ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஒவ்வொரு விஷயத்திலே சா பால்யத்தை -விருப்பத்தைச் செய்து, அவை பெறா விடில் தரிக்க மாட்டாத
பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1-

———————–

இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற் படுகை யாவது என்?
அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று
திரு மூக்கில் அழகு நலிகிற படியைச் சொல்லுகிறது.

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்!என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு என தாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே–7-7-2-

—————————-

அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று
நம்மை ஏசுவர்கள் என்று திருப் பவளத்தின் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.

வாலிய தோர் கனி கொல்?வினை யாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந் துண்டங்கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே–7-7-3-

—————————

என் தான்! இங்ஙனே- அதர உத்தர -கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று
திருப் புருவத்தில் அழகு வளைந்து கொடு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற் கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்றும் நின்றே–7-7-4-

————————

இம் முகத்துக்கு வாய்க் கரையிலே நாம் இருக்க இவை முற்படப் போவதே என்று
திரு முறுவலின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார் –

என்று நின்றே திக ழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங் கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

—————————

நாம் செவிப்பட்டிருக்க இவற்றை முன்னே போக விட்டிருந்தோம்’ என்று திருக் காதில் அழகு வந்து
நலிகிற படியைச் சொல்லுகிறது. காதாட்டிக்கொண்டு சொல்லுவரே.
(அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்)

உய் விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ் விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பை விடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே–7-7-6-

————————

இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ?
இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக் கை அன்றோ?’ என்று
திரு நுதலில் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.

காண்மின்கள் அன்னையார் காள்!என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச் சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே–7-7-7-

———————–

தலையான பேரை நெற்றிக் கையிலே விட்டுக் காட்டிக் கொடுக்க ஒண்ணாது’ என்று,
மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒரு முகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது.
அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி
ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித் தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து
நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே–7-7-8-

———————-

இந்த அவஸ்தைக்கு -இச் சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸா
வஹித்துக் கொடு போந்தது?’ என்று ‘திருக் குழற் கற்றையில் அழகு வந்து நலியா நின்றது’ என்கிறாள்.

கொள் கின்ற கோள் இரு ளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள் கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே–7-7-9-

————————

ஸ்ரீ யபதியும் -ஸ்ரீ திருமகள் கேள்வனும் கூட நம்மை சிரஸா வஹித்து – தலை மேல் கொண்டு போருகிறது
இவ் வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திரு அபிஷேகத்தின் அழகு வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூ வுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-

—————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே
நித்ய ஸூரிகளோடே கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: