ஸ்ரீ திருவாய் மொழி எட்டாம் பத்தில் -ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

என்னுடைய ஆர்த்தியை -துன்பத்தை தீர்த்து அருளுவான் ஸ்ரீ சர்வேஸ்வரனே
அவன் ஊர் ஸ்ரீ திருக் கடித்தானம் -என்கிறார்-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

————————

என் பக்கல் வருகைக்கு உள்ள பிரதிபந்தகங்களையும் -தடைகளையும் தானே போக்கி
ஸ்ரீ திருக் கடித்தானத்திலும் என் மனத்திலும் ஒக்கக் காதல் கொண்டு-அபி நிவேசித்து –
என் உள்ளே வர்த்தியா நின்றான் – வசிக்கிறான் என்கிறார்-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக் கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

———————–

ஸ்ரீ பிராட்டியோடு கூடி ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான உபகாரகன் அநுஸந்திக்கும் –
நினைக்கும் தோறும் இனியன் ஆக நின்றான் -என்கிறார்-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறை கின்ற மாயப் பிரானே–8-6-3-

————————

ஸ்ரீ திருக் கடித்தானத்தை பகல் இருக்கை மாத்ரமாகக் கொண்டு
சங்காதிசயத்தாலே- அன்பின் மிகுதியாலே என் நெஞ்சையே நிரந்தர வாசஸ் ஸ்தானமாக –
எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் -என்கிறார்-

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத் தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4-

———————-

என் பக்கல் கொண்ட ப்ரேம அதிசயத்தாலே -மிக்க காதலாலே ஸ்ரீ திருக் கடித் தானத்தோடே கூட
என் ஹ்ருதயத்தில் -மனத்திலே புகுந்து அருளினான் –என்கிறார்

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வ மெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

————————

தம்முடைய மிக்க ப்ரீதியாலே-ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே –
ஸ்ரீ திருக் கடித் தானத்தை எல்லாரும் ஆஸ்ரயியுங்கோள் அடையுங்கோள் என்கிறார்-

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

——————-

உங்கள் துக்க நிவ்ருத்திக்கு -துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டா
ஸ்ரீ திருக் கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்கவும் அமையும் -என்கிறார்

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

———————–

விலக்ஷணமான நகரங்கள் பலவும் அவனுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய நெஞ்சையும் ஸ்ரீ திருக் கடித் தானத்தையும்-தாய ப்ராப்தமான ஸ்தானமாக –
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி இருக்கிறான் -என்கிறார் –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆன விடத்தும் என் நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தன தாய்ப் பதியே–8-6-8-

————————

அல்லாத ஸ்ரீ திருப்பதிகளும் எல்லாம் அவனுக்கு அப்படியே அன்றோ -என்னில்-அது அப்படியே யாகிலும்
என்னோடு கிட்டுகைக்கு உறுப்பான நிலம் என்று ஸ்ரீ திருக் கடித் தானத்திலே அத்யபி நிவிஷ்டன் –
மிக்க காதலன் ஆனான் -என்கிறார்

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத் தமரர் திருக் கடித் தானத்துள்
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே-8-6-9-

————————-

என்னைப் பெருமளவும் -ஸ்ரீ திருக் கடித் தானத்தில் நின்றான்
என்னைப் பெற்ற பின்பு- நிற்பதும் இருப்பதும்-என் நெஞ்சிலே -என்கிறார்

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10-

————————–

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை
இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: