ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் —அவதாரிகையும் ஸ்லோகங்களும் -30-65 –ஸ்ரீ மந்த்ர ரத்ன -ஸ்ரீ த்வய உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை —

யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸூ துர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்-

ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந்தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஸ்ரீ ஆளவந்தார் –

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

—————-

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

——————————–

இது வரை த்வய பூர்வார்த்தம் அருளிச் செய்து மேலே உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –
இது முதல் அவன் வை லக்ஷண்யத்தை பரக்க-17-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
அதில் முதலில் இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும்
சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –
சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் –

ஸ்லோகம்-30- -இப்படி விளம்ப ஹேது இல்லாத ஸித்த உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் -ஆகையாலே
க்ரம ப்ராப்தி பற்றாதே-த்வரை பிரேரிக்க
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய் மொழி -6-9-9-என்கிறார்
பிரபத்தி பலமான பர பக்தியாலே
கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -திருவாய்மொழி -6-3-10 -என்றும்
காணக் கருதும் என் கண்ணே -திருவாய் மொழி -9-5-1-என்றும் சொல்லுகிறபடியே
கண்ணாலே காண்பது என்று -என்கிறார் -என்றுமாம் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபனே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-

ஸ்லோகம் -31-இதில் –கண்ணால் காணும் அளவும் போறாது
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2–என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்றும் சொல்லுகிறபடியே
உன் திருவடிகளாலே என் தலையை அலங்கரிக்க வேண்டும் – என்கிறார் –
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும் –
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யூன் கோலப் பாதம் -என்றும் –
இந்த விபூதியில் பேறு கிடைக்க என்றும் -ஸ்ரீ திரு நாட்டிலே புகுந்து அப்ராக்ருத தேகத்தை பெற்று ஸ்ரீ பர வாசு தேவனுடைய
பாதார விந்தங்களை சிரோ பூஷணமாக பெற த்வரிக்கிறார்

கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம தவச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-

——————

ஸ்தோத்ரம் -32- இந்த ஸ்லோகம் முதலாக பவந்தம் -ஸ்லோகம் -46- அளவும் பர்வ க்ரமத்தாலே
திவ்ய அவயவ-திவ்ய ஆபரண-திவ்ய ஆயுத-திவ்ய மகிஷி-திவ்ய பரிஜன- திவ்ய பரிச்சேதங்களோட்டை சேர்த்தி அழகை அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தாலே உன்னை உகப்பிப்பது எப்போது -என்கிறார் –
இத்தால் தம்முடைய ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார்
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ –
என்று இறே வஸ்து இருப்பது –
இது முதல் -14-ஸ்லோகங்களால் விசேஷணங்களை அருளிச் செய்து அனுபவித்து
-46-ஸ்லோகத்தில் -க்ரியா பதம் -பவந்தமே வாநுசரன்—-நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி –
கைங்கர்யம் செய்து -உன்னை உகப்பிப்பது என்றைக்கோ -என்கிறார் -இவை குளகம் -என்பர்

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–32-

ஸ்தோத்ரம் -33-திருத் தோள்களில் சௌர்ய வீர்யாதிகளையும் அழகையும் அனுபவிக்கிறார்
பரத்வ திசையிலும் அவதார திசையிலும் திவ்ய மங்கள விக்ரஹத்தில் பேதம் இல்லாமல்
தழும்புகள் இருக்கும் என்பதே ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளம்
பிராட்டி திருக்கைகளை தலை அணையாக வைத்து கண் வளர்ந்து அருளும் போது திவ்ய ஆபரணங்கள் அழுந்திய தழும்பும்
திருக் குழல் கற்றை பரிமளமும் திருத் தோள்களில் ப்ரத்யக்ஷம் ஆகுமே

சகாஸதம் ஜாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பி ராஜா நு விலம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–33-

ஸ்தோத்ரம் -34-திருத் தோள்களுக்கு அனந்தரமான திருக் கழுத்தையும் தத் அனந்தரமான திரு முகத்தில்
சாமான்ய ஸோபையையும் அனுபவிக்கிறார்-

உதக்ர பின அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-

ஸ்தோத்ரம் -35-கோள் இழைத் தாமரை -திருவாய்மொழி -7-7-8-என்கிறபடியே திரு முகத்தில் அவயவ சௌந்தர்யத்தின் உடைய
சேர்த்தியை அனுபவிக்கிறார்-கீழே திரு முக மண்டல சமுதாய சோபை -இங்கு திரு முக அவயவ சோபை அனுபவம்

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முநநஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-

ஸ்தோத்ரம் -36- திவ்ய ஆபரண திவ்ய ஆயுதாதிகள் உடைய சேர்த்தி அழகை அனுபவிக்கிறார்

ஸ்புரத் க்ரீட அங்கத ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-

ஸ்தோத்ரம் -37-மேலில் ஸ்லோக த்வயத்தாலே ஸ்ரீ பிராட்டியட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார் –
இதில் முதல் ஸ்லோகத்தாலே- ஸ்ரீ பிராட்டி உடைய மேன்மையையும் இவள் பக்கல் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உண்டான
வ்யாமோஹத்தையும் அருளிச் செய்கிறார் –

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச–37-

ஸ்தோத்ரம் -38-இதில் ஸ்ரீ பிராட்டி உடைய நிரதிசய போக்யதையும்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய்மொழி -10-10-6-
என்கிறபடியே அவனுக்கேயாய் இருக்கிற இருப்பையும் -அனுபவிக்கிறார் —தவைவ உசிதயா -/ தவச்ரியா -அநந்யார்ஹத்வம்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மய மாத தா நயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா–38–

ஸ்தோத்ரம் -39-பர்யங்க விதையில் சொல்லுகிறபடியே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மடியிலே ஸ்ரீ பிராட்டியோடே எழுந்து அருளி இருக்கிற
சேர்த்தியை -அனுபவிக்கிறார் –
மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –

தயா ஸ்ஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி–39-

ஸ்தோத்ரம் -40-ஸ்ரீ திரு வனந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்களை அனுபவிக்கிறார் –-தமக்கு அடிமையில் உண்டான த்வரையாலே
உபமாநம சேஷாணாம் ஸாது நாம் -என்னும் ந்யாயத்தாலே அடிமையில் ருசி யுடையார்க்கு எல்லாம் உதாஹரண பூதமாய் இறே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்கள் இருப்பது-இவன் உடைய காஷ்டையை அருளிச் செய்கிறார் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மார்வாடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-

ஸ்தோத்ரம் -41- இதில் வாகன த்வஜாதி சர்வ வ்ருத்திகளையும் உடையவனாய் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு –
மோம் பழம்-மோந்து கொண்டு இருக்கிற பழம் -போலே
சதா விரும்பும்படி அபிமதனாய் இருக்கிற ஸ்ரீ பெரிய திருவடி யோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார்-
ஸூபர்னோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிர–தைத்ரியம் -வேதாத்மா விஹகேஸ்வர -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகி
விதானம் -மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை-

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41-

ஸ்தோத்ரம் -42-உபய விபூதி விஷயமான தன்னுடைய சர்வ பரத்தையும் இவன் பக்கலிலே வைத்து
இவன் இட்ட வழக்காய் இருக்கிற ஸ்ரீ சேநாபதி யாழ்வான் உடைய தாஸ்ய சாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார் –
ஐயராலே யாதொரு விண்ணப்பம் செய்யப் பட்டதோ அது அப்படியே -என்று பாசுரப் பரப்பற நியமித்து அருளுவது –
சேஷாசனர் –இதுவே நிரூபகம் ஸ்ரீ விஷ்வக் சேனர்-பர தத்வம் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளரும் –
விசேஷித்து இங்கு – ப்ரியேண் –

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–42-

ஸ்தோத்ரம் -43-சதா பஸ்யந்தி ஸூரய-இத்யாதிகளில் சொல்லுகிற நித்ய ஸூரிகளுடைய தாஸ்யைக சம்ருத்தியை அனுபவிக்கிறார் –
அடியார்கள் குழாம்களை –உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்று இறே இவர் பிரார்த்தனை-
யாதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் -அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் –
சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம்

ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்–43-

ஸ்தோத்ரம் -44-பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா அநு ஷூ ரம்ஸ்யதே – –என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டியை நாநா ரசங்களாலே உகப்பிக்கும் படியை அனுபவிக்க வேண்டும் என்கிறார்-
கீழே ஸ்ரீ பிராட்டியுடைய சேர்த்தி அழகை அனுபவித்து இதில் ஸ்ரீ பிராட்டியை உகப்பிக்கும் பரிசு –
சம ரசனாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார்

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் –44-

ஸ்தோத்ரம் -45-இப்படி ஸ்ரீ பிராட்டியை உகப்பிக்கிற ரச பாவங்களுக்கு ஆஸ்ரயமான வடிவையும் குணங்களையும் அனுசந்திக்கிறார்-
கீழே தனித் தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹ குணம் -திவ்யாத்ம குணம் -எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சகலவித ஜீவனம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –சாத்மிக்க போக ப்ரதன் –
அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம்

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸ்க மரத்தி கல்பகம்-45-

ஸ்தோத்ரம் -46-கீழ் சொன்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பூர்ணனாய் ஸ்ரீ நித்ய விபூதியிலே குறைவற எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ தேவரை
பாஹ்ய மநோ ரதங்களைத் தவிர்ந்து என்னுடைய சததையால் உள்ள பிரயோஜனம் பெறும்படி நித்ய கைங்கர்யத்திலே உகப்பிப்பது -என்று –
என்கிறார் –
சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் -ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி –

பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–46-

——————————

ஸ்தோத்ரம் -47-இதில் பிராப்யனான ஸ்ரீ ஈஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும் தம்முடைய பூர்வ வருத்தத்தையும் பார்த்து
விதி சிவா சநகாதிகள் உடைய மனஸ்ஸூக்கு அத்யந்த தூரமாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகள் ஆசைப்படுமதான
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை சம்சாரியானவன் ஆசைப்படுவாதாவது -என்-
ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று வளவேழுலகில்-1-5- ஸ்ரீ ஆழ்வாரைப் போலே தம்மை நிந்திக்கிறார் –

திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–

ஸ்தோத்ரம் -48-தம்முடைய அயோக்யதையை அனுசந்தித்து – அகலப் பார்த்தவர்
ருசியின் மிகுதியாலே அகல மாட்டாதே நிற்க இந்த அயோக்யதைக்குப் பரிஹாரமும்
நம் கிருபா ஜநிதமான பிரபத்தியே காணும் – என்ன மீண்டாராய்
இந்த அயோக்யதா ஹேது பூத சர்வ அபராதங்களுக்கும் பரிஹாரம் தன்னுடைய வெறுமையை முன்னிட்டுப்
பண்ணும் பிரபத்தியே யாகாதே -என்று வேதாந்திர ரஹச்யத்தை முன்னிட்டு
கேவல கிருபையாலே தேவர் என் பாபத்தைப் போக்கி விஷயீ கரிக்க வேணும் -என்கிறார் –
அதவா
தாம் பிரார்த்தித்த போதே ப்ராப்யம் சித்தி யாமையாலே சம்சாரியான நாம் ஆசைப்படக் கடவோமோ -என்று
நிந்தித்துக் கொண்டு – பின்பும் ருசியாலே அகல மாட்டாதே இப்படி விளம்பிக்கைக்கு ஹேதுவான பாபத்தையும்
தேவர் உடைய கேவல கிருபையாலே போக்கித் தந்து அருள வேணும் -என்கிறார் ஆகவுமாம் –
அத்தலையில் பெருமையின் எல்லையைப் பார்த்து அன்றோ அகன்றார் அங்கு
இங்கு நீர்மையின் எல்லையைப் பார்த்து கிட்டுகிறார் –
இங்கே விசேஷணங்களை மாத்திரம் அருளிச் செய்து -விசேஷயமான தம்மை மாம் -என்று கூட சொல்லிக் கொள்ள
திரு உள்ளம் இல்லாமல் -கீழ் அனுசந்தித்த நைச்ய பாவம் தொடர்கிறது-
பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் –

அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம்ப வார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–48–

ஸ்தோத்ரம் -49-அபராத பஹூளமான பின்பு சாஸ்த்ரீயமான உபாயாந்தரங்களைப் பற்றி போக்குதல்
விட்டுப் பற்றுதல் -செய்கை ஒழிய கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று நம்மை நிர்பந்திக்கிறது என் -என்ன
சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு ஜ்ஞானமே இல்லை வேறு கதி இல்லாமையாலே விட மாட்டேன்
ஆனபின்பு கிருபா கார்யமான விசேஷ கடாஷமே எனக்கு உஜ்ஜீவன சாதனம் -என்கிறார் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49-

ஸ்தோத்ரம் -50-ஸ்ரீ தேவர் கிருபையால் அல்லது வேறு எனக்கு இல்லாதவோ பாதி ஸ்ரீ தேவர் கிருபைக்கு நான் அல்லது விஷயம் இல்லை –
இத்தை இழவாதே கொள்ளீர் – என்கிறார்-
கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது -இழக்காதே -என்று
சமத்காரமாக அருளிச் செய்கிறார்

ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-

ஸ்தோத்ரம் -51-இப்படி தய நீயத யாவான்களான இருவர்க்கும் முக்யமான இஸ் சம்பந்தம் தானும்
ஸ்ரீ தேவரீர் உடைய கிருபையாலே யாயிற்று-ஆனபின்பு -இதைக் கை விடாதே ரஷித்து அருள வேணும் என்கிறார்-
விதி -ஸூஹ்ருத விசேஷம் -பகவத் கிருபையே -உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே-

தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்
மத் ருதே தவம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-

ஸ்தோத்ரம் -52-இதில் ஆத்ம அநு ரூபமாக வன்றோ நம்முடைய ரஷணம் இருப்பது –
தய நீயரான உம்முடைய ஸ்வ ரூபத்தை நிஷ்கர்ஷித்து நம் பக்கலிலே சமர்ப்பியும் -என்ன
சிறப்பில் வீடு -2-9-5- என்கிற பாட்டின் படி எனக்கு அதில் நிர்ப்பந்தம் இல்லை
அஹம் புத்தி போத்யமான இவ்வஸ்து தேவர் திருவடிகளிலே என்னாலே சமர்ப்பிதம் – என்கிறார் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

ஸ்தோத்ரம் -53-இவரை பிரமத்தோடே விடுகிறது என் -என்று பார்த்து அருளி –நீர் ஆர் –அத்தை ஆருக்கு சமர்ப்பித்தீர் -என்ன
நிரூபித்த விடத்து எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்ம சமர்ப்பணமும் ஆத்ம அபஹாரத்தோ பாதி -என்று பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே ஆத்மாவை ஸ்ரீ ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது ஒழிய –
சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே -எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
-எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி ஸ்ரீ எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே அறிவு இழந்து இவ்வாத்மா
தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் -அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை
அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து -பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

ஸ்தோத்ரம் -54- ஆத்மா அபஹார பர்யாயமான ஆத்மா சமர்ப்பணத் தளவிலே நான் நில்லாமையாலே –
நிர்ஹே துக கிருபையால் இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி
இந்த கிருபையாலே ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –
ஸ்தான த்ரயம் ஆவது
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்
மத் பக்திம் லபதே பராம் -18-54-என்றும்
ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும் –
வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயமாக்காத படி இருக்கும் போக்யதை யுடைத்தான பக்தியை -என்றபடி –

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-

ஸ்தோத்ரம் -55 பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
ஸ்ரீ ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து
கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்து அவ்வளவிலும் பர்யவசியாதே
நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தாப் போலேயும்
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும் ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
அணைய ஊர புனைய–அடியும் பொடியும் பட-பர்வத பவனங்களில் ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -87-
தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று
ஸ்ரீ தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே
உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி -கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும்

தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-

ஸ்தோத்ரம் -56-ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தில் பிறக்கும் பிறப்பால் வந்த ஏற்றம் எல்லாம் வேணுமோ –
அவர்கள் கண்டால் உபேஷியாதே -நம்முடையவன் -என்று விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு
அர்ஹனாம் படி பண்ணி அருள வேணும் –என்கிறார் –

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ–56-

ஸ்தோத்ரம் -57-கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில் அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத் தந்து அருள வேணும் என்கிறார் –
அஜ்ஞர் பிரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்ய வ்ருத்தங்களை
கர்த்தப ஜென்மம் ஸ்வபசா தமம் சில்ப நைபுணம் பஸ்மாஹூதி சவ விதவா அலங்காரம்
என்று கழிப்பர்கள்-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -86-
கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலை தீர்வேனே போலே –
அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத் கிமபி தவ சேஷத் வவிப வாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸ்தாதா
விநாஸ்ம் தத் ஸ்த்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-

ஸ்லோகம் -58-நிக்ரஹ ஹேதுவான பகவத் அபசாராத்ய அஸூபங்கள் சஞ்சரிக்கிற சம்சாரத்திலே -கைங்கர்ய விரோதிகள் அசஹ்யமாம்படி –
அதிலே அருசி பிறந்து – அத்தைப் போக்கி தந்து அருள வேண்டும் என்று யோகிகளுக்கு துர்லபமான இதை அபேஷிப்பார் உண்டாவதே -என்ன
அவதி யில்லாத அஸூபங்களையும் போக்க வல்ல ஸ்ரீ தேவர் உடைய அபரிச்சின்ன குணங்களை நினைத்து இருந்து அபேஷிக்கிறேன் – என்கிறார்-
ந்ருபசு -மனுஷ்யனாக பிறந்தும் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான வரம்பை மீறி
ஆஹார நித்ராதிகளிலே நியதி இன்றி மனம் போன படியே திரியும் பசுபிராயர்-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நி ஹீ நா சாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸி நதோ ! பந்தோ ! நிரவதி கவாத்ஸ ல்யஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-

ஸ்தோத்ரம் -59-இச்சாம் -என்கிற இச்சை தான் சத்தியமோ -என்ன மந்த புத்தியான நான் விஷய அனுரூபமான இச்சை உண்டு
என்று திரு முன்பே விண்ணப்பம் செய்யப் போகாது – இச்சா ஸூ சகமான வசனத்தை அவலம்பித்து மெய்யாம்படி என்னுடைய
மனஸ்சை ஸிஷித்து அருள வேண்டும் – என்கிறார் –
கையார் சக்கரத்து எண் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு கார்யம் செய்ய வல்லவன் அன்றோ –

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-

ஸ்லோகம் -60-இச்சையும் இன்றிக்கே உக்தி மாதரத்தைக் கொண்டு இச்சையையும் உண்டாக்கி
ரஷித்து அருள வேண்டும் -என்கிறது என் என்ன அவர்ஜநீய சம்பந்தத்தைச் சொல்லுகிறார் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –

பிதா த்வம் மாதா த்வம் தயிதத ந யஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-

ஸ்தோத்ரம் -61- நீர் மஹா வம்ஸ ப்ரஸூதர் அல்லீரோ – நிராலம்பரைப் போலே இங்கன் சொல்லுகிறது -என் -என்ன
இவ்வம்ஸ்த்தில் பிறந்தேனே யாகிலும் பாப ப்ரசுரனாகையாலே சம்சாரத்தில் அழுந்தா நின்றேன்எடுத்து அருள வேண்டும் – என்கிறார் –

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூ சீ நாம் யுக்தா நாம் குணா புருஷ தத்தத் வஸ்தி திவிதாம்
நி ஸ்ரக்கா தேவ தவச் சரண கமலை காந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸ்ரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஸ்தோத்ரம் -62-இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன
கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் -நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் –

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

ஸ்தோத்ரம் -63-புத்தி பூர்வேண பண்ணின ப்ராதி கூல்யங்களைப் போக்கப் போமோ -என்ன
காகாபராதத்தையும் ஸிஸூபாலாப ராதத்தையும் பொறுத்து அருளின ஸ்ரீ தேவருக்குப் பொறுக்க முடியாதது உண்டோ – என்கிறார் –
காகாசுரன் ஒரு ஜன்மாவில் பண்ணின அபசாரம் -சிசுபாலனோ மூன்று ஜன்மாக்களில் அபராதம் –இருந்தாலும் க்ஷமித்து
சாயுஜ்யம் அளித்தாயே-சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7–5–3-

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஸ்தோத்ரம் -64-ஸ்வ தந்த்ரரான நாம் சிலர் திறத்தில் ஒன்றைச் செய்தோம் -என்னா-இதுவே மரியாதையாகக் கடவதோ -என்ன
கடல் கரையிலே ஆஸ்ரித சாமான்யத்திலே ஸ்ரீ தேவர் பண்ணின பிரதிஜ்ஞை என்னை ஒருவனை ஒழியவோ என்கிறார் –
ஸ்ரீ தேவர் சத்ய சங்கல்பராகையால் என்னை ரஷித்து அருள வேணும் -என்கை –

நநு பிரபன்னஸ் ஸ்க்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

ஸ்தோத்ரம் -65-ராமோ தவிர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்-ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி – என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே விஷயீ கரிக்க வேணும் -என்ன
அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே அப்படிச் செய்கிறோம் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அனுமதி பண்ண
தாம் அனுமதி பெற்றாராய் ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம தவச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாதமவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

—————–

யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: