யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸூ துர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்-
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந்தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
—————-
ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –
அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத
———————
65–ஸ்லோகங்களால்-ஸ்ரீ த்வயார்த்தங்களை அருளிச் செய்கிறார்
முதல் ஐந்து ஸ்லோகங்களால் ஆச்சார்ய வந்தனம் –
ஸ்ரீ புராண ரத்னம் அருளிச் செய்த ஸ்ரீ பராசரையும் மங்களா சாசனம் அருளிச் செய்கிறார் –
ரத்னம் தானும் பிரகாசித்து ஸ்ரீ எம்பெருமானையும் பிரகாசப்படுத்தி காட்டி அருளும் அன்றோ –
அடுத்து இரண்டு ஸ்லோகங்களால் பரத்வத்தையும்
அடுத்து இரண்டால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்து
மேல் ஒன்பது ஸ்லோகங்களால் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-th ஸ்லோகத்தால் சரணாகதி செய்து அருளி
அடுத்த நான்கு ஸ்லோகங்களால் சரணாகத அதிகாரிக்கு லக்ஷணங்களையும்
மேல் இரண்டு ஸ்லோகங்களால் சரணாகதியால் வரும் பலன்களையும் அருளிச் செய்து
மேல் -16-ஸ்லோகங்களால் உத்தர காண்ட அர்த்தம் -ஸ்ரீ பரமபத வைபவம் –
இவற்றை திரு உள்ளம் பற்றியே ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யம் அருளிச் செய்கிறார்-
ஸ்லோகம் 52-மூலம் சேஷத்வமே ஸ்வரூப நிரூபக தர்மம் என்று அருளிச் செய்கிறார் .
அடுத்த ஸ்லோகத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினையே –திருவாய் -2.3.4-
அடுத்த மூன்றால் தேஹ அவசானம் வரை அவன் அனுக்ரஹத்தை பிரார்த்தித்து
அடுத்து பாகவத ஸமோக மஹிமையை அருளிச் செய்து
மேலே அவனது காருணிகத்தவம் வாத்சல்யம் நவவித சம்பந்தம் -சர்வவித பந்துத்வம் போன்றவற்றை அருளிச் செய்து
மேலே நைச்ய அனுசந்தானம் பண்ணி அருளி அவனது ரக்ஷகத்வ விரதத்தை நினைவு படுத்தி
மேலே ஆச்சார்ய சம்பந்த முகேன அனுக்ரஹம் செய்து அருள பிரார்த்தித்து நிகமித்து அருளுகிறார் –
—————
ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று -பார்யைக்கு அங்க பூஷணம் போலே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஆழ்வார் உடைய
திராவிட உபநிஷத் ரஹச்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது
பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஸ்ரீ ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்தது
அத்தை தாம் அனுபவித்து
அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்
சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்
சகல உபநிஷத் ரகஸ்யமாய் -துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –
ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –
இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து
இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார்
இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதியாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –
————-
நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-
தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதியம்-2-
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதியம் சரணம் மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை நாத முனயே நம -என்று அந்வயம் –
பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-
அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம் அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-
தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-
யா உதார சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ
தத்த்வேன சந்தர்சயன் புராண ரத்னம் நிரமிமீத முநிவராய பராசராய நம -என்று அந்வயம்-
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-
மத் அன்வயாநாம் யதேவ நியமேன மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம் ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று அந்வயம் –
முதல் மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே -இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான ஸ்ரீ பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –
ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –
————
யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குலதனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-
யன் மூர்த்நிமே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி ந
குலதனம் குல தைவதம் அரவிந்த விலோசநஸய தத் பாதார விந்தம் ஸ்தோஷ்யாமி -என்று அந்வயம்
(குல தனம்–உபாயத்வமும் –குல தைவதம் -உபேயத்வம் –அடிச்சியாம் தலை மீசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –)
தத்த்வேன யஸ்ய மஹிமார்ணவ ஸீ கரானு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-
யஸ்ய மஹிமார்ணவ சீகராணு சர்வ பிதா மஹாத்யை ரபி தத்த் வேன மாதும் ந சக்ய
ததீய மகிமா ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய நிர்பத்ரபாய கவயே மஹ்யம் நமோ அஸ்து -என்று அந்வயம் –
( மஹ்யம் நமோ அஸ்து –ஸாஹஸ கார்யம் செய்வபர்களுக்கு நமஸ்காரம் என்பர்களே )
யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய சக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-
(ஸ்ரமாவதி-களைத்து போகிறவரையில் தண்ணீர் இறைக்கிறேன் போலே ஸ்துதிக்க இழிகிறார் )
கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-
அப்ஜ நேத்ர –செங்கண் மாலே –அவலோக நதா நேன பூயோ மாம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-என்றும் சொல்லுகிறபடியே
அவிக்நேன ஸ்தோத் ரத்தை தலைக் கட்டும்படி அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்னுதல்
ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே
ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் )
————-
ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –
இப்படி ஸ்தோத்ர ஆஷேப சமாதானத்தைப் பண்ணி ஈஸ்வரன் உடைய சரண்யதைக்கு உறுப்பான பகவத் பரத்வத்தை
மேல் அஞ்சு ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
நா வேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-
ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் – சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-
ஸ்வா பாவிக- அநவதிக அதிசய- ஈசித்ருத்வம்-இரண்டு விசேஷணங்கள் இவனுக்கே அசாதாரணம் –
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் ஸோஷர -பரமஸ் ஸ்வராட்
முக்தருக்கும் ச ஸ்வராட் பவதி -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி – ஸ்வ தந்திரம் இங்கு முக்தர்களுக்கு தங்கள் நினைத்த படி
கைங்கர்யம் செய்ய அநேக சரீரம் பரிக்ரஹம் கொண்டு –அவனை மகிழ்விக்க என்றபடி –
கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-
வேதாந்தாஸ் -தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தராந்தி-திருவுக்கும் திருவாகிய செல்வன் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ –பரத்வ லிங்கங்கள் — க க கஸ்ய கஸ்ய-கேள்விகள்
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-
ஸ்தோத்ரம் -14-பிரமாண அனுகூலமான தர்க்க ரூப ந்யாயத்தாலே உக்தமான பரத்வத்தை நிகமிக்கிறவர் –
கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-
———————-
ஸ்தோத்ரம்–15-இதில் இப்படி த்ருட பிரமாண சித்தமாய் இருக்க
ஆசூரீம் யோநிமா பன்னா -ஸ்ரீ கீதை -16-20-என்கிறபடியே ஆசூர பிரகிருதிகள் அவனை இழப்பதே
என்று அவர்கள் இழவுக்கு இன்னா தாகிறார்
அதவா
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் மொழி -1-3-4-என்று
துஷ் பிரகிருதிகள் கண் படாது ஒழியப் பெறுவதே-இவ் விலஷண விஷயம் -என்றுமாம் –
த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக் யாததை வ பரமார்த்த விதாம் மதைச்ச
நைவா ஸூ ரப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-
ஸ்லோகம் -16- மஹாத்மா நஸ்து மாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உன்னைப் பெரும் சத் பிரகிருதிகள்
காணப் பெறுவதே -என்றும்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -என்று அது தன் பேறு என்றும் இருக்கிறார் –
உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித நிஸம் த்வத நன்ய பாவா–16-
ஸ்லோகம் -17-கீழ் பிரதிபாதித்த சர்வேஸ்வரத்துக்கு பிரதிசம்பந்தி தயா அபேஷிதமான ஈசித வ்யஜாதத்தை ப்ரபஞ்சீ கரிக்கிரார் –
யதண்ட மண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-
ஸ்லோகம் -18-கீழ் சரண்யன் உடைய உத்கர்ஷம் சொல்லி இதில் உபய விபூதி நாதனை நம்மால் கிட்டலாமோ -என்று
கூசாதபடி ஆஸ்ரிதருக்கு இழியும் துறையான கல்யாண குணங்களிலே பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்
அதவா
கீழ் சர்வேஸ்வரத்வம் சொல்லிற்றே-இனி சொல்ல பிராப்தமான சமஸ்த கல்யாண குணாத் மகதையை
அருளிச் செய்கிறார் என்றுமாம் –
சிலவற்றை அருளிச் செய்து ஸமஸ்த கல்யாண குண அமுதக் கடல் -என்று நிகமிக்கிறார் –
வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–
———————–
ஸ்லோகம் -19- இக் குணங்களுக்கு சங்க்யை இல்லாதோபாதி ஒரோ குணங்களுக்கு அவதி இல்லை என்கிறார் –
உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-
அப்ஜபுவ உபர்யுபரி / அப்ஜபுவ பூருஷான் ப்ரகல்ப்ய ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாக கல்பித்து -சதம் சதம் நூறு நூறாக -ஆனந்தவல்லி –
சொல்லுமா போலே சொல்லலாமது ஒழிய -உபர்யுபரி ப்ரகல்ப்ய-என்று கல்பித்தததே மேலும் மேலும் செல்லும் -முடிந்தபடி இல்லை –
தே யே சதம் தே யே சதம் தே யே சதம் -என்று அநு க்ரமம்-ஒன்றின் பின் ஒன்றாக -கிர-வேத வாக்கியம் செல்லும் என்றவாறு –
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –
அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால் -)
ஸ்லோகம் -20-கீழ்ச் சொன்ன குணங்களுக்கு போக்தாவான ஆஸ்ரிதர் பெருமையை அருளிச் செய்கிறார்
அஸ்மின் நஸய ஸ தத் யோகம் சாஸ்தி -ப்ரஹ்ம சூத்ரம் -1-1-20-
இந்த ஆனந்த சேர்க்கையை ஸ்ருதி -ரசம் ஹ்யேவாயம் லப்த் வா நந்தீ பவதி -ஸ்ருதி -என்று
இவனாலே வந்த பெருமையை உடையவர்கள் அளவு இதுவானால் அவன் பெருமை பரிச்சேதிக்க ஒண்ணாது என்னும் இடம்
கிம்புநர் நியாய சித்தம் அன்றோ -என்கிறார் என்றுமாம் –
த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-
—————–
ஸ்லோகம் -21-இதுக்கு கீழ் ஈஸ்வரன் உடைய ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத்துக்கும் – உபய விபூதி யோகத்தால் வந்த
ஐஸ்வர்யத்துக்கும் – குண உத்கர்ஷத்தால் வந்த நீர்மைக்கும் – தோற்று
ஜிதந்தே -என்னும் ஸ்வேத த்வீப வாசிகளை போலேயும்
நாம புரஸ்தா தத ப்ருஷ்ட்ட தஸ்தே -என்ற அர்ஜுனன் போலேயும்
யாருமோர் நிலைமையன் -என்ற ஆழ்வாரைப் போலேயும்-சரண்யன் உடைய பெருமையை அனுசந்திக்கிறார் –
இதுக்கு முன்பு பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்றே-இதில் ப்ராப்தாவின் ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றுமாம்-
கீழ் சரண்ய ஸ்வரூபம் சொல்லிற்றாய் -மேல் சொல்லப் படுகிற சரணாகதியை -இதில் ப்ரஸ்தாபிக்கிறார் -என்றுமாம் –
நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-
ஸ்லோகம் -22-தம்முடைய அதிகாரத்தைச் சொல்லிக் கொண்டு பிரச்துதமான ப்ரபத்தியை ப்ரயோக்கிகிறார்-
கீழ்ச் சொன்ன உபேய அனுகூலமான உபாயத்தை அனுஷ்டிக்கிறது -என்றுமாம் –
கீழ் -த்வாம் சீல -உல்லன்கித -என்கிற இடத்தில் துஷ் பிரகிருதிகள் உன் பெருமையை அறியார்கள்
சத் பிரகிருதிகள் அறிவார்கள் -என்றார்-நமோ நம -என்கிற ஸ்லோகத்திலே
ஸ்வரூபத்தைப் பர தந்தரமாக உணர்ந்தவனுக்கே இவ்விஷயம் ப்ராப்யம் ஆவது-ஸ்வ தந்த்ரனுக்கு பிராப்யம் அன்று -என்கிறது
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஸ்வ சக்தி கொண்டு விஷயம் அன்று-
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஆஸ்ரயிக்கும் விஷயம் என்கிறார் –
இந்த ஸ்லோகத்தாலே அதிகாரி ஸ்வரூபமும் சரணாகதி பிரயோகமும் சொல்லிற்று –
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-
ஸ்லோகம் -23-அனுகூலங்கள் இல்லை என்று வெறுக்க வேண்டா உண்டான யோக்யதையையும் அழிக்க வற்றான
நிஷித்த அனுஷ்டானங்கள் இல்லை யாகில்-நன்மைகளை உண்டாக்கிப் புருஷார்த்தத்தையும் தருகிறோம் -என்று
பகவத் அபிப்ராயமாக பிரதிகூலங்களாலே பூரணன் என்கிறார்
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் யாருளர் களைகண் அம்மா
அரங்க மா நகருளானே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸ் ம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-
ஸ்லோகம் -24-உம்முடைய பூர்வ வ்ருத்தி இதுவாய் இருக்க –க்ரந்தாமி -என்று நம் குற்றம் போலே கூப்பிடுவது எத்தாலே -என்ன –
சம்சார ஆர்ணவத்திலே அழுந்துகிற எனக்கு நிர்ஹேதுக கிருபையாலே உன் வாசியை அறிவித்தாய் –
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தந்தோ -திருவாய் மொழி -10-10-2- என்கிற
ப்ராங் ந்யாயத்தாலே உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கும் அந்த கிருபையே ஹேது என்று
தயைக ரஷ்யத் வத்தாலே கூப்பிடுகிறேன் -என்கிறார் –
எனக்கு தேவரை லபிக்கை பெறாப் பேறு ஆனாப் போலே இறே தேவருடைய கிருபைக்கும் என்னுடைய லாபம் -என்கிறார் –
நிர்ஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலைமை யுண்டே என்று விஞ்ஞாபனம் – –
நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-
ஸ்லோகம் -25-நம் பக்கல் ந்யஸ்த பரராய் இருக்கிற உமக்கு-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
கண்டிருக்கை ஸ்வரூபமாய் இருக்க இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ -என்ன
என்னுடைய அனர்த்தத்தை பரிஹரிக்கச் சொல்லுகிறேன் அல்லேன் –
ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம் ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன் என்கிறார்-
அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-
ஸ்லோகம் -26-தேவர் உடைய ரஷண அபாவத்தால் வந்த தேஜோ ஹாநி யையும் பாராதே
என்னைக் கைவிடும் அன்றும் நான் விடப் பார்க்கிறிலேன் -என்று
தம்முடைய அகதிவத்தாலே தம்முடைய மகா விஸ்வாசத்தை ஆவீஸ் கரிக்கிறார்-
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்-
நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸி ஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி——–26–
ஸ்லோகம் -27-என்னுடைய அநந்ய கதித்வத்தாலே விட மாட்டாத அளவேயோ-
தேவர் போக்யதையிலே அழுந்தின மனஸ்ஸூம் வேறு ஒன்றில் போக மாட்டாது – என்கிறார் –
தவாம் ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-
——————
ஸ்தோத்ரம் -28-அவதாரிகை –
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி-யிலே தேவர் திருவடிகளை லபிக்கைக்கு அனுகூலங்கள் ஒன்றும் இல்லை -என்றார்
அவ்வளவே அன்று -பிரதிகூலங்களால் பூரணன் -என்றார்
இப்படிப் பட்ட எனக்கும் பேற்றில் வந்தால் தேவர் கிருபையே பயாப்தம் என்றார்
இப்படி ந்யஸ்த பரனான என் பக்கலிலே விரோதி மேலிடுகை தேவர்க்கு தேஜோ ஹாநி -என்றார்
அத்தை பாராதே தேவர் கை விட்ட அன்றும் புறம்பு போக்கில்லை -என்றார்
இனி மேல்
த்வத் பாத மூலம் சரணம் பரபத்யே -என்று பண்ணின பிரபத்தி ஒன்றும் அமையுமோ
விரோதி நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் –என்ன
மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்
அஞ்சலி -அம் ஜலயதி/ ந ஜாது ஹீயதே –பலன்களை வர்த்தித்து கொண்டே இருக்கும் –
பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலி தானே போது போக்காய் இருக்குமே )
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-
ஸ்லோகம் -29-அவதாரிகை –
ஆயாஸாத்மகமான அஞ்சலி தான் வேண்டுமோ-சிந்திப்பே அமையும் -திருவாய் மொழி -9-1-7-என்கிறபடியே
மானசமாக அமையாதோ –-விரோதி பூர்வகமான பரம பதத்தைத் தர -என்கிறார்
இத்தால் -தீனம் -என்கிற மானச பிரபத்தியைச் சொல்லுகிறது
பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியை போதாதோ என்றவர் இதில் அஞ்சலி தான் வேணுமோ சிறிது ஆசை கிடந்தால் போதாதோ என்கிறார் –
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்-த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்
இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்
அதவா
த்வத் அங்க்ரிம் –உதீர்ண –என்கிற ஸ்லோக த்வயத்தாலே-பிரபத்தி பலமான பர பக்தியைச் சொல்லுகிறது -என்னவுமாம்
உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-
——————-
யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply