ஸ்ரீ திருவாய் மொழி எட்டாம் பத்தில் -ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

என் விடாய் எல்லாம் தீரும்படி ஒரு தாமரைத் தடாகம் போலே வந்து தோற்றி அருள வேண்டும் -என்கிறார்

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

———————

என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடன் வந்து தோன்றி அருள வேண்டும்-என்கிறார் –

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்ட லமந்தால் இரங்கி யொரு நாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயி றுதிக்கும் கரு மா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

———————

தெளிந்த நீரைப் பருகின காளமேகம் போலே ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்குகிற வடிவோடே
என் துயரம் தீர வந்து தோற்ற வேண்டும் –என்கிறார்-

முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந் தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படி சேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால் தோளும்
துடி சேரி டையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

——————————

உன்னுடைய வடிவழகு வந்து என் மனத்திலே நிறைந்து நலிகிறபடி என்னால்
பேச முடிகிறது இல்லை –என்கிறார் —

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

————————

உன்னுடைய அழகு என் மனத்திலே ஸ்ம்ருதி -நினைவுக்கு விஷயமாய் நலியா நின்றது
இது மறக்க ஒரு விரகு சொல்ல வேண்டும் -என்கிறார்-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப் பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என் னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழு துண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5-

——————————

உன் ஸுந்தர்யாதிகளை -வனப்பு முதலானவற்றை நினைத்து – காண வேண்டும் என்று கூப்பிடுகிற நான்
காணும்படி ஏதேனும் ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேண்டும் –என்கிறார் –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6-

————————

இங்கு வந்து தோற்றி அருளுதல் — அது திரு உள்ளம் அன்றாகில் அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல்
செய்து அருள வேண்டும் -என்கிறார் –

வந்து தோன்றா யன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந் தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

————————-

உனக்குப் போலியான மேகத்தின் தர்சனத்தாலே காட்சியாலே நோவு படா நிற்க வந்து முகம் காட்டுகின்றிலை
இதுவோ உன் சங்க ஸ்வ பாவம் -சார்வின் தன்மை -என்கிறார்-

ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்கா யன்று ஈரைம் பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா வாரா யிதுவோ பொருத்தமே–8-5-8-

—————————–

அந்திம தசையில் -இறுதிக் காலத்தில் ஸ்வர்க்கத்து ஏறப் போன இவர்கள் நிற்க –
ஸ்ரீ திருவாழி யாழ்வான் முதலான ஸ்ரீ நித்யரோடும் பொருத்தம் இதுவோ –என்று ஸ்வகதமாக -தமக்குள்ளே விசாரிக்கிறார் –
அன்றிக்கே –
இருந்ததே குடியாக காப்பாற்ற வந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன்னை காண்கையே தேட்டமான
எனக்கு என் செய்து அருளும் என்று நினைக்கிறார் ஆகவுமாம் –

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவே யாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே—8-5-9-

————————–

ஸ்ரீ அவதாரத்துக்கு பிற்பாடனாய்
ஸ்ரீ அந்தர்யாமித்வம் கண்களுக்கு அவிஷயமான புலப்படாதவாறு ஆயின பின்பு
உன்னை நான் எவ்விடத்தே காண்பது -என்கிறார் —

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே–8-5-10-

———————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே
அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: