ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –இரண்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

அநந்ய கதிகளான -வேறு கதி இல்லாத அடியோங்களைக் குறித்து
ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

——————-

சர்வ -எல்லார்க்கும் ஸூலபமான உன் திருவடிகளை என் தலையிலே வைத்து அருள வேண்டும்-என்கிறார்

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

——————-

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே
அடியோமுக்காக ஸ்ரீ பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும் என்கிறார் –

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

————————

ஸ்ரீ திருப்பதிகளிலே ஸந்நிஹிதனாய் -எழுந்து அருளி இருப்பவனாய் என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே
மேலும் எனது அபேக்ஷிதம் -விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

———————–

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே வந்து தோன்றி அருள வேணும் என்கிறார் –

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

———————-

உம்முடைய அபேக்ஷிதங்கள் -நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி பிரதிபந்தகங்கள் –
தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்
வலியவோ என் பிரதிபந்தகம் -விரோதிகள் -என்கிறார் –

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் மிடர் கடிவானே–9-2-6-

———————-

துர்ப்பலரோடு -வலி அற்றவர்களோடு-பிரபலரோடு – வலி மிக்கவர்களோடு வாசி அற ரக்ஷகனான –
காப்பவனான நீ நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

—————–

ஸ்ரீ பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு காட்டலாவது-என்ன –
அவ் விருப்பின் அழகினை நாங்கள் காண ஸ்ரீ திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் – என்கிறார் –

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திரு வைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

——————–

இவ்விருப்பில் வாசி அறியாத இவ் உலகத்தாருக்கு நடுவில் இருக்கிறது என் -என்னில் –
ருசி உடைய நாங்கள் கண்டு அனுபவிக்க –என்கிறார்

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

——————–

நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமையை உடையதான
உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்
அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேணும் -என்கிறார் –

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

——————–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: