ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது-ஆஸ்ரயணத்தை- இறைவனைப் பற்றுமின் –
என்பதனை இப் பாசுரத்தில் ஸங்க்ரஹேண- சுருங்க அருளிச் செய்கிறார்-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

——————–

இவ்விஷயத்துக்கு -ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சும் சாபலம் -ஆசை உடையார்-ஸூ ரஷிதமான –
காவலோடு கூடிய தேசம் என்று-நிர்ப்பயராய் – அச்சம் இல்லாதவர்களாய்-நித்தியமாக ஆஸ்ரயியுங்கோள் –
நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

——————-

ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நின்று அருளினவன் உபய விபூதி நாதன் ஆயிற்று
உங்கள் துயர் கெட அநந்ய பிரயோஜனராய் வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்
ஆஸ்ரயியுங்கோள் -வணங்குங்கோள் என்கிறார்

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

————————

ஆஸ்ரயிக்கும் -அடையும் இடத்தில் ஸ்ரீ நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயியுங்கோள் அடைமின் –
அவன் உங்களுக்கு ரக்ஷகனாம் – –என்கிறார் –

மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

———————–

இப்படி பக்தி யோகத்தால் ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே -அடைவதற்கு தகுதி இல்லாதவர்களாகி
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

———————-

தன்னை ஆஸ்ரயிப்பாருடைய -அடைகின்றவர்களுடைய விரோதிகளைப் போக்கி
அவர்களுக்கு மிகவும் ஸ்நேஹியாம் -அன்பன் ஆம் என்கிறார் –

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

——————-

அநந்ய பிரயோஜனருக்கு ஸூலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான் என்கிறார்

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே–9-10-7-

———————–

அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்- உங்கள் துக்கத்தையும் துக்கத்துக்கு ஹேதுவான சம்சாரத்தையும் –
காரணமான பிறப்பினையும் போக்கி அருளுவான் – என்கிறார்

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

——————-

உபதேச நிரபேஷமாக -ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே நான் முன்னம் அவனை ஆஸ்ரயித்து –
அடைந்து ஸூகியாக இன்பத்தினை அடைந்தவன் ஆனேன் என்று ப்ரீதர் ஆகிறார்

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

——————–

ப்ரீதியின் அதிசயத்தாலே -மிகுதியாலே கீழ் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் ஷமர் -தகுதி இல்லாதவர்கள்
ஸ்ரீ திருக் கண்ணபுரம் என்ற யுக்தியை வார்த்தையினைச் சொல்லவே-ஸமஸ்த துக்கங்களும் எல்லா துன்பங்களும் போம் –
என்கிறார் –

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

———————

நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: