்டுகிறது –

சித்த உபாயத்வ பிரதிபத்தி யுக்தனான அதிகாரியைக் காட்டுகிறது -த்வா-என்று

மேலில் பத த்வயமும் உபாய க்ருத்யமான பாப விமோசனத்தையும்
உபாய ஸ்வீ கார பலமான நைர்ப்பர் யத்தையும் சொல்லுகிறது –

இதில் சொல்லுகிற நிரபேஷ உபாயத்வமும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பிரதத்வமும் ஈஸ்வரனுக்கு
ஸ்வரூபம் ஆகையால் இது தான் ஈஸ்வர ஸ்வரூபம் சொல்லுகிறது என்னவுமாம் –
இந்த உபாய வரணமும் தத் கார்யமான நிர் பரத்வ அநு சந்தானமும் பகவத் ஏக ரஷ்யமாய் பகவத் ஏக சேஷமுமாய் இருக்கிற
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையால் ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என்றலுமாய் இருக்கும் –

இதில் பூர்வார்த்தம் அதிகாரி க்ருத்யம் சொல்லுகிறது –
உத்தரார்த்தம் உபாய க்ருத்யத்தையும் அதிகாரி க்ருத்ய லேசத்தையும் சொல்லுகிறது –
அதிகாரி க்ருத்யம் இதர உபாயங்களை விட்டு அவனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரனாய் இருக்கை
உபாயத்துக்கு க்ருத்யம் -தியாக ஸ்வீ காரங்களுக்கு ப்ரேரகனாய் விடுவித்துப் பற்றுவிக்கையும்
ஸ்வேந ரூபேண நின்று அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளைப் பண்ணுகையும்

————–

சர்வ தர்மான் –இத்யாதி
இதில் தர்ம சப்தம் இஸ் ஸ்லோகத்தில் பிரதான ப்ரதிபாத்யமான சித்த உபாயத்தினுடைய ஸ்வீ காரத்துக்கு
அங்கமான தியாகத்துக்கு விஷயமான சகல தர்மங்களையும் உபாதானம் பண்ணுகிறது

இது தான் ஸ்ரேயஸ் சாதனம் தர்ம -என்று பல சாதன தயா ஸ்வ சாத்தியமாக ஸாஸ்த்ர சோசிதமான தர்மங்களைச் சொல்லுகிறதாய் –
அத்தாலே ஞான யோகத்துக்கு சாதனமாக விதிக்கும் கர்ம யோகத்தையும் –
பக்தி யோகத்துக்கு சாதனமாக விதிக்கும் ஞான யோகத்தையும் சொல்லுகிறது -என்னில்
ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –என்கிற ஸநாதன தர்மத்துக்கு தர்ம சப்த வாஸ்யம் இன்றியிலே ஒழியும்
அப்போது -சரணம் வ்ரஜ -என்கிற விதிக்கு வையர்த்தம் பிரசங்கிக்கும்
மோக்ஷயிஷ்யாமி யோடும் விரோதிக்கும்
ஆகையால் இத்தர்ம சப்தம்
ஸ்ரேயஸ் சாதனம் தர்ம -என்றும்
சோதநா லக்ஷனோர்த்தோ தர்ம -என்றும் –சொல்லுகிறபடியே
பல சாதனதயா ஸாஸ்த்ர சோதிதமான தர்மத்தைச் சொல்லக் கடவது

இந்த தர்ம சப்தம் தான்
தர்மம் என்றும்
பர தர்மம் என்றும்
பரம தர்மம் என்றும் –த்ரிவிதமாய் இருக்கும்

இதில் தர்ம -சப்தத்தால் —
ஸ்ருணுஷ்வ பரமம் காமத் விவிதமததி ஹோஸ்யதே-ஏகம் ப்ரவர்த்தகம் ப்ரோக்தம் நிவர்த்தக மதாபரம் –
காமதஸ் துக்ருதம் கர்ம ப்ரவ்ருத்தம் உபதிஸ்யதே -நிஷ் காம ஞான பூர்வந்து நிவ்ருத்தம் உபதிஸ்யதே –
ப்ரவர்த்தகஞ்ச ஸ்வர்க்காதி பல சாதனம் உஸ்யதே-நிவர்த்ததாக்யம் தேவர்ஷே விஜேஜேயம் மோக்ஷ சாதனம் -என்கிறபடியே
லோகத்தில் கர்மம் இரண்டு படியாகச் சொல்லப்படா நின்றது -அத்தைக் கேள்
பிரவர்த்தக கர்மம் என்றும் -நிவர்த்தக கர்மம் என்றும் –
அதில் பிரவர்த்தகமாவது
பலாதி வாஞ்சையோடு ஸ்வர்க்க சாதனமாக அனுஷ்ட்டிக்கும் ஜ்யோதிஷ்டோமாதிகள் –
நிவர்த்தகமாவது –
பலாதி வாஞ்ச ரஹிதனாய்க் கொண்டு ஸ்வரூப ஞான பூர்வகமாக வர்ணாஸ்ரம தர்மங்களை
இதி கர்தவ்ய தயா அங்கமாகக் கொண்டு மோக்ஷ சாதனமாக அனுஷ்ட்டிக்கும் கர்ம யோகாதிகள் என்று
த்விதமாகச் சொல்லுகிற கர்மங்களில் ஸ்வர்க்காதி சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகளைச் சொல்லுகிறது

பர தர்ம சப்தத்தால்
பந்தகமான ஸ்வர்க்காதி புருஷார்த்த சாதனங்களில் காட்டில் மோக்ஷ சாதனம் ஆகையால் விலக்ஷணமாய்
சாத்தியமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது –

பரம தர்ம சப்தத்தால்
ஷூத்ர பல சாதனமும் இன்றிக்கே ஸ்வ யத்ன சாத்தியமும் இன்றிக்கே –
சித்தமுமாய் பரம புருஷார்த்த சாதனமுமாய்
யேச வே தவிதோ விப்ரா யே சாத்யாத்ம விதோ ஜனா -தேவ தந்தி மஹாத்மா நாம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் –என்று
வேத வித்துக்களாய் பூர்வ பாக நிஷ்டரானாரோடு அத்யாத்ம வித்துக்களாய் உத்தர பாக நிஷ்டரானாரோடு வாசியற
சனாதன தர்மம் என்று சொல்லப்படுவதாய் சர்வாதிரிக்தமான சித்த சாதனத்தைச் சொல்லுகிறது –

இத் தர்ம சப்தம் பல சாதன தர்ம வாசகம் ஆகையால் இவை மூன்றையுமே சொல்லுமே யாகிலும்
மோக்ஷ உபாயம் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலும் –
முமுஷுவான இவ்வதிகாரிக்கு ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களிலும் அபேக்ஷை இல்லாமையாலும்
இங்கு த்யாஜ்ய தயா தர்ம சப்தம் யுக்தமாயிற்று –
ஸ்வர்க்காதி சாதனமான ஜ்யோஷ்டோமாதிகளும் இன்றிக்கே ஸ்வீ கார்யத்வேந விதிக்கையாலே
பரம தர்மமும் இன்றிக்கே
மோக்ஷ சாதன தயா ஸாஸ்த்ர சோதிதமாய் சாத்தியமான பரதர்ம மாத்திரம் என்னும் இடம்
பிரகரண பலத்தாலும் விதி பலத்தாலும் சித்தம் –

இப்படி பர தர்மம் த்யாஜ்யமாகச் சொல்லுகையாலும் –
ஸ்வ தந்த்ர சாதனமான பரம தர்மம் அங்கமாக மாட்டாமையாலும்
பர தர்ம அங்கமான பரம தர்மமும் த்யாஜ்யத்வேந உபாதானம் பண்ணப் படுகிறது –
அங்கியான தர்மங்களில் அபேக்ஷை இல்லாத போது அங்கத்திலும் அபேக்ஷை இல்லை இறே

இதில் பஹு வசனத்தாலே –
கர்மனை வஹி சம்சித்தி மாஸ்திதா ஜந காதய–என்று ஸ்வ தந்த்ர சாதனமாகவும் –
சர்வம் கரமாகிலம் பார்த்த ஞாநே பரி சமாப்யதே -என்றும்
காஷாய கர்மபி பக்வேததோ ஞானம் ப்ரவர்த்ததே என்று அங்க சாதனமாகவும் சொல்லப்பட்ட கர்மயோகமும்

நஹி ஞாநே ந சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே -ஞான அக்னிஸ் சர்வ கர்மாணி பஸ்ம சாத் குரு தேததா–என்றும்
ஞான தேவச கைவல்யம் ப்ராப்யதேயே நமுச்யதே -என்று ஸ்வ தந்த்ர சாதன ரூபமாயும் –
இந்த ஞானம் தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமாய் அனவரத பாவந ரூபையான பக்தியாய் –
பரிணதமம் ஆகையால் பக்தி அங்கமாகவும் சொல்லப்பட்ட ஞான யோகமும்

உபாப்யமேவ பஷாப்யாம் -இத்யாதியாலே மோக்ஷ சாதனமாகச் சொல்லப்பட்ட கர்ம ஞான சமுச்சயமும்

பக்த்யாத் வநந்ய சக்ய
ஸ்வ கர்ம ஞான வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர -என்று கர்ம ஞான சாத்யமாய்
மோக்ஷ சாதனமாகச் சொல்லப்பட்ட பக்தி யோகமும்

ஜென்ம கர்ம ச மே திவ்ய மேவம் யோ வேத்தி தத்வத–த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி சோர்ஜூந –என்று
என்னுடைய திவ்யமான அவதாரத்தையும் அதில் திவ்ய வியாபாரங்களையும் யாவன் ஒருவன் உண்மையாக அறிகிறான் –
அவன் சரீரத்தை விட்டுப் போனால் மீண்டும் பிறவான் -என்னைப் பிராபிக்கும் -என்கிற
நிலை வரம்பில் பல பிறப்பாய் -என்கிற அவதார ரஹஸ்ய ஞானமும்

யோ மாமேவம் அசம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ச சர்வவித் பஜதி மாம் சர்வ பாவேந பாரத -என்று
யாவன் ஒருவன் என்னை அசம் மூடனாய்க் கொண்டு புருஷோத்தமனாக அறிகிறான் –
இந்த புருஷோத்தமத்வ ஞானம் ஆகிறது த்ரிவித சேதன அசேதனங்களிடையவும் ஸ்வரூப ஸ்வ பாவங்களை
யதாவாக அறிந்து அவற்றில் வ்யாவ்ருத்தனாகவும்
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத-யோ லோக த்ரயமா விஸ்ய பிபர்த்த்யவ் யயாஸ்வர-என்கிற நியாயத்தாலே
அவற்றுக்கு வியாபகனாயும் -தாரகனாயும் -நியாமகனாயும் – அறிகையாலே-அவன் எல்லாம் அறிந்தவன் ஆகையால் –
அவன் சர்வ பாவத்தாலும் என்னை அடைந்தவன் என்றும்
இதி குஹ்ய தமம் சாஸ்திரம் இதம் யுக்தம் மயாநக -ஏதத் புத்தவா பத்திமா நஸ்யாத் க்ருதக்ருத்யஸ் ச பாரத –என்றும்
இப்படி குஹ்ய தமமான இந்த சாஸ்திரம் இது கேட்க்கைக்கு அதிகாரியாம்படி நீ அபாபன் ஆகையால்
உனக்கு என்னால் சொல்லப்பட்டது -இந்த புருஷோத்தமத்வத்தை புத்தி பண்ணினவன் அபிமத பல லாபத்தாலே
க்ருதக்ருத்யனாம் என்கிற புருஷோத்தம வித்யையும்

தேசோயம் சர்வ காம துக் –
மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரீ ஸூ பா -என்று சர்வ காம பல பிரதமாயும் –
அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி பிரதமாகவும் ஸ்வயம் ப்ராப்யமாகவும் சொல்லுகிற புண்ய க்ஷேத்ர வாசமும்

ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித சர்வ பாப வி ஸூத்தாத்மாயாதி பிரம்மா ஸநாதனம் -என்று
பக்தி உக்தனாய்க் கொண்டு அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவன் சர்வ பாபங்களும் போய்
ஸூத்தாத்மாவாய் சனாதனமான ப்ரஹ்மத்தைப் பிராபிக்கும்-என்கிற –
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -என்று சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனமும் –

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே-என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்கையும் –
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறு –என்கிறபடி -பூசனை செய்கையும்
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணும் என் எந்தை நாமம் பிறப்பு அறுக்கும் -என்றும் இத்யாதிகளால் சொல்லப்பட்ட
திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை–திரு அலகு எடுக்கை -முதலான சாதன புத்தியால் செய்யப்படுவதாய்
ருசி பேதத்தாலும் பாக பேதத்தாலும் அத்யந்த அநந்தமாய் ஆத்மபேதத்தோ பாதி அஸங்யாதமான
உபாய விசேஷங்களைச் சொல்லுகிறது –

அதவா
கர்ம ஞான பக்திகளுடைய அவாந்தர பாஹுள்யத்தைப் பற்ற பஹு வசனமாகவும்
அதில் கர்மம்
அக்னியாத் தான தர்சபூர்ணமாசாக நிஷ்டோம தீர்க்க சத்ராதி ரூபேண பஹு விதம் –
ஞானமும்
உபாஸ்ய வஸ்து ஸ்வரூப பேதத்தைப் பற்றி வருகிற ஸத்வித்யா -தஹர வித்யாதி பேதத்தாலே பஹு விதம்
பக்தியும்
சததம் கீர்த்தயந்த
மந் மநா பவ –இத்யாதிகளால் சொல்லுகிற அர்ச்சன-ஸ்தவ -பிரணாமாதிகளால் பஹு விதம்
இப்படி வருகிற வ்யக்த்ய அனந்த்யத்தைச் சொல்லுகிறது -பஹு வசனம் என்று சொல்லுவார்கள் –
ஆக பஹு வசனத்தால் மோக்ஷ சாதன தயா பிரதானமாகச் சொல்லுகிற தர்மங்களினுடைய அனந்த்யத்தையும்
பிரதிவியக்தியில் உண்டான அனந்த்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த -என்னக் கடவது இறே

இதில் தர்மான் -என்கிற த்விதீய அந்தம்
இந்த தர்மங்கள் மேல் சொல்லுகிற தியாகத்துக்கு விஷயம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –
ஆகையால் பகவத் உபாய வர்ணம் பண்ணும் அதிகாரிக்கு தத் வியதிரிக்த சகல ஸாத்ய தர்மங்களும் த்யாஜ்யம் என்றதாயிற்று –

————————

இத் தர்ம விசேஷணமான சர்வ சப்தம்
த்ரை வர்ணிக சாதாரணமாய் -ப்ரஹ்மச்சார்யாதி ஆஸ்ரமங்கள் தோறும் அநு வ்ருத்தமாய்–
ச நத்யா ஹீநோ ஸூசிர் நித்யமநர்ஹஸ் சர்வ கர்மஸூ –
தேத்வகம் புஞ்சதே பாபா -என்று பாபத்தையே புஜிக்கிறார்கள் ஆகையால் அவர்கள் பாபிஷ்டர்கள் என்றும்
அநநுஷ்டானத்தில் சர்வகர்ம அநர்ஹராகவும் அனுஷ்டானத்தில் அர்ஹராகவும் சொல்லுகையாலே
இந்தக் கர்மாநுஷ்டானத்துக்கு யோக்யதாபாதகங்களான
ஓதி உரு எண்ணும் அந்தி
ஐ வேள்வி –என்கிற சந்த்யா வந்தன பஞ்ச மஹா யஞ்ஞாதிகளைச் சொல்லுகிறது

கர்மயோகாதிகளுக்கு யோக்யதாபாதகமாகில் இக்கர்மங்கள் இவற்றை ஒழிய உதயம் இல்லாத பிரதான கர்மங்களுக்கு
தியாக விஷயத்வம் சொன்ன போதே
சாத்யா பாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று ஸாத்யம் இல்லாத போது
சாதனங்களால் என்ன பிரயோஜனம் உண்டு என்கிற நியாயத்தாலே இதுக்கும் தியாக விஷயத்வம் சொல்லிற்று ஆகாதோ –
ஆயிருக்க சர்வ சப்தத்தால் பிரியச் சொல்ல வேண்டுகிறது என் என்னில்
சாதனமான தர்மத்துக்கு யோக்யதா பாதக தர்ம வ்யதிரேகேண உதயம் இல்லையே யாகிலும் –
ஸ்ரேயஸ் சாதனம் தர்மம் -என்கிற நியாயத்தாலே மோக்ஷ சாதன தர்மமே இத்தர்ம சப்தத்துக்கு அர்த்தம் என்று
நினைக்கையாய் இருக்கையாலே அவற்றுக்குத் தியாக விஷயத்வம் சொல்லுகிறது என்று தோன்றாமையாலும்
தியாக விஷயத்வம் இல்லாத போது -அநர்ஹஸ் சர்வ கர்மஸூ -என்று சர்வ கர்ம அநர் ஹத்வம் சொல்லுகையாலே –
சரணம் வ்ரஜ -என்கிற சித்த சாதன ஸ்வீ காரத்துக்கும் அநர் ஹனாய்-
அதுக்கும் இந்த யோக்யதா பாதக தர்மங்கள் அபேக்ஷிதமாம் என்று வருகிற சங்கையைப் பரிஹரிக்கைக்காக –
சப்த-சப்தத்தால் பிரித்துச் சொல்கிறது –

வஹ்யமாணமான ஸ்வீ காரத்துக்கு
வைத்தேன் மதியால்
அவனது அருளால் உறற் பொருட்டு என் உணர்வின் உள்ளே இருத்தினேன்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்–இத்யாதிகளில் படியே
அறிவும் -அனுமதியும் -இசைவும் -இறே அபேக்ஷிதம் –அது தானும்
என் இசைவினை
இசைவித்து என்னை
அவனது இன்னருளே–என்று ஈஸ்வர அதீனமாய் இறே இருப்பது -அதுக்கு வேண்டுவது சைதன்யம் மாத்திரம் இறே

அன்றிக்கே சர்வ கர்மங்களுக்கும் யோக்யதை அபேக்ஷிதமாகில் இந்த ஸந்த்யாவந்தனத்துக்கும் யோக்யமாக
ஒரு சந்தியாவந்தனம் அபேக்ஷிதமாக வேண்டி வரும் -அது காணாமையாலே அவை இதுக்கு அநபேஷிதங்கள்

துராசாரோபி சர்வாசீ க்ருதக்நோ நாஸ்திக புரா -ஸமாஸ்ரயேதாதி தேவம் ஸ்ரத்தயா சரணம் யதி –
நிர்த்தோஷம் வித்திதம் ஐந்தும் பிரபாலாத் பரமாத்மந -என்று நிஷித்த ஆசாரனாய் -சர்வாசியாய் –
பிறர் பண்ணிய உபகாரத்தை இல்லை செய்து திரியுமவனாய் –
தர்ம அதர்மங்களும் பரலோகமும் பரதேவதையும் இல்லை என்று திரியுமவனாய்
இவ் வசந் மரியாதையில் பழக அடி பட்டுப் போந்தவனாய் இருக்குமவனும் சர்வ காரண பூதனான
சர்வேஸ்வரனை ஸ்ரத்தையோடு சரணமாக ஆஸ்ரயித்தான் ஆகில் அந்த ஜந்துவை சரண்யனான பரமாத்மாவின் பிரபாவத்தால்
நிர்த்தோஷனாகவே புத்தி பண் என்கையாலே இந்த ஸ்வீ காரத்துக்கு இவை அநபேஷிதம்-என்றதாயிற்று –

அங்கன் அன்றிக்கே -ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாஸ்தீர்ய ராகவ-
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதி சிஸ்யே மஹோததே –என்று கடற்கரையிலே -பிராங்முகத் வாதி நியமங்களுடனே புலப்படுத்து
கையும் அஞ்சலியுமாய்க் கிடந்து சரணம் வரணம் பண்ணினவர்க்கு இந்த யோக்கியதையும்
சாப மாநாய -என்கிற சாதனத்தில் நினைவும் இறே அது பலியாது ஒழிந்தது
ராவனோ நாம துர் வ்ருத- என்று தனக்கு உண்டான தண்மையை முன்னிட்டு சரணம் புக்க
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குத் தன் அபிமத சித்தியும் பிறந்து
சமுத்திரம் ராகவே ராஜா சரணம் அகந்தும் அர்ஹதி-என்று பிறருக்கும் உபதேசிக்கைக்கும் அதிகாரம் உண்டாகக் கண்டோம் இறே –
ஆகையால் யோக்கியதையும் தேடவும் வேண்டா -அயோக்கியதையும் பொகட வேண்டா
உண்டான யோக்யதை பிரதிபந்தகம் என்றும் அயோக்யதை பற்றாசு என்றும் இருக்கையை அதிகாரம் –

அதுக்கு மேலே யோக்யதா சா பேஷம் என்னில் -அவை த்ரை வர்ணிக அதிகாரம் ஆகையால்
இதனுடைய சர்வாதிகாரத்வமும் பக்நமாம் –

ஆக மேல் சொல்லுகிற ஸ்வீ காரத்துக்கு இதில் சொல்லுகிற யோக்யதை அநபேஷிதம் என்கைக்காகப்
பிரித்துச் சொல்லுகிறது என்றதாயிற்று –

ஆனால் சாந்தோ தாந்த உபரதஸ்திதி ஷுச ஸமாஹிதோ பூத்வா ஆத்மநயே வாத்மா நம பஸ்யேத்-என்று
பாஹ்யாப் யந்தர ரூப இந்திரிய நியமங்களை உடையவனாய் சர்வ பாகத்திலும் உபரதனாய் சம்சார நிஸ்தரன ஆசை உடையவனாய்
ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு ஹ்ருதயத்தில் பரமாத்மாவை த்யானம் பண்ணுவான் என்கிற ஞான யோக சாதனமான
சமதமாதி ஆத்ம குணங்களும் சத்ய ஆர்ஜவாதிகளும் சாத்விக ஆஸ்திக்யாதிகளும் இதுக்கு அந பேஷிதமாகையாலே
இந்த சர்வ சப்தத்தில் உபாத்தம் ஆனாலோ என்னில்
அவை உபாய உபயோகமும் இன்றிக்கே உபாய ஸ்வீ கார அங்கமும் இன்றிக்கே இருந்தாலும்
சித்த உபாயத்தில் அதிக்ருதனானவனுக்கு அந்த உபாயம் பலமாய்க் கொண்டு சம்பாவிதங்களான ஸ்வ பாவங்கள் ஆகையால்
ப்ராப்யத்வேந உபாதேயமாமவது ஒழிய த்யாஜ்யம் ஆகாது

ஆத்ம குணமான இவை த்யாஜ்யம் என்னில் –
சேஷ சேஷித்வ -ரஷ்ய ரக்ஷகத்வ -போக்த்ருத்வ போக்யத்வ -ஞானாதிகளும் த்யாஜ்யமாக வேண்டி வரும் –
அப்போது ஸ்வ சத்தா போகாதிகளும் இன்றியிலே ஒழியும் -ஆகையால் சமதமாதிகள் த்யாஜ்யம் என்ன ஒண்ணாது –

இஸ் சர்வ சப்தத்தில் –
லோக ஸங்க்ரஹ மேவாபி சம்பஸ்யன் கர்த்தும் அர்ஹஸி -என்று லோகத்தில் உள்ளார் ஆதரிக்கைக்கு உறுப்பாகவும்
அனுஷ்டிக்கைக்கு அர்ஹனாகா நின்றாய் என்ற பூர்வ யுக்த தர்மங்களும்
புத்ரனைப் பெற்ற பிதா அனுஷ்ட்டிக்கும் ஜாத கர்ம நாம கரணாதிகளும் த்யாஜ்யதயா உபாதானம் பண்ணப் படுகிறது –

ஸ்வீ கார்யமான உபாயம் ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிரபேஷமாய் இருக்கையாலே கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதித கஷாயனாய்
ஞான யோகத்தைப் பெற்ற அதிகாரி ஸாத்ய சித்தி அநந்தரம் சாதன சா பேஷை இல்லாமையால்
அந்தக் கர்மத்தை நிவர்த்திக்கில் -ஞான யோக அநு குண பாகம் இல்லாதவனும் -யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்கிற நியாயத்தால்
கர்மாநுஷ்டானத்தைத் தவிரும்-
ஞான யோகத்தில் அந்வயம் இல்லாதே கர்மத்தை விட்டால் உபய பிரஷ்டனாய் நசிக்கும் –
அவனுக்கு நாசகரமான பாபம் கர்மத்தின் நின்றும் நிவ்ருத்தனான ஞான யோக அதிகாரியை ஸ்பர்சிக்கும் —
ஆகையால் ஞான யோகத்துக்கு பிரதிபந்தகம் ஆகையால் அவனுக்கு லோக ஸங்க்ரஹார்த்த ப்ரவ்ருத்திகளும்
ஜாதகர்ம நாம கரணாதிகளும் அனுஷ்ட்டிக்க வேணும்
இவன் சித்த சாதன ஸ்வீ காரம் பண்ணினவனாகையால் சாத்தியமான ஞான யோக லாபம் இல்லை என்கிற அலாபம் இல்லாமையாலும்
ஸ்வீ க்ருதமான உபாயம் -நச்சு மா மருந்தும் -என்கிறபடியே அபத்யஸஹ ஓவ்ஷதமாகையாலே பாப ஸ்பர்சம் உண்டாம் என்கிற பயம் இல்லாமையாலும்
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற உபாயத்தைப் பற்றி இருக்கையாலே ஸ்வ நிவர்த்தமாய் இருபத்தொரு பாபம் இல்லாமையாலும்
இவனுக்கு அநுஷ்டேயம் அல்ல –
இனி அனுஷ்ட்டித்தான் ஆகில் ஆந்ரு சம்சய பிரேரிதனாய் அனுஷ்ட்டித்தானாம் அத்தனை –
புத்ரார்த்தமான பும்ஸவ நாதி களும் பாப பய பிரேரிதனாய் அனுஷ்ட்டிக்கக் கடவன் அல்லன்-
உபாய உபகார புத்த்யாயும் இன்றிக்கே கர்த்தவ்ய புத்த்யாயும் இன்றிக்கே ஆந்ரு சம்சயத்தாலே செய்கையாலே
அதுவும் பாப விசேஷணமான சர்வ சப்தத்தில் அந்தர் பூதமாய் மோக்ஷயிஷ்யாமியிலே அன்வயித்து ஈஸ்வர ஏக நிவர்த்த்யமாம் —
ஆகையால் லோக ஸங்க்ரஹார்த்த ப்ரவ்ருத்தி இவனுக்கு த்யாஜ்யம் என்றதாயிற்று –

சிலர் யோக்யதா பாதக தர்மங்கள் அப்ருதக் கர்மங்கள் ஆகையாலும் -தர்ம சப்தம் சாங்கமான சாதன தர்மத்தைச் சொல்லுகையாலே
யோக்யதா பாதகங்களும் தர்ம சப்தம் தன்னிலே யுக்தமாகையாலும் தர்ம சப்த விசேஷணமான சர்வ சப்தம்
யோக்யதா பாதக தர்ம சப்த வாசகமாட்டாது -ஆகையால் சர்வ சப்தம் சாகல்ய வாசியாம் அத்தனை என்பார்கள் –
தர்ம சப்தம் ஸ்ரேயஸ் சாதன தர்ம வாசியாகையாலே போக்யதா பாதக தர்ம வாசகமாக மாட்டாமையாலும்
சாகல்யமும் தர்ம சப்தகதமான பஹு வசனத்தாலே சித்தம் ஆகையாலும்
யோக்யதா பாதக தர்மமும் கூட த்யாஜ்ய தர்ம வாசக தர்ம சப்த விசேஷண சர்வ சப்தத்தில் உபாத்தமாய் த்யாஜ்யம் என்கையாலே
தர்மங்களினுடைய நிரவசேஷ தியாகமும் புலிக்கையாலும் சத் சம்பிரதாய சித்த சதாச்சார்யர்கள் எல்லாரும்
சர்வ சப்தம் யோக்யதா பாதக தர்ம வாசகமாக அருளிச் செய்கையாலும்
சாகல்ய வாசி என்கிறது அர்த்தம் அன்று

இந்த தர்மங்கள் உபாய உபயோகி அன்றாகிலும் -விஹிதத் வாச்சாஸ்ரம கர்மாபி –என்று வர்ணாஸ்ரம விஹிதம் ஆகையால்
அநுஷ்டேயம் ஆகாதோ என்னில் –
உபாய பிரகரணம் ஆகையால் உபாயத்துக்கு யோக்யதா பாதகம் என்கிற ஆகாரம் ஒழிய விஹிதமாய் வருகிற ஆகாரம்
இவ்விடத்தில் அப்ரஸ்துதம் ஆகையால் த்யாஜ்யம் ஆகாது என்ன ஒண்ணாது –
அதவா
ஸ்வர்க்க புருஷார்த்த சித்த்யர்த்தமாக ஜியோதிஷ்டோமத்திலே தீஷித்தவனுக்கு நித்யாதிகள் த்யாஜ்யமாம் போலே
மோஷார்த்தமாக சித்த சாதன ஸ்வீ காரம் ஆகிற யாகத்தில் தீஷித்து இருக்கும் இவனுக்கு
விஹித அம்சமும் த்யாஜ்யம் என்னவுமாம்
தஸ்யைவ ம விதுஷ-என்கிற அநு வாகத்தாலே சரண வரணத்தையும் ஒரு யோகமாக நிரூபித்தான் இறே வேத புருஷன்
ஆனாலும் இவை பகவத் விஷயத்துக்கு ஆஞ்ஞா ரூப கைங்கர்யம் ஆகையால் பகவத் ப்ரீதியாகிற
பரம பிரயோஜன சித்திக்காக அநுஷ்டேயமாகக் கடவது -அல்லது
விஹிதமான ஆகாரத்தாலேயும் உபாயத்துக்கு யோக்யதா பாதகமான ஆகாரத்தாலேயும் த்யாஜ்யமாகக் கடவது

சாதன ஸ்வீ காரத்துக்கு ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் அபிராப்தியும் விளம்ப அஷமத்வமும் உடையவன் இறே அதிகாரி –
இதம் சரண மஞ்ஞான மித மேவ விஜாநதாம்-இதம்தீதீ ரக்ஷகரம் பாரமிதம் ஆனந்த்ய மிச்சதாம் -என்றும்
அஞ்ஞ ஸர்வஞ்ஞ பக்தாநாம் பிரபத்தா வதிகாரிதா –
அவித்யாதா -இத்யாதிகளாலே ஸ்வ ஸ்வரூபம் பகவத் ஏக ரஷ்யமாக அனுசந்திக்கையாலே
ஸ்வ ரக்ஷணத்தில் அஞ்ஞான அசக்திகளும்
உபேய ஸ்வரூபம் அநந்ய சாத்தியமாக அனுசந்திக்கையாலே அப்ராப்தியும் –
ப்ராப்ய வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே விளம்ப அஷமத்வமுடையராய்
அத ஏவ அநந்ய கதிகளாய் இருக்கிறவர்களுக்கு
இப்பிரபத்தியில் அதிகாரம் என்று சொல்லிற்று இறே
ஆகையால் இறே இவ்வுபாயம் சர்வாதிகாரம் ஆகிறது

ஆக
சர்வ தர்மான் -என்று
சாத்தியமான சகல தர்மங்களையும் த்யாஜ்யதா உபாதானம் பண்ணிற்று ஆயிற்று –

—————-

அநந்தரம் -பரித்யஜ்ய -என்று
இவற்றினுடைய தியாக பிரகாரம் சொல்லுகிறது
இது தான்
த்யஜ
த்யஜ்ய
பரித்யஜ்ய –என்று தியாகமும் –ல்யப்பும் -உபபதமுமாய் –
த்ரிவிதமாய் இருக்கும்
இதில் லப்யந்தமான தியாக சப்தத்தால்
அபிமத புருஷார்த்த சித்திக்கு அநு ரூபமாய் சஹாயாந்தர அஸஹமான உபாயத்தை ஸ்வீ கரிக்கிற அதிகாரிக்கு
தத் அங்கமான சாதனாந்தர தியாகத்தை விதிக்கிறது –

ஸத்வித்யா நிஷ்டனுக்கு தத் வியதிரிக்த வித்யாந்தர தியாகம் ஆர்த்தமாக சித்திக்கிறாப் போலே
புருஷார்த்த லாபத்துக்கு இதர நிரபேஷமான உபாயத்தை ஸ்வீ கரிக்குமவனுக்கு இதர உபாய தியாகம் அர்த்த ஸித்தமாய்
வருகையால் இவ்விடத்தில் தியாகத்துக்கு விதேயத்வம் இல்லை என்று சிலர் சொல்லுவார்கள் –
அது சொல்ல ஒண்ணாது –
விதேயமான சரண வரணத்துக்கு தத் வியதிரிக்த உபாய தியாக வ்யதிரேகேண உதயம் இல்லாமையால்
அங்கியான உபாய வரணம் விதேயம் ஆகிறவோபாதி அங்கமான தியாகமும் விதேயமாக வேண்டுகையாலே
ஆகையால்
ப்ரஷாள்ய பாதாவாசாமேத் ஸ்நாத்வா விதிவ தர்ச்சயேத் –ஸ்தித் வார்க்க்யம் பாநேவ தத்யாத்த்
யாத்வா தேவம் ஜபேந் மநும்-இத்யாதிகளாலே
பாத ப்ரஷாளநம் பண்ணி ஆசனம் பண்ணுவான் -ஸ்நாநம் பண்ணி வித்த்யுக்தமான பிரகாரத்தில் அர்ச்சிப்பான் –
ஆதித்யனுக்கு நின்று அர்க்க்ய பிரதானம் பண்ணுவான் -மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையை த்யானம் பண்ணி
தத் ப்ரதிபாதகமான மந்த்ரத்தை ஜெபிப்பான் என்று விசிஷ்டமாக விதிக்கிறாப் போலே
இங்கும் தியாக ஸ்வீ காரங்களை விசிஷ்டமாக விதிக்கிறது
அவ்விடத்தில் ஆர்த்தமாக சித்தியாமையாலே விதிக்கிறது –
இங்கு சித்த தர்ம ஸ்வீ காரம் தானே தத் இதர தர்ம த்யாகத்தைக் காட்டுகையாலே விதேயத்வம் இல்லை என்னில் –
அது சொல்ல ஒண்ணாது –
இவ்வதிகாரிக்கு நிஷித்த தர்ம அந்வயத்தில் பிராயச்சித்தயாமோபாதி சாதனாந்தர அந்வயித்தாலும் ப்ராயச்சித்தியாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே ஆர்த்தமாக சித்திக்கை அன்றிக்கே விதேயமாக வேண்டுகையாலே –
எங்கனே என்னில்-

உபாயாபாய சமயோகே நிஷ்டயா ஹீயதேநயா -அபாய சம்ப்லவே சத்ய பிராயச்சித்தம் சமாசரேத் –
உபாயா நாமுபாயத்வ ஸ்வீ காரேப் யேததேவஹி–என்று நிஷித்தமாய் -த்யாஜ்யமான ஹிம்சாத்ய அபாய அந்வயத்திலும்-
சாதனமான கர்மாதி உபாய அந்வயத்திலும் இந்த சித்த தர்ம நிஷ்டைக்கு பங்கம் வருகையால்
அபாய அந்வயத்தில் சடக்கென பிராயச்சித்தம் பண்ணுவான் –
உபாய அந்வயத்திலும் அப்படியே பிராயச்சித்தம் பண்ணுவான் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே –
ஆகையால் -அந்வயத்தில் -ப்ராயச்சித்தியாக வேண்டுமவற்றினுடைய தியாகம் நிஷித்தமான பூத ஹிம்சை –
ந ஹிம்ஸ்யாத் -என்று விதேயமானவோபாதி விதேயமாக வேண்டுகையாலும் –
தியாகம் தனக்கு ஹேது துஷ் கரத்வாதிகளில் காட்டில் ஸ்வரூப விருத்தம் என்கிற ப்ரதி பத்தியே பிரதானம் ஆகையாலும்
சாதனாந்தரங்களினுடைய தியாகம் விதேயமாகக் கடவது –

இப்படி விஹிதமான தியாகம்
சாதனாந்தரங்களினுடைய ஸ்வரூப த்யாகமோ –
பல த்யாகமோ –
உபாய புத்தித் த்யாகமோ -என்னில்

கர்மயோகாதிகள் ஸ்வ அபிமத புருஷார்த்தத்துக்கு சாதனங்கள் என்கிற பிரதிபத்தியை விட்டு
அவற்றை அனுஷ்ட்டித்து உபாய ஸ்வீ காரம் பண்ண வேண்டி விழுகையாலும்
அப்போது புத்தி தியாக பூர்வகமாக அனுஷ்டிதமான கர்மயோகாதிகள் ப்ரபத்திக்கு அங்கமாகையாலே
இதனுடைய ஸ்வ தந்த்ர உபாயத்வ ஹானி வருகையாலும் –
சர்வ அதிகாரம் இன்றிக்கே ஒழிகையாலும் –
தர்ம சப்தம் தர்மகதமான யுபாயத்வம் பிரதிபத்தி வாசகம் இல்லாமையாலும்
ஸ்ரேயஸ் சாதனம் தர்ம -என்று தர்ம சப்தத்துக்கு உதயம் சாதனத்வேந ஆகையால் இத்தர்ம சப்தம் சாதன தர்மத்தையே வசிக்கையாலும்
நிவர்த்தகாக்யம் தேவர்ஷே விஜ்ஜேயம் மோக்ஷ சாதனம் -என்று நிவர்த்தக தர்மத்துக்கு மோக்ஷ சாதனத்வம்
ஸாஸ்த்ர சித்தம் ஆகையால் சாதனத்வ தியாகம் பண்ண ஒண்ணாமையாலும்
இவ்வுபாயம் அகிஞ்சன அதிகாரம் இன்றிக்கே ஒழிகையாலும்
அஹமஸ்ய அபராதாநாம் ஆலய -அகிஞ்சநோ அகதி த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி -என்று
நான் அபராதாநாம் ஆலயன் யாகா நின்றேன் -அஹம் அர்த்தம் சேக்ஷத்வாதிகளால் நிரூபிதமாகை இன்றிக்கே
அபராதத்தை இட்டு நிருபிக்கும் படி சாபராதன்-அத்யந்த பரதந்த்ரன் ஆகையால் அகிஞ்சனன் –
த்வத் ஏக ரஷ்யம் ஆகையால் அகதி என்னுடைய தன்னுடைய அபராத பூயஸ்த்தையையும்
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும் அனுசந்தித்து நீயே உபாயமாக வேணும் என்று பிரார்த்திக்கை
சரணாகதி என்கிற லக்ஷண வாக்யத்தோடு விரோதிக்கையாலும் இது ஸ்வரூப பிரதானம் இன்றிக்கே
விஸிஷ்ட வேஷ பிரதானம் ஆகையால் இதினுடைய ஸ்வரூப அநு ரூபத்வம் பக்நம் ஆகையாலும்
புத்தி தியாக பக்ஷம் அர்த்தம் அன்று –

இந்த தர்ம சப்தத்தில் உபாதானம் பண்ணிற்று -பல ஸங்காதி தியாக பூர்வகமாக அநுஷ்டேயமான நிவர்த்தக தர்மம் ஆகையால்
ப்ரஸஜ்ய ப்ரதிஷேதத்துக்கு இடம் இல்லாமையாலும் -தர்ம சப்தம் பல வாசி இல்லாமையாலும்
புநர் யுக்தி பிரசங்கத்தாலும் பல தியாக பக்ஷமும் அன்று

ஸ்வ அபி லஷிதமான புருஷார்த்தத்துக்கு ஸ்வரூப அனுரூபமான சாதனத்தைப் பரிக்ரஹிக்கிற இவனுக்கு
சாதன ரூப தர்ம தியாகம் பண்ணுகை விருத்தம் இல்லாமையாலும்
முமுஷுத் வத்தாலே ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோம கர்மம் த்யாஜ்யமானவோ பாதி
சித்த சாதன பரிக்ரஹத்தாலே இவையும் த்யாஜ்யமாகக் கடவதாகையாலே
இங்கு விதிக்கிறது ஸாத்ய சாதன ரூப தர்மங்களுடைய ஸ்வரூப தியாகத்தை என்றதாயிற்று –

சித்த சாதனம் -சகல இதர -நிரபேஷம் ஆகையாலும் சகாயாந்தர அஸஹமாகையாலும் –
சாதனாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம் ஆகையாலும் -சகல இதர சா பேஷம் ஆகையாலும் –
ப்ராப்ய வி ஸத்ருசங்கள் ஆகையாலும் -துஷ் கரங்கள் ஆகையாலும் இவை த்யாஜ்யமாகக் கடவன

பகவத் ஏக ரஷ்யத்வேந சித்த ஸ்வரூபனாய் -பகவத் ஏக சேஷ பூதனாய் இருக்கையாலே
தத் அதிசயே இதர வியாபார ஆஸ்ரயத்வம் விருத்தம் ஆகையால் ஸ்வரூப விருத்தமாய் இருக்கும் –
சித்த ஸ்வரூபனாய் -ஏக ரூபனாய் -பரம சேதனனாய் -அமோக சங்கல்பனாகையாலே சஹகாரி நிரபேஷமாய் இருக்கும் –

ரக்ஷணார்த்தமான ஸ்வ வியாபார தரிசனத்தில் ரக்ஷகனான ஈஸ்வரன் ரக்ஷணாந் நிவ்ருத்தனாம் ஆகையால்
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே சஹாயாந்தர அஸஹமாய் இருக்கும்
சிரகால சாத்யமாய் சாபாயுமுமாய் இருக்கையாலே துஷ் கரங்களாய் இருக்கும் –
சம்சாரிக சகல துரித விதூநந பூர்வகமாக அர்ச்சிராதி மார்க்கத்தாலே அகால காலயமான தேசத்திலே போய்ப் புக்கு
நிரந்தர பகவத் அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த ஹ்ருஷ்டனாய் அந்த ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத் க்ருத்யனாய்க் கொண்டு –
அபரிமித தா பவதி -என்கிறபடியே அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி யாவதாத்மபாவி பண்ணுகிற கைங்கர்யத்துக்கு
ஸ்வ அநுஷ்டேயமாய் ஸ்வ தந்த்ர காரியமாய் இருக்கிற கர்மாதிகள் சத்ருசம் அல்லாமையாலே
ப்ராப்ய வி ஸத்ருசமாய் இருக்கும் –

ஆகையால் -சீதோ பவ ஹநூமத -என்று நெருப்பை நீராக்க வல்ல சக்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்
லங்கா பவனத்தில் நிருத்தையான பிராட்டி -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்தால் போலேயும்-
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று திரௌபதி ஸ்ரீ கிருஷ்ணன் பக்கலிலே சமர்பித சர்வ பரையாய்க் கொண்டு
தன் கையை விட்டு இருந்தால் போலேயும் இருக்கில் இறே ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பூர்த்தி பிறந்தது ஆவது –

ஸ்வ ஸ்வரூபம் -கரணாதி பாதிப –என்று கரணங்களோடு கரணியோடு வாசியற
ஹ்ருஷீகேசனான அவன் இட்ட வழக்கு ஆகையாலும்
தத் ஏக ரஷ்யத்வேந சித்த ஸ்வரூபன் ஆகையாலும் சாதனாந்தர அனுஷ்டானத்துக்கு
யோக்கியதையும் இல்லை -பிராப்தியும் இல்லை –
ரஷ்யத்வ பாரதந்தர்யங்கள் இரண்டும் ஸ்வ தஸ் சித்த வேஷமாகையாலே பர இச்சாதீனமாய்
பரகதமான வியாபாரம் ரக்ஷகமாமது ஒழிய
பர ப்ரேரிதமே யாகிலும் ஸ்வ கதமான வியாபாரம் ரக்ஷகம் ஆக மாட்டாதபடியாய் இறே இருப்பது –

பர ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் -அவ -ரஷனே-என்று ரக்ஷகத்வேந க்ருஹீதமான ஸ்வரூபத்தை யுடையவன் ஆகையால் –
ரக்ஷகத்வம் நிருபாதிகம் ஆகையாலும்
உபாய உபேயத் வேததி ஹதவ தத்வம் -என்று உபாயத்வம் ஸ்வரூபமாக அருளிச் செய்கையாலும்
சாதனாந்தர அனுஷ்டானத்தில் பிராப்தி இல்லை யாகையாலே ஸ்வரூபத்தில் சாதனாந்தரங்கள் புகுர வழி இல்லை –

ஆகை யிறே மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள்
நோற்ற நோன்பிலேன் -என்றும்
நலம் தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன் -என்றும்
மற்றேல் ஓன்று அறியேன் -என்றும்
இவ் வுபாயாந்தர அநன்வயத்தை அருளிச் செய்தது –
நஜாநே சரணம் பரம -என்னக் கடவது இறே

சாதன அனுஷ்டான யோக்யமான புண்ய காலங்கள் -சாதனமான புண்ய க்ஷேத்ர வாசம் –
தர்ம அனுஷ்டானத்துக்கு காரணமான சரீர சம்பந்தம் -சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானால் வரும் சரீராந்தர பிராப்தி –
இவை எல்லாவற்றிலும் எனக்கு மஹத்தான பயம் நடவா நிற்கிறது என்கையாலே
சாதனந்தரங்கள் ஸ்வரூப ஞானவானுக்கு பய ஜனகமாய் இறே இருப்பது –

அத பாதக பீதஸ் த்வம் சர்வ பாவேந பாரத -விமுகதாந்ய சாமரம்போ நாராயண பரோ பவ -என்று
சாதனாந்தரங்கள் பாதகம் என்று பயப்பட்ட நீ சர்வ பிரகாரத்தாலும் பாரதனே -அந்நிய சமாரம்பங்களை விட்டு
நாராயண பரனாவாய் என்று தர்ம தேவதை தர்ம புத்ரனைக் குறித்து பாதகம் என்று உபதேசிக்கையாலும் –
பிராயச்சித்த விஷயமாகச் சொல்லுகையாலும்
நெறி காட்டி நீக்குதியோ என்று பகவத் விஷயத்துக்குபின் புறம்பாகைக்கு உறுப்பாகையாலும்
உத்தேசியமான பகவத் பாரதந்தர்யத்துக்குப் விரோதியாகையாலும்
அதர்மம் என்று பேராகம் பிராப்தமாய் இருக்க -தர்மம் என்று பேர் இடுகிறது
இவ்வளவு பாகம் வராதவர்களுடைய பிரதிபத்தியாலே இறே

ஆகையால் இங்குச் சொல்லுகிற சித்த சாதன வ்யதிரிக்த ஸாத்ய சாதனங்களினுடைய
ஸ்வரூப தியாகம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-

இப்படி த்யாஜ்யமான தர்மம் தான் –
அநுஷ்டேய தயா ஸாஸ்த்ர விஹிதமான அர்த்தத்துக்கு வாசகம் ஆகையால்
விஹித அனுஷ்டான ரூபேணவும் -நிஷித்த பரிஹார ரூபேண வும் சொல்லுகிற உபய வித தர்மத்துக்கும் வாசகமாய் இருக்கிறது —
இத்தை த்யாஜ்ய தயா உபாதானம் பண்ணுகிற இத்தால் நிஷித்த பரிஹார தியாகம் ஆகிறது நிஷித்த அனுஷ்டானம் ஆகையால்
நிஷித்த அனுஷ்டானம் வஹ்யமாணமான ஸ்வீ காரத்துக்கு அங்கம் ஆகாதோ என்னில் –
அது சகல ப்ரவ்ருத்திகளினுடையவும் நிவ்ருத்தியை ஸஹிக்குமது ஒழிய ப்ரவ்ருத்தியை சஹியாது –
அதுக்கு மேலே நிஷித்த அனுஷ்டான பலமான பாபம் ஈஸ்வரனுடைய நிக்ரஹம் ஆகையால் அவனை அதிசயிப்பித்து
ஸ்வரூப சித்தியாய் இருக்கிற இவ்வதிகாரிக்கு தந் நிக்ரஹ காரணமான நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யமாகக் கடவது –
புருஷார்த்தமும் பகவத் கைங்கர்யம் ஆகையாலும் நிஷித்தம் த்யாஜ்யமாய் இருக்கும்
ஆக ஸ்வரூப -சாதன -புருஷார்த்தங்கள் -மூன்றினுடைய வேஷத்தைப் பார்த்தாலும் நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யமாகக் கடவது –

இங்கன் அன்றாகில் பகவந் நிக்ரஹ ஹேதுவாய் -நரக பதந -ஹேதுவான ப்ரஹ்மஹத்யாதிகள் –
பகவத் அபசாராதிகள் த்யாஜ்யம் இன்றியிலே ஒழியும்
ஆனால் நிஷித்த பரிஹாரம் தர்ம சப்தார்த்தம் இன்றிக்கே ஒழியாதோ என்னில்
தர்மமாவது அநுஷ்டேய தயா ஸாஸ்த்ர விஹிதமானது ஆகையால்
இதம் குரு இதம் மா கார்ஷீ என்ற விதி நிஷேதாத்மகமான உபயத்தையும் வகிக்கும் ஆகையால் இது சொல்ல ஒண்ணாது –

ஆனால் என் சொல்லிற்று ஆயிற்று என்னில் –
ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதாநி -என்றும் -ந களஞ்ஜம் பஷயேத்-இத்யாதிகளாலே சாமாந்யேன சொல்லுகிற
நிஷித்த நிவ்ருத்தி மாத்திரம் தர்ம சப்த வாஸ்யம் அன்று –
ஆனாலும் சாதன ரூப தர்ம வாசகமான இத் தர்ம சப்தத்தில் உபாத்தம் அன்று –
ஆகையால் சாமாந்யேந நிஷித்த அனுஷ்டானம் வரும் என்கிற சங்கை இல்லை –

இதில் மோக்ஷ சாதன ரூபமான விதி நிஷேதாத்மகமான தர்மங்களை சொல்லுகிறது –
அதனுடைய தியாகத்தில் சாதன சித்தி இல்லாமை ஒழிய வருவதொரு நிஷித்தம் இல்லாமையால்
தத் சாதன அபேக்ஷை இல்லாதவனுக்கு த்யாஜ்யமாகக் குறையில்லை
நிஷித்த பரிஹாரத்திலே அந்வயிக்கிற ஸ்வ ரக்ஷணத்திலே ப்ரவ்ருத்தனுக்கு அத ஏவ பிரபத்தி அதிகார ஹானி வருகையால்
பூர்வ ஆர்ஜித பாப பிராயச்சித்தம் த்யாஜ்யமாமோபாதி நிஷித்த பரிகாரமும் த்யாஜ்யமாகக் கடவது –

த்ரிவிதாம் பஸ்யதே வேச ஸர்மனோ கஹனாம் கதிம் -நிஷேத விதி சாஸ்திரேஸ் யஸ்தாம் விதாஞ்சநி போதமே-
அநர்ர்த்த சாதனம் கிஞ்சித் கிஞ்சித் சாப்யர்த்த சாதனம் -அனர்த்த பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி பதிஸ்யதே –
த்ரை ராஸ்யம் கர்மணா மேவம் விஜ்ஜேயம் ஸாஸ்த்ர சஷுஷா -அபாயோபேய ஸம்ஜ்ஜ்வது பூர்வவ் ராஸீ பரித்யஜேத் –
த்ருதீ யோத்விவிதேரீராஸீர் நர்த்த பரிஹாரஹ -ப்ராயச்சித்தாத் மகம் கிஞ்சித் உத் பன்னா நர்த்த நாஸச் –
தமம் சம் நைவ குர்வீத மநீஷீ பூர்வ ராசிவத்–என்று நிஷேத விதி சாஸ்திரங்களில்
கர்மத்தினுடைய பிரகாரம் த்ரிவிதமாய் இருக்கும் காண்-அந்த பிரகாரத்தை என் பக்கலிலே அறி என்று தொடங்கி
அநர்த்த ரூப நரகாதிகளுக்கு சாதகமாய் இருக்கும் சில –
போக மோக்ஷ ரூப புருஷார்த்த சாதன ரூபமாய் இருக்கும் சில –
அநர்த்த பரிஹார சாதகமாய் இருக்கும் சில -இப்படி த்ரிவிதமாய் இருக்கும் என்று ஸாஸ்த்ர சஷுஸ் ஸாலே அறியப்படும் –
அதில் அநர்த்த சாதனமான அபராத கர்மம் சகல இதர அபேக்ஷகமாய்க் கொண்டு சித்த சாதனத்தைப் பரிக்ரஹிக்கிறவனுக்கு
தத் அங்கமாகையாலே த்யாஜ்யம் –
அநர்த்த பரிஹார தர்மத்தில் பூர்வார்ஜித பாப பரிஹாரமான பிராயச்சித்த தர்மம் சித்த தர்ம ஸ்வீ காரத்துக்கு யோக்யதைகள்
பொகடவும் வேண்டாதபடி இருந்தபடியே அதிகாரமாகையாலே த்யாஜ்யம்
ஆகாம்ய நர்த்த பரிஹாரமான தர்மம் சரண வரண அநந்தரம் அநர்த்த ஹேதுவான தர்மங்களில் புத்தி பூர்வக ப்ரவ்ருத்தி கூடாமையாலும்
அபுத்தி பூர்வகம் வஸ்வா ஹ்ருதயத்தில் படாமையாலும்
பட்டாலும் பாப விசேஷணமான சர்வ சப்தத்தில் அந்தர் பவிக்கையாலும் த்யாஜ்யம் என்று
ஏவம் ரூபமான தர்ம தியாக பிரகாரம் சாஸ்திரங்களில் பரக்கச் சொல்லப்பட்டது
ஆகையால் மோக்ஷ சாதனதயா விஹிதமான விதி நிஷேதாத்மகமான சகல தர்மங்களும்
ச அங்கமாக த்யாஜ்யம் என்றதாயிற்று

அதவா
சர்வ தர்ம பரித்யாக விதான பூர்வக சரண வரண விதி விஷய பூதனான இவ்வதிகாரிக்கு
கர்த்தவ்யத்வேந விஹிதமாய் இருபத்தொரு ஓன்று இல்லாமையாலும் –
சரண்ய பிரபாவத்தாலும் -சர்வ பாப விமோசகமான விஷயத்தைப் பற்றி இருக்குமவனுக்கு அவசமாகப் புகுந்தவை
பந்தகமாக மாட்டாமையாலும்
சாமான்யேந உண்டான நிஷித்த நிவ்ருத்தி தியாகத்தைச் சொல்லவுமாம் என்று அனுசந்திப்பார்கள்

இப்படி உபாய உபயோகி அன்றாகிலும் சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவனத்துக்காகவும்
லௌகிகருடைய ஸங்க்ரஹத்துக்காகவும் தந்தாமுடைய ஆந்ரு சம்சயத்தாலும் பூர்வாச்சார்யர்கள் இத்தை அனுஷ்ட்டித்துப் போருவார்கள்-
அவ்வனுஷ்டானம் ஸ்வ விபூதி பூதரான சேதனருடைய உஜ்ஜீவன ஹேதுவாகையாலே
ஈஸ்வர ப்ரீதி விஷயத்வம் ஆகிற புருஷார்த்தம் அனுஷ்டாதாவுக்கு சித்திக்கையாலே இவை அநுஷ்டேயங்கள்

கர்த்த்ரு கரண த்ரவ்ய மந்த்ரங்கள் பேதியாது இருக்கச் செய்தேயும்
நினைவு மாறாட்டத்தாலே ஒரு கர்மத்துக்கே ப்ரவ்ருத்தக கர்மம் என்றும் நிவர்த்தக கர்மம் என்றும் பேராகிறவோபாதி
நிவர்த்தக தர்மமும் நினைவு மாறாட்டத்தாலே ப்ராப்யத்திலே அந்வயிக்கும்

ஆக
த்யஜ-என்கிற இத்தால் -சாத்தியமான சகல சாதனங்களினுடையவும் தியாகத்தைச் சொல்லிற்று

———-

அநந்தரம் -பரி -என்கிற -உப சர்க்கத்தாலே –
சாதன தர்மம் -ஸ்வரூப அனுரூபம் அன்றாகிலும் ஸ்வ அபீஷ்டமான புருஷார்த்தம் ஸ்வ யத்ன ஸாத்ய சாதன லப்யம் என்று
கேட்டுப் போந்த வாசனையாலே த்யக்தமான உபாயங்களிலும் வாசனை அனுவர்த்திக்குமாகில்
அதிகாரத்துக்கு பங்கம் ஆகையாலும் அபாய சம்யோகத்தில் போலே உபாய சம்யோகத்திலும்
ப்ராயச்சித்தியாம் என்று கீழே சொல்லுகையாலும் –
வாசனையும் ருசியும் கிடக்குமாகில் சித்த சாதனத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழிகையாலும்
ஸ்வ ஸ்வரூபத்தையும் பந்தத்தையும் அனுசந்தித்தால் சாதனாந்தர அந்வயம் ஆகிறது
ராஜ மஹிஷி உஞ்ச வ்ருத்தி பண்ணுதல் குடம் சுமத்தல் செய்தல் ராஜாவுக்கு அவத்யமாமோபாதி
ரக்ஷகனான ஈஸ்வரனுக்கு அவத்யமாமாகையாலும் வாசனா ருசிகளும் கூட விட வேண்டுகையாலே
ச வாசனமான தியாகத்தைச் சொல்லுகிறது –

ஸ்வரூபத்துக்கு சாதனாந்தரங்களின் ப்ரத்வம்ஸா பாவம் இன்றியிலே அத்யந்தா பாவம் அனுரூபம் ஆகையால்
பிரதிபத்தியும் அத்யந்தா பாவமாக வேண்டுகையாலே சாதனாந்தர ஸத்பாவ பிரதிபத்தி இன்றிக்கே –
ந ஜாநே சரணம் பரம் -என்று இருக்கையை பூர்ண அதிகாரம் –
இப்படி அத்யந்தா பாவ பிரதிபத்தி விசிஷ்டனாகையாலே தியாகம் தான் இல்லை என்னலாம் படி இருக்கும் –
ஆகையால் இதில் சொல்லுகிற த்யாகமாகிறது சாதனாந்தரங்களினுடைய அநந்வய அனுசந்தானம் என்னும் இடம்
இந்த உப சர்க்கத்தாலே சொல்லுகிறது –

இந்த உபாயாந்தர அன்வயமே சித்த உபாய அன்வய பிரதிபத்தி யாகிற ஸ்வீ காரத்துக்கு அங்கம் ஆகையால் –
த்யாஜ்ய அநந்வய நிபந்தனமான தயாகாபாவத்தில் ஸ்வீ காரத்தில் அந்வயம் வர ஒண்ணாது –
சித்த சாதனம் பிரவ்ருத்தி சஹம் அல்லாதாவோபாதி நிவ்ருத்தி ரூப கிரியையையும் சஹியாது ஆகையால் –
இதில் தியாகம் விதிக்கிற பிரகரணத்திலே சாதனாந்தரங்களைப் பரக்கச் சொல்லிக் கொண்டு போருகையே
அப்ரஸ்துதம் ஆகையால்
அனுஷ்டான வாக்கியத்தில் ஸ்வீ காரம் மாத்திரம் இறே ப்ரதிபாதிக்கப்படுகிறது –

இவை தன்னில் அனுஷ்டானத்துக்கு அசக்தனானவன் –
சோஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ்ஸ்து தவ்நச -சாமர்த்தயவாந் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரசீதமே -என்று
தேவ தேவேஸ-தேவரீருடைய அர்ச்சநஸ் தவ நாதிகளால் நான் சக்தன் அல்லேன் –
கேவல கிருபையால் ரஷ்ய பூதன் என்று திரு உள்ளம் பற்றி ப்ரசாதித்து அருள வேணும் –
இதில் அதிகரித்தவன் சர்வ தர்மாம் ஸ் ச சநத்யஜ்ய -என்கிறபடியே அப்ராப்தம் என்று அறிந்தவாறே விடும் –
இவை நமக்கு அப்ராப்தம் என்கிற ஞானமுடையவர்கள் –
நோற்ற நோன்பிலேன் –மற்றேல் ஓன்று அறியேன் -என்கிறபடியே –
அவை எனக்கு இல்லை என்று அறிவிப்பார்கள் –
ஆகையால் சித்த உபாய வரணம் சர்வாதிகாரம் ஆகிறது –

அப்போது
ல் யப்பில் -சொல்லுகிற தியாக அங்கத்துவம் ஸித்திக்கும் படி என் என்னில் –
சர்வ உபாய ஸூந்யராய் இருப்பார் இல்லாமையால் -யதா யோக்யம் விட்டுப் பற்றுவாரும் –
அநந்வய அனுசந்தானம் பண்ணிப் பற்றுவாருமாய் இருக்கையாலே அங்கத்துவ சித்திக்குக் குறை இல்லை –
இவற்றில் இல்லை என்று அறிவிக்கிறவர்களுக்கு வாசனா ருசிகளும் கூட இல்லாமையால் அவர்கள் முக்கிய அதிகாரிகள் –
ஏவம் ரூபமான ருசி வாசனைகளுடைய அத்யந்தா பாவம் தியாக வாசகமான -த்யஜ்ய -என்கிற சப்தத்துக்கு
விசேஷணமான பரி சப்தத்தால் சொல்கிறது –
தர்ம சப்தத்தில் உப சர்க்கம் தர்ம அனுஷ்டான யோக்யதா பாதங்களை யுபதானம் பண்ணுகையாலே
த்யாஜ்யம் நிரவசேஷ வாசகமாகிறது
வ்ரஜ வில் விதிக்கிற பர ஏக ரஷ்யத்வ பிரதிபத்தியில் ஸ்வ அந்வய ராஹித்யத்தை காட்டுகிற ஏக பதம்
உபாய ஸ்வரூபத்துக்கு ஓவ்ஜ்ஜ்வல்யாஹம் ஆகிறவோபாதி த்யஜ்ய என்று விதிக்கிற சாதனாந்தரங்கள்
பர ஏக ரஷ்யத்வ விரோதி என்கிற பிரதிபத்தி ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஓவ்ஜ்ஜ்வல்யாஹமாய் இருக்கும் –

அங்கியான ஸ்வீ காரம் ஆகிறது -நித்ய சித்த -ரஷ்யத்வ அந்வய ப்ரபத்தியினுடைய அனுசந்தானம் ஆகையால்
உபாய நைரபேஷ்ய விரோதி இல்லாதாவோ பாதி
அங்கமான தியாகமும் நித்ய சித்த சாதனாந்தர அநந்வய பிரதிபத்தி ஆகையால் நைரபேஷ்ய விரோதியாகாது –
ப்ரக்ருத் யர்த்த அந்விதமான வுகாரம் ஸ்வரூபத்தில் அநந்யார்ஹதையைக் காட்டும்
தாத் வர்த்த அன்வித இவ்வுகாரம் உபாயத்தினுடைய அநந்யார்ஹதையைக் காட்டும்

ஸ்வரூபத்தில்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்றும்
மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மா லிருஞ்சோலி எம் மாயற்கு அல்லால் -என்றும்
அந்ய ஸ்பர்சம் நாசகரமாய் இருக்குமோபாதி
உபாயத்திலும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும் சொல்லுகிறபடியே
இதர சாதன ஸ்பர்சமும் -ஸ்வகீய ஸ்வீ காரமும் நாசகரமாய் இருக்குமாகையாலே
சாதனாந்தரங்களினுடைய அந்யதா பாவ பிரதிபத்தி இந்த பரி சப்தத்தால் சொல்லிற்று ஆயிற்று

உபாய உபாயங்களினுடைய சம்யோகத்தில் பிராயச்சித்தியாம் என்று கீழே சொல்லிற்று –
அவ்விடத்தில் அவனுக்குச் சொல்லுகிற ப்ராயச்சித்தமாவது –
அபிசேத் பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத –யோக மேவ நிஷே வேதநா நயம் யஜ்ஜம் சமாரபேத் -என்று
யோக அப்யாச நிரதனானவன் ப்ரமாதத்தாலே ஏதேனும் பாபம் பண்ணினால் யோகத்தையே சேவிப்பான் –
வேறு ஒரு யஜ்ஜம் அனுஷ்டிப்பான் அல்லன் என்று யோகிக்கு பிராமாதிக பாப ஸ்பர்சத்தில்
யோக அப்யாசம் தானே ப்ராயச்சித்தமாம் போலே
அபாய சம்ப்ல வேஸத்ய-பிராயச்சித்தம் சமா சரேத்–ப்ராயச்சித்திரியம் ஸாத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்-
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீ காரேப் யேத தேவஹி -என்று
புந பிரபத்தி என்னும் இடம் சொல்லிற்று –

க்ருதே பாபேநு தாபோவை யஸ்ய பும்ஸ பரஜாயதே-பிராயச்சித்தந்து தஸ்யைகம் ஹரி சம் ஸ்மரணம் பரம் -என்று
பாபம் பண்ணின அளவில் யாவன் ஒரு புருஷனுக்கு அனுதாபம் பிறக்கிறது –
அவனுக்குப் பிராயச்சித்தம் ஹரி சப்த வாஸ்யனான ஸர்வேஸ்வரனே அந்தப் பாபங்களை போக்குவான் என்று நினைக்கையும்-என்றும்
கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்று பகவத் பிரகாரத்வ அநு ஸந்தானமே
சர்வ பிராயச்சித்தங்களிலும் அதிகமான பிராயச்சித்தம் என்று பிரதேசாந்தரங்களிலும் சொல்லிற்று

அவ்விடத்தில் புந பிரபதனம் ஆகிறது –
புந பிரயோகம் இன்றிக்கே பூர்வ க்ருத பிரபத்தியினுடைய சர்வ அநிஷ்ட நிவாரகத்வ ரூபமான ஆகாரத்தை அனுசந்தித்து
வ்யவசிதனாகை-ஆகையால் -சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருத -என்றும் –
சக்ருதேவ ப்ரபந்நாய -இத்யாதிகளில் சொல்லுகிற சக்ருதேவ பிரபத்தியோடே விரோதியாது

அநந்தரம் த்யஜ்ய -என்கிற ல்யப்பாலே –
இத் தியாகம் மேல் சொல்லுகிற உபாய ஸ்வீ காரத்துக்கு அங்கமானவன்று கர்தவ்யம் –
அல்லாத போது கர்தவ்யம் அன்று -என்கிறது

உபாயாந்தரங்களை விட்டு சித்த உபாயத்தை பற்றாதே இருக்குமாகில்
உபய பிரஷ்டனாய் விநாசத்தோடே தலைக்கட்டும் அத்தனை இறே –
ஆகையால் தியாகம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமியாதல் –
தியாகம் பூர்வகமாக ஸ்வீ க்ருதமான உபாயம் மேலிட்டு பரமபதம் என் சிறு முறிப்படிச் செல்லுதல்
செய்யும்படி இறே என்நிலை என்று ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்தது –
ஆக தியாகம் சித்த உபாய உபாய வரணம் பண்ணும் அதிகாரியைப் பற்ற வாகையாலே
தியாக விதிக்கும் அனுஷ்டான விதிக்கும் விரோதம் இல்லை –
ஆக
ல்யப்பாலே
இங்கு விதேயமான தியாகம் வ்ரஜ என்று விதிக்கிற ஸ்வீ காரத்துக்கு அங்கம் என்றதாயிற்று

நநு
இந்த தர்ம பரித்யாகம் விதேயமாகில் இதில் மேல் சொல்லுகிற சோக நிவ்ருத்தி கூடாது -எங்கனே என்னில்
உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தம் என்று விட்டவனுக்கு சோகம் இல்லாமையால்
மாஸூச -என்கிற நிஷேத விதி கூடாமையாலே –
அதுக்கு மேலே உபாயாந்தரங்களை துஷ் கரத்வாதி பயத்தால் விட்டுத் தன்னுடைய புருஷார்த்த லாபத்துக்கு
ஒரு உபாயம் இல்லாமையால் சோகித்தவனுக்கு இந்த உபாய ஸூந்யத்வம் முன்பு சொன்ன
உபாயங்களைத் தானே விடுகையாலே தியாகத்துக்கு விதேயத்வம் இல்லை யாகையாலும்
அந்த உபாயத் தியாகம் தான் துஷ்கரத்வாதி பிரபத்தியாலே யாகையாலும்
விளம்ப அஷமனான புருஷனுக்கு பஹு தர ஜென்ம ஸாத்யமான உபாயாந்தரங்களில்
துஷ் கரத்வாதி பிரதிபத்தி பிறக்கையாலும்
புருஷார்த்த வை லக்ஷண்ய ஞானத்தால் தத் ப்ராப்தியிலே அதி த்வரை நடக்கையாலே அதில் விளம்பத்தை
ஸஹியாமல் சிர கால ஸாத்யமான உபாயாந்தரங்களை விட்டு அவிளம்ப்ய பல பிரதமாய் இருபத்தொரு உபாயம்
காணாமையாலே சோகிக்கிறவனைக் குறித்து ஸ்வதஸ் ப்ராப்தமான தியாகத்தை அநு வதித்து
சித்த சாதனத்தை விதிக்கிறது ஆகையாலும்
விஹிதமான உபாயத்தை விடச் சொல்லி விதிக்கில் ஸாஸ்த்ர வையர்த்யம் வருகையாலும் –
ஒரு பலத்துக்கு குருவாயும் லகுவாயும் இருப்பது இரண்டு உபாயத்தை விதித்தால்
லகு உபாயம் உண்டாய் இருக்க குரு உபாயத்தை இழிவார் இல்லாமையால்
லகு உபாயமான பிரபத்தி உபாய சந்நிதியில் குரு உபாயமான பக்திக்கு அனுஷ்டானம் இல்லாமையால்
வருகிற அப்ராமாண்யத்தாலும்
குரு உபாய சந்நிதியில் லகு உபாயத்துக்கு உதயம் இல்லாமையால் இந்த தியாகம் விதேயம் அன்று –
ஸ்வயமேவ வத்யக்த உபாயம் ஆனவனுக்கு அந்த தியாகத்தை அநு வதித்து
சரண வரண மாத்ரம் விதிக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள்

அது சொல்ல ஒண்ணாது –
அத்யந்த பரதந்த்ரமாய் -பகவத் -ஏக -ரஷ்யமான -ஸ்வரூபத்துக்கு அநு ரூபம் அல்லாத சாதனாந்தர தர்சனத்தாலே
சோகித்தவனைக் குறித்து -அவற்றினுடைய தியாக பூர்வகமாக அநு ரூப உபாயத்தை விதித்து சோகியாதே கொள் என்கையாலே
சோக நிஷேத விதி கூடாது என்கிற இடம் அர்த்தம் இல்லாமையாலும் –
உபாயாந்தரங்களை துஷ் கரத்வாதி பயத்தால் விட்டவனுக்கு அது ராஜஸ தியாகம்
அவனுக்குத் தியாக பலமான ஆகிஞ்சன்ய சித்தியும் இல்லை என்னும் இடம் –
துக்கமித்யே வயத் கர்ம காய கிலேசஸ் பயாத் த்யஜேத் -சக்ருத்வா ராஜஸ தியாகம் நைவ த்யாஜ பலம் உபேத்–என்று
கீழே சொல்லி -துஷ் கரத்வாதி பய நிபந்தனமாக வருகிற தியாகத்தை நிஷேதிக்கையாலும்
துஷ் கரத்வாதி பய நிபந்தனமான தியாகத்தில் ஸக்ய அம்ச அனுஷ்டானத்தில் -சர்வ சப்தத்துக்கு நைரர்த்த்யம் வருகையாலும்
பகவத் ஏக ரஷ்யமான ஸ்வரூபத்துக்கு ரஷக வியாபாரம் ரக்ஷகமாவது ஒழிய ரஷ்ய வியாபாரம் ரக்ஷகம் ஆக மாட்டாமையாலும் –
ஸ்வ ரக்ஷண வியாபாரம் பாதகாதகளோபாதி பிரதிபந்தகம் ஆகையாலும்
ஸூ கரமுமாய் அநு ரூபமுமாய் -நிரபாயுமுமான -சாதனத்துடைய ஸ்வீ காரத்துக்காக –
தத் விருத்தமாய் -துஷ் கரமுமாய் -ச அபாயமுமாய் -ஸ்வரூப அநநு ரூபமாய் -இருக்கிற சாதனாந்தரங்களை
விடச் சொன்ன இத்தால் ஸாஸ்த்ர வையர்த்த்யம் வரும் என்ன ஒண்ணாதாகையாலும்
குண அநு குணமாக விஹிதமான ஸ்யேந வித்யாதிகள் -ஸாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து யாதாவான
புருஷார்த்த தத் சாதனங்களில் ருசி பிறந்தவாறே த்யாஜ்யமாக விதிக்கிறாப் போலே

ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருவாதிகளே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அநு சந்தித்தவனைக் குறித்து
விஹிதமான சாதனாந்தரங்கள் அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள் ஆகிற
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானவானைக் குறித்து த்யாஜ்யமாக விதிக்கப் ப்ராப்தமாகையாலும்
பரம புருஷார்த்த லக்ஷணமான புருஷார்த்தத்தை அறிந்து இருக்கச் செய்தேயும்
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களிலே அபிலாஷை நடக்கக் காண்கையாலும்
ஸாதனத்திலும் ஒருவன் ரத்ன பரீஷை பண்ணி ஜீவிக்கக் காணா நிற்கச் செய்தேயும்
ஒருவன் கிருஷி பண்ணி ஜீவிக்கக் காண்கையாலும்
பூர்வ பூர்வ கர்மாநு குணமாக ஸூகர துஷ் கர மார்க்கங்களில் ருசி பிறக்குமாகையாலும்
ஸாத்ய சாதனங்கள் ஆயாசாதிகளாலே துஷ் கரமாகிறவோ பாதி சித்த ஸாதனத்திலும் விஸ்வாச கௌரவத்தில்
அருமையாலே துஷ் கரத்வம் உண்டாகையாலும்
லகு உபாய சந்நிதியில் குரு உபாயத்தில் இழிவார் இல்லை என்கிறது தூஷணம் இல்லாமையாலும்
ஆகையால் சகல சாதனங்களையும் சஹியாதே இருப்பதாய்
ஸ்வயம் நிரபேஷமான சித்த சாதன ஸ்வீ காரத்தை இதில் விதிக்கிறது ஆகையால்
தத் அங்கமான தியாகம் விதேயம் என்கிறது –

ஆக
பத த்வயத்தாலும் –
த்யாஜ்யமான தர்மங்களையும்
தியாக பிரகாரத்தையும்
தியாகம் -ஸ்வீ காரத்துக்கு அங்கம் என்னும் இடத்தையும் சொல்லிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: