Archive for July, 2019

ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் ஸ்ரீ பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே –
நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் ஸ்ரீ பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெறாத காரணத்தால்
நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள்,
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெற்றமையால் களிக்கும்
நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.
‘திண்ணன’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.
இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்?
ஸ்ரீ பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.

——————–

நிகமத்தில் – ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஸ்ரீ ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’ என்கிறார்

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-

இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது -அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை-
ஸ்ரீ பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும்,
ஸ்ரீ பர தேவதை பக்கல் -ஸ்ரீ இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -ஸ்ரீ இறைவன் என்று எண்ணாமையும்.
இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

————————-

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள்,-
ஸ்ரீ பகவத் ஏக போகராய் இருப்பார் – என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

அவன் பக்கலிலே நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்;
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க,
இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க,
‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க,
அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன;
ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்?
ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

——————-

நிகமத்தில்-‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே
ஸ்ரீ நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே,
‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11-

இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு
அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம்.
‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை
இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா;
தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும்
இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன;
பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று,
இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

————–

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில்,
அவர் ஸ்ரீ பரமபதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11-

‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது
‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.
‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின்
தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்குமத்தனையன்றோ?
அது போன்று, இங்கும் ஸ்ரீ ஆழ்வார் பட்ட வியசனம் படவேண்டா;
இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்;
அவர்களுக்குக் குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள்-அப்ரயோஜம் – பிரயோஜனம் அற்றவைகள்;
இவ்வாகாரத்தாலே -இத்தன்மையாலே அவர்கள்-பகவதீயர் –ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்,’ என்கிறார்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

இதில் அபிநிவேசத்தால் -ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள்.
பண்ணாவது, கானம். / இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை.
‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி.
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் ஸ்ரீ பகவதீயர் -ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

—————–

நிகமத்தில் -‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத் திருவாய்மொழி தானே ஸ்ரீ எம்பெருமான்
திருவடிகளில் சேர்த்து விடும்,’ என்கிறார்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-

ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்;
‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே ஸ்ரீ கேசவன் தமராக்கிவிடும்,‘ என்பதாம்.

———————-

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள்
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார் -இனிமையான உயர்ந்த வீடு –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து –
வீற்று இருந்து -பார்த்தாலே அனுபவம் மிக்கு இருப்பது தோன்றுமே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார் –
ஸ்ரீ ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –

——————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியை அப்யஸிக்க வல்லவர்
இதில் சொன்ன ப்ராப்யத்தைப் பெறுவர்,‘ என்கிறார்.

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-

ஆயிரத்துள் இப்பத்தும்.‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, –
ஸ்ரத்தாநராய் இருப்பார்க்கு -நம்பிக்கை யுடையவர்க்குக்-
அநர்த்த கந்த ரஹிதமாய்- கேட்டின் வாசனையும் இல்லாததாய்- அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே,
‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்மாவினுடைய
ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

——————-

நிகமத்தில்‘இத்திருவாய் மொழி கற்றாரை, இத் திருவாய் மொழி தானே –
ஜென்மத்தை -பிறப்பினைப் போக்கி ஸ்ரீ அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில்,அருளை யுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும்.
அருளைக் கொண்டே ஸ்ரீ பரம்பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.
ஒரு ஞானலாபத்தைப் பண்ணித் தந்துவிடுதலே அன்றி,
அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 29, 2019

இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-

இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன.
இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று,
‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக,
ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே தமக்குப் பரத்வ ஞானம் பிறந்தபடியையும்,
அந்த ஞானத்துக்குப் பலம் மோக்ஷம் என்னுமிடத்தையும்,
இப் பதிகத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்குப் பலம் தம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்தார்-

————–

முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் –

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்து, சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;
அன்றிக்கே ,
சேதனர்க்கு-ஹித தமமாய் – மிக்க நன்மையை அளிக்க வல்லது ஒன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது எனலுமாம்.
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர் -அநுஸந்தி -என்றவாறு
உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால்,
‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் –
கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

————-

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட ஸ்ரீ நித்திய சூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

இவற்றைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ நித்திய சூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த்
தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்.
‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின்,
இப் பத்தைக் கற்ற போதே இவனை ஸ்ரீ நித்திய சூரிகளில் ஒருவனாக நினைப்பன்;
பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை.
அதாவது, சிறையிலே இராஜ குமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று,
ஸ்ரீ நித்திய சூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி.
‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது;
அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று,
இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.

இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு,
ஸ்ரீ ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் -நீங்கப் பெறுவர்,’ என்று கூறலுமாம்.
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீ கீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

——————-

நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-

பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்.
அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால்,
சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –
விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.

———————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

கடலிலே முத்துப் பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே
பொருந்தி இருக்கிற இத் திருவாய்மொழியை வல்லார்க்கு.
‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, ஸ்ரீ இறைவன்-சம்ஸ்லேஷ உன்முகன் ஆனவாறே –
வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

————————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர் -அப்யஸிக்க வல்லார்கள் –
சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார்.
பிறக்கை சுட்டி அன்றே
மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –
இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப்
ஸ்ரீ பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்
ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-

———————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி தானே இதனைக் கற்றவர்களுடைய -பிராப்தி பிரதிபந்தகங்களை –
பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும், என்கிறார்-

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்களுக்குச் செல்வமும் கைவல்யமும் -புருஷார்த்தம் –
உறுதிப்பொருள் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப் போம்.
உடைந்து ஓடுவிக்கும்–இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல்,
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி)
தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும் என்பார்,
‘உடைந்த ஓடுவிக்கும், என்கின்றார் எனலுமாம்.

——————

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழிகளிலும் அவனுடைய
ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ என்கிறார்.

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு ஓர்ந்து அருளிச் செய்யப் பட்டவை.
அதாவது, சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி
அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.
இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

———————–

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொருமே-
தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே
செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
ஸ்ரீ எம்பிரான் என்றது –இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இலவு மறக்கவும் அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –
உச்சியுள்ளே பெரும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –

————————-

நிகமத்தில் , ‘இப் பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத
புருஷார்த்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-

அபிப்பிராயத்தோடு கற்பாராகில். தணிவு – முயற்சி அற்று இருத்தல்;
அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் என்றபடி.
‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே,
ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக் கற்க,
இதற்குப் பலமாகத் தொண்டினை இது தானே தரும்.
இனி, இதற்குக் கல்வி தானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்–பிரவேசங்களின் -தொகுப்பு–

July 29, 2019

பத்தாம் பத்து -முதல் திருவாய் மொழி -தாள தாமரை -பிரவேசம் –

முதல் பத்தால் -ஸ்ரீ பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமான ஸ்ரீ பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்த பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட பொருள்களிலும்
நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் ஸ்ரீ நாராயணன் – எல்லா ஆற்றலோடும் கூடினவன் உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்

ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு
ஸ்ரீ திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி கதியையும் காட்டி
இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -9-8-4- என்றார்
மரணம் ஆனால் -9-10-5-என்று அறுதி இட்டுக் கொடுத்தான் இறைவன் –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்
அது பெற்றதாய் மேலே நடக்கலாம் படியாய் இருக்கும் அன்றோ கார்யம் –
ஆகையாலே கால அவதி- பெறக் கூடிய கார்யத்தைப் பெற்றாராய் போக்கிலே ஒருப்பட்டார்
போமிடத்தில் முகம் பழகின தேஹத்தையும் விட்டு-பலகாலம் பழகின பந்துக்களையும் விட்டு
தனியேயாய்ச் செல்ல வேண்டியதாலும் போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலம் ஆதலானும்
அதுவும் நெடும் கை நீட்டு ஆதலானும் வழியிலே பிரதிபந்தகங்கள் -தடைகள் பலவாய் இருத்தலானும் –
அதாவது
அவித்யா -அறிவின்மை /கர்மம் /வாசனை / ருசி என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்த படி
இவற்றை அடையப் போக்க வேண்டுமாதாலானும் வழிக்கு துணையாக கொண்டு போம் போது
ஸ்ரீ சர்வேஸ்வரனையே பற்ற வேண்டும்

அஃது ஏன்
இவன் தானே தனக்கு துணை ஆனாலோ -எனின்
இன்று அளவும் வர பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்கு
காரியம் பார்த்து போந்தவன் அன்றோ இவன் –
இச் சரீரத்தோடு இருக்கிற நாளிலே ஹித சிந்தை -நலத்தைச் செய்ய நினைத்தானே யாகிலும் -அதாவது
சரணாகதி செய்ய -நினைத்தானே யாகிலும் –
இவனுடைய பூர்வ விருத்தத்தை -முன் நிலையைப் பார்த்தால் இவன் தான் தனக்கு துணையாக மாட்டானே –
வழியிலே கொடு போம் இடத்தில் இவனுக்கு வரும் தடைகளை அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேண்டும்
அறிந்தால் அவற்றைக் கொடு போகைக்கு-சர்வசக்தன் ஆக வேண்டும்
யா சர்வஞ்ஞ சர்வவித்- முண்டக உபநிஷத்
எவன் யாவற்றையும் பொதுப்பட அறிந்தவன் -தனித் தனி அறிந்தவன் -என்பன போன்ற பிரமாணங்களால்
ஸ்ரீ சர்வேஸ்வரனே சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்னா நின்றதே அன்றோ –

எல்லாம் வல்லவனாய் இருந்தானே யாகிலும் -பிராப்தம் -சம்பந்தம் உள்ளவனாய்
இராத போது பயன் இல்லையே
மாதா பிதா பிராதா நிவாச சரணம் ஸூ க்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் –
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் பாதுகாப்பவனும் ஸ்நேஹிதனும் பேறும்
ஆகிய இவை எல்லாம் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே இருக்கிறான் -என்பன போன்றவைகளால்
அவனே எல்லா வித உறவினனாக சொல்லா நின்றது இறே
எம்மானும் எம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததின் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற -பெரிய திருமொழி -7-2-3-என்கிறபடியே
ராகாந்தராய் -ஆசையாலே அறிவற்றவர்களாய் குழந்தையைப் பெற்று-யவ்வன –
இளமைக்கு விரோதி -என்று பொகட்டு போமவர்கள்
இவன் தான் பழகிப் போந்த முகத்தாலே -அம்மே -என்ற போதாக
பெண் குரலாலே -ஏன் -என்றும்
அப்பா -என்ற போதாக ஆண் குரலிலே ஏன் என்றும்
இப்படி முகம் கொடுத்துக் கொண்டு போகக் கடவனாய் இருக்குமவன் அன்றோ -அவன் –

சரீரமானது கட்டுக் குலைந்து ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புகும் அளவும் செல்ல நடுவிலே உண்டாகும்
தடைகளை போக்கிக் கொடு போகைக்கு ஈடான விரகு அறியுமவனாக வேண்டும்
விரோதிகளை இரு துண்டமாக இட்டுக் கொடு போக வல்ல ஆற்றல் உடையவனாக வேண்டும்
அசுரரைத் தகர்க்கும் துணிக்கும் வல்லரட்டன் –
தான் தனக்கு தஞ்சம் அல்லாத அன்று இவன் தனக்கு தஞ்சம் என்று
தன்னை இவன் கையில் காட்டிக் கொடுக்கும்படி ஆப்தனாக -நம்பத் தகுந்தவனாக வேண்டும்

ஸ்ரீ சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்கிறபடியே தானே பிரமாணங்களால் பிரசித்தம் ஆக்கப் பட்டவன்
தஞ்சமாகிய தந்தை தாயோடுதானுமாய் -திருவாய்மொழி -9-6-2-என்று இவர் தாமே தஞ்சம் என்றாரே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று -தயாவான் -பேர் அருளினன் என்னும் இடம் தாமே கைக் கொண்டார்
இனி சேஷியாய் இருக்கையாலே தானே ப்ராப்தனாய் -சம்பந்தம் உள்ளவனாய் இருக்குமன்றோ –

ஆக –
நம் விரோதிகளைப் போக்கி ஸ்ரீ பரம பத்து அளவும் கொண்டு போய்
வழி நடத்துவான் ஸ்ரீ காளமேகம் -என்று அத்யாவசித்து -அறுதி இட்டு
அரு நிலங்களிலே -செல்லுதற்கு அரிய – வழிப்போவார்
அகப்படை -என்று அந்தரங்கமான சேனை -என்று
மிடுக்கராய் இருப்பாரைக் கூட்டிக் கொண்டு தம் கைப் பொருளை அவர்கள் கையிலே கொடுத்து
அமர்ந்த நிலத்திலே சென்றவாறே வாங்கிக் கொள்ளுவாரைப் போலே-சரீர விஸ்லேஷ சமயத்திலே –
உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலத்திலேயே
ஸ்ரீ காள மேகத்தின் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தை -ஆத்மாவை அடைக்கலம் செய்து
ஸ்ரீ பரம பதத்திலே புக்கால் பின்னர் நமக்கு ஆக்கிக் கொள்ளக் கடவோம் -என்று
வழித் துணையாகப் பற்றுகிறார்-

இஸ் ஸ்வ பாவங்கள் -இந்தத் தன்மைகள் ஒன்றுமே இல்லை யாகிலும்
அவன் முன்னே போக பின்னே போகா நின்றால்
தோளும் நான்குடைச் சுரி குழல் –
அவனுடைய வடிவு அழகினை அனுபவித்துக் கொண்டு
போமதுவே பிரயோஜனமாக போரும்படி ஆயிற்று இருப்பது –

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்றும்
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே – என்கிறபடியே எதிரிகள் கூசிப் போம்படி
மதிப்பனாய் -பெருமிதம் உடையவனாய் இருப்பான் ஒருவனைப் பற்ற வேண்டும் அன்றோ –
ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாசஹச்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மதுசூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்ய ந்ருனாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-17-13-
யமன் கையில் பாசத்தை தரித்த தன் வேலையாளைப் பார்த்து
பகவானை அடைந்தவர்களை விட்டு விடுங்கோள் நான் எனையோர்க்கே தலைவன்
ஸ்ரீ விஷ்ணு பக்தர்களுக்கு தலைவன் அல்லன் என்று அவர்கள் உடைய காதிலே சொன்னான்
என்கிறபடியே அவனும் சொல்லி வைத்தான் அன்றோ –

—————————-

பத்தாம் பத்து -இரண்டாம் திருவாய் மொழி -கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-ஸ்ரீ பெரிய திரு மொழியிலே
பல ஸ்ரீ திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் – என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள் பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-ப்ராப்ய பூமி – அடையத் தக்க ஸ்ரீ பரம பதம் அணித்தானவாறே
ஸ்ரீ திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –

பண்டை நாளாலே தொடங்கி இவரும்-ஸ்ரீ திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே புகுவது
ஸ்ரீ திரு காட் கரையிலே புகுவது
ஸ்ரீ திரு மூழிக் களத்திலே புகுவது
ஸ்ரீ திரு நாவாயிலே புகுவது
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே புகுவது
ஸ்ரீ திரு மோகூரிலே புகுவது
ஸ்ரீ திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –

அடையத் தக்க ஸ்ரீ பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு ஸ்ரீ காள மேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே-நமக்கு – உள்ள ஸ்ரீ திரு வநந்த புரமே அடையத் தக்க ஸ்ரீ பரம பதமாக இருக்க
என்று ஸ்ரீ திரு வநந்த புரத்தை ஸ்ரீ பரம பதமாக அறுதி இட்டார் -ப்ராப்யமாக அத்யவசித்தார் -–
அங்கனம் அறுதி இட்டு-அந் நகரமாகிற இது தான்
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி நிரதிசய போக்யமாய் -எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
ஸ்ரீ நித்ய ஸூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்
அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே
அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –

ஸ்ரீ உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே ஸ்ரீ பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்
மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
ஸூலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –
உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்-பூர்ணமாய்-ப்ராப்ய பூமியில்
ஸ்ரீ பரம பதத்துக்கு கொடு போம் இடத்தில் ஸ்ரீ ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
பிரதிபந்தகங்களை -வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கிக் கொடு போகைக்கும்
முற்பாடானாகைக்கும் உடலாய் –சம்சார பந்தம் அற்று –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-விரோதி –
இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்-காதாசித்கமாக –
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ
ஆகையால் -கூடும் என்க –

ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
விரோதியும் கிடக்கச் செய்தே -இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே
ஸ்ரீ திருவனந்த புரமே -அடையத் தக்க -பரம ப்ராப்யம் -மேலான ஸ்ரீ பரமபதம் -என்று
அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் -அனுகூல ஜனங்கள் அடைய -எல்லாரும்
அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்

இதுதான்
அல்லாத -மற்ற ஸ்ரீ திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும் ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான
நினைவின் விசேஷங்கள்-அனுசந்தானங்கள் – ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை இறே

———————

பத்தாம் பத்து -மூன்றாம் திருவாய் மொழி -வேய் மரு தோள் -பிரவேசம் –

ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே –
அதி சங்கை -ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்–திருவிருத்தம் -95–என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –

அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்
பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்
பல காலம் பிரிந்து போன வாசனையாலும்
அநாதியாய் -தொன்று தொட்டு வருகின்ற அசித் சம்சர்க்கத்தை – -சரீரத்தின் சேர்க்கையை
அனுசந்தித்து -நினைந்து அஞ்சின அச்சத்தாலும்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்
ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ
ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
இனி
ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் ப்ரக்ருதியில் -இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்
அச்சத்தாலே அவசன்னராய் -துன்புற்றவராய்
தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை -நிலை வேறுபாட்டினை
ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது
இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே
அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற ஸ்ரீ திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து எதேனுமாக சொன்னவற்றையே
தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன் என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ
முடிவில் வந்து எதிர் இட்டான்

ஆக-பிராந்தனுக்கு – மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-அசித் ஸம்ஸ்ருஷ்டனுக்கு –
இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் ப்ரக்ருதி சம்பந்தத்தை -இச் சரீர சம்பந்தத்தை நினைந்து
தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –
அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா
எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கிறேன் நீ துக்கப் படாதே -என்கிறபடியே –
பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
இனி –
ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை ஸ்மரியாதபடியான -நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –

ப்ரத்யக்ஷமும் நேரே கண் கூடாக காண்கிற காட்சியும் அகிஞ்சித்கரமாய் -பயன் இல்லாததாய்
கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ
யோக்யதை -தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ
மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே
ஸ்ரீ பகவானுடைய பிரசாத லப்தமாய் -திருவருளால் கிடைத்ததாய்
பரபக்தி ரூபமாய்
ருசி கார்யமாய்
இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஸ்ரீ ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்
இவரை வைத்து பரிஹரிக்கலாம் -அதனைப் போக்கலாம் அத்தனை –

கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டியாய்-அவ் வாசனையாலே
ஸ்ரீ கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த ப்ரபாத -விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த
காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்
மயில்கள் ஆலிக்கையாலும்
காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்
இக் காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆன பின்பு அவன் போனான் -என்று
கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து

இன்னுயிர் சேவல்
மல்லிகை கமழ் தென்றல்
தொடக்கமான ஸ்ரீ திருவாய் மொழிகளில்
அவன் அசந்நிதியில் -முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்
எல்லா வற்றையும் செய்து -சர்வ சக்தனான -முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து
அதாவது
போனானாய் வருகிறவன் அல்லன்
போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு
நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்
நீ போதல் எனக்கு அநபிமதம் -விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை-உன்னுடைய போக்கை –
விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்
இதற்கு நா நீர் வருகிறது இல்லை-அதற்கு பரிஹாரமாக -மாற்றாக
உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –
அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்
வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
ச பிரமாதமான -தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள
அசுரர் ராக்ஷஸர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் – என்று அஞ்சா நின்றேன் – என்கிறாள் –

இனி
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –

யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச
பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் ஸ்ரீ சக்ரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய
இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆன பின்பு-நீ செல்லில் போகில் -நான் உளளாக மாட்டேன் -என்று இப்படி நோவுபட
அவனும் இவை முழுதினையும் அனுசந்தித்து -நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க
தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு – தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்

இதனால்
ஸ்ரீ திரு மந்த்ரத்தில் கூறிய – தாதார்த்யத்தின் அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை
எம்மா வீடு -ஸ்ரீ திருவாய் மொழியில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று நிஷ்கர்ஷித்தது -அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –
என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று
என்னோடு கலக்கவுமாம்
வேறு சிலரோடு கலக்கவுமாம் –
அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு
அது தனில் எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
அது அசித் வ்யாவ்ருத்திக்காக -அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது
அவன் தான் விரும்பி ப்ரவர்த்திப்பதுவும் -கார்யத்தை செய்யவும் தொடங்கான்

———————

பத்தாம் பத்து -நான்காம் திருவாய் மொழி -சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே -அதி சங்கையாலே -இருந்த ஐயத்தாலே பிரிந்தார் படும் வியஸனத்தை –
துன்பத்தினைப் பட்டு – அதனாலே அவசன்னரானவரை -மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய-செங்கனி வாய் -அதனாலே
தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் கீழ் –

முதல் திருவாய் மொழியிலே தத்வ பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே ப்ராப்யமாய் -அடையக் கூடியதாய் இருக்கும் அன்றோ –
அந்த ப்ராப்ய வேஷம் -அடையைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-
பிராப்தி – அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –
அப் ப்ராப்யம் -அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்
நெடு நாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்-வெருவி இவர் அவசன்னராக -துன்பம் உற்றவராக
இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து
அவனும் ஆஸ்வசிப்பிக்க –தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-

ஆக முதல் திருவாய் மொழியிலே தத்வ -பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி
அவ் வஸ்து -அப்பறம் பொருள் தானே ப்ராப்யமாய் -அடையக் கூடிய பேறாக இருக்கையாலே
அப் பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் ஸூலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -என்கிற திருவாய் மொழியாலே சொல்லி

ஆக
வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது -ஸ்வ சாத்யத்தோடே -அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வர்த்தகமாக்க -வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை பரமர்சியா நின்று –
ஆதரித்துக் கொண்டு -உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை -கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை -காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை -திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக
முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-

இவ் விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட -ஸூசகமான -சொல் உண்டோ என்னில்-
அருளினன் -என்றாரே அன்றோ –அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற -விஹிதமான -பக்தி அன்று
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தொடு கூடாதோ என்னில் –
அது இவரோடு உக்திகளோடே -பாசுரங்களோடு விரோதிக்கும் -முரண்படும்

அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி- ஆத்ம சித்தி
கர்ம ஞானங்கள் இரண்டாலும் சம்ஸ்க்ருத -தூய்மை செய்யப் பட்ட-அந்தக்கரணம் –
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து -ஸ்த்தானே பகவத் ப்ரசாதமாய் -ஸ்ரீ இறைவனுடைய திருவருள் நிற்க
அதற்குப் பின் உண்டான-அநந்தரமான – பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –

இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே- பேறாக நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்ய காரரும் பிரபத்தியைப் பண்ணி
பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
அவன் உபாயம் ஆனாலும் இவனுக்கு ருசி உண்டாய் ப்ராப்ய சித்தி -பேற்றினைப் பெற வேண்டுமே
இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
ப்ராப்யம் -பெறுகிற பேறு இன்னது என்று நிஷ்கர்ஷித்து -அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற
உடையவனுக்கு அன்றோ ப்ராபகன் -அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் விகல்பிக்கலாம் -மாறாடலாம் படி அன்றோ இருப்பன –

ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்
பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –
இது தான் ஸ்வ சாத்யத்தோடே -பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –

நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-
பிராப்தி –ஸ்ரீ இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –சாஷாத் கார ரூபமான அனுசந்தானம் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற
மனத்தின் அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
ஸ்ரீ சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே
குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
குண விசிஷ்டமான -அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக உபாசன -வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க-

ஆனால் கீழில் எல்லாம் -இந்த ப்ராப்ய அனுசந்தானமே – கண் கூடாக காணுதலைப் போன்று
மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-
சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி பிறந்தன சில ரச விசேஷங்களை சொன்ன இத்தனையேயாம்
அவ்விடங்களில் உபக்ரமித்த – தொடங்கின பொருளை உபசம்ஹரிக்கை -முடிக்கை என்பதும் ஓன்று உண்டே
அதனைச் சொல்லுகிறது இங்கே
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –

மேலே அருளியவை ஸ்ரீ எம்பெருமானார் நிர்வாகம் –

இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்
ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற ஸூலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம்
நிச்சிதம் -உறுதி -என்கிறாள் என்று ஒரு உருவிலே பணிப்பர் ஸ்ரீ பிள்ளான் –

இனி ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே ப்ராப்யத்தை -பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்
அந்த ப்ராப்யத்துக்கு பிராபகமாக -பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும்
இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது
பிரபத்தி சர்வாதிகாரம் -எல்லாராலும் செய்யத் தக்கது
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய பக்தியை -பத்துடை அடியவர்க்கு -திருவாய் மொழியில் அருளிச் செய்தார்

ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு
பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி –
கண்ணன் கழலிணை –
என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –

அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்
பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –
தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்
தவங்களில் மிக்க தவமாக சொல்லிடறே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே
கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச -என்ற
அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
ரஹஸ்ய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்

ஆக
முதல் திருவாய் மொழியில் சொன்ன ப்ராப்ய -பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்
ப்ராப்ய பலமான -அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று
அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது
த்வய மகா மந்த்ரத்தில் உத்தர -பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -என்னும் திருவாய் மொழியாலும்
வேய் மரு தோளிணை -என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் சொன்ன பொருளை நிகமித்து -முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்
கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியாலும்
பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியாலும்
சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்பது-

—————–

பத்தாம் பத்து -ஐந்தாம் திருவாய் மொழி -கண்ணன் கழலினை -பிரவேசம் –

பக்தியானது ஸ்வ சாத்யத்தோடே -தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் கீழ் –
அத் துணை க்ரமம் -முறையைப் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீ ஈஸ்வரன் தன்னைக் கொடு போகையிலே-த்வரிக்கிற
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது
அவனுக்கு நெடு -பல நாள்களாய் அத்தனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில்
த்வரிக்க -விரைகிற படியைக் கண்டு -என்றபடி-அத்தை அனுசந்தித்து –
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு
பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும் அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே
அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்
இவர் தாம் ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –

இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக த்வரிக்கிற -விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் பிரதிபதிக்கு விஷயம் -அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்
பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு

அந்த பக்திக்கு – -ஆலம்பமான -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு அனுசந்திக்கப்படும் -நினைக்க தகும் மந்த்ரம் -ஸ்ரீ நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய அர்த்த அனுசந்தானமே -பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ் வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக் கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –
இப்படிப் பற்றுவார்க்கு ஆஸ்ரயிப்பார்க்கு -அவன் -மேயான் வேங்கடம் – ஸூலபன் என்றும் –
ஸ்ரீ மாதவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஸூவாராதன் -ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –
ஸ்ரீ மாதவன் என்று என்று -இவனை இடுவித்து ஆஸ்ரயிப்பித்து -பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -ஆஸ்ரயிக்கும் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு
சொன்ன முறைகள் -சம்பத்தி -வேண்டா-ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள் என்றும்
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்
இப் புடைகளிலே சொல்லி

நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று உபதேசித்து
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-
வீடு முன் முற்றவும் -ஸ்ரீ திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு ஸூ பாஸ்ரயமான- பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

———————–

பத்தாம் பத்து -ஆறாம் திருவாய் மொழி – அருள் பெறுவார் -பிரவேசம் –

பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ ஆழ்வார் பின்தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –

கண்ணன் கழலிணையில் -இப்படி பக்தியின் ஸ்வரூபத்தை -தன்மையை உபதேசித்து கை ஒழிந்த அநந்தரம் –
பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு
இவர்க்கு முன்பே விடாய்த்து ஸ்ரீ திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து நிற்கிறவன் ஆகையாலே
இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –

சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு ஷணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம் உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-

ஸ்ரீ ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து அது செய்யும் இடத்தில்
அனுபவத்துக்கு ஒரு விச்சேதம் -பிரிவு வாராதபடி ஏகாந்தமாய் -தன்னந்தனியே இருப்பது
ஒரு ஸ்ரீ தேச விசேஷத்திலே கொடு போய் வைத்து அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து
அங்கனம் செய்யும் இடத்தில்
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் நியமித்தபடி -ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்
ஸ்ரீ சர்வேஸ்வரனை தாம் நியமிக்க -ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே
இப்படி தம் பக்கலிலே அபிநிவேச அதிசயத்தை -மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து
இதற்கு உசாத் துணையாக
சம்சாரிகளை -இவ் உலக மக்களை பார்த்த இடத்து
அவர்கள் சப்தாதி விஷயங்களில் அந்ய பரராய் -ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய்
அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்
அவனைப் பார்த்த இடத்தில் அபிநிவேச அதிசயத்தை -மிக்க காதலை உடையவனாய்
முன்னடி தோற்றாதே இருக்கிறவன்
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து
அவனுடைய மேன்மை இருந்த படியும்
அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –

இதற்கு முன்பெல்லாம்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகிறான் சர்வ நியாந்தாவாய் -எல்லாரையும் ஏவுகின்றவனாய்ச்
ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன் என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
ஆஸ்ரித -அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய ஸ்வரூபம் -தன்மை என்கிறார்

முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்
அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –
அடியார் தம் அடியனேன் -என்று ஹேதுவோடே -காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –என்றவாறு –

———————-

பத்தாம் பத்து -ஏழாம் திருவாய் மொழி -செஞ்சொல் -பிரவேசம் –

விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில் பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே
அவன் செய்கிற அபிநிவேசத்தை -காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்ய புத்த்யா -கார்யத்துக்காக என்று இருந்தோம்
அதாவது இப் பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய் இருந்தான்
கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-ஆனு ஷங்கிக பலமாய் வந்தது இத்தனை –
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –

நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் ஆதரத்தால் -காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய அபேக்ஷிதம் -விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய அபிநிவேசம் -காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-

இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு
இவனுடைய அபிநிவேசம் -காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது
அப்படிச் செய்யும் போது இஸ் சம்சாரம் -இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை
இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-

பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்
மும் முறை விரும்புவதும் மும் முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-என்னிடத்தில் செலுத்தும் அபிநிவேசம் -காதல் பெருக்கே அன்றோ
நான் இதனை விரும்பவில்லை-எனக்கு இது அநபிமதம் –
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய உத்தேசியத்தை -விருப்பத்தை விடாதவாறு-நம் உத்தேசியத்தை -விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்

இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் தோஷ தர்சனம் -இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தோஷ தர்சனம் பண்ணுவிப்போம் -தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -உபசயாத்மகமாய் -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல்களை உடையதாய் –
ஹேயமாய் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஏக ரூபமாய் -ஒரே தன்மையதாய்-விலக்ஷணமாய் –
வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை உபேக்ஷித்து -வெறுத்து அருள வேண்டும் -என்றார்
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
அபிமத விஷயத்தில் -மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன்
விட மாட்டாதவனாய் இருந்தான் –

இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால் கட்டினை அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும் என்று சரணம் புக்கார் –
பிரார்தனா மதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென் மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு உபேஷா விஷயமான பின்பு -நாமும் இதனை வருந்தியாவது
உபேக்ஷிப்போம்- வெறுப்போம் -என்று பார்த்தான் –-இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவனாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –

ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -ஸ்ரீ திருவாய் மொழியிலே தொடங்கின பாரதந்த்ர்யத்தை நிகமித்து முடித்து
சர்வ நியாந்தாவாய் -எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-
சர்வாதிகனான – எல்லா பொருள்களுக்கும் தலைவனான -ஸ்ரீ சர்வேஸ்வரன்
தனக்கு இவ் உடம்பில் அபேக்ஷையும் -விருப்பம் செல்லா நிற்கச் செய்தே
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –
என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள் இழிந்து நான் பட்டதுவே அமையும்
என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே -மிகுந்த பிரீதியாலே
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————–

பத்தாம் பத்து -எட்டாம் திருவாய் மொழி திருமால் இரும் சோலை -பிரவேசம் –

அருள் பெறுவார் -என்கிற ஸ்ரீ திருவாய் மொழியிலே
தம்மைக் குறித்து ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்
சிலரை ஸ்ரீ ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்
சிலரை ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
செழும் பறவை தான் ஏறித் திரிவான் -என்று ஸ்ரீ திருவடி திருத் தோளிலே ஏறி வந்து இறே இவரை விஷயீ கரித்தது –
அத் திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்

அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி -என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே
நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ பிராட்டியை
ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-

நானிலம் வாய்க் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
நானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப் பாலைக்கும் சேமத்ததே -ஸ்ரீ திரு விருத்தம் -26-

முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப் பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -ஸ்ரீ திருவரங்க கலம்பகம்-50-

சம்சாரமாகிற -இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்
என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –

ஆக
அத்திருவடி திருத் தோளிலே வந்து இவரை கொடு போவதாகப் பார்த்தான்
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –
முதலிலே தம் பக்கலிலே அத் வேஷத்தையும் -வெருப்பின்மையும் பிறப்பித்து
அது அடியாக விசேஷமான கடாக்ஷத்தை -திரு வருளைச் செய்து –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-
அமலங்களாக விழிக்கும்-
மருவித் தொழும் மனமே தந்தாய்-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-
தம் பக்கலிலே இச்சையும் பிறப்பித்து
தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து

அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்
தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து
விஷயங்களில் -ஐம்புல இன்பங்களில் -ப்ரவணராய் -ஆசை உடையவராய் போந்த தம்மை
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து
தானே வந்து அவ்வருகு கொடு போவனாக த்வரிக்கிற -விரைகிறபடியை அனுசந்தித்து -நினைத்து –

இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
அநாதி பல காலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே
இன்று நம்மை ஆதரிக்கைக்கு விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்
இப் பேறு தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே
தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்
உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –

முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்
இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-

இனி -ஸ்ரீ சர்வஞ்ஞன் ஆகிலும்
இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் சிரஸா வஹிக்கிற -தேவரீர்
முன்பு அநாதி பல காலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –
உம பக்கல் உண்டான அத்வேஷம் -வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் பொறாமையாலும்
இனி ரக்ஷகனானவனுக்கு -பாதுகாக்கின்றவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தை -பாது காக்கப் படும் பொருள்களை
பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
பிற்பாடன் ஆனதற்கு லஜ்ஜிக்குமது -நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தறையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு ஸ்ரீ இறைவன் பதில் இல்லை
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் –ஸ்ரீ கம்பர் –

முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து
தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை பாவத்தை -எறட்டுக் கொண்டு
பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள தசா விசேஷங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –
இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை என்று பார்த்து-

இப்படி
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன் தம் பக்கல் செய்த விஷயீ அங்கீ காரத்தையும் –
அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர்ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே
இன்று என்னைப் பொருள் ஆக்கி –
விஷயீ கரிக்கும்- அங்கீ கரிக்கும்- அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -விஸ்மிதராய் ஆச்சர்யத்தை உடையராய்
அமுதம் உண்டு களித்தேனே –
உவகை மீதூர்ந்தவராக ஹ்ருஷ்டராய் -களிக்கிறார்-

———————-

பத்தாம் பத்து -ஒன்பதாம் திருவாய்ந மொழி -சூழ் விசும்பு -பிரவேசம் –

பரம -மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –தத் பிரகாரங்களை –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே
ஸ்ரீ பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று மநோ ரதிக்கிற -எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஸ்ரீ ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-விசதமாக –
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும் -நெறியையும்
சரீரம் விஸ்லேஷம் -பிரியும் போது வரும் கிலேசம் -துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்கள் -போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் ஸத்காரங்களையும் -உபசாரங்களையும்
அந் நெறியாலே மார்க்கத்தாலே -சென்று புகக் கூடிய ஸ்ரீ பரமபதத்தையும்
ஸ்ரீ நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்
ஸ்ரீ பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்
ஸ்ரீ நித்ய ஸூரிகள் சேவிக்க ஸ்ரீ பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே தாம் நிர்ப்பரராய் -பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்
பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஸ்ரீ ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கைக்காக –

——————–

பத்தாம் பத்து -பத்தாம் திருவாய் மொழி முனியானே -பிரவேசம் –

ஸ்ரீ பரமபதத்திலே புக்கு
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-ஞான அனுசந்தானமேயாய் –
பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு யோக்யம் –புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –
அதற்கு மேலே
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற சம்சாரத்தில் -இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்
இருக்கிற படியையும் கண்டார் –

கண்டு -மேருவின் உச்சியில் நிர்த்துக்கனாய் -துக்கம் இல்லாதவனாய்
ஸூ கோத்தரனாய் -மேலான ஸூகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்
துக்க பஹுளமாய் –பல பல துக்கங்களை உடையதாய்–துஸ் தரமாய் –தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே
விழுந்து நோவு படுமாறு போலே அவசன்னர்- துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு சாதனத்தை உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு அனுஷ்டிக்குமவனுக்கும் ஒழுகுமவனுக்கும் –
மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-சர்வ ரக்ஷகனாய் –
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்
இருக்கும் படியையும் அனுசந்தித்து நினைந்து
அஷணத்தில் பெறாமையாலே
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று
மிகவும் அவசன்னராய் -துக்கம் கொண்டவர் ஆனார்

அங்கனம் துக்கம் கொண்டவர் -மாதா பிதாக்கள் சந்நிதி உண்டாய் இருக்க –
தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்
நோவு படுகிற ஸ்தந்ந்தய பிரஜை சிறு குழவியானது ஆர்த்தியின் துன்பத்தின் மிகுதியாலே
தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே
வள வேழ் உலகின் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்
தம் ஸ்வரூபத்தை -தன்மையை நினைக்க ஷமர்- ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் வாயில் இட்டு நீட்டுகையும் -மூலமும் அறிவிக்கவும் இயலாதவராய்
அவனே எதிரே நின்று ஸ்ரீ பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான
ஆற்றாமை யோடு நிர்க்ருண்யருடைய
இரக்கம் இல்லாதவர் உடைய ஹ்ருதயங்களும் -மனங்களும் இரங்கும்படியாக
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி ரக்ஷித்து அல்லது ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே ஆர்த்த த்வனியோடே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ஸ்ரீ ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் பரம தயாளு -அருள் கடல் ஆகையாலே
இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
ஸ்ரீ கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
ஸ்ரீ பிராட்டிமாரோடே ஸ்ரீ பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்த விரும்பியபடியே பூர்ணமாக எல்லாவற்றாலும்
நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய ப்ரக்ருதி -சரீர சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி ஸம்ஸ்லேஷித்து -கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் ஸ்ரீ சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப் பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று சாதுக்களின் உடைய ஸூஹ்ருத- புண்ணியத்தின் பலம்
பிரமேய பிராமண பிரமாதா வைலஷண்யத்தையும் இவர் அவதார வைலஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தர்யாதிகளை வனப்பு முதலானவற்றையும் காட்டி
உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
துஸ் ஸஹமான – பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து
நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-குண ஆவிஷ்காரத்தை பண்ணி –
விட ஒண்ணாது என்கிறார்-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

—————————

தாம் விரும்பியது-தம்முடைய அபேக்ஷிதம் -செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி
அவனுக்கு திரு ஆணை இடுகிறார்

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

——————-

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள் உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்
நிர்வாஹகனான நீ உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை
ஐயோ -வந்து விஷயீ அங்கீ கரித்து அருள வேண்டும் என்கிறார் –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே–10-10-3-

———————-

சர்வ -எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய்
பார்த்தாய் ஆகில் என்னைக் கை விட்டாய் அல்லையோ என்கிறார்

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

——————-

சர்வ ரக்ஷகனான -எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற- நீ கை விட்டால்
என் கார்யம் -நான் செய்யவோ-பிறர் செய்யவோ-முடிந்தேனே இறே –என்கிறார்

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

———————

ஸ்ரீ பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யந்த அபிநிவிஷ்டனாய் -மிக்க காதலை உடையவனாய்
என் ப்ரக்ருதியிலும் -சரீரத்திலும் ஆத்மாவிலும் அத்யாதரத்தை -மிக்க விருப்பத்தைச் செய்து புஜித்த -அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் உபேக்ஷியாதே -ஈண்டென விஷயீ -அங்கீ கரித்து அருளாய் – என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

———————

நான் ஸ்ரீ பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் -பரிக்ரஹம் -ஆகையால்
பிரளயத்தில் மூழ்கின -பிரளய ஆர்ணவ மக்னையான -ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு ஸம்ஸ்லேஷித்து -கலந்தால் போலேயும்
கடலைக் கடைந்து ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு சம்ச்லேஷத்து -கலந்தால் போலேயும்-சம்சார ஆர்ணவ மக்நனான –
பிறவிக் கடலில் மூழ்கின- என்னை எடுத்து
என்னோடு ஸம்ஸ்லேஷித்து -கலந்தருளி
என் பக்கல் அதி வ்யாமோஹத்தை -மிக்க காதலைச் செய்த
உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

———————

அத்யந்த துர்ஜ்ஜேயனான – சிறிதும் அறிய முடியாதவனான உன்னை பெற்று வைத்து
இனி விட உபாயம் -இல்லை என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ–10-10-8-

———————

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-
அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்
எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-
அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி
ஜகத் சரீரனாய் உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும் இருப்பைக் காட்டித் தந்தோம் இறே -என்ன
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது
ஆகாராந்தரம் -வேறு உருவம் இல்லையாகில் அன்றோ அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது
ஸ்ரீ திரு நாட்டில் -ஸ்ரீ பரம பதத்தில் -வ்யாவ்ருத்தமாய் -வேறுபாட்டோடு கூடியதாய்-பரிபூரணமாய் –
எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை காண வேண்டும் – என்கிறார் –

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

—————–

ஸ்ரீ எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் -விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
மிகப் பெரிய ஆர்த்தியோடே -துன்பத்தோடு கூப்பிட்டு
இவர் பிரார்த்தித்த -வேண்டிக் கொண்ட படியே-பரி பூர்ணனாய் – எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு
வந்து ஸம்ஸ்லேஷித்து -கலந்து அருளக் கண்டு
அபரிச்சேதயமான -அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்
ஆத்ம தத்வத்தாலும்
உன்னுடைய சங்கல்ப ரூப -நினைவின் உருவமான ஞானத்திலும்
பெரியதான என் விடாய் எல்லாம் தீர
வந்து -என்னோடு -கலந்தாய்
என்னுடைய மனோ ரதமும் -விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது என்கிறார் –

இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து
அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு
என்னோடு வந்து கலந்து
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்–என்னவுமாம் –
அங்கே பரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39
ஸ்ரீ பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

———————-

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -இவற்றையே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்
சவுந்தர்யாதி விசிஷ்டமான -வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்
அபரிமித -அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
ஸ்ரீ லஷ்மீ பூமா நீளா -திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைனதேயாதிகள் -ஸ்ரீ நித்ய ஸூரிகள் -ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் –
ஸ்ரீ பெரிய திருவடி-அனவரத பரிசர்யமான – எப்பொழுதும் அடிமை செய்யும் –
சரண நளினனாய் -திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்
ஸ்ரீ சர்வேஸ்வரனாய்
ஸ்வ விபூதி பூதரான -தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற ஆஸ்ரயிக்கும் -அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று நீர்த்துக்கராய் -துக்கம் அற்றவராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான –
எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஸ்ரீ ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-பக்தி பலாத்கார பூர்வகமாக – ஆயிரம் ஸ்ரீ திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரம பக்தியால் பிறந்த அந்தாதியான இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

ஸ்ரீ பரமபதத்துக்கு போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே
ஸ்த்தாவர ஜங்கமங்களுக்கு உண்டான விக்ருத்தியை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

—————–

மேல் உள்ள உலகங்கள்-பண்ணின ஸத்காரங்களை –செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

——————–

ஸ்ரீ ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் எதிரே வந்து புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணி -மலர் மழையைப் பொழிந்து
கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

——————–

மேலே உள்ள உலகங்களில் தேவர்கள் இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்காக தோப்புக்கள் சமைத்தும்-அமைத்தும் –
வாத்தியம் முதலானவற்றால் கோஷங்களை ஒலியை உண்டாக்கியும் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–10-9-4-

———————-

ஸ்ரீ ஆதி வாஹிகத் தலைவர்களான வருணன் இந்த்ரன் முதலானவர்களும் மற்றும் உள்ளாறும்
இவனுக்குச் செய்யும் ஸத்காரங்களை உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

———————–

ஸத்கார பூர்வகமாக -உபசரித்தல் முன்னாக-தேவ ஸ்த்ரீகள் -தெய்வப் பெண்கள் உகந்து
இவர்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் -வாழ்த்தினார்கள் – என்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

———————

மருத் கணங்களும் வஸூ கணங்களும் தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -ஸ்துதி செய்தார்கள் என்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

——————–

ப்ரக்ருதி மண்டலத்துக்கு -இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே பரமபததுக்கு புறம்பாக
ஸ்ரீ நித்ய ஸூரிகள் இவர்களை எதிர் கொள்ளுகிறபடியை அருளிச் செய்கிறார் –

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

——————–

ஸ்ரீ பரம பதத்தில் சென்று திரு வாசலில் முதலிகளால் ஸதக்ருதராய் -உபசரிக்கப் பட்டவர்களாக
அங்குள்ள ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஸ்ரீ பரம பதத்தில் வருவதே –இது என்ன பாக்ய -புண்ணியத்தின் பலம் –
என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

———————

ஸ்ரீ நித்ய சூரிகள் இவர்களை கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் -.

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

——————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

நான் யாத்ருச்சிகமாக -அறியாமையிலே ஸ்ரீ திருமலையைச் சொன்ன அளவிலே-நிரபேஷனான –
ஒன்றனையும் விரும்பாத -தான் ஸ்ரீ பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-

——————

தான் ஸ்ரீ சர்வேஸ்வரனாய் வைத்து என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்
இன்று வந்து நிர்ஹேதுகமாக என் ஹ்ருதயத்தில் -மனத்தின் கண் புகுந்து நிறைவாளன் ஆனான் –என்கிறார்-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

———————

அவன் தம்மோடு நிர்ஹேதுகமாக வந்து ஸம்ஸ்லேஷித்த -கலந்த படியை அனுசந்தித்து -நினைந்து
இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே – என்கிறார்-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

————————

தமக்கு ஸ்ரீ பரம பதத்தை தருவானாய் இருக்கிறவனுடைய நீர்மையை அனுசந்தித்து -நினைந்து
என் கரணங்களும் -உறுப்புகளும் களிக்க நானும் களியா நின்றேன் – என்கிறார்

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசிம்பு தருவானே–10-8-4-

——————-

ஸ்ரீ திருப் பேர் நகரான் ஸ்ரீ பரம பதத்தை எனக்கு தருவானாக என்னோடு பூணித்து
தானே விரோதிகளையும் -இரு வினைகளையும் போக்கினான் – என்கிறார் –

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

——————–

தனக்கு இருப்பிடமான ஸ்ரீ கோயில்கள் அநேகம் -பல உளவாக இருக்க – ஓர் இடம் இல்லாதாரைப் போலே
என் ஹ்ருதயத்தில் -மனத்திலே நிர்ஹேதுகமாக -ஒரு காரணமும் இல்லாமல்-
பிரார்த்தித்து – வேண்டிக் கொண்டு வந்து புகுந்தான் என்று பிரீதர் ஆகிறார்

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–

———————

அவனுடைய ஆதாரத்தால் தமக்கு உண்டான கார்த்தார்யத்தை -குறை இல்லாமையை அருளிச் செய்கிறார் –

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7-

——————-

நிரதிசய போக்ய பூதனான -எல்லை இல்லாத இனியனான ஸ்ரீ திருப் பேர் நகரான்
என் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணி -காதலை வைத்து ஒரு நாளும் போகாதபடி
என் நெஞ்சிலே வந்து புகுந்தான் – என்கிறார் –

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

——————–

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும்- முன்பு என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –
இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை ஸ்ரீ பரமபததுக்கு கொடு போகையில் விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற -விரைகிற தேவர் இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைப் பார்த்து அருளியது –

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே
நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று எழுந்து அருளிய இடம் அறியாமையாலே
ஆறி இருந்தார் இத்தனை போக்கி -அறிந்தால் ஒரு ஷாணம் ஆறி இருப்பாரோ –
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு ஷணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே
யார் எதிராகத் தான் இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல் –

நிதானப் பாட்டு இந்த ஸ்ரீ திருவாய் மொழிக்கு

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

———————–

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-நிருத்தரானாய் – விடை அளித்தால் அற்றவனாய்
உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்
அவன் தானே செய்தான் -என்னும் அன்று
அவனுக்கு வைஷம்யமும் -உயர்வு தாழ்வு காண்டலும்-நைர்க்ருண்யமும்- அருள் பெற்ற தன்மையும்-சர்வ முக்தி பிரசங்கமும் –
எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்
இத் தலையில் ருசியை அபேக்ஷித்து -விரும்பிச் செய்கையாலே அவனுக்கு அவை உண்டாக மாட்டா
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்
அது உபாயம் ஆக மாட்டாது-பல வ்யாப்த மானது – பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை
உபாயம் ஸஹ காரி நிரபேஷம் -வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்
இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்
சர்வ முக்தி பிரசங்கம் பரிஹார்த்தமாக -நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

————————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு ஸ்ரீ பரம பதம் -என்கிறார் –

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

ஸ்ரீ திருவாய் மொழி பாடுவிக்க என்ற ஒரு வ்யாஜத்தாலே புகுந்து
நம் இடத்திலே அவன் பண்ணின வ்யாமோஹத்தை -செய்த காதல் பெருக்கினைக் கண்டு
அவனுக்கு அடிமை செய்வார் அவனுடைய சீலம் முதலான குணங்களிலே அகப்படாதீர்கள் என்கிறார்-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-

—————————

தம்மோடு கலந்த பின்பு அவனுக்கு பிறந்த ஸம்ருத்தியை -நிறைவினைக் கண்டு இனியர் ஆகிறார்-

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-

———————–

அவனுக்கு தம் பக்கல் உண்டான அபிநிவேசத்தினுடைய -காதல் எல்லை கடந்து இருத்தலை அருளிச் செய்கிறார்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

————————–

தம்முடைய திருமேனியைக் காட்டிலும் தம்மோடு கலந்து பழகுவதற்கு தக்க நிலம் என்று
ஸ்ரீ திருமலையில் அவன் வைத்து இருக்கும் வ்யாமோஹத்தை -காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

———————————

அவன் தம்மோடு கலந்து தம் திரு வாயாலே ஸ்ரீ திருவாய் மொழி கேட்ட ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து -மகிழ்ந்து
ஆளத்தி –இசைக்கு பூர்வாங்கமான ஆலாபம்–வையா நின்றான் -என்கிறார் –
அன்றிக்கே
நன்கு என் உடலம் கை விடான் -என்னும் அளவு அன்றிக்கே என் யுக்தி -வார்த்தை அளவிலே களியா நின்றான் –
என்கிறார் என்னவுமாம் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

——————–

ஸ்ரீ யபதியானவன் -ஸ்ரீ திருமகள் கேள்வன் ஆனவன் திருமலையிலே நின்று அருளி
என்னை ஆளுகையிலே-வ்யாமுக்தன் -பெரும் காதலன் ஆனான் – என்கிறார் –

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

—————–

தம்முடைய இஸ் ஸம்ருத்திக்கு -இச் செல்வ நிறைவுக்கு எல்லாம் அடி ஸ்ரீ திருமலை ஆன பின்பு-இது தேசம் தான் –
இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-ப்ராப்யம் – என்று ஸ்ரீ திரு மலையைக் கொண்டாடுகிறார்-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

———————

ஸ்ரீ திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபிநிவேசத்தை – செலுத்தும் ஆசையை
என் அவயவங்களில் பண்ணி -உறுப்புக்களிலே செலுத்தி ஒரு க்ஷண நேரமும் பிரிகின்றிலன் –
இவன் படி இருந்தபடி என் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

———————–

நமக்கு இந்த சம்பத்து செல்வம் எல்லாம் ஸ்ரீ திருமலையாலே வந்தது ஆயிற்று – ஆதலால்
ஸ்ரீ திருமலையைக் கை விடாதே கொள் –என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

—————–

இப்படி இவர் நிர்ப்பந்திகச் செய்தேயும் ஆனைக்குப்பு –சதுரங்கம் –இடுவாரைப் போலே கேளாது இருந்தான் –
அதற்கு அடி -சாந்து பூசுவார் பரணியை உடைத்தோ பூசுவது –இது என் சொன்னீர் ஆனீர் -என்ன
திரியவும் மங்க ஒட்டு –என்கிறார்

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

———————–

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி
ஸ்ரீ திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

ஸ்ரீ ஈஸ்வரன் நம்மை விஷயீ கரிக்கையில் -ஏற்றுக் கொள்கையில் -ஒருப்படா நின்றான்
அது தானும் நாம் விதித்த படி செய்வானாய் இரா நின்றான் என்கிறார்

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

————————-

விதி வகையே -என்று கேவலம் ஸ்ரீ பகவானுடைய கிருபையால் வந்ததாகச் சொல்லுகிறது என் என்னில்
அடியிலே இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றிலோமோ நாம் -என்ன
நாம் அபேக்ஷித்த -விரும்பிய அளவோ பெற்றது -என்கிறார்-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

—————————-

நெஞ்சே – நம்மை விஷயீ -அங்கீ கரிக்க வல்லனே என்று நாம் இருக்க –அவ்வளவு அன்றிக்கே
பலிக்கிற படி என் -என்கிறார்-
மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்
வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

————————-

ஸ்ரீ சர்வேஸ்வரன் நாம் விதித்த படியே செய்வானாக சொன்ன இது சம்பவிக்கிமோ – நடக்கக் கூடியதாமோ -என்னில்
அவன் அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் தன்மையை -ஆஸ்ரித பாரதந்த்ரத்தை அனுசந்தித்தால் -நினைக்கும் போது
கூடாதது இல்லை காண் – என்கிறார்

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————

அவன் ஸ்ரீ பரம பதத்துக்கு போக ஆஸ்ரிதற்கு -அடியார்க்கு வைத்த ஸ்ரீ அர்ச்சிராதி கதியாலே -போகப் பெறா நின்றேன்
நித்ய ஆஸ்ரிதர் -எப்போதும் அடைந்து உள்ள ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் போலே நானும் விஷயீ அங்கீகரிக்கவும் பெற்றேன் –
என்கிறார்-

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5-

————————

ஸ்ரீ திருவாட்டாற்றிலே சந்நிதி பண்ணி -எழுந்து அருளி இருந்து என்னை சர்வதோ முகமாக -எல்லா வகையாலும்-
விட மாட்டாதவன் உடைய திருவடிகளைக் கிட்டப் பெற்றோம் – என்கிறார் –

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

———————-

குறுகினம் -என்ற இது-என் கொண்டு அறிவது -என்னில்-பார்க்கலாகாதோ உடம்பு ஸ்ரீ கோயில் சாந்து நாறுகிறபடி –என்கிறார்

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

———————

அத்யந்த விலக்ஷணானவன் -மிக உயர்ந்த மேன்மையினை உடையனான ஸ்ரீ எம்பெருமான்
ஸ்ரீ திரு வாட்டாற்றிலே வந்து ஸூலபனாய் என் மனத்திலே ஹ்ருதயத்தில் -வந்து புகுந்து-
உஜ்ஜ்வலன் – பேர் ஒளியன் ஆகைக்கு -நான் என்ன நன்மை செய்தேன் –என்கிறார்-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

———————–

அத்யந்தம் பூர்ணனான -எல்லாப் பொருள்களாலும் நிறைவு பெற்று இருக்கின்ற தான் இகழாதே -என் மனத்தினை-
சர்வ காலமும் – எக் காலத்திலும் விடுகின்றிலன்
ஒருவனுடைய வ்யாமோஹமே -காதல் இருந்தபடி என் –என்று பிரீதர் -ஆகிறார்

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ் நின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

———————–

மஹா புருஷர்களை -பெரியாரை அடைந்தால் எதிர்தலையைப் பாராதே தங்கள் தரத்தைக் கொடுப்பர்கள் -என்னும்
இவ் விஷயத்தை ஸ்ரீ திருவாட்டாற்றில் நாயனார் என் பக்கலிலே காட்டினார் –என்கிறார்

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10-

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

பக்தியை உடையராய்க் கொண்டு அவனை அனுசந்திப்பார்க்கு -நினைப்பார்க்கு-
ஆலம்பமான -பற்றுக் கோடான – ஸ்ரீ திருமந்தரம் -இன்னது – என்கிறார்

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

———————–

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

———————-

ஸ்வாமித்வ ப்ரயுக்தமான -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்வரூபத்துக்கு ஏற்ற-சர்வ வித –
பல வகைப் பட்ட ரக்ஷணங்களை சொல்லுகிறார்-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

——————–

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-
தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று
ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும் ஒரு நிர்வசன பிரகாரம் –
உண்டே அன்றோ இதற்கு
அவ்வழியாலே ஸ்ரீ திருமந்த்ரத்துக்கு பொருள் கொண்டு-நிர்வசித்து –
ஸ்ரீ திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி ஆஸ்ரயியுங்கோள் அடையுங்கோள் – என்கிறார்-

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4-

——————–

இப்படி செவ்வி மாறாத மலர்களைக் கொண்டு அவன் திரு நாமத்தை – திருப் பெயரை –
ஹர்ஷத்துக்கு -உவகைக்கு போக்குவீடாகச் சொல்லுங்கோள் –
அப்படிச் செய்யவே ஆத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைப் பெறலாம் –என்கிறார்

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

—————–

நீர் சொன்னபடியே செய்யலாவது-ஆஸ்ரயணீயனை- அடையத் தக்க ஸ்ரீ இறைவனை கண்டால் அன்றோ
கண்டு அன்றோ ஆஸ்ரயிக்க -அடைய வேண்டும் என்ன –
பிற்பாடரான நமக்காக ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளினான் அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்-என்கிறார்

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

————————-

ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி -ப்ரேரிதராய் -ஆஸ்ரயிக்கவும் -அடையவும் இனிமையோடு திருநாமம்
சொல்லவும் மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார் வார்த்தையைச் சொல்லவே-பூர்ண உபாசனத்தில் பலம் சித்திக்கும் –
பக்தியை செய்தார் அடையும் பலத்தை அடையலாம் – என்கிறார்

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

———————-

அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை நிரந்தரமாக – எப்பொழுதும் சொல்லுவார்
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள் –என்கிறார்

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8–

———————

ஜென்மாதிகள் அப்ரயோஜம் -பிறவி தொடக்கமானவைகள் காரணங்கள் ஆகாமல் போனாலும்
பிரயோஜனாந்த பரராய் ஆவதற்கு காரணமான பாவங்கள் செய்வது என் என்னில்-ப்ரயோஜன ஸூந்யராய்
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிக்கவே -பற்றவே அவை தாமே போம் என்கிறார்

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

——————-

அவ்வளவே அன்றிக்கே கைங்கர்யங்களுக்கு பிரதிபந்தகங்களும் -தடையாக உள்ளவைகளும் போம்
ஆன பின்பு அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள் என்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

——————-

நிகமத்தில்
இப்பத்தும் அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஆழ்வார் தம்மைப் போலே ஸ்ரீ பகவான் உடைய
விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும் என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –நாலாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 29, 2019

உபய விபூதி உக்தனாய் -இரண்டு விபூதிகளையும் உடையவனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித -அடியவர்கட்கு ஸூலபனாவன் உடைய திருவடிகள்
பக்தி யோக லப்யம் -பக்தி -மார்க்கத்தாலே அடையத் தக்கன –என்கிறார் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

———————

ஸ்ரீ சர்வேஸ்வரனாய்-ஸ்ரீ யபதியாய் -ஸ்ரீ திருமகள் கேள்வனாய்-இருந்து வைத்து என் விரோதி -இருவினைகளைப் போக்கி –
என்னை இங்கே அடிமை கொள்ளா நின்றான் -என்று கீழ்ச் சொன்ன சௌலப்யம் தமக்கு பலித்த படியை அருளிச் செய்கிறார்-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

——————

மறுவல் இடாதபடி சம்சாரத்தை -பிறவிப் பிணியைப் போக்கி ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனுடைய –
கேள்வனானவனுடைய திருவடிகளை சிரோ பூஷணமாக -தலைக்கு அணியாகப் பெற்றேன் –என்கிறார்-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

—————-

என் மனத்தில் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒருவராலும் விஸ்லேஷிப்பிக்க -பிரிக்க ஒண்ணாது என்று
நிச்சயித்து – அறுதி இட்டு அதனாலே கிருதகிருத்யனாய் இருந்தேன் என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

————————

அவன் என் திறத்தில் செய்ய நினைக்கிறவை ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறார்

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

——————-

இன்று வந்து ஆஸ்ரயிப்பாரையும் பற்றுமவரையும் நித்ய ஆஸ்ரிதரை எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்
அவர்களைப் போலே விஷயீ அங்கீகரிக்கும் அவன் திருவடிகளிலே நிர்மமனாய் செருக்கு அற்றவனாய்
விழப் பெற்றேன் என்கிறார்-
ஸ்ரீ திருவனந்த ஆழ்வானுக்கும் பிரயோஜனாந்தர பரர்க்கும் வாசி வையாதே உடம்பு கொடுக்குமவனை
வணங்கப் பெற்றேன் என்றுமாம்

நாகத்து அணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6-

———————–

நம் பிரதிபந்தகங்களை -தடைகளை எல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளுமவனை
நாள்தோறும் அனுபவி -என்று தன் திரு உள்ளத்தை நோக்கி அருளிச் செய்கிறார்

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

————————

அவனை அனுபவிப்பாய் என்றவாறே உகந்த நெஞ்சினைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அனுபவி
என்கிறார்

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

——————-

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி
நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –
பல ஆயிரக் கணக்கான பிறவிகளில் செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்
அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு கிருஷ்ண பக்தி உண்டாகிறது -என்கிறபடியே
அநேக -பல காலங்களில் ஸாத்யமான -சம்பாத்தித்த பக்தியாலே
அடையப் படுமவனை அவன் ப்ரஸாதத்தால் -திருவருளாலே காணப் பெற்றேன் -என்கிறார் –
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-விகல்பிக்கலாம் படி – மாறாடும்படியாக இருக்கிற
பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் கீழில் –
அதற்கும் அடி அவன் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல்
ஸ்வயம் நிரபேஷமானது தன்னையே -சாதனாந்தரங்களை விரும்பாமல் -அவனது அருளையே -சொல்லுகிறார் ஆதல் –
தாம் பெற்ற வழியே சொல்லுகிறார் ஆதல் –என்றுமாம் –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

———————–

பிரயோஜனாந்தர பரர்களோடு சாதனாந்தர பரரோடு பக்திமான்களோடு பிரபத்திமான்களோடு
வேற்றுமை அற அவனே உபாயம் -என்று உக்தத்தை -கீழே கூறியவற்றை எல்லாம்
நிகமிக்கிறார் -முடிக்கிறார்-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம் என்கிறார்-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-