ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் – –ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் –உபோத்காதம் –

ஸ்ரீ பரகாலார்ய தாசேந ஸ்ரீ ரெங்க ஸ்ரீ மதானுதா
சரண்யாபி மத ஸ்லோக தாத்பர்யம் அநு சந்ததே

பிரணவ யுக்த பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஞானவானாய்
அதில் ஆகாரத்தில் தாத் வர்த்தத்தாலே பிரதிபாதிக்கிற பகவத் நிருபாதிக ரக்ஷகத்வத்தையும்
தத் விஷயமாய் ததேக ரஷ்யமான ஸ்வரூபத்தையும்
அதில் விபக்தியாலே ப்ரதிபாதிக்கிற தத் இஷ்ட விநியோக அர்ஹ சேஷத்வத்தையும்
அந்த ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக நமஸ் சப்த யுக்தமான அத்யந்த பாரதந்தர்யத்தையும்
ச விபத்திக நாராயண பத யுக்தமான பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தில்
ஸ்வ ப்ரயோஜன விதுர பகவத் பிரயோஜன ஏக ரசிகத்வ ரூபமான தத் ஏக போகத்வத்தையும்
யாதாவாக அனுசந்தித்தவனுக்கு நமஸ் சப்த யுக்தமான அர்த்தத்தை விவரிக்கிறது
த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே –

அதில் நமஸ்ஸில் பிரதிபாதிக்கிற பாரதந்தர்ய அனுரூபமாக பிரதிபாதிக்கிற சித்த உபாயத்தை உபாய வரணம்
பண்ணுகிற தன்னுடைய அநாதி கால ஆர்ஜிதமான க்ருத்ய அகரண அக்ருத்ய கரண பகவத் அபசார
பாகவத அபசார அஸஹ்யா அபசார ரூப நாநா வித அபசாரத்தையும்
தான் நிபந்தனமாக ஷிபாமி ந ஷமாமி ஹன்யும் என்கிறபடியே
ஆஸூரியான யோனிகளிலே தள்ளி அறுத்துத் தீற்றுவேன் என்று இருக்கிற ஈஸ்வர ஹ்ருதயத்தில் அழற்றியையும்
அபராத ஞானாதிகளுக்கு ஹேதுவானவனுடைய சர்வஞ்ஞாதிகளையும்
நிரங்குச ஸ்வா தந்த்ரத்தையும் நிகில ஜெகன் நிருபாதிக நிர்வாஹகத்தாலே –அபித பாவ கோபமம்-என்கிறபடியே
அணுக அரியவனாய் இருக்கிறபடியும் அறிந்து அச்சீற்றத்தை ஆற்றி
அவன் திருவடிகளில் தன்னை சேர விடுகைக்குத் தன்னோடும் அவனோடும் சத்தா நிபந்தமான சம்பந்தம் உடையவளாய்
தன ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களாலும் ஆலிங்கன ஆலாப விலோகாநாதி விலாச பேதங்களாலும்
நிரங்குச ஸ்வா தந்த்ரனானவனை அடக்கி ஆள வல்லாய் அவன் தன் வைஸ்வரூப்யம் எல்லா வற்றையும் கூட
சர்வகாலமும் அனுபவியா நின்றாலும் அபூர்வவத் விஸ்மயங்களைப் பண்ணுகிற தன்னுடைய போக்ய அதிசயத்தாலே
சர்வஞ்ஞனானவனையும் மதி மயங்கப் பண்ண வல்லவளாய் நித்ய அநபாயினியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக

அபராத ஞாதாதிகளால் அபி பூதமாய் புருஷகார பூதையான அவளாலே உத் பூதங்களான வாத்சல்யாதிகளை முன்னிட்டு
குணங்களில் காட்டில் தானே உபாயமாக வற்றாய் ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தனக்கு அனுரூபமான பிரகாரத்தாலே
புரஸ்கரித்துப் பற்றி இருக்குமவனுக்கு நாராயண பத யுக்தமான வர்த்தத்தை விவரிக்கிற உத்தர வாக்யத்தாலே
தத் ஏக போகத்வ ரூபமான கைங்கர்யத்தை தத் பிரதி சம்பந்த பூர்த்தி ஹேதுவான ஸ்ரீ மத்தையையும்
தத் ஸ்வரூப ப்ராப்ததா ஹேதுவான ஸ்வாமித்வத்தையும் தத் பிரேரித்வ ஹேதுவான சரீரத்வத்தையும்
தத் ப்ரயோஜன ஹேதுவான சேஷித்வத்தையும் –
கைங்கர்யத்தினுடைய ப்ரீதி காரிதத்வ ஹேதுவான அனுபவத்துக்கு விஷயமான ஸ்வரூப குணாதி வை லக்ஷண்யதையும் அனுசந்தித்து
அதில் ஸ்வ கர்த்த்ருத்வ ஸ்வ சாரஸ்யாதி நிவ்ருத்தி பூர்வகமாக பிரார்த்திக்கிற அதிகாரிக்கு ஸஹகாரி நிரபேஷமான அந்த உபாய வரணம்

தத் இதர சகல உபாய நிவ்ருத்தி பூர்வகமாக அல்லது இராமையாலும்
உபேய பிரார்த்தனையும் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகனுக்கு அல்லது கூடாமையாலும்
உபாய வரணத்தை தத் அங்கமான கர்மா ஞானாதி சாதனாந்தர தியாக பூர்வகமாக விதித்து –
தியாக பூர்வகமாக ஸ்வீ க்ருத உபாயனானவனுக்கு தத் பல அனுபவ ப்ராப்ய விரோதி சகல பாபங்களையும்
நிஸ் சேஷமாக நிவர்த்திப்பிக்கிறேன் என்று
நிவ்ருத்தி விரோதிகனுடைய நிர்ப்பரத்வ அனுசந்தானத்தையும் சொல்லித் தலைக் கட்டுகிறது ஸ்ரீ சரம ஸ்லோகம் –

இந்த சித்த உபாய வரணம் தத் இதர சகல சாதனாந்தர தியாக பூர்வகமாகில் அந்த சாதனாந்தரங்களை விதிக்கிற
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி சகல சாஸ்த்ரங்களோடும்
தத் அனுஷ்டானத்தாலே முக்தரானார் உண்டாகையாலே அனுஷ்டானத்தோடும்
இவற்றினுடைய தியாகத்தை விதிக்கிற இஸ் ஸ்லோகத்துக்குக் கீழ் அடங்கலும்-ஸ்ரீ கீதையில் இவற்றைப் பரக்க
உபதேஸிக்கையாலே பிரகரணத்தோடும் விரோதிக்கும் –
ஆகையால் இந்த தியாக விதி அநு பபன்னம் என்று சிலர் சொல்லுவார்கள் -எங்கனே என்னில்

வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத
ஜ்யோதிஷ்டோமே ந ஸ்வர்க்க காமோ யஜேத-என்று ஸ்வர்க்க அர்த்தியானவன்
ஜ்யோதிஷ்டோம யோகத்தால் யஜிப்பான் -வசந்தம் தோறும் யஜிப்பான் என்றும் –
யாவஜ்ஜீவம் அக்னிஹோத்ரம் ஜூஹூ யாத் ஸ்வர்க்க காம -என்று ஸ்வர்க்க அர்த்தியானவன்
யாவச்சரீர பாதம் அக்னி ஹோத்ரம் பண்ணுவான் என்றும்
தர்மேண பாபம் அபநுததி -என்று தர்ம அனுஷ்டானத்தாலே பாபத்தைப் போக்குவான் என்றும்
யஜ்ஜேந தாநேந தபஸாந சகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி –என்று நாசகரமான பல அபிசந்தியை ஒழிந்து இருக்கிற
யஞ்ஞ தானங்களாலும் ஞான யோகத்தைப் பெறுவார்கள் என்றும் –
அவித்யயா ம்ருத்யும் தீர்த்த்வா வித்த்யயா அம்ருதம் அஸ்நுதே –என்று அவித்யா சப்த வாஸ்யமான கர்மத்தால்
அநிஷ்ட நிவ்ருத்தியையும் வித்யா சப்த வாஸ்யமான ஞானத்தால் இஷ்டமான மோக்ஷத்தையும் பெறுவார்கள் என்றும் –
சர்வ அபேஷா ச யஞ்ஞாதி ஸ்ருதிர் அஸ்வவத் -என்றும்
சஹகாரித்வே ந ச -என்றும் வேதந விசேஷமான பக்தி யோகம் கர்மாதி அங்கங்களை உபேக்ஷித்து இருக்கும் –
யஜ்ஜேந தாநேந என்கிற ஸ்ருதி உண்டாகையாலே கமன சாதனமான அம்சம் அநேக உபகரண அபேக்ஷையாய் இருக்குமா போலே-என்றும்
வித்யைக்கு சஹகாரி யாகையால் என்றும் –

பல சம்பிபித் சயா கர்மபிரதா மா நம்பி ப்ரீ ஷந்தி சப்ரீ தோலம்பலாய–என்று பல சம்பந்தத்தில் இச்சையால் –ஸ்ரத்தையாலே –
அநுஷ்டேயமான கர்மங்களாலே பரமாத்மாவை பிரியப்படுத்தக் கடவன் -ப்ரீதனானவன் பல பிரதானத்தில் சமர்த்தன் என்றும்
இயாஜசோபி ஸூப ஹுன் யஜ்ஜா நஜ்ஞா ந வ்யாபாஸ்ரய ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா–என்று
அவித்யா சப்த வாஸ்யமான கர்மத்தினுடைய அனுஷ்டானத்தாலே ப்ரஹ்ம ஞானத்தைப் பற்ற அத்தாலே நாசகரமான
சம்சாரத்தைக் கடக்கைக்காக ஆத்ம ஞானாவானாய்க் கொண்டு அநேக யஜ்ஜ்ங்களை யஜித்தான் என்றும்
வர்ணாஸ்ரம அசாரவதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாந்யஸ் தத் தோஷ காரக -என்று
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்ம அனுஷ்டானவான புருஷனால் சர்வ வ்யாபகனாய் சர்வ ஸ்மாத் பரனான
சர்வேஸ்வரன் ஆராதிக்கப்படும் -அது இல்லாதவன் அவனைப் பிரியப்படுத்த மாட்டான் -என்றும் இத்யாதிகளாலே
வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யதயா அங்கமாக யுடைத்தாய் ஞான சாதனமான கர்மத்தினுடைய
அவசிய அநுஷ்டேயத்வம் சொல்லுகையாலும்

அதுக்கு மேலே ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் ப்ரஹ்மத்தை யாதாவாக அறிந்தவன்
அந்த பர ப்ரஹ்மத்தை பிராபிக்கும் என்றும்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யோ வேத நிஹிதம் குஹா யாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபஸ்சிதா -என்று
சத்ய சப்த வாச்யனாகையாலே அசத்ய சப்த வாஸ்யமான அசித்தில் காட்டிலும் வ்யாவ்ருத்தனாய்
ஞானம் -என்று அசங்குசித ஞானவானாகச் சொல்லுகையாலே -சங்குசித ஞானனான பத்தாத்மாவிலும் –
சங்கோசம் தீர்ந்து விகசித்த ஞானவானான முக்தாத்மாவிலும் வ்யாவ்ருத்தனாய்
அநந்தம் -என்று விபுத்வ நித்யத்வ பிரகாரித்வங்களாலே தேச கால வஸ்துபிர் அபரிச்சின்னம் என்கையாலே –
அணுவாகையாலும் பரிச்சின்ன ஸ்வரூபனான நித்யாத்மாவிலும் வியாவ்ருத்தனாய்
ஹ்ருதய குஹையிலும் பரம வ்யோமத்திலும் இருக்கிற ப்ரஹ்ம ஸ்வரூபத்தை யாவன் ஒருவன் அறிகிறான்
அவன் ஞான ஸ்வரூபனான ப்ரஹ்மத்தோடு கூட அவன் குணங்களை அனுபவியா நிற்கும் என்றும்

தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நாந்ய பந்தா அயநாய வித்யதே –என்று —
கீழ் -சஹஸ்ர சீர்ஷா புருஷா -என்று தொடங்கி–ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே –என்கிற இடம்
அறுதியாகச் சொல்லப்பட்ட சர்வ சக்தி யுக்தனாய் -சர்வஞ்ஞனாய் -சர்வ வியாபகனாய் -புருஷ சப்த வாச்யனாய் –
காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களுக்கும் காலதரயத்துக்கும் பிரகாரியாய் -மோக்ஷ பிரதனாய் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகனாய் -சர்வ காரண பூதனாய் –
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் இருக்கிற மஹா புருஷனை
ஏவம் பூதனாக அறிந்தவன் அம்ருதத்வ ரூபமான மோக்ஷத்தைப் பிராபிக்கும் –
இந்த மோக்ஷ ப்ராப்திக்கு ஏவம் ரூப ஞானம் ஒழிய வேறு வழியில்லை என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறிந்தவன் தத் ஸாரூப்யத்தைப் பெறும் என்றும்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
ப்ரஹ்மத்தை யதாவாக அறிந்தவன் ப்ரஹ்ம ப்ராப்திக்கு விரோதியாய் ஸூக துக்கங்களுக்கு ஹேதுவான
புண்ய பாபா ரூப கர்மங்களை நேராக விட்டு அகல்மஷனாய் ப்ரஹ்மத்தோடு
சாம்யாபத்தி யாகிற மோக்ஷத்தைப் பெறும் என்றும்

அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேநம் ததோ விது–என்று
ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் -அசத் கல்பன் -ப்ரஹ்ம ஞானாவானாகில் உஜ்ஜீவிக்கும் என்றும்
ப்ரசா சிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் –ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் வித்யாத்து புருஷம் பரம் –என்று
சர்வ நியாந்தாவாய் அணு பூத பதார்த்தங்கள் எல்லாவற்றிலும் அணு பூதமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்
அசஷுர் விஷயமாய் இருக்கிற பர ஸ்வரூபத்தை அறிவான் -என்றும் –

யஸ்மி நத்யவ் ப்ருதீவீ ச அந்தரிக்ஷ மோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச சர்வை –
தமேவைகம் ஜாநதா தமா நமந் யாவா சோவி முஞ்சத அம்ருதஸ்யைஷ சேது -என்று
யாவன் ஒருவன் பக்கலிலே பூமி அந்தரிஷாதிகளும் மன பிராணாதிகளும் கோப்புண்டு கிடக்கின்றன –
அவன் ஒருவனையும் அறியுங்கோள்-அல்லாத வார்த்தைகளை விடுங்கோள்-அவ்வறிவு மோக்ஷத்துக்கு வழி என்றும்

ஷேத்ரஞ்ஞம் கரணி ஞானம் கரணம் தஸ்ய தேநதத்–நிஷ் பாத்ய முக்தி கார்யம் வை க்ருதக்ருத்யம் நிவர்த்ததே -என்று
கரணியான ஷேத்ரஞ்ஞன் கரணமான ஞானத்தால் முக்தி காரியத்தை நிஷ் பன்னமாக்கி க்ருதக்ருத்யனாய் மீளா நிற்கும் என்றும்
விஞ்ஞானம் ப்ராபகம் பிராப்யே பரே ப்ரஹ்மணி பார்த்திவ-ப்ராபணீய ஸ்ததை வாதப்மா ப்ரஷீணா சேஷ பாவந -என்று
ப்ராப்யமான பர ப்ரஹ்மத்தை பிராபிக்கும் இடத்தில் ப்ராபகம் ஞானம் -ப்ராபிப்பான் ப்ரஷீணா சேஷபாவனான ஆத்மா என்றும்
இத்யாதிகளால் கர்ம சாத்தியமான ஞானத்தை பகவத் பிராப்தி சாதனமாக விதிக்கையாலும்
அந்த ஞான விசேஷத்துக்கு மேலே –
யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணேதே தநூம் ஸ்வாம் -என்று யாவன் ஒருவனை
ஆத்ம பூதனான ஈஸ்வரன் வரிக்கிறான் -அவனாலே பெறப்படும் –
வரிக்கப்பட்டவனுக்குத் தன்னுடைய விக்ரஹத்தை பிரகாசிப்பிக்கும் என்றும்
பக்த்யா சத்ருத்யாச ஸமாஹி தாத்மா ஞானம் ஸ்வரூபம் பரி பஸ்ய தீஹ–என்று தைர்யத்தாலே ஸமாஹிதனான
நெஞ்சை உடையவன் பக்தியால் ஞான ஸ்வரூபனான பரமாத்மாவை இங்கேயே காணும் என்றும்
ஹ்ருதா மநீஷா மநசா பிக் லுப்தோய ஏநம விதுரம்ருதாஸ் தேபவந்தி –என்று ஹ்ருச் சப்த வாஸ்யையான பாதியை
வடிவாக வுடைய ஞானத்தால் மனஸ்ஸாகிற கரணத்தாலே அறுதியிட்டு அனுசந்திக்கிறார் யாவர் சிலர்
அவர்கள் அம்ருதத்வ ரூபமான மோக்ஷத்தைப் பெறுவார்கள் என்றும்

நாத யோநி ஸஹஸ்ரேஷு ஏஷு ஏஷு வ்ரஜாம் யஹம் -தேஷு தேஷ் வச்யுதா பக்தி ரஸ்யுதாஸ் து சதாத் வயி -என்று
நாதனே கர்ம அனுகுணமாக எத்தனை யோனிகளிலே நான் பிறப்பன் -அவ்வவோ யோனிகள் எல்லாவற்றாலும்
ஆஸ்ரிதரை நழுவ விடாத உன் பக்கலிலே அச்யுதையான பக்தி உண்டாக வேணும் -என்றும்
ஸமஸ்த ஜெகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி தர்மார்த்த காமை கிந தஸ்ய முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா –என்று
அகில ஜகத்துக்கும் காரண பூதனான உன் பக்கலிலே யாவன் ஒருவனுக்கு அசலையான பக்தி உண்டாகிறது –
அவனுக்கு தர்ம அர்த்த காமங்களாலே பிரயோஜனம் என்-மோக்ஷம் அவன் கையது அன்றோ என்றும்
இத்யாதிகளாலே கர்ம ஞான சாத்யையான பக்தியை பிராப்தி சாதனமாக விதிக்கையாலும்
கர்ம ஞான பக்திகளுடைய பரித்யாகம் சாஸ்த்திர விருத்தம் –

அவ்வளவு அன்றிக்கே
ஸூகோ முக்த வாஸூ தேவோ முக்த -என்று முக்தரான ஸூக வாமதேவாதிகள்
உபமானம் அசேஷணாம் ஸாதூ நாம் -என்று சகல சாதுக்களும் உபமானமான ப்ரஹ்லாத பரத ஸுவ்பரி முதலான
அல்லாத முமுஷுக்கள் இவர்கள் எல்லாரும் கர்ம ஞானாதிகளை அனுஷ்ட்டித்தார்கள் என்கையாலே
விலக்ஷணரானவர்களால் அனுஷ்டிதமான கர்ம ஞானாதிகளுடைய தியாகத்துக்கு அனுஷ்டான விரோதம் உண்டு –

அதுக்கு மேலே –
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜெயா யோஹ்ய கர்மண-சரீர யாதராபிசதே நபர ஸித்த் யேத கர்மண-என்று
நீ உனக்கு நியதமான கர்மத்தைப் பண்ணு–ஞான நிஷ்டையில் காட்டில் கர்ம நிஷ்டை ஸ்ரேஷ்டை –
உன்னுடைய சரீர யாத்திரையும் கர்மத்தை ஒழிந்த போது ஸாஸ்த்ர அனுஷ்டானம் இல்லாமையால் சித்தியாது என்றும்
கர்மனை வஹி சம சித்திம் ஆஸ்திதா ஜனகா தய –என்று ஜனகாதிகளான யோகிகள் கர்ம யோகத்தால்
ஆத்ம ப்ராப்தியான சித்தியை அடைந்தார்கள் என்றும் –
ஸ்வ கர்ம நிரதஸ் சித்திம் யதா விந்ததி தச் ஸ்ருணு -யதா ப்ரவ்ருத்திர்ப் பூதா நாம் யேந ஸர்வமிதம் ததம-
ஸ்வ கர்மணா தமப் யர்ச்சய சித்திம் விந்ததி மாநவ -என்று ஸ்வ கர்மத்தில் நிரதனானவன் யாதொருபடி சித்தியைப் பெற்றான் –
அத்தைக் கேள் -சர்வ பூதங்களினுடையவும் ப்ரவ்ருத்தி யாவன் ஒருவன் பக்கல் நின்றுமாய் இருக்கிறது–
யாவன் ஒருவனால் இது எல்லாம் வியாப்தமாய் இருக்கிறது -அவனை ஸ்வ கர்மத்தால் ஆஸ்ரயித்து
சித்தியைப் பெறக் கடவன் மனுஷ்யன் ஆவான் என்றும் –

நியதஸ்ய து சந்யாச கர்மனோந உபபத்யதே -என்று கர்மத்தில் நியதனானவனுக்கு
அதனுடைய தியாகம் உப பன்னம் என்றும்
ஆருரு ஷோர் முநேர் யோகம் கர்ம காரணம் உச்யதே -என்று ஞான யோகத்தில் செல்ல ஆசைப்பட்டவனுக்கு
கர்ம யோகத்தைக் காரணமாகச் சொல்லப்படா நின்றது என்றும்
யஜ்ஜ தான தப கர்மந த்யாஜ்யம் கார்யமே வதத்-யஜ்ஜோ தானம் தபஸ் சைவ பாவநாநி மநீஷினாம் -என்று
யஜ்ஜை தான தபோ ரூபமான கர்மம் த்யாஜ்யம் அன்று -கர்த்தவ்யமே -லஜ்ஜை தான தபஸ்ஸூக்களே
ஞானவான்களுக்கு பாவனமாக இருக்கும் என்றும்
ஸ்ரேயாந்த்ரவ்ய மயாத் யஜ்ஜாத் ஞான யஜ்ஜ பரந்தப-சர்வம் கர்ம அகிலம் பார்த்த ஞாநே பரி ஸமாப்யதே -என்று
த்ரவ்ய மயமான யஜ்ஜத்தில் காட்டில் ஞான யஜ்ஜம் மிகவும் ஸ்ரேஷ்டம் –
அனுஷ்டிதமான கர்மங்கள் எல்லாம் ஞானத்திலே கொடு வந்து மூட்டும் என்றும்

யதைதாம் அசிசிசமித தோக்னி ரப்பஸ்ம சாத்குருதேர்ஜூநா -ஞான அக்னிஸ் சர்வ கர்மாணி பஸ்ம சாத்குரு தேததா -என்றும்
நஹி ஞாநேந சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே தத் ஸ்வயம் யோக சம்சித்த காலே நாத்மநி விந்ததி -என்று
எரிகிற அக்னியானது விறகுகளை யாதொருபடி பஸ்மசாத்தாக்கும் -அப்படியே ஞானமாகிற அக்னி
சர்வ கர்மங்களையும் பஸ்ம சாததாக்கும் –
ஞானத்தோடு ஓக்க பரிசுத்தமாக்க வல்லது இந்த லோகத்தில் இல்லை –
அந்த ஞானத்தை கர்ம யோகத்தில் சித்தனானவன் காலக் கிரமத்தாலே பெறா நிற்கும் -என்றும்
போக்தாரம் யஜ்ஜ தபஸாம் சர்வ லோக மஹேஸ்வரம் ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி -என்று
யஜ்ஜ தபஸ் ஸூக்களால் வருகிற பலன்களுக்கு போக்தாவாய் சர்வ லோக மஹேஸ்வரனாய் சர்வ பூத ஸூஹ்ருதாய்
என்னை அறிந்து ஆத்ம அனுபாவ ரூபையான சாந்தியை அடையா நிற்கும் என்றும்
பக்த்யாமாம் அபி ஜாநாதி யாவான் யஸ்சாஸ் மிதத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே தத் அனந்தரம் -என்று
பக்தி யோகத்தால் என்னை உள்ளபடி அறியா நிற்கும் –
அநந்தரம் யாதாவாக என்னை பிராபியா நிற்கும் என்றும்

பக்த்யா த்வ அநந்யா சக்ய அஹமேவம் விதோர்ஜூநா -ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேந பிரவேஷ்டுஞ் ச பரந்தப -என்று
அநயையான பக்தியால் ஏவம்விதனான நான் அறிகைக்கும் பிராபிக்கைக்கும் ஸக்யன் என்றும்
மத் பக்திம் லபதே பராய -என்று என் பக்கலிலே பரையான பக்தியைப் பெறும் என்றும்
மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ் குரு -மா மே வைஷ்யசி சத்யந்தே பிரதிஜாநேப்ரியோ சிமே -என்று
என் பக்கல் நெஞ்சை வை -உனக்கு நல்லானான என்னைக் குறித்து யஜி- என்னை நமஸ்கரி –
இப்படிச் செய்தால் என்னையே அடையக் கட வை – உனக்கு சத்தியமே ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் –
நீ எனக்கு பிரியனாகா நின்றாய் ஆகையால் என்றும்

இத்யாதிகளால் பதினெட்டு ஒத்தாலும் ஆதாரத்தோடு பரக்க யுபதேசிக்கப்பட்ட
கர்மயோக ஞானயோக பக்தி யோகாதிகளுடைய தியாகம் பிரகாரண விருத்தம் –

ஆக இப்படி ஸாஸ்த்ர விரோதமும் -அனுஷ்டான விரோதமும் -பிரகரண விரோதமும் பிறக்கையாலே
இதில் சொல்லுகிற தியாகம் அர்த்தமாக மாட்டாது என்று சிலர் சொல்லுவார்கள் –
அவை இல்லாமையால் அது அர்த்தமாகா மாட்டாது -எங்கனே என்னில்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை–தம்ஹி தேவ மாத்மபுத்தி பிரசாதம்
முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே -என்று சதுர்த்தச புவன ஸ்ரஷ்டாவாய் பிரதானனான ப்ரஹ்மாவை
யாவன் ஒருவன் முன்பு ஸ்ருஷ்ட்டித்தான் -யாவன் ஒருவன் அவனுக்கு வேத பிரதானம் பண்ணினான் –
சர்வேஸ்வரனாய் அத்யாத்ம ஞான ஜனகனாய் இருக்கிற அவனை முமுஷுவான நான் சரணம் புகுகிறேன் என்றும்
ப்ரஹ்மணே த்வாம் அஹம் ச ஓமித்யாத்மாநம் புஞ்ஜீத -என்று நிரவதிக தேஜோ ரூபமான ப்ரஹ்மத்தின் பொருட்டு
ஆத்மாவை ரஷ்யத்வேந சமர்ப்பிப்பான் என்றும் –
ந கர்மணா ந பிரஜயாத நே தத் பாகே நைகே அம்ருதத்வம் மாந ஸூ -என்று கர்ம யோகாதிகளால் அன்றிக்கே
அவற்றினுடைய தியாகமாகச் சொல்லுகிற ப்ரபத்தியாலே அம்ருதத்வ ரூபமான மோக்ஷம் பெற்றார்கள் -என்றும்
சந்ந்யாஸஸ் தியாக இத் யுக்தஸ் சரணாகதி ரித்யபி-என்று
ந்யாஸத்தையும் தியாகத்தையும் சரணாகதியையும் பர்யாயமாகச் சொல்லுகிறது இறே–

சத்யம் தபோ தபஸ் சமோ தானம் தர்ம ப்ரஜநந மக்ந யோக்நி ஹோத்ரம் யஜ்ஜ–என்று சொன்ன கர்ம யோகத்திலும் –
மாநசம்-என்று சொன்ன ஞான யோக பக்தி யோகங்களிலும் அதிகம் நியாஸ சப்த வாஸ்யமான பிரபத்தி என்றும் –
அந்த ந்யாஸம் ஆகிறது -ந்யாஸ இதி ப்ரஹ்ம -என்றும்
ந்யாஸ இத்யாஹுர்ம நீ ஷினோ ப்ரஹ்மாணம் –என்கிற பிரபத்தவ்யமான பகவத் விஷயம் என்றும் –
அது தான் -தஸ்மான் ந்யாஸ மேஷாம் தபஸா மதிரிக்தமாஹு-என்றும்
தேஷாந்து தபஸா மந்யா சமதிரிக்தந்த பஸ் ஸ்ருதம் -என்கிறபடியே சர்வாதிகாரமான உபாயம் என்றும் –

சர்வோபாதி விநிர் முக்தம் ஷேத்ரஞ்ஞம் ப்ரஹ்மணி ந்யசேத் ஏதத் ஞானஞ்ச ஜேயஞ்ச சேஷோந்யோ க்ரந்த விஸ்தர –என்று
ப்ரக்ருதியாதி விலக்ஷணனாக ஆத்மாவை அறிந்து அவனை ப்ரஹ்மத்தின் பக்கலிலே ந்யசிப்பான் —
இதுவே அறியும் -அறியப்படுவதும் -இது ஒழிந்தவை எல்லாம் க்ரந்தப் பரப்பு அத்தனை -நிரரத்தகம்-என்றும் –
ஸர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷப–என்று
சர்வ லோகத்துக்கும் ஹித பரனான பிதாவும் பிரிய பரையான மாதாவும் ஸ்ரீயப்பதியான சர்வேஸ்வரன்
புருஷ ஸ்ரேஷ்டரே சரண்யனானவனைச் சரணம் புகுருங்கோள்-என்றும்
துரியோதன ஹ்ருஷீ கேசம் பிரபத்யஸ்வ ஜனார்த்தனம் -என்று துரியோதநநே
ஹ்ருஷீகேசனான ஜனார்த்தனை பிரபத்தி பண்ணு என்றும்
தம் ப்ரபந்ந சிரோக்ரீவ மாஸ்யே ந ஸ்ருத சோணிதம் -விலோக்ய சரணம் ஜக்முஸ் தத் பத்ந்யோ மது ஸூதநம் -என்று
திருவடிகளாலே மிதியுண்டு நொந்த காளியனைக் கண்டு அவனுடைய பத்னிகள்
மது ஸூதனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் சரணம் புக்கார்கள் என்றும்

ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத -அரி பிராணன் பரித்யஜ்ய ரஷித்வய க்ருதாத்மநா-என்று
ஆர்த்தனாகவுமாம் -திருப்தனாகவுமாம் -சரணாகதனானவன் சத்ருவானாலும் பிராணங்களை விட்டு ரஷிக்கப்படும் என்றும் –
தமனந்தமஜம் விஷ்ணும் அச்யுதம் புருஷோத்தமம்-பக்த பிரியம் -ஸூர ஸ்ரேஷ்டம் பக்த்யாத்வம் சரணம் வ்ரஜ -என்று
அபரிச்சின்ன ஸ்வரூபனாய் -நித்யனாய் -சர்வ வியாபகனாய் -ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய் -பக்த பிரியனாய் –
சர்வ தேவதைகளிலும் அதிகனான புருஷோத்தமனை பக்தியோடு சரணம் புகு என்றும் –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்நோ நாஸ்திக புரா-ஸமாஸ்ரயேதாகி தேவமஸ்ரத்தயா சரண மயதி–
நிர்த்தோஷம் விததிகம ஐந்தும் பிரபாவாத் பரமாதமந -என்று துராசாரனாய் -பஹ் வாஸியாய் –
ஒருவன் பண்ணின உபகாரத்தை இல்லை செய்யுமவனாய் -நாஸ்திகனாய் -இவற்றிலே நெடுங்காலம் அடியிட்டுப் போந்தவனே யாகிலும் –
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனை ஸ்ரத்தையோடே சரணமாக ஆஸ்ரயிக்குமாகில்
சரண்யனான பரமாத்மாவினுடைய பிரபாவத்தாலே அவனை நிர்த்தோஷனாக புத்தி பண்ணு -என்றும் –

தாவதாரா கதிஸ்த தாவாஞ்சா தாவ நமோ ஹஸ்ததா ஸூகம் -யாவன் நயாதி சரணமதவாம் அசேஷாக நாசனம் –என்று
சர்வ பாப நாசகனான உன்னைச் சரணம் புக்கான் யாதொரு அளவில் -அவ்வளவும் இறே
ஐஸ்வர்ய பரமசம் அடியாக வருகிற ஆர்த்தியும் அபூர்வ ஐஸ்வர்ய வாஞ்சையும்
ஆத்ம ஞான பாவம் ஆகிற மோகமும் பகவத் அனுபவ அலாப நிபந்தநமான ஸூகமும் என்றும் –
சரண்யம் அசரண மயாதோ கோவிந்தமநா வ ஸீததி –என்று சரண்யனான கோவிந்தனைச் சரணம் புக்கவர்களுக்கு
ஒரு காலும் அவசாதம் இல்லை என்றும் –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜனம சந்ததி –தஸ்யா மந் யதமம ஜனம் சஞ்சிரத்ய சரணம் வ்ரஜ -என்று
போக மோஷாதி யோகம் இன்றியிலே வ்யர்த்தமே போன ஜென்மங்களில் ஒரு ஜென்மமாக நினைத்து
இஜ்ஜன்மத்திலே சரணம் புகு என்றும் -இத்யாதிகளாலே சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட ப்ரபத்தியை
மோக்ஷத்துக்கு ஸ்வ தந்த்ர சாதனமாகவும்
பின்னையும் ஸ்வ அபிமத சாதனங்களுக்கு சாதனமாகவும் சொல்லுகையாலே
ஸாஸ்த்ர விரோதமும் இல்லை –

கண்டு முசுகுந்தாதிகள் பிரபத்தியால் மோக்ஷம் பெற்றார்கள் என்கையாலே அனுஷ்டான விரோதம் இல்லை –
இப்பிரகரணம் தன்னிலே
தைவீஹ் யேஷா குணமயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே –என்று
எனக்கு லீலா உபகரணமாய் சத்வாதி குண மயியான என்னுடைய மாயை ஒருவரால் அவிட்கப் போகாது –
என்னையே பிரபத்தி பண்ணுகிறார் யாவர் சிலர் அவர்கள் என் மாயையைக் கடப்பார்கள் என்றும்
யே யதா மாம் பிரபத்யந்தே தாம்ஸ் ததைவ பாஜாம்யஹம்–என்று
யாவர் சிலர் யாதொருபடி என்னை பிரபத்தி பண்ணுகிறார் -அவர்களை அப்படியே பஜியா நிற்பன் என்றும்
தமேவ ஸாத்யம் புருஷம் ப்ரபத்யே யத ப்ரவ்ருத்தி ப்ரஸ்ருதா புராணீ –என்று யாவன் ஒருவன் பக்கல் நின்றும்
ப்ரவ்ருத்தி உண்டாகிறது -காரண பூதனான அந்தப் புருஷனையே பிரபத்தி பண்ணுவான் என்றும் –
ஈஸ்வரஸ் சர்வ பூதாநாம் ஹ்ருத்தேசேர் ஜூந திஷ்டதி -பராமயந் சர்வ பூதாநி யந்த்ரா ரூடா நி மாயயா-
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேந பாரத -தத் ப்ரஸாதாத் பராம சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யசி சாஸ்வதம் -என்று
சர்வ நியாந்தாவான சர்வேஸ்வரன் சர்வ பிராணிகளையும் யந்த்ரா ரூடங்களாக்கி மாயையால் பிரமிப்பியா நின்று கொண்டு
ஹ்ருதய பிரதேசத்தில் நில்லா நிற்கும் –அவனையே சர்வ பிரகாரத்திலும் உபாயமாக அடை –
அவனுடைய பிரசாதத்தாலே பரையான சாந்தியையும் ஸாஸ்வதமான ஸ்தானத்தையும் ப்ராபிப்புதி என்றும்
இத்யாதிகளாலே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உபாயமாக ப்ரபத்தியைப் பல படியாக விதிக்கையாலே
பிரகரண விரோதம் இல்லாமையால்
இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிற கர்மாதி தியாக விதியும்
தத் தியாக பூர்வகமான சித்த உபாய விதியும் அத்யந்தம் உப பன்னம்

ஆனால் இது கர்ம ஞானாதிகளை விதிக்கிற சாஸ்திரத்தோடே விரோதிக்கையாலே துர்ப்பலமாய்
இதில் சொல்லுகிற அர்த்தம் அநுப பன்னம் ஆகாதோ என்னில்
பிரபத்தி விதாயக சாஸ்திரம் தன்னோடே விரோதிக்கையாலே கர்மாதி விதாயக சாஸ்திரம் தான் துர்பலமாய்
அவ்வர்த்தம் அநுப பன்னம் ஆகலுமாய் இருக்கையாலே அது சொல்ல ஒண்ணாது

இப்படி விரோதம் சொல்லும் போது நாஸ்திக்ய அதிசயத்தாலே பர ஹிம்ஸா பரரான சேதனரைக் குறித்து
அவர்களுக்கு ஸாஸ்த்ர விஸ்வாசம் பிறக்கைக்காக விதிக்கிற ஸ்யேந விதிக்கும்
ஸாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள புருஷார்த்தங்களை காமிக்கிறவர்களைக் குறித்து
விதிக்கிற ஜ்யோதிஷ்டோமாதி விதிக்கும் சம்சார பீதனானவனைக் குறித்து விதிக்கிற
மோக்ஷ விதிக்கும் பரஸ்பர விரோதம் வருகையாலும்

ப்ராஹ்மண தர்மமாக விதிக்கிற யஜன யாஜன அத்யயன அத்யாயன தான ப்ரதிக்ரஹங்களும்
ஷத்ரிய தர்மமான யஜன அத்யயன தானங்களும்
வைஸ்ய தர்மமாக விதிக்கிற கிருஷி கோ ரக்ஷண வாணிஜ்யா திகளுக்கும்
ஸூதத்ர தர்மமாக விதிக்கிற ஸூஸ்ருஷைக்கும் அன்யோன்ய விரோதம் பிறக்கையாலும்

ப்ரஹ்மச்சாரி தர்மமாக விதிக்கிற சாமிதாதானாதிகளுக்கும்
க்ருஹஸ்த தர்மமான பஞ்ச மஹா யஞ்ஞாதிகளுக்கும்
வானப்ரஸ்த தர்மமாக விதிக்கிற வனவாசாதிகளுக்கும்
பிஷு தர்மமாக விதிக்கிற காஷாய தண்ட தாராணாதிகளுக்கும்
அந்யோன்யம் விரோதம் பிறக்கையாலும்

நஹி மஸ்யாத் சர்வா பூதாநி -என்கிற பூத ஹிம்ஸா நிஷேத விதிக்கும்
அக்னீ ஷோமீயம் பஸூ மாலபேத -என்கிற பஸ் வாலம்ப விதிக்கும் -பரஸ்பர விரோதம் பிறக்கையாலும்

யாவஜ்ஜீவம் அக்னிஹோத்ரம் ஜூஹூ யாத் -என்கிற நித்ய அக்னி ஹோத்ர விதிக்கும்
சந்ந்யசேத் சர்வ கர்மாணி -என்கிற தத் தியாக விதிக்கும் விரோதம் வருகையாலும்

ஞானாம் ருதே நத் ரூப் தஸ்ய க்ருதக்ருத்யஸ்ய யோகிந -நை வாஸ்தி கிஞ்சித் கர்த்தவ்யம் அஸ்தி
சேந்நச தத்வவித் -என்கிற கர்ம தியாகத்துக்கும்
யஜ்ஜேந தாநேந தபஸா ந சகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி -என்கிற ஞான சாதன
கர்ம அனுஷ்டான விதிக்கும் விரோதம் வருகையாலும்

கர்ம ஸாத்யமான ஞானம் மோக்ஷ சாதனம் என்கிற ஞான யோகத்தினுடைய மோக்ஷ சாதன விதிக்கும்
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வேதோ பயம் ஸஹ -அவித்யயாம்ருத்யுமதீர்த்த்வா வித்யயாம்ருதம் அஸ்நுதே –என்று
ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும் யாவன் ஒருவன் கூட அறிகிறான்
அவன் கர்ம யோகத்தால் அநிஷ்ட நிவ்ருத்தியையும் ஞான யோகத்தால் இஷ்ட ப்ராப்தியையும் பெறும் என்றும்

உபாப்யா மேவ பஷாப்யா மாகேசே பக்ஷிணாங்கதி –ததைவ ஞான கர்மப்யாம ப்ராப்யதி புருஷோத்தம -என்று
பக்ஷி தன பக்ஷி த்வயத்தாலும் ஆகாசத்தில் பறக்குமா போலே ஞான கர்மங்கள் இரண்டாலும்
பரமாகாச நிலையனான சர்வேஸ்வரன் பிராப்பிக்கப்படும்-என்றும்
யத அன்னம் மது சம்யுக்தம் மதுசரந்நே ந சம்யுதம் –ஏவமத பஸ்ச வித்யா ச சம்யுக்தம் பேஷஜம் மஹத் –என்று
மது சம்யுக்தமான அன்னமும்-அன்ன சம்யுக்தமான மதுவும் ஷுத்துக்கு பேஷஜமாமாம் போலே –
கர்ம சாத்யமாய் தத் அனுரூப அனுஷ்டான ஸஹிதமான ஞானமும் ஞான சாதனமான கர்மமும் ஆகிற
கர்ம ஞான சமுச்சய மோக்ஷ சாதனா விதிக்கும் விரோதம் வருகையாலும்
இந்த சமுச்சய விதிக்கும் -நாயமாத்மா ப்ரவசநே லப்யோநமே தயா ந பஹுநா ஸ்ருதேந -யமேவைஷா வ்ருணுதே தேந
லப்ய ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று கர்மா ஞானங்களால் புருஷார்த்தம் லப்யம் அன்று –
தத் தியாக பூர்வகமான பக்தி யோகத்தால் லப்யம் என்னும் பக்தி யோக விதிக்கும் விரோதம் வருகையாலும்

சதேவ சவ்ம்யே தமக்ர ஆஸீத் -என்கிற சச்சிதாநந்த ரூப மாத்ர உபாசனம் ஆகிற சத் வித்யையோடே
அதய இஹா தமானம் அநு வித்ய வ்ரஜ நத்யே தாமஸ் ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷு லோகேஷு காமஸாரோ பவதி –என்று
அநந்தரம் யாவர் சிலர் பரமாத்ம ஸ்வரூபத்தையும் சத்யகாமாதி குண விசேஷங்களை கூட அறிந்து உபாசிக்கிறார்கள் –
அவர்களுக்கு சர்வ லோகங்களிலும் காம சாரித்வம் உண்டு என்கிற ச குண உபாசன பரையான தஹர வித்யையும் விரோதிக்கையாலும்

உபாய வஸ்துவை -யஸ் சர்வஞ்ஞ சர்வவித் -பராஸ்ய சக்திர் விவிதை வஸ்ரூயதே -ஸ்வ பாவிகீ ஞான பல கிரியா ச -என்று
யாவன் ஒருவன் சர்வஞ்ஞனாய் இருக்கிறான் -அவனுடைய சக்தி -அநேக பரகாரையாய் இருக்கும் –
ஸ்வ பாவிகமான ஞான பலாதிகளை யுடையவனாய் இருக்கும் என்கிற ச குண வாக்யத்தோடே
நிர்க்குணம் நிரஞ்ஜனம் -என்கிற நிர்க்குண வாக்யத்துக்கு விரோதம் வருகையாலும்

ச ஏஷ அந்தர் ஆதித்யே ஹிரண்யமய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய சமஸ்ருர் ஹிரண்ய கேச ஆபரண காத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷிணீ மஹா ராஜதம் வாச -என்று ஆதித்ய மண்டலத்தின் நடுவே
ஹிரண்யனான புருஷன் காணப்படா நின்றான் -ஆ பாத சூடம் ஹிரண்ய வர்ணனாய் இருக்கிற அவனுக்கு
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண்கள் திருப்பரியட்டம் பொன் ஒத்த ஆடையாய் இருக்கும் என்றும் –
த்யேயஸ் சதா ஸவித்ரு மண்டல மத்திய வர்த்தீ நாராயணஸ் ஸரஸிஜாஸந சந்நிவிஷ்ட-கேயூர வான் மகர குண்டலவான்
க்ரீடி ஹாரி ஹிரண்மய வபுர்த் த்ருத சங்க சக்ர -என்று ஆதித்ய மண்டல மத்ய வர்த்தியாய்-செவ்வித் தாமரைப் பூவை
ஆசனமாக யுடையனாய் தோள் வளையும் குழையும் திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியாய் நிற்பானாய்
சங்கு சக்ர கதா தரனாய் நாராயணன் த்யேயன் என்கிற விக்ரஹத்தோடே
யத தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அசஷுஸ் ஸ்ரோத்ரம் அதது பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம்
ஸூ ஸூஷ்மம் அயத பூதயோநிம் பரி பஸ்யந்தி தீரா -என்று சஷுர் இந்திரிய கோசாரமும் இன்றிக்கே-
மானஸ ஞான வேத்யமும் இன்றிக்கே -நாம வர்ணாதி ரஹிதமாய் -சஷுர் ஸ்ரோத்ர பாணி பாதாதி ரஹிதமாய் நித்தியமாய்
அநவச்சின்ன பரிமாணமாய் ஸர்வத்ர வ்யாப்யமாய் அதி ஸூஷ்மமாய் சத்தா யோகி சகல பதார்த்தங்களுக்கும்
காரணமாய் இருக்கும் வஸ்துவை தீரரானவர் உள்ளபடி காண்பார்கள் என்றும்
ரூபா வர்ணாதி நிர்த்தேச விசேஷண விவர்ஜிதமாய் இருக்கும் என்றும் சொல்லுகிற ரூபாதி நிஷேதம் விரோதிக்கையாலும்
பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபதாஸ்யாம் ருதந்திவி -என்று லீலா விபூதி ஒரு காலும்
நித்ய விபூதி முக்காலுமாய் இருக்கும் என்கிற விபூதி த்வயத்தோடே
நேஹநா நாஸ்தி கிஞ்சன -என்கிற நாநாத்வ நிஷேதம் விரோதிக்கையாலும்

இப்படி ஆபாதசூடம் பரஸ்பர விருத்தமாய்த் தோற்றுகிற சாஸ்திரம் அடங்கலும் விட வேண்டி வரும் –
அப்போது ஸாஸ்த்ர வஸ்யதையும் ஆஸ்திக்யம் இன்றியிலே ஒழியுமாகையாலே
இப்படி வருகிற விரோதத்தை குண வர்ண ஆஸ்ரம பாக்க ருஸ்யாதி பேதங்களாலே வேறுபட்டு வருகிற
அதிகாரம் தோறும் வியவஸ்தித விஷயமாக்கிப் பரிக்ரஹிக்கக் கடவது – எங்கனே என்னில்
தமோ குண பிராசுர்ய நிபந்தமான பரஹிம்ஸா பரதை யாலும் –
ரஜஸ் பிராசுர்ய நிபந்தமான ஷூத்ர புருஷார்த்தத்தித்வத்தாலும்
சத்வ பிராசுர்ய நிபந்தமான முமுஷுத்வத்தாலும் வருகிற அதிகாரம் தோறும் வியவஸ்த்திதம் ஆகையால்
ஸ்யேந விதிக்கும் மோக்ஷ விதிக்கும் வருகிற விரோதம் பரிஹ்ருதம்
ஹிம்ஸா நிஷேதம் சாமான்யம் ஆகையாலும்-பஸூ விசநந விதி கர்மா நிபந்தமாகையாலும் அவற்றுக்கு உண்டான விரோதம் பரிஹ்ருதம்
நித்ய அக்னிஹோத்ர விதி தத் தியாக விதிகள் கர்மயோக நிஷ்டையும் ஞான யோக நிஷ்டையுமாகிற அதிகாரம் தோறும்
வ்யவஸ்தித விஷயமாகையாலே அவற்றுக்கு வருகிற விரோதம் பரிஹ்ருதம்
சமுச்சய விதியும் கார்ய யோகத்தில் விஸ்வாச மாந்த்யத்தாலே உபய சாபேஷை யானவனைக் குறித்தாகையாலே பரிஹ்ருதம்
பக்தி விதியும் கர்ம ஞான சஹ க்ருத்தையான பக்தியே கார்யகரமாவது என்கிற பாகம் பிறந்த அதிகாரிக்கு ஆகையால்
கர்ம ஞானங்களோடே அதுக்கு உண்டான விரோதம் பரிஹ்ருதம்
சத் வித்யை தஹர வித்யைகளுக்கு வருகிற விகல்பமும் ஸ்வரூப மாத்ரத்திலும் குண விஸிஷ்ட ஸ்வரூபத்திலும்
உண்டான ருசி விசேஷத்தால் வந்த அதிகாரம் தோறும் வியவஸ்தித மாகையாலே பரிஹ்ருதம்

ச குண வாக்யத்துக்கும் நிர்க்குண வாக்யத்துக்கும் உண்டான விரோதம் –
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசாகோ விஜிகதஸோ அபி பாஸஸ் சத்ய காமஸ் சத்ய சங்கல்ப-என்று
ஹேயப்ரதி படனாகையாலே அபஹத பாப்மாவாய் இருக்கும் –
நித்ய யவ்வன ஸ்வ பாவனாய்க் கொண்டு ஏக ரூபனாய் இருக்கையாலே ஜரா ரஹிதனாய் இருக்கும் –
நித்யனாகையாலே நாஸ ரஹிதனாய் இருக்கும் –
நிரதிசய ஆனந்த ஸ்வரூபன் ஆகையால் விசோகனாய் இருக்கும் –
அகர்ம வஸ்யனாகையாலே ஷூத்பிபாசாதி ரஹிதனாய் இருக்கும் -என்கிற ஹேய குண ராஹித்யத்தையும் –
ஸத்யமான காமங்களை உடையனாய் இருக்கும் –
ஸத்யமான சங்கல்பங்களை உடையனாய் இருக்கும் என்கிற கல்யாண குண சாஹித்யத்தையும்
சொல்லுகிறதாகையாலே பரிஹ்ருதம் –
நிர் விக்ரஹ ச விக்ரஹங்களுக்கும் உண்டான விரோதமும் -இச்சா க்ருஹீதாபி மாதோரு தேஹ –என்கிற
இச்சாக்ருஹீதமான விக்ரஹத்தையும் கர்மாதீனமான சரீர பரிக்ரஹம் இல்லாமையும் சொல்லுகையாகையாலே பரிஹ்ருதம்
நேஹநா நாஸ்தி -என்கிற வாக்கியம் த்ரவ்ய பேதத்தாலே பின்னமான விபூதி த்வயத்தினுடையவும் விஸிஷ்ட ஐக்யத்தைச் சொல்லுகிறது
ஆகையாலே விபூதி யோகம் சொல்லுகிற வாக்யத்துக்கும் இதுக்கும் உண்டான விரோதம் பரிஹ்ருதம்

ஆக இப்படி பரஸ்பர விருத்தமான அர்த்த விசேஷங்கள் குண வர்ணாதி பேத பின்னமாய் வருகிற அதிகாரம் தோறும்
வியவஸ்திதமானவோ பாதி இதுவும் அதிகாரம் தோறும் வியவஸ்திதமாய் இருக்கும் –
அதாவது -உணர்ந்து உணர்ந்து -என்கிறபடியே ப்ரக்ருதே பரமாய்–ஞான ஸ்வரூபமாய் -ஞான குணகமாய்-பகவச் சேஷமாய் –
ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதி விசிஷ்டமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் என்று அறிந்து –
தத் அனுகுணமான புருஷார்த்தம் ஸ்வ யத்ன ஸாத்யம் என்கிற அளவிலே நிற்கிறவனைக் குறித்து
கர்ம ஞானாதி சாதனங்களை விதிக்கிறது –
உணர்வும் உயிரும் உடம்பும் மாற்று உலப்பினவும் பழுதேயாம் -உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்றும் சொல்லுகிறபடியே ஞானாதிகள் எல்லாம் புற இதழாம் படி –
சரமமான பகவத் ஏக ரஷ்யமாய் -பகவத் அத்யந்த பரதந்த்ரமாய் பகவத் ஏக போகமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் என்று அறிந்து –
அந்த பகவத் ஏக போகத்வம் ஆகிற புருஷார்த்தம் பரதந்த்ரமாய் பகவத் ஏக ரஷ்யமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்னத்தால் சித்தியாது –
நிருபாதிக ரக்ஷகன் ஆனவனாலேயே லப்யம் என்று அறிந்து
என்னான் செய்கேன் -என்கிறபடியே ஸ்வரூபத்தில் ஸ்வ ரக்ஷண ஞான அபாவத்தாலும் –
புருஷார்த்தம் அநந்ய ஸாத்யம் என்கிற ஞானவத்தையாலும் -பக்தி பாரவஸ்யத்தாலும் –
அநந்ய கதிகளாய் பலத்தில் பிராரப்த கர்மா வாசனம் ஆகிற விளம்பத்தைப் பொறுக்க மாட்டாதவர்களுமாய்
இருக்கிறவர்களைக் குறித்து பிரபத்தி யோகத்தை விதிக்கிறது என்கை

இப்படி ஞான விபாக நிபந்தனமான ருசியைப் பற்றி வருகிற அதிகாரம் தோறும் வியவஸ்தித விஷயம் ஆகையால்
கர்ம ஞானாதி விதாயக சாஸ்திரத்துக்கும் பிரபத்தி விதாயக சாஸ்திரத்துக்கும் விரோதி பிரசங்கமே பிடித்தது இல்லை
ஸாஸ்த்ர சோசிதமான சகல தர்மங்களும் சர்வருக்கும் உபாதேயம் இல்லாமையாலும்
யாவாநர்த்த உதபாநே சர்வ தஸ்சம்ப்லுதோதகே-தாவாந சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத-என்று
குணத்ரய வஸ்யராய் பகவலம் லீலா விஷய பூதரான சேதனரைக் குறித்து அவ்வோருடைய குண ருசிகளுக்கு அனுகுணமாக
ஸாஸ்த்ர உசிதமான அர்த்தங்களில்
ஸர்வத்ர பரந்து கிடக்கிற ஜலத்தில் த்ருஷார்த்தனுக்கு ஸ்வ தாஹா சாந்திக்கு அளவானதே அபேக்ஷிதமாமா போலே
அறிவுடையனானவனுக்கு ஸ்வ அதிகார அநு குணமானதே அபேக்ஷிதமாய் தத் வ்யதிரிக்தங்களானவை த்யாஜ்யம் என்கையாலும்
வர்ணாஸ்ரம தர்மங்களில் ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரமங்களுக்கு விஹிதமான தர்மங்களை உபாதேயமாக விதித்து
தத் வியதிரிக்த வர்ணாஸ்ரம தர்மங்களை த்யாஜ்யதவேந விதிக்கையாலும்
ஸ்வ அதிகார அனுரூப தர்ம அனுஷ்டானத்தாலும் வ்யதிரிக்த தர்ம தியாகத்தாலும் அல்லது ஸாஸ்த்ர வஸ்யதை தான் கூடாமையாலும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானவானாய் பகவத் ஏக ரஷ்யத்வ பிரபத்தி யாகிற பிரபத்தி அனுஷ்டானத்திலே இழியுமவனுக்கு
ஸ்வா தந்த்ர காரியமாய் அஹங்கார கர்ப்பமான கர்ம யோகாதிகளினுடைய தியாக விதி அத்யந்தம் உப பன்னம் என்றதாயிற்று –

சன்யாசஸ் தியாக இத் யுக்தஸ் சரணாகதி ரித் உபாயோயம் சதுர்த்தஸ் கீத ப்ரோக்தஸ் ஸீக்ர பல ப்ரத —
அஸ்வாத தமாநா நாம் விதவ்விப்ர நிஷே விதே -பூர்வே த்ரய உபாயாஸ்தேபவே யுரம நோஹரா –என்று
சந்யாச சப்தத்தாலும் தியாக சப்தத்தாலும் சரணாகதி சப்தத்தாலும் சொல்லப்பட்ட சதுர்த்த உபாயமான பிரபத்தி
ஆராப்த சரீர அவசானத்திலே பலமாகையாலே ஸீக்ர பல பிரதமாய் இருக்கும்
ப்ராஹ்மண உத்தமராலே சேவிக்கப் பட்டு இருக்கிற இந்த விதியிலே நடக்குமவர்களுக்கு முன்பு சொன்ன கர்ம ஞான பக்தி என்கிற
மூன்று உபாயங்களும் மநோஹரம் அன்று -ஆகையால் அநு ரூபங்கள் அன்று என்று
ப்ரபத்தியினுடைய உத்கர்ஷமும் கர்ம ஞான பக்திகளுடைய அப கர்ஷமும் பகவச் சாஸ்திரத்திலும் சொல்லிற்று –

சாதனம் பகவத் ப்ராப்தவ் ச ஏவேதி ஸ்திராமதி –ஸாத்ய பக்திஸ் ஸ்ம்ருதா ஸைவ பிரபத்திரிதி கீயதே —
உபாய பக்திரே தஸ்யா -பூர்வ யுக்தைவக ரீய ஸீ –உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நா ஸீ —
ஸாத்ய பக்திஸ் து சஹாந்த்ரீ பிராரப்தஸ் யாபி பூயஸீ –என்று பகவத் ப்ராப்திக்கு பகவானே உபாயம் என்கிற
வ்யவசாயாத்மக ஞானம் ஸாத்ய பக்தியாக அனுசந்திக்கப்படும் -அதுவே பிரபத்தி என்று சொல்லப்படும் –
பகவத் ப்ராப்திக்கு பக்தியே உபாயம் என்கிற நினைவுக்கு உபாய பக்தி என்று பெயர் –
இத்தைப் பற்ற முன்பு சொன்னப் பிரபத்தி ஸ்ரேஷ்டை -அதுக்கு ஹேது உபாய பக்தி என்கிற பக்தி யோகம் –
பிராரப்த வ்யதிரிக்தமான பூர்வாக உத்தராக ரூபமான பாபத்தைப் போக்கும் அத்தனை –
ஸாத்ய பக்தி என்கிற பிரபத்தி யோகம் ப்ராரப்தத்தையும் நசிப்பிக்கும் ஆகையால் -என்று
பிரபத்தியினுடைய சர்வ உபாய ஆதிக்யம் பிரதேசாந்தரங்களிலும் சொல்லிற்று

இப்படி அதிகாரி பேதத்தாலே அவிருத்தமாய் இருக்கச் செய்தேயும்
ஆபாத ப்ரதீதியில் ஆபாசமாகத் தோற்றுகிற விரோதத்தைப் பரிஹரிக்கைக்காகச் சிலர் வேதோக்தமான தர்மங்களுக்கு
அதிகாரம் இல்லாத ஸ்த்ரீ ஸூத்ர திர்யக்காதிகள் – பாலா மூகாந்த பதிதாதிகள் -இவர்களுக்கு பிரபத்தி யோகம் விதிக்கிறது –
அல்லாத த்ரை வர்ணிகற்கு கர்மா ஞானாதிகள் விதிக்கிறது என்று விஷய விபாகமும் பண்ணினார்கள்

மாம்ஹி பார்த்த வயபாஸ்ரிதய யேபிஸ்யு பாபயோநய -ஸ்திரியோ வைஸ்யாஸ் ததா ஸூத்ராஸ் தேபியாந்தி பராங்கதிம் –
கிம்புநர் ப்ராஹ்மணா புண்யா பக்தர் ராஜர்ஷயஸ் ததா -என்று பார்த்தனே–பாப யோனிகளான ஸ்த்ரீ ஸூத்ரா வைஸ்யாதிகளான
யாவர் சிலர் -அவர்களும் என்னை ஆஸ்ரயித்து ப்ரையான கதியைப் ப்ராபிப்பார்கள்-
புண்ய யோனிகளான ப்ராஹ்மணர் ராஜர்ஷிகள் பக்தராய் இருக்கிறவர்கள் என்னை பஜித்துப் பரகதியைப் ப்ராபிப்பார்கள்
என்னும் இடம் சொல்ல வேணுமோ என்கையாலே
ஸ்த்ரீ ஸூத்ராதிகளுக்கும் பஜனஅதிகாரம் உண்டாகையாலும் கர்ம ஞானாதிகளை விட்டு ப்ரபத்தியைப் பண்ணு என்று விதிப்பது
தர்ம அதிகாரம் உள்ள இடத்தே யாகிலும்
இந்த பக்த்யநதிகார ஹேதுவான ஜாதியாதி வைகல்யம் இல்லாத ஷத்ரியனான அர்ஜுனனைக் குறித்து
தர்மங்களை விட்டு என்னைப் பற்று என்று விதிக்கையாலும் அந்த விஷய விபாகம் அயுக்தம்

———-

தர்ம சப்தத்தால்
பலாதிகளைச் சொல்லுகிறதாய்-பல சங்க கர்த்ருத்வங்களைப் பரித்யஜித்து –
தர்ம ஸ்வரூபத்தை மாத்திரம் அனுஷ்ட்டியா நின்று கொண்டு
ததங்கமாக பிரபத்தியைப் பண்ண மோக்ஷ சித்தி உண்டாம் என்கிறது என்பார்கள் சிலர்

இவ்விடத்தில் பல தியாக பூர்வகமாக தர்மத்தை அனுஷ்ட்டி என்று சொல்லாமையாலும் –
பல தியாகத்தைச் சொல்லி ஸ்வரூப நிஷேதம் பண்ணாமையாலே தர்ம ஸ்வரூப அனுஷ்டானம் பிரஸ்த்துதம் ஆனாலும்
கர்மண்யே யதிகாரஸ் தே மா பலேஷு கதாசன மா கர்ம பல ஹேதுர்ப் பூர்மாதே சங்கோஸ்த்வ கர்மணி -என்று
கர்மத்தில் உனக்கு அதிகாரம் -பலத்தில் அதிகாரம் இல்லை -கர்மபல ஹேதுவாகாதே உனக்குக்
கர்ம அனுஷ்டானத்தில் அசங்கம் உண்டாவது என்கையாலே
பலாதி தியாகம் சொல்ல ஒண்ணாமையாலும்
லஷண்யா பலத்தைச் சொல்லுகிறது என்ன வேண்டுவது –
தர்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என்னும் இடத்தில் விரோதம் உண்டான போதாகையாலும்

நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரத சத்தம-த்யகோஹி புருஷ வ்யாக்ர த்ரிவிதஸ் து ப்ரகீர்த்தித ச –
யஜ்ஜ தான தபஸ் கர்ம த்யாஜ்யம் கார்யமேவதத்
யஜ்ஜோ தானம் தபஸ் ஸைவ பாவநா நிம நீஷீணாம் -ஏதா நயபிது கர்மாணி சங்கம் த்யக்த்வா பலா நிச-
கர்த்தவ்யா நீதி மே பார்த்த நிஸ்சிதம் மதம் உத்தமம் -இத்யாதிகளாலே
கீழ்ச் சொன்ன பல தியாகத்தை நிகமிக்கிறது என்றும் போதும் நிகமனத்தில் பலம் இல்லாமையாலும்
இதி தேஜ் ஞானமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா -விமருஸ்யை தத சேஷேண யதேச்ச சிததா குரு -என்று
இப்படி குஹ்யாத் குஹ்ய தரமான ஞானம் உனக்கு என்னாலே சொல்லப்பட்டது –
நீ அவற்றை அடங்க விசாரித்து யாதொருபடி இச்சித்தாய் -அப்படியே செய் என்று முன்பே நிகமித்து விட்டு –
சர்வ குஹ்யதமம் பூயஸ் ஸ்ருணுமே -என்று முன்பு சொன்ன குஹ்ய தரமான தர்மாதிகளில் காட்டில்
குஹ்ய தமமாகையாலே விலக்ஷணமான சித்த தர்மத்தைச் சொல்லுகிறேன் -கேள் என்று இதனுடைய வைலக்ஷண்யம்
முன்பே ப்ரஸ்த்துதம் ஆகையாலும்
இதன் வை லக்ஷண்யத்தாலே சோக நிவ்ருத்தி ஸ்வ ரசமாகப் பிறக்கையாலும்
இங்கு நிகமிக்கிறது என்கை புநர் யுக்தி யாகையாலும்
பல தியாகம் சொல்லுகிறது என்கிற பக்ஷம் துஷ்டம் –

சிலர் அநாதி கால ஆர்ஜிதமான பாபங்களினுடைய நிராச பூர்வக நிரதிசயமாக பகவத் பிரேம ரூபேண நடக்கப்பட்ட
பக்தி யோக ஆரம்ப விரோதியான நாநா வித பாபங்களுக்கு பிராயச்சித்தமாக விதிக்கிற
க்ருசச்ர சாந்தராயண கூஸ்ம அண்டாதிகளான பிராயச்சித்த தர்மங்கள் சிர காலேந அனுஷ்டிக்குமவை யாகையாலும் –
துஷ்க்கரங்கள் ஆகையாலும் -அவற்றை விட்டு தத் ஸ்தாநே என்னைப் பற்று என்று சொல்லுகிறது என்பார்கள்
பக்தி யோக ஆரம்ப விரோதி துஷ்க்ருத்தை உடையான் இல்லாமையாலும் -ஜிதேந்த்ரன் ஆகையாலும் –
பக்த்யாரம்ப விரோதி பாப நிபந்தன சோகமும் ப்ராயச்சித்தமும் கீழ் ப்ரஸ்த்துதம் இல்லாமையாலும்
மோக்ஷ சாதன பூத கர்மாதி வாசகமான தர்ம சப்தத்தை பிராயச்சித்த தர்ம மாத்ரத்தைச் சொல்லுகிறது
என்கைக்கும் பிரமாணம் இல்லாமையாலும் -சர்வ சப்தத்துக்கு பொருள் இல்லாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று –

சிலர் கர்ம யோகாதிகளில் ப்ரம்சம் உண்டாகில் தத் பிராயச்சித்தமாக பிரபத்தியை விதிக்கிறது என்பார்கள் –
ஏஷா தேவி ஹிதா சாங்க்யே புத்திர் யோகேத் விமாம ஸ்ருணு -என்று ஆத்ம யோகத்தில் இந்த புத்தி உனக்குச் சொல்லப்பட்டது –
கர்ம யோகத்தில் இந்த புத்தியைக் கேள் என்று கர்மயோகத்தைச் சொல்ல ஆரம்பித்த அளவில்
நேஹாபிக்ரம நா சோஸ்தி ப்ரத்யவாயோந வித்யதே –என்று இந்த கர்ம யோகத்தில் ஆரத்தமான அம்சத்துக்கு நாசம் இல்லை –
நடுவு விச்சின்னமானால் ப்ரத்யவாயமும் இல்லை என்று பிராயச்சித்த நிரபேஷமாகவும் சொல்லுகையாலே அதுவும் அர்த்தம் அன்று –

தமேவம் விதித்வாதி ம்ருத்யுமேதி நாந்ய பந்தா வித்யதேய நாய -என்று ஞான யோகத்தால் சம்சாரத்தை கடக்கலாமது ஒழிய
ப்ராப்திக்கு வேறு உபாயம் இல்லை என்றும்
தமே வைகம் ஜாநதாத்மாநமந் யாவா சோவி முஞ்சத -என்றும்
அம்ருதஸ் யைஷ சேது -என்றும் பரமாத்மாவான சர்வேஸ்வரன் ஒருவனையுமே அறியுங்கள் –
அவ்வறிவே அம்ருதத்வ ரூபமான மோக்ஷத்துக்கு வழி-அல்லாத வார்த்தைகளை விடுங்கள் என்று ஞான யோகத்தை
மோக்ஷ சாதனமாகச் சொல்லுகையாலும் தந் நிஷ்டனுக்குக் கர்த்தவ்யம் ஒன்றும் இல்லை என்று –
கர்ம தியாகம்-ஞானாம்ருதே நத் ரூப்யஸ்ய -என்கிற ஸ்லோகத்தில் சொல்லுகையாலும் –
ஞான யோக லாபத்துக்கு தத் சாதனமான கர்மத்தை விட்டு தத் ஸ்தாநே என்னைப் பற்று என்று சொல்லுகிறது
என்று சிலர் சொல்லுவார்கள் –

கர்மனை வஹி சம்சித்திம் அஸ்திதா ஜனகாத்ய -என்று கர்மம் தன்னை மோக்ஷ சாதனமாகச் சொல்லுகையாலும்
யஜ்ஜே ந தாநேந தபஸா நாஸகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி -என்று கர்மத்தை ஞான சாதனமாகச் சொல்லுகையாலும்
தியாக அநந்தரம் ஞான யோக வாசகமாய் இருபத்தொரு சப்தம் இல்லாமையாலும்
சரணம் வ்ரஜ -என்கிற வாக்கியம் -ஆத்மஞான வாசகம் இல்லாமையாலும்
ப்ரபத்தியே மோக்ஷத்துக்கு ஸ்வ தந்த்ர சாதனமாக விதிக்கையாலும்
யதா புஷ்கர பர்ண ஆபோ நஸ் லிஷ்யநதே -ஏவ மேவம் விதி பாபம் கர்ம நஸ் லிஷ்யதே -என்று
யாதொருபடி -தாமரை இலையில் நீர் தங்காது -அப்படியே ஞானயோக நிஷ்டன் பக்கலிலே பாபம் ஸம்ஸ்லேஷியாது என்றும்
ஞான அக்னி -இத்யாதிப்படியே ஞானம் ஆகிற அக்னி தானே சர்வ கர்மங்களையும் பஸ்மமாக்கும் -என்றும்
யதை ஷிகா தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
நெருப்பில் இட்ட பஞ்சு போலே சகல பாபங்களும் நசிக்கும் என்றும் -இத்யாதிகளாலே
ஞான யோகம் தன்னாலே சகல பாபங்களும் போம் என்கையாலே இங்குச் சொல்லுகிற சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற
ஸ்வயம் பாப விமோசன யுக்தி சேராமையாலும்
சோதநா லக்ஷண அர்த்தோ தர்ம-என்கிற நியாயத்தாலே சாதன பூத கர்மஞானாதி வாசகமான தர்ம சப்தத்தை
கர்மயோக மாத்திரத்திலே சங்கோசிப்பிக்க ஒண்ணாமையாலும்
விஹித ஞானத்துக்கு அங்கமான விஹித கர்மத்தை விட்டால் விஹித கர்மத்யாகம் ஆகிற தூஷணம் வருகையாலும்
அதுவும் அர்த்தம் அன்று –

சர்வ தர்மங்களை விட்டே என்னை சரண வரணம் பண்ணுவான் என்று சரணாகதி பிரசம்ஸையிலே இதுக்குத் தாத்பர்யம் –
தர்ம தியாகத்தில் அன்று என்று சிலர் சொல்லுவார்கள் –
பிரசம்ஸையைக் காட்டுகிற அபி சப்தம் இல்லாமையாலும்
தர்மங்களினுடைய தியாகம் விருத்தம் ஆகையால் வருந்திக் கல்பித்தாலும் ப்ரஸம்சையால்
மாஸூச என்கிற சோக நிவ்ருத்தி கூடாமையாலும் அதுவும் அர்த்தமாக மாட்டாது

பஸூ விதியில்-பஸூ தந்திரத்தைப் பண்ணுதல் -பூர்ணா ஹுதியைப் பண்ணுதல் செய்வான் என்று
பஸூ தந்த்ர தியாகத்தில் தாத்பர்யம் இன்றிக்கே பூர்ணா ஹுத் யனுஷ்டான மாத்திரத்தில் தாத்பர்யம் ஆனால் போலே
இங்கும் தர்ம தியாகத்தில் தாத்பர்யம் இல்லை -பிரபத்தி அனுஷ்டானத்தில் தாத்பர்யம் என்கிற பக்ஷமும்
சாத்தனாந்தர பரித்யாகம் இல்லாத போது அனுஷ்ட்டிக்க ஒண்ணாத ப்ரபத்திக்கு பஸூ தந்த்ர த்யாகத்தில் தாத்பர்யம் இன்றிக்கே
பூர்ணா ஹுத் அனுஷ்டான மாத்திரத்தில் தாத்பர்யமாக விதிக்கிற பூர்ணா ஹுதி நியாயம்
த்ருஷ்டாந்தம் அல்லாமையாலே அர்த்தம் அன்று –

தர்ம சப்தத்தால் பகவத் வ்யதிரிக்த தேவதாந்த்ர ஆராதன ரூபமாக வேத வேதாந்தங்களில் சொல்லுகிற தர்மத்தைச் சொல்லுகிறதாய் –
அந்த தர்மங்களை விட்டு மோக்ஷ உபாயமாக பகவத் ஸமாஸ்ரயணத்தை பண்ணுவான் என்று –
இதர தேவதா பிரதிசம்பந்திகமான காமத்தை விதிக்கிறதாய் –
அத்தாலே பகவத் விஷயத்தோடு ஐகாந்தியம் விதிக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள் –
தேவதாந்த்ரங்கள் இங்கே ப்ரஸ்த்துதம் இல்லாமையாலும் -பிரஸ்துதம் ஆனாலும்
யேப் யந்ய தேவதா பக்த யஜந்தே ஸ்ரத்தயாந விதா–தேபிமாமேவ கௌந்தேய யஜந்த்ய விதி பூர்வகம் -என்று
யாவர் சிலர் அந்ய தேவதா பக்தராய்க் கொண்டு ஸ்ரத்தையோடு யஜிக்கிறார்கள் –
அவர்களும் நம்மையே யஜிக்கிறார்கள் என்கையாலே தேவதாந்த்ர ஆராதனத்திலும் பகவத் ஐகாந்தியத்துக்கு விரோதம் இல்லை என்கையாலும்
சரண வரணமாகிறது சமாஸ்ரயண மாத்திரம் அன்றிக்கே உபாய பிரார்த்தனா ரூபமாகை போலே
தர்ம சப்தம் தத் பிரதி கோடியாய்க் கொண்டு த்யாஜ்யமான சாதன தர்மத்தைக் காட்டுமது ஒழிய
கேவலம் ஆராதன ரூபமான தர்மத்தைக் காட்டாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று –

சிலர் சரணாகதி விரோதிகளான தர்மங்களை விட்டு சரணாகதியைப் பண்ணுவான் என்று சொல்லுகிறது என்பார்கள்
விரோதித்தவற்றை விடுகைக்கு விதி வேண்டாவாகையாலும் -தர்ம சப்தம் விருத்த தர்மத்தை வசியாமையாலும்
சர்வ தர்மங்கள் என்கை கூடாமையாலும் அதுவும் அர்த்தம் அன்று –

சர்வ தர்மங்களையும் விட்டு நின்றவனுக்கு விஹித தர்ம பரித்யாக பிராயச்சித்தமாக –
சரணம் வ்ரஜ -என்று பிரபத்தியை விதிக்கிறது என்பர் சிலர் –
அதுவும் கூடாது –
அவற்றுக்கு நியத பிராயச்சித்தமாக விதிக்கிற தர்மங்களோடே விரோதிக்கையாலும்
விதி விஷய பூதனான அர்ஜுனனுக்கு விஹித தர்ம தியாக பிரசங்கம் இல்லாமையாலும்
விதிக்கப்படுகிற இந்தப் பிராயச்சித்த தர்மம் தான் பல சாதன தர்ம த்யாகத்தைப் பற்றவோ –
பல விதுர தர்ம த்யாகத்தைப் பற்றவோ என்று விசாரித்தால் –
பல சாதன தர்மம் அனுஷ்டியாத போது பல அபாவம் மாத்திரம் ஒழிய தோஷம் இல்லாமையால்
பிராயச்சித்த அபேக்ஷை இல்லை –

கிஞ்ச-பல சாதன தர்ம ப்ராயச்சித்தமாகில்
நான் மோக்ஷ விரோதி சகல பாப விமோசனம் பண்ணுகிறேன் என்கிற யுக்தி கூடாது –
பல விதுரமான நித்ய நைமித்திக தர்ம தியாகத்தில் பேதேந பிராயச்சித்தம் இன்றிக்கே நிமித்தம் வந்த போது
தத் அநு பந்தியான நைமித்திகத்தை அனுஷ்ட்டிக்கவே அதனுடைய தோஷம் பரிஹ்ருதம்
அதுக்கு அதிகாரம் உண்டு அத்தனை ஒழிய பிராயச்சித்த தர்மத்துக்கு அதிகாரம் இல்லை –
நித்ய கர்ம தியாக பிராயச்சித்தம் என்னப் பார்க்கில்
தத் த்யாகத்தைப் பற்ற விதிக்கிற பிராயச்சித்த கர்மத்தோடு விரோதிக்கும் –
அந்த பிராயச்சித்த தர்மங்கள் ஆதல் -சரண வரணமாதல் -என்று சம விகல்பமாகச் சொல்லப் பார்க்கில் –
அந்த பிராயச்சித்த தர்மங்கள் சாமான்யமான சரண வரணத்தைப் பற்ற பிரபலமாகையாலே
சம விகல்பமாகச் சொல்ல ஒண்ணாது
அந்த தர்மங்களும் சரண வரணமும் கூட நித்ய கர்ம தியாக ப்ராயச்சித்தமாம் என்று சமுச்சயமாகச் சொல்லப் பார்க்கில்-
ஏக சப்தத்தில் சொல்லுகிற அவதாரணத்துக்கு விரோதம் வரும் –
அவை தான் இந்த ஸ்லோகத்தில் சந்நிஹிதங்களும் அல்ல -ஆகையால் சமுச்சயம் கூடாது
அசன்னிஹிதங்களான அந்த ப்ராயச்சித்தங்கள் தான் ஸ்வ தந்த்ர அதிகாரங்களுமாய் இருக்கும்
ஆகையால் விஹித தர்ம தியாக பிராயச்சித்தமாக சரண வரணம் விதிக்கிறது என்னும் அர்த்தம் அநுப பன்னம்

பக்தி யோகத்துக்கு அங்கமான கர்மாதிகளில் வைகல்யம் பிறந்தால் தத் பிராயச்சித்தம் பிரபதனம் என்பர் சிலர் –
தர்ம சப்தம் அங்க ஸஹிதமாய் வேத யுக்தமான பிரதான உபாயத்தை அல்லது அங்க தர்ம மாத்ரத்தை வசியாமையாலும்
அங்க தர்ம மாத்ர வாசகம் என்கைக்கு பிரமாணம் இல்லாமையாலும்
அங்க தர்ம மாத்ரத்தைச் சொல்லும் போது கர்ம விசேஷணமான சர்வ சப்தத்துக்கு வையர்த்தம் வருகையாலும்
அது சொல்ல ஒண்ணாது

அங்க தர்ம வைகல்ய ப்ராயச்சித்தமாம் போது சக்யாம் சத்யாகப் ப்ராயச்சித்தமோ –
அசக்யாம்சத்யாக பிராயாச்சித்தமோ என்று விகல்பித்தால்
அதிகார அனுகுணமாக அனுஷ்டான சமயத்தில் சாமாநயேந சர்வ வர்ணாஸ்ரம தர்மங்களும் ஒருவனால்
அனுஷ்ட்டித்துத் தலைக்கட்டப் போகாமையாலும் -ஒருவனைக் குறித்து விதி இல்லாமையாலும்
ஸ்வ அதிகார அனுரூபமான விஹிதங்களான வற்றில் ஸக்ய அம்ச தியாக பிராயச்சித்தம் ஒழிய
அஸக்ய அம்ச தியாக பிராயச்சித்தம் என்ன ஒண்ணாது –
ஸக்ய அம்ச தியாக பிராயச்சித்தம் என்னில் அவற்றைக் குறித்து விதிக்கிற அந்த பிராயச்சித்தங்களோடே விரோதிக்கும் –
ஆகையால் அங்க வைகல்ய பிராயச்சித்தம் என்கிற பக்ஷம் துஷ்டம் –

சிலர் கீழ் விஹிதமான கர்மா ஞானாதி சாதன விசேஷங்களை நிகமித்துத் தலைக் கட்டுகிறது அத்தனை அல்லது
தத் தியாகத்தை விதிக்கிறது அன்று என்பர்கள்–எங்கனே என்னில்
நயோத்ஸ் யாமீதி கோவிந்த முக்த்வா தூஷ்ணீம் ப பூவஹ -என்றும்
ரதோபஸ்த உபாவிசத்-என்றும்
நான் யுத்தம் பண்ணக் கடவேன் அல்லேன் என்று தேர்த்தட்டிலே விழுந்த அர்ஜுனனை யுத்தத்தில் ப்ரவரத்திப்பைக்காக
ப்ரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலும்
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோஹ்ய கர்மண -சரீர யாத்ராபி சதேந ப்ரஸித்த்யேதா கர்மண-என்றும்
தர்ம் யாத்தியுத தாத்ஸ் ரேயோந்யத் ஷத்ரியஸ்ய ந வித்யதே –லோக ஸங்க்ரஹ மேவாபி சம்பஸ்யந் கர்த்தும் அர்ஹஸி -என்றும்
கர்மத்தை நியதமாகப் பண்ணு -கர்மாநுஷ்டானமே ஸ்ரேஷ்டம்-கர்ம விதுரனானவனுக்கு சரீர யாத்திரையும் சித்தியாது –
ஷத்ரியனானவனுக்கு தர்ம ஸஹிதனமான யுத்தத்தில் காட்டில் நல்லது இல்லை –
லோக ஸங்க்ரஹத்தைப் பார்த்தாகிலும் கர்மத்தைச் செய் என்று இத்யாதிகளாலே கர்மம் அவசியம் கர்த்தவ்யம் என்கையாலும்
அத தேத் த்வமிம் தர்ம்யம சங்க்ராம மந கரிஷ்யசி -ததஸ் ஸ்வ தர்மம் கீர்த்திஞ்ச ஹித்வா பாபமவாப்ஸ்யசி -என்றும்
ததோ யுத்தாய யுஜ்ய ஸ்வநை நம பாப மவாப்ஸ் யசி -என்று நியத தர்மமான இந்த யுத்தத்தை பண்ணாயாகில்
தர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவுதி-
ஆகையால் யுத்தத்தின் பொருட்டு யுக்தனாய் இப்படி பாபத்தை அடையாதே கொள்-என்று
கர்மம் அனுஷ்டியாத போது பாபிஷ்டனாம் என்கையாலும்
யேத் வேத தப்ய ஸூப நதோ நாநுதிஷ்ட நதிமே மதம் -சர்வ ஞான விமூடாம் ஸ்தாந் வித்தி நஷ்டாந சேதசே-என்று
நான் ஆதரித்து உபதேசித்த கர்மத்தை அஸூயை பண்ணா நின்று கொண்டு யாவர் சிலர் அனுஷ்ட்டியாது இருக்கிறார்கள் –
அவர்கள் ஞான ஹீனராய் நசிக்குமவர்கள் ஆக புத்தி பண்ணு -கர்மத்தை அனுஷ்ட்டியானாகில் நஷ்டனாம் என்றும்
மோஹாத் தஸ்ய பரித்யாக ஸ்தாமச பரிகீர்த்தித -என்று மோஹத்தால் கர்மத்தினுடைய பரித்யாகம் தாமசம் என்று
கர்ம தியாகத்தை தமஸ் காரியமாகச் சொல்லுகையாலும்

சங்கம் த்யக்த்வா பலஞ்சைவ ச த்யாகஸ் சாத்விகோ மத -என்று சங்கத்தையும் பலத்தையும் விடுகிறது
சாத்விக தியாகம் என்கையாலும்
நஹி தேஹ ப்ருதாம் ஸக்யஸ் தயக்தும் கர்மாண்ய சேஷத-நியதஸ்ய து சந்யாச கர்மனோ நோப பத்யதே –என்று
சரீரியானவனுக்கு கர்மங்கள் நேராக விட ஒண்ணாது என்றும் –
நித்தியமான கர்மத்தினுடைய தியாகம் கூடாது என்கையாலும் –
கர்த்தவ்யா நீதி மே பார்த்த நிஸ்சிதம் மதமுத்தமம் -கர்மங்கள் கர்த்தவ்யம் என்றே எனக்கு உத்தமமான மதம் என்கையாலும்
ஸ்திதோஸ்மிக ஸந்தேஹ கரிஷ்யே வசனம் தவ -என்று நீ திரு உள்ளமானபடியே
நான் கர்மாநுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கையாலும் அப்படியே பாரத யுத்தம் ப்ரவ்ருத்தம் ஆகையாலும்
மாமேவயே பிரபத்யந்தே -இத்யாதிகளிலே அங்கமாக விதித்த ப்ரபத்தியை பிரதானமாக விதிக்கக் கூடாமையாலும் –
சிரகால சாத்யமாய் துஷ் கரமான கர்ம ஞானங்களால் சாத்தியமான அர்த்தத்தை ஒரு பிரபத்தி மாத்திரம் சாதிக்கக் கூடாமையாலும் –
கீழ் சாதனாந்தர துஷ் கரத் வாதிகளால் சோகம் பிறந்ததாகச் சொல்லாமையாலும்
துக்க மித்யேச்வயத் கர்ம காயக் கிலேச பயாத் த்யஜேத -ஸக்ருத் வாராஜசம் தியாகம் நைவ த்யாக பலம் லபேத் -என்று
கர்மத்தை காயக்கிலேச பயத்தால் துக்கம் என்று விட்டானாகில் அது ராஜஸ தியாகம் –
அவனுக்கு தியாக பல சித்தி இல்லை என்கையாலும்
விஹித அனுஷ்டானம் ஸ்வரூப ஹானியாமாகில் விதி நிஷேத ஸாஸ்த்ர வஸ்யர் அன்றிக்கே ஒழியும் ஆகையால் –
சரணம் வ்ரஜ -என்கிற விதியும் அனுஷ்ட்டிப்பார் இல்லாமையால் அதுக்கும் வையர்த்தம் வருகையாலும்
விஹிதமான கர்ம ஞானாதிகளுக்கு அங்க தயா பிரபத்தி விதானம் பண்ணுகிறது என்னும் அளவில்
ப்ரபத்தியினுடைய அந்ய நிரபேஷதா நிபந்தந ஸ்வ தந்த்ர உபாயத்தைச் சொல்லுகிற அவதாரண வாசியான
ஏக பதத்துக்கு வையர்த்தம் வரும் என்ன வேண்டாதபடி தேவதாந்த்ரங்களை வ்யா வர்த்திக்கலாம் ஆகையாலும்
இங்குச் சொல்லுகிற தியாகம் கர்ம ஸ்வரூப தியாகமாக மாட்டாது –

ஆகையால் கீழ்ச் சொன்ன கர்ம ஞானாதி சங்கங்களில் பல சங்காதிகளையும் -ஸ்வ தந்த்ர சாதனம் என்கிற பிரபத்தியையும் விட்டு
தத் சாதன சமாராத்யானானவனையே பல ப்ரசாதனனாக புத்தி பண்ணு –
அவற்றால் ப்ரீதனான நான் என்னைப் பெறுகைக்கு விரோதியான எல்லாப் பாபங்களிலும் நின்றும் விடுவிக்கிறேன்-
ஆன பின்பு எனக்கு பிரசாதனமான கர்ம யோகத்தில் கர்த்தவ்ய அகர்த்தவ்ய புத்தியால் சோகிக்கக் -மோஹிக்கக் -கடவை அல்லை
என்று யுக்த அர்த்தத்தை நிகமிக்கின்றது என்று சிலர் சொல்லுவார்கள் –
அது அர்த்தம் அன்று –

கர்மம் அவசியம் கர்த்தவ்யம் என்றதும் -அகரணத்தில் பாபம் வருகிறது என்றதும் -சாதனமான கர்மத்தில் அன்றிக்கே
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மத்தால் யாகையாலும் –
கர்மம் ஸ்ரேஷிடம் என்னும் இடம் கர்ம யோகத்தை ப்ரசம்சித்த படி யாகையாலும்
யே த்வேத தப்ப்ய ஸூ யந்த-என்கிற இடம் அனுஷ்ட்டிக்கச் சொன்னதில் அஸூயையைப் பண்ணில் நஷ்டனாம் என்கிறது ஒழிய
அனுஷ்டியாத போது நஷ்டனாம் என்கிறது அன்று ஆகையாலும் –
அனுஷ்டியாதவன் நஷ்டனாம் என்னில் கர்ம யோக நிரபேஷனாய் விட்ட ஞான யோக அதிகாரிக்கு நாசம் வர வேண்டுகையாலும்
கர்ம ஸ்வரூப தியாகம் தாமச கார்யம் என்ற இடம் மோஹாத் என்று விசேஷிக்கையாலும்
நாஸ்திக தியாகத்தைச் சொல்லுகிறது ஆகையாலும் –
சாத்விக தியாகமாகச் சொன்ன பலாதி தியாகம் நாஸ்திக வ்யாவ்ருத்தி பரமாகையாலும்
அங்கன் அன்றாகில் கர்ம ஸ்வரூப தியாகம் பண்ணின ஞான யோக அதிகாரிக்கும் ஸாத்விகம் இன்றியிலே ஒழிகையாலும்
கரணங்கள் குர்வத் ரூபங்கள் ஆகையால் கர்மங்களை விடப்போகாது என்னும் இடம்
பகவத் ப்ரீனந கர்மத்தை விடுகை பக்ஷம் அல்ல என்கிறத்தாலே பரிஹ்ருதம் ஆகையாலும்
கர்த்தவ்யானி என்கிற இடம் த்யாஜ்யம் தோஷவத் என்கிற ராக துவேஷாதிகளோ பாதி ஆத்மாவுக்கு கர்ம பந்தகம் ஆகையால்
த்யாஜ்யம் என்கிறவர்களை வ்யாவர்த்திக்கிறது ஆகையாலும்
கர்மத்தை அங்கமாக உடைத்தான ஞானம் தன்னையே கர்மத்துக்கு அங்கமாக விதிக்கையாலே
அங்கமான பிரபத்தியை ஸ்வ தந்திரமாக விதிக்கக் கூடாது என்கிற விரோதம் இல்லாமையாலும்

தபஸ் கர்மாதி சாத்தியமான பாப நிவ்ருத்தி கிருஷ்ண அநு ஸ்ம்ருதி மாத்திரத்தாலே ஸித்திக்கும் என்று எழுதுகையாலே
ப்ராபலய தவ்ர்ப்பல்யம் இல்லாமையாலும்
தியாக பல ஸித்தியில்லை என்கிற இடம் சாதனமான கர்மத்தை விட்டு தத் சாத்தியமான ஞானத்தை ஆசைப்படில்
அது கிடையாது என்கிறது ஆகையால் அத்தோடு விரோதம் இல்லாமையாலும்
ஸ்வ அதிகார ரூப தர்மத்தை அநுஷ்டேயமாகச் சொல்லி தத் வ்யதிரிக்த தர்மத்தை த்யாஜ்யமாகச் சொல்லுகிறது ஆகையால்
விதி நிஷேத ஸாஸ்த்ர வையர்த்தம் வரும் என்னை ஒண்ணாதாகையாலும்
மாஸூசஸ் சம்பதம் தைவீமபி ஜாதோசி பாண்டவ -என்கிற சோக நிவ்ருத்தியாலே சோகம் அநுமேயமானவோபாதி இங்கும்
மாஸூச என்கையாலே சோகம் அநு மிக்கலாய் இருக்கையாலே சோகம் ப்ரஸ்த்துதம் அன்று என்கிறது
தூஷணம் ஆக மாட்டாமையாலும்
ப்ரபத்தியை ஸ்வ தந்திரமாக விதிக்கையாலும்
இதி தே ஞான மாக்யாதம் – என்று அந்த ஞான பிரகரணம் தன்னிலே நிகமித்து விடுகையாலே புநர் யுக்தி வருகையாலும்

அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போக்தா ச பிரபுரேவ ச -என்று சர்வ யஞ்ஞங்களுக்கும் போக்தாவும் நானே
பல பிரதானம் பண்ணுமவனும் நானே-என்று தானே சொல்லுகையாலே
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற இடம் கர்மஞானாதி சாதனங்களால் ப்ரீதனான நான்
என்கிற விசேஷணம் இங்குக் கூடாமையாலும்
தேவதாந்த்ர வ்யாவ்ருத்தி -மாம் -என்கிற பதத்தால் சித்திக்கையாலே – ஏக -பதத்துக்கு வ்யாவர்த்யம் இல்லாமையாலும்
நாநுசோசிதும் அர்ஹஸி
நைவம் சோசிதும் அர்ஹஸி -என்று நீ சோகிக்கக் கடவை அன்று என்று சொல்ல
அவனும் -ய தத்வ யோக்யம் வசஸ்தே நமோ ஹோயம் விகதோ மம – என்று அத்யாத்ம விஷயமாக நீ திரு உள்ளமான
வார்த்தைகளால் என்னுடைய மோகம் போயிற்று என்று அவன் பிரதி வசனம் பண்ணுகையாலும்

சர்வ குஹ்யதமம் பூயஸ் ஸ்ருணுமே பரமம் வச -என்றும்
ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம் -ப்ரத்யக்ஷா வகமம் தர்ம்யம் ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -என்று
ராஜ குஹ்யமாகச் சொல்லப்பட்ட பக்தி யோகத்தைக் காட்டிலும்
இதி குஹ்ய தமம் சாஸ்திரம் இதம் யுக்தம் மயா ந -என்று குஹ்ய தமமாகச் சொல்லப்பட்ட
புருஷோத்தம வித்யையாதிகளில் காட்டிலும் அதிகமாய் குஹ்ய தமம் என்றும்
ஏதத் வை மஹோபநிஷதம் தேவா நாம் குஹ்யம் -என்று ஸ்ருதியிலும்
ஏதந் மஹோபநிஷதம் தேவா நாம் குஹ்யம் உத்தமம் -என்று ஸ்ருதியிலும் தேவ குஹ்யமாகச் சொல்லப்பட்ட
ந்யாஸ சப்த வாஸ்யமான பிரபதனத்தை சர்வாதிகமாகப் பிரியச் சொல்லுகையாலும்
யுக்த சாதன நிகமம் என்கிற பக்ஷம் அர்த்தம் அன்று –

———————-

ஆகையால் கீழே உபதிஷ்டமான கர்மாதிகளில் -தத் கிம் கர்மணி கோரே மாம்நியோ ஜயஸி கேசவ -என்று
பின்பு கோரமான இக்கர்மத்திலே என்னை என் செய்ய மூட்டுகிறாய் என்கையாலே
கர்மங்களிலே துஷ் கரத்வாதி பயம் நடக்கையாலும்
கிந்ந உபாய விப்ரஷ்டஸ் சிந்நா ப்ரமிவ நஸ்யதி -என்று யோக பிரஷ்டனானவன் சிந்நா ப்ரம் போலே நசிக்கும் என்கையாலே
கர்மயோக ச அபாயம் என்கிற பயம் நடக்கையாலும்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் –தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூ துஷ் கரம் -என்று
மனஸ்ஸூ விஷயங்கள் தோறும் பட்டி புக்கு ஒன்றில் நிலை இல்லாமல் இருப்பது ஓன்று —
பலவத்தாய் த்ருடமாய் இருக்கும் சததகதியான வாயுவினுடைய நிரோதம் அரிதானால் போலே
அந்த மனசை விஷயங்களில் நின்றும் மீட்க்கை அரிது என்று புத்தி பண்ணா நின்றேன் என்கையாலே
கர்ம யோகாதிகளுடைய அனுஷ்டானம் -அனுசந்தானுமேயும் -அகப்பட துஷ் கரம் என்று பயப்படுகையாலும்

யததோ ஹ்யபிகவ் நதேய புருஷஸ்ய விபஸ்சித–இந்திரியாணி பிரமாதீ நிஹர நதிப்ரசப மமந–தாநி ஸர்வாணி சமயம்
ய யுக்த ஆஸீத மத் பர -என்று ஞானாவானாய்க் கொண்டு இந்திரிய ஜெயம் பண்ணுகையில்
யத்தனியா நிற்கும் புருஷனுக்கும் அது அரிது -மனசையும் தன வழியிலே அபஹரித்துக் கொள்ளும் என்கையாலே –
இந்திரிய ப்ராபல்ய நிபந்தனமான பயம் நடக்கையாலும்
தத் பரிஹார அர்த்தமாக அந்த இந்திரியங்களை நியமித்து என் பக்கலிலே தத் பரனாவான் என்கையாலும்
தைவீஹ் ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா -என்று எனக்கு லீலா பரிகரமாய் குண த்ரயாத் மிகையான என்னுடைய
இந்த மாயையை ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் கடக்க அரிது என்கையாலும்
ஈஸ்வரஸ் சர்வ பூதா நாம் ஹ்ருத்தேசேர்ஜூநதிஷ்டதி -பராமயந சர்வ பூதா நியந்த்ர ஆரூடாநி மாயயா -என்று
சர்வ நியாந்தாவான சர்வேஸ்வரன் சர்வருடைய ஹ்ருதய பிரதேசங்களில் நில்லா நிற்கும் –
சத்தா யோகி சகல பதார்த்தங்களையும் யந்த்ர ரூடமாக்கி பிரமிப்பியா நின்று கொண்டு -என்கையாலே
ஈஸ்வர அதீனம் ஜகத்து -தன்னாலே செய்யலாவதொரு கர்த்தவ்யமும் இல்லை என்று அறிகையாலும்

மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் போஹஞ்ச -என்று பூர்வ அநு பூதத்தினுடைய ஸ்ம்ருதியும் ஞான போகாதிகளுமான
இவையும் என்னாலே என்கையாலே சேதன வியாபார ஏக சாத்யமாய் இருப்பது ஒன்றும் இல்லை என்று அறிகையாலும்
மாமேவயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -என்று என்னையே யாவர் சிலர் பிரபத்தி பண்ணுகிறார்கள்
அவர்கள் இந்த மாயயைக் கடப்பார்கள் என்றும்
தமேவ ஸாத்யம் புருஷம் ப்ரபத்யே –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேந பாரத –இத்யாதிகளாலே சர்வ காரண பூதனான அந்தப் புருஷனையே பிரபத்தி பண்ணுவான் என்றும்
சர்வ பிரகாரத்தாலும் அவனையே சரணமாக அடை என்றும் பல இடங்களிலும் பிரபத்தியை விதிக்கக் கேட்க்கையாலே
பிரபத்தி அல்லது சம்சார நிஸ்தரண உபாயம் இல்லை என்கிற பிரபத்தி வை லக்ஷண்யம் பிறக்கையாலும்

ஸூ கரமாய்- நிரபாயமாய் -நிரபேஷமாய்-ஸித்தமாய் -பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் –
அவிளம்ப பல பிரதமான இவ்வுபாயம் கிடக்க
துஷ் கரமாய் -சாபயமாய் -சாபேஷமாய் -பஹு தர ஜென்ம சாத்யமாய் -ஸ்வரூப விருத்தமாய் -விளம்ப பல பிரதமான
ஸாத்ய உபாயங்களிலே என்னை மூட்டா நின்றாய் -அவை துர் அநுஷ்டேயமாய் இரா நின்றது
நெறி காட்டி நீக்குதியோ -என்கிறபடியே சாதனாந்தரங்களைக் காட்டி அகற்ற நினைக்கிறாயோ –
விலக்ஷண உபாயமான வுன்னைக் காட்டி உஜ்ஜீவிப்பிக்கிறாயோ- என் செய்வாய் எண்ணினாய் கண்ணனே -என்று
சோகாவிஷ்டனான அளவிலே இப்படி சாதன விசேஷ ஸ்ரவணத்தில் சோகம் பிறக்கும்படி பாகம் பிறந்த பின்பு –

இனி நீ பூர்வ யுக்தமான கர்ம ஞானாதி சாதனங்களை ச அங்கமாக ச வாசந பரித்யாகம் பண்ணி
வாத்சல்யாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -உன்னுடைய தோஷமே போக்யமாய் -உன் சிறுமை பாராதே –
உனக்கு முன் நின்று கார்யம் செய்யு மவனாய் -அதிலும் என் பேறாகச் செய்வேனாய் இருக்கிற என்னை
உன்னுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு அவ்யவஹிதமாய் உன் நினைவையும் அபேக்ஷியாதபடி
நிரபேஷ சாதனமாக நினை -அநந்தரம் ஞானாதி குண விசிஷ்டனான நான் என் பக்கலிலே சமர்ப்பித்த
சர்வ பரனான உன்னை என்னைப் பெறுகைக்கு விரோதியான எல்லா பாபங்களும் நமக்கு இடம் அன்று என்று
விட்டுப் போம்படி பண்ணக் கடவேன்
ஆன பின்பு சாதனாந்தர துஷ் கரத்வாதிகளைப் பற்ற சோகிக்கக் கடவை அல்ல என்கிற இதுவே
சரம ஸ்லோகத்துக்கு சரமமான அர்த்தம் என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள் என்று
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வார் –

ஸ்ரீ நம்மாழ்வாரும்
இவ்வுபாய அனுசந்தான தசையில் -நோற்ற நோன்பிலேன் -என்று கர்மா யோகத்தை இல்லை என்றும்
நுண் அறிவிலேன் என்று ஞான யோக பக்தி யோகங்களை இல்லை என்றும்
கர்மா ஞான பக்திகளுடைய அநந் வய அனுசந்தான பூர்வகமாக -அம்மான் -என்று ஸ்வாமித்வத்தையும்
சிரீவர மங்கல நகர் வீற்று இருந்த -என்று ஸுலப்யத்தையும்
எந்தாய் -என்று ஸுசீல்யத்தையும்
உனக்கு மிகையல்லேன் -என்று வாத்சல்யத்தையும் முன்னிட்டு
தமியேனுக்கு அருளாய்
அருளாய் உய்யுமாறு எனக்கே -என்று பகவத் கிருபையை அனுசந்தித்து
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–என்று உபாய விதானத்தையும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட –ஏக சிந்தையனாய் -என்று விதி விஷயமான
ப்ரபத்தியையும் அருளிச் செய்தார்

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்
பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன்
மற்றேல் ஓன்று அறியேன்
நலம் தான் ஓன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன் -என்று இதர உபாய ஸூந்ய தையை அருளிச் செய்து
நாயேன் வந்து அடைந்தேன் –என்று தம்முடைய நைச்யத்தை புரஸ்கரித்து
ஆற்றேன் வந்து அடைந்தேன் -என்று அநந்ய சரணத்வ ரூபமான அசாதாரணதை முன்னாக
உபாய வரணம் பண்ணி அருளினார் –

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒளித்துட்டேன்–என்று
கர்ம யோகத்தினுடைய ச வாசன பரித்யாகத்தைச் சொல்லி
என் கண் இல்லை -என்று ஞான யோக அநந் வயத்தை அனுசந்தித்து
நின் கண் பக்தன் அல்லேன் -என்று பக்தி யோக அநந் வயத்தை அனுசந்தித்து
நம்பீ கடல் வண்ணா -என்று சரண்ய குண பூர்த்தியை அனுசந்தித்து
எனக்கு அருள் செய் கண்டாய் -என்று பிரபத்தி உபாயம் பண்ணி அருளினார் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் -என்று கர்மயோக அநந் வயத்தையும்
அறிவில்லை -என்றும்
அறிவு ஒன்றும் இல்லை -என்று ஞான யோக பக்தி யோகங்களினுடைய அநந் வயத்தையும் அருளிச் செய்து
புண்ணியம் நாமுடையோம் -என்று சித்த உபாய அந்வய ப்ரபத்தியையும் அருளிச் செய்து
பிரபத்தி இதர உபாய பரித்யாக பூர்வகமாக இருக்கும் என்னும் இடத்தை ஸ்ரீ நாய்ச்சியாரும் அருளிச் செய்தார்

இப்படி ஆழ்வார்கள் எல்லாரும் சாதனாந்தர அநந்வய பூர்வகமாகப் பல இடங்களிலும் ப்ரபத்தியை
அருளிச் செய்து கொண்டு போருகையாலே இதில் சொல்லுகிற தியாக விதானம் அத்யந்தம் அனுரூபமாயே
இருக்குமாகையாலே இவ்வாழ்வார்கள் திரு உள்ளத்தை அநு விதானம் பண்ணிப் போந்த
ஸ்ரீ யாமுந முனிகள் ஸ்ரீ பாஷ்யகாரர் முதலான பூர்வாச்சார்யர்களும்
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக இப்பிரபத்தியை அருளிச் செய்தார்கள் -எங்கனே என்னில்

ஸ்ரீ யாமுந முனிகள் -ந தர்ம நிஷ் டோஸ்மி-என்கிற ஸ்லோகத்தில்
ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று பேற்றுக்கு உறுப்பாகக் கர்மயோகத்தில் அன்வயம் இல்லை என்றும்
ந சாத்ம வேதீ -என்று ஞான யோகத்தில் அன்வயம் இல்லை என்றும்
த்வத் சரணாரவிந்தே ந பக்திமான் -என்று பக்தி யோகத்தில் அன்வயம் இல்லை என்றும்
அகிஞ்சன -என்று இதுக்கு அதிகார சக்தி வாஞ்சா அநுதபாதிகளும் இல்லை என்றும்
அநந்ய கதி-என்று ரக்ஷகாந்தரம் இல்லை என்றும்
சரண்ய -என்று உபாய பூதனுடைய குண பூர்த்தியை அருளிச் செய்து
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று மாமேகம் சரணம் வ்ரஜ -என்று விதித்த தேவர் திருவடிகளின் மூலத்தை
அந்த யுபதேச க்ரமத்திலே பிரபத்தி பண்ணுகிறேன் என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ பாஷ்யகாரரும்
பிதரம் மாதரம் -என்று தொடங்கி -சர்வ தர்மாம்ஸ் ச ஸந்த்யஜ்ய-என்கிற இறுதியாக
சேதன அசேதன ரூபங்களான ப்ராப்ய ஆபாசங்களையும் ப்ராபக ஆபாசங்களையும் பரித்யஜித்து
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ–என்று திரு உலகு அளந்து அருளின திருவடிகளை
உபாயமாக வரிக்கிறேன் என்று புராண வசன பிரிக்ரியையாலே இதர உபாய பரித்யாக பூர்வகமாக
சரண வரணம் பண்ணி ஸ்வ வசனத்தாலே சரணம் புகுகிற அளவிலும்
கைங்கர்ய பிராப்தி உபாய பூத பக்தி தத் உபாய சம்யக் ஞான தத் உபாய சமீஸீ ந க்ரியா -என்று தொடங்கி
அத்ருஷ்ட சந்தார உபாய -என்கிறது இறுதியாக கைங்கர்ய பிராப்திக்கு உபாயமான பக்தி -தத் உபாய ஞான யோகம் –
தத் உபாயமான கர்மயோகம் -தத் அங்கமான சமதமாதிகள் ஆகிற சமஸ்தாத்ம குணங்களாலும் நிஹீனனாய் இருப்பான் என்றும்
அநாதி பாப வாசனையின் மிகுதியால் இவற்றுக்கு அடியான ஆத்ம ஞானமும் கூட இல்லாதபடி
பகவந் மாயா திரோஹித ஸ்வ பிரகாசகன் ஆகையால் அத்ருஷ்ட சந்தாரா உபாயனாய் இருப்பன் என்று
கர்ம ஞானாதி யுபாய விசேஷங்களினுடைய அநந் வயத்தை அருளிச் செய்து
நிகில ஜந்துஜாத சரண்ய ஸ்ரீ மந் நாராயண தவ சரணாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்று
சரண்ய அநு குண அநு சந்தான பூர்வகமாக ஸ்வ அபராத பய நிவர்த்தக புருஷார்த்தத்தைப் புரஸ் கரித்து-
ஆஸ்ரயண உபயோகிக கல்யாண குண விசிஷ்டனாவன் திருவடிகளில் சரணம் புக்கார்

ஸ்ரீ வத்ஸாங்காச்சார்யரும் -த்வாமாம நந்தி –என்கிற ஸ்லோகத்தில் –
தேவரீர் ஞான கிரியா பஜனங்கள் ஆகிற சாதன விசேஷங்களாலே லப்யராகவும் –
அநயைர் அலப்யராகவும் சொல்லுவார்கள் –
அயோத்யா வாசிகளான சராசர ஸஹிதங்களான பிராணிகள் இவற்றிலே எந்த உபாயத்தாலே பஜித்தார்கள் என்று
வ்யதிரேகத்தால் சித்த உபாயம் இதர சாதன நிரபேஷம் என்னும் இடத்தையும்
கருணாம்ருதாப்தே -என்று பகவத் கிருபையையே உபாயம் என்று உதாஹரண பூர்வகமாக அருளிச் செய்து
ஸ்வகைர்க் குணைஸ் ஸ்வைஸ் சரிதை -என்கிற ஸ்லோகத்திலே சமதமாதி குண விசிஷ்டராய்க் கொண்டு
கர்மயோகாதிகளாலே தேவரை பஜிக்குமவர்களுக்கும் அவற்றைக் கார்யகரம் ஆக்குவது தேவர் கிருபையான பின்பு
அந்த கிருபையை எனக்கு அவலம்பமாக அனுசந்தித்து இருப்பன் என்று அருளிச் செய்து
யதித்வ பக்தோபி –என்று கரமஞான பக்திகள் ஆகிற சாதன விசேஷங்களில் அந்வயம் இல்லையே யாகிலும்
தேவருடைய ஷமா தயாதி மங்கள குணங்கள் உண்டாகையாலே தேவர் திருவடிகளை நான் வரிக்கக் குறையில்லை என்று
இதர உபாய நிவ்ருத்தி பூர்வகமாகப் பிரபத்தியை பகவத் பிராப்தி உபாயமாக அருளிச் செய்தார்

ஸ்ரீ பராசர பட்டரும் -ஞான கிரியா பஜந சம்பத் கிஞ்சன ந அஹம் -இத்யாதிகளாலே
கர்ம யோகாதிகள் என்ன -இச்ச -அதிகார -சக்தி -அநுசயாதிகள்-என்ன -இவற்றில் ஒன்றிலும் எனக்கு அந்வயம் இல்லை என்று
இதர உபாய ஹானியை முன்னிட்டு -சரணம் பவ -என்று உபாய பிரார்த்தனை பண்ணி அருளினார் –

அபய ப்ரத குரு ஸூநுவான ஸ்ரீ ஸூந்தர வரதாச்சார்யரும் இஸ் ஸ்லோக தாத்பர்யம் அருளிச் செய்யும் இடத்தில்
மத் ப்ராப்த் யர்த்த தயா -இத்யாதியாலே என்னைப் பெறுகைக்கு உறுப்பாக என்னாலே சொல்லப்பட்ட எல்லா சாதனங்களையும்
ச வாசனமாக விட்டு அநந்தரம் என்னை ஒருவனையுமே என்னைப் பெறுகைக்கு சாதனமாக வியவசாயத்தைப் பண்ணு –
ஏவம் ரூப வியவசாய யுக்தனான யுன்னை ஞான சக்தியாதி சகல குணங்களாலும் பூர்ணனான நான்
என்னைப் பெறுகைக்கு பிரதிபந்தகங்களான எல்லாப் பாபங்களாலும் விரஹிதன் ஆக்குகிறேன்
சோகியாதே கொள் என்று இதர உபாய நிவ்ருத்தி பூர்வகமான சித்த உபாய வரணத்தை
இதுக்குத் தாத்பர்யமாக அருளிச் செய்தார் –

ஆகையால்
சகல சாதன அஸஹமான சித்த உபாயத்தை -சாதனாந்தர கர்மாதி தியாக விதான பூர்வகமாக விதிக்கையாலே
இஸ் ஸ்லோகத்துக்கு ஸ்வாரசிகமான வர்த்தம் இதுவே என்னும் இடம் சர்வ சம் பிரதி பன்னம் என்றதாயிற்று –
ஏவம் ரூபமான கர்மாதி உபாயங்களைக் கீழ் அடையப் பரக்கச் சொல்லி -அநந்தரம் -இப்பிரபத்தியைச் சொல்லி –
இதுக்கு அவ்வருகே ஓர் உபாயம் சொல்லாமையாலே இத்தைச் சரம ஸ்லோகம் என்று நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள் –

மாம் சரணம் வ்ரஜ -என்னையே உபாயமாக பற்று என்று தானே ஆதரித்து விதிக்கையாலும்
அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று நானே பாப விமோசனம் பண்ணுவிக்கக் கடவேன் என்று
ப்ரேமத்தோடே சொல்லுகையாலும் -சரண்ய அபிமதத்வம் இதுக்குத் தாத்பர்யம் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த சாதன தியாகத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ த்வயத்தில் ஈஸ்வர பாரதந்தர்ய நிபந்தனமாக உபாயம் சொல்லுகிறது
இதில் ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய நிபந்தனமாக உபாயம் சொல்லுகிறது
ஆகையால் ஈஸ்வர ஸ்வரூபம் சொல்லுகை இதுக்கு பிரதான அர்த்தம் –

இவ்வுபாய ஸ்வீ காரம் ஸ்வீ கார்ய ஸ்வரூப தரிசனத்தால் அல்லது கூடாமையாலே அநு சந்தானம் ஸுலப்யம் என்று
நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வர்-
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனுக்கு ஸ்வரூபமான உபாயத்தை பிரதாநயேந ப்ரதிபாதிக்கிறது –
அது இதர உபாய தியாகத்தால் அல்லது கூடாமையாலே சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று
தத் அங்கமான சாதனாந்தர தியாகம் சொல்லிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: