ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ரீ திரு நாவாயைக் குறுகைக்கு எனக்கு உபாயம் உண்டோ என்கிறார்-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

————————-

ஸ்ரீ திரு நாவாயிலே புகும் நாள் என்றோ என்கிறார்

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2-

———————–

ஸ்ரீ திரு நாவாயிலே-திரு ஓலக்கத்திலே புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

——————-

ஆத்மாந்த தாஸ்யம் ஆத்மா உள்ள வரையிலும் செய்ய வேண்டிய அடிமையைச் செய்யும்படி –
மீளா அடிமைப் பணி செய்ய- உன்னால் விஷயீக்ருதனான -ஏற்றுக் கொள்ளப் பட்ட நான்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோடு கூடி இருக்கிற இருப்பிலே அடிமை செய்யப் பெரும் நாள் என்று
என்று அறிகிலேன் என்கிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

———————–

ஸ்ரீ திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு அனுபவிப்பது என்று என்கிறார்

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

—————————

ஊரை அன்றிக்கே ஊரில் நின்று அருளின உன்னைக் கண்டு களிப்பது என்றோ என்கிறார்

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

——————————-

ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக ஸ்ரீ திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-அநந்ய கதி –
வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

——————–

கீழ் பாசுரத்திலே அருளாய் -என்றார்-அப்போதே அபேக்ஷிதம் விரும்பியதை பெறாமையாலே
அருளவுமாம்-தவிரவுமாம்-அஞ்ஞான கந்தம் -அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை
என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–9-8-8-

———————–

இப்படி சொன்ன இடத்திலும் ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே
நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
என் அபிமதம் -நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற பாக்யாதிகர் –
மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ ––9-8-9-

—————–

உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன் என்கிறார்

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

——————–

நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: